உலக குத்துசண்டை சாம்பியன்களிலே 17 வயதிலே பட்டம் பெற்றவர் மைக் டைசன்

Image may contain: 1 person

பிறப்பிலே அவர் முரடர், அதுவும் தந்தை கைவிட்டு போனபின் தாயின் பாதுகாப்பில் வளரும்பொழுது அந்த பிஞ்சு மனமும் பாதிக்கபட்டது என்கின்றார்கள்

ஒரு வகையான விரக்தியிலே வளர்ந்தார், தாய் படும் துன்பங்கள் அவருக்குள் வெளிகாட்ட முடியாத கோபத்தை வளர்த்தன, அந்த கோபம் தெருவில் வெளிபட்டது

சிறுவயதிலே அடிதடிக்கு பெயர்பெற்றார், அவரின் கனத்த குரலையும் திக்கி பேசும் ஒரு மாதிரி ஸ்டைலையும் எல்லோரும் கிண்டல் செய்ய அவரின் வழக்கு எண்ணிக்கை அதிகரித்தது

13 வயதிலே 40 முறை கைதுசெய்யபட்டார், இதுவே தமிழகம் என்றால் இனம் காக்க வந்தவன் என்றோ இல்லை வருங்கால தமிழகம் என்றோ இல்லாவிட்டால் சாதி சங்கங்களோ அவனை எழுச்சி நாயகன் , புரட்சி நாயகன் ஆக்கி இருக்கும்

ஆனால் அமெரிக்கா அல்லவா? சிறுவர் சீர்திருத்தபள்ளிக்கு அனுப்பினார்கள், அங்கும் அடிதடி

ஆனால் அவன் அடிக்கும் அடியினை தற்செயலாக‌ பார்த்துகொண்டிருந்த ஒரு குத்துசண்டை பயிற்சியாளர், 15 வயது நிரம்பியிருந்த அவனின் சண்டையில் அசந்தார், அப்படியே அவனை தூக்கி கொண்டு போய் சண்டை சொல்ல்லி கொடுக்க தொடங்கினார்

(இறுதி சுற்று படத்தில் இதே காட்சி வேறு வகையில் வைக்கபட்டிருக்கும்)

இயல்பிலே யாரையாவது போட்டு சாத்தும் இயல்புடைய அந்த குத்துசண்டை வீரன் அதன்பின் காட்டாற்று வெள்ளத்தை அடக்கி அணையில் இருந்து வெளியேறும் வெள்ளமாக பொங்க தொடங்கினான்

குத்து சண்டை உலகம் 16 வயதே ஆன அவனை ஆச்சரியமாக பார்த்தது, மைக் டைசன் என கத்த ஆரம்பித்தது

உலக குத்துசண்டை சாம்பியன்களிலே 17 வயதிலே பட்டம் பெற்றவர் அவர்தான், அடி என்றால் அப்படி ஒரு அடி

அதுவும் 20 வயதிற்குள்ளே முதல்நிலை வீரரானார், என பல அமைப்புகள் நடத்திய குத்துசண்டையின் ஒட்டுமொத்த சாம்பியன் என்ற பெருமை இன்றுவரை அவருக்குத்தான் உண்டு

1980 முதல் 1990 வரையான காலகட்டங்களில் குத்துசண்டை அவரின் கட்டுபாட்டில் இருந்தது, தனது பிரத்யோக ஸ்டைலான ஹூக் குத்தினை அவர் குத்தும்பொழுது அரங்கம் அதிர்ந்தது

இரண்டாம் முகமது அலி என கொண்டாடபட்டார்

ஆனால் 1990க்கு பின் அவரின் மனநிலையில் பாதிப்பு இருந்தது, குத்து சண்டை என்பது வளையத்திற்குள் போட வேண்டியது என்பதை மறந்து எல்லா இடங்களிலும் குத்த ஆரம்பித்தார்

விளைவு வீழ்ச்சியினை தொடங்கினார்

அவருக்குள் இருந்த அரக்கன் அவ்வப்போது விழித்த்தான், கற்பழிப்பு போன்ற வழக்குகளில் சிக்கினார்

அவரின் குத்துசண்டை ஸ்டைலுக்காகவும் அந்த உடற்கட்டிற்காகவும் ஏகபட்ட பெண்கள் அவரை சுற்றி சுற்றி வந்தனர், ஆயினும் ஏன் கற்பழிப்பு வழக்கில் சிக்கினார் என்பதுதான் ஆச்சரியம், அது அவரை வீழ்த்த செய்யபட்ட சதி என்ற பேச்சுக்களும் உண்டு

இன்னொன்று அமெரிக்காவின் சில சமூக அமைப்புகளும் அவருக்கு விரக்தியினை கூட்டின‌

முகமது அலி போலவே மன அமைதிக்காகவும், அமெரிக்க இனவெறுப்பாலும் இஸ்லாமிற்கு மாறினார்

கிறிஸ்தவம் எப்படி இந்திய சாதியிடம் தோற்றதோ அப்படி அமெரிக்க இனவெறியிடமும் தோற்றது, உண்மையில் இஸ்லாம் இவற்றில் எல்லாம் வெற்றியும் பெற்றது

அவ்வழக்கில் தண்டனை பெற்று வந்தபின் அவரால் பிரகாசிக்க முடியவில்லை, ஹோலிபீல்டுடன் மோதும்பொழுது அவரின் காதை கடித்து துப்பி சர்ச்சையில் சிக்கினார்

அதன் பின் டைசன் எழவில்லை, அப்படியே 2005ம் ஆண்டு குத்துசண்டையில் இருந்து வெளியேறினார்

நிச்சயம் டைசன் மாபெரும் குத்துசண்டை வீரன், சந்தேகமில்லை 17 வயதிலே உலகினை திரும்பிபார்க்க வைத்த மாவீரன்

ஆனால் முறையற்ற வாழ்வு அவரின் எதிர்காலத்தை சீரழித்தது, முகமது அலிக்கு பின் மாபெரும் இடத்தினை பிடித்திருக்க வேண்டிய டைசன் 100 வீரர்களில் 16ம் இடத்தையே பிடித்தார்

எவ்வளவு திறமையும் தகுதியும் உள்ளவனாயினும் கட்டுபாடும் ஒழுக்கமும் இல்லாவிட்டால் என்னாகும் என்பதற்கு டைசனை தவிர யாரையும் சொல்ல முடியாது

மாபெரும் எதிர்காலத்தை தன் முரட்டு குணத்தாலும், முன்யோசனை இல்லா ஒழுக்க குறைவாலும் கெடுத்துகொண்டவர்

குத்துசண்டை அமைப்பு அவருக்கு 16ம் இடம் கொடுத்தாலும், உலக ரசிகர்கள் மனதில் அவர் தனி இடம் பிடித்தே இருக்கின்றான்

அவருக்கு இன்று பிறந்த நாள், வாழ்த்துக்கள் டைசன்

உங்களிடம் ஒரே ஒரு கோரிக்கை மிஸ்டர் டைசன், கிரிக்கெட்டர் கோலி விடுத்த சேலஞ்சினை எங்கள் பிரதமர் ஏற்றிருக்கின்றார்

நீங்களும் அவருக்கு குத்துசண்டைக்கு ஒரு சேலன்ஞ் வையுங்கள், என்ன தொகை என்றாலும் கொடுக்க இந்தியா தயார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s