ராஜிவ் கொலையில் முக்கிய குற்றவாளி இத்தாலியில்…..

ராஜிவ் கொலையில் முக்கிய குற்றவாளி இத்தாலியில் இருப்பதாக சுப்பிரமணிய சாமி புது குண்டை தூக்கி வீசிவிட்டார்

அந்த போபர்ஸ் குவாட்ரோச்சி இருந்தாலும் அவரை கைகாட்டாலம் அவரும் செத்துவிட்டார், பின் யாரை சு.சாமி சுட்டி காட்டுகின்றார் என ஆளாளுக்கு மண்டையினை பிய்த்துகொண்டிருக்கின்றார்கள்

முதலில் இந்த சு.சாமியினை பிடித்து விசாரித்தாலே பாதி சிக்கல் தீரும்

இவர் அமைச்சராக இருந்தபொழுதுதான் ராஜிவிற்கான கருப்பு பூனை படை பாதுகாப்பு விலக்கபட்டது, அதன் பின்புதான் தனுவால் ராஜிவினை நெருங்க முடிந்தது

கருப்புபூனை படை பாதுகாப்பு நீடித்திருந்தால் ராஜிவ் கொலை தடுக்கபட்டிருக்கலாம், இப்பொழுது ராஜபக்சேவினை எல்லாம் புலிகள் … பிடுங்கினார்களா?

இல்லை மாபாதகன் ஜெயவர்த்தனே உச்சி மயிரை பிடுங்கினார்களா?

பாதுகாப்பு பலவீனமான‌ பாய்வது புலிகள் பாணி. பாதுகாப்பு பலமான இடங்களில் பாயவே மாட்டார்கள் அவர்கள் பலம் அவ்வளவுதான்

ராஜிவின் கருப்பு பூனை பாதுகாப்பினை விலக்கிய சு.சாமிதான் முதல் குற்றவாளி, வேறு எல்லோரும் அவருக்கு பின்னால்தான்

அவர் என்ன அதிமுக கவுன்சிலரா இல்லை புலிதலைவரா?

4 ஆயிரம் டன் அரிசியொடு வந்த ஆஸ்திரேலிய கப்பலை மறித்து எனக்கு துப்பாக்கி பயிற்சி கொடுத்தார் பிரபாகரன்

இப்படி ஒரு வீடியோவில் சைமன் சொல்லிகொண்டிருப்பதாக நமக்கும் அனுப்பினார்கள், இதில் என்ன ஆச்சரியம்? அன்னாரின் பழைய கதையினை கேட்டால் இப்படி ஆச்சரியபடமாட்டீர்கள்

உதாரணம் பல உண்டு அவற்றில் இதுவும் ஒன்று

“தன் மெய்காப்பாளன் கடாபியினை அழைத்து இவர்தான் கைதுப்பாக்கியான் சிங்கள விமானத்தை வீழ்த்தினான் என காட்டினார் அண்ணன், நான் அந்த துப்பாக்கியினை தடவி பார்த்தேன்”

ஒரு கைதுப்பாக்கியால் விமானத்தை சுட முடியுமா? சுட்டாலும் விழுமா? இப்படி எல்லாம் அள்ளிவிட்டவர் சைமன்

சரி, கைதுப்பாக்கியால் விமானத்தை சுட்டவர்கள் இறுதி யுத்தத்தில் ஏன் அப்படி விமான குண்டுவீச்சை எதிர்கொள்ளமுடியாமல் என கேட்டால், கைதுப்பாக்கி கிடைக்காமல் செய்தது கலைஞர் சதி என பதில்வரும்

இப்படிபட்ட பிராடு வீடியோக்களில் ஒன்றுபற்றி நீங்கள் அறிந்தீர்களோ இல்லையோ, நாம் பார்த்துவிட்டு இப்படி எலலாமா ஒரு மனிதன் அள்ளிவிடுவான் என சிந்தித்த காலம் உண்டு

என்ன சொன்னார் அன்னார்?

“நான் பிரபாகரனை நள்ளிரவில் சந்தித்தபொழுது எம்ஜிஆர் செய்த உதவிகளை அண்ணன் சொல்லிகொண்டிருந்தார், அப்பொழுது சிங்களன் சுற்றிவிட்டான்

நானும் அண்ணனும் ஓடினோம், மேலிருந்து குண்டு மழை, சுற்றிலும் பீரங்கிகுண்டு, அப்பொழுது நானும் என் அண்ணனும் ஒரு மரத்தின்பின்பு ஒளிந்திருந்தோம்

அப்பொழுது என் கையினை பிடித்து சொன்னார் அண்ணன், தம்பி அப்படி எல்லாம் உதவிய எம்ஜிஆரை இழந்துவிட்டோமடா தம்பி.. எதற்குமே அழாத என் அண்ணன் அன்று எம்ஜிஆர் என்றவுடன் அழுதார்..”

எப்படி இருக்கின்றது பார்த்தீர்களா?

இவர் சென்றது சமாதான காலம், ஒரு வாதத்திற்கு அது சண்டை என வைத்தாலும் பிரபாகரன் பங்கரை விட்டு வெளிவந்ததே இல்லை, அதுவும் நள்ளிரவில் விளக்கினை ஏற்றிவைத்து பேசுவது எல்லாம் அவருக்கு பழக்கமே இல்லை

ஒருவேளை சிங்களன் ரகசிய ஆப்பரேஷன் நடத்தினாலும் பிரபாகரன் புலிகளுக்கு கட்டளை பிறப்பிப்பாரா? இல்லை மரத்திற்கு பின்னால் இருந்து கொண்டு எம்ஜிஆர் வாழ்க என்பாரா?

அவர் என்ன அதிமுக கவுன்சிலரா இல்லை புலிதலைவரா?

என்று ராஜிவ் உத்தரவுபடி பிரபாகரனின் ஆயுதத்தைபிடுங்கி ராமசந்திரன் சென்னையில் பிரபாகரனை வீட்டுகாவலில் வைத்தாரோ அன்றே மனமார எம்ஜிஆரை எதிர்த்தான் பிராபகரன்

அதுவும் டெல்லி அசோகா ஹோட்டலில் ராமசந்திரன் ஆளை விட்டால் போதும் என ஓடிய பொழுதும், அமைதிபடை அனுப்பபட்டபொழுது எதிர்ப்பு காட்டாததும் ராமசந்திரன் மீது அவனுக்கு பெரும் ஆத்திரத்தை கொடுத்தது

அப்படிபட்ட பிரபாகரன் யுத்த பூமியில் மரத்திற்கு பின்னால் நின்று எம்ஜிஆர் வாழ்க என இவரிடம் சொன்னாராம்

இப்படி எல்லாம் அள்ளிவிட்டவருக்கு, அரிசி கப்பல் கட்டுகதை எம்மாத்திரம்?

 

டிரம்ப் என்பவர் உலகத்தை ஒரு வழி செய்வது என்ற முடிவோடு இருக்கின்றார்

டிரம்ப் என்பவர் உலகத்தை ஒரு வழி செய்வது என்ற முடிவோடு இருக்கின்றார், சீனாவோடு பெரும் பொருளாதார யுத்தத்தில் இறங்கிவிட்டார்

அதாவது இனி சீன பொருட்களை அமெரிக்காவில் விற்க பெரும் வரியினை விதித்துவிட்டார், கிட்டதட்ட 800 வகையான பொருட்களுக்கு இந்த வரி விதிக்கபட்டால் நிச்சயம் அது சீனாவிற்கு கடும் நெருக்கடியினை கொடுக்கும்

முன்பே இப்படி இறங்கினார் டிரம்ப் ஆனால் தன்னிடம் இருக்கும் சில டிரில்லியன் அந்நிய செலாவணி நிதியினை வெளியில் விட்டால் அமெரிக்க டாலர் வீழும் என பயமுறுத்தியது சீனா

பதுங்கிய அமெரிக்கா மறுபடி பாய்கின்றது, ஏதும் திட்டம் இருக்கலாம்

இது பெரும் பொருளாதார போராக வெடிக்கலாம் என்கின்றனர், ஆனால் சீன உற்பத்தியினை விட அமெரிக்க உற்பத்தி 3 மடங்கு அதிகம் என்பதால் இருபக்கமும் சேதம் இருக்கலாம்

டிரம்ப் அதற்கெல்லாம் அசைவதாக தெரியவில்லை

அமெரிக்க ஹார்லி டேவிட்சன் போன்ற அமெரிக்க தயாரிப்புகளுக்கு இந்தியாவில் கடும் வரி இருப்பதை சமீபத்தில் கண்டித்தார் டிரம்ப், இந்தியா வழிக்கு வராவிட்டால் அமெரிகாவில் இந்திய உற்பத்திக்கு இடமில்லை என்பது போல் அவரின் மிரட்டல் இருந்தது

