விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்கின்றனர் : பழனிசாமி

விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்கின்றனர் : பழனிசாமி

தமிழிசையும், எச்.ராசாவும் தான் இப்படி பேசிகொண்டிருப்பார்கள் என்றால் பழனிச்சாமியும் அந்த வரிசையில் சேர்ந்துவிட்டார்

பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் உறவு உள்ளது என்பதை இதை விட தெளிவாக நீரூபிக்கமுடியாது, சகவாச தோஷம் என்பது பழனிச்சாமியினையும் ஒட்டிகொண்டது

விரைவில் விவசாயிகளே தாமாக 8 வழிச்சாலை அமைத்துகொடுத்தார்கள் என சொல்வார் பாருங்கள், அதனை கேட்க “எதையும் தாங்கும் இதயத்துடன்” தயாராக இருப்போம்

இன்று துருக்கியில் தேர்தல் நடக்கின்றது

சவுதி பெண்கள் இன்றிலிருந்து கார் ஓட்ட அரசு அனுமதி

பெண்கள் விமானம் ஓட்டும் இந்த உலகில் பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதிக்காத‌ ஒரே நாடு சவுதி அரேபியா என்றிருந்தது, அந்நிலை இன்றோடு மாறிவிட்டது

நாங்கள் மாறிவிட்டோம் என சொல்லிகொண்டிருக்கின்றது சவுதி அரசு, தியேட்டரை கூட திறந்துவிட்டார்கள்

சவுதி பெண்கள் இன்றிலிருந்து கார் ஓட்ட அரசு அனுமதித்தாயிற்று , இனி தேர் போன்ற கார்களில் சவுதி பெண்கள் ஊர்வலம் வருவார்கள்.

ஆனால் மற்ற கட்டுபாடுகள் நீக்கபட்டதா என்றால் இல்லை

அபாயா உடை அணிதல், பெண்களுக்கு வங்கிகணக்கு திறக்க உரிமை இல்லை, கணவன் அல்லது ஆண் குடும்ப உறுப்பினர் இல்லாமல் பொது இடங்களுக்கு வரகூடாது, தனியாக வெளிநாடு செல்லமுடியாது போன்ற தடைகள் இன்னும் நீடிக்கின்றன‌

இப்போது கேள்வி எழலாம், கார் வோட்டும்பொழுது தனியாகவா செலுத்துவார்கள்? அது சட்ட விரோதம் அல்லவா?

அதுபற்றி இன்னும் முழு விவரம் வெளியிடபடவில்லை, பெண்கள் தனியாக செல்லமுடியாது என்றபொழுது காரில் மட்டும் தனியாகவா செல்லமுடியும்?

நிச்சயம் குடும்பத்து ஆண்கள் அருகில் இருப்பார்கள்

அருகிலிருக்கும் ஆண் சும்மாவா இருப்பார், ஆளுக்கு முன் ஸ்டியரிங்கை பிடிக்கமாட்டாரா?

ஆக பெண்களுக்கு கார்வோட்டும் அனுமதி முழு பலனை அங்கு தராது என்கின்றன சில செய்திகள்

தமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன்

Image may contain: 1 person, smiling

வள்ளுவன்,இளங்கோ,கம்பன்,பாரதிக்கு பின் தமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன்.

முத்தமிழ் அறிஞர் எனும் அடையாளம் பொருந்தும். மூன்று தமிழும் அவரிட‌ம் கொஞ்சியது

கடவுள், காதல், இயற்கை, மதம், தத்துவம், அரசியல் பாசம், காதல், கடமை, நட்பு, தாய்மை , நன்றி, சோகம், பிரிவு, நேசம், மோசம், நம்பிக்கை என எல்லாவகை உணர்வுகளுக்கும் அற்புதமாக வரிகள் கொடுத்த அபூர்வ கவிஞன்

குளிர்ந்த தென்றல் பூக்களையும் சேர்த்து வீசுவது போன்ற‌ தமிழ் அவருடையது, வாழ்வின் அனைத்து பக்கங்களுக்கும் பாடியவர், எல்லா மதங்களுக்கும் செய்யுள் அமைத்தவர்.

