வாழ்த்திய வாழ்த்திகொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி

வாழ்த்திய வாழ்த்திகொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி, ஓடிபோன ஒரு அகதிக்கு இத்தனை பேர் வாழ்த்துவது என்பது நெகிழ்ச்சியான விஷயம். நன்றிகள்

உண்மையில் இன்று பிறந்தநாள் என்பதே எல்லோரும் வாழ்த்திய பின்புதான் நினைவுக்கு வந்தது, காரணம் வேறு ஒன்றுமில்லை

இவனுக்கு வரவு வரும்பொழுதெல்லாம் செலவும் வரட்டும் என்பது இறைவன் எமக்கு எழுதிய விதி, சில நேரம் வரவு வருவதற்கு முன்பே செலவுக்கு கணக்கினை அவன் வைத்திருப்பான்

அது பணம் என்றால் தாங்கலாம், உறவென்றால்?

மகன் கைவிரலை பிடிக்கும் நேரம், தந்தை இதுகாலம் நான் பிடித்திருந்த கையினை மெல்ல அவிழ்க்கின்றார்

அவருக்கு உடல்நிலை மோசமாகிகொண்டே இருக்கின்றது , வரும் செய்திகள் ஒன்றும் சரியானவை அல்ல‌

அறிவு பல தத்துவங்களை சொன்னாலும் மனதிற்கு புரியவே இல்லை, அது அதன் இயல்பில் கலங்கிகொண்டே இருகின்றது

அந்த மனிதர் வித்தியாசமான பிறப்பு. தர்மனும் துரியோதரனும் ஒரு சேர்ந்து பிறந்த வினோத குடும்பத்தில் பிறந்தார்

ஒரு சகோதரன் ஆறுதல் என்றால் இன்னும் சிலர் நேர் எதிர். மொத்தத்தில் அவரை வாழவும் விடவில்லை சாகவும் விடவில்லை

சண்டாளர்கள் அவரை யானையினை காட்டிலிருந்து பிடித்து வந்து அடித்து சித்திரவதை செய்து அடக்க பழகுவது போல சித்திரவதை செய்தார்கள், அவர் கதறுவார் துடிப்பார், அந்த சண்டாளர்களுக்கோ அக்குரலை கேட்டால்தான் தூக்கம் வரும்

அதை எல்லாம் அருகிருந்து பார்த்திருக்கின்றேன், இன்றுவரை நினைவிருக்கின்றது

தந்தை இல்லா மகனாக அவருக்கு ஆதறுவுமில்லை, அடைக்கலமுமில்லை, அந்த நரகத்திலே அவர் வாழ்வு இருந்தாக வேண்டிய கட்டாயம்

“எளியவனாய் பிறந்தாலும் இளையவனாய் பிறவாதே” எனும் பழமொழி அவர் பட்ட பாட்டில் அன்றே விளங்கிற்று

“உடன்பிறந்தே கொல்லும் நோய்” என்பது அவரோடு பிறந்தவர்கள் விஷயத்தில் உண்மையாயிற்று

வாழ்வில் சகோதர‌ துரோகம் என்றால் என்ன என்பதை அவரை தவிர யாரும் அப்படி உணர்ந்திருக்க முடியாது

அவரோ அவருக்கான ஒரே மருந்து குடி என சரணடைந்தார், அப்படி ஒரு குடியினை யாரும் குடித்திருக்க முடியாது, ஆயினும் ஏதோ ஒரு சக்தி அவரை காத்து வந்தது

கிட்டதட்ட பாகுபலியில் அந்த தேவசேனா அரக்கன் பல்வாள் தேவனிடம் என்ன பாடுபட்டாளோ அதேதான், ஆனாலும் மீண்டு வந்தார்

அவர் கதையினை நல்ல எழுத்தாளான் எழுதுவாயின் கள்ளிகாட்டு இதிகாசத்தினை விட அட்டகாசமான மிக உருக்கமான கதை கிடைக்கும்

