எதற்கெடுத்தாலும் முன்னேறிய நாடுகளை பார் என்கின்றோம்

எதற்கெடுத்தாலும் முன்னேறிய நாடுகளை பார் என்கின்றோம், ஆனால் அங்கு நடக்கும் விஷயங்கள் இந்தியா அளவு உண்டா என்றால் நிச்சயம் இல்லை, பல மடங்கு மோசம்

ஒரு இடம் அரசுக்கு சாலைக்கோ இல்லை இதர விஷயங்களுக்கோ தேவை என்றால் உடனே அவர்கள் எடுத்துகொள்ள சட்டம் இருக்கின்றது, மக்கள் மறுபேச்சு பேசமுடியாது

சீனா இதில் முதலிடம் விளைநிலமோ விளையா நிலமோ வீடோ எது என்றாலும் அரசுக்கே உரிமை, இன்னும் ஏராளமான நாடுகளில் இதுவே நிலை

ஆனால் அங்கு குறிப்பிட்டு சொல்லும் விஷயம் ஒரு நிலத்தை கையகபடுத்தும்பொழுது அம்மக்களுக்கு மாற்று இடங்களை கைகாட்டுகின்றார்கள், வங்கிகடன் இருந்தால் ரத்து செய்கின்றார்கள்

ஓரளவு பாதுகாப்பான வாழ்லை சூழலை மக்களுக்கு உருவாக்கிவிட்டு அந்நிலங்களை கையகபடுத்துவார்கள்

இதனால்தான் இதுமாதிரி விஷயங்கள் ஏராளம் நடந்தாலும் அது அங்கெல்லாம் சிக்கலே இல்லை, சத்தமும் வராது

இங்கும் அதனை செய்யலாம் மாறாக யுத்த காலத்தில் அவசரமாக மக்களை வெளியேற்றி ராணுவ பாதை அமைப்பது போல செய்வதுதான் கொஞ்சமும் சரியே இல்லை


பாஜக ஓர் பயங்கரவாத அமைப்பு. துணிச்சல் இருந்தால் அவர்கள் எங்கள் கட்சியினரை தொட்டுப் பார்க்கட்டும் : மம்தா

பயங்கராவாத அமைப்பிற்கே சவால்விடும் மம்தா கட்சி எவ்வளவு பயங்கரமான அமைப்பாக இருக்க வேண்டும்? அம்மாடி….


Image may contain: 1 person, smiling, sunglasses and close-upஏம்பா மனுஷபுத்திரா,

ஸ்டாலின் திருவரங்கம் கோவில் வருகை பற்றி உமது ஸ்டைலில் 10 பக்கத்திற்கு எழுதும் பார்க்கலாம்…

 

 


கியூபா சென்றடைந்தார் ஜனாதிபதி கோவிந்த்

அதானே, எவ்வளவு நாள்தான் இந்திய பிரதமரே உலகம் சுற்றுவார்? பின் ஜனாதிபதி பதவிக்கு என்னதான் மரியாதை


உலக கோப்பை கால்பந்து போட்டிகள் அதிர்ச்சியுடனே நடந்துகொண்டிருக்கின்றன‌

உலக கோப்பை கால்பந்து போட்டிகள் அதிர்ச்சியுடனே நடந்துகொண்டிருக்கின்றன‌

ஒரு உலக கோப்பை ஆட்டத்திலும் வெற்றி பெறாத சவுதி, அதே சாதனையினை தக்க வைத்த பெருமையுடன் கிளம்பிவிட்டது

மிகவும் எதிர்பார்க்கபட்ட மெஸ்ஸியின் ஆட்டம் எடுபடவில்லை, ஆடினாலும் பிரயோசனமில்லை , ஒரு மாதிரி முழிக்கின்றார், சுருக்கமாக சொன்னால் தமிழக முக ஸ்டாலின் போல ஆகிவிட்டார், அர்ஜென்டினா அடுத்த சுற்று செல்வதே சிரமம்

சாம்பியன் ஜெர்மனியே தமிழ்நாட்டில் அமித்ஷாவினை கொண்டுவிட்டால் எப்படி முழிப்பாரோ அப்படித்தான் இருக்கின்றது

எகிப்தின் சாலா மிகசிறந்த ஆட்டக்காரர் எனினும் காயத்தால் அவதியுறுவதால் அவரின் ஆட்டமும் காலி, எகிப்தும் காலி

