காஷ்மீர் குடியரசு தலைவர் ஆட்சிக்கு சென்றவுடன் அதிரடிகள்

Image may contain: 3 people, people smiling, people sitting and text

காஷ்மீர் குடியரசு தலைவர் ஆட்சிக்கு சென்றவுடன் அதிரடிகள் ஆரம்பிக்கின்றன‌

யாசின் மாலிக் எனும் பிரிவினைவாதியினை தூக்கி உள்ளே வைத்தாயிற்று

யாசின் மாலிக் யாரென்றால் அங்கிள் சைமனின் உடன்பிறவா காஷ்மீரிய சகோதரர் என அங்கிளால் முன்பு சென்னையில் அழைக்கபட்டவர்

சென்னைக்கு யாசினை அழைத்து பெரும் சீன் எல்லாம் போட்டு அங்கிள் அழிச்சாட்டியம் செய்த காலங்கள் உண்டு , ஜெயலலிதா ரசித்துகொண்டிருந்தார்

ஆனால் இப்போது காலங்கள் மாறிவிட்டன‌

காஷ்மீரில் யாசினை தூக்கிவிட்டார்கள் என்றால் தமிழகத்தில் இனி அங்கிள் சைமனுக்கு எப்பொழுதும் கழுத்தில் கயிறு விழலாம் என்பதால் அங்கிள் மகா அப்செட்

சேவ் காஷ்மீர், ஏ இந்திய ராணுவமே வெளியேறு என ஒரு சத்தம் தமிழகத்தில் இப்பொழுது கேட்கட்டும் பார்க்கலாம்

கேட்காது

காரணம் நடப்பது பச்சை இந்தியன் பழனிச்சாமி ஆட்சி…

 

திமுக நேர்மையான கட்சி என்பதால் பலருக்கு பிடிக்கவில்லை : முக ஸ்டாலின்

திமுக நேர்மையான கட்சி என்பதால் பலருக்கு பிடிக்கவில்லை : முக ஸ்டாலின்

திமுக பலருக்கு பிடிக்க காரணமே அது நேர்மையினை புதைத்துவிட்டு தந்திரம்,சாமார்த்தியம் போன்ற சாகசங்களும் அதன் போர்குணமும்

நேர்மையானவர்களை தமிழகத்திற்கு பிடிக்கும் என்றால் காமராஜர் தோற்றிருப்பாரா? திமுக ஆட்சியினை பிடித்திருக்குமா?

ஸ்டாலின் திமுக நேர்மையான கட்சி என சொல்வது, கலைஞர் முன்பு “ஊழலுக்கு நான் நெருப்பு ” என்பதை அப்படியே நினைவுபடுத்துகின்றது

 


நாட்டிற்கு சாலை மகா அவசியம், ஆனால் சேலத்திற்கு இருக்கும் சாலையினை அகலபடுத்துதான் சால சிறந்தது அதை விட்டு விட்டு பல்லாயிரம் கோடியில் 8 வழிச்சாலையே அமைப்பேன் என்பது சரியல்ல‌

எட்டுவழிசாலையில் சர்ச்சை வருவதை ஏற்கலாம்

சிலர் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வருவதை எதிர்ப்பதெல்லாம் பிடித்து உள்ளே போட வேண்டிய விஷயங்கள்

அது பசுமையான பகுதியாம் அதனால் அமைக்க கூடாதாம், பின் எங்கே அமைப்பார்கள் மிக வறண்ட ராஜஸ்தானிலா?

எட்டிவழிசாலை யோசிக்க வேண்டிய விஷயம், ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எதிர்ப்பு என எவனாவது கிளம்பினால் விடவே கூடாது..


Image may contain: one or more people

யோகா செய்யாமலே 96 வயது வரை ஒரு சமூக போராளி நலமாக வாழ்ந்திருந்தார்…… 


என்றும் உள்ளது ஒரே நிலா..

Image may contain: 1 person, smiling, standingImage may contain: 1 person, standingநொடிக்கு நொடி மாறும் உலகில், 30 வருடமாக மாறாமல் இருக்கும் ஒரே விஷயம் தலைவி குஷ்பு

காலம் அவரிடம் தோற்று கொண்டிருக்கின்றது

“அன்று வந்ததும் அதே நிலா..

இன்று வந்ததும் அதே நிலா…

என்றும் உள்ளது ஒரே நிலா…..”

 

தமிழக யோகா….

Image may contain: one or more people and people standing

Image may contain: 6 people, people standing and weddingமுன்னொரு காலத்தில் தமிழகத்தில் அனுதினமும் யோகா நடந்துகொண்டிருந்தது

அது ஒரு யோகாசன காலம்

Image may contain: 3 people, people standing, wedding, car and outdoorதமிழக “யோககலை ஞானி” பன்னீர்செல்வத்தை அழைக்காமல் டோராடூனில் என்ன யோகா விழா கொண்டாடுகின்றார்களோ?