நிச்சயம் அந்த மனிதர் அறிவாளி சந்தேகமில்லை, தகுந்த வாய்ப்பும் ஆதரவும் கிடைத்திருந்தால் பெரும் உயரம் தொட்டிருப்பார், அரசியல், பத்திரிகை, வரலாறு என எல்லா விஷயங்களையும் எமக்கு கற்றுகொடுத்தது அவர்தான்

இவ்வளவிற்கும் அவர் படித்தவர் அல்ல, இளம் வயதில் ஒரு கடையில் இருந்தபொழுது பக்கத்து பழைய பேப்பர் கடையில் அவர் படித்த விஷயங்களாம், தூங்காமல் வாசித்த காலங்கள் உண்டு என்பார்.

வாசிப்பு அவருக்கு அப்படி பிடித்திருக்கின்றது, அதன் அருகிலே பராரி கோலத்தில் இருந்து அவ்வளவு தகவல்களை திரட்டியிருக்கின்றார்

நன்றாக குடித்துவிட்டால் அவை எல்லாம் அப்படி கொட்டும், கேட்க கேட்க வந்துகொண்டே இருக்கும். குடி இல்லாவிட்டால் கனத்த அமைதி மட்டுமே குடிகொள்ளும்

முறையான கல்வியும் அட அது இல்லாவிட்டால் நல்ல அரவணைப்பு இருந்திருந்தாலும் சுடர்விட்டிருப்பார், 

ஆனால் சண்டாள பாவிகள் அவரை படுத்திய பாடு அவர் வாழ்வினை திசைமாற்றிற்று

அந்த கிராமத்து வரப்புகளிலே ஒரு ஏக்கத்தோடு அவரின் வாழ்வு தொலைந்து போயிற்று, தன் மகனை அந்த நரகத்திலிருந்து விடபட வைத்துவிட்டோம் என்ற ஆறுதலை தவிர அவருக்கு சந்தோஷம் ஏதுமில்லை

ஆனானபட்ட அவதாரங்களே இவ்வுலகில் நிரந்தரமாக வாழமுடியாது எனும்பொழுது அவர் என்ன செய்துவிட முடியும்

எனினும் மானிடம் மருத்துவம் என்ன முயற்சிக்க முடியுமோ அவ்வளவு முயற்சிகள் நடக்கின்றது, அவ்வளவுதான் மானிட பிறவிகள் செய்துவிட முடியும்

ஒரு பக்கம் பிறந்த மகன் இன்னொரு பக்கம் கை நழுவிகொண்டிருக்கும் தந்தை என தொலைதூரத்தில் இருந்து ஏக குழப்பமும் குமுறலும் கலந்த நிலை

மலேசிய நாட்டு மரங்களில் முட்டி அழுவதை விட வேறு ஒன்றும் செய்யமுடியாது

அப்படிபட்ட நிலையில் உங்களின் வாழ்த்து பெரும் ஆறுதல், வாழ்வில் எந்நிலையிலும் உங்கள் அனைவரின் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் கடன் பட்டிருக்கின்றேன்

இருக்கும் கலக்கத்தோடு, உங்களுக்கெல்லாம் என்ன கைமாறு செய்யபோகின்றேன் என்ற பெரும் கலக்கம் ஏற்பட்டிருக்கின்றது

“கடன்பட்டார் நெஞ்சம் போல” என்பது இந்நிலைதான், அந்த நிலையில் இருந்து கொண்டு கை கூப்பி உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லிகொண்டிருக்கின்றேன்

 
 

நீ கால்பந்து பார்ப்பாயா?