இப்போதைக்கு எதிர்பார்த்தபடி ஆடிகொண்டிருப்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒருவர்த்தான், அட்டகாசமாக முன்னணி வகிக்கின்றார்

வலுவான அணி என சொல்லபட கூடியதில் ஸ்பெயின் இடம்பெற்றிருக்கின்றது, அவர்களின் ஆட்டம் மிக கட்டுகோப்பாகவும் திட்டமிடலுடனும் இருக்கின்றது

பிரேசில் இன்று கோஸ்டாரிக்காவினை சந்திக்கின்றது, அவர்கள் தலைவிதி இனி தெரியும்

விளையாட்டு என்றால் எதுவும் நடக்கும் என்பது இதுதான்..

மோடி அரசில் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணி ராஜினாமா

Image may contain: 1 person\

அமெரிக்காவிலிருந்து வந்து மோடி அரசில் பொருளாதார ஆலோசகராக அமர்ந்த‌ அர்விந்த் சுப்பிரமணி தன் பதவியினை ராஜினாமா செய்துவிட்டு அமெரிக்காவிற்கே ஓடியிருக்கின்றார்

அவர் ராஜினாமா செய்தது, பறந்தது எல்லாம் சாதரண காலங்கள் என்றால் யாருக்கும் சந்தேகம் வராது

ஆனால் டிரம்ப் அந்நிய நாட்டு பொருட்களுக்கு வரிவிதித்து வம்பிழுக்கும் காலங்களில் அவர் சென்றிருப்பதுதான் சந்தேகம்

இந்தியாவும் அவர் கிளம்பிய பின் அமெரிக்க இறக்குமதிக்கு வரியினை உயர்த்தி பதிலடி கொடுத்திருக்கின்றது

ஆக என்ன நடந்திருக்கலாம்?

அமெரிக்க பொருட்களுக்கு வரிவிதிக்க கூடாது என அவர் டெல்லியில் லாபி செய்திருக்கலாம், இந்தியா மண்டையில் தட்டி அமெரிக்காவிற்கே ஓடு என விரட்டியிருக்கலாம்

அன்னார் அமெரிக்க விசுவாசியாக இருந்திருக்கின்றார், அமெரிக்க நலனை இங்கு காக்க முடியாமல் ஓடி இருக்கின்றார் என்பதுதான் விஷயம்

 
 

விஜய் என்பவரை நடிகர் என்ற வகையிலேயே சேர்க்க முடியாது …..

Image may contain: 9 people, people smiling, text

விஜய் என்பவரை நடிகர் என்ற வகையிலே சேர்க்க முடியாது

விஜயகாந்தின் வளர்ச்சியில் எஸ்.ஏ சந்திரசேகரின் பங்கு முக்கியமானது, அணல் தெரிக்கும் வசனங்களை எப்படி பேசுவது என விஜயகாந்திற்கு சொல்லிகொடுத்த சந்திரசேகர் தன் மகனுக்கு சொல்லிகொடுக்காமல் போனது மகா சோகம்

மனிதர் பேசினால் வாயினை திறக்கின்றாரா இல்லையா என்பதே தெரியாது, சில படங்களில் கிராபிக்ஸ் வைத்து வாயினை அசைக்கின்றார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டதுண்டு

முழங்கைகளிலும், முழங்காலிலும் அவருக்கு ஏதோ சிக்கல் என்பது அவரின் நடனத்தில் தெரிகின்றது, அந்த இடத்தில் சிக்கல் உள்ளவனுக்கு காக்கா வலிப்பு வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் அவரின் நடனம்

மனிதரின் பெரும் பலம் அவரின் தந்தை , மிக சிறந்த டைரக்டர்களாக பார்த்து அவரை ஒப்படைத்தார், அதே நேரம் பூவே உனக்காக போன்ற இமேஜ் வராமலும் பார்த்துகொண்டார்

ராமசந்திரனே வசூல் சக்கரவர்த்தி என சொல்லபட்ட தமிழகத்தில் விஜயும் அப்படி இல்லாவிட்டால்தான் ஆச்சரியம்

