ரூ. பெட்ரோல் விலை 100ஐ நெருங்காமல் மோடிகாலம் முடியாது போலிருக்கின்றது

சீன பொருள், ஐரோப்பிய யூனியனின் உற்பத்தி, இந்திய பொருட்களுக்கு டிரம்ப் அதிக வரி விதித்திருப்பது கடும் எதிரொலிகளை ஏற்படுத்திவிட்டது

சீனாவும், இந்தியாவும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருளுக்கு வரியினை உயர்த்திவிட்டன‌

இதுகாலம் வரை சீனா, இந்தியா போன்றவற்றிலிருந்து இறக்குமதியான கச்சா இரும்பு, அலுமினியம் போன்றவற்றிற்கு அமெரிக்காவில் வரி கிடையாது

ஆனால் அமெரிக்க உற்பத்தி பொருளுக்கு இந்நாடுகள் வரிவிதித்தன, இதனால் அமெரிக்க பொருளின் விலை இந்நாடுகளில் கணிசமாக இருந்தது

இது அமெரிக்காவிற்கு எதிரான சதி என பொங்கிய டிரம்ப் எகிறி குதிக்கின்றார், பொருளாதார போரையும் தொடங்கிவிட்டார்

கச்சா இரும்பிற்கும், அதை கார், பைக் என செய்து விற்பதற்கும் வித்தியாசம் இல்லையா? என யார் சொல்லியும் அவர் காதில் ஏறவில்லை

இரும்பு தாது, அலுமியம் உட்பட பல பொருட்களின் விலை எல்லா நாடுகளிலும் இனி ஏறலாம், இது எங்கு முடியும் என்றால் பைக் முதல் கனரக வாகனங்கள் வரை விலை இனி விண்ணை தொடலாம் என்கின்றார்கள்

இது ஒருபக்கம் விஷயம் என்றால், இன்னொரு பக்கம் உயரபறக்கும் கச்சா எண்ணெய் விலையினை குறைக்க சில நாடுகள் முயன்றாலும், ரஷ்யாவும் சவுதியும் உற்பத்தியினை குறைப்போம் என மிரட்டுகின்றன‌

அப்படி குறைத்தால் விலை இன்னும் உயரலாம்

அநேகமாக இந்தியாவில் பெட்ரோல் விலை 100ஐ நெருங்காமல் மோடிகாலம் முடியாது போலிருக்கின்றது

 
 

வாஞ்சியின் எதிர்ப்பு வெள்ளையன் எதிர்ப்பல்ல

வாஞ்சிநாதன் ஆஷ்துரையினை கொல்ல பல காரணம் சொல்லபட்டாலும், அவன் கைப்பட எழுதிய காரணம் “ஜார்ஜ் மன்னரின் கைகூலியினை கொல்வோம், அதுவும் பசுமாட்டு இறைச்சியினை உண்ணும் பஞ்சன் ஜார்ஜ் மன்னரை இந்திய அரசராக ஏற்க மாட்டோம், அவனை விரட்டுவொம்” என்பதாக இருக்கின்றது

ஆக வாஞ்சியின் எதிர்ப்பு வெள்ளையன் எதிர்ப்பல்ல, மாறாக அவன் மாட்டுகறி உண்பதுதான் அவரின் பிரச்சினையாக இருந்திருக்கின்றது என்பது இன்னொரு கோணம்

இன்று மாட்டுகறிக்காக வரிந்து கட்டுபவர்கள், அன்றே மாட்டுகறி உண்ணும் மிலேச்சன் என பிரிட்டிஷ் மன்னரை சாடிய வாஞ்சியினையாவது கொண்டாட வேண்டுமா வேண்டாமா?

ஆனால் சத்தமே இல்லை, ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் சத்தமில்லை, தமிழக பாஜகவும் சத்தமில்லை

இவ்வளவிற்கும் அவனும் பிராமணன், வ.வே.சு அய்யர் எனும் பிராமணனின் சீடர்களில் ஒருவன், இந்தியாவில் காவி கொடிபறக்க வேண்டும் என உறுதியாய் இருந்தவர்களில் ஒருவன்

அவனை எப்படி மறக்கலாம்? வடக்கத்தியர்கள் மறக்கலாம்

மேடம் தமிழிசை, அன்றே மாட்டுகறிக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரையே கொல்ல துணிந்த அந்த வாஞ்சிநாதனுக்கு பெரும் மரியாதை செலுத்த நீங்களாவது சொல்ல கூடாதா?