இன்றும் மலேசிய சிங்கப்பூர் நாடுகளை காணுங்கள், உங்கள் காதில் “அக்கறை சீமை அழகினிலே மனம் ஆடகண்டேனே..” பாடல் தானாக ஒலிக்கும்.

அரசியலநிலைய பாருங்கள் “ஊதுபத்திக்கும் பீடிகளுக்கும் பேதம் புரியல” எனும் வரிகள் காதில் மோதும்.ஒட்டுமொத்த இந்தியபிரச்சினைகளையும் ஒரே பாடலில் விளக்கிய பெருமை அவருக்கு உண்டு.

கோகுலாஷ்டமி என்றால் அவரின் கிருஷ்ணகானம் பாடல்கள் நினைவில் வராமல் போகாது

இந்து மதத்திற்கு கண்ணன் அருளியது பகவத் கீதை என்றால், கண்ணதாசன் கொடுத்தது அர்த்தமுள்ள இந்துமதம். இரண்டும் இந்து மதத்தின் மாபெரும் அடையாளங்கள்.

பத்திரிகை,மோசடி அரசியல், அவமானம்,துரோகங்கள், தீராத கடன் தொல்லை என பல துன்பங்களும் அவரே தேடிகொண்ட போதை பழக்கத்தின் பாதிப்புகளும் தாண்டியே இவ்வளவு பிரகாசித்திருக்கின்றார் என்றால், அவரது மொத்த திறமை எவ்வளவு இருந்திருக்கும்.

எல்லாம் வெறுத்து, ஆன்மீகத்தில் கலந்து இனி என் வாழ்வு எழுத்துலகமே என அவர் புத்துணர்ச்சி பெற்றபொழுது பாவம் உடல்நிலை இடம்கொடுக்கவில்லை, அந்த சூரியனின் சில கதிர்கள் மட்டுமே உலகிற்கு தெரிந்தது.
மதுப்பழக்கமும்,போதை பழக்கமும் எப்படியெல்லாம் ஒரு மனிதனை அழிக்கும் என்பதற்கு அவரது வாழ்வு பெரும் எடுத்துகாட்டு.

அவரே சொன்னது போல “ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழகூடாது என்பதற்கு எனது வாழ்வு பெரும் உதாரணம்”

வனவாசமும் மன்வாசமும் அக்கால மோசடி அரசியலை அப்படியே படம்பிடித்து காட்டும் வரலாற்று கல்வெட்டுக்கள்

( அவைகளில் எல்லாம் கவிஞர் மிகபடுத்தி எழுதினார் என்பவர்கள் உண்டு, ஆனால் “நெஞ்சுக்கு நீதி” மட்டும் அப்படியே அனைத்து பாகமும் உண்மையாம்

வ‌னவாசத்தில் கலைஞரை விமர்சித்தார் என்றால் அதைவிட மோசமாக காமராஜை விமர்சித்தவர் அவர் )

தனது வாழ்வினை திறந்த புத்தகமாக்கி, தான் கண்ட நல்லவர்களையும், துரோகிகளையும் அப்படியே புட்டுவைத்த ஒரே தமிழக திரை,அரசியல் பிரபலம் கண்ணதாசன் மட்டுமே.

பெரும் ஞானிகளுக்கும் யோகிகளுக்கும் மட்டும் வரும் பக்குவம் இது.

தமிழ்சாதியில் “நல்ல தமிழ்” கவிஞர்களுக்கு மட்டும் ஆயுள் குறைவு,

பாரதி,பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் வரிசையில் கண்ணதாசனும் இடம்பிடித்ததுதான் கொடுமை.