Image may contain: 1 person, beard

“அரே பையா, உன்னே மாதிரி இந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்ஸி, நிய்மார் எல்லாம் எனக்கு சேலஞ்ச் பண்ணிச்சுன்னா நம்பிள் ஒரே நாளைல வெல்ட் பேமஸ் ஆய்ருவான், ஆனா அவனுக நம்பிளை கண்டுக்க மாட்டான், வெரி சேடா இருக்கு

நீங்க மைக் டைசன் கிட்ட சேலஞ்ன்ச் பண்ணுங்க ஜீ, நாடு நல்லா இருக்கும்”


“நீ கால்பந்து பார்ப்பாயா?

ஆமாம்

உனக்கு ஐரோப்பிய அணி பிடிக்குமா? இல்லை லத்தீன் அமெரிக்க அணிபிடிக்குமா?

ஆட்டம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருப்பதால் அவர்களைத்தான் பிடிக்கும்

இல்லை அவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் என்பதால் பிடிக்கின்றது

ஒஹோ

ஆமாம் நீ மதவெறியன், அதனால்தான் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மார் என பேசிகொண்டே இருக்கின்றாய்

அப்புறம்?

நீ மதவெறியன் என்பதை ஒப்புகொள், இந்தமாதிரி வெறியன் இந்தியாவிற்கு ஆபத்து

சரி ஒன்று செய்யுங்கள்?

என்ன?

இந்த யோகாசன கோஷ்டி, சங்க் பரிவார கோஷ்டி, ஆர்.எஸ்.எஸில் இருந்து ஒரு காவி அணியினை அனுப்புங்கள், அவர்களை ஆதரித்துவிடலாம்

அனுப்புவோம் நிச்சயம் அனுப்புவோம்

எப்பொழுது?

மோடியின் அடுத்த ஆட்சியில்

அந்த ஆட்சியே வீட்டுக்கு அனுப்பபட போகின்றது, இவர் கால்பந்து அணி அனுப்ப போகின்றாராம், ஓடுறா

நீ மதவெறியன், ஆண்டி இந்தியன், நல்ல இந்தியன் என்றால் அந்நிய மத அணிகளை ஆதரிக்காதே, அவர்கள் பிதா சுதன் அடையாளமிடாவிட்டால் நீ பார்க்கவே மாட்டாய்”


தமிழக பாஜக தலைமை மாற்றப்படாது : முரளிதர ராவ்

Image may contain: 1 person, close-up

தமிழக பாஜக தலைமை மாற்றப்படாது : முரளிதர ராவ்

ஆளில்லா கட்டத்திற்கு கிடைத்த ஒரே ஒரு வாட்ச்மேனையும் மாற்ற அவர்களுக்கு என்ன பைத்தியமா?

இன்னொருவகையில் மிக சரியான முடிவு, இப்போதைக்கு தமிழக பாஜகவிற்கு தேவை குளத்தில் கல் எறிந்துகொண்டே இருக்க ஒரு நபர் அவ்வளவுதான்

மிக அழகா அவ்வப்போது கல்லையும், சில நேரம் பாறாங்கல்லையும் போட்டுகொண்டிருப்பதால் தமிழிசையினை நீட்டிக்க விட்டிருப்பது சரியான செயல்

இனி என்ன?

“உன்னை போல் அப்பனை பார்த்து பதவி நீட்டிப்பு இல்லை, என் சேவையினை பார்த்து கட்சி கொடுத்த நீட்டிப்பு..” என படையப்பா நீலாம்பரி போல அல்லது பாகுபலி சிவகாமி போல தமிழிசை சீறுவார்


எம்.ஆர் ராதா வாழ்க்கை திரைப்படமாகின்றது : செய்தி

படம் யாரும் எடுக்கலாம் , ஆனால் அந்த அமர்களமான வேடத்தில் நடிக்க இன்று எந்த நடிகன் இருக்கின்றான்?

அவர் வேடத்திற்கு பொருத்தமான நடிகன் என யாரை காட்டமுடியும்? ராதாரவிக்கும் வயதாகிவிட்டது.

