இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது : ஜெட்லி

Image may contain: 2 people, people standing

“இந்த அண்டார்டிக்காவில் பெட்ரோலும் இன்னும் சில கனிமமும் இருப்பதாக செய்தி வந்ததே, ஏதாவது செய்ய முடியுமா?

அட அங்க போக யார்கிட்ட விசா வாங்கணும்னு தெரியல அம்பானி, நான் வேணும்னா இந்த பெரு சிலி பக்கம் போயிட்டு அப்படியே அண்டார்டிக்கா போயிட்டு வரட்டுமா?”


இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது : ஜெட்லி

அதாவது பாஜக அரசியலை விட்டு ஒதுங்க போகின்றது, அல்லது ஓடபோகின்றது என்பது அன்னாருக்கு தெரிந்தே விட்டது

சூசகமாக கருத்து தெரிவிப்பது என்பது இதுதான்


 

 

மைக்கேல் மதன காம ராஜன்

Image may contain: 1 person

மைக்கேல் மதன காமராஜன் படம் பார்க்க அமர்ந்தாயிற்று

அது குஷ்பூ படம், கமலாஹாசனும் இன்னும் பலரும் நடித்திருந்தார்கள்

ஆனால் மாணிக்க சிலையாக, மலைக்கோவில் தீபமாக, மல்லிகை ஊஞ்சலாக வந்த‌ குஷ்புவின் முன்னால் கமலஹாசனால் நிற்க முடியவில்லை, அவரும் 4 வேடங்களில் வந்து நின்று பார்த்த்தார், நன்றாகத்தான் நடித்திருந்தார்

ஆனால் குஷ்புவின் ஒரு சிரிப்பு முன்னால் அந்த 4 வேடமும் நிற்க முடியவில்லை

இந்த படம் இன்னும் சிறப்பாக வந்திருக்க தலைவியினை 4 வேடத்தில் நடிக்க வைத்து கமலஹாசன் ஒரு வேடத்தில் நடித்திருந்தால் சிவாஜியின் நவராத்திரி படத்திற்கு கடும் சவாலாக அமைந்திருக்கும்

ஆனால் சொந்தபடம் என்பதால் அச்சத்தில் கமலஹாசன் அதனை செய்யவில்லை

எனினும் 4 வேடம் போட்டும் தலைவியின் முடி அசைவிற்கு கூட கமலஹாசன் வரவில்லை என்பதுதான் காமெடி

தலைவியின் அந்த சிரிப்பும், அந்த கம்பீரமும், அந்த ஸ்டைலும்.. அட அட அட‌

 

நகரங்கள் பெயர் மாற்றம்….

இந்த பழனிச்சாமி அரசு விமர்சனங்களை தாண்டி பல விஷயங்களை செய்ய தொடங்கிவிட்டது

அதாகபட்டது வெள்ளையன் தன் வாயில் நுழையாத தமிழக நகரங்களுக்கு அவனுக்கு வாயில் வந்த பெயரினை வைத்துவிட்டான்

அப்படித்தான் தூத்துகுரின், டிரிச்சி, தஞ்சூர், டின்னவேலி என பல பெயர்கள் மாறி அவை நிலைத்தும் விட்டன‌

இதுவரை எந்த அரசும் அதுபற்றி யோசிக்கவில்லை, கலைஞர் அரசும் மெட்ராசை சென்னை ஆக்கியதோடு சரி

இப்பொழுது இனி தூத்துகுடி, தஞ்சாவூர் என பெயர்கள் மாற்றபடும் என பழனிச்சாமி அரசு தெரிவித்துள்ளது

சும்மா சொல்ல கூடாது, ஆட்சி முடிவதற்குள் கலைஞருக்கும் ஜெயாவிற்கும் பெரும் அவப்பெயரை ஏற்படுத்துவது போல, அட அவர்கள் செய்யாதை இவர்கள் செய்துவிட்டார்களே என்ற அதிர்ச்சி கொடுக்க‌ பழனிச்சாமி கூட்டம் ஒரு முடிவோடு இருக்கின்றது