மனிதருக்கு தந்தை எவ்வளவு பலமோ அவ்வளவிற்கு பலவீனமும் அவரே

அரசியல் ஆசை அவருக்கு கொஞ்சமல்ல, மிக நுட்பமாக அண்ணாவின் இளைய தளபதி பட்டத்தை அன்றே புகுத்தியவர், இப்பொழுது ஸ்டாலின் செயல் தலைவர் ஆனதும் அந்த தளபதி பட்டம் உதயநிதிக்குத்தான் சென்றிருக்க வேண்டும்

ஆனால் இவரோ தளபதி விஜய் என உருவாக்கி வைத்திருக்கின்றார்

ஜெயா இருந்தவரை இவர்களை மிரட்டி உருட்டி வைத்திருந்தார், தலைவா சிக்கலில் கண்ணீருடன் அம்மா என கலங்கிநின்ற விஜய்க்கு அக்காட்சி என்றும் களங்கமே

இப்பொழுது ஜெயா இல்லா நிலையில் சந்திரசேகரின் நகர்வுகள் விஜயினை அரசியலை நோக்கியே தள்ளுகின்றன‌

ஆனால் யாரும் எதிர்பாரா விதமாக பழனிச்சாமி அட்டகாசமாக தூள்கிளப்பும்பொழுது சந்திரசேகர் யோசிக்கின்றார்

விஜய் நடிகரா இல்லையா என்பது வேறு விஷயம், ஆனால் 
அந்த விபரீத அரசியல் ஆசையினைத்தான் கண்டிக்கின்றோம், காக்கா வலிப்பு வந்ததை போல ஆடதெரிந்ததை தவிர இவர் அரசியலுக்கு வர என்ன தகுதி இருக்கின்றது?

அந்த ஒரு ஆசையினையும் அவர் தவிர்த்துவிட்டு நடித்துவிட்டு போகட்டும், அஜித் என்பவரே நடிப்பதாக பல படங்களில் நடந்துகொண்டே இருக்கும்பொழுது இவருக்கு என்ன?

விஜய் அரசியலுக்கு வராமல் இருப்பது வரை அவருக்கு நல்லது

அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் எம்மை பொறுத்தவரை குஷ்புவுடன் நடித்த மின்சார கண்ணா மிக சிறந்த படம்

குஷ்புவிற்காக அதை பலமுறை பார்த்தபொழுது இவரையும் பார்க்க முடிந்தது

மற்றபடி சோகம் மறந்து சிரிக்க வேண்டுமென்றால் இவரின் கண்ணுக்குள் நிலவு என்றொரு படம் உண்டு. மனிதர் மனநிலை பிறழ்ந்த வேடத்தில் நடித்திருப்பார்

அந்த நடிப்பினை பார்க்கும்பொழுதெல்லாம் எந்த சோகத்திலும் சிரிப்பு வரும், அதுவும் இவர் பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலுவினை பார்த்து சிரிப்பார் அல்லவா? அப்படி நிற்காமல் சிரிப்பு வரும்

உண்மையில் அந்த ஒரு படத்தில்தான் இவர் இயல்பாக நடித்திருந்தார், அதற்கே சிரித்து முடியவில்லை

இன்னும் அப்படி சில படங்கள் வந்தால் கண்டிப்பாக‌ பார்க்கலாம்..

 
 

ஶ்ரீரங்கத்தில் ஸ்டாலின் சுக்ர ப்ரீத்தி யாகம்

Image may contain: 2 people, people smiling

சுக்ர ப்ரீத்தி யாகம் நடத்துவதற்காக, தற்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று கொண்டிருக்கிறார் முக.ஸடாலின் : செய்தி

“ஸ்ரீரங்கநாதனையும்,தில்லைநடராசனையும், பீரங்கிகொண்டு பிளக்கும்நாள் எந்நாளோ???” என பாரதிதாசன் பாடியதை மிக கவனமாக குறிப்பெடுத்து முழங்கினர் திமுகவினர்

இப்பொழுது ஸ்டாலினே ஸ்ரீரங்கநாதனை காண செல்கின்றாராம்

தமிழகத்தில் நாத்திகம் செத்துவிட்டது என்பதற்கு இது பெரும் அடையாளம், நாத்திகத்தின் ஆயுள் அவ்வளவே

கலைஞருக்கும் கடவுள் நம்பிக்கை இருந்தது ஆனால் சமத்தாக மறைத்தார், திருவாரூர் கோவிலின் மேல் அவருக்கு அவ்வளவு அபிமானம் இருந்தது

