உலக கால்பந்து போட்டியும் தமிழ்நாடு அரசியலும்

தற்போது நடைபெற்று வரும் உலக கால்பந்து போட்டியில் மெஸ்ஸி மற்றும் ரொனால்டோவுக்குத் தான் போட்டி. அதுபோல திமுக, அதிமுக இடையில் தான் போட்டி இதில் வேறு யாருக்கும் இடம் இல்லை : அமைச்சர் ஜெயக்குமார்

தமிழக அமைச்சரை கூட உலககோப்பை கால்பந்து ஜூரம் பிடித்துகொண்டது, எப்படி பேசுகின்றார் பார்த்தீர்களா?

இதில் திமுக என்பது கிட்டதட்ட மெஸ்ஸி நிலையில்தான் இருக்கின்றது, சந்தேகமில்லை

ஆனால் இவர்கள் கட்சி ரொனால்டோ என்பதுதான் மகா காமெடி, ரொனால்டோ சொந்தமாக கோல் அடிக்கும் வீரர்.

நேற்று ஈரான் வீரர் முகத்தை குத்தி பெரும் சர்ச்சையில் சிக்கினார் ரொனால்டோ, ஒருவேளை ஜெயகுமாரும் யார் முகத்திவாவது குத்தும் திட்டத்தில் இருப்பாரோ என்னமோ, தினகரன் தரப்பு கவனமாக இருப்பது நல்லது.


முதலில் தமிழிசையினையும் அன்புமணி ராமதாஸையும் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுவிட்டு, கிராமங்களில் 2 வருட பணி செய்ய அனுப்ப வேண்டும்

எவ்வளவு சண்டை….

ஏதோ இவர்கள் இருவரும் மாநில முதல் மதிப்பெண் பெற்று மருத்துவகல்லூரிக்கு சென்றது போல கடும் அலப்பறை

இருவருமே தகப்பனால் வளர்ந்தவர்கள், தகப்பன் பலம் இல்லை என்றால் தமிழிசை நர்சாக கூட வந்திருக்காது, அன்புமணியினை காடுவெட்டி குரு கூட சேர்த்திருக்கமாட்டார்

ஆனால் இவர்களும் சாதித்தவர்கள் போல பேசிகொண்டிருக்கின்றார்கள்….


காடுவெட்டி குருவும் சேகுவேராவும் ஒன்று என சிரிக்காமல் சீரியசாக சொன்னபொழுதே அன்புமணியின் முகம் தெரிந்தது

அவர் +2வில் 1200 அல்லது 2000 மதிப்பெண் பெற்றால்தான் என்ன? பெறாவிட்டால்தான் என்ன?

சிறந்த டாக்டர் என்பதால்தான் டெல்லியில் அவர் அமைச்சராக இருந்தபொழுது ஊழல் செய்தார் என்ற வழக்கு நடந்துகொண்டிருக்கின்றதா?

ஊழல் வழக்கில் சிக்கிய ஒருவர், ஒரு வழக்கிலும் சிக்காத, ஏன் சிக்க வாய்ப்பே இல்லாத (பதவி ஏதும் கிடைத்தால்தானே ஊழல்) தமிழிசையுடன் மல்லுக்கு நிற்கவே தகுதி அற்றவர்

அன்புமணிக்கு மணி அடிப்பவனெல்லாம் இங்கிருந்து உடனே கிளம்பவும்


எமர்ஜென்ஸி காங்கிரஸின் பெரும் பாவம் : மோடி வேதனை

பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் , மாட்டுகறி சர்ச்சை எல்லாம் நடந்து செத்தவர்கள் கணக்கெல்லாம் மகா புண்ணிய கணக்கு போல‌


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s