வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் : நீதிபதி கிருபாகரன்

நீதிபதி கிருபாகரன் வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும் என பரபரப்பாக பேசி இருக்கின்றாராம்

பொதுவாக நீதிபதிகள் சட்டத்தின் அடிப்படையில்தான் பேச வேண்டும் அதுதான் விதி, அவர்கள் தகுதிக்கான விஷயம்

சட்டத்தில் இல்லாத எதுபற்றியும் அவர்கள் பேசினால் அவர்கள் தரம் கெடும், இதனை நீதிபதி கவனத்தில் கொள்வது நல்லது

வாரிசு அரசியல் என்பது அமெரிக்காவில் இருந்து வடகொரியா வரை உலகெல்லாம் நடக்கும் விஷயம், அரசியல் என்பது அப்படித்தான்

ஜனநாயக நாட்டில் , ஆள்பவர்களை மக்கள் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கொடுக்கபட்டிருக்கும் நிலையில் வாரிசு அரசியல் விஷயமே அல்ல, மக்கள் நினைத்தால் தேர்ந்தெடுப்பார்கள் இல்லை விரட்டிவிடுவார்கள்

இதே நீதிபதியிடம் “அய்யா நீதிபதியின் மகன் நீதிபதி ஆக கூடாது என சட்டம் இயற்றலாமா?” என கேட்டால் அது நீதிபதி அவமதிப்பு ஆகிவிடும்

தாமரை என்ன தமிழக பாலைவனத்திலா மலரும்??

காவேரியில் இன்னும் நீர்வரவில்லை, வருவது போலவும் குமாரசாமி பேசவில்லை

முன்பு சீறிய ஒருபயலையும் தமிழகத்தில் இப்பொழுது காணவுமில்லை, ஐபிஎல் இங்கு நடக்காமல் போனதுதான் நடந்தது

கன்னட தேர்தலில் சில விஷயங்களுக்காக இங்கு பொங்கி இருக்கின்றார்கள் என்பது மட்டும் புரிகின்றது

கன்னட தேர்தல் முடிவு வந்ததில் இருந்து, அதுவும் பாஜக அரசு அமையாமல் போனதில் இருந்து எல்லோரும் அமைதி

இது கண்டிக்கதக்கது

ராகுல் முதல் ஸ்டாலின் வரை அரசியல்வாதிகளும், பாரதி ராஜா முதல் அங்கிள் சைமன் வரை போராளிகளும் அந்த நோக்கில்தான் செயல்பட்டிருக்கின்றார்கள், எல்லாம் அரசியல்

ஒரு பயலும் உருப்படி இல்லை

குமாரசாமிக்கு செக் வைக்கும் விதமாக காவேரியில் ஆட மோடி அரசுக்கும் தெரியவில்லை

பின் தாமரை என்ன தமிழக பாலைவனத்திலா மலரும்??


Image may contain: 2 people

“தென்கிழக்கு சீமையில.. 
செங்காட்டு பூமியில‌ ..

ஏழப்பட்ட சாதிக்கொரு ஈரமிருக்கு

இவுக பொழப்புக்கு நீர்வார்க்கத்தான் 
ஈசானி மூலையில மேகம் கருக்கு..”

 


Image may contain: 3 people, people smiling, textகோவில் சிலையினை காணவில்லை என விசாரித்த‌ பிரிவினை பழனிச்சாமி முடக்கி இருகின்றார், அது பற்றி கவலை இல்லை

ஆனால் ஸ்டாலின் நெற்றி குங்குமம் காணாமல் போனதற்கு விசாராணையாம்

இவரை எல்லாம்……………

 


விஷயம் வள்ளியூர் பகுதியில் சர்ச்சையாகின்றது

வள்ளியூரில் இருசக்கர வாகனத்தில் வந்திருக்கின்றார் விவசாயி, காவலர் அவர் குடித்திருக்கின்றாரா என சோதித்திருக்கின்றனர். இதில் ஏதோ சர்ச்சை நடந்த அவமானத்தில் அவர் நான் குடிக்கவில்லை பூச்சிகொல்லி மருந்து வாங்கவே வந்தேன் என அதனை எடுத்து காட்டி குடித்தும் விட்டார்

