உலகம் சுற்றிய களைப்பு தலைவியின் கண்களில் தெரிகின்றது

Image may contain: 1 person, close-upஉலகம் சுற்றிய களைப்பு தலைவியின் கண்களில் தெரிகின்றது

பாவம் புள்ள……

இதனால் கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டு தலைவி அரசியல் களத்திற்கு வருவார் என சங்கம் தெரிவித்துகொள்கின்றது

அந்த கண்கள் களைத்தாலும் ஒரு அழகு தெரிகின்றதல்லவா? அட

அட அட‌

தெய்வீக அழகு என்பது இதுதான், இது மட்டுமே தான்


 

Image may contain: 1 personநேற்று அரண்மனை 2 படம் ஓடிகொண்டிருந்தது, படம் பற்றி யோசித்தால் படம் ஏன் பெரும் வெற்றி பெறவில்லை என்ற கேள்விக்கு விடை கிடைத்தது

இயக்குநர் கடைசி காட்சியில் சொதப்பிவிட்டார்

அந்த கொடூர பேய் கோவிலுக்குள் வரும்பொழுது தலைவியின் தெய்வாம்சம் பொருந்திய முகத்தை கண்டாலே ஓடியிருக்கும்

தலைவியினை அம்மன் சாயல் முகத்தோடு தெய்வீகமாக காட்டி இருந்தால் படம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கும்

மாறாக அவரை உக்கிரமாக ஆடவைத்ததில் காட்சி அமைப்பு திசைமாறி பார்வையாளர்கள் பேயினை மறந்து தலைவியின் அற்புத நடனத்தில் லயித்துவிடுகின்றனர்

இதனால் படத்தோடு பின்னர் அவர்களால் இணையமுடியவில்லை

அதன் பின்பும் ஒரு வாய்ப்பு இருந்தது, தலைவி புன்னகைத்து எல்லோருக்கும் அருளாசி வழங்கி படம் முடிந்திருந்தால் அந்த ஆசிபெறவே தியேட்டரில் கூட்டம் கூடியிருக்கும்

இரு வாய்ப்புகளையுமே இயக்குநர் வீணடித்ததுதான் படத்தின் தோல்விக்கு காரணம்

இனியாவது அத்தவறுகளை அந்த இயக்குநர் செய்யாமல் இருக்கட்டும்

ஆனாலும் தலைவின் நடனம் கைலாயத்தில் ஆடும் சக்தி நடனம் போலவே இருந்தது

 

அங்கிள் கன்டாவில் பேசிய பேச்சின் ஒரு பகுதி

Image may contain: Sundar Babu, smiling

அங்கிள் கன்டாவில் பேசிய பேச்சின் ஒரு பகுதி

“உங்களுக்கு தெரியுமா சொந்தங்களே,

எங்க தமிழ்நாட்டுல சில பயலுக மீச வச்சிருப்பான். சிலருக்கு துடைப்பகட்ட மாதிரி இருக்கும், சிலருக்கு பஞ்சு மாதிர் காது வரை இருக்கும்

சில சில்லறைபயலுக முறுக்கிவிட்டிருப்பான்

அவனுகள பார்த்து நான் எங்க ஊர்ல கேப்பேன், ஏண்டா இது என்னடா மீசை?

வீரம்னு சொல்லுவான்

இதெல்லாம் வீரமாடா? ஈழத்துல என் அக்கா தங்கச்சி, அண்ணன் தம்பி காட்டுறாங்களே அது வீரம்டா. இனம் மீட்க ஆசை வைங்கடா, இப்படி மீசைன்னு சொல்லிட்டு திரியாதுங்கடா.

எங்க அண்ணன் பிரபாகரனை விட பெரும் வீரனா நீங்க, அவர் என்ன பெரிய மீசைய வச்சாரா? முறுக்குனாரா? யுத்தம்னு வந்துட்டா அண்ணன் மீசை எடுத்துருவாரு

அவர் மீசைய எடுத்துட்டாருண்ணா பெரும் போர் தொடங்க போறார்னு அர்த்தம்..”

இப்படி எல்லாம் பேசிய அங்கிள் சைமன் இப்பொழுது முறுக்கு மீசையுடன் அலைகின்றார் என்பதுதான் கொடுமை

(நமக்கு இந்த சனியன் பேசி தொலைத்தது எதுவும் மறக்கவே மாட்டேன் என்கின்றது, ஒரு நல்ல மருத்துவரை பார்த்து இந்த சனியனின் பேச்சை எல்லாம் மூளையிலிருந்து அகற்ற மருந்து வாங்க வேண்டும்)


கிளிநொச்சியில் புலிகள் சீருடை, துப்பாக்கி, சயனைடு, தற்கொலை அங்கியுடன் 3 பேர் பிடிபட்டனர், ஒருவர் தப்பி ஓடினார், அவரை பிடிக்க தீவிர வேட்டை : செய்தி

சிங்களன் சார், அவர் இங்கே மாறுவேடத்தில் மீசையினை முறுக்கி விட்டு கொண்டு அலைகின்றார்.

மீசையினை முறுக்கிவிட்டால் அடையாளம் தெரியாது என்பது புலிகள் பயிற்ச்சியாம்

ஆக இங்கு இருப்பது அவரேதான், ஓடி வாருங்கள்


அவசர நிலைமைக்கால கொடுமைகளை மறக்கமுடியுமா?