ஏதோ ஒரு சக்தி இவர்களை திட்டமிட்டு இயக்குகின்றது, எந்த தடை என்றாலும் தாண்டுகின்றார்கள், எந்த சிக்கல் என்றாலும் அடித்து நொறுக்கி ஆட்சியினை அட்டகாசமாக கொண்டு செல்கின்றார்கள்

இன்னும் என்னென்ன அதிரடிகளை எல்லாம் எடுத்து வரலாற்றில் நிற்க போகின்றார்களோ தெரியவில்லை

ஆனால் நிற்பார்கள் போல‌

கிரிக்கெட்டில் எப்பொழுதும் டெயில் என்டர்கள் எனப்படும் கடைசி பேட்ஸ்மேன்களுக்கு அச்சமே இருக்காது. காரணம் தோற்றால் அவர்களுக்கு சிக்கலே இல்லை ஆனால் வென்றுவிட்டால் வரலாறு

அட்டகாசமான ஆல்ரவுண்டர்கள் இப்படித்தான் கிரிக்கெட்டில் உருவானார்கள்

பழனிச்சாமி அரசும் அப்படி வருவது வரட்டும் என அடித்து ஆட ஆரம்பித்தாயிற்று, விக்கெட் இப்போது விழுவதாக தெரியவில்லை என்பதால் அவர்கள் காட்டில் இப்பொழுது ரன் மழை

 
 

உலகோப்பை கால்பந்து போட்டிகள் பல அதிர்ச்சிகளுடன் தொடங்கி இருக்கின்றது

இந்த உலகோப்பை கால்பந்து போட்டிகள் பல அதிர்ச்சிகளுடன் தொடங்கி இருக்கின்றது

மெஸ்ஸி தடுமாற்றம் ஒரு அதிர்ச்சி என்றால் சாம்பியன் ஜெர்மனி மெக்ஸிகோவிடம் தோற்றிருக்கின்றது

ரொனால்டாவும், மெஸ்ஸியும் ஒரு ரவுண்டு வந்துவிட்ட நிலையில் அடுத்த எதிர்பார்ப்பு நெய்மர் மேல் விழுந்திருக்கின்றது

நெய்மரும் நல்ல ஆட்டக்காரர், ஆனால் அடிக்கடி காயம்படுவார் அல்லது பிடித்து வைத்து முதுகிலே குத்திவிடுகின்றார்கள்

இப்பொழுதும் முழுவதும் குணமாகாத நிலையில்தான் களமிறங்குகின்றார், சுவிசுடன் அவரும் சொபிக்கவில்லை

ஆசியாவின் சிறந்த கால்பந்து அணிகளாக சவுதி, ஈரான், ஜப்பான், தென்கொரிய அணிகள் உள் இறங்கி இருக்கின்றன‌

இதில் சவுதியினை ரஷ்யா வென்றுவிட்டது, இன்று தென்கொரியா களம் காண்கின்றது

உலகத்தின் ஒரே பிக் பாஸ் தலைவி ஒருவரே

Image may contain: 1 person, smiling, close-up

விஜய் டிவியில் யாரும் பிக்பாஸாக இருக்கட்டும்

உலகத்தின் ஒரே பிக் பாஸ் தலைவி ஒருவரே, ஒருவர் மட்டுமே

பிரபஞ்சத்தின் பிக்பாஸ் தலைவி முன் எந்த டிவியின் பிக்பாஸும் நிற்க முடியாது.

கரப்பான் பூச்சிகளின் அணிவகுப்பில் வண்ணத்து பூச்சிக்கு என்ன வேலை?

அதனால் தலைவி இந்த நிகழ்ச்சிபக்கம் எல்லாம் வரமாட்டார்

இன்று கக்கனின் பிறந்தநாள்

Image may contain: 1 person, close-up

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு காலத்தில் தூய்மையான தியாகிகளும், மக்களை தவிர ஏதும் சிந்தியா மகா உத்தமர்களும் இருந்தார்கள், அப்படியும் ஒரு பொற்காலம் இருந்தது

அப்படி ஒரு குறையும் சொல்லமுடியாத தூய்மையான அரசியல்வாதிகளில் ஒருவர்தான் கக்கன் , காந்தி, சாஸ்திரி, காமராஜரை போலவே மகா தூயவாழ்வு வாழ்ந்த அரசியல் மகான் அவர்

