கஜினி முகமது

Image may contain: 1 person

கஜினி முகமது மகா உத்தமன் என்றும், இந்து பிராமண பூசாரிகளே சோமநாதபுரி ஆலயத்தை இடித்ததாகவும் சிலர் கதை எழுதி வருகின்றார்கள்

ஆலயங்களை உடைத்து புதையலை தேடுவது அக்கால வழக்கம், சாலமோன் அரசனின் ஆலயத்தை நெபுகாத்நேச்சர் எனும் பாக்தாத் மன்னன் அப்படித்தான் உடைத்தான்

அனுராதாபுர புத்த விகாரையினை ராஜராஜ சோழன் அப்படித்தான் கொள்ளையடித்து வந்தான்

அலெக்ஸ்டாண்டரும், நெப்போலியனும் எகிப்தின் கல்லறைகளையும் ஆலயங்களையும் விடாமல் நொறுக்க்கி தேடினார்கள்

உலக வழக்கம் இது

ஆப்கனின் கஜினி எனும் ஊரில் இருந்த முகமது எனும் அரசனும் அதை செய்யவே இந்தியா வந்தான்

கிட்டத 17 முறை அவன் படையெடுத்தான் , சிலமுறை தோல்வி சிலமுறை சிறிய வெற்றி

அவன் ஒன்றும் மாவீரன் அல்ல, அப்படி இருந்திருந்தால் இங்கே தன் சாம்ராஜ்யத்தை அமைத்திருப்பான், அவனோ சிறிய குழுவோடு வந்து கொள்ளையிட்டு ஓடிபோகும் கொள்ளையனாய் இருந்தான்

சோமநாதபுரம் ஆலயத்தை அப்படி கொள்ளை இடத்தான் வந்தான், வந்த இடத்தில் காந்த கல்லின் நடுவில் தொங்கும் லிங்கத்தை கண்டான்

அந்த கோவிலின் கருவறை அப்படி விஞஞான அறிவில் அமைக்கபட்டது, லிங்கம் இரும்பாலானது

சுற்றிலும் இருந்த காந்த கற்களின் மையபுள்ளியில் அது நிறுத்தபட்டு அந்தரத்தில் நின்றது. அப்படி ஒரு அறிவு அன்றே இந்தியாவில் இருந்திருக்கின்றது

அந்த மாயமே அங்கு காணிக்கை கொட்டி கிடக்க காரணமாயிருந்தது

எல்லோரும் அஞ்சி நடுங்கியபொழுது அந்த காந்த கல்லை அவன் இடிக்க லிங்கம் விழுந்தது

ஆனால் இந்து பக்த கோடிகளோ சிவபெருமானே விழுந்ததாக அஞ்சி ஓடினர்

உற்சாகம் கொண்ட கஜினி அங்கிருந்த பொன் பொருளை எல்லாம் கொள்ளை அடித்தபின், எல்லா தூண்கள் உள்ளும் பொக்கிஷம் மறைந்திருக்கலாம் என உடைத்து தேடினான்

அக்கோவில் சிதைந்தது இப்படித்தான்

கஜினி முகமது ஒன்றும் உத்தமன் அல்ல, அவன் சோமநாதபுர ஆலயத்தை இடிக்கவில்லை இந்துக்களே இடித்தனர் என சில குபீர் வரலாற்றாசிரியர்கள் சொல்வது உண்மையும் அல்ல‌

இந்துக்களில் சில பொய்யர்கள் இருக்கலாம், அதற்காக உண்மை இதோ என சில படுபயங்கர பொய்யர்கள் கிளம்புகின்றார்கள், இவர்கள் அங்கிள் சைமனை விட ஆபத்தானவர்கள்

(ஆனால் ஒரு விஷயம் கவனிக்க வேண்டும், சோமநாதபுரத்து செல்வத்தை கொண்டு ஆப்கன் கஜினியினை அவர் சீர்படுத்தினான் , அழகுபடுத்தினான்

என்னாயிற்று?