ஆக ஒரு பயலுமில்லை. சிங்கம் எம்.ஆர் ராதா திரும்பி வராமல் அந்த படத்தை எடுக்க முடியாது.


ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா தீ பற்றி எரிகின்றது : செய்தி

கங்கை அமரனின் வயிற்றெரிச்சல் இவ்வளவு நாள் கழித்து எரிகின்றது, மனிதர் கண்ணகி போல் அல்ல கோவலன் வகையறா போல‌

அதனால்தான் இவ்வளவு தாமதம்


நான் கரடி, யானை, புலி, சிங்கம் எல்லாம் பார்த்தவன் நண்டுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன் : அமைச்சர் ஜெயக்குமார்

இவர் என்ன‌ சர்கஸில் இருப்பவர் பேசுபவர் போலவே பேசிகொண்டிருக்கின்றார்? பாவம்.

நடப்பது “மோடி சர்க்கார்” அல்ல “மோடி சர்க்கஸ்” என்பதை இதைவிட எப்படி அவரால் சொல்லமுடியும்? நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும்


நாடு நலம்பெற இந்த டிவிக்களை முதலில் முடக்க வேண்டும்…

மோடியின் பல்வேறு நடவடிக்கைகளை விமர்சித்தவர்களை, குறிப்பாக ஜிஎஸ்டி பற்றி எல்லாம் பெரும் பொருளாதார வித்வான்கள் போல குதித்தவர்களை எல்லாம் இப்பொழுது ரூபாய் சரிவில் காணவில்லை

பொருளாதார நோக்கில் அது ஜிஎஸ்டி கொண்டு வரபட்டபொழுது தமிழக டிவிக்களில் பல குபீர் பொருளாதார நிபுணர்கள் தோன்றினார்கள்

ஜிஎஸ்டி என்றால் புலிகளின் அரிசி கப்பல் போல என நினைத்துகொண்ட அங்கிள் சைமன் எல்லாம் சில டிவியில் வந்து குதித்த கொடுமை நடந்தது

சாலையில் தூங்குபவன், பார்க் பெஞ்சில் மல்லாக்க கிடப்பவன், ஓசி டீக்கு ஏங்கி நிற்பவன் எல்லாம் தமிழக டிவிக்களில் வந்து பொருளாதார பாடம் நடத்தினார்கள்

இதோ இந்திய ரூபாய் சரிகின்றது, பெரும் சிக்கலை நாடு எதிர்கொள்கின்றது

ஒரு டிவியாவது நல்ல நிபுணர்களை அழைத்து எப்படி சரி செய்யலாம் என விவாதம் நடத்துமா என்றால் இல்லை

சரி ஜிஎஸ்டியில் குதித்த குபீர் கோஷ்டிகளாவது வந்து டாலர் பற்றி பேசுமா என்றால், “டாலர்னா பழனியில் கிடைக்குமே அதுவா சரிந்தது? ” என்ற அளவில் அவர்கள் அறிவு இருகின்றது

நல்ல மீடியாக்கள் நிபுணர்களை அழைத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என விவாதித்து ஆலோசனைகளை மக்களுக்கு சொன்னால் வாழ்த்தலாம், அவர்கள் கடமையும் அதுதான்.

நாட்டுக்கு என்ன தேவையோ அதை ஒரு மீடியாவும் செய்வதில்லை மாறாக எதில் குழப்ப முடியுமோ அதை வைத்து நாட்டின் அமைதியினை மகா நன்றாக குழப்புகின்றார்கள்

நாடு நலம்பெற இந்த டிவிக்களை முதலில் முடக்க வேண்டும்…

இனி எந்த டிவியாவது அந்த வரி சரி இல்லை, இந்த முறை சரி இல்லை , இதனை இப்படி விற்க வேண்டும் என்றெல்லாம் யாராவது அல்லக்கை சும்மா பேசிகொண்டிருப்பதை ஒளிபரப்பினால், அந்த டிவி நிலையத்தை நொறுக்க வேண்டும்