தமிழக அமைச்சரவையினையே “யோகா பள்ளி”யாக வைத்திருந்த ஜெயலலிதாவுக்குமா டோராடூனில் ஒரு அஞ்சலி இல்லை?

தமிழன் என்றாலே வடக்கத்தியர்களுக்கு இளக்காரமாக போய்விட்டது..

Image may contain: 5 people, people sitting

நாட்டிற்கு எவ்வளவு அவசியம்?

Image may contain: one or more people

சீனாவின் அதிநவீன ராணுவத்தினை நேரில் கண்டு உற்சாகமூட்டினார் அதிபர் ஜிபெங், சர்ச்சைகுரிய தீவில் தைரியமாக இறங்கியது சீன விமானங்கள்

பிரான்ஸ் அதிபர் மேக்ரன் தலமையில் பெரும் மாற்றத்திற்கு தயாராகின்றது பிரான்ஸ்

எர்டோகன் தலமையில் புதிய எழுச்சி காண்கின்றது துருக்கி, கத்தார் பிரச்சினையில் எர்டோகன் மத்தியஸ்தம்

இஸ்ரேலை அடிக்கடி சிக்க வைக்கும் ஐ.நா மனித உரிமை அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறுகின்றது

இனி பொறுப்பதில்லை, அமெரிக்கா திருந்தாவிட்டால் ஈரான் அணுஆயுதங்கள் செய்வதை தடுக்க முடியாது

அடுத்தமாதம் வடகொரிய அதிபரை அழைக்கின்றது ரஷ்யா

உலக செய்திகள் இப்படி இருக்க, இந்திய செய்தி எப்படி இருக்கின்றது?

பிரதமர் மோடி தலமையில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி

நாட்டிற்கு எவ்வளவு அவசியம்?

விரைவில் மோடி தலமையில் பிரமாண்ட பூனூல் விழா, பிரமாண்ட காதுகுத்துவிழா, பிரமாண்ட மாட்டுக்கு மணி சூட்டும் விழா என நிறைய நடக்கலாம்

 
 

மன்சூர் அலிகான் உள்ளே

Image may contain: 1 person, smiling

அண்ணே சேலத்தில் வளர்மதி தைரியமாய் கைதாகியிருக்கு, மன்சூர் அலிகான் உள்ளே போயிருக்கார். ஆனா நீங்க முன் ஜாமின் கேட்டு கோர்ட்டு வாசல்ல நிக்குறீங்க, பிரபாகரன் தம்பியாண்ணே நீங்க?

தம்பி ஒரு விஷயம் நுட்பமா விளங்கிடனும், தனு ராஜிவினை வெடித்து கொன்றாள் இன்னும் ஏகபட்ட தம்பி தங்கைகள் ஈழத்துல வீரமா செத்தாங்க‌

ஆனால் அண்ணன் பிரபாகரன் பங்கருக்குள் பத்திரமாக இருந்தார், பிரபாகரன் வழின்னா இதுதான் தம்பி, இது புரியாம பேசிட்டு ஹிஹிஹீஹிஹி.. போங்க தம்பி”

 
 

இன்று சர்வதேச யோகா தினம்

Image may contain: one or more people and crowd

இன்று சர்வதேச யோகா தினம் , உத்திராகாண்டில் நடைபெறும் பிரமாண்ட யோகா நிகழ்வில் பங்கெடுக்கின்றார் மோடி

யோகாவினை பிரபலபடுத்திய பிரதமர் மோடி அதில் பங்கெடுக்கின்றார், நல்லது.

மோடி வித்தியாசமனாவர் இங்கு யோகா என்றாலும் பங்கெடுப்பார், ஜப்பானில் ஜாலியாக‌ டிரம் அடிப்பார், மலைவாழ் மக்களோடு அவர்கள் கலாச்சார ஆடையில் போஸ் கொடுப்பார்.

ஒரு பிரதமருக்கான பணி இதுதான் என்பது அவரின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதற்குத்தான் இத்தேசம் நம்மை பிரதமராக ஆக்கி இருக்கின்றது என மகா உறுதியாக நம்புகின்றார்

அதனால்தான் பாராளுமன்றத்திற்கே ஒழுங்காக செல்லாத மோடி, யோகா என்றவுடன் அய்ய்ய் என குதித்து உத்திரகாண்டுக்கு ஓடிவிட்டார்

Image may contain: 1 person, standing and outdoorயோகாவினை தொடர்ந்து இனி பரதநாட்டியத்தை பிரபலபடுத்துவோம் என யாரும் சொன்னாலும் தயக்கமின்றி ஓடுவார் மோடி.