குடிக்காதவரை குடித்ததாக போலிசார் அடித்ததில் அவர் பூச்சிமருந்தை குடித்துவிட்டு இறந்திருக்கின்றார் என்ற சர்ச்சை வலுக்கின்றது

அதுவும் போலிசார் முன்னிலையிலே குடித்திருக்கின்றார், அவர்களும் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றார்கள், ஆபத்தான நிலையில் அவர் மேல் மருத்துவனைக்கு கொண்டுசெல்லபட்டு இறந்திருக்கின்றார்

விஷயம் வள்ளியூர் பகுதியில் சர்ச்சையாகின்றது

சோதனை எனும் பெயரில் விவசாயினை அடித்து கொன்றுவிட்டார்கள் எனும் சலசலப்பு எழுகின்றது

இதனிடையே தந்தையினை காணவில்லை என மகன் புகார் கொடுக்க வந்தபொழுது அவரை அவமானபடுத்திய நிகழ்வும் நடந்தாகவும் செய்திகள் விஷயத்தை தீவிரபடுத்துகின்றன‌

சமீபத்தில்தான் வள்ளியூர் காவல் நிலைய ஆய்வாளர் மாற்றபட்டார், மிக வருத்தத்துடன் சில சாபம் இட்டு சென்றிருப்பார் போல..

எப்படியோ திருச்சி கர்ப்பிணிபெண் காவல்துறை சோதனையில் பலியானது போல அடுத்த சர்ச்சை வள்ளியூரில் வெடித்திருக்கின்றது

மோடி இப்பொழுது வடகொரிய அதிபர் அளவுக்கு அஞ்சி ஒடுங்குவது வரலாற்று சோகம்

Image may contain: 2 people

சும்மாவே பாராளுமன்றம் வருவதே இல்லை, பத்திரிகையாளரை சந்திப்பதே இல்லை

இனி ஏதும் சொன்னால் ஆப்கனின் மசூத் அசாத் என்பவரை பத்திரிகையாளர் பாணியில் தீவிரவாதிகள் கொன்றனர் , ஜூலியஸ் சீசரை அவர் அமைச்சர்களே கொன்றனர் என சாக்கு சொல்ல மிக்க வசதியாக இருக்கும்

இதையே இனி காரணமாக‌ சொல்லி ஆளில்லா தீவில் அன்னார் சென்று இருந்துகொண்டாலும் ஆச்சரியமில்லை

உங்களுக்கு காஷ்மீரிய, பஞ்சாபிய, அசாமிய தீவிரவாதிகளால் ஆபத்து, உமா மகேஸ்வரன் முதலான ஈழபோராளிகளால் ஆபத்து என சொல்லியும் மிக தைரியமாய் மக்களை சந்தித்த ராஜிவும்

உங்கள் மெய்காப்பாளர்களை மாற்றுங்கள் என உளவுதுறை சொல்லியும் அவர்களை மாற்றாமல் மகா தைரியமாக இருந்து எதிர்கொண்ட இந்திராவும் நினைவுக்கு வருகின்றார்கள்

மோடி இப்பொழுது வடகொரிய அதிபர் அளவுக்கு அஞ்சி ஒடுங்குவது வரலாற்று சோகம்


 

Image may contain: 2 people, people sitting, people standing and beardமிரட்டல் எதிரொலி, பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: செய்தி

சும்மாவே தமிழ்நாட்டு பக்கம் போனா கருப்புகொடி காட்டுறானுக, கன்னட பக்கமும் பிரயோசனமில்ல. சிவசேனாவும் திட்டுது, சந்திரபாபு நாயுடு செருப்பால அடிக்க வாராரு, கேரளா கேட்கவே வேண்டாம்

வடக்கேயும் நிலமை சரி இல்ல, சரி வெளிநாட்டுக்கு போயிரலாம்னா, இனி அடிக்கடி வரகூடாது எங்களுக்கு வேலை இருக்குண்ணு எல்லா பயலும் சொல்றான்

இனி எனக்கு பாதுகாப்பு முக்கியம் , எங்கேயும் போக முடியாதுண்ணு இதையே சாக்கா வச்சி வீட்டோட இருந்திரலாம்னு இருக்கேன்”


 

என்ன ரஜினி, “காலா”ன்னு ஒரு படத்துல லேட்டஸ்டா நடிச்சீங்ளா?