கவிதையோ, பாடலோ அவை அழகுணர்ச்சியோடு அமையவேண்டும், விஷயத்தை மறைமுகமாக புரியவைக்கவேண்டும், மொழியை கையாளும் வார்த்தை ஜாலங்களும், வர்ணனைகளும் மிக அவசியம், அதாவது கேட்பவர்கள் புரிந்துகொண்டு மனதால் ஒன்றி, கவிஞன் காட்டும் சூழ்நிலைக்கு அப்படியே செல்லவேண்டும்.

வெகு சிலருக்கு மட்டுமே அந்த வரம் சாத்தியம், கண்ணதாசனும் அவர்களில் ஒருவர்.

இன்று தமிழக கவிதை உலகம் உலகிற்கே தெரியும் முற்போக்கு, பிற்போக்கு, வயிற்றுபோக்கு என என்னவெல்லாமோ சொல்லிகொண்டு, நவீனத்துவம், முன் நவீனத்துவம், பின் நவீனத்துவம், இடையநவீனம் இன்னும் என்ன இம்சைகள் எல்லாமோ கவிதை என சொல்லபடுகின்றது.

வரிகளை பிரித்துவைத்து எழுதினால் அது கவிதையாம், உவமை இல்லை, இலக்கணமில்லை, வர்ணனை இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை, அர்த்தமும் இல்லை.
கேட்டால் முடியை சிலுப்பிகொண்டோ அல்லது பெண்கவிஞர்கள் தலையை கோதிகொண்டோ சொல்வார்கள், இது உங்களுக்கு என்ன அர்த்தமோ அதனை எடுத்து கொள்ளுங்கள், 10 அர்த்ததிற்கு மேல் வருமாம்.

ஆக சிறந்த காளமேகமே இருபொருள்தான் சொலமுடிந்த கவிதைகளை சொன்னான், இவர்கள் செய்யும் இம்சை தாளமுடியவில்லை, அதுவும் ஒரு மாலைநேர இளம்சிகப்புக்கு ஒரு பெண்கவிஞர்(அப்படி சொல்லிகொள்பவர்) கொடுத்த வர்ணனையை கேட்டால் ஒரு மாமாங்கம் சோறு உள்ளே செல்லாது,

அவ்வளவு அருவெறுப்பான உவமை அது.

எப்படியும் விரைவில் மானமிக்க தமிழன், தமிழை நேசிக்கும் தமிழன், முதல்வராகும் பொழுது முதல் காரியம் இந்த கவிஞர்கள் இனி கவிதை எழுதமாட்டார்கள் என உறுதிமொழிவாங்குவார் என்ற ஆசை இருக்கின்றது,

டாஸ்மாக் கூட இரண்டாம் பட்சம்தான். தமிழின் அழகை அழிப்பதில் முதல்காரணம் இந்தவகை கவிஞர்கள்.
தமிழக சாதிசங்கங்களின் எண்ணிக்கையை விட இவர்கள் தமிழகத்தில் அதிகம்.

இப்படியான காலங்களில் அடிக்கடி கண்ணதாசன் நினைவுக்கு வருவார், இந்த கவிஞன் மட்டும் ஐரோப்பாவில் உலகில் பிறந்திருந்தால் இன்று உலக கவிஞனாக அவனை கொண்டாடியிருப்பார்கள், பாவம் தமிழனாய் பிறந்துவிட்டான்.

“இல்லையொரு பிள்ளையென ஏங்குவோர் பலரிருக்க‌
இங்குவந்து ஏன்பிறந்தாய் செல்வமகனே”
என்ற கவிஞரின் வரி அவருக்கே பொருந்தும்.

இன்று கண்ணதாசனின் பிறந்தநாள்.

தமிழ் அறிந்த, தமிழ் சிறப்பறிந்த யாரும் அவரை மறக்க மாட்டார்கள், நாமும் மறக்க முடியாது. வாழ்வின் எல்லா நிலைகளுக்கும் அல்லது எல்லா பிரச்சினை சூழலுக்கு மிக அற்புதமான பாடல்களை எழுதிய ஒரு கவிஞன் உண்டென்றால் சந்தேகமே இல்லாமல் சொல்லலாம் அது கவியரசர் மட்டுமே.

