பிக் பாஸ் – 2 : 100 நாட்கள் படுஜோராக தமிழகம் மகா மகிழ்ச்சியாக இருக்கும்

பிக்பாஸுக்கு இந்த பொன்னம்பலம் மும்தாஜை அனுப்புவதை விட பழைய சரோஜாதேவி, ஏ.எல் ராகவன், கே.ஆர் விஜயா, சவுகார் ஜாணகி, விஜயகுமாரி கோஷ்டிகளை வீல்சேரில் அனுப்பினால் கூட பழைய படங்களின் அனுபவங்களையாவது பேசிகொண்டிருப்பார்கள்

ஒரே சிக்கல் ஒரு மூட்டுவலி மருத்துவரையும் உடன் அனுப்ப வேண்டும் அவ்வளவுதான்

அப்படியே அக்கால வசனகர்த்தா ஆரூர் தாஸ் முதல் பலரை அனுப்பினால் இன்னும் நன்றாக இருக்கும்

அட அவ்வளவு ஏன் கங்கை அமரன் போன்றவர்களை அனுப்பினால் கூட பழம் அனுபவங்களை கொட்டுவார்கள்

அதை விட்டு யாரென்றே தெரியாத சிலரை அனுப்பி இம்சைபடுத்துகின்றார்கள், காலா படத்தை விட மோசமான தண்டனை இந்த பிக்பாஸ் 2

இந்த பிக்பாஸுக்கு திரையுலகம் மற்றும் மார்டலிங் உலகிலிருந்துதான் பங்கேற்பாளர்கள் வரவேண்டும் என்ற விதியினை மாற்ற வேண்டும்

அரசியல்வாதிகள் 100 நாள் விடுமுறை எடுத்துகொண்டு வந்தால் ஒன்றும் கெட்டுவிடாது, சமூகமாவது அமைதியாக இருக்கும்

Image may contain: 1 personதமிழிசை, எச்.ராசா, திருமா, கிருஷ்ணசாமி, அன்புமணி, துரை முருகன், டிடிவி தினகரன், தங்க தமிழ்செல்வன், பழனிச்சாமி கோஷ்டி, ஈவிகே எஸ் இங்கோவன், அங்கிள் சைமன் என அனுப்பினால் எப்படி இருக்கும்?

100 நாட்களாக படுஜோராக தமிழகம் மகா மகிழ்ச்சியாக இருக்கும்

அவர்களும் வேண்டாமென்றால் இந்த நித்தி, மதுரை ஆதீனம், பால் தினகரன், ஈஷா சாமி, ஜவஹருல்லா கோஷ்டிகளை அனுப்பினால் இன்னும் மாபெரும் கொண்டாட்டமாக இருக்கும்


“மய்யம்” மேடை என்றால் மட்டும் நம்மை அழைக்கின்றார், பிக்பாஸ் மேடை என்றால் அவர் மட்டும் போய் பேசிகொண்டே இருக்கின்றார்

ஹும், பிக்பாஸ் வீட்டுக்கே அனுப்பாத இவரா நம்மை சட்டமன்றம் அனுப்ப போகின்றார்? இவரிடம் இனி மிக கவனமாக இருக்க வேண்டும்

மய்யமும் மண்ணாங்கட்டியும்….


இந்தியாவினை தீண்டிய‌ ராகு காலம், ராகுல் காந்தியால் தீரட்டும்

Image may contain: 3 people, people smiling, people standing

பெரும் பாரம்பரிய குடும்பத்து வாரிசு, இன்றைய காங்கிரசின் உச்ச தலைவர், இளம் தலைவர்

காங்கிரஸ் கட்சி பெரும் பாரம்பரியம் கொண்டது, கடந்த தேர்தலில் அதற்கு பின்னடைவு என்றாலும் எப்பொழுது வேண்டுமானாலும் சிலிர்த்து எழும் ஆற்றல் கொண்ட கட்சி அது.