பேராசிரியை நிர்மலாதேவியிடம் மூன்றரை மணி நேரம் குரல் பரிசோதனை

Image may contain: 1 person, sitting

பேராசிரியை நிர்மலாதேவியிடம் மூன்றரை மணி நேரம் குரல் பரிசோதனை

எந்த பிரபலத்திற்காக அம்மாணவியரை மூளை சலைவை செய்தார் என்ற விசாரணையினை நடத்துங்கள் என்றால் குரல் அவருடையதா? என விசாரிக்கின்றார்களாம்

குரல் அவருடையது என தெரியாமலா கைது செய்து அடைத்தார்கள்?

இதனிடையே ஆளுநரும் ஒரு கமிஷன் போட்டு விசாரித்து அந்த அறிக்கையினை அவரே வாங்கியும் கொண்டார்

அந்த அறிக்கையும் வராது, நிர்மலா யாருக்காக இந்த அந்தபுர தோழி வேலைபார்த்தார் என்ற தகவலும் வெளிவராது

வரும் செய்தி எல்லாம் இவர்தான் நிர்மலா தேவி, இவரின் குரல் இப்படித்தான் இருக்கும் அவ்வளவுதான்

இனி சில வழக்குகளில் இவர்தான் கொலையாளி ஆனால் யாரை கொன்றார்கள் என சொல்லமாட்டோம்

இவர்தான் திருடன் ஆனால் எங்கு எவ்வளவு கொள்ளை அடித்தார் என நாங்கள் சொல்லமாட்டோம் என விரைவில் சொல்வார்கள்

நாமும் திருடன் ஒழிக, கொலையாளி ஒழிக என சொல்லிவிட்டு வந்துவிட வேண்டியதுதான்

உலகத்து பெரும் போர்கள் எல்லாம் வியாபார கணக்கிலே நடப்பவை

Image may contain: one or more people, people sitting and indoor

இந்த உலகத்து பெரும் போர்கள் எல்லாம் வியாபார கணக்கிலே நடப்பவை, வீரத்தை காட்டும் போர் எல்லாம் கடல் கொண்ட லெமூரியா காலத்தோடு முடிந்தது

அலெக்ஸாண்டர் காலமுதல் இரண்டாம் உலகபெரும்போர் வரை எல்லாவற்றிலும் வியாபார கணக்கு இருந்தது, அது அல்லாது போரே இல்லை

இப்பொழுது டிரம்ப் அதற்கு தயாராவது போல் தெரிகின்றது, அவர் செய்த வரி விதிப்பு விஷயங்கள் உள்நாட்டிலே சர்ச்சையாகின்றன, ஹார்லி டேவிட்சன் போன்ற கம்பெனிகள் நடையினை கட்டிவிடுவோம் என எச்சரிக்கின்றன‌

இதுபோன்ற பல கம்பெனிகள் டிரம்பினை எச்சரிக்க்கின்றன அவரோ கொஞ்சமும் யோசிப்பதாக தெரியவில்லை

அங்கும் சிக்கல் வந்தாயிற்று.

உண்மையில் என்ன நடக்கின்றது என்றால் அமெரிக்கா சொந்த உற்பத்தியில் முண்ணணியில் இருந்ததெல்லாம் ஒரு காலம், டிவி முதல் கார்வரை அவர்களே செய்தார்கள் எல்லாம் நலமாயிருந்தது

இரண்டாம் உலகப்போருக்கு பின் அவர்களின் கண்ணசைவில் பெரும்பாலான தொழில்கள் தென்கொரியா,ஜப்பான், தைவான் கொஞ்சம் சீனா என மாற்றி கொண்டார்கள்

