நாடு நலம்பெற இந்த டிவிக்களை முதலில் முடக்க வேண்டும்…

மோடியின் பல்வேறு நடவடிக்கைகளை விமர்சித்தவர்களை, குறிப்பாக ஜிஎஸ்டி பற்றி எல்லாம் பெரும் பொருளாதார வித்வான்கள் போல குதித்தவர்களை எல்லாம் இப்பொழுது ரூபாய் சரிவில் காணவில்லை

பொருளாதார நோக்கில் அது ஜிஎஸ்டி கொண்டு வரபட்டபொழுது தமிழக டிவிக்களில் பல குபீர் பொருளாதார நிபுணர்கள் தோன்றினார்கள்

ஜிஎஸ்டி என்றால் புலிகளின் அரிசி கப்பல் போல என நினைத்துகொண்ட அங்கிள் சைமன் எல்லாம் சில டிவியில் வந்து குதித்த கொடுமை நடந்தது

சாலையில் தூங்குபவன், பார்க் பெஞ்சில் மல்லாக்க கிடப்பவன், ஓசி டீக்கு ஏங்கி நிற்பவன் எல்லாம் தமிழக டிவிக்களில் வந்து பொருளாதார பாடம் நடத்தினார்கள்

இதோ இந்திய ரூபாய் சரிகின்றது, பெரும் சிக்கலை நாடு எதிர்கொள்கின்றது

ஒரு டிவியாவது நல்ல நிபுணர்களை அழைத்து எப்படி சரி செய்யலாம் என விவாதம் நடத்துமா என்றால் இல்லை

சரி ஜிஎஸ்டியில் குதித்த குபீர் கோஷ்டிகளாவது வந்து டாலர் பற்றி பேசுமா என்றால், “டாலர்னா பழனியில் கிடைக்குமே அதுவா சரிந்தது? ” என்ற அளவில் அவர்கள் அறிவு இருகின்றது

நல்ல மீடியாக்கள் நிபுணர்களை அழைத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன என விவாதித்து ஆலோசனைகளை மக்களுக்கு சொன்னால் வாழ்த்தலாம், அவர்கள் கடமையும் அதுதான்.

நாட்டுக்கு என்ன தேவையோ அதை ஒரு மீடியாவும் செய்வதில்லை மாறாக எதில் குழப்ப முடியுமோ அதை வைத்து நாட்டின் அமைதியினை மகா நன்றாக குழப்புகின்றார்கள்

நாடு நலம்பெற இந்த டிவிக்களை முதலில் முடக்க வேண்டும்…

இனி எந்த டிவியாவது அந்த வரி சரி இல்லை, இந்த முறை சரி இல்லை , இதனை இப்படி விற்க வேண்டும் என்றெல்லாம் யாராவது அல்லக்கை சும்மா பேசிகொண்டிருப்பதை ஒளிபரப்பினால், அந்த டிவி நிலையத்தை நொறுக்க வேண்டும்

பேராசிரியை நிர்மலாதேவியிடம் மூன்றரை மணி நேரம் குரல் பரிசோதனை

Image may contain: 1 person, sitting

பேராசிரியை நிர்மலாதேவியிடம் மூன்றரை மணி நேரம் குரல் பரிசோதனை

எந்த பிரபலத்திற்காக அம்மாணவியரை மூளை சலைவை செய்தார் என்ற விசாரணையினை நடத்துங்கள் என்றால் குரல் அவருடையதா? என விசாரிக்கின்றார்களாம்

குரல் அவருடையது என தெரியாமலா கைது செய்து அடைத்தார்கள்?

இதனிடையே ஆளுநரும் ஒரு கமிஷன் போட்டு விசாரித்து அந்த அறிக்கையினை அவரே வாங்கியும் கொண்டார்

அந்த அறிக்கையும் வராது, நிர்மலா யாருக்காக இந்த அந்தபுர தோழி வேலைபார்த்தார் என்ற தகவலும் வெளிவராது

வரும் செய்தி எல்லாம் இவர்தான் நிர்மலா தேவி, இவரின் குரல் இப்படித்தான் இருக்கும் அவ்வளவுதான்

இனி சில வழக்குகளில் இவர்தான் கொலையாளி ஆனால் யாரை கொன்றார்கள் என சொல்லமாட்டோம்

இவர்தான் திருடன் ஆனால் எங்கு எவ்வளவு கொள்ளை அடித்தார் என நாங்கள் சொல்லமாட்டோம் என விரைவில் சொல்வார்கள்