சுதந்திரபோராட்ட தியாகி, வெள்ளையனிடம் சிறையில் சித்திரவதை பட்டவர்களில் அவரும் உண்டு, கடுமையான அடிகள் அவை

சுதந்திர இந்திய பொதுதேர்தலில் மதுரை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கபட்டவர். பின்னர் காமராஜர் அமைத்த அரசில் அமைச்சரானார்

அமைச்சர் ஆனாலும் சாதாரண மக்களோடு பேருந்து பயணம், எளிமையான வாழ்வு என்றுதான் இருந்தார். மகா எளிமையான வாழ்வு

பொதுபணிதுறை, மின்சார துறை, விவசாயதுறை, காவல்துறை என அந்த காங்கிரஸ் அரசின் எல்லா துறைகளிலும் அமைச்சராக இருந்தும் சல்லி காசு கூட சம்பாதிக்க தெரியாத நேர்மையான அரசியல்வாதி அவர்

அவர் பொதுபணிதுறை அமைச்சராக இருந்தபொழுதுதான் மேட்டூர் அணை உயரம் அதிகரிக்கபட்டது, மணிமுத்தாறு வைகை அணைகள் எல்லாம் கட்டபட்டன‌

அவர் விவசாய அமைச்சராக இருந்தபொழுதுதான் உரங்கள் கிடைக்க வசதி, கூட்டுறவு முறை எல்லாம் கொண்டுவரபட்டது

அவர் காவல்துறை அமைச்சராக இருந்தபொழுது சாதி கலவரங்கள் நேர்மையாக இரும்புகரம்கொண்டு அடக்கபட்டது, சாதி கலவரங்களை தடுக்க உளவு போலிஸ் துறை எல்லாம் உருவாக்கினார்

மிக பெரும் திட்டங்களை உருவாக்கியவர், பெரும் பதவியில் இருந்தாலும் தன் பிள்ளைகளை அரசு பள்ளியிலே படிக்க வைத்தார், கக்கனின் சிபாரிசில் வேலைக்கு வந்தவர்கள் என்றோ, கக்கனின் சிபாரிசில் தப்பிய குற்றவாளி என்றோ ஒருவனையும் காட்ட முடியாது

அரசியல் தவ வாழ்க்கை வாழ்ந்த மகான் அவர் , அவரைத்தான் எதிர்த்து நின்றன திமுக புலிகள்.

அதுவும் பெரியார் சொன்னார், “இந்த கக்கனோ காமராஜரோ பிராமணர் இல்லிங்க‌, அவர்களும் தாழ்த்தபட்ட சூத்திரர்கள். நன்றாகத்தான் ஆளுகின்றார்கள்,

ஏ அயோக்கிய பயலுகளா அவர்களை ஆளவிடுங்க.. உங்கள பற்றி எல்லோரையும் விட எனக்கு நல்லா தெரியும்”

அவர் சொன்னதை எல்லாம் திமுக கேட்கவில்லை

எங்கு பெரியார் பேச்சை கேட்கவேண்டுமோ அங்கு மிக சரியாக காதை பொத்திகொள்பவர்கள் அவர்கள்

1967ல் திராவிட புரட்சியில் தோற்றார், 1971லும் தோற்றார். நாட்டுக்காக, தமிழக மக்களின் நல்வாழ்விற்காக முனிவர் போல உழைத்துகொண்டிருந்த அவர், காமராஜர் போன்றோரை விரட்டிவிட்டுத்தான் திமுக ஆட்சிக்கு வந்தது

அதன் பின் கக்கனை பற்றி செய்தி இல்லை, அவர் பராரி கோலத்தில் சென்னையில் மக்களோடு மக்களாக சுற்றினார். இவ்வளவிற்கும் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த அவர சத்யமூர்த்திபவனும் கைவிட்டது

மிக்க வறுமையில் சிக்கிய அவரை சிவாஜி கணேசன் சந்தித்து கண்ணீர் சிந்தினார், சிவாஜி கஞ்சன் என்பார்கள் ஆனால் செய்ய வேண்டிய இடங்களில் செய்தார்