Image may contain: 3 people, people smiling

சோ ராமசாமி தன் போக்கில் எமர்ஜென்ஸியினை கலாய்த்துகொண்டிருந்தார், பத்திரிகை தடை இருந்த காலத்திலும் மகா ரகசியமாக ஆனால் ஆர்வமாக அவரின் துக்ளக் தேடபட்டு மக்களால் வாங்கபட்டது

அதுவும் அத்வாணி, வாஜ்பாய் கைதுசெய்யபட்டபின் சோ ராமசாமியின் தாக்கம் அதிகமாக இருந்தது

கலைஞரோ அட்டகாசமாக ஆடிகொண்டிருந்தார். ஸ்டாலின் உட்பட எல்லோரும் சிறைபட்டிருந்தனர். அந்த மிசா சட்டபடி கைது செய்யபட்டோர் எங்கிருக்கின்றனர், இருக்கின்றார்களா இல்லையா என்பது கூட தெரிவிக்கபடாது

திமுக சார்பாக கைது செய்யபட்டோர் விவரம் கலைஞரிடம் இருந்தது ஆனால் முரசொலியில் எழுதமுடியாது. மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தபின்பே செய்தி வெளிவந்த காலமது

பார்த்தார் கலைஞர், மலர் வளையம் வாங்கிகொண்டு அண்ணா சமாதி சென்றார், இங்கு வரமுடியாதோர் பட்டியலை வாசிக்கின்றேன், மறுபடியும் சொல்கின்றேன் அவர்களால் வரமுடியவில்லை என அழுத்தி சொல்லிவிட்டு அந்த பெயர்களை வாசித்தார்

அந்த பெயர்கள் மிசாவில் உள்ளே இருந்த பெயர்கள். விஷயம் தமிழகம் முழுக்க தெரிந்தது. இந்திராவே சிரித்துகொண்டார்

கட்சி கூட்டம் நடத்த தடை என்ற நிலையில் கலைஞரின் அரசியல் வேறுவடிவம் எடுத்தது, தொண்டர்கள் காதுகுத்து விழா, முடி எடுப்பு விழா, திருமண விழா , சாவு விழா என தினமும் 10 விழாக்களை நடத்தினர்

அதை எல்லாம் அரசு தடை செய்ய முடியாதல்லவா? அதனால் அங்கு சென்று அட்டகாசமாக அரசியல் பேசிவிட்டு வந்தார் கலைஞர்

திருமண மண்டபங்களையும் , குடும்ப விழா மேடைகளையும் அரசியல் மேடை ஆக்கிகாட்டினார். இந்திரா தலையில் அடித்து கொண்டார்

அந்நிலையிலும் காமராஜரிடம் சென்று நான் ஆட்சி துறக்கின்றேன், நீங்கள் வழிகாட்டுங்கள் நாங்கள் போராடுகின்றோம் என ஆதரவு கேட்கவும் அவர் தயங்கவில்லை

இதுதான் கலைஞர், இதன் பின் அவர் ஆட்சி இதற்காகவே டிஸ்மிஸும் செய்யபட்டது

எந்த காமராஜரை தோற்கடித்தாரோ, அவரிடமே மிசா கொடுமைக்காக சென்று போராட அழைக்கும் அரசியலும் அவரிடம் இருந்தது. கலைஞர் பிறவி அரசியல்வாதி என்பது இதுதான்

இறுதிவரை மிசாவினை எதிர்த்து நின்றார் கலைஞர், அகில 
இந்திய அளவில் அவர் மிளிர்ந்து நின்றது இந்த நேரத்தில்தான், தேசமே அவரை அதிசயமாக பார்த்தது

பின்னாளில் இந்தியா முழுக்க மரியாதை ஏற்பட அவரின் அந்த தைரியமான நகர்வே காரணம்.

ஆங்கில பத்திரிக்கையொன்று அட்டைப்படத்தில் கருணாநிதி படத்தைப் போட்டு The man who scared Mrs Ganthi என்று கௌரவப்படுத்தியது.

உடனே திமுக வெளிநாட்டு மிஷனெரிகளின் கட்சி என சொல்லவும் காங்கிரசார் தயங்கவில்லை.

அப்படிபட்ட கலைஞர் 1977ல் ஸ்தாபன காங்கிரசுடன் மிசா மீட்டுகொள்ளபட்ட பின் நடந்த தேர்தலில் கூட்டணி வைத்து பிரச்சாரங்களில் இப்படி பேசினார்

மிக சுவாரஸ்யமான பேச்சு அது

அந்த தேர்தல் 1971 பாராளுமன்ற தேர்தல் போல் அல்லாமல் அரசியல் காட்சிகள் தமிழகத்தில் பெரும் காட்சி மாறுதலுடன் நடக்கவிருந்தது.

அப்போது காமராஜரின் சீடர் பா.ராமச்சந்திரன் தமிழக ஜனதாவின் தலைவர்.கிட்டத்தட்ட ஸ்தாபன காங்கிரஸுடன் திமுக கூட்டு என்று தான் சொல்லவேண்டும். இடது கம்யூனிஸ்டுகளும் இந்த கூட்டணியில்.

அப்போது கருணாநிதி திருச்சியில் பா.ராமச்சந்திரன் ஒரே மேடையில் தேர்தல் பிரச்சாரம்.

திருச்சியில் கருணாநிதியின் 1977 பொதுத்தேர்தல் மேடைப்பேச்சு:

“உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். நான் ராட்டை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கேட்பதும் பா.ராமச்சந்திரன் உதய சூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கேட்பதும்உங்களில் அனேகருக்கு வியப்பாக இருக்கலாம்.