நாமும் திருடன் ஒழிக, கொலையாளி ஒழிக என சொல்லிவிட்டு வந்துவிட வேண்டியதுதான்

உலகத்து பெரும் போர்கள் எல்லாம் வியாபார கணக்கிலே நடப்பவை

Image may contain: one or more people, people sitting and indoor

இந்த உலகத்து பெரும் போர்கள் எல்லாம் வியாபார கணக்கிலே நடப்பவை, வீரத்தை காட்டும் போர் எல்லாம் கடல் கொண்ட லெமூரியா காலத்தோடு முடிந்தது

அலெக்ஸாண்டர் காலமுதல் இரண்டாம் உலகபெரும்போர் வரை எல்லாவற்றிலும் வியாபார கணக்கு இருந்தது, அது அல்லாது போரே இல்லை

இப்பொழுது டிரம்ப் அதற்கு தயாராவது போல் தெரிகின்றது, அவர் செய்த வரி விதிப்பு விஷயங்கள் உள்நாட்டிலே சர்ச்சையாகின்றன, ஹார்லி டேவிட்சன் போன்ற கம்பெனிகள் நடையினை கட்டிவிடுவோம் என எச்சரிக்கின்றன‌

இதுபோன்ற பல கம்பெனிகள் டிரம்பினை எச்சரிக்க்கின்றன அவரோ கொஞ்சமும் யோசிப்பதாக தெரியவில்லை

அங்கும் சிக்கல் வந்தாயிற்று.

உண்மையில் என்ன நடக்கின்றது என்றால் அமெரிக்கா சொந்த உற்பத்தியில் முண்ணணியில் இருந்ததெல்லாம் ஒரு காலம், டிவி முதல் கார்வரை அவர்களே செய்தார்கள் எல்லாம் நலமாயிருந்தது

இரண்டாம் உலகப்போருக்கு பின் அவர்களின் கண்ணசைவில் பெரும்பாலான தொழில்கள் தென்கொரியா,ஜப்பான், தைவான் கொஞ்சம் சீனா என மாற்றி கொண்டார்கள்

ஜப்பானின் மீதான அணுகுண்டு பழிக்கு அவர்கள் கோபம் எடுக்காமை, ரஷ்யா எல்லையில் அமெரிக்க பிடி இது போக சோவியத் யூனியனுக்கு எதிரான சீன ஆதரவு என பல கணக்குகள் உண்டு

தொழில்வாய்ப்பு இப்படி சென்றாலும் எண்ணெய் வியாபாரம் முதல் பல விஷயங்களில் டாலரை நிறுத்தினார்கள், இன்னும் பல மாயம் செய்தார்கள்

உண்மையில் 2008 பொருளாதர சிக்கலில் இருந்து அமெரிக்கா முழுக்க மீண்டுவிட்டதா என்றால் இல்லை, சமாளிக்கின்றார்களே தவிர நாடு இன்னும் நிதி சிக்கலிலேத்தான் இருக்கின்றது, இதனால்தான் ஒரு மாதிரி அலைகின்றார் டிரம்ப்

ஆனால் எண்ணெய் வியாபாரம் டாலரில் நடப்பது அவர்களின் பெரும் பலம்

இதற்கு குறுக்கே யார் வந்தாலும் சாய்த்தார்கள், சதாம் எல்லாம் அப்படித்தான் ஒழிக்கபட்டார். சவுதி குவைத் பஹ்ரைன் கத்தார் எல்லாம் அவர்களுக்கு பழனிச்சாமி ஆகின‌

ஈரான் தனித்து நிற்கின்றது, அது சிரியா ரஷ்ய கூட்டணியில் இருக்கின்றது

ஈரானின் எண்ணெயினை கொள்ளையிட அமெரிக்கா செய்த அத்தனை முயற்சிகளையும் அந்நாடு தடுத்துவிட்டது, நிச்சயம் ஆச்சரியம்

ஈரானை ஒரு நாள் அடிக்க வேண்டும் என அமெரிக்கா முடிவு செய்தாலும் மகா அவசரம் இஸ்ரேலுக்கு

ஈராக் , ஏமன், சிரியா என பலநாடுகளை கட்டுபடுத்தும் ஈரான் மிக நெருக்கமாக இஸ்ரேல் அருகில் வந்தாயிற்று, இனி யுத்தம் மூளும் நேரம் அது இஸ்ரேலுக்கு பெரும் ஆபத்து

தன் காலடியில் வந்துவிட்ட ஈரானை சிரியாவில் இஸ்ரேல் அடித்தாலும் ஈரான் அசைவதாக தெரியவில்லை, ஈரானை நொறுக்கியே தீரவேண்டும் என முடிவு செய்த இஸ்ரேல் அமெரிக்காவினை இழுக்கின்றது

வடகொரிய சர்ச்சையினையே இன்னும் தீர்க்காத அமெரிக்கா ஈரானை மண்டியிட செய்ய கடும் முயற்சி எடுக்கின்றது, ஆனால் தோல்வியே