அந்த சுதந்திர வீரன் வாஞ்சிநாதன் தான், மாட்டுகறி பிரச்சினைக்கும் முன்னோடியாக இருந்திருக்கின்றார் என்பதுதான் சோகம்

இப்பொழுது சோகபடும் நிலையிலா இந்தியா இருக்கின்றது? வாஞ்சிநாதனை கொண்டாடி தீர்க்க வேண்டாமா?

என்ன மாட்டுகறி அரசியலோ தெரியவில்லை, அந்த அரசியலில் முன்னிறுத்தபட வேண்டியவர் நிச்சயம் வாஞ்சிதான், சாவர்க்காரை விட வாஞ்சியினைத்தான் முன்னிறுத்த வேண்டும்

செய்வார்களா? தமிழன் என்பதால் செய்யமாட்டார்கள், அந்த அமைப்பு அப்படி

ஆனால் தமிழிசை, ராசா, பொன்னார், வானதி போன்ற‌ இன்னபிற கோஷ்டிகள் எல்லாம் அவர்களுக்கு ஜால்ரா தட்டிகொண்டே இருக்கும்..அவர்கள் அப்படித்தான்

 

இன்று வாஞ்சிநாதன் நினைவுநாள்

Image may contain: sky and outdoor

தமிழகத்தில் எந்த மாவட்டத்திற்கும் இல்லா தனி சிறப்புகள் நெல்லைக்கு உண்டு, நாயக்கமன்னர்களுக்கே வரிகொடுக்காமல் போராடிய பாண்டியமன்னரின் வாரிசுகள் உண்டு, இறுதிவரை அவர்கள் நிலைத்ததும் உண்டு.

ஆர்காடு நவாபிற்கே வரிசெலுத்தாமல் பின்னாளில் ஆங்கிலேயரிடம் போராடிய பூலித்தேவன் ஆகட்டும், எமது உரிமைகளில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை என சீறிய கட்டபொம்மன் என ஒரு வரிசை உண்டு.

பின்னாளில் அறிவில் சிறந்த பாரதியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி என அஞ்ஞாத பெரும் வரிசை உண்டு, இந்த காலத்தில் வாழ்ந்தவர் வாஞ்சிநாதன்.

அதாவது வாஞ்சிநாதன் என்பவர் செங்கோட்டைகாரர், சுதந்திரபோராட்டகாரரில் ஒருவராக அறியபடுபவர், மற்றபடி கேப்டனின் “வாஞ்சிநாதன்” படத்திற்கும் அவருக்கும் சம்பந்தமேயில்லை.

அவரது காலத்தில் அதாவது காந்திக்கு முந்தைய காலத்தில் ஒருங்கிணைந்த போராட்டம் இந்தியாவில் இல்லை, ஆளாளுக்கு ஒரு முறையில் எங்கோ எப்பொழுதாவதோ போராடினார்கள். அதனை அடக்குவது வெள்ளையனுக்கு வெகு சுலபாமக இருந்தது.

ஆஷ் அயர்லாந்து பிரபுகுடும்பதுக்காரர், கலெக்டராக நெல்லைக்கு வந்தவர். வர்க்கபேதம் தெரியுமே அன்றி தீண்டாமை தெரியாது. குற்றாலம் அருவியில் தாழ்த்தபட்டோருக்கு இருந்த கட்டுபாடுகளை நீக்கினார் என்பதும், தாழ்த்தப்ட்ட பெண்ணுக்கு அவசர உதவியாக உயர்சாதி தெருவின் வழியாக அழைத்துசென்றார் என்பதும் அவரின் இன்னொரு முகம்.

அதாவது 1857க்கு பின் வெள்ளையர் இந்தியரை பிரிட்டன் அரசின் குடிமக்களாகத்தான் கருதினார்கள், அப்படித்தான் ஆட்சியும் செய்தார்கள்.