வாக்களியுங்கள் என்று கேட்பது மாத்திரமல்ல. நானே பா.ராமச்சந்திரனுக்குத் தான் ராட்டை சின்னத்தில் வாக்களிக்க இருக்கிறேன்.ஆண்டாண்டு காலமாக உதய சூரியன் சின்னத்திலே வாக்களித்து வாக்களித்து பழக்கப்பட்ட இந்த கரம் இப்போது ராட்டை சின்னத்தில் பா.ராமச்சந்திரனுக்கு வாக்களிக்கப்போகிறது. அவர் மாத்திரம் என்னவாம்?(கரகோஷம்)முரசொலி மாறனுக்கு உதயசூரியன் சின்னத்தில் தான் வாக்களிக்கப்போகிறார்.

அவசர நிலைமை பிரகடனம் செய்கிற அளவுக்கு நாட்டிற்கு என்ன ஆபத்து வந்து விட்டது. சீனத்துக்காரன் சீற்றம் கொண்டானா? பாகிஸ்தான்காரன் படையெடுத்தானா?இல்லையே! என்ன அவசியம்?

ஆபத்து எதுவும் இந்தியத் திருநாட்டுக்கு இல்லை.இந்திரா காந்தியின் வீட்டுக்குத்தான்.

அலகாபாத் நீதிமன்றத்திலே ஒரு நீதிபதி.சின்கா அவரது பெயர்.சொந்தக்கையாலேயே தீர்ப்பு எழுதக்கூடிய சுபாவம் கொண்டவர்

அந்த நீதிபதி சொன்னார்”இந்திரா காந்தி தேர்தலில் ஜெயித்தது செல்லாது. அவர் இனி பத்தாண்டு தேர்தலில் நிற்கக்கூடாது.

என்ன சொன்னார். ஓராண்டு ஈராண்டல்ல! பத்தாண்டு தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றார்.

அதனால் தான் இந்திய நாடு அவசர நிலைமையை எதிர்கொள்ளவேண்டிய துர்பாக்கியம் நேர்ந்து விட்டது. இல்லை என்று மறுக்கமுடியுமா?

அவசர நிலைமைக்கால கொடுமைகளை மறக்கமுடியுமா?

பாராளுமன்றத்திற்கு நடக்கவேண்டிய தேர்தல் ஈராண்டு தள்ளிப்போடப்பட்டது.

பாராளுமன்ற தேர்தலை ஈராண்டு தள்ளிப்போடப்பட்டது சர்வாதிகாரமல்லவாம்.அப்படி ஈராண்டு தள்ளிப்போட்ட தேர்தலை இன்று ஓராண்டிலேயே அறிவித்தது சர்வாதிகாரமல்லவாம்.நம்ப வேண்டுமாம். எதிர்பார்க்கிறார்கள், நம்ப சொல்கின்றார்கள்

திடீரென்று தேர்தலை அறிவித்ததே மிகப்பெரிய ஜனநாயகச்செயல் என்று இன்று வாதிக்கப்படுகிறது.

இந்த அம்மையார் நான் முதல்வராக இருக்கும்போது அவசரநிலைமையை அறிவிக்கிறார்.காமராஜர் நீங்கலாக தேசத்தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்படுகிறது. நான் பெருந்தலைவர் காமராஜரை அவர் வீட்டுக்கு சென்று பார்த்தேன். அவர் விம்மி அழுதார். என்னைப் பார்த்து “தேசம் போச்சு..தேசம் போச்சு..தேசம் போச்சு..” என்று மும்முறை கூறினார்.

நான் காமராஜரை எதிர்த்து நேருக்கு நேர் அரசியல் செய்தவன்.அரசியல் எதிரி.ஆனால் காமராஜரின் முதுகில் குத்தியவன் அல்லவே. சி.சுப்ரமண்யம் கால காலமாக காமராஜருக்கு துரோகம் செய்தவர்.

ஆர்.வெங்கட்ராமன் காங்கிரசில் காமராஜரின் முதுகில் குத்தியவர்.

கருணாநிதி ஓட்டு கேட்டு வரலாமா? என்று கேட்கிறார்கள். நான் நீதிமன்றத்தால் இந்திரா காந்தி போல தண்டிக்கப்பட்டவனா?இந்திராகாந்தி அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்.

தண்டிக்கப்பட்ட இந்திரா காந்தி ஓட்டு கேட்டு வரலாம். ஆனால் கண்டிக்கப்படாத கருணாநிதி வரக்கூடாதா”

காலத்திற்கும் நிலைத்து நிற்கும் பேச்சுக்களை அன்று பேசினார்

பின்னர் ராமசந்திரனின் அழிச்சாட்டியத்தில் இந்திரா கலைஞருடன் கூட்டணி வைக்கும்பொழுது நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என சொல்லவும் செய்தார்

கலைஞர் உங்களை எப்படி எல்லாம் திட்டினார், அவருடன் கூட்டணியா என காங்கிரசார் நெளிந்தபொழுது “கலைஞர் ஆதரித்தாலும் எதிர்த்தாலும் உறுதியாக இருப்பார், அவரை நம்பலாம்” என அமைதியாக சொன்னார் இந்திரா

அந்த மிசா காலங்களை அட்டகாசமாக தாண்டி, தன் மகன் சிறையில் கொடுமைபடுத்தபட்டபின்பும் காங்கிரசோடு அரசியல் செய்து கட்சிக்கு எது தேவையோ அதனை செய்தவர் கலைஞர்

மிசா காலம் என்றால் கலைஞர் அதை எதிர்த்து ஆடிய ரசனையான காலங்களும் மறக்கமுடியாதது, வலிகளை தாங்கிகொண்டே எல்லோரையும் சிரிக்க வைத்தே அக்கொடிய காலங்களை கடந்தார்