ஜப்பானின் மீதான அணுகுண்டு பழிக்கு அவர்கள் கோபம் எடுக்காமை, ரஷ்யா எல்லையில் அமெரிக்க பிடி இது போக சோவியத் யூனியனுக்கு எதிரான சீன ஆதரவு என பல கணக்குகள் உண்டு

தொழில்வாய்ப்பு இப்படி சென்றாலும் எண்ணெய் வியாபாரம் முதல் பல விஷயங்களில் டாலரை நிறுத்தினார்கள், இன்னும் பல மாயம் செய்தார்கள்

உண்மையில் 2008 பொருளாதர சிக்கலில் இருந்து அமெரிக்கா முழுக்க மீண்டுவிட்டதா என்றால் இல்லை, சமாளிக்கின்றார்களே தவிர நாடு இன்னும் நிதி சிக்கலிலேத்தான் இருக்கின்றது, இதனால்தான் ஒரு மாதிரி அலைகின்றார் டிரம்ப்

ஆனால் எண்ணெய் வியாபாரம் டாலரில் நடப்பது அவர்களின் பெரும் பலம்

இதற்கு குறுக்கே யார் வந்தாலும் சாய்த்தார்கள், சதாம் எல்லாம் அப்படித்தான் ஒழிக்கபட்டார். சவுதி குவைத் பஹ்ரைன் கத்தார் எல்லாம் அவர்களுக்கு பழனிச்சாமி ஆகின‌

ஈரான் தனித்து நிற்கின்றது, அது சிரியா ரஷ்ய கூட்டணியில் இருக்கின்றது

ஈரானின் எண்ணெயினை கொள்ளையிட அமெரிக்கா செய்த அத்தனை முயற்சிகளையும் அந்நாடு தடுத்துவிட்டது, நிச்சயம் ஆச்சரியம்

ஈரானை ஒரு நாள் அடிக்க வேண்டும் என அமெரிக்கா முடிவு செய்தாலும் மகா அவசரம் இஸ்ரேலுக்கு

ஈராக் , ஏமன், சிரியா என பலநாடுகளை கட்டுபடுத்தும் ஈரான் மிக நெருக்கமாக இஸ்ரேல் அருகில் வந்தாயிற்று, இனி யுத்தம் மூளும் நேரம் அது இஸ்ரேலுக்கு பெரும் ஆபத்து

தன் காலடியில் வந்துவிட்ட ஈரானை சிரியாவில் இஸ்ரேல் அடித்தாலும் ஈரான் அசைவதாக தெரியவில்லை, ஈரானை நொறுக்கியே தீரவேண்டும் என முடிவு செய்த இஸ்ரேல் அமெரிக்காவினை இழுக்கின்றது

வடகொரிய சர்ச்சையினையே இன்னும் தீர்க்காத அமெரிக்கா ஈரானை மண்டியிட செய்ய கடும் முயற்சி எடுக்கின்றது, ஆனால் தோல்வியே

முன்பே கடும் பொருளாதார தடைகள் நினைத்தபலனை அமெரிக்காவிற்கு கொடுக்கவில்லை, சிக்கல்களை சமாளித்து அது போக்கில் நிற்கின்றது ஈரான்

இதனால் இம்முறை மிக கடுமையான தடைகளை அறிவிக்க போகின்றது அமெரிக்கா அத்தோடு அதோடு உறவு வைக்கும் எல்லா நாடுகள் மேலும் பொருளாதார தடையாம்

இந்திய கணக்கு வேறு, பாகிஸ்தானில் சீனா கட்டிய துறைமுகத்திற்கு செக் வைக்க ஈரானில் சபாஹர் துறைமுகத்தை அமைத்திருக்கின்றது இந்தியா

ஈரானும் இந்தியாவில் அவசரகால எண்ணெய் குடோனை எல்லாம் அமைத்திருக்கின்றது, எளிதில் பிரிக்க முடியாதநாடு ஈரான்