தமிழகத்தின் மிக சிறந்த கவிஞர் என்றவகையில் அவருக்கு அழியா இடமுண்டு, ஒரு காலமும் மறைந்துபோகாத கவிதை கல்வெட்டு அவர்.

அவர் மிகவும் நேசித்த கண்ணனுக்கு அவர் பாடிய பாடலை ஒரு முறை கேளுங்கள், அக்கவிஞன் தேனில் குழைத்து தந்த பலாப்பழத்தின் ஒரு சுளை

“ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைபோல்”
எந்த மதத்தவராயினும் உருகுவார்கள், ஏன் கம்சனுக்கே தமிழ்தெரிந்தால் அப்பாடலுக்காக கண்ணனை கொண்டாடுவான்.

“ஜோதிமணி பெட்டகமே, சுடரொழியே கண்மணியே ஆதிமகனாய் பிறந்த அருதவமே” என இயேசுவிற்கு பாடல் பாடவும் அவர் தவறவில்லை

இன்றும் இயேசுவின் திருவுருவத்தை பார்க்கும்பொழுதெல்லாம் “வானளந்த திருக்குமரா, மனிதகுல மருத்துவனே” எனும் கண்ணதாசனின் வரிகள் வந்து போகும்

தேவமாதாவினை பார்க்கும்பொழுதெல்லாம் “தாயிருக்க பிள்ளை சாகும் சங்கடம் கொஞ்சமோ, சாட்டையாலே வேட்டையாடி சாவதென்றால் தாங்குமோ” எனும் வரிகளே நினைவுக்கு வரும்

எப்படிபட்ட கவிஞன் அவர்? இனி அப்படி ஒரு கவிதை மேகம் இனி தமிழில் சாத்தியமில்லை

சாகாவரம் பெற்ற கவிஞன் அவர். எல்லாவற்றிற்கும் மேல் அவரின் நாட்டுபற்று வாழ்த்துகுரியது.

திராவிடத்தின் சில பொய் முகங்களை அவர் உரித்துகாட்டிய அளவு இன்னொரு நாட்டுபற்றாளன் செய்யமுடியாது

கம்பன், பாரதி , கண்ணதாசன் என காலம் கொடுத்ததை கொடைகளில் ஒருவர் அவர்.

கிட்டதட்ட 30 ஆண்டுகள் அற்புத பாடல்களை கொடுத்து செங்கோல் ஆட்சி செலுத்திய கவிஞர் அவர். திரையில் கவிஞர் பெயரினை கண்டவுடன் தமிழகம் கைதட்டிய காலமும் இருந்தது

எமனுக்கும் தமிழ் தெரிந்திருக்கும், ஆனால் விதிக்கு தெரிந்திருக்காது. தெரிந்திருந்தால் இவ்வளவு விரைவில் அழகிய தமிழ்கவிதையை கொண்டுசென்றிருக்காது.
ஆனாலும் அவர் வரிகளில் சொல்வதென்றால்

“நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” , அவருக்கு அழிவே இல்லை.

அவரின் பிறந்த‌ நாளில் அவரை நினைவுகூர்வதில் தமிழ் அறிந்தவர்கள் எல்லோரும் பெரும் மகிழ்ச்சிகொள்வதில் வியப்பு ஏதுமில்லை.

(குஷ்பூவிற்கு அவர் பாடல் எழுதவில்லை என்றாலும், அன்றே குஷ்பூவிற்கு பொருந்தும் மிக அழகான பாடலை சாவித்திரிக்காய் எழுதினார் கவிஞர்

தலைவி குஷ்பூவிற்கும் அது அட்டகாசமாய் எக்காலமும் பொருந்தும்

“ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ , உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ” எனும் பாடலது

அப்பாடலின் ஒவ்வொரு வார்த்தையும் குஷ்பூவிற்கு எக்காலமும் பொருந்தும், அதனால் சங்கத்தின் சார்பாக கவிஞனுக்கு பெரும் அஞ்சலி)