முன்பே கடும் பொருளாதார தடைகள் நினைத்தபலனை அமெரிக்காவிற்கு கொடுக்கவில்லை, சிக்கல்களை சமாளித்து அது போக்கில் நிற்கின்றது ஈரான்

இதனால் இம்முறை மிக கடுமையான தடைகளை அறிவிக்க போகின்றது அமெரிக்கா அத்தோடு அதோடு உறவு வைக்கும் எல்லா நாடுகள் மேலும் பொருளாதார தடையாம்

இந்திய கணக்கு வேறு, பாகிஸ்தானில் சீனா கட்டிய துறைமுகத்திற்கு செக் வைக்க ஈரானில் சபாஹர் துறைமுகத்தை அமைத்திருக்கின்றது இந்தியா

ஈரானும் இந்தியாவில் அவசரகால எண்ணெய் குடோனை எல்லாம் அமைத்திருக்கின்றது, எளிதில் பிரிக்க முடியாதநாடு ஈரான்

ஆனால் சீனா, இந்தியா, துருக்கி, இலங்கை என ஈரானிடம் இருக்க்கும் கூட்டாளி நாடுகளிடம் எல்லாம் பொருளாதார தடை என மிரட்டுகின்றது அமெரிக்கா

இந்தியா மீது அத்தடை விதிக்கும் பட்சத்தில் சில சிக்கல்களை நாடு சந்திக்க நேரிடும். நிச்சயம் தடுமாறும்

ஈரான் போல எண்ணெய் வளமும் இல்லை ரஷ்யா சீனா போல தொழில்நுட்பமும் இங்கு இல்லை என்பதால் சிக்கல் வரும்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய பணமும் சரிகின்றது

இந்தியாவிற்கு சிக்கலான நேரம் ஈரானை விடவும் முடியாது, அமெரிக்காவினை எதிர்க்கவும் முடியாது

ஒருமாதிரியான ராஜ தந்திர நகர்வு வேண்டும், அதாவது சீனா ரஷ்யாவுடன் இணைந்து கூட்டு அறிக்கை போல செய்து எதனையாவது குழப்பி அடித்து அமெரிகாவினை திசை திருப்பலாம்

ஆனால் செய்வார்களா என்றால் சிக்கல், இப்பொழுதுதான் சீனா, ரஷ்யா என மோடி பறக்க வேண்டிய நேரம். ஆனால் அவரோ இப்பொழுதுதான் ஓய்வில் இருக்கின்றார்

முதலில் செய்யவேண்டியது உலக வங்கி எனும் உலக கந்துவட்டிகாரனிடம் வாங்கி இருக்கும் கடனை அடைப்பது, அதுதான் முக்கியம்

அதை முழுவதும் அடைக்காமல் இந்தியா நிமிர முடியாது. பல நாடுகள் அப்படித்தான் உலக வங்கியினை விரட்டியபின் நிமிர்ந்து நிற்கின்றன‌

சில லட்சம் கோடி கடனை இந்தியா அடைத்தால் நல்லது, என்ன செய்யலாம்?

இத்தேசத்தில் பணம் உண்டா என்றால் உண்டு, அரசியல்வாதிகளிடம் குவிந்திருக்கும் பணமே பல மடங்கு கடன்களை அடைத்து சில நாடுகளையே வாங்கும் அளவு இருக்கின்றது

ஆனால் அதிரடி நடவடிக்கைகள் தேவை

அதுவுமல்லாது மக்களே முன்வந்து அடைத்தால் இன்னும் நல்லது, ஒரு வங்கி கணக்கை திறந்து தேசத்தை மீட்போம் என ஆளாளுக்கு அள்ளிகொடுத்தால் நிச்சயம் விடிவு உண்டு

தேசத்தை மீட்போம் என்றொரு திட்டத்தை அறிவித்து மக்களிடம் நன்கொடை திரட்டுவது சிக்கலில்லை, இத்தேசம் அள்ளிதரும்

ஆனால் அதன்பின் அதன்மேலே ஊழல் சர்ச்சை வரும் அதற்கொரு கமிஷன் அமைக்க வேண்டும், வழக்கு விசாரணை என எல்லாம் நாசமாகும். இத்தேசத்தின் தலைவிதி அப்படி

தன் டாலரை நிலை நிறுத்த பெரும் போருக்கு தயாராகின்றது அமெரிக்கா, தன் பாதுகாப்பிற்காக அரேபியாவில் பெரும் போரை தொடக்கி ஈரானை நொறுக்க கிளம்பியிருக்கின்றது இஸ்ரேல்