அசாத்திய மனிதர் அவர்

1976ல் முரசொலியில் மிசா பற்றி எழுதினார், அது தடைசெய்யபட்டது

திராவிட கொள்கை எழுதினார் தடுக்கபட்டது, அண்ணாவின் பேச்சு , சிந்தனைகளை எழுதினார், அரசு வெளியிடவில்லை

அடுத்த நாள் முரசொலி இப்படி செய்தியுடன் வந்தது

“வெண்டக்காய் உடலுக்கு மிக நல்லது, ரஷ்யாவிலிருந்து திரும்பிய ஆதிலட்சுமி தகவல்”

 
 

இதே 1975 ஜூன் 25 மெர்ஜென்சி அறிவிப்பு

Image may contain: 1 person

1971ல் இந்திராவின் மேல் சர்ச்சைகள் வெடித்தன, சஞ்சய் காந்தி இந்திராவினை இயக்குகின்றார் என்ற குரல்கள் வலுத்தன. அந்த தேர்தலில் இந்திரா முறைகேடு செய்தார் என அவர் வெற்றிபெற்ற அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கபட்டது

(ஜெயபிரகாஷ் நாராயணன் இந்தியா முழுக்க சுற்றுபயணம் செய்து இந்திராவினை விளாசிகொண்டிருந்தார்

அவர் தமிழகம் வந்தபொழுது ராமசந்திரன் ஓடிப்போய் கலைஞருக்கு எதிரான ஊழல் பட்டியலை கொடுத்தார், இதற்கு ஆதாரத்தை கொடுங்கள் என ஜெய்பிரகாஷ் நாராயணன் கேட்டபொழுது ஆதாரம் தேடி சென்ற ராமசந்திரன் வரவே இல்லை

கலைஞர் மேல் தொடுக்கபடும் எந்த குற்றசாட்டும் ஆதாரமற்றவை என சொன்னார் ஜெயபிரகாஷ் நாராயண்)

இந்திரா மீது தொடுக்கபட்ட வழக்கு, பின்னாளில் ஜெயா மேல் தொடுக்கபட்ட வழக்கிற்கு முன்னோடி, ஒரு வழக்கு அல்ல பல வழக்குகள் தாக்கல் செய்யபட்டன. லஞ்சம் கொடுத்தது மற்றும் வாங்கியது, அரசு அதிகாரிகளை பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தியது, மற்றும் அரசின் மின்சாரத்தை பயன்படுத்தியது போன்ற பல வழக்குகள்

அந்த தீர்ப்பு ஜூன் 12ம் தேதி 1975ல் வந்தது அதிர வைத்திருந்தது . இந்திரா முறைகேடு செய்தது நிரூபணம் ஆயிற்று அவர் பதவி விலக வேண்டும் மற்றும் 6 ஆண்டு அரசியலில் ஈடுபட தடை என நீதிபதி சின்ஹா சொல்லியிருந்தார்

ஜெயாவிற்கு ஒரு குன்ஹா போல இந்திராவிற்கு அந்த சின்ஹா

1974ல் இந்திரா செய்த அணுகுண்டு சோதனை, முந்தைய வங்கப்போர் வெற்றி, சிக்கிம் சாகசம் எல்லாம் ஒரு நொடியில் அடித்துகொண்டு போனது தீர்ப்பு. இந்திரா பெரும் சிக்கலில் ஆழ்ந்தார்

நிரம்ப யோசித்தார் இந்திரா, சஞ்சய் காந்தியின் திட்டம் இருந்தது. நீதிமன்ற தீர்ப்பை மீற முடியாது நிச்சயம் அரியாசனத்தை விட்டு இறங்கி 6 ஆண்டு அஞ்ஞான வாசம் செல்ல வேண்டும்.

என்ன செய்யலாம், பிரச்சினை என்ன? நீதிமன்ற தீர்ப்பு.

நீதிமன்றத்தை முடக்கிவிட்டால்? முடியும் நீதிமன்றம் இயங்கமுடியாத சட்டம் ஒன்று அரசிடம் இருப்பதும், 352ம் பிரிவு என இருக்கும் அவசர கால சட்டம் அவர்கள் நினைவுக்கு வந்தது

தன் அடியாளான பக்ரூதின் அலி எனும் ஜனாதிபதிக்கு அந்த 352ம் பிரிவினை அமல்படுத்த கடிதம் எழுதினார், உடனே அவரும் அமுல் படுத்தினார்

அப்போது நடந்த இஸ்ரேலிய அரபு யுத்தம், எண்ணெய் விலை சர்ச்சை, பாகிஸ்தான் மிரட்டல் , அணுகுண்டு செய்ததால் சர்வதேச மிரட்டல் எல்லாம் நாட்டை பாதிப்பதாகவும் அதை காக்க எமர்ஜென்ஸி தவிர வேறு வழி இல்லை எனவும் அறிவித்தார்

இதே 1975 ஜூன் 25

எமர்ஜென்ஸி என்பது என்னவென்றால் நாடு இயங்கும் ஆனால் மக்கள் கருத்துரிமை, பேச்சுரிமை எல்லாம் தடுக்கபடும். எதிர்கட்சியோ அதன் குரலோ இருக்காது. மீடியாக்கள் எல்லாம் அரசு சொன்ன செய்திதான் வெளியிட வேண்டும். தேர்தல் அரசியல் எல்லாம் நினைப்பே வரகூடாது

மீறி பேசுதல், மாநாடு, ஊர்வலம் என கிளம்பினால் போட்டு சாத்துவார்கள்

சட்டம் அறிவிக்கபட்டதும் முண்ணணி தலைவர்கள் அனைவரும் கைது செய்யபட்டனர். தமிழக காமராஜர் மட்டும் விதிவிலக்கு