ஒருவேளை விரைவில பரதநாட்டியத்தை இத்தேசம் பிரபலபடுத்தி, பாபா ராம்தேவ் போல இன்னொருவர் பரத குரு என வந்து, பரதநாட்டியம் , குச்சுபிடி போன்ற இந்திய பாரம்பரிய நடனங்களை பிரபலபடுவது நடக்கலாம்

இது இந்திய பாரம்பரியம் என சொல்லி அவர் மோடியினை அழைத்து விட்டால், மோடியும் மிக சந்தோஷமாகிவிட்டால் என்ன ஆகும்??

ஆர்வமாக யோகாவில் பங்கேற்கும் மோடி, பரதநாட்டியம் என்றால் மட்டும் சலங்கை கட்டி போகமாட்டாரா?

அப்படி சென்றுவிட்டால் ஐஸ்வர்யா தனுஷுக்கும், பவர் ஸ்டாருக்கும் ஒரு போட்டியாளர் உருவாகிவிடும் ஆபத்து உண்டு

 

யோகாவிற்கான நாள் எது?

Image may contain: 1 person, cloud, sky, outdoor and nature

யோகாவிற்கான நாள் எது? எந்த முனிவர் இந்த நாளில் யோகாவினை கொண்டாட சொன்னார்? சாஸ்திரங்களும் புராணங்களும் வானியல் கோள்களும் இந்நாளை சொன்னதா என்றால் பதில் தரமாட்டார்கள்

மாறாக இதே நாளில் யோகா தினமாக கொண்டாட காரணம் என்னவென்றால் அது ஆர்.எஸ்.எஸ் பிதாமகனின் நினைவுநாள்

இந்நாளில்தான் ஹேட்கேவர் காலமானார், முதலில் காங்கிரஸ்காரராகவும் பின் இந்து மதத்தையும் கலாச்சாரத்தையும் காப்பாற்ற கிளம்பிய அந்த ஹேட்கோவர்தான் ஆர்.எஸ்.எஸஐ 1925ல் நிறுவினார்

அதுவும் எப்பொழுது என்றால் ஆரிய மேலாதிக்க கொள்கையில் ஹிட்லர் நாசிகட்சியினை தொடங்கி அழிச்சாட்டியம் செய்தபொழுது, கூடவே ஈரானும் நாங்கள் ஆரியபூமி என பகிரங்கமாக சொன்னபொழுது ஹிட்லரின் ஸ்வாஸ்திக் சின்னத்துடன் இங்கு ஆர்.எஸ்.எஸ் உதித்தது

நாசிக்களை பார்த்து அப்படியே இவர்கள் இங்கு தொடங்கியதுதான் ஆர்.எஸ்.எஸ் தவிர சொந்த சரக்கு அல்ல.

இந்தியா முழு இந்துநாடு, இந்தியா இந்துக்களுக்கே, ஆகமவிதிபடியே எல்லாம் அமையவேண்டும், பசுமாடு தெய்வம், அகண்ட இந்தியா வேண்டும் என பல கருத்துக்களை முன் வைத்தவர் அந்த ஹேட்கேவர்

அந்த கோஷா இன்னபிற வகுப்புகள், கால்சட்டை, எல்லாம் இவரின் சிந்தனைகள், அதில் யோகாவும் ஒரு பாடமாக உண்டு

இவர் காட்டிய வழியில்தான் பின் பலர் உருவானார்கள், கோல்வால்கர், அத்வானி, மோடி எல்லாம் அன்னாரின் சீடர்கள்

சுதந்திரம் கிடைக்கும் முன்பாகவே 1940 , ஜூன் 21ல் அவர் காலமானார், இவரும் யோகா பயின்றவர், சொல்லிகொடுத்தவர் என்பது குறிப்பிடதக்கது ஆனாலும் 50ம் வயதில் காலமானார்

யோகா அவருக்கு மட்டும் ஆரோக்கியத்தை ஏன் கொடுக்கவில்லை என்பது தெரியவில்லை.