நமக்கு தோல்வி என்றால் இஸ்ரேலும் அமெரிக்க முகாம்களும் அத்தோடு அமெரிக்க பழனிச்சாமிகளான சன்னி அரேபிய சுல்தான்களும் இருக்கவே கூடாது என வரிந்து கட்டுகின்றது ஈரான்

இச்சிக்கலில் இந்தியாவும் இழுபட்டு நிலமைகளை கவனிக்கின்றது

இம்மாதிரி நேரத்தில் இந்தியாவிற்கு வழிகாட்ட சாட்சாத் மன்மோகன், சிதம்பரம் போன்றோரால்தான் முடியும், மோடி அரசால் சுத்தமாக முடியாது என்பது பாஜக தலைவர்களே ஒப்புகொண்ட விஷயம்

ஏதேனும் ஒரு முடிவுக்கு மோடி அவசரமாக வந்து சில நகர்வுகளை செய்யாவிட்டால் தேசம் பெரும் சுழலில் சிக்கும்


ஈரானிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது நிறுத்தபட்டால் ஈரானின் சபாஹரில் இந்தியா கட்டியிருக்கும் துறைமுகத்தில் இருந்து வெளியேற்றபடலாம்

அந்த இடத்தில் சீனா அமர்ந்து கொண்டால் இந்தியாவிற்கு மாபெரும் சிக்கல்

அமெரிக்காவிற்கு பயந்து பல தவறான முடிவுகளை எடுக்கின்றது மத்திய அரசு

மாநில அரசு மத்திய அரசுக்கு அடிமை, மத்திய அரசு அமெரிக்க அரசுக்கு அடிமை

இதற்கு நாம் நேரடியாக அமெரிக்காவோடு இந்தியாவினை 51ம் மாநிலமாக இணைக்க சொல்லிவிடலாம், நாமும் அமெரிக்க குடிமக்களாகிவிடலாம்

இந்தியாவும் வல்லரசாகிவிடும்


 

திருப்பதி ஜீயருக்கு சம்பள உயர்வு

Image may contain: 2 people, people on stage and people sitting

திருப்பதி ஜீயருக்கு சம்பள உயர்வு என்றவுடன் ஆளாளுக்கு பொங்குகின்றார்கள்

ஆனால் பால் தினகரன் சொத்து கணக்கோ, இல்லை வேறு சாமியார்களின் சொத்து கணக்கை பற்றி எல்லாம் பேசமாட்டார்கள்

வாடிகனின் தங்க குதிரை வண்டியில் தங்க கிரீடத்துடன் பவனி வருவார் போப்பாண்டவர், அது பற்றி எல்லாம் சொல்லமாட்டார்கள்

அரபு நாடுகளில் மத அறிஞர்களுக்கு இருக்கும் செல்வாக்கும் காணிக்கையும் ஏராளம், ஈரானில் கோமேனிகள் வைத்ததே சட்டம்

வேளாங்கண்ணி ஆலயத்தின் காணிக்கை கணக்கு கூட தெரியாத நாட்டில்தான் திருப்பதி ஜீயரின் சம்பள கணக்கு விமர்சிக்கபடுகின்றது

 


அடேய் ஜீயர் என்பது பிறப்புரிமை அதை எதிர்ப்போம், எல்லோரும் ஜீயர் ஆக முடியுமா? பகுத்தறிவு எங்கே? உழைப்பிற்கு மரியாதை எங்கே? சமத்துவம் எங்கே? என ஏகபட்ட கேள்விகள்

முதலில் கலைஞர் குடும்பம் தவிர யாரும் திமுக தலைவர் ஆக முடியுமா? இல்லை வீரமணி குடும்பம் தவிர யாரும் பெரியார் சொத்துக்கள் பக்கம் போகமுடியுமா? என்ற கேள்விக்கு விடை தேடிவிட்டு வாருங்கள்

அதுதான் பகுத்தறிவு அதுதான் சமதர்மம்

பெரியார் அறகட்டளைக்கு வீரமணி வாரிசும் திமுக சொத்துகளை கண்காணிக்கும் உயர்மட்டத்திற்கு கலைஞர் வாரிசும் வரலாமாம்

ஆனால் ஜீயர் என்பவர் திருப்பதி பக்கம் வர கூடாதாம்

போங்கடா டேய்…


 

ராமசந்திரனை பற்றி என்ன ஆய்வு செய்வார்கள்?

Image may contain: 2 people

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர். கலை சமூக ஆய்வு இருக்கை – முதல்வர் அறிவிப்பு

அப்படியே ஜாணகியின் முன்னாள் கணவன் கணபதி, சோபன் பாபு போன்றோருக்கும் ஒரு ஆய்வு இருக்கை இருந்தால் நல்லது

வள்ளுவன் முதல் கம்பன், பாரதி என எத்தனையோ அடையாளம் இருக்க, யாருக்கு ஆய்வு இருக்கை பார்த்தீர்களா?

