அந்த ரகசியம் யாருக்கு தெரியும்? யாரை பிரபாகரன் முழுக்க நம்பி இருப்பார் ?

புலிகள் காலத்தில் தங்கம் அவர்களிடம் குவிந்திருந்தது, மக்களிடம் வங்கி நடத்தி வசூலித்தது முதல் கிழக்கே காத்தன்குடி மக்களிடம் பிடுங்கியது, கடத்தலில் குவித்தது என ஏராளமான தங்கம் அவர்களிடம் இருந்தது

இறுதி யுத்தத்தில் தோல்வி முகம் தெரிய அவர்கள் காடுகளில் ஆங்காங்கு அதனை புதைத்து வைத்தனர்

முன்பு அமைதிபடை காலத்தில் இப்படி ஆயுதங்களை புதைத்து பின்னர் எடுத்த அனுபவம் அவர்களுக்கு ஏராளம் உண்டு என்பதால் அவர்களுக்கு சாதாரணம்

ஆனால் மீள வர முடியாதவாறு அவர்கள் அழிக்கபட்டதால் அந்த தங்கத்தின் மர்மம் தெரியாமல் போயிற்று

முன்பு சந்தண வீரப்பனும் இப்படி பணம் புதைத்த கதைகள் உண்டு, ராஜ்குமார் கடத்தல் போன்றவைகளில் கிடைத்த பணம் அது

ஆனால் பணமதிப்பு நடவடிக்கைக்கு பின் இனி அது கிடைத்தாலும் உபயோகமில்லை என அதை தேடும் பணி தற்பொழுது நடக்கவில்லை, முன்பு தேடினார்கள்

ஈழத்தில் புதைக்கபட்டிருப்பது தங்கம் என்பதால் ஆளாளுக்கு தேடுகின்றார்கள், சிங்கள ராணுவம் காவல் துறை மற்றும் தமிழர் என ஆளாளுக்கு தேடியும் முழுவதும் கிடைக்கவில்லை

முன்பு பொன்சேகா ஓரளவு மீட்டதோடு சரி, இன்னும் தேடிகொண்டே இருக்கின்றார்கள்

அந்த ரகசியம் யாருக்கு தெரியும்? யாரை பிரபாகரன் முழுக்க நம்பி இருப்பார்

சாட்சாத் அங்கிள் சைமனைத்தான் என்பதில் சந்தேகமில்லை

அங்கிளின் அரிசி கப்பல் கடத்தல் கதையினை ஆளாளுக்கு கலாய்க்கின்றார்கள், உண்மையில் அன்னார் சொல்லவந்தது என்ன தெரியுமா?

அரிசி கடத்தல் போல தங்கம் புதைத்த இடமும் எனக்கு தெரியும் , நானும் அண்ணனும்தான் புதைத்தோம் என உலகிற்கு சொல்ல வருகின்றார்

அது புரியாமல் அவரை கலாய்க்கின்றார்கள்

விரைவில் சிங்கள அரசே அந்த தங்கத்தை மீட்க அங்கிளை தேடும் அல்லவா? அப்பொழுது அங்கிளின் அருமை எல்லோருக்கும் புரியும்

 

ஹாட்ரிக் ரொனால்டோ

ஹாட்ரிக் அடித்து உலக கோப்பை போட்டியில் அட்டகாசமான தொடக்கத்தை கொடுத்திருக்கின்றார் கிறிஸ்டியானொ ரோனால்டோ

ஸ்பெயினுக்கு எதிராக அவர் அடித்த ஹாட்ரிக் அவருக்கு பெரும் கவனத்தை கொடுத்துவிட்டது

இனி இன்று ஐஸ்லாந்துக்கு எதிராக நடக்கும் போட்டியில் மெஸ்ஸி என்ன செய்யபோகின்றார் என உலகம் எதிர்பார்த்து  கொண்டிருக்கின்றது

தமிழக முதல்வராக இருந்த கலைஞர் யார்? உயர்சாதியா?

இந்த தலித் அரசியல் பற்றி ஏதும் சொன்னால் அம்பேத்கரில் அம்பேல்கள் சில வந்து புலம்புகின்றன‌

எப்படி என்றால் அம்பேத்கரின் வழியில் உபியில் தலித் முதல்வர் வந்துவிட்டாராம்

தமிழகத்தில் தலித் வரவே இல்லையாம், இப்படி சில ஒப்பாரிகள்

அட மானிட பதரே

தமிழக முதல்வராக இருந்த கலைஞர் யார்? உயர்சாதியா?

ஆக தலித் என்பது ஒரு குறிப்பிட்ட சாதி என நீங்களே முடிவு செய்துவிட்டீர்களா? அம்பேத்கர் அதனையா சொன்னார்?

கலைஞரை விட தாழ்த்தபட்ட சாதியினை காட்ட முடியுமா?

இன்றைய தமிழக சபாநாயகர் தலித், எதிர்கட்சி தலைவரின் சாதி என்ன?

பின் என்ன இங்கே தலித் முதல்வராக முடியாது என சத்தம்?

உங்களுக்கு தலித் என்ற வார்த்தைக்கு சாதியால் ஒடுக்கபட்டோர் என்ற தமிழ்பதம் கூட தெரியவில்லையா?

இது கூட புரியாமல்தான் ஒப்பாரியா? உங்களிடம் எல்லாம் பேசி ஆகபோவது ஒன்றுமில்லை

பெரியார் வழியில் என்றோ தலித் முதல்வராகி முத்திரையும் பதித்த மாநிலம் இது

கக்கன் அன்றே அமைச்சரானார், கலைஞர் முதல்வரானார்

தமிழகத்து தலித்துகளுக்கு இங்கு யாருமில்லை அவர்கள் முன்னேற விடமாட்டார்கள் என்பதை எல்லாம் வங்க கடல் மீன்களிடம் சென்று சொல்லுங்கள், அவை கூட நம்பாது


 
 நான் நடத்துவது இடைதரகர்களுக்கு எதிரான போர் : மோடி

அம்பானிக்கும் அதானிக்கும் உலகெல்லாம் வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்திகொடுப்பவர் மோடி

அதற்கு பெயர் தரகு வேலை இல்லையா? என யாரும் கேட்டால் என் சவாலை ஏற்கின்றாயா? என பாறாங்கல் மேல் மல்லாக்க கிடப்பார் மோடி.

இந்தியாவின் மிகபெரும் தரகர் இவர்தான், ஆனால் தரகர்களுக்கு எதிராக போர் நடத்துவதும் இவர்தான்


 

விஜய் சேதுபதியின் “சேதுபதி” படம் ஒடிகொண்டிருக்கின்றது

Image may contain: 1 person, sunglasses and close-up

விஜய் சேதுபதியின் “சேதுபதி” படம் ஒடிகொண்டிருக்கின்றது

அந்த வேல்.ராமமூர்த்தியின் தாதா வேடத்தை கவனிப்பவர்களுக்கு அது யார் என சட்டென தெரிந்துவிடும், அதுவும் தென்மாவட்ட மக்களுக்கு உடனே புரியும்

தென்னக பிரபல ரவுடி பசுபதிபாண்டியன் போன்றே தாடியும் ஆளுமாக கட்டமைக்கபட்ட பாத்திரம் அது.

ஆக அது கூட தலித் மக்கள் படம்தான் , அதனை பற்றி எல்லாம் யாரும் பேசுவாரில்லை

Image may contain: 1 person, beard and close-up

சு.சாமி சும்மா கொளுத்தி போடவில்லை. விஷயம் பற்றி எரிகின்றது

சுப்பிரமணியன் சாமி இத்தாலியில் ராஜிவ் கொலைக்கு காரணமனவர் இருக்கின்றார் என சொன்னவுடன் மறுபடியும் ஈழபுலி அனுதாபிகள் உலகில் புயலடிக்கின்றது

ராஜிவ் கொலையில் பிரதான குற்றவாளிகள் பிரபாகரன், பெண் புலி அகிலா, மற்றும் பொட்டு அம்மான்

இதில் அகிலா இல்லை, அகிலா யார் என்றால் ராஜிவினை கொல்ல மனிதவெடிகுண்டாக பெண்ணை அனுப்பலாம் என திட்டமிட்டதே அவர்தான்

இதனால்தான் அவருக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்வில் தீக்குழந்தைகளை உருவாக்கி பெரும் இலக்கினை தகர்த்தவர் என பிரபாகரன் சொல்ல, இந்தியா கவனமாக குறித்தது

பொட்டு அம்மான் புலிகள் இயக்கத்து மூளை, அவர் பெயர் சிவசங்கரன். அம்மான் என்றால் தமிழில் மாமன் என பொருள்

கருணா அம்மான், பொட்டு அம்மான் என ஏகபட்ட அம்மான்கள் உண்டு. இதில் கடைசியாக இணைய ஆசைபட்டவர் சைமன் அம்மான், ஆம் நமது அங்கிள் சைமன்

பொட்டு அம்மான் இந்திய அமைதிபடை தாக்குதலில் வயிற்றில் புண்பட்டு சாவின் எல்லைக்கு சென்றவர், ராஜிவின் மீது குறிவைத்த முதல் நபர் அவர்தான்

சிவராசனுக்கும் பொட்டு அம்மானுக்கும் இடையே நடந்த வயர்லெஸ் உரையாடல்கள் எல்லாம் பெரும் சாட்சிகள்

2009ல் புலிகளை ஒடுக்க உலகம் தயாரானபொழுது புலிகள் அழிவதை விரும்பாத இந்தியா இறங்கி வந்தது

புலிகளும் இந்திய தலமையில் பேச்சுவார்த்தை என இறங்கிவந்தனர்

ஆனால் இந்தியா பொட்டு அம்மானை கைதியாக கேட்டது, புலிகள் முடியாது என்றார்கள் பேரழிவு நடந்தது, பிரபாகரனும் கொல்லபட்டார்

ஆனால் பொட்டு அம்மான் பற்றி எல்லோரிடமும் கனத்த மவுனம். அவர் தப்பினார் என்பதே நிஜம்

சர்ச்சைகளை தாண்டி பொட்டு ஜகஜால கில்லாடி, புலிகளின் வெற்றி தாக்குதல் எல்லாம் அவரின் கைவண்ணம், இந்திய அமைதிபடை அவரிடம்தான் திணறியது

ராஜிவ் கொலைக்கு மிக முக்கிய சூத்திரதாரி அவரே

ராஜிவ் கொலையினை முழுக்க ஈழதமிழர்களை வைத்தே செய்வது அவர் திட்டம், ஆனால் சிவராசன் நளினி, பேரரிவாளன் என இழுத்துவிட்டதில்தான் இத்தனை சொதப்பல்

இதனால்தான் அவனை மீட்க பிரபாகரனும் பொட்டுவும் கொஞ்சமும் விருப்படவில்லை, செத்து ஒழியட்டும் என அமைதியாயினர்

யுத்தத்தில் தப்பிய பொட்டு என்ன ஆனார் என்ற பெரும் கேள்வி இருந்தது, எரித்தியாவிற்கு அவர் தப்பினார் என்பதோடு முடித்தார்கள்

இப்பொழுது இத்தாலியில் அவர் இருப்பதாக தகவல்கள் கசிகின்றன‌

சு.சாமி சும்மா கொளுத்தி போடவில்லை. விஷயம் பற்றி எரிகின்றது