இன்றுவரை அது கலக பூமி, நிம்மதி என்பது ஒரு காலமுமில்லை, மங்கோலியர், ரஷ்யர் முதல் அமெரிக்கர் வரை யாரெல்லாமோ வந்து அடிக்கின்றார்கள்

சிவன்சொத்து குலநாசம் என்பது இதுதான்)

இணையத்தில் ஒரு பொய் செய்தி பரவுகின்றது

இணையத்தில் ஒரு பொய் செய்தி பரவுகின்றது

அதாவது ரத்தகண்ணீர் நாடகத்தில் மபொசியினை சாடி எம்.ஆர் ராதா அம்மா சாக வேண்டிய மபொசி இருக்க நீ செத்துவிட்டாயே என அழுததாக சொல்கின்றார்கள்

அப்படி எல்லாம் நடந்ததாக தகவல் இல்லை

ஆனால் தன் தாய் இறந்தபொழுது எம்.ஆர் ராதா இப்படி சொன்னார்

“என் தாய் இறந்துவிட்டார், சாக வேண்டிய ராஜாஜி எல்லாம் உயிரோடு இருக்கும்பொழுது , என் தாய் இறந்துவிட்டார்”

ராஜாஜியினை அப்படி சொன்ன ராதாவினை மறந்துவிட்டார்கள், காரணம் ராஜாஜி பின்னாளில் கலைஞர் காலடிக்கு வந்துவிட்டார்

ஆனால் மபொசி வரவிலை என்பதால் திமுகவினர் கட்டு கதைகளில் இறங்கி இருக்கின்றார்கள்.

ஆனால் அதே மபொசிக்கு சிலை எழுப்பியர் கலைஞர் என்பதை மட்டும் மறந்துவிடுகின்றார்கள்

மேல்சபை கலைக்கபட்டபொழுது மபொசி அதன் தலைவராக இருந்தார், “இயற்றமிழ் அறிஞர்” மபொசி தலைவராக இருக்கும் அவையினை கலைப்பதா என கலைஞர் கொதித்ததும் திமுகவினருக்கு தெரியவில்லை

இன்றைய திமுகவினருக்கு எதுவும் சரியாக தெரிவதில்லை ஸ்டாலினை தவிர என்பது மட்டும் புரிகின்றது

உலக கால்பந்து போட்டியும் தமிழ்நாடு அரசியலும்

தற்போது நடைபெற்று வரும் உலக கால்பந்து போட்டியில் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவுக்குத் தான் போட்டி. அதுபோல திமுக, அதிமுக இடையில் தான் போட்டி இதில் வேறு யாருக்கும் இடம் இல்லை : அமைச்சர் ஜெயக்குமார்

தமிழக அமைச்சரை கூட உலககோப்பை கால்பந்து ஜூரம் பிடித்துகொண்டது, எப்படி பேசுகின்றார் பார்த்தீர்களா?

இதில் திமுக என்பது கிட்டதட்ட மெஸ்ஸி நிலையில்தான் இருக்கின்றது, சந்தேகமில்லை

ஆனால் இவர்கள் கட்சி ரொனால்டோ என்பதுதான் மகா காமெடி, ரொனால்டோ சொந்தமாக கோல் அடிக்கும் வீரர்.

நேற்று ஈரான் வீரர் முகத்தை குத்தி பெரும் சர்ச்சையில் சிக்கினார் ரொனால்டோ, ஒருவேளை ஜெயகுமாரும் யார் முகத்திவாவது குத்தும் திட்டத்தில் இருப்பாரோ என்னமோ, தினகரன் தரப்பு கவனமாக இருப்பது நல்லது.


முதலில் தமிழிசையினையும் அன்புமணி ராமதாஸையும் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுவிட்டு, கிராமங்களில் 2 வருட பணி செய்ய அனுப்ப வேண்டும்

எவ்வளவு சண்டை….