சமூகம் என்றால் பெரியார் செய்யாத விஷயங்களா?

ராமசந்திரனை பற்றி என்ன ஆய்வு செய்வார்கள்? நடித்து நாட்டை கெடுப்பது எப்படி என்றா?

சட்டமன்றம் கரகாட்ட மேடையாகிவிட்டது என்பது மட்டும் புரிகின்றது

(அந்த தாய்லாந்து நடிகையுடன் ராமசந்திரன் ஆடிய பச்சைகிளி முத்துசரம் பாடலுக்கு நாம் ஒரு ஆய்வுகட்டுரை சமர்பிக்கலாம் என முடிவு செய்தாயிற்று

உதட்டை சுழித்தல், நாயகி கையினை முறுக்கி தோளினை பிய்த்து எடுத்தல் போன்ற காட்சிகளில் கடும் ஆய்வு செய்ய வேண்டி இருக்கின்றது..)

ராமேஸ்வரத்தில் கிடைக்கபெற்ற ஆயுதங்கள் மிரட்சியினை ஏற்படுத்துகின்றன

ராமேஸ்வரத்தில் கிடைக்கபெற்ற ஆயுதங்கள் மிரட்சியினை ஏற்படுத்துகின்றன, ராஜிவ் கொலைக்கு பின் தடை செய்யபட்ட நிலையிலும் புலிகளுக்கு இங்கிருந்து ஆயுதங்கள் சென்று கொண்டே இருந்திருக்கின்றன‌

ராமேஸ்வரம் மீணவர்களை சிங்களபடை ஏன் விரட்டியது என்பதற்கும், இறுதி யுத்தத்தில் பழ.நெடுமாறன் அனுப்பிய கப்பலை ஏன் சிங்களம் தடுத்தது என்பதற்கும் இனி விடை தெரியாமல் இருந்தால்தான் ஆச்சரியம்

அந்த அளவு தமிழகம் அவர்கள் களமாக இருந்திருக்கின்றது, புலிகளின் பணம் விளையாடி இருக்கின்றது, எல்லா வகை ஆயுதங்களும் சிலரின் வாய்களையும் புலிகளால் இங்கு வாங்கி இருக்க முடிகின்றது

ஒரு வேளை ஈழம் அமைந்திருந்தால் என்னாயிருக்கும்?

காவேரி வரவில்லையா? ஸ்டெர்லைட்டா? 8 வழிச்சாலையா? அதே ஆயுதங்கள் இங்கே இந்தியாவிற்கு எதிராக திருப்பிட பட்டிருக்கும்

மாபெரும் அழிவுகள் இங்கே நிகழ்ந்திருக்கும்

ராமேஸ்வரம் மட்டுமல்ல இன்னும் ஏராளமான இடங்களில் இதே ஆயுதபுதையல் அகபடலாம், அவ்வப்போது சிக்கும் பொறுத்து பாருங்கள்

(அடிக்கடி ஏ.கே 47, ஏகே 74 சுட்டு பழகினேன் என சொல்லிகொண்டே இருக்கும் சைமனுக்கும் சில இடங்கள் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு, பிரபாகரனுக்கும் அவருக்குமான நெருக்கம் அப்படி)

துருக்கியின் சக்திமிக்க அதிபர் எர்டோகன்

புட்டீன் வரிசையில் துருக்கியின் சக்திமிக்க அதிபராகிவிட்ட எர்டோகன் தன் அதிரடியினை தொடங்கிவிட்டார்

ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்காதே, மீறி வாங்கினால் .. என அமெரிக்கா மிரட்ட, அட்டகாசமாக அதன் கையினை தட்டிவிடுகின்றார் எர்டோகன்

ஈரான் எம் சகோதர நாடு, இதில் தலையிட அமெரிக்காவிற்கு உரிமை இல்லை என அவர் சொன்னதில் அதிர்ந்து போய் இருக்கின்றது அமெரிக்கா

துருக்கி அதிபர் அப்படி

நமக்கும் ஒருவர் வாய்த்திருக்கின்றாரே, என்ன செய்வது???

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

Image may contain: 1 person, close-upதவ வலிமையால் கட்டபட்ட யோகிகள் மனம் இந்த முகத்தை பார்த்ததும் எப்படி சரியுமோ….