தென்னிந்தியாவில் சென்னைக்கு அடுத்து மிக முக்கியமான துறைமுகமாக அன்று அறியபட்டது தூத்துகுடி. அங்கு கப்பல்விட்டு வெள்ளையனை நஷ்டபடுத்தினார் வ.உ.சி.
உப்பையே விடாத வெள்ளையன் இந்திய கப்பலை விடுவானா?

பல சர்ச்சைகளுக்கு இடையே சிதம்பரம்பிள்ளை கைதுசெய்யபட்டார், போராட்டம் வெடித்தது அப்பொழுது நெல்லையின் கலெக்டர் ஆஷ் (ராபர்ட் வில்லியம் எஸ்கோர்ட் ஆஷி சுருக்கமாக ஆஷ்,) வெள்ளையர் என்றால் நம்மவருக்கு துரை, ஆனானபட்ட முருகனை துரைமுருகன் ஆக்கியவர்கள், அவரை ஆஷ்துரை அக்கினார்கள்.

அவர் போராட்டத்தை கட்டுபடுத்த சுட சொன்னார், 4 பேர் பலி, நெல்லை அரண்டது. வ.உ.சி மேல் மரியாதை கொண்டவர்கள் எல்லாம் கொதித்தனர் அதில் ஒருவர்தான் வாஞ்சிநாதன்.

அவர் ஒரு குழுவில் இருந்தார், அது சுதந்திர இந்தியாவினை ஆதரித்தகுழுதான் ஆனால் கூடவே இந்துதர்மம், இது இந்து பூமி என்பதனை வலுகட்டாய கொள்கையாக‌ கொண்டிருந்தது.

வ.வே.சு அய்யர் என்பவர்தான் அந்தகுழுவின் பிராதானம். பூநூல்காரர்தான் அந்தகாலத்திலே லண்டனில் பாரிஸ்டர் படித்தவர், பிரிட்டன் அரசுக்கு விசுவாசமாக இருப்பேன் எனும் பிரமாணத்தை சொல்ல மறுத்து பாரிஸ்டர் பட்டத்தை இழந்தவர், ஆனால் சகலவித்தைகளும் அறிந்தவர், அதில் சண்டைபயிற்சிகளும் உண்டு, துப்பாக்கி சுடுவதில் கெட்டிக்காரர். வாஞ்சிநாதன் இவரிடம் கற்றது ஏராளம் உண்டு.

இந்நிலையில் பிரிட்டனின் அரசர், அந்நாளைய உலக அரசர் ஜார்ஜ் இந்தியா வந்தார், மாதம் மும்மாரி இந்தியாவில் பொழிகின்றதா என‌ கேட்டுகொண்டிருந்த அவர் அன்றுதான் காண வந்தார். மும்பையின் புகழ்பெற்ற கேட் ஆப் இந்தியா அவருக்காக கட்டபட்டிருந்தது.

ஜார்ஜ்புஷ் வந்தாலே “திரும்பிபோ..” என கத்துவோம் அல்லவா? உலகாளும் மன்னர் வந்தால் அதுவும் போராட்டகாலத்தில் வந்தால் எப்படி? நாடெல்லாம் ஒரு பரபரப்பு உண்டாயிற்று, அது நெல்லையிலும் வந்தது. வாஞ்சியின் கூட்டம் ஒரு பெரும் எதிர்பிற்கு தயாராயிற்று. வ.உ.சி கைது மற்றும் இன்னும் சில காரியங்களால் ஆஷ் துரை குறிவைக்கபட்டார்.

திருவுளசீட்டு குலுக்கிபோட்டு வாஞ்சிநாதனை தேர்ந்தெடுத்தார்கள். அன்று கொடைக்கானல் செல்வதற்காக ரயிலில் மனைவியோடு சென்றார் ஆஷ். (அன்றும் சாரல்மழை பிந்தி தொலைத்திருக்கின்றது, இல்லை என்றால் குற்றாலத்திற்குதான் சென்றிருப்பாராம். கடும் வெயில்காரணமாக கொடைக்கானலுகு சென்றர்), மணியாச்சி அன்றே ஒரு சந்திப்பு ஆனால் காட்டுபகுதி, அங்கு நின்றிருந்த ரயிலில் ஏறி ஆஷினை சுட்டுகொன்றார் வாஞ்சிநாதன். நடந்தது 17.06.1911

அதுவரை இந்தியாவில் ஒரு கலெக்டர் கொல்லபட்டதில்லை, (கலெக்டர் என்பது அன்றி மிக உச்ச பதவி), அக்கொலைக்கு பின்னாலும் இல்லை. முதன்முதலாக ஆடிப்போனது வெள்ளை நிர்வாகம், அந்த அடியை கொடுத்தது நெல்லை மண், உலகமே அன்று திரும்பிபார்த்தது.