வேட்பாளர் பட்டியல் தயாரானதும் தன் தாயார் சமாதியில் வைத்து ஆசிபெறுகின்றேன் என அவர் செய்து அச்சீட்டை ரகசியமாக திருவாரூர் கோவிலுக்கு அனுப்புகின்றார் என்றெல்லாம் செய்திகள் வந்தன‌

ஆனால் தாயார் சமாதிக்கு அவர் பட்டியலை அனுப்பியது உண்மை, ஓடாத திருவாரூர் தேரை அவர் ஓட வைத்ததும் உண்மை

வள்ளுவர் கோட்டம் முதல் புதிய சட்டமன்ற கட்டம் வரை திருவாரூர் தேரை அவர் நிறுத்தியதும் வரலாறு

ஆனால் மிக சமர்த்தாக செய்தார், ஸ்டாலின் அதனை பகிரங்கமாக செய்கின்றார்

தில்லை கோவிலையும், காளையார் கோவிலையும் பீரங்கி வைத்து தகர்க்கும் நாள் வரும் என சொன்ன திமுகவின் இன்றைய தலைவர் அக்கோவிலுக்கு சென்றிருப்பது காலமாற்றம்

ஆண்டவன் முன் மனிதன் ஆட்டம் செல்லாது என சொல்லவைக்கும் தத்துவம்

மாலிக்காபூர் காலமுதல் அந்த ஸ்ரீரங்க ஆலயத்தை இடிப்பேன் என‌ பெரும் அழிச்சாட்டியம் செய்தவர்களை எல்லாம் அமைதி புன்னகையுடன் பார்த்திருந்த ஸ்ரீரங்கநாதர் இப்பொழுது முக ஸ்டாலினையும் அதே அமைதி புன்னகையுடன் பார்க்கின்றார்.

திமுகவிற்கும் இந்துமதத்திற்கும் நடந்ததாக சொல்லபட்ட போரில் இப்பொழுது இந்துமதமே வென்றிருக்கின்றது

புத்தர் காலம் முதல், அலெக்ஸாண்டர், இஸ்லாமியர் பிரிட்டானியர் வரை மாபெரும் பேரரசுகளை எதிர்த்து தன்னை தற்காத்துகொண்ட இந்துமதன் தன் இந்த நூற்றாண்டின் ஆபத்தான திமுகவினையும் தன் உள்ளே இழுத்து கொண்டது

பகுத்தறிவு முதல் ஏராளமான தத்துவ‌ங்கள் திருவரங்கத்தான் சந்நிதியில் புகையாக எரிந்துகொண்டிருக்கின்றது.

பல்லாயிரம் ஆண்டுகளாக இங்கு நிலைபெற்றுவிட்ட மாபெரும் ஞான‌ தத்துவ மதமான இந்துமதம் வெறும் 80 ஆண்டுகாலமே ஆடிய திமுகவினை வெற்றிகொள்வது ஒன்றும் ஆச்சரியமல்ல..

திருவரங்கம் ஆலயத்தின் எதிரே இருக்கும் பெரியார் சிலை இப்பொழுது என்ன நினைக்குமென தெரியவில்ல்லை, ஆனால் இனி அந்த சிலை அங்கு இருக்கவும் அவசியமென்ன? என நாம் கேட்டுவிட கூடாது

 

வீரப்பன் : ஒரு நினவாய்வு

Image may contain: 1 person, beard

வீரப்பனுக்கு விஷம் வைத்து விஜயகுமார் கொன்றார் என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

உண்மையில் வீரப்பனை பிடிக்கும் பணியில் தமிழக போலிஸ் சலிப்படைந்து கைவிடும் நிலைக்கு வந்தது, வீரப்பனும் அமைதியாக இருந்திருந்தால் சிக்கலே இல்லை

நம்புகின்றீர்களோ இல்லையோ 1986க்கு பின்னரான வீரப்பன் எப்படி இருப்பான் என்றே பின்னாளில் யாருக்கும் தெரியாது, அவனும் அப்படியே மலைவாழ் சாதியாகவோ இல்லை விவசாயியாகவோ இருந்திருக்கலாம், கண்டுபிடிக்க வாய்ப்பே இல்லா நிலை

அவ்வளவு ஏன்? கூலி தொழிலாளியாக வெளியூர் சென்றாலும் அவனை கண்டுபிடித்திருக்க முடியாது, அப்படி மர்மமாகத்தான் அவன் இருந்தான்

அவனுக்கு விதி தமிழ் தீவிரவாதிகள், நக்சலைட் வடிவில் வந்தது

தமிழகத்தில் நக்சலைட் நடமாட்டம் உண்டு என பொன்னார் சொல்வது எல்லாம் முழுக்க புறம் தள்ளகூடிய விஷயம் அல்ல, இங்கு ராமசந்திரன் காலத்திலே அவர்கள் முளைவிட்டார்கள். இன்றைய பழனிச்சாமி போல டெல்லி அடிமையான ராமசந்திரன் கடும் நடவடிக்கையால் அவர்கள் வளராமல் பார்த்துகொண்டார்

ஆனாலும் ரகசிய நடவடிக்கையில் நக்சல்கள் இருந்தனர், பின்னர் அவர்கள் தமிழ் தேசியவாதிகளுடன் கை கோர்த்தனர்

அதன் பின் இங்கும் சிக்கல் எழுந்தது, கவிஞர் தாமரை வாழ்வினை கெடுத்த தியாகு அப்பொழுது நடந்த குண்டுவெடிப்பில்தான் மரண தண்டனை பெற்றார்

சில தமிழ்புலிகள் தமிழகத்தின் பொன்பரப்பி போன்ற வங்கி கொள்ளையின்பொழுது மக்களாலே அடித்து கொல்லபட்டான்

இலங்கையினை போல வங்கிகளை கொள்ளை அடித்து இயக்கம் வளர்க்கும் புலிகளின் செயல் தமிழகத்தில் நடக்கவில்லை

மாறாக வேறு வழியில் வந்தார்கள், ராஜிவ் கொல்லபட்டபின் கொஞ்சகாலம் அமைதியாக இருந்தவர்கள் பின் இங்கு மறுபடியும் துளிரிவிட்டார்கள்

அரசியலுக்கு வைகோ, ராமதாஸ், திருமா என பலரை வளைத்தவர்கள், ஆயுதத்திற்கு வீரப்பனை வளைத்தார்கள்

வீரப்பன் மூலம் பலருக்கு ஆயுதபயிற்சி அளித்து அதன் மூலம் பெரும் ரத்தகளறி ஏற்படுத்தும் முயற்சிநடந்தது

வீரப்பனும் அதற்காக பலரை கடத்தி பணம் குவித்தான், ராஜ்குமாரை கடத்தியபொழுது பல நூறு கோடிகளை குவித்தான்

அவனுக்கு ஏன் அவ்வளவு பணம்? அவன் பிள்ளைகளே அனாதையாக தெருவில் நிற்க அவனுக்கு ஏன் அத்தனை கோடிகள்?

அவனை இயக்கியது நக்சலைட் மூளைகள் மற்றும் மாறன் முதலான தமிழ்தேசிய போராளிகள்

வீரப்பனும் அதன் பின் திடீர் போராளியானான், கன்னட அணை திறக்க உத்தரவிட்டான், காட்டுக்குள் தமிழ்தேசிய கொடி ஏற்றினான், படுபயங்கர அறிக்கை எல்லாம் விட்டான்

இனி இவனை விடவே கூடாது என்றுதான் அரசுகள் களமிறங்கின, உளவுதுறை அறிக்கைகள் வீரப்பனுக்கும் அந்நிய சக்திகளுக்கும் உள்ள உறவினை வெளிச்சம் போட்டு காட்டின‌

இந்நிலையில்தான் விஜயகுமாரிடம் பொறுப்பு ஒப்படைக்கபட்டது, வால்டர் தேவாரம் தன் வாழ்நாள் எதிரி என தேடிகொண்டிருந்த வீரப்பன் விஜயகுமாரை கண்டுகொள்ளவில்லை

வீரப்பன் செய்த பெரும் தவறு நக்கீரன் பத்திரிகையில் தன் படத்தை வர செய்தது, அதுவரை அவனின் லேட்டஸ்ட் புகைபடம் யாரிடமும் இல்லை

அதில் அவன் வகை வகையாக போஸ் கொடுக்க, வீரப்பனின் துப்பாக்கி முதல் கூட்டாளிகள் எண்ணிக்கை வரை சிக்கலே இல்லாமல் காவல்துறைக்கு கிடைத்தது, வீரப்பன் செய்த மிக பெரும் தவறு அதுதான்

மாயாவி என சொல்லபட்ட வீரப்பன் உலகெல்லாம் இப்படி காட்சி கொடுக்க ஆரம்பித்தபின் அவனை கண்காணிப்பதும் வளைப்பதும் எளிதாயிற்று

ஈழத்திற்கு செல்லலாம் என சில போராளிகள் ஐடியா கொடுக்க, அதில் ஊடுருவிய காவல்துறை அட்டகாசமாக அவனை கடத்தி வந்து போட்டு தள்ளியது

நிச்சயம் விஜயகுமாரின் சாதனை அது

1990களுக்கு பின் வீரப்பனை பிடிக்க முடியாது என காவல்துறை ஒதுங்கிய நேரத்தில் அட்டகாசமாக வீரப்பனால் செட்டில் ஆகியிருக்க முடியும் எல்லா வாய்ப்பும் அவனுக்கு இருந்தது

ஆனால் இந்த தமிழ்தேசிய வாதிகளின் தொடர்பு நளினி, பேரரிவாளன் போலவே அவன் வாழ்வினையும் முடிக்க வைத்தது

சுருக்கமாக சொன்னால் காடு, மான்கறி என மகா மகிழ்ச்சியாக இருந்த வீரப்பனை நீ ஒரு போராளி என பப்பாளி மரத்தின் மேல் ஏற்றிவிட்டனர், அவன் அது முறிந்து விழுந்து செத்தான்

 

விஜயினை வைத்து கலாநிதி மாறன் படம் சர்கார்

Image may contain: 1 person, beard and text

கலாநிதி மாறன் மிக சிறந்த வியாபாரி, கலைஞர் குடும்பத்துடன் சில சர்ச்சைகளை தவிர அவரின் நகர்வுகள் முழுக்க முழுக்க வியாபார நகர்வு

சில காலம் அமைதியாக இருந்தவருக்கு எங்கிருந்தோ சிக்னல்கள் கிடைக்க மறுபடியும் திரைபடம் தயாரிக்க வந்துவிட்டார், நிச்சயம் பின்னால் ஏதோ நடந்திருக்கின்றது

திமுக அபிமானி என்றால் கலாநிதி மாறன் மூன்றாம் கலைஞரான உதயநிதியினை வைத்துத்தான் படம் தயாரித்திருக்க வேண்டும், நகுலை வைத்து நாக்க முக்க ஆடவைத்தவர்களுக்கு உதயநிதி என்பவர் தயக்கமே இல்லாதவர்

ஆனால் நேரம் பார்த்து குறி பார்த்து ரஜினி, விஜய் என செல்கின்றார்கள்

ரஜினி நடிக்கும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கபடவில்லை ஆனால் படபிடிப்பு தொடங்கியாயிற்று, காலாவில் விழுந்த ரஜினி மீண்டு எழ கடும் முயற்சியில் இருக்கின்றார் , ஏற்கனவே எந்திரன் எடுத்த அனுபவம் கலாநிதிமாறனுக்கும் உண்டு

இப்பொழுது விஜயினை வைத்தும் கலாநிதி மாறன் படம் தயாரிப்பதுதான் பரபரப்பு செய்தி,

காரணம் மூன்றாம் கலைஞருக்கும் விஜய்க்கும் பொருந்தாது, விஜயினை எதிர்த்தே களம் கண்டவர் மூன்றாம் கலைஞர்

அப்படிபட்ட சர்ச்சையில் கலைஞர் குடும்பத்தாரின் தயாரிப்பில் விஜய் நடிப்பது மகா ஆச்சரியம், இயக்கம் ரஞ்சித் என்றாலும் விஜய் சோலியினை முடிக்க போகின்றார்கள் என சொல்ல்விடலாம் ஆனால் இயக்கம் முருகதாஸ் என்பவராம்

முருகதாஸ் என்பவர் சும்மா அல்ல, அவருக்கு கீழ் கொரியா முதல் ஹாலிவுட் வரை ஏராளமான இயக்குநர்கள் பணிபுரிகின்றர்கள், அவர்கள் பல படங்களை எடுத்து திரைக்கு அனுப்புவார்கள், அதிலிருந்து முருகதாஸ் தனக்கு தேவையானதை எடுத்துகொள்வார், படமும் வெற்றிபெறும்

இப்பொழுது படத்தின் தலைப்புத்தான் ஆச்சரியம் “சர்கார்” என்பதாம்

வைகோவின் பேச்சை கேட்ட தமிழகத்தில் சர்கார் என்றால் அரசாங்கம் என சொல்லி தெரியவேண்டியதில்லை

கல்லகுடி எனும் ஊர் டால்மியாபுரம் ஆனதற்காக தண்டவாளத்தில் தலைவைத்து படுத்த குடும்பத்தின் சினிமா பெயர் “சர்கார்”

ஏன் அப்படி வைத்தார்கள்?

நாட்டிலும் தமிழகத்திலும் நடப்பது பாஜக ஆட்சி, “சாவர்கர்” என வைத்தால் அவர்கள் மிக்க சந்தோஷபடுவார்கள் அல்லவா?

ஆனால் அப்படி “சாவார்கர்” என வைத்தால் சர்ச்சையும் கிளம்பும் என்பதால் வா என்பதை மட்டும் நீக்கிவிட்டு சர்கார் ஆக்கிவிட்டார்கள்

இந்த விளக்கத்தை ஜன்னலுக்கு அந்தபக்கம் நின்று தமிழிசை காதில் கிசுகிசுத்தாலோ, இல்லை எச்,ராசாவிற்கு துண்டு சீட்டு எழுதி கொடுத்தாலோ விஜய் படத்தை எதிர்ப்பார்களா?

விஜய்க்கு எதிரிகளே அவர்கள்தானே, இது சாவார்கர் பெயர் என சொன்னால் ஜோசப் விஜய் அவர்களுக்கு ஆழ்வார் விஜயாக ஆகிவிட மாட்டாரா?

இப்படி கலைஞர் குடும்பத்து உள்வீட்டு அரசியல், கலாநிதி மாறனின் வியாபாரம், பாஜகவினை சமாதனபடுத்துதல் என பல விஷயங்களை கலந்து சர்கார் படம் வரபோகின்றது

இது மூன்றாம் கலைஞர் வீட்டில் புயல் வீசும் நேரம் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

இந்த அறிவிப்பு மூலம் இப்பொழுது கலாநிதி மாறன் உலகிற்கு சொல்லி இருக்கும் செய்தி என்னவென்றால், “முக ஸ்டாலினுடன் எங்களுக்கு சுமூக உறவு இல்லை, மூன்றாம் கலைஞரின் அரசியல் பிரவேசத்தை நாங்கள் ஏற்றுகொள்ள போவதே இல்லை..”


Image may contain: 4 people, people smiling, hatஎன்னது இரண்டாம் வ.உ.சியா?

எண்ணெய் செக்கில கட்டி அடிக்க போறானுக மிஸ்டர் விஜய்…..


 

Image may contain: 1 person, textஏண்டா சர்கார்னு பேர் வச்சே?

அவர்தாங்க முதல் படத்துல நான் சர்.. சர்ர்னு போறதுக்கு கார் கொடுத்தாரு, அதான் “சர்கார்”னு வச்சிட்டேன், நன்றியுள்ள மனசுண்ணே இது..

 
 


ஐஜி விஜயகுமார் காஷ்மீரில் அட்டகாச நகர்வுகள்

Image may contain: 1 person, smiling, hat

ஐஜி விஜயகுமார் காஷ்மீரில் அட்டகாச நகர்வுகளை செய்ய தொடங்கியவுடன் பலர் “தமிழன்டோவ்” “வீரன்டோவ்” என கிளம்பியாயிற்று

உண்மயில் விஜயகுமார் மலையாளி, இடுக்கியில் நாயர் குடும்பத்து பிறப்பு

காஷ்மீரில் அட்டகாசம் செய்யும் தீவிரவாதிகளை ஒடுக்கும் போது தமிழராகிவிட்ட விஜயகுமார், ஒரு வேளை இங்கிருந்து தும்பிகளை பிடித்து அடைத்துகொண்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்

“ஒரு மலையாளி வீர தமிழனை பிடிக்கும் அளவுக்கு வீரதமிழினம் வீரமிழந்ததா? மானம் இழந்ததா? அய்யகோ..” என பொங்கி கத்தி இருப்பார்கள்

நம்மை பொறுத்தவரை அவர் இந்தியன், பஞ்சாபில் தீவிரவாதத்தை வேரறுத்த கில் வரிசையில் வரும் வீர இந்தியன்

இன்னும் அவர் சாதிக்க நிறைய இருக்கின்றது, சாதிக்கட்டும்