 

அப்படி சரிகின்றது இந்திய ரூபாயின் மதிப்பு


இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு 69.10 குறைந்து வரலாறு காணாத வீழ்ச்சி

இந்தியா தன் பொருட்களுக்கு வரிவிதிப்பதை ஏற்றுகொள்ள முடியாத அமெரிக்கா இப்படித்தான் அடிக்கும்

சீனா போல திருப்பி அடிக்க பொருளாதார வலுவோ இல்லை ரஷ்யா, ஈரான் போல எண்ணெய் வளமோ இந்தியாவில் இல்லை

ஒரு மாதிரி சமாளித்து செல்லவேண்டிய விஷயங்கள் இவை, இன்னும் நிர்வாகத்தை சீர்படுத்தாவிட்டால் மகா சிரமம்.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 70ஐ தாண்டினால் சிவப்பு சமிக்கை, 75ஐ நெருங்கினால் திவால் என அர்த்தம்

டாலர் மதிப்பு உயர்ந்தால் இந்தியா இறக்குமதி செய்யும் எல்லா பொருளும் உயரும், எண்ணெய் விலையும் உயரும்

இந்திய பணத்தால் எதையும் வாங்கமுடியா சூழல் உருவாகும்

அப்படி ஆகிவிட்டால் 1998ல் இந்தோனேஷியாவில் கொளுத்தியது போல ரூபாய் நோட்டுக்களை கொளுத்திவிடுவதை தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாது

எந்த ஆட்சியிலும் இல்லாத மாபெரும் வீழ்ச்சியினை கொடுத்திருகின்றார்கள், இவ்வளவிற்கும் மாபெரும் உலக‌ சிக்கல் எல்லாம் உருவாகவில்லை எல்லாம் சாதகமாகவே இருந்தன‌

சல்லிவிலையில் எண்ணெய் கொடுக்க அரபு நாடுகள் இருக்க அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்க முடிவெடுத்தது, ஜிஎஸ்டி என வறுத்தெடுத்து தொழில் முடக்கத்தை ஏற்படுத்தியது

மத கலவரம் முதல் ரூபாய் நோட்டுக்கு சிக்கல் என ஒரு திகிலை உண்டு செய்து நாட்டை பரபரப்பிலே வைத்திருந்தது என எல்லாமும் சேர்ந்து நாட்டை வீழ்த்திகொண்டிருக்கின்றது

இனி வரும் காலம் இந்தியாவிற்கு சோதனையான காலமாகவே இருக்கும்

இந்த அரசால் அதை சமாளிக்க முடியுமா என தெரியவில்லை.


அண்ணாமலை திரைப்படம் வந்து 25 ஆண்டுகள் கடந்தது

Image may contain: 3 people, text

“அண்ணாமலை” படம் வந்து நேற்றோடு 25 ஆண்டுகள் முடிந்தததாக ரஜினியின் ரசிகர்கள் சொல்லிகொண்டிருந்தனர்

ரஜினிக்கு பெரும் புகழ் சேர்த்தபடம் அது சந்தேகமில்லை, ஆனால் உண்மையில் அது ஒரு பெண்ணிய படம். பெண் போராட்ட படம், பாழ்பட்ட தமிழகத்தில் அது ரஜினியின் வியாபார வெற்றிபடமானது

அதன் குறியீடுகள் மிக நுட்பமாக கவனிக்கதக்கவை.

அந்த படத்தின் கதை என்னவென்றால், நவநாகரீக இளம்பெண் ஒருத்தி ஒரு அப்பாவி பால்காரனை காதலால் மணம் செய்து கொள்கின்றாள். அவன் குடிசையில் தயக்கமின்றி வாழ்கின்றாள்.

மாடும் பாலுமாக சுற்றிகொண்டிருந்த அவள் கணவன் நண்பனால் ஏமாற்றபட்டு நடுதெருவிற்கு வந்தபின்னால் அவனோடு இருந்து அவனின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு அவனை தொழிலதிபர் ஆக்கி அவன் சவாலில் வெல்ல வைக்கின்றாள் என்பதுதான் கதை

அந்த இளம்பெண்ணை சுற்றித்தான் கதை களம், அவள் பெரும் படிப்பு படித்தவள் ஆனால் ஒரு அப்பாவியினை காதலித்த பாவத்திற்காக அவனோடு மாடு மேய்கின்றாள், பால் கறக்கின்றாள், சாணி அள்ளுகின்றாள், வறட்டி தட்டுகின்றாள், பால் கோவா கிண்டுகின்றாள்

அதுவல்லாமல் தன் மகள் எதிரியின் மகனை காதலிக்கின்றாள் என்றவுடன் அந்த பால்கார கணவன் பக்கமே நிற்கின்றாள்

அவன் ஊதிதள்ளும் சிகரெட்டில் அவளின் உழைப்பும் இருக்கின்றது, ஆனால் கொஞ்சமும் அந்த காசு புகையாய் போவதில் அவள் கவலையடவில்லை, கண்டிக்கவில்லை.