இன்று ஆர்.எஸ்.எஸ் நாடாள இவர்தான் காரணம், சங்கத்தின் பிதாமகன் அல்லவா? அத்வாணிக்கு நன்றி காட்டினால் குடியரசு தலைவராவேன் என அடம்பிடிப்பார், அதனால் செத்துபோன ஹேட்கோவருக்கு காட்டலாம்

அதனால் யோகா தினம் என கிளம்பிவிட்டார்கள், அதுதான் ஜூன் 21ஐ மிக சரியாக தேர்ந்தெடுத்த காரணம், மற்றபடி ஒன்றுமல்ல‌

எங்களுக்கு வழிகாட்டிய ஹேட்கேவர் வாழ்க , என்பதைத்தான் இன்று தலைகீழாக நின்று சொல்வார் மோடி

ஏன் ஹேட்கேவர் இறந்த தினத்தை யோகா தினம் ஆக்கினார்கள்? அவர் பிறந்த நாளை உலக யோகா தினமாக ஏன் அறிவிக்கவில்லை என்றால் அவர் பிறந்தது ஏப்ரல் 1

அதனால் அதனை உலக யோகா தினம் என சொல்ல முடியாமல் தவிர்த்துவிட்டார்கள்

உண்மையில் சர்வதேச யோகா தினம் என ஏப்ரல் 1 தான் இருந்திருக்க வேண்டும்.

அப்படி அறிவிக்கபட்டால் அது அர்த்தமுள்ள விஷயமாகியிருக்கும்.


Image may contain: one or more people and people standingபாராளுமன்றத்திற்கு மோடி வரவே இல்லை என்ற சர்ச்சை ஓடிகொண்டிருக்கும் நேரத்தில் இன்று யோகா தினத்திற்கு எங்காவது தலைகீழாக நின்று ஜிம்னாஸ்டிக் ஆட்டக்காரர் போல் போஸ் கொடுப்பார் மோடி

 
 

கோவைக்கு குடிநீர் வழங்க வெளிநாட்டு கம்பெனியாம்

கோவை நகருக்கு சூயஸ் என்ற பிரான்ஸ் கம்பெனிதான் குடிநீர் வழங்குமாம், இனி அவர்கள் வைத்ததுதான் கட்டணமாம்

கோவையினை சுற்றி எத்தனை அணைகளை காமராஜர் கட்டினார், எவ்வளவு பெரும் மக்கள் அபிமானிகள் எல்லாம் அங்கு இருந்தார்கள்

ஜிடி நாயுடு கோவையினை உலகமே திரும்பி பார்க்க வைத்தார்

அப்படிபட்ட கோவையில் சாதாரண குடிநீர் வழங்க பிரான்ஸ் கம்பெனிதான் வேண்டுமாம், ஏன் இவர்களுக்கு செய்ய தெரியாதா?

இது கூட செய்ய தெரியாத கோவைக்கு ஏன் மாநகராட்சி மண்ணாங்கட்டி

கிணற்று பாசானம் முதல் ஆழ்குழாய் கிணற்றுக்கான பம்புசெட் முதல் அங்குதான் தயாரிக்க படுகின்றது, பாசனத்திற்கு தேவையான தமிழக தளவாடங்களில் 90% அங்குதான் தயாரிக்கபடுகின்றது

அப்படிபட்ட கோவைக்கு குடிநீர் வழங்க வெளிநாட்டு கம்பெனியாம்

மாபெரும் வெட்க கேடு

இனி அவன் நமது குடிநீரை நமக்கே கொடுத்துவிட்டு பில் வசூலித்துவிட்டு போவான், எப்படிபட்ட ஒரு கொடுமை?

இதை பற்றி ஒற்றுமையாக கோவைவாசிகள் சிந்திப்பார்களா என்றால் இந்து முஸ்லீம் மார்வாடி மலையாளி என பல பிரிவுகளாக கிடக்கின்றார்கள்

ஒரு எதிர்ப்பு இல்லை, மகா அவமானம் இது

போகிற போக்கில் இனி தாலுகா பணிக்கு அமெரிக்க கம்பெனி, வரி வசூலிக்க பிரிட்டன் கம்பெனி என கோவைக்குள் வந்தாலும் ஆச்சரியமில்லை

சூலூர் ராணுவதளம் எல்லாம் அங்குதான் உண்டு, வெளிநாட்டு கம்பெனிகளை அப்பக்கம் இப்படி பொதுசேவைக்கு விட்டால் உளவு பார்க்க மகா வசதி

சுதந்திரம் அடைந்த்து இத்தனை காலத்தில் ஒரு நகராட்சிக்கு , அதுவும் மலை சூழ் அணை சூழ் நகராட்சிக்கு குடிநீர் கொடுக்க வெளிநாட்டு கம்பெனியினை அமர்த்தியிருப்பது மாபெரும் அவமானம்

வெள்ளையன் காலத்திலே தென்னிந்தியாவின் மான்செஸ்டர், லூதியானா என பெயர் பெற்ற கோவை அதன் பின் என்ன சாதித்தது?

இந்து முஸ்லீம் பிரிவினையில் நாசமாய் போய்விட்டது என்பதுதான் பெரும் சோகம்…