வாஞ்சிநாதன் அந்த இடத்திலே தற்கொலை செய்ய,அவரை சோதித்தபொழுது ஒரு கடிதம் சிக்கியது. கடிதம் எழுதாமல் செத்திருந்தால் இன்று பகத்சிங் அளவிற்கு கொண்டாடபட்டிருப்பார்,

ஆனால் கடிதம் “ஒரு தீண்டதகதவான ஜார்ஜ்மன்னர் ( அதாவது மாட்டுகறி உண்பவராம், பார்த்தீர்களா? அன்றே அது சர்ச்சைகுரியது . ) புனிதமான இந்திய தேசத்துக்கு வருவதை நாங்கள் எதிர்க்கின்றோம், அவனை ஒழிக்கும் பொருட்டு..” என்ற ரீதியில் இருந்து அவரை மதவாதி ஆக்கிற்று.

ஆனாலும் அந்த கடிதத்தில் வ.உ.சி கைதை கண்டித்து ஒரு வார்த்தையும் இல்லை என்பதுதான் விசித்திரம்.

ஆனாலும் ஆங்கிலேயர் பதிலடி பயங்கராமானதாய் இருந்தது, அந்த குழுவின் பெரும்பாலான அய்யர்கள் தற்கொலை செய்யுமளவு, கடும் மூர்க்கத்தை ஆங்கிலேயர் காட்டினார்கள்.
இந்திய எதிர்ப்பினை காட்டவேண்டிய வாஞ்சிநாதனின் வரலாறு, வருணாசிரம தர்மத்தை காக்க நடந்தபோராட்டமாக அவரின் கடிதம் மூலமே காட்டபட்டது.

ஆயினும் முதன்முதலாக ஒரு ஆங்கில கலெக்டரை கொன்று பிரிட்டனை அலறவைத்த நிகழ்வில் வாஞ்சிநாதன் வரலாற்றில் நிலைத்துவிட்டார்.

அந்த மணியாச்சி ஜங்ஷனுக்கு வாஞ்சிபெயரே சூட்டபட்டது, இன்னும் அந்த ரயில்நிலையத்தை கடக்கும் பொழுதெல்லாம் அவர் நினைவுக்கு வந்துதான் செல்வார்.

ஆஷ்துரை உடல் பாளையங்கோட்டை ஜாண்ஸ் கல்லூரி எதிரே உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யபட்டுள்ளது, சுருக்கமாக சொன்னால் ஒரு பெரும் வரலாற்று சம்பவம் அங்கு அமைதியாக தூங்கிகொண்டிருக்கின்றது.

இப்படியாக அன்னிய ஆதிக்க ஆபத்து எவ்வழி வந்தாலும் முடிந்தவரை போராடி பார்ப்பதுதான் நெல்லை குணம், அதன் மண்ணின் குணம் அப்படியானது.

குற்றாலத்தில் தன்னை கலெக்டர் அவமானபடுத்தினான் என கட்டபொம்மன் மனதில் அது விஸ்வரூபமெடுத்தது, செங்கோட்டைகாரனான வாஞ்சிநாதனுக்கு அது மனியாச்சியில் வெறியாய் முடிந்தது.

ஆனால் கட்டபொம்மனும்,வாஞ்சியும்,சிதம்பரனாரும் வீழ்ந்திருகலாம் ஆனால் அவர்கள் எதிர்த்த அந்த நோக்கம் பின்னாளில் நிறைவேறி வெள்ளையன் வெளியேறியது சரித்திரம்.

எல்லா ஆட்சியாளருக்கும் ஆட ஒரு காலம் உண்டு, அடங்கவும் ஒரு காலம் உண்டு.

அது உண்மையான நோக்கத்துகாய் போராடும் எல்லா போராளிகளும் ஆட்சியாளர்களால் வீழ்த்தபட்டாலும் காலத்தால் வீழ்த்தபடுவதே இல்லை.