அவனின் மகிழ்சி அவளுக்கு அவ்வளவு முக்கியம்

கணவனின் சவால் போராட்டத்தில் கனவில் மட்டுமே பழம் நினைவுகளுடன் தன்னை சமாதானபடுத்துகின்றாள், கனவிலே சைக்கிள் ஓட்டி மகிழ்கின்றாள். அதாவது தன் பணக்கார கணவன் அந்த அப்பாவி பால்காரனாகவே அவள் மனதில் இருக்கின்றான் அந்த அளவு நேசிக்கின்றாள்

இப்படியாக அப்பெண்ணின் பாத்திரத்தை சுற்றியே கதை நகர்கின்றது.

ஒரு இடத்திலும் கூட “ஏண்டா சனியனே, அந்த பத்திரத்தில் கையெழுத்தினை படித்துவிட்டு போடு என சொன்னேனே, கேட்டியா முட்டாளே..” என அப்பெண் சொல்லவே இல்லை

அப்படி கண்ணகி, சீதை, என பல இதிகாச பாத்திரங்களின் சாயலாக அப்பெண்ணின் கதாபாத்திரம் அமைக்கபட்டிருந்தது

படத்தில் பார்த்து சிரிக்க, அழ, உருக, இறுதியில் நீ வென்றுவிட்டாய் அம்மா என கைகொடுக்க ஒரு கதாபாத்திரம் உண்டென்றால் அந்த கதாநாயகி பாத்திரமே

இந்த பால்காரன் வேடத்தில் ரஜினி என்பவர் நடித்திருந்தார், நிச்சயமாக அது ராமராஜனுக்கு பொருத்தமான வேடம் அவர்தான் நடித்திருக்க வேண்டும்,

ராஜ்கிரன் கூட நடித்திருக்கலாம் ஆனால் ரஜினிக்கு கொடுத்துவிட்டார்கள்

அந்த கதையினை தாங்கி நிற்கும் இளம்பெண் வேடத்தில் தலைவி குஷ்பு பின்னியிருந்தார். அவரை தவிர யாரும் அந்த கனமான வேடத்தை சுமக்க முடியாது.

காதலில் விழுவது, அவன் பால்காரன் என ஏமாற்றம் அடைந்தாலும் தமிழர் பண்பாட்டுபடி அவனே கணவன் என ஏற்று கொள்வது, மாட்டு பண்ணையில் கஷ்டபடுவது, மாமியாரை மதிப்பது, கணவனின் லட்சியம் நிறைவேற உழைப்பது என அத்தனை வேடங்களிலும் பின்னி இருந்தார்

அதுவும் கிளைமேக்ஸில் கணவன் தன் சவாலில் வென்றுவிட்ட பின்னாலும், நண்பனின் சொத்துக்களை ஒப்படைக்கும்பொழுது அவனின் நல்ல‌ குணத்தையும் அவன் வென்றுவிட்ட கர்வத்தையும் அப்படியே தன் முகத்தில் காட்டும் போது மிக சிறந்த நடிப்பினை கொடுத்திருந்தார்.

பராசக்தி நாகாம்பாளுக்கு பின் தமிழகம் கண்ட அற்புத நடிப்பு அது

விருது கொடுக்க வேண்டிய நடிப்பு, ஆனால் பாவி உலகம் கொடுக்கவில்லை.

நிச்சயம் அது குஷ்பு படம், பல காட்சிகள் அவரை சுற்றி இன்னும் வைத்திருக்க வேண்டும், அவர் மாட்டுபண்ணையில் கஷ்டபடும் காட்சி, குழந்தை வளர்க்க சிரமபடும் காட்சி எல்லாம் டைரக்டர் காட்டவில்லை.

அந்த பாவத்திற்கு பின்னால் பாபா படத்தில் மொத்தமாக வாங்கி கட்டினார் சுரேஷ் கிருஷ்ணா, பின் ஆண்டவன் என ஒருவன் இருக்கின்றான் அல்லவா? விடுவானா?

இந்த படத்தின் பெண் பாத்திரம் பேசபட்டிருக்க வேண்டும் ஆனால் படக்குழு சதி செய்தது, பின்னாளில் கேரள இயக்குநர் அத்தவறை திருத்தி கஸ்தூரிமான் என படமாக எடுத்திருந்தார், அப்படம் விருதுகளை வென்றது

(ஒரு பெண்ணிய கதை இப்படி சிதைக்கபட்டது பற்றி எந்த பெண்ணும், ஏன் பெண்ணுரிமை போராளிகளும் வாய் திறக்கவே இல்லை

ஏன் என்றால் பூரா பொறாமை பிடிச்சவளுக, பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பது இதுதான்)

நண்பனால் ஏமாற்றபட்டு தெருவுக்கு வந்த ஒரு பைத்தியகார பால்காரனை, ஒரு பெண் எப்படி தேவதையாக வந்து தாங்கி அவனை வெற்றிபெற செய்தாள் என்பதுதான் படத்தின் மைய‌ கதை.