இந்தியாவில் திமுக மட்டும் மிக துணிவாக மிசாவினை எதிர்த்தது. ஸ்டாலின் கைது செய்யபட்டு தாக்கபட்டார், சிறையில் அவரை காக்க சிட்டிபாபு உயிரிழந்தார்

திமுக தன் பாணியில் எதிர்ப்பினை தெரிவித்து கொண்டே இருந்தது

சோ ராமசாமி மகா துணிச்சலாக எதிர்த்து நின்றார், அவரின் எழுத்தும் பேச்சும் பெரும் சிலாகிப்பை பெற்றன‌

நாடு முழுக்க சர்ச்சைகள் வெடித்தன, எதிர்கட்சிகள் எல்லாவற்றையும் முடக்க முயன்றார் இந்திரா. இந்தியாவே இந்திராவிற்கு எதிராக பொங்கி கொண்டிருந்தது

ஒரே ஒருவர் மட்டும் எமர்ஜென்ஸியினை வரவேற்றார், அவர் அதற்கு முன்பு ஒரு காரியம் செய்தார் அண்ணா திமுக என்றொரு கட்சிவைத்திருந்தார்

மாநில கட்சிகளை இந்திரா குறிவைக்கின்றார் என்றவுடன் அனைத்திந்திய அதிமுக என தன் கட்சி பெயரை மாற்றிகொண்டு இது தேசிய கட்சி என்றார், இந்தியாவே சிரித்தது அவரும் சிரித்துகொண்டார்

அவரும் அவர் கட்சியும் எமர்ஜென்ஸியினை வரவேற்றது, காரணம் கலைஞர் ஆட்சி டிஸ்மிஸ் செய்யபட்டது

“எமர்ஜென்ஸியில் ஜனநாயாகம் காக்கபட்டது” என ராமசந்திரன் உளறிவைக்க, இந்தியாவே இந்த ஆள் மெண்டலா என முறைக்க, அவர் போக்கில் தன் அடிமைகளோடு சிரித்துகொண்டிருந்தார் ராமசந்திரன்

இந்தியாவின் எல்லா கட்சிகளும் இந்திராவினை எதிர்க்க ராமசந்திரன் வரவேற்றதை இந்தியாவே வினோதமாக பார்த்தது

சிறை கொடுமை, பத்திரிகை தடை, உரிமை மீறல் , கட்சிகள் தடை , ஸ்ட்ரைக் செய்வோருக்கு மிதி என பல அடக்குமுறைகளை செய்தாலும் மறுபக்கம் வினோதமாக இருந்தது

அரசு அலுவலங்கள் மிக சரியாக இயங்கின, பேருந்துகளும் ரயிலும் குறிப்பிட்ட நேரத்தில் வந்து போயின. மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஒரு பாதிப்புமில்லை

அரசு அலுவலகங்களில் லஞ்சம் என்பது துளியுமில்லை, எல்லா அரசு ஊழியர் முகங்களிலும் பொறுப்பும் பய உணர்ச்சியும் பெருக்கெடுத்தது, சுருக்கமாக சொன்னால் அவர்கள் லஞ்சம் வாங்காமல் சம்பளம் மட்டும் வாங்கியது அப்பொழுதுதான்

பின்பு எதிர்ப்புகள் பெருக பெருக நிலமை சிக்கலானது இந்திரா பணிந்தார், காமராஜரின் மரணம் நிலமையினை சிக்கலாக்கியது

ஆயினும் 2 ஆண்டுகள் கழித்தே எமர்ஜென்ஸி மீட்கபட்டது

இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாட்கள் அவை. தன் ஆட்சியினையும் அதிகாரத்தையும் தக்க வைக்க இந்திரா செய்த காரியம் அவை

அமெரிக்க உள்நாட்டு போர்காலம், சீனாவின் மாணவர் புரட்சி அல்லது டினான்மென் சதுக்க கொடூரம் போலவே இந்தியாவில் இந்த கருப்பு நாட்கள் என வரலாறு குறித்தது.

நிச்சயம் பெரும் கொடுமைகளும் அக்கிரமும் நிறைந்த காலம் அவை

ஆனால் அதை அனாசயமாக‌ எதிர்த்த திமுக 1977 தேர்தலில் தோற்றதும், அதே இந்திரா பின் மகா பலத்துடன் ஆட்சிக்கு வந்ததும் ஜனநாயகத்து அதிசய காட்சிகள்..

 

ஜாக்சன் வாழ்ந்துகொண்டே இருப்பார்

Image may contain: 1 person, glasses

அது தெருவோரமாக ஆடிகொண்டிருந்த கருப்பர் இசை குடும்பம், அந்த குடும்பத்தின் 7ம் பிள்ளை ஜாக்சன்

அந்த சகோதரர்கள் நடத்திய இசைகுழுவில் நடனமாடி தன் வாழ்வினை தொடக்கினார் அவர்

மின்னல் வேக அசைவுகளும் , சவால் நிறைந்த ஆட்டங்களும் அவருக்கு தனி புகழ் தேடிகொடுத்தன‌

பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடையே நடிப்பு என அனைத்தும் கலந்த ‘பாப்’ புதிய நடனத்தை அவர் படைத்தார்

சொந்தமாக பாடல், இசை என பின்னி எடுத்தாலும் அமெரிக்கா அவரை பெரிதும் கண்டுகொள்ளவில்லை காரணம் கருப்பு முகம்