தனக்கு பரிசாக வந்த தங்க‌ சங்கிலி ஒன்றை ஏலம் விட்டார், பணம் குவிந்தது, தன் பணத்தையும் போட்டு வங்கியில் டெப்பாசிட் செய்து கக்கனின் வறுமை போக்க முனைந்தார் சிவாஜி கணேசன்

அந்த மாமனிதனை அன்று தமிழக அரசும் எட்டிபார்க்கவில்லை, நேரு பின்னால் கொடி பிடித்த அவரை இந்திரா அரசும் எட்டிபார்க்கவில்லை

தன்மானத்தில் உயர்ந்துநின்ற கக்கன் அவர்களிடம் கையேந்தவுமில்லை

பின்னொருநாள் ராமசந்திரன் முதல்வரான காலத்தில் அரசு மருத்துவமனைக்கு சுற்றிபார்க்க சென்றார், அங்கே ஓர் முதியவர் பாய் விரித்து படுத்திருந்தார், நோய் அவரை படாதபாடு படுத்தியிருந்தது

ராமசந்திரனிடம் அதுதான் கக்கன் என சொன்னார்கள்

தான் சினிமாவில் நடித்துகொண்டிருந்தபொழுது பெரும் அமைச்சராக கோலோச்சியவர் இவரா? அந்த பெருமகனா என மனம் நொந்த ராமசந்திரன் அவரை நல்ல மருத்துவமனையில் சேர்த்தார்

எந்த ராமசந்திரன்? மக்களை மயக்க எந்த முகத்தை திமுக பயன்படுத்தியதோ? கக்கன் காமராஜரை வீழ்த்த எந்த ராமசந்திரனை ஒப்பனையிட்டு மக்கள் முன்னால் நிறுத்தியதோ அந்த ராமசந்திரன்

நிச்சயம் அன்று ராமசந்திரனின் மனம் கலங்கி இருக்க வேண்டும், இந்த மாமனிதனை என்னை வைத்தா தோற்கடித்தார்கள் என அவர் கலங்கி இருக்க வேண்டும், அப்படி கலங்கினார் என்றுதான் நெருக்கமானவர்கள் சொல்கின்றார்கள்

உண்மையில் ராமசந்திரன் அவர் நலம் காக்க போராடினார், ஆனால் இம்மக்களுக்காக உழைத்து பின் அவர்களால் தோற்கடிக்கபட்டு புழுதியில் எறியபட்டு மனதால் செத்திருந்த கக்கன், உடலாலும் பிணமானார்

இன்று கக்கனின் பிறந்தநாள்

கக்கனின் வாழ்வே கொடுமை நிறைந்தது, அதனை விட கொடுமையான செய்தி கக்கனின் மகன் ஒருவன் வாழ வழியின்றி பைத்தியமாகிவிட்டான் என்ற செய்தி அது

அந்த பொதுநல பித்தன் இம்மக்களுக்காக உழைத்து தன் மகனை பராரியாக்கி பித்தனாக்கி இருக்கின்றான்

14 ஆண்டுகள் அமைச்சராக இருந்தவன் ஒரு பைசா இல்லாமல் அரசு ஆஸ்பத்திரியில் கிழிந்த பாயில் கிடந்த தமிழகத்தில்தான், முதல்வர் வீட்டு வேலைக்காரர்கள் எல்லாம் பல்லாயிரம் கோடி சொத்துக்களோடும், பெரும் பணத்தோடும் பெரும் உல்லாச வாகனங்களில் அலைகின்றார்கள்

கக்கனை விரட்டினார்கள் திமுகவினர், இதோ கக்கனின் குடும்பத்து சொத்து என ஒரு செங்கல்லை காட்ட முடியுமா? ஆனால் திமுக அதிமுக‌ சொத்து மதிப்பு வங்க கடலையும் விட பெரியதாக போகின்றது

இதனை பார்க்கும்பொழுது தமிழகம் நாணத்தால் தலைகுனிகின்றது, எப்படிபட்ட வீழ்ச்சியினை சந்தித்துவிட்டோம் என வெட்கி அழுகின்றது