ஏதோ இவர்கள் இருவரும் மாநில முதல் மதிப்பெண் பெற்று மருத்துவகல்லூரிக்கு சென்றது போல கடும் அலப்பறை

இருவருமே தகப்பனால் வளர்ந்தவர்கள், தகப்பன் பலம் இல்லை என்றால் தமிழிசை நர்சாக கூட வந்திருக்காது, அன்புமணியினை காடுவெட்டி குரு கூட சேர்த்திருக்கமாட்டார்

ஆனால் இவர்களும் சாதித்தவர்கள் போல பேசிகொண்டிருக்கின்றார்கள்….


காடுவெட்டி குருவும் சேகுவேராவும் ஒன்று என சிரிக்காமல் சீரியசாக சொன்னபொழுதே அன்புமணியின் முகம் தெரிந்தது

அவர் +2வில் 1200 அல்லது 2000 மதிப்பெண் பெற்றால்தான் என்ன? பெறாவிட்டால்தான் என்ன?

சிறந்த டாக்டர் என்பதால்தான் டெல்லியில் அவர் அமைச்சராக இருந்தபொழுது ஊழல் செய்தார் என்ற வழக்கு நடந்துகொண்டிருக்கின்றதா?

ஊழல் வழக்கில் சிக்கிய ஒருவர், ஒரு வழக்கிலும் சிக்காத, ஏன் சிக்க வாய்ப்பே இல்லாத (பதவி ஏதும் கிடைத்தால்தானே ஊழல்) தமிழிசையுடன் மல்லுக்கு நிற்கவே தகுதி அற்றவர்

அன்புமணிக்கு மணி அடிப்பவனெல்லாம் இங்கிருந்து உடனே கிளம்பவும்


எமர்ஜென்ஸி காங்கிரஸின் பெரும் பாவம் : மோடி வேதனை

பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் , மாட்டுகறி சர்ச்சை எல்லாம் நடந்து செத்தவர்கள் கணக்கெல்லாம் மகா புண்ணிய கணக்கு போல‌


உலக கால்பந்து போட்டி 2018: வாழா சாவா? போராட்டத்தில் இருக்கின்றார் மெஸ்ஸி

சட்டசபையில் எடுக்கும் நம்பிக்கை தீர்மானம் போல மிக முக்கிய போட்டிக்கு அர்ஜெண்டினா தயாராகின்றது

நைஜீரியாவினை அது சும்மா வென்றால் போதாது, விஜயகாந்தினை வைகோ சோலி முடித்தது போல பெரும் அடியாக கொடுத்து வெளியேற்ற வேண்டும், அப்பொழுதுதான் அது அடுத்த சுற்றுக்கு செல்லும்

அர்ஜென்டினா முழுக்க பிரார்த்தனைகள் நடக்கின்றன, மனரீதியாக அவர்களை உற்சாகபடுத்தும் பொருட்டு மாராடோனா நேரில் கால்பந்து குழுவினை சந்திக்கின்றார்

இன்னும் பலமாக பல வியூகங்களை வகுக்கின்றார்கள், பார்க்கலாம்

வாழா சாவா? போராட்டத்தில் இருக்கின்றார் மெஸ்ஸி

ஆனால் இவ்வாறான நெருக்கடியான கட்டங்களில் அவர் பிரகாசிப்பதே இல்லை, அவர் போக்கில் விட்டால் மிக சிறப்பாக விளையாடுவார் என்பதே வரலாறு சொல்கின்றது

ஏதும் அதிசயம் நிகழுமா என இன்றிரவு தெரியும்..

இது 2021ல் சீமான் சொல்லபோகும் விஷயம்

“அண்ணன சும்மால்லாம் பாக்க முடியாது, நான் புலிகள் கூட தங்கி துப்பாக்கி எல்லாம் சுட்டு பழகிட்டு இருந்தேன், அதில ஒரு தங்கச்சி கையில கோவில் கயிறு கட்டி இருந்து. ஏம்மா கழுத்துல உன்ன காக்கும் சயனைடு இருக்கும்போது இந்த சாமி கயிறு எதுக்குண்ணு கேட்டேன், உடனே தங்கச்சி கயிற பிய்ச்சி எறிஞ்சிச்சி