இதனாலே மனம் நொந்த ஜாக்சன் தன் முகத்தை பலமுறை சீரமைத்து வெள்ளை ஆக விரும்பினார். ஓரளவு நிறமும் அடைந்தார்

அதன் பின்பே அவர் உச்சம் தொட்டார், அமெரிக்கா கொண்டாடியதை தொடர்ந்து உலகமே அவரை கொண்டாடி தீர்த்தது

நடன குழு அமைத்து அவர் சம்பாதித்தது போல இன்னொருவன் சம்பாதிக்க முடியாது, அப்படி உலகம் கொட்டி கொடுத்தது

அதே நேரம் அவர் ஆடிய ஆட்டத்தையும் இன்னொருவன் ஆடமுடியாது

பெரும் செல்வம் சேர்த்த ஜாக்சன் அதை பல சமூக பணிகளுக்கே வழங்கினார், அள்ளி கொடுத்தார்

பின்னாளில் சிறுவர்களை பாலியல் கொடுமை செய்ததாக வழக்கு தொடுக்கபட்டது, அவர் குற்றமற்றவர் என வெளிவந்தார்

எனினும் அவரின் நிம்மதி பறிபோயிற்று, மனதால் நொந்த அவர் போதை பழக்கத்தில் வீழ்ந்தார் அது உயிரையும் பறித்தது

அவர் அளவு நிறத்தால் அவமானம் அடைந்தவர் யாருமில்லை, அதை தன் திறமையால் மாற்ற முயன்றாலும் முகத்தை நிறப்படுத்தும் அளவு அவர் போராடினார்

இந்த அவமானம் அவர் சாகும்வரை அவர் மனதில் இருந்தது, திறமையினை அங்கீகரிக்காமல் பிறப்பால் ஒருவனை சுட்டிகாட்டி கொல்வது மனதால் சாகடிக்கும்

அந்த அற்புத கலைஞனும் அப்படி நொந்தே செத்தான், உலகம் அவனை கொண்டாடினாலும் அமெரிக்காவில் அவன் மீது வெள்ளை இனத்திற்கு உள்ளூர ஒரு வெறுப்பு இருந்தது

ஜாக்கசனின் வீழ்ச்சிக்கும் மரணத்திற்கும் இதுவே காரணம்

உலகை தன் இசையாலும், வரிகளாலும், யாரும் பரீசிலிக்காத நடன அசைவுகளாலும் கட்டிபோட்டு பெரும் நட்சத்திரமாய் மின்னிய அந்த ஜாக்சனுக்கு இன்று நினைவு நாள்

ஒவ்வொரு நிமிடமும் உலகின் ஏதாவது ஒரு மூலையில் ஜாக்சனின் பாணியில் நடனம் ஆடபட்டு கொண்டே இருக்கின்றது

நமது ஊர் பிரபுதேவா போல உலகெல்லாம் அவர் வழியில் நடங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன‌

அதில் எல்லாம் ஜாக்சன் வாழ்ந்துகொண்டே இருப்பார்

வாழ்த்துக்கள் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு

Image may contain: 1 person, sitting

இத்தாலியில் நடைபெற்ற செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை சிறுவன் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துக்கள் குவிகின்றன‌

உலகமே காலால் விளையாடும் விளையாட்டை ரசித்துகொண்டிருக்க , தலையால் ஆடும் ஆட்டத்தில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்கின்றது

இது காலால் அல்ல தலையால் ஜெயிக்கும் நாடு…

வாழ்த்துக்கள் கிராண்ட் மாஸ்டர்.

 

மறக்க முடியா மகத்தான மனிதர் வி.பி சிங்கிற்கு நினைவஞ்சலிகள்

Image may contain: 3 people, people smiling, people sitting and close-up

மிக குறுகிய காலம் இருந்தாலும் வி.பி சிங்கின் சாதனைகளை மறக்க முடியாது

பெரும் சர்ச்சையினை மேல்சாதி கட்சிகள் கொண்டுவந்த போதும், மண்டல் கமிஷன் அறிக்கையினை அமுல்படுத்தியது அவர் ஆட்சியில்தான்,

நீண்டகால கோரிக்கையான அம்பேத்கருக்கு “பாரத் ரத்னா” வழங்கபட்டதும் அவர் ஆட்சியில்தான்

இன்னும் ஏராளம் உண்டு

தாழ்த்தபட்ட மக்களுக்காக ஏதேனும் செய்தாக வேண்டும் என்ற அவரின் செயல்பாடுகள் பாராட்டதக்கவை

அதன் விளைவே அவர் அரசு கவிழ்க்கபட்டு சந்திரசேகர் பிரதமர் ஆனார்

இன்று பிரபாகரன் என குதிப்போர் ஒரு விஷயத்தை மறக்கின்றார்கள், ஆம் கலைஞர் வற்புறுத்தியதில் அமைதிபடையினை இலங்கையில் இருந்து திரும்ப பெற்றார் வி.பி சிங்

அப்பொழுது மணலாற்று பகுதியில் பிரபாகரனின் முகமான ஏ1 முகாமினை இந்தியபடை வளைத்திருந்தது, ஒரு நாள் அவகாசம் கொடுங்கள் சனியனை தூக்கி வந்து விடுவோம் என இந்திய ராணுவம் வைத்த கோரிக்கையினை ஏற்காமல் அதனை திரும்ப பெற்றார்

விபி சிங் மட்டும் கொஞ்சம் இறுக்கமாக இருந்திருந்தால் அன்றே பிரபாகரன் கதை முடிந்திருக்கும், அவனை காப்பாற்றியதில் விபி சிங்கின் பங்கு முக்கியமானது