இன்று வாஞ்சிநாதன் நினைவுநாள், அதாவது ஆஷ் கொல்லபட்டநாள். வருணாசிரமத்தை காக்கத்தான் ஆஷினை கொன்றதாக அவர் சொல்லியிருந்தாலும், வஉசிக்கு ஆஷ் கொடுத்த நெருக்கடிகள் ஏராளமானவை. ஆங்கில அடக்குமுறையின் ஒரு வடிவமாகத்தா ஆஷ்துரை அந்நேரத்தில் அறியபட்டார்.

இந்தியாவில் கலெக்டர் கூட நிம்மதியாக இருக்கமுடியாது எனும் ஒரு பயம் இந்நாளில்தான் வெள்ளையனுக்கு உண்டாயிற்று. கலெக்டர் இல்லை என்றால் நிர்வாகம் ஏது? ஆட்சி ஏது? (இந்நாளில் கலெக்டரின் வேலை எல்லாம் கட்சியின் மாவட்ட செயலாளரே செய்துகொள்வது வேறு, ஆனால் வெள்ளையன் ஆட்சி வேறு)

மணியாச்சி ஜங்ஷனும், பாளையங்கோட்டை ஆஷ்துரை கல்லறையும் வெள்ளையனுக்கு மரணபயத்தை காட்டிய நெல்லையின் வரலாற்று அடையாளங்கள்.

இந்த தேசத்தின் சரித்திர சுவடுகள்

 

ஒரு தேவதை பெயர் கூகிள், இன்னொரு தேவதை பெயர் யூடியூப்

பச்சிளங்குழந்தையினை பராமரிப்பது எப்படி என்பதை இரு தேவதைகள் விளக்கி கொண்டிருக்கின்றார்கள், இப்போதைக்கு சங்கம் அவர்களின் பாதார விந்தங்களில்தான் விழுந்து கிடக்கின்றது

ஒரு தேவதை பெயர் கூகிள், இன்னொரு தேவதை பெயர் யூடியூப்

தவம் எல்லாம் இருக்க வேண்டியதில்லை, பட்டனை தட்டினால் வந்து நிற்கின்றார்கள், அவ்வளவு நல்லவர்கள்

எது பற்றி கேட்டாலும் இருவரிடமும் பதில் இருக்கின்றது

பெரியவர்களை அனுபவசாலிகள் என உலகம் சொல்லும், ஆயிரம் பேரின் அனுபவத்தை கவனித்து கருத்துக்களை சொல்பவன் ஞானி எனப்படுவான்

ஞானிகளுக்கும் ஞானியாக பல்லாயிரகணக்கான மக்களின் அனுபவங்களை நம் கேள்விக்கு பதிலாக கண்முன் நிறுத்துகின்றன இந்த தேவதைகள்

விஞ்ஞான உலகத்தில் இப்படி டிஜிட்டல் தேவதைகளும் உருவாகியிருப்பது தொலைதூர வாசிகளுக்கு பெரும் ஆறுதல்


வணிக விழாக்களில் பங்குபெறும் நடிகர் நடிகையர் மேல் நடவடிக்கை : நடிகர் சங்கம்

இந்த படபூஜை, வெற்றி விழா, சின்னதிரை ஆட்டம், வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகள் எல்லாவற்றிற்கும் இந்த தடை பொருந்துமா?

அட அவர்கள் சினிமாவில் மட்டும் கலைச்சேவைக்கா நடிக்கின்றார்கள்? அதுதான் மிகபெரும் வணிகம்

அதை எல்லாம் பற்றி பேசினால் பதில் வராது.


நக்சலைட்டுகளிடம் இருந்து கறுப்பு பணம் மீட்பு : செய்தி

மோடியின் அதிரடி நடவடிக்கைக்கு பின் கறுப்பு பணம் முற்றிலும் ஒழிந்தது என பக்தாஸ் சொல்லிகொண்டிருந்தார்கள்

இப்பொழுது அதே மோடி அரசுதான் நக்சல்களிடம் கறுப்பு பணம் இருப்பதை ஒப்புகொள்கின்றது

அப்படியானால் இவர்கள் எதை ஒழித்தார்கள் என கேட்டால் சொல்ல மாட்டார்கள்..