இந்தியா என்பது யாராலும் அசைக்கமுடியா நாடு , என்றும் நிலைத்து நிற்கும் நாடு அதன் எதிரிகள் வெளியிலிருந்து வந்தால் இத்தேசம் அட்டகாசமாய் எதிர்கொள்ளும்

ஆனால் மதவாதம் இன்னபிற கரையான்கள் உள்ளிருந்து அரிக்கும் ஆபத்து உண்டு. மதம் சாயம் பூசாத இந்தியாவே உலகில் வெற்றிநடை போட முடியும்

இத்தேசத்தை மதவாத பிடியிலிருந்து விடுவித்து வழிநடத்தும் ஆற்றலும் அக்கறையும் கொண்ட கட்சி காங்கிரஸ் கட்சி

இந்தியா எனும் யானையினை அந்த பாகனே வழிநடத்த முடியும், இல்லாவிட்டால் இத்தேசம் திசைமாறும்

அந்த கட்சியினை வழிநடத்தி செல்கின்றார், சுருக்கமாக சொன்னால் தேசத்தின் ஒரு எதிர்பார்ப்பு ராகுல்

பாட்டியோ, தந்தையோ இவருக்கு அரசியல் சொல்லிகொடுக்கவில்லை, அன்னையின் சில ஆசிகள் உண்டு, மற்றபடி தன்னை தானே செதுக்கி வளரும் தலைவர் அவர்

இந்தியா முழுக்க அறிபடுபவர், இந்திய ஒற்றுமையின் அடையாளாமாக , ஒரே இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரமாக அறிபடுகின்றார்

தேர்தலில் வெற்றி தோல்விகள் சகஜம், இன்னொரு நாளில் காங்கிரஸ் வெற்றிபெறும், அதுவும் இந்த பாஜக அரசு போகும் போக்கிற்கு கட்டாயம் நடக்கும்

அவரது பாட்டனும், பாட்டியும், தந்தையும் நாட்டிற்கு கொடுத்த உழைப்புகள் ஏராளம், பாட்டியும் தந்தையும் உயிரையே கொடுத்தவர்கள்

பாட்டியும், தந்தையும் எப்படி கொல்லபட்டார்கள் என தெரிந்தும், எந்த சவாலையும் எதிர்கொள்ள தயாராக இந்நாட்டிற்கு தொண்டாற்ற வந்து நிற்கும் ராகுலை நிச்சயம் பாராட்டியே தீரவேண்டும்

பெரும் பலம்கொண்ட காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் என்பது வெடிகுண்டு மேல் நிற்கும் பதவி, உயிருக்கு துணிந்த தைரியம் வேண்டும். ராகுல் அதில் மிக தைரியமாக அமர்ந்திருக்கின்றார்

அக்குடும்பத்தின் வாரிசாக வந்து காங்கிரசையும், நாட்டையும் காத்து நிற்கின்றார் ராகுல்காந்தி, நிச்சயம் ஒருநாள் உச்சம் பெறுவார், காலமிருக்கின்றது

ராஜிவின் மறுபிறப்பாகவே அவரை இந்தியா காண்கின்றது, தந்தை இந்த மாபெரும் தேசத்திற்கு செய்ய நினைத்ததை எல்லாம் தனயன் செய்து முடிக்க வாழ்த்துவோம்.

நிச்சயம் ஒரு காலம் இந்தியா அவரால் புத்துயிர் பெரும், பெரும் வளர்ச்சி அடையும்.

இந்தியாவின் எதிர்ப்பார்ப்பு இனி அவர்தான், நிச்சயம் அவர்தான்,

இளைய பாரதம் அந்த ராகுல் தான். இந்தியா முழுக்க ஒருங்கிணைக்கும் ஒரு தலைவராக அவர் திகழ்வது இந்நாட்டிற்கு பெரும் பலம்

இந்தியாவினை தீண்டிய‌ ராகு காலம், ராகுல் காந்தியால் தீரட்டும்

இந்த தேசத்தின் எதிர்காலமாக நம்பபடும் இரண்டாம் நேருவான ராகுலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

எங்கள் தங்க‌ தலைவியோடு சேர்ந்து நாங்களும் வாழ்த்துகின்றோம்…


மு.க ஸ்டாலினை அவர் தளபதி, பதுங்கும் புலி என்றெல்லாம் சொல்லிகொள்ளும் சிலர் ராகுல் காந்தியினை “பப்பு” என்பதுதான் காமெடி

ஸ்டாலினை விட ராகுல் பலமடங்கு பரவாயில்லை என்பது யாருக்கு தெரியாது?

 
 


 

 
 
%d bloggers like this: