ஈரான் தன் வழியில் செல்லும் : ஈரான் அரசு அறிவிப்பு

இனி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இல்லை, அவர்களிடம் பேசி ஒன்றும் ஆகபோவதுமில்லை, ஈரான் தன் வழியில் செல்லும் : ஈரான் அரசு அறிவிப்பு

அட இவர்கள் உண்மையிலே வித்தியாசமானவர்கள், தைரிய சாலிகள், ஒரு முடிவோடுதான் இருக்கின்றார்கள்

இவர்கள் அறிவித்த நேரத்தில் இந்தியாவிற்கு 1000 போர் விமானம் உட்பட பல ஆயுதங்களை விற்க அமெரிக்கா தயார் , கச்சா எண்ணெய் விற்க தயார் என அறிவிப்பு வருகின்றது

இது எதற்காக?

நாளை ஈரானுடன் நடக்கும் யுத்தத்தில் அமெரிக்க விமானங்கள் இந்தியாவிலிருந்து கிளம்பலாம்.

அமெரிக்க வியூகங்கள் இப்படி இருக்க, ஈரானோ கொஞ்சம் அசராமல் இருக்கின்றது, அவர்களிடமும் ஏதோ திட்டம் இருக்கின்றது

பாஜகவின் பலத்தை எதிர்கட்சிகளால் எதிர்கொள்ளவே முடியாது : தமிழிசை

Image may contain: one or more people, people sitting and indoor

தலைவர் வழிகாட்டிட்டார், இனி மெக்கா போயிட்டு மசூதி முன்னால நின்னுட்டு வந்தா போதும்…

 

பாஜகவின் பலத்தை எதிர்கட்சிகளால் எதிர்கொள்ளவே முடியாது : தமிழிசை

ஆம், எதிரி கண்ணுக்கு தெரிந்தால் எதிர்கொள்ளலாம். தெரியாத வைரஸை மருந்து தெளித்துத்தான் விரட்ட முடியும்


 

காவேரி விவகாரத்தில் எங்கள் பொறுமையினை மத்திய அரசு சோதிக்கின்றது : குமாரசாமி

இப்படி கோபபடவேண்டியவர் பழனிச்சாமி, அவரே மகா அமைதியாக இருக்க ஆச்சரியமாக குமாரசாமி பொங்கிகொண்டிருக்கின்றார்


8 வழிச்சாலையில் நிலமிழக்கும் விவசாயிகளுக்கு பெரும் நஷ்ட ஈடு வழங்கபடும் : செய்தி

ஆக சாலை அமைக்கும் செலவோடு நஷ்ட ஈடும் சேர்ந்து செலவு தொகை அதிகரிக்கின்றது

நஷ்ட ஈட்டு தொகையுடன் கொஞ்சம் கூடுதல் தொகை சேர்த்தால் சிக்கலான இடங்களில் நல்ல பாலம் கட்டிவிடலாம் ஒருவருக்கும் சிக்கல் இல்லை

தொழில்நுட்பம் மிகுந்த காலத்தில் இதை செய்யலாமா என்றால் நிச்சயம் செய்யலாம்.


பழனிச்சாமி உருப்படியாக இருந்தால் ஆளுநர் ஏன் “மாதம் மும்மாரி பொழிந்ததா?” என நகர்வலம்வரபோகின்றார்?

அந்த பழனிச்சாமிக்கு கருப்பு கொடியோ, செருப்பு கொடியோ காட்டாத ஸ்டாலின், ஆளுநரை குறிவைத்து கொடிபிடிப்பது பழனிச்சாமிக்கு வக்கலாத்து வாங்குவதை தவிர வேறு எதுவுமில்லை


நல்ல மாணவர்களாக உருவாக மாணவர்களுக்கு ஆளுநர் வேண்டுகோள் : செய்தி

எங்கே? பேராசிரியர்களுக்கு ஒழுக்கம் அவசியம் என சொல்லிவிடட்டும் பார்க்கலாம்..


டிக் டிக் டிக்

Image may contain: 1 person

ஜேம்ஸ் கேமருனின் டைட்டானிக்கை பார்த்துவிட்டு குளத்தில் பரிசல் கவிழ்ந்து காதலனும் காதலியும் தவிப்பதை படமாக எடுத்தால் எப்படி இருக்கும்?

அப்படித்தான் டிக்.டிக்.டிக் என்றொரு படம் வந்திருக்கின்றது, ஹாலிவுட் படங்களுக்கே உரிய விண்கல் படம். ஆர்கமகெடான் முதல் கிராவிட்டி வரை பல காட்சிகளை அப்படியே சுட்டு அதனுடன் கமலஹாசனின் விக்ரம் படத்தையும் கலந்து என்னவோ எடுத்திருக்கின்றார்கள்

ஹாலிவுட்டில் இப்படி ஏராள படங்கள் வந்துவிட்டதால், தமிழ்படம் தவிர எதுவும் பார்க்காதவர்களுக்கு இப்படம் வித்தியாசமாக தெரியலாம், உலக சினிமா புரிந்தால் படம் ரசிக்காது

காரணம் இத்தகைய கதைகளை ஹாலிவுட்டில் எடுக்கும் ஸ்டைலே வேறு, அவர்கள் கற்பனையும் காட்சி அமைப்பும் விஞ்ஞானிகளுக்கே ஆர்வத்தை தூண்ட கூடியவை

இங்கு அப்படி எல்லாம் சாத்தியம் அல்ல என்றாலும் இம்மாதிரி கதைகளுக்கு தமிழ்சினிமா திரும்புவது வாழ்த்துகுரியது

இப்படிபட்ட கதைகள் வந்தால் வரவேற்கலாம்

படத்தை பார்த்தால் சிந்தனையில் சுஜாதா வந்து போகின்றார், அவர் மட்டும் இப்படத்தில் இருந்தால் படம் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும், சந்தேகமில்லை

அப்படிபட்ட தமிழக பல்துறை எழுத்தாளர்கள் இன்று இல்லை, இருப்பவர்களிடம் சுவாரஸ்யமும் விரல்நுனி தகவலும் இல்லை

சுஜாதா போன்று இன்னும் பலர் வரும்பொழுது இம்மாதிரி படங்கள் தமிழில் நிச்சயம் வெற்றிபெறும் சந்தேகமில்லை

ஆயினும் இப்படம் தமிழ் சினிமாவினை புதிய வழிக்கு திருப்பும் முயற்சி இது, அந்த முயற்சிக்கு வாழ்த்துக்களை சொல்லியே தீரவேண்டும்

படத்தில் அந்தரத்தில் பெரும் சாகசங்களை ஜெயம் ரவி செய்யும்பொழுது, பழனிச்சாமிதான் தமிழகத்தை அனாசயமாக ஆளுகின்றார் என்ற நினைப்பும் மின்னல் வேகத்தில் வந்து போகின்றது

 

பிராமணருக்கு எதிரான முதல் குரலை எழுப்பியவர் நடேச முதலியார்

தமிழகத்தில் திராவிட குரல்கள் முதலில் 1900களிலே கேட்க தொடங்கின, அது பிரமணர் அல்லாதோர் சங்கம் என்றே தொடங்கபட்டது, அதில் பல சிந்தனையாளர்கள் இருந்தனர், பின் அது நீதிகட்சி என பயணித்தது

அந்த நீதிகட்சியினை அக்காலத்தில் தொடங்கியர்களில் ஒருவர்தான் தியாராய செட்டி அல்லது பிட்டி தியாகராயர், வழக்கறிஞர், தொழிலதிபர் என பன்முகம் கொண்டவர்.

பிராமணருக்கு எதிரான முதல் குரலை இவர்தான் எழுப்பினார்

நடேச முதலியார், டி.எம் நாயர் ஆகியோருடன் சேர்ந்து 1916ல் நீதிகட்சியினை தொடங்கினார்

மற்ற சாதி மக்களின் உரிமைகளுக்காக முதலில் குரல் கொடுத்தது நீதிகட்சிதான், அது 1920ல் சென்னை மாகாண ஆட்சியினையும் பிடித்து அசத்தியது, அதாவது அன்றைய கேரளா, ஆந்திரம் என பிரிக்கபடாத சென்னை மாகாணம்.

இவருக்கு வந்திருக்க வேண்டிய முதல்வர் பதவியினைத்தான் பனகல் அரசருக்கும், சுப்புராயலுவிற்கும் கொடுத்தார், இறுதிவரை முதல்வராக ஆசைபடாத பெருந்தன்மை அவருக்கு இருந்தது

பிரிட்டிசார் அதிகாரத்திற்குட்பட்ட ஆட்சி எனினும் இட ஒதுக்கீடு, தேவதாசி ஒழிப்பு என பல மசோதாக்களை அது கொண்டுவந்தது, அன்று அது தோற்றாலும் பின்னாளில் அவை சாத்தியமாயிற்று

இங்கு சமூக நீதி சீர்திருத்தங்களை முதலில் கொடுத்தது நீதிகட்சியே

இந்தியினை முதலில் எதிர்த்ததும் போராடியதும் நீதிகட்சியே

தென்னக சுயாட்சி முதல் பல முழக்கங்களை அதுதான் முதலில் முன் வைத்தது

அக்கட்சியின் பன்னீர்செல்வம் போன்றவர்கள் பெரும் வரலாற்றளர்கள், அக்காலத்திலே லண்டனில் பிரிட்டிசாரிடம் பிராமணர் அல்லோதார் சார்பாக மநாட்டில் பேசியவர்கள்..

அது பெரும் நல்லதிட்டங்களை கொண்ட கட்சியாக இருந்தாலும் படித்தவர்கள் நிரம்பியிருந்தனர், கடவுள் நம்பிக்கை இருந்த அதே நேரம் பிராமணர்களின் அடாவடியினை எதிர்த்த கட்சி அது

பெரியாரும் இதில்தான் இருந்தார், ஆனால் அவரால் நீடிக்க முடியவில்லை சுயமரியாதை, திராவிடர் கட்சி என பின்பு தனியாக அதிரடி காட்டினார், வரலாற்றை மாற்றினார்

எப்படி ஆயினும் நீதிகட்சிதான் இன்றைய திராவிட கொள்கைக்கும், கட்சிகளுக்கும் முன்னோடி, அதன் தலைவர்தான் பிட்டி தியாகராஜர்

திராவிட கொள்கைக்கும், பெரும் மாற்றத்திற்கும் அடித்தளமிட்ட அவரின் நினைவு நாள் இன்று

இவரது நினைவால்தான் அன்று புதிதாக உருவாக்கபட்ட சென்னை புறநகர் ஒன்றிற்கு தியாகராய நகர் என அக்கட்சியின் ஆட்சியில் பெயர் சூட்டபட்டது, அவர் பெயரில் அரங்கம் ஒன்றும் கட்டபட்டது

அது இன்று தி.நகர் ஆயிற்று, சென்னையின் மிக முக்கிய பகுதி ஆயிற்று

அதாவது பெரியார் காலத்திற்கு முன்பே திராவிட குரல் எழும்பியது, பலர் எழுப்பினார்கள், பெரியார் அதனை ஆணிதரமாக பிடித்துகொண்டு போராடினார்

அப்படி பெரியாருக்கு வழிகாட்டியவர்களில் ஒருவர்தான் பிட்டி தியாகராஜர்.

நிச்சயம் தியாகராய செட்டி, பனகல் அரசர் எல்லாம் பிராமண எதிரிகள் சந்தேகமில்லை ஆனால் இந்து அபிமானிகள் திட்டமாட்டார்கள்

காரணம் அவர்கள் சீர்திருத்தம் பேசினார்களே தவிர கடவுள் பகிஷ்கரிப்போ, துவேஷமோ செய்யவில்லை அதனால் அவர்களை பிராமணர்கள் தங்களுக்கு எதிரான‌ விஷ வித்துக்களை விதைத்தோர் என்ற வகையில் கூட கண்டுகொள்ளவில்லை

நிச்சயம் பிட்டி தியாகராஜர், பனகல் அரசர், பிடி ராஜன் , டி.எம் நாயர் போன்றோர் எல்லாம் வழிகாட்டிகள்

தென்னகம் இன்று ஓரளவு தனிதன்மையுடன் இருக்க இவரின் துணிவான அணுகுமுறையும், தன்னலமற்ற பொதுநல சிந்தனையுமே முதல் காரணம்

அவர் பற்றிவைத்த தீ இன்றுவரை எரிந்துகொண்டிருக்கின்றது

அந்த தீயினை பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் காத்தனர், இன்றோ நிலை மாறிவிட்டது

தியாகராய செட்டி காலத்திலிருந்து தொடங்கிய இயக்கம் மூன்றாம் கலைஞர் என சொல்லிகொண்டிருக்கும் ஒரு குடும்பத்து கையில் மாட்டிவிட கூடாது, அப்படி சிக்கினால் அது தியாகராயர் போல பல முன்னோடிகளுக்கு செய்யபடும் மாபெரும் அவமானம்

தியாகராஜர் போராடிய காலங்களில் கலைஞர் பிறக்கவே இல்லை என்பதும் நினைவில் வைக்க வேண்டியது

இதனை சமூகநீதி காப்பதாக, நீதிகட்சி வழிவந்த திமுக என சொல்லிகொள்வோர் உணர்ந்தால் நல்லது

நிச்சயம் நீதிகட்சி தியாகமும் போராட்டமும் மகத்தானது

அவர்கள் வழிகாட்டினார்கள் நாம் நடந்தோம், அவர்கள் படிக்கட்டானார்கள் நாம் உயர்ந்தோம்

திராவிட வரலாற்றில் மறக்க முடியாத பிதாமகனான அவருக்கு அஞ்சலியினை தெரிவித்துகொள்ளலாம்.

உலககோப்பை 32 அணிகளும் மிக வலுவானவை

உலககோப்பை கால்பந்து போட்டியில் கலந்திருக்கும் 32 அணிகளும் மிக வலுவானவை, கடும் தயாரிப்பிலே வந்திருகின்றன‌

எந்த அணியும் சளைத்ததல்ல, சவுதி போன்ற ஒரிரு அணிகளை தவிர. சவுதியும் சிறந்த அணிதான் ஆனால் ஐரோப்பியரின் ஆட்டம் முன்னால் திணறுகின்றார்கள்

32 கோப்பை கொடுக்கலாம், அப்படி அனைத்து அணிகளுமே அட்டகாசமாக ஆடுகின்றன‌

அர்ஜென்டினா மெஸ்ஸி மீது எதிர்பார்ப்பு அதிகம், இந்த எதிர்பார்ப்பே நெருக்கடிக்கு காரணம், அவரும் சொதப்புகின்றார்

எவனிடம் அதிகம் கொடுக்கபட்டதோ அவனிடம் அதிகம் எதிர்பார்க்கபடும் எனும் பைபிள் தத்துவபடி உலகம் எதிர்பார்த்தாலும் கால்பந்து உலகில் அது சாத்தியமில்லை

இது குழு விளையாட்டு , எல்லாம் மிக சரியான அளவில் அமைந்து, அருமையான பாஸ் கிடைத்தால் மட்டுமே மெஸ்ஸி கோல் அடிக்க முடியும்

எதிர்பார்ப்பே அவருக்கு நெருக்கடி. இனி அர்ஜென்டினா நைஜிரியாவோடு மோத வேண்டும், அது கொஞ்சம் சிக்கல் எப்படி

நைஜீரியா வலுவான அணி அல்ல ஆனால் முரட்டு அணி

சுருக்கமாக சொல்வதென்றால் கார் ரேஸில் எல்லோரும் முறையாக ஆடுவார்கள், அர்ஜெண்டினா மற்ற அணிகளோடு மோதியது அந்த ரகம்

ஆனால் நைஜிரீயாவோடு மோதுவது சென்னையில் கார்வோட்டுவதற்கு சமம், எந்த சாகச டிரைவரும் சென்னையில் கார் ஓட்ட முடியுமா? முடியவே முடியாது

நைஜீரியா அப்படிபட்ட அணி, அவர்கள் போக்கில் முரட்டு தனமாக ஆடுவார்கள், பார்க்கலாம்

இதில் சில எதிர்பார்ப்பில்லா அணிகள் தூள்கிளப்புகின்றன, காரணம் அவைகளுக்கு நெருக்கடி இல்லை வந்தால் மலை போனால் …

பிரேசில் கூட கோஸ்டாரிக்காவிடம் திணறியது, சமீக காலமாக தோல்வி பெறாத, கடைசியாக டிரா செய்த பிரேசில் கடும் நெருக்கடிக்கு தள்ளபட்டு கடைசி நிமிடங்களில்தான் அந்த அதிசய வெற்றி கிடைத்தது

நெய்மர் என்வரை கலைஞரை போல ஆளாளுக்கு இழுத்து போட்டு அடிக்கின்றார்கள், விழுவதற்கே மைதானத்தில் ஆடும் ஒரே ஆட்டக்காரர் நெய்மர்

ஆனால் அசாத்திய ஆட்டக்காரர் மறுப்பதற்கில்லை

இப்படி சில சுவாரஸ்யங்களுடன் உலககோப்பை போட்டி சென்றுகொண்டிருக்கின்றது

சுருக்கமாக சொன்னால் மெஸ்சி போன்றோர் முக ஸ்டாலின் போல நெருக்கடியான எதிர்ப்பார்ப்பில் தவிக்கின்றனர், மற்ற சிறிய அணிகள் பழனிச்சாமி போல அச்சமின்றி கலக்குகின்றன‌

ஆட்டத்தினை ரசிப்பதை விட அவர்களை உற்சாக படுத்தும் ரஷ்ய, ஐரொப்பிய, லத்தீன் அமெரிக்க ரசிகைகள் அழகு கொஞ்சம் ரசிக்கலாம்,

ஆனால் குஷ்பு அளவிற்கு அழகு என சொல்லவே முடியாது

ரஜினியின் முரட்டுகாளை படம்

Image may contain: Periya Samy, smiling

ரஜினியின் முரட்டுகாளை படம் ஓடுகின்றது, தமண்ணாவின் பாட்டி ரதி எனும் அக்னிகோத்ரி எல்லாம் நடித்திருக்கின்றார்கள்

படத்தில் ரஜினி காளையினை அடக்கி கொண்டிருக்கின்றார், இன்னும் கொஞ்சநேரத்தில் அண்ணனுக்கு ஜே என பாடுவார்கள், பாடட்டும்

நல்ல வேளையாக இந்த படம் முன்பே வந்தது, இப்பொழுது ரஞ்சித் இயக்கத்தில் வந்திருந்தால் என்னாயிருக்கும்?

ரஜினி காளையிடம் செல்வார், அங்கு திருவிழாவில் அய்யர் பூசை செய்து கொண்டிருப்பார். இரண்டையும் மாறி மாறி காட்டுவார்கள்

ரஜினி காளையிடம் வசனம் பேசுவார் எப்படி? இப்படி

“இங்க பார் மாடே, நீனும் உழைக்கிற ஜாதி நானும் உழைக்கிற ஜாதி. ஆனா நமக்குள்ள மோத விட்டு இங்க திருவிழா கொண்டாடுறானுக‌

என் உழைப்பும் உன் உழைப்பும் கலந்தது கொடுத்தது திருவிழா வரி, இங்க நாம ஏன் மோதனும்?

போ.. அந்த பூசாரிய குத்து, சாமி சிலைய உடை, புரட்சி செய்.. ஜெய் பீம்ம்ம்ம்ம்ம்ம்”

 
 

ஸ்டாலின் சும்மாதான் திருவரங்கம் பக்கம் சென்றார்

Image may contain: 3 people

ஸ்டாலின் சும்மாதான் திருவரங்கம் பக்கம் சென்றார், அதற்குள் நீ என்னவெல்லாமொ எழுதிவிட்டாய், அவர் நெற்றி குங்குமத்தை அழித்த பொற்காட்சி கண்டாயா? ஏ ஆரிய அடிவருடி , இத்தோடு நிறுத்திகொள் என பல உபிக்கள் சீறுகின்றன‌

எதற்காக சென்றாராம்? ஒரு பொது நிகழ்ச்சிக்காம்

அதாவது கோவிலில் வாழும் ஏழைகளுக்கு உதவி அளிக்க சென்றாராம் , தமிழகத்து பிச்சைக்காரர்களை எல்லாம் திமுக ஒழித்துவிட்டதால் பார்ப்பன அட்டகாசத்தில் கொஞ்சம் பிச்சைக்காரர்கள் திருவரங்க கோவிலில் மட்டும் இருக்கின்றார்களாம்

மிக சரியாக அவர் அங்குதான் நிற்க வேண்டுமா?

மனிதர் சென்றிருக்கின்றார், சென்றால் அங்கு குங்குமம் பூசத்தான் செய்வார்கள் அதனை அழித்திருகின்றார்

முன்னதை விட பின்னதுதான் மகா கொடூரமான செயல்

பந்தியில் ஒருவருக்கு பாசமாக விருந்தளிக்கின்றொம். நாம் இலையில் வைத்த உணவினை அனுமதித்திவிட்டு நான் உண்ணமாட்டேன் என தூர எறிந்தால் சமைத்தவர் மனம் என்ன பாடுபடும்?

ஸ்டாலின் அதனைத்தான் செய்திருக்கின்றார், நல்லவர் என்றால் அவர்கள் திலகமிட வரும்பொழுதே மறுத்திருக்கலாம் மாறாக வாங்கிவிட்டு அழிப்பதெல்லாம் அவர்கள் முகத்தில் காரி உமிழும் செயல்

இதுதான் தீண்டாமை

வடக்கே ஒரு தலித் வீட்டிற்கு சென்றுவிட்டு இங்கு சமைத்ததை நான் உண்ணமாட்டேன் என திரும்பிய பாஜக அமைச்சருக்கும், பிராமணர் என் நெற்றியில் இட்ட குங்குமத்தை அவர்கள் கண்முன்னே அழிப்பேன் என்ற ஸ்டாலினின் கொடூர சிந்தனைக்கும் வித்தியாசமே இல்லை

அது தீண்டாமை என்றால் இதுவும் தீண்டமையே

இஸ்லாமியரோடு ஸ்டாலினுக்கு நோன்பு கஞ்சி குடிக்க தயக்கமிலை, கிறிஸ்தவரோடு கேக் வெட்ட தயக்கமில்லை

ஆனால் இந்துக்களின் நெற்றி குங்குமத்தை அவர்கள் முன்பே அழித்தது மாபெரும் தவறு, இந்துக்களின் நெஞ்சில் ஈட்டி பாய்ச்சும் செயல்

இதற்கான விளைவுகள் நிச்சயம் சாதாரணமாய் இராது

 

சஞ்சயின் எதிர்பாரா மரணம், இந்திய அரசியலை புரட்டிபோட்ட சம்பவம்

Image may contain: 11 people, people smiling, glasses

கட்சியின் எந்த பதவியிலும், அரசின் எந்த பதவியிலும் இல்லாத ஒருவன் தன் குடும்ப அரசியல் பலத்தால் பெரும் நாட்டையே ஆட்டி வைக்கலாம் என இந்தியாவிற்கு புது இலக்கணம் எழுதியவர் சஞ்சய் காந்தி

இந்திராவின் அரசியல் வாரிசாக உருவாகிகொண்டிருந்தவர் சஞ்சய் காந்தி, 1971 முதல் 1980 வரையான காலகட்டங்களில் இந்தியாவினை ஆட்டிகொண்டிருந்தவர் சஞ்சய் காந்தி.

இந்த தேசம் அவரை கண்டு மிரண்டிருக்கின்றது, மனிதர் அனாசயமாக மிரட்டி ஆண்டிருக்கின்றார்

வரலாறு அப்படித்தான் சொல்கின்றது, கட்டாய கருக்கலைப்பு திட்டம், சில துப்பாக்கி சூடுகளுக்கு காரணம், டெல்லியினை ஆட்டிவைத்த சில சம்பவங்கள் என ஏராளமான திகில் கதைகள் உண்டு.

காங்கிரஸ் மூத்த தலைவர்களே அவரிடம் அஞ்சி ஒடுங்கி இருந்தார்கள் என்கிறது காங்கிரஸ் வரலாறு, நிச்சயமாக அப்படியும் காங்கிரசில் ஒரு பக்கம் இருக்கின்றது

இவ்வளவிற்கும் கட்சியில் சஞ்சய்காந்தியின் பதவி என்னவென்றால் ஒன்றுமே இல்லை. ஆனால் கட்சி விவகாரங்களில் அவரின் கை ஓங்கியே இருந்திருக்கின்றது.

இந்திரா பல இடங்களில் அவரை கையாளமுடியாமல் தடுமாறி இருக்கின்றார், பிள்ளைபாசம் அவரையும் தடுமாற வைத்திருக்கின்றது

மிசா காலங்கள் சஞ்சய் காந்தியின் உச்ச ஆட்சி காலம், மிசாவினை கொண்டுவந்து இந்தியாவினை மிரட்டியது உண்மையில் சஞ்சய்தான்

அதனிலிருந்தே இந்திராவின் நிம்மதி போயிற்று, பெரும் அரசியல் நெருக்கடி அவருக்கு ஆரம்பமாயிற்று, என் அன்னையின் மன உளைச்சலுக்கு சஞ்சய்தான் காரணம் என வாய்விட்டு சொன்னார் ராஜிவ்காந்தி

இந்திராவினையும் பல இடங்களில் மீறி பெரும் அசாதரண மனிதனாக பெரும் மிரட்டலான தலைவனாக சஞ்சய் உருவாகிகொண்டிருந்த பொழுதுதான் அந்த விமான விபத்து நடந்தது

அது இதே ஜூன் 23,

சஞ்சய் எதிர்பாரா விதமாக விமான விபத்தில் இறந்தார். நாள்தோறும் சிறிய விமானத்தில் பறந்துவிட்டு வருவது அவரின் வாழ்க்கை முறையில் ஒன்று, அன்று அப்படி பறந்த விமானம் விபத்துகுள்ளாகி இறந்தார் சஞ்சய்.

அன்று மேனகாவின் வயது 24, இந்த வருண்காந்தி 3 மாத குழந்தை.

அந்த விபத்து இந்திய அரசியலை புரட்டி போட்டது, இந்திராவிற்கு பின் சஞ்சய் வந்திருந்து இன்று மேனகா பிடித்திருக்க வேண்டிய இடத்தை சோனியா பிடித்துகொண்டார்

வருண் காந்தியின் இடம் ராகுலுக்கு சென்றுவிட்டது

சஞ்சய் இருந்திருந்தால் என்னென்ன பிரளயம் எல்லாமோ ஏற்பட்டிருக்கும், பாரதீய ஜனதா கூட எழும்பியிருக்க முடியாது.

சஞ்சய் முழுக்க கண்டிப்பானவர் என்றாலும் இந்தியாவின் மாருதி கார் முதல் பல கனவுகள் அவருக்கு இருந்தன, 1975களிலே இன்றிருக்கும் இந்தியா அவரின் கனவாக இருந்தது

அப்படி ஒரு எதிர்காலத்தை நோக்கித்தான் அவர் இந்தியாவினை இழுத்துகொண்டிருந்தார்

ஆனால் விதி அது அல்ல. காலம் எப்படி எல்லாம் விளையாட்டு காட்டிகொண்டிருக்கின்றது.

இன்று சஞ்சய் காந்தி நினைவு நாள். அவர் கட்சியிலும் ஆட்சியிலும் எந்த பொறுப்பிலுமில்லை, ஆனால் இந்தியாவினை ஆட்டி வைத்திருந்தார்.

அதே நேரம் இந்தியாவின் கென்னடி என உலகம் அவரை கருதிகொண்டிருந்தது

பழைய‌ அதிமுக தலமை அட்டகாசங்களுக்கு அவர்தான் முன்னோடி, எப்படி எல்லாம் அம்மா, சின்னம்மா என்ற பெயரை பயன்படுத்தி ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடலாம் என சொல்லிகொடுத்தவர் அவர்

காங்கிரசார் அவரை நினைக்கின்றார்களோ இல்லையோ, மன்னார்குடி குடும்பம் சஞ்சய் காந்தியினை நன்றியோடு நினைக்கத்தான் வேண்டும்

அவர் காட்டிய வழியில் சென்றவர்கள், சென்று கொண்டிருப்பவர்கள் அவர்கள்தான்

அது இருக்கட்டும்

என்ன சாபமோ தெரியவில்லை இந்திரா, ராஜிவ், சஞ்சய் என மூன்றுபெருமே கோரமான சாவினை சந்தித்தவர்கள் என்பது இந்தியாவின் பெரும் சோகம், தீராத சோகம்.

ஆனால் இந்தியாவின் துணிச்சலான அரசியல்வாதிகள் அவர்கள்தான்

அதனால்தான் என்னமோ அவர்களுக்கு பின்னரான எந்த தலைவர்களுக்கும் அந்த துணிச்சல் வரவே இல்லை

மிக எதிர்பார்க்கபட்ட மோடியும் பாய்வார் என்றால் அவர் யோகா செய்து முனிவர் போல மாறிகொண்டிருக்கின்றார், ஒருவேளை தவ வலிமையால் உலகினை மிரட்டுவார் போல‌

சஞ்சயின் எதிர்பாரா மரணம், இந்திய அரசியலை புரட்டிபோட்ட சம்பவம் என்பது மட்டும் நிச்சயம்..

 

டிரம்ப் என்பவர் மறுபடியும் வடகொரியாவுடன் உரச ஆரம்பித்துவிட்டார்

இந்த டிரம்ப் என்பவர் மறுபடியும் வடகொரியாவுடன் உரச ஆரம்பித்துவிட்டார், கடந்த 12ம் தேதிதான் “நண்பேண்டா.” என வடகொரிய அதிபருடன் சிங்கப்பூரில் செல்பி எல்லாம் எடுத்தவர் இப்பொழுது பல்டி அடித்துவிட்டார்

என்ன சொல்கின்றார்?

“ஏ வடகொரியாவே நீ புது நண்பன். புது நண்பனை முழுக்க நம்பாதே என நான் தினமும் படிக்கும் பைபிளின் பழமொழி ஆகமம் சொல்கின்றது, அதை நான் மீற முடியாது

நாம் நன்றாக பழகுவோம், இன்னும் ஒருவருடம் பழகிவிட்டு அதன் பின் உன் பொருளாதார தடை விலக்கம் பற்றி யோசிப்போம் மற்றபடி நாம் நண்பர்கள், அண்ணன் புஷ் போட்ட பொருளாதார தடையினை இப்பொழுது நீக்க முடியாது” இப்படி சொல்லிவிட்டார்

கடும் தாகத்தில் வாய்பிளந்து நிற்கும் வடகொரியா, அப்புறம் பழகலாம் முதலில் தாகத்திற்கு தண்ணீர்கொடு என கெஞ்சினாலும் டிரம்பிடம் பதில் இல்லை

விஷயம் மறுபடி வில்லங்கமாகின்றது

வடகொரியா இன்னும் மவுனம் சாதிக்கின்றது, “ஏ டிரம்ப் உன் காலண்டர்ல இந்த நாளை குறிச்சி வச்சிக்க..” என அண்ணாமலை ரஜினி போல‌ சவால் விட போகின்றதா இல்லை “ஏ கலெக்டரு ஏமாத்தி போட்டியலே..” என சிட்டிசன் அஜித் போல அழப்போகின்றதா என்பது பற்றி இனிதான் தெரியும்