ஏம்பா மிஸ்டர் திருமா,

போலி பாஸ்போர்ட் வழக்க்கில் உங்கள் கட்சியின் முன்னாள் வேட்பாளர் கைது செய்யபட்டது பற்றி ஏதும் கருத்து உண்டா?

இனி எங்காவது ஊழல், லஞ்சம், தலித் உரிமை இது என வாயை திறந்தீரென்றால் “அடங்க மறுத்து அத்து மீற” தமிழகம் தயார்.

சொந்த கட்சிக்காரனை கண்டித்து அறிக்கைவிட துப்பில்லாத திருமா முன்பு தலைவி குஷ்புவினை கோர்ட்டுக்கு இழுத்தது எல்லாம் மன்னிக்க முடியாத செயல்

உங்களுக்கு மட்டும்தான் “அடங்க மறுத்து அத்து மீற” தெரியுமா?, குஷ்பு சங்கத்திற்கு தெரியாதா?


Image may contain: 11 people, people smilingImage may contain: 13 people, people smiling“உங்கூடத்தான் போட்டா புச்சேன் டச்சு போனில..” என மோடி இனி பாட முடியாது

அது ஒரு செல்பி காலம்..


Image may contain: 2 peopleஎன்ன ரஜினி, “காலா”ன்னு ஒரு படத்துல லேட்டஸ்டா நடிச்சீங்ளா?

இல்லையே, அப்படி ஒரு படத்துல நான் நடிக்கவே இல்லை, அப்படி ஒரு படம் வரவே இல்லே கமல், எல்லாம் புரளி”கேரளாவில் பாவமன்னிப்பு கேட்ட பெண்ணை சீரழித்த 5 பாதிரியார்கள்

கேரளாவில் பாவமன்னிப்பு கேட்ட பெண்ணை சீரழித்த 5 பாதிரியார்கள் மேல் நடவடிக்கை : செய்தி

பாவமன்னிப்பு என்பது கத்தோலிக்க திருச்சபையில் மட்டும் நடக்கும் நிகழ்வு, சீரோ மலபார், ரஷ்யன் ஆர்தோடக்ஸ் சபைகளிலும் அதன் சாயல் உண்டு

பாவமன்னிப்பினை ஒருவர் பாதிரியிடம் அறிக்கையிட்டால், அது ரகசியமாக வைக்கபடவேண்டும் என்பது திருச்சபை விதி

இந்த பாதக பாதிரிகள் அதை வைத்தே அப்பெண்ணை மிரட்டி சீரழித்திருக்கின்றார்கள்

விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை சிலர் கொல்ல முயன்றபொழுது, உங்களில் குற்றமில்லாதவன் முதற்கல்லை எறியட்டும் என சொல்லி அப்பெண்ணை விடுவித்து, பெண்ணே நானும் உன்னை குற்றம் சாட்டவில்லை, இனி பாவம் செய்யாதே என சொன்னவர் இயேசு

அவர் வழிவந்த இந்த கொடூர சாமிகள் எப்படிபட்ட அலங்கோல விஷயத்தை செய்திருக்கின்றார்கள்??

இது மாபெரும் குற்றம் அநீதி, வாடிகன் நடவடிக்கை எடுப்பது ஒருபக்கம் இருந்தாலும் இந்திய அரசின் நடவடிக்கை உடனடி தேவை..

ஆக கத்தோலிக்க திருச்சபை சாமியார்கள் வசமாக சிக்கிவிட்டனர்

சும்மாவே கத்தும் சங்கிகள், பக்தாஸ்க்கு எல்லாம் இனி தீபாவளி

ஆளாளுக்கு பொங்கி எழுவார்கள், நாம் ஏதும் சொன்னால் சிலுவையில் அறையவும் தயங்கமாட்டார்கள்

S Prema , Jebamani Mohanraj , Geetha SureshPugal Machendran Pugal உங்கள் காட்டில் மழை பெய்கின்றது, நனையுங்கள். திருவிழா தொடங்கிவிட்டது ம்ம்ம் ஆடுங்கள்