இப்படி நானும் ஈழ உறவுகளும் பழகும்பொழுதுதான் என்னை பிரபாகரன் அழைத்ததாக சொன்னார்கள், நான் ஒரு ஜீப்பில் சென்றேன். காட்டுக்குள் விளக்கை அணைத்துவிட்டு டிரைவர் ஓட்டினார், புலிகள் பயிற்ச்சி அப்படி

கார் ஒரு குடிசை முன் நின்றது, என்னை காத்திருக்க சொன்னார்கள், திடீரென சர்ர்ர்னு பெரும் இரைச்சல் கேட்டது

டிரைவர் சொன்னார் “பாத்தியா புலி எப்படி உறுமிட்டு வருதுண்ணு”

(விளக்கு வெளிச்சம் கூடாதாம், ஆனால் பெரும் இரைச்சல் அனுமதியாம் காரணம் சிங்களன் எல்லாம் செவிடாம், புலிகள் பயிற்சி அப்படி)

அந்த குடிசையில்தான் பிரபாகரனை சந்தித்தேன், என்னை கட்டி அணைத்தார், தள்ளி இருந்த டிரைவர் சிரித்தார். கொஞ்சம் தள்ளி பிரபாகரனின் மெய் காப்பாளர்கள் என்னை கண்காணித்தபடியே இருந்தனர்

‍ – இது 2006ல் சீமான் சொன்ன விஷயம்

“நான் பிரபாகரனை சந்தித்தது யாருக்குமே தெரியாது”

— இது 2018ல் சீமான் சொல்லும் விஷயம்

“நான் பிரபாகரனை பார்த்ததே கிடையாது..”

— இது 2021ல் சீமான் சொல்லபோகும் விஷயம்

ஆப்ரிக்கா அருகில் உள்ள ஷெஷல்ஸ் தீவு

ஆப்ரிக்கா அருகில் உள்ளது ஷெஷல்ஸ் தீவு, கடல் வழியில் இருப்பதால் முக்கியத்துவம் அதிகம்

அங்கு கடற்படை தளம் அமைக்க முயன்றது இந்தியா, ஆனால் செஷல்ஸ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், இதனால் சுணக்கம் ஏற்பட்டது

செஷல்ஸ் மக்கள் ஏன் எதிர்த்தார்கள் என்றால் வல்லரசுகளின் கரங்கள் எல்லா நாடுகளிலும் உண்டு

ஆனால் எதிர்ப்பினை தகர்த்து இந்திய கடற்படை தளம் அங்கு அமையும் என செஷல்ஸ் அதிபர் மோடியினை சந்தித்து நேற்று உறுதியளித்தார்

இம்மாதிரியான விஷயங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்ப்பவை

கூடவே சோமாலியா கடற்கொள்ளையர்களையும் கட்டுபடுத்தும் விஷயம்

இம்மாதிரியான நல்ல விஷயங்களை சாதிக்கும்பொழுது மோடியினை வாழ்த்தத்தான் வேண்டும்


இந்திராவினை ஹிட்லரோடு ஒப்பிட்டார் அருண் ஜெட்லி : இந்தியாவில் பரபரப்பு

இந்திரா முரட்டு சக்தியாக ஆளும்பொழுதே “சேலை கட்டிய ஹிட்லர்” என விமர்சித்தது தமிழகம்.

வட இந்தியர்கள் எல்லா விஷயத்திலுமே பின் தங்கித்தான் இருக்கின்றார்கள்…


 

பாபு ராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

நேற்று முளைத்த காளானான நயன் தாராவிற்கு சங்கம் தொடங்கி, குஷ்பு சங்கம் எனும் ஆலமரத்தோடு மோதி தோற்றுவிட்டு ஆஸ்திரேலியாவிற்கே ஓடிவிட்ட Babu Rao என்பவருக்கு இன்று பிறந்த நாள்

நயன் பக்தி தவிர அவரிடம் ஒரு குறையும் காணமுடியாது. மிக அருமையான நண்பர்.

நயந்தாராவும் காதலும் போல, நண்பரும் ஆசிர்வாதங்களும் இணைந்து வாழ வாழ்த்துவோம்