நேர்மைக்கு அடையாளம் அந்த கக்கன், எளிமையான‌ மக்கட் பணிக்கு பெரும் அடையாளம் அந்த மாமனிதன்

அவரை போன்றவர்கள் இனி வரமாட்டார்கள்,

தமிழக அரசியல் நதி அவ்வளவு சுத்தமான நதியாக ஓடியிருக்கின்றது, அந்த சோலை அவ்வளவு மணமாக இருந்திருக்கின்றது, அந்த விளக்கு அவ்வளவு பிரகாசமாக ஒளிவீசியிருக்கின்றது என கக்கன், காமராஜரின் வரலாறுகள் நமக்கு காட்டுகின்றன‌

இன்று நாறிவிட்ட சாக்கடையாக, கருவாட்டு மூட்டையாக, பெரும் இருளில் சிக்கிவிட்ட அந்த அரசியலில் இருந்து ஓரமாக நின்று அந்த பொற்காலத்தை நினைத்து அழுவோம்

தெய்வங்கள் அருள்வழங்கிய அந்த ஆலயத்திலிருந்து அவைகளை விரட்டிவிட்டு சாத்தான்களை குடி வைத்ததற்காய் அழுவோம்

அதில் கக்கனுக்காகவும் அழுவோம் , இவர்களை போல உத்தமர்களை அதுவும் தோற்றபின்னும் மறுபடியும் வந்து வாக்கு தாருங்கள் உங்களுக்காக உழைக்கின்றோம் என நின்ற அந்த அப்பாவிகளை விடாமல் துரத்தினோம் என்றால்

கிறிஸ்துவினை கொன்ற யூதனுக்கும், இவர்களை விரட்டிய தமிழனுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்?

அந்த பாவத்திற்கு பெரும் தண்டனையும், பெரும் கண்ணீரும் பெற்றுத்தான் தீரவேண்டும்

அதனால்தான் இந்த அழுகை அழவேண்டியிருக்கின்றது தமிழகம், அழுவோம் வாய்விட்டு அழுவோம்

அதில் இந்த அப்பாவி கக்கனுக்காக ஓங்கி அழுவோம்

கக்கனும் அவரை போன்றவர்களும் எவ்வளவு உத்தமமான மகான்கள் என உலகிற்கு காட்ட பின் வந்தவர்கள் எல்லாம் ஊழலும், லஞ்சமும் நிறைந்த சுயநல ஆட்சி நடத்தினார்கள்

அதில் கக்கனின் நேர்மையினை உலகிற்கு சொன்னார்கள், கக்கனை விரட்டிவிட்டதாக நினைத்தவர்கள் உண்மையில் அவருக்கு பெரும் புகழை ஈட்டிதந்திருக்கின்றார்கள்

தமிழகம் கண்ட தனிபெரும் தியாகிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

அப்படிபட்டவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் இருந்திருக்கின்றார்கள் என்ற நினைவு பெருமூச்சில் பொங்கி வரும் கண்ணீருடன் அம்மகானுக்கு அஞ்சலிகள்

(கக்கன் தாழ்த்தபட்டவர் , காமராஜரும் சூத்திர சாதி ஆனால் மிகபெரும் தியாகிகளாய் இந்நாட்டில் வாழ்ந்தார்கள். மிக பெரும் இடத்திற்கு அவர்கள் சென்றார்கள்

நிச்சயம் அவர்களை வீழ்த்தியது ஆரிய பார்பனியமோ, உயர் சாதி சூழ்ச்சியோ அல்ல. தாழ்த்தபட்டவர்களை உயர்த்துவோம் என புரட்சி செய்தவர்கள்தான் அவர்களை வீழ்த்தினார்கள்

அதாவது ஆரிய சூழ்ச்சி செய்யவேண்டிய வேலையினை இவர்களே செய்தார்கள், செய்துவிட்டுத்தான் திராவிட் புரட்சியில் சூத்திரன் வாழ்வு, தாழ்த்தபட்டவன் முன்னேற்றம் என அவர்களே சொல்லிகொண்டார்கள்)