ஆனால் சீனா, இந்தியா, துருக்கி, இலங்கை என ஈரானிடம் இருக்க்கும் கூட்டாளி நாடுகளிடம் எல்லாம் பொருளாதார தடை என மிரட்டுகின்றது அமெரிக்கா

இந்தியா மீது அத்தடை விதிக்கும் பட்சத்தில் சில சிக்கல்களை நாடு சந்திக்க நேரிடும். நிச்சயம் தடுமாறும்

ஈரான் போல எண்ணெய் வளமும் இல்லை ரஷ்யா சீனா போல தொழில்நுட்பமும் இங்கு இல்லை என்பதால் சிக்கல் வரும்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய பணமும் சரிகின்றது

இந்தியாவிற்கு சிக்கலான நேரம் ஈரானை விடவும் முடியாது, அமெரிக்காவினை எதிர்க்கவும் முடியாது

ஒருமாதிரியான ராஜ தந்திர நகர்வு வேண்டும், அதாவது சீனா ரஷ்யாவுடன் இணைந்து கூட்டு அறிக்கை போல செய்து எதனையாவது குழப்பி அடித்து அமெரிகாவினை திசை திருப்பலாம்

ஆனால் செய்வார்களா என்றால் சிக்கல், இப்பொழுதுதான் சீனா, ரஷ்யா என மோடி பறக்க வேண்டிய நேரம். ஆனால் அவரோ இப்பொழுதுதான் ஓய்வில் இருக்கின்றார்

முதலில் செய்யவேண்டியது உலக வங்கி எனும் உலக கந்துவட்டிகாரனிடம் வாங்கி இருக்கும் கடனை அடைப்பது, அதுதான் முக்கியம்

அதை முழுவதும் அடைக்காமல் இந்தியா நிமிர முடியாது. பல நாடுகள் அப்படித்தான் உலக வங்கியினை விரட்டியபின் நிமிர்ந்து நிற்கின்றன‌

சில லட்சம் கோடி கடனை இந்தியா அடைத்தால் நல்லது, என்ன செய்யலாம்?

இத்தேசத்தில் பணம் உண்டா என்றால் உண்டு, அரசியல்வாதிகளிடம் குவிந்திருக்கும் பணமே பல மடங்கு கடன்களை அடைத்து சில நாடுகளையே வாங்கும் அளவு இருக்கின்றது

ஆனால் அதிரடி நடவடிக்கைகள் தேவை

அதுவுமல்லாது மக்களே முன்வந்து அடைத்தால் இன்னும் நல்லது, ஒரு வங்கி கணக்கை திறந்து தேசத்தை மீட்போம் என ஆளாளுக்கு அள்ளிகொடுத்தால் நிச்சயம் விடிவு உண்டு

தேசத்தை மீட்போம் என்றொரு திட்டத்தை அறிவித்து மக்களிடம் நன்கொடை திரட்டுவது சிக்கலில்லை, இத்தேசம் அள்ளிதரும்

ஆனால் அதன்பின் அதன்மேலே ஊழல் சர்ச்சை வரும் அதற்கொரு கமிஷன் அமைக்க வேண்டும், வழக்கு விசாரணை என எல்லாம் நாசமாகும். இத்தேசத்தின் தலைவிதி அப்படி

தன் டாலரை நிலை நிறுத்த பெரும் போருக்கு தயாராகின்றது அமெரிக்கா, தன் பாதுகாப்பிற்காக அரேபியாவில் பெரும் போரை தொடக்கி ஈரானை நொறுக்க கிளம்பியிருக்கின்றது இஸ்ரேல்

நமக்கு தோல்வி என்றால் இஸ்ரேலும் அமெரிக்க முகாம்களும் அத்தோடு அமெரிக்க பழனிச்சாமிகளான சன்னி அரேபிய சுல்தான்களும் இருக்கவே கூடாது என வரிந்து கட்டுகின்றது ஈரான்