பாதிரிகளை பாவடைகள் என சொல்லி சொல்லியே அவர்களை பாவாடைகளை தேடி செல்லவைத்த கொடுமையாளர்கள் நீங்கள்தான் 🙂

பெண்ணை பங்கு போட்ட பங்கு தந்தையர்கள் என அழிச்சாட்டியம் செய்வதை கேட்க முடியாமல் நாங்கள் காதை மூடிகொள்கின்றோம்…

(ஆனால் திராவிட பகுத்தறிவாளர்கள் எல்லாம் இப்பொழுது சத்தமே காட்டமாட்டார்கள் என்பது வேறு விஷயம்)

இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாம்

என்ன உலக‌ அமைப்புக்களோ, என்ன மாதிரி கணக்கீடுகளோ தெரியவில்லை , இந்தியா என்றால் இளக்காரம் வந்துவிடுகின்றது

இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடாம், அந்த விஷமிகள் திட்டமிட்டு சொன்னால் உடனே இங்கு பலர் ஏய்ய் மோடி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என குதிக்கின்றனர்

மோடி ஆட்சியின் பாதுகாப்புதுறை மற்றும் வெளியுறவுதுறையின் பிரதான அமைச்சர்கள் பெண்கள்

சில மாநில முதலமைச்சர்கள் பெண்கள்

தமிழக பாஜகவின் தலைவர் கூட பெண் சிங்கம் தமிழிசை

மோடியின் ஆட்சியில்தான் பெண்கள் போர்விமானங்களை ஓட்டும் பைலட்டுகள் எண்ணிக்கை அதிகரிக்கபட்டன‌.

கல்வி முதல் தொழிலதிபர்கள் வரை எத்தனையோ பெண்கள் பெரும் அடையாளமிட்டுகொண்டிருக்கின்றார்கள்

பெண் என்பதால் மோடி ஆட்சியில் ஆபத்து என யாரை சொல்ல முடியும்??

ஏன் பிரதான எதிர்கட்சியான காங்கிரஸின் தலைவர் சோனியா, வங்கத்து மிரட்டல் மம்தா பானர்ஜி என பெரும் பிம்பங்கள் உண்டு

தலைவி குஷ்புவே மாபெரும் காங்கிரஸ் அடையாளமாக இந்தியா எங்கும் அறியபடுகின்றார்

பெண்களுக்கு எதிரான வன்முறை எல்லா நாடுகளிலும் நடப்பது, இங்கென்ன கிளிண்டனின் அலுவலகத்தில் நடந்தது போலா நடந்தது?

ஹாசிபா போல கொடூர மரணங்கள் ஆப்ரிக்கா முதல் கொலம்பியா வரை அன்றாடம் நடப்பவை, அதை விட கொடூர விஷயங்கள் எல்லாம் உண்டு

ஏன் சில கிறிஸ்தவ சபைகளில் கூட குழந்தைகளிடம் காமசேட்டை செய்த பாதிரிகள் உண்டு

அதை எல்லாம் விட்டுவிட்டு இந்தியாவில் பெண்கள் வாழமுடியாது என வெளிநாட்டுக்காரன் சொல்வானாம், அதை கொஞ்சமும் யோசிக்காமல் இங்கிருப்பவர்கள் எல்லாம் ஆமாம் என ஆமோதிப்பார்களாம்

அதிலும் கட்சி தலைவிகள் , கட்சியில் பொறுப்பில் பாதுகாப்பாக இருக்கும் பெண்களும் ஆமாம் அப்படித்தான் என சொல்வதுதான் மகா காமெடி

குஷ்புவிற்கு முன் குஷ்புவிற்கு பின்

Image may contain: 1 person, selfie and close-up

கிறிஸ்துவிற்கு முன் கிறிஸ்துவிற்கு பின் என்பது இனி பொதுயுகத்திற்கு முன் பொதுயுகத்திற்கு என்றே அழைக்கபடும் என தமிழக அரசு உத்தரவிட்டு பாடபுத்தகங்களிலும் வந்தாயிற்றாம்

பொதுயுகத்திற்கு என்ன அளவு என கேட்டால் இயேசு பிறப்பதற்கு முன் இருந்த காலம், பின் இருந்த காலம் தமிழக அமைச்சர் சொல்லியிருப்பார்,