இந்தியா இறங்கி வந்திருக்கின்றது, இனி இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் பைக்கின் விலை குறையலாம், சிம்பு அடுத்த படத்தில் அதில் பறப்பார் அதை தொடர்ந்து ராஜ்கிரனும் பறப்பார்

இத்தோடு விட்டாரா டிரம்ப் என்றால் இல்லை, அசுர சக்தியான ஜெர்மனின் ஐரோப்பிய யூனியனிடமும் இதே விளையாட்டினை ஆரம்பித்திருக்கின்றார்

அவர்கள் டிரம்பின் காதை திருகும் முடிவிற்கு வந்திருக்கின்றனர்

உலகம் ஒருவித பொருளாதார போரை நோக்கி செல்கின்றது, இதன் முடிவு என்னாகும்?

முன்பு ஜெர்மன், ஜப்பானுடனான பொருளாதார போர்தான் உலகபோராக வெடித்தது வரலாறு, இனி இந்த மோதல் எதில் முடியுமோ என உலகம் யோசித்துகொண்டிருக்கின்றது

 
 

பேரரிவாளன் உட்பட 7 பேருக்கும் விடுதலை இல்லை

பேரரிவாளன் உட்பட 7 பேருக்கும் விடுதலை இல்லை என இந்திய உச்சபீடம் அறிவித்துவிட்டது

சிலர் கத்துகின்றார்கள், அற்புதம்மாள் மிக உருக்கமாக கண்ணீர் விட்டுகொண்டிருக்கின்றார்

இந்தியாவின் உச்ச பீடம் எதிர்ப்பார்ப்பது இவர்களிடமிருந்து ஒரு வார்த்தை , ஒரே ஒரு வார்த்தைதான்

புலிகள்தான் கொன்றார்கள், சிவராசன் எனும் புலி எங்களை ஏமாற்றிவிட்டான் என்ற ஒரு வார்த்தையினைத்தான்

ஆனால் அதை இவர்களால் சொல்லமுடியாது, காரணம் சொல்லிவிட்டால் பல விஷயங்களை கிளறவேண்டி வரும்

எது என்றால் திராவிட கழகம் உட்பட பல இயக்கங்களுக்கு புலிகளோடு இருந்த தொடர்பு வரை சொல்ல வேண்டி வரும்

இந்தியாவின் அதிகார உச்சம் இன்றுவரை எதிர்ப்பார்ப்பது அதுதான், இவர்கள் அதனை சொல்லாமல் சும்மா நாங்கள் நிரபராதிகள் என புலம்பிகொண்டிருக்கும் ரகசியமும் இதுதான்

திமுகவும்,திகவும் புலிகளுக்கு செய்த உதவிகள் கொஞ்சமல்ல, ராஜிவ் கொலை அந்த தைரியத்தில்தான் நடந்தது

நிச்சயமாக உள்ளதை உள்ளபடி சொல்லாமல் இவர்கள் இப்படி மனுமேல் மனுபோட்டு கொண்டு நாங்கள் நிரபராதி என சொல்லிகொண்டிருந்தால் ஆகபோவது ஒன்றுமில்லை

 

 


வாஜ்பாய் ஈழதமிழருக்கு செய்த உதவியினை நாங்கள் மறக்க மாட்டோம் : வைகோ

வைகோ எப்படிபட்ட குள்ளநரி என்பது இதிலே விளங்கும்

வாஜ்பாய் சும்மா வரவில்லை, 1986ல் டெசோவில் அவரை இணையசெய்து ஈழதமிழருக்கு ஆதரவாக பேச வைத்தவர் கலைஞர்

கலைஞரின் டெசோவே ஈழதமிழருக்கு ஆதரவாக அகில இந்திய அளவில் செயல்பட்டு பின் அமிர்தலிங்கம் கொலைக்கு பின் கலைக்கபட்டது

வாஜ்பாயினை புகழும் வைகோ மிக தந்திரமாக கலைஞரை மறைக்கின்றார் அல்லவா? இதுதான் அரசியல்தந்திரம்

வைகோ எப்படிபட்ட ஓநாய் என்பதை இனியாவது திமுகவினர் புரிந்துகொள்ளட்டும்