அண்ணாமலை படத்தில் ஒரு பாடலில் இஸ்ரேலிய மோஷே தயான் ஸ்டைலில் ஒற்றை கண்ணோடு வந்து நிற்பார் ரஜினி கொஞ்சமும் ஒட்டவில்லை

ஆனால் வெள்ளை ஆடையில் குஷ்பு வந்தபொழுது சாட்சாத் யூத பெண்களின் தெய்வீக அழகு தெரிந்தது

ரஜினி ரசிகர்கள் ஒருபக்கம் அண்ணாமலை வந்து 25 ஆண்டுகள் கொண்டாடுகின்றார்கள், உண்மையில் அவர்களுக்கு உரிமையே இல்லை

முழு உரிமையும் குஷ்பு ரசிகர்களுக்கே இருக்கின்றது.

காரணம் தலைவி இல்லை என்றால் அண்ணாமலை அன்றே காலியாகி இல்லை “காலா”வாகி இருக்கும்

அதனால் சங்கமும் அந்த 25ம் ஆண்டுவிழாவினை உற்சாகமாக கொண்டாடுகின்றது, ரஜினி ரசிகர்கள் யாரும் இருந்தால் சேர்ந்து கொள்ளலாம் ஆட்சேபனை இல்லை.

 

அடேய் மோடி சொம்புகளா

Image may contain: 2 people, people sittingஎன்ன மோடி, நாமளும் 4 வருஷமா ஆள்றோம், அப்பெல்லாம் இல்லாமல் இந்தவருஷம் மட்டும் இந்திராவின் எமர்ஜென்ஸியினை அதிகம் பேசுகின்றீர்களே ஏன்?

அப்போழுதுதானே, இன்னும் சில மாதங்களில் நாம் எமர்ஜென்ஸி கொண்டுவந்தாலும் சரியாக இருக்கும். டாலர் ஏறி ரூபாய் தமிழக பாஜகவாக படுத்துவிட்டது, பெரும் குழப்பம் வரலாம், அதனால் முன்னமே சொல்லி வைக்க வேண்டுமா இல்லையா?

இந்திரா போலவா நாட்டுக்காக என்று எமர்ஜென்ஸி கொண்டுவருவீர்கள்? நம்புவார்களா?

அட அழுது ஆர்பரிச்சி, உருண்டு புரண்டு இது சத்தியமாக நாட்டுக்கான்னு நம்ப வச்சி கொண்டுவந்துருவேன் , நம்மகிட்ட இருக்கிற கடைசி ஆயுதம் கண்ணீர்தான”


Image may contain: 3 people, people playing musical instruments

அடேய் மோடி சொம்புகளா

இந்திய ரூபாய் வீழ்ச்சி அடையவில்லை, அதெல்லாம் பொய் செய்தி என உங்களை நீங்களே சமாதான படுத்திகொள்ளலாம் ,

அதை எம்மிடம் சொல்லவேண்டாம்

உங்களுக்கும் டைட்டானிக் கப்பல் மூழ்கும்ப்பொழுது பாட்டு பாடிகொண்டிருந்த இசை கோஷ்டிக்கும் ஒரு வித்தியாசமுமில்லை

பயவுள்ளைகள் நாடு மூழ்கும் பொழுதும் “மோடி வாழ்க..” என சொல்லியே மூழ்கடிக்கின்றன‌


Image may contain: 1 person“யோவ் நிதி அமைச்சரே, என்னய்யா டாலர் ஏறிகிட்டே போகுது, அவனுகளுக்கு என்ன வேணுமாம், பேசாம நம்ம ரூபாய் செல்லாதுன்னு சொல்லிருவோமா? செல்லாத நோட்டை எந்த டாலருக்கு மாத்த முடியும்னு பாத்திருவோம், மோடியா கொக்கா?

தல, நாம நேரடியா டாலரே செல்லாதுன்னு அறிவிச்சுருவோமா? தக்காளி கதறுவாம்ல‌

ம்ம்… அப்போ 5 ஆயிரம் பத்தாயிரம் நோட் அடிக்க ரெடி பண்ணுங்க, இன்னைக்கு ராத்திரியே பூசை போட்டுறலாம்

1 டாலர் 5 ஆயிரம் ரூபாய்னாலும் வாங்குறோம், நாட்டுல குவிக்கிறோம், இல்லண்ணா இங்கேயே டாலர் அடிக்கிறோம் மேக் இன் இந்தியான்னு””