ஆனால் யாரும் கேட்க வில்லை

பொதுயுகத்தின் அளவே இயேசுபிறப்பை வைத்து என உலகம் பின்பற்றும்பொழுது இவர்களுக்கு தனி வழி

நல்ல வேளையாக ராமருக்கு முன், ராமருக்கு பின் ரா.மு ரா.பி என பாஜக இறங்காதவரை நல்லது

தமிழக அரசும் ஜெயலலிதாவிற்கு முன் ஜெயலலிதாவிற்கு பின் என்றோ (ஜெ.மு, ஜெ.பி), சசிகலாவிற்கு முன் சசிகலாவிற்கு பின் (ச.மு , ச.பி) என்றோ மாறவில்லை அதுவரை நல்லது

யார் எப்படி அழைத்தாலும் உலகம் இன்னும் கொஞ்ச காலத்தில் வரலாற்றை இப்படி பிரிப்பது உறுதி

அதாவது குஷ்புவிற்கு முன் குஷ்புவிற்கு பின் என உலகம் ஒரு கணக்கீட்டை பின்பற்றியே தீரும்

அப்படி உலகின் மிகபெரும் வரலாற்று நாயகியாவார் தலைவி என்பதை சங்கம் சொல்லிகொள்கின்றது


Image may contain: 1 person, selfieவானில் இரட்டை நிலவு ஒரு நாளில் தோன்றும் என அன்றே தீர்க்கதரிசிகள் சொல்லியிருக்கின்றார்கள

இதோ நிறைவேறிற்று…

 

 


உலக கால்பந்து போட்டி : இனி உலக கோப்பையில் மெஸ்ஸி ஆடுவாரோ மாட்டாரோ ?

Image may contain: 2 people, text

இனி உலக கோப்பையில் மெஸ்ஸி ஆடுவாரோ மாட்டாரோ என்ற அச்சத்தில் அவரின் ஆட்டத்தை காண அதிகாலை 2 மணிக்கே அமர்ந்தாயிற்று.

நைஜிரியா அணி துடிப்பாக ஆடியது, அர்ஜெண்டினா ஆட்டம் பிரமாதம் என சொல்லமுடியாது, ஆனால் அந்த அற்புதமான பாஸை முதல் கோலாக்கிய மெஸ்ஸியின் மின்னல் ஆட்டம் அற்புதமாயிருந்தது

வாங்கிய பந்தை நொடிபொழுதில் போஸ்ட்டில் திணித்தார், கொஞ்சமும் சொதப்பலில்லை

ஒருவேளை சொதப்பி இருந்தால் அங்கே கண்களை உருட்டி பார்த்துகொண்டிருந்த மரடோனாவின் அடிக்கு தப்பி இருக்க முடியாது,

சும்மாவே அர்ஜெண்டினா பயிற்சியாளர் மேல் கடும் கோபத்தில் இருக்கின்றார் மராடோனா. தோற்றுவிட்டு இந்த அணியோ அதன் கோச்சோ அர்ஜெண்டினாவிற்குள் நுழையமுடியாது என பகிரங்கமாக மிரட்டிவிட்டுத்தான் அரங்குகிற்குள் வந்தார்

முதல் கோலை அர்ஜென்டினா அடித்தாலும், அதன் வீரர் செய்த தவறால் நைஜிரியாவும் ஒரு கோல் அடித்து சமபடுத்தியது

பின் ஆட்டம் மந்தமானது, அர்ஜென்டினா வீரர்கள் சொதப்பினர், மெஸ்ஸியினை சுற்றி நைஜிரியர் மூவர் நின்று கொண்டு அவரிடம் பந்து வராமல் பார்த்துகொண்டனர்

சில நேரங்களில் வைகோ போல பரிதாபமாக அலைந்தார் மெஸ்ஸி

ஆனாலும் 86ம் நிமிடத்தில் மெஸ்ஸியிடம் பந்து போககூடாது என்ற கவனத்தில் இருந்த நைஜிரியரின் பலவீனத்தை பயன்படுத்தி சக வீரர் அட்டகாச கோல் அடித்தார்