இதனை எல்லாம் யாரும் பேசமாட்டார்கள், காரணம் இதனை சொன்னால் கலைஞர் உதவினார் என சொல்லவேண்டி இருக்கும் அல்லவா? அந்த அரசியல் மோசடி

விபி சிங் அரசு நீடித்திருந்தால் கலைஞர் அரசு கவிழ்க்கபட்டிருக்காது, ஜெயா அரசியலில் உச்சம் பெற்றிருக்க மாட்டார், தினகரன் இம்சை எல்லாம் வந்திருக்காது

நிச்சயம் அந்த அரசு கலைந்திருக்க கூடாது, பின்னர் அதற்கான விலையினை கலைத்த ராஜிவ் கொடுத்தார்

கலைஞருக்கு மிக பிடிதமானவர் அந்த விபி சிங். காரணம் சில நியாயமான காரியங்களை செய்த ஒரே பிரதமர் அவர்

காவேரியில் கூட நடுவர் மன்றம் கலைஞர் வற்புறுத்தலில் அவர் ஆட்சியில்தான் அமைக்கபட்டது.

புறக்கணிக்கபட்ட பலரின் வலியினை உணரும் மனம் அவரிடம் இருந்தது, கூட்டாட்சி தத்துவத்தை ஏற்றுகொண்ட மிக சில வடநாட்டு அரசியல்வாதிகளில் விபிசிங் முதன்மையானவர்

அம்பானிகளை அவர் அலறவிட்ட அளவு இன்னொருவர் செய்யவில்லை, தன் ஆட்சிகாலம் முழுக்க அம்பானிகளின் சிம்ம சொப்பணமாகவே இருந்தார்

அரசியலில் அவர் வீழ்த்தபட்டதில் அம்பானிகள் பங்கும் இருந்தது.

இந்திய பிரதமர்களில் மிக மிக நல்ல பிரதமர்கள் எனும் வரிசையில் லால்பகதூர் சாஸ்திரி முதலில் வருவார். நேருவிடம் கூட சில சமரசம் இருந்தது

சாஸ்திரி சமரசத்திற்கு அப்பாற்பட்டவர், அவரை அடுத்து மிக சிறந்த பிரதமர் விபி சிங்.

ஆனால் இருவரும் கொஞ்சகாலம் தான் இந்தியாவினை ஆண்டார்கள் என்பதுதான் மகா சோகம். இந்திய விதி அப்படி

பாபர் மசூதி பிரச்சினையில் அவர் காட்டிய உறுதி வாழ்த்ததக்கது.

இன்று அவரின் பிறந்த நாள், பிரபாகரனின் உயிரை காத்தவரின் பிறந்த நாள், ஆனால் யாருக்கும் நினைவில் இல்லை

அந்த நல்ல மனிதரான விபி சிங்கிற்கு அஞ்சலிகள்…

அதுவும் அம்பேத்கருக்கு பாரத ரத்னா கொடுத்து அவர் படத்தை நாடாளுமன்றத்தில் திறந்த ஒரே பிரதமர் என்ற வகையில் விபி சிங் மிக உயர்ந்து நிற்கின்றார்.

அம்பேத்கரை நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்றது விபி சிங் என்ற ஒரு விஷயத்தில் அடங்கி இருக்கின்றது டெல்லியின் மகா சர்ச்சைகுரிய சாதி அரசியல்

மறக்க முடியா மகத்தான மனிதருக்கு நினைவஞ்சலிகள்

 

தமிழிசை மீது தாக்குதல் நடத்த முயற்சி : வாலிபர் கைது

தமிழிசை மீது தாக்குதல் நடத்த முயற்சி : வாலிபர் கைது

தமிழிசை ஒரு சுவாரஸ்யமான அரசியல்வாதி, கொஞ்சமும் தயக்கமின்றி, அச்சமின்றி சொல்ல கூடியவர். விமர்சனங்களுக்கு அஞ்சுபவரும் அல்ல‌

சுறாக்களும், கடல் பாம்புகளும், திமிங்கலங்களும் , ஆமைககளும் ஏன் ஆமைகறிகளும் , ஆக்டோபஸ்களும் நிறைந்த கடலின் கரையில் இருந்து கொண்டு ஒவ்வொன்றையும் சாடும் தவளை அவர்.

அடிக்க வேண்டியவர்கள் அந்த சுறாக்களை, திமிங்கலங்களை, கடல் பாம்புகளை, கொடும் கொம்பன் சுறாக்களை அடிக்கலாம்

அதைவிட்டு விட்டு அவைகள் அப்படித்தான் ஆனால் நீ எப்படி கத்தலாம் என தவளையினை அடிப்பது பைத்தியகார செயல்

அக்கா தமிழிசையினையே அடிக்க துணிந்தான் என்றால் அவன் அவ்வகை பைத்தியகாரனே, அவனை உடனே கீழ்பாக்கம் அனுப்பி சிகிச்சைபெற வைத்து தமிழிசையிடம் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும்


ஏய்ம்ஸ் விவகாரத்தில் அன்புமணி மற்றும் தமிழிசை ட்விட்டர் சண்டை

இருவரும் டாக்டர்கள் என்பதால் எய்ம்ஸ் பற்றி எங்களுக்குத்தான் தெரியும் என மல்லுகட்டுகின்றார்கள், இந்த இரு டாக்டர்களில் யார் நல்ல டாக்டர் என்றால் இரண்டுமே அல்ல என்பது வேறு விஷயம்

இந்த சண்டை நீண்டு இப்பொழுது சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தை பாமகவினர் முற்றுகை என செய்திகள் வருகின்றன‌

இப்பொழுது பெரும் வருத்தத்தில் இருப்பது ராமதாஸ்தான், காரணம் சூரியன் சந்திரன் இருக்கும்வரை திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லை என சொல்லிவிட்டார்

இதனால் பாஜக அவரின் மிகபெரும் தேர்வுகளில் ஒன்று, அது மகனால் கெடுகின்றது என்ற வருத்தம் அவரிடம் இருக்கலாம்

அதனால்தான் பெரும் டாக்டரான ராமதாஸே ஏய்ம்ஸ் பற்றி வாய்திறக்கவில்லை

இந்த சூரியனும் சந்திரனும் இருப்பதால்தான் ராமதாஸுக்கு எவ்வளவு தொல்லை….


அஞ்சாமல் திமுக தொடர்ந்து போராடும் : ஸ்டாலின்

Image may contain: 1 person, sunglassesஏம்பா மகனே, இந்த 8 வழிச்சாலைக்கு அடித்தளமிட்டது கருணாநிதி, கையெழுத்திட்டது ஸ்டாலின் 4 லட்சம் விவசாயிகளை நடுவீதியில் நிறுத்தியது “விவசாய துரோக‌” திமுக ஆட்சின்னு ஒரு பயலும் கிளம்பலியா? ஆச்சரியமா இருக்கு

அவனுகளுக்கும் சொல்றதுக்கு ஆசைதான், ஆனா ஏற்கனவே அவனுக சொன்ன பொய் எல்லாம் கிழிஞ்சி அவனவன் தலை தெறிக்க ஓடும்பொழுது இப்படி பொய் சொல்ல முடியுமா?

 


Image may contain: 2 peopleமாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் ஆளுநர் ஆய்வு செய்தால் பயமுறுத்தலுக்கு அஞ்சாமல் திமுக தொடர்ந்து போராடும் : ஸ்டாலின்

“யோவ் ஸ்டாலின் மனுஷன்யா, தெய்வம்யா நமக்காக என்னா பாடு படுறாய் பார்த்தியாய்யா?, இந்த ஆள போய் சட்டைய கிழிச்சி அனுப்பிட்டோமே

மாநில அரசின் உரிமையினை காப்போம்னு திமுக நமக்கு ஆதரவா நாம சொல்லாமலே வந்து நிக்குதுபார்த்தியா, இதுதான்யா பெருந்தன்மை, நேர்மை எல்லாம்.

நாம செய்ய வேண்டிய போராட்டத்தை நமக்காக அவர் செய்றார்யா, ஒரு நாள் கூவத்தூர்க்கு தூக்கிட்டு போய் ரகசியமா மாலை போட்டு கொண்டாடனும்யா”


விமான நிலையங்கள் தேவையா? – சீமான் சீற்றம்

பிரபாகரன் எதற்கு விமானபடை கட்டினார்? என கேட்டால் சைமனிடம் பதில் இருக்காது

(அங்கிள் சைமன் கொழும்பு, கனடா, ஐரோப்பா எல்லாம் எப்படி சென்றார் என்றால் நீந்தியே சென்றார் என தும்பிகள் சிரிக்காமல் சொல்வார்கள்)


இந்த தும்பிகள் அடிக்கடி வந்து எங்கள் அண்ணன் சீமானை கலாய்க்கின்றாய், எங்கே ஆதாரம் காட்டு என வம்புசெய்கின்றன‌

இவர் கொழும்பு வழியாக ஈழம் சென்ற கதை, சிங்களன் குறுகுறுவென உற்று பார்த்த கதை, பிரபாகரன் இவருக்கு ஆமை கறி கொடுத்த கதை

இவரும் பிரபாகரனும் துப்பாக்கி மெக்கானிசம் படித்தபொழுது சிங்களன் சுட்ட கதை, விமானம் இவர் மேல் குண்டு வீசிய கதை, அந்த விமானத்தை இவரும் கடாபி என்பவரும் சுட்டு வீழ்த்திய கதை

அப்படி ஏகபட்ட கதைகளை உங்கள் அண்ணன் அள்ளிவிடுகின்றான் அல்லவா?

அந்த சம்பவங்களுக்கு எல்லாம் ஆதாரத்தை கொடுத்துவிட்டு பேசுங்கள்

குறிப்பாக போராட்டத்தை சைமனிடம் பிரபாகரன் ஒப்படைத்து நீ என் தம்பி என சொல்லி கையொப்பமிட்ட பேப்பர், ஆடியோ, வீடியோ ஆதாரம் எல்லாம் கொடுத்தே தீரவேண்டும்

 


ஆளுநருக்கு எதிராக நடந்து கொண்டால் 7 வருடம் ஜெயில் திமுகவினருக்கு மறைமுகமாக‌ கவர்னர் எச்சரிக்கை

இந்தி எதிர்ப்பு முதல் மிசா காலம் வரை திமுக நிரப்பாத சிறைகள் இல்லை, இந்த மிரட்டல்கள் எல்லாம் அந்த ஆலமரத்தை அசைக்க முடியாது

புதிதாக வந்த கவர்னருக்கு, அதுவும் மிஞ்சிபோனால் இன்னும் இரு ஆண்டுகள் இங்கு இருக்கபோகும் கவர்னருக்கு இந்த திமுக பற்றி என்ன தெரியும்?

ஆளுநர் என்ன தமிழகத்து நிரந்தர சக்கரவர்த்தியா? நடக்குமா?

ஏதோ இளைப்பாற வந்த பறவை தன் அலகால் அந்த‌ மரத்தை வீழ்த்துவேன் என கிளம்பினால் அது நகைப்புகுரியது