இச்சிக்கலில் இந்தியாவும் இழுபட்டு நிலமைகளை கவனிக்கின்றது

இம்மாதிரி நேரத்தில் இந்தியாவிற்கு வழிகாட்ட சாட்சாத் மன்மோகன், சிதம்பரம் போன்றோரால்தான் முடியும், மோடி அரசால் சுத்தமாக முடியாது என்பது பாஜக தலைவர்களே ஒப்புகொண்ட விஷயம்

ஏதேனும் ஒரு முடிவுக்கு மோடி அவசரமாக வந்து சில நகர்வுகளை செய்யாவிட்டால் தேசம் பெரும் சுழலில் சிக்கும்


ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது நிறுத்தபட்டால் ஈரானின் சபாஹரில் இந்தியா கட்டியிருக்கும் துறைமுகத்தில் இருந்து வெளியேற்றபடலாம்

அந்த இடத்தில் சீனா அமர்ந்து கொண்டால் இந்தியாவிற்கு மாபெரும் சிக்கல்

அமெரிக்காவிற்கு பயந்து பல தவறான முடிவுகளை எடுக்கின்றது மத்திய அரசு

மாநில அரசு மத்திய அரசுக்கு அடிமை, மத்திய அரசு அமெரிக்க அரசுக்கு அடிமை

இதற்கு நாம் நேரடியாக அமெரிக்காவோடு இந்தியாவினை 51ம் மாநிலமாக இணைக்க சொல்லிவிடலாம், நாமும் அமெரிக்க குடிமக்களாகிவிடலாம்

இந்தியாவும் வல்லரசாகிவிடும்


 

திருப்பதி ஜீயருக்கு சம்பள உயர்வு

Image may contain: 2 people, people on stage and people sitting

திருப்பதி ஜீயருக்கு சம்பள உயர்வு என்றவுடன் ஆளாளுக்கு பொங்குகின்றார்கள்

ஆனால் பால் தினகரன் சொத்து கணக்கோ, இல்லை வேறு சாமியார்களின் சொத்து கணக்கை பற்றி எல்லாம் பேசமாட்டார்கள்

வாடிகனின் தங்க குதிரை வண்டியில் தங்க கிரீடத்துடன் பவனி வருவார் போப்பாண்டவர், அது பற்றி எல்லாம் சொல்லமாட்டார்கள்

அரபு நாடுகளில் மத அறிஞர்களுக்கு இருக்கும் செல்வாக்கும் காணிக்கையும் ஏராளம், ஈரானில் கோமேனிகள் வைத்ததே சட்டம்

வேளாங்கண்ணி ஆலயத்தின் காணிக்கை கணக்கு கூட தெரியாத நாட்டில்தான் திருப்பதி ஜீயரின் சம்பள கணக்கு விமர்சிக்கபடுகின்றது

 


அடேய் ஜீயர் என்பது பிறப்புரிமை அதை எதிர்ப்போம், எல்லோரும் ஜீயர் ஆக முடியுமா? பகுத்தறிவு எங்கே? உழைப்பிற்கு மரியாதை எங்கே? சமத்துவம் எங்கே? என ஏகபட்ட கேள்விகள்

முதலில் கலைஞர் குடும்பம் தவிர யாரும் திமுக தலைவர் ஆக முடியுமா? இல்லை வீரமணி குடும்பம் தவிர யாரும் பெரியார் சொத்துக்கள் பக்கம் போகமுடியுமா? என்ற கேள்விக்கு விடை தேடிவிட்டு வாருங்கள்

அதுதான் பகுத்தறிவு அதுதான் சமதர்மம்

பெரியார் அறகட்டளைக்கு வீரமணி வாரிசும் திமுக சொத்துகளை கண்காணிக்கும் உயர்மட்டத்திற்கு கலைஞர் வாரிசும் வரலாமாம்

ஆனால் ஜீயர் என்பவர் திருப்பதி பக்கம் வர கூடாதாம்

போங்கடா டேய்…