அத்தோடு முடிவு தெரிந்தது

எனினும் அர்ஜென்டினா ஆட்டம் அவ்வளவு பிரகாசமில்லை, மெஸ்ஸியினை முதலில் தாடியினை எடுக்க சொல்ல வேண்டும், தாடியும் ஆளுமாக பந்து பின்னால் அலைவதை கண்டால் “அய்யா பந்து தாங்கய்யா, கோல் அடிக்கணுமய்யா” என அலைவது போல் இருக்கின்றது

2014ல் இருந்த துடிப்பு இல்லை

அர்ஜென்டினா இதே நிலையில் அடுத்தசுற்றில் ஆடினால் மெஸ்ஸியின் தாடியினை நிரந்தரமாக்கிவிடலாம்

குரோஷியாவும் ஐஸ்லாந்தினை போட்டு தாக்கி அர்ஜென்டினாவிற்கு உதவி இருக்கின்றது, எப்படியோ அடுத்த சுற்றிற்கு சென்றுவிட்டது அர்ஜென்டினா

 
 

பொன்மாணிக்கவேல் மாற்றபட்டதில் அரசியல் இல்லை : அமைச்சர்

Image may contain: 2 people, people standing and outdoor

சிலைகடத்தல் பிரிவில் இருந்து ஐ.ஜி பொன்மாணிக்கவேல் மாற்றபட்டிருக்கின்றார் என்பது அதிகாரபூர்வமான செய்தி ஆனால் மகா அதிர்ச்சியான செய்தி

தமிழகத்து ஆலயங்களில் காணாமல் போன சிலைகளை அவர் மீட்டெடுத்த விதமும், செய்த நடவடிக்கைகளும் மிக அதிரடியானவை, முடியவே முடியாது என இருந்த விஷயங்களை சாதித்து சிலைகளை மீட்டு கொண்டுவந்தார். வரலாற்று சாதனை அவை

அவரை ஏன் மாற்ற வேண்டும் என்றால் அதிகார பூர்வற்ற செய்தி இப்படி சுற்றுகின்றது

சிலைகடத்தலின் வேரினை அவர் தேடிசென்றபொழுது பிரபல கட்சியின் முக்கிய தலைவர் ஒருவர் கும்பல் தலைவனாக இருப்பதாகவும் அவரை பொன்மாணிக்க வேல் குறிவைத்ததாகவும் செய்திகள் வருகின்றன‌

அந்த தலைவர் பழனிச்சாமியிடம் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து இந்த மாபெரும் அநியாயம் நடந்திருப்பதாக செய்திகள் சொல்கின்றன‌

அந்த முக்கிய தலைவர் திமுகவின் பெரிய கருப்பன் என்றும், பழனிச்சாமியிடம் கோரிக்கை வைத்தது ஸ்டாலின் என்றும் சில விஷயங்கள் பரவினாலும் அவற்றிற்கு ஆதாரமில்லை

ஆனால் பழனிச்சாமி அரசு எப்படி நிலைத்திருகின்றது என்றால் இப்படித்தான், யார் தனக்கு சவால் கொடுப்பவர்கள் என்றாலும் “இது உங்கள் ஆட்சி, உங்களுக்கு தேவையானதை செய்யவே யாம் இருக்கின்றோம்” என்ற தந்திரத்தில் தப்பி வருகின்றார்கள்

பொன்மாணிக்கவேல் மாற்றபட்டதில் அரசியல் இல்லை என அமைச்சர் ஒருவர் உளறும்பொழுதே பொறி தட்டுகின்றது

ஆலய சிலைகளை மீட்கும் மிக புனிதமான பணியினை மிக தைரியமாக செய்த பொன்மாணிக்கவேல் அவர்களை மாற்றிவிட்ட இந்த அரசு நிச்சயம் நெடுநாள் நீடிக்காது

பழனிச்சாமி அரசு செய்த கொடுமைகளில் தமிழகத்திற்கு மாபெரும் கொடுமையான விஷயம் இது..

சோமநாதபுர ஆலயத்தினை இடித்த கஜினியினை விட, தென்னக ஆலயங்களை சூறையாடிய மாலிக்காபூரை விட மோசமான காரியத்தை செய்திருக்கின்றது பழனிசாமி அரசு