பழனிச்சாமி வீட்டில் அத்துமீறி நுழைந்த வாலிபர்கள்

Image may contain: 4 people, beard and selfie

பழனிச்சாமி வீட்டில் அத்துமீறி நுழைந்த வாலிபர்கள் என ஒரு பரபரப்பு ஏற்பட்டது

விஷயம் என்னவென்றால் அவர்கள் சொல்வது இதுதான், அந்த வாலிபர்கள் 4 பேரும் காரில் ஏறி காவேரி மருத்துவமனை செல்ல முயன்றார்களாம், வழி தெரியவில்லையாம்

இந்நேரம் பழனிச்சாமி காவேரிக்கு செல்வார் எனும் செய்தி கிட்டியிருக்கின்றது, முதலமைச்சர் கார் பின்னால் சென்றால் காவேரியினை அடைந்துவிடலாம் என பின் சென்றிருக்கின்றார்கள்

ஆனால் முதல்வர் காவேரியிலிருந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்திருக்கின்றார், ஆனால் இவர்களோ அவர் மருத்துவமனைக்கு செல்கின்றார் என அவர் வீட்டிற்கு உள்ளே காரோடு நுழந்திருக்கின்றார்கள்

அதற்குள் போலிஸ் தடுத்துவிட்டது, இல்லாவிட்டால் எங்கே கலைஞர் என உள்ளே ஓடி தேடியிருப்பார்கள்

முதல்வர் வீட்டில் அத்துமீறல் என்றால் சும்மாவா?

நக்சலைட் கும்பல் , தினகரன், சசிகலா முதல் மன்சூர் அலிகான், சீமான் அட பன்னீர் கோஷ்டி வரை முதல்வருக்கு எத்தனை எதிரிகள்?

இதனால் காவல்துறை அவர்களை முறைபடி விசாரிக்க இவ்வளவு விவரம் தெரிந்திருகின்றது

ஆனாலும் பழனிச்சாமிக்கு இந்த அலம்பல் மிக‌ அதிகம்தான்

அவர் பின்னால் இப்படி வழி தவறி வந்த 4 பேர் இல்லாமல் மொத்த தமிழகமுமா திரண்டு வரும்?

வழிதவறி 4 பேர் பழனிச்சாமி பின்னால் வந்ததே பெரிய விஷயம், அவர்களை பிடித்து ஆனந்த கண்ணீர் விடாமல் இப்படியா பழனிச்சாமி மிரட்டுவார்?

சிலை செய்ததில் 50 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற இணை ஆணையாளர் கவிதா கைது

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமஸ்கந்தர் சிலை செய்ததில் 50 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற இணை ஆணையாளர் கவிதா கைது : பரபரப்பு

மிக பரபரப்பான வழக்கில் இணை ஆணையரே கைது செய்யபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருகின்றது

இந்து அறநிலையதுறை புரையோடிபோய் இருக்கின்றது என்பது நன்றாக தெரிகின்றது, முறையாக விசாரித்தால் இன்னும் ஏராளமானவர்களை அள்ளலாம்

எப்படியோ தமிழக ஆலயங்களுக்கும், தெய்வ சிலைகளுக்கும் விடிவு வந்துவிட்டது தெரிகின்றது. இனி எல்லாம் சரியாகும்

தமிழக தெய்வங்கள் விழித்துவிட்டன, இப்படி வாக்காளனும் விழித்துகொண்டால் தமிழகத்திற்கு மிக நல்லது.

விகடனில் கமலஹாசன் சுவாரஸ்ய பேட்டி

நாயகன் படம் ஆஸ்காருக்கு சென்றபொழுது நான் ஸ்ருதியுடன் எம்ஜிஆரை காண சென்றேன், சுருதி கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார் : விகடனில் கமலஹாசன் சுவாரஸ்ய பேட்டி

நாயகன் படம் வந்தது 1986ம் ஆண்டு அக்டோபரில், சுருதி பிறந்தது ஜனவரி 1986

அப்பொழுது சுருதி 1 வயது குழந்தை

இதில் ஆஸ்காருக்கு நாயகன் சென்ற வருடம் 1988, 1987 டிசம்பர் 24லே ராமசந்திரன் காலி

ஆக 1 வயது குழந்தையுடன் செத்து போன ராமசந்திரனை சந்தித்தேன், அக்குழந்தை திருஞான சம்பந்தர் போல பேசியது என அள்ளிவிடுகின்றார் கமல்

ஏன் அப்படி?

அரசியல் வாதி ஆகிவிட்டால் பொய் சொல்ல வேண்டும், அதற்காக இப்படி அள்ளிவிட்டால் எப்படி?

ஒருவேளை என்ன நடந்திருக்கலாம்?

சரிகாவிற்கும் வாணிக்கும் இடையில் ஏதோ ஒரு பெண் கமல் வாழ்வில் இருந்திருக்கின்றாள், அப்பெண் பெயர் சுருதியாக இருந்திருக்கலாம்

அவரோடு ராமசந்திரனிடம் ஆசிவாங்க கமல் சென்றிருக்கலாம், இப்பொழுது கமல் குழப்பத்தில் இருப்பதால் அப்பெண் இந்த சுருதி என அள்ளி விடலாம்

எனினும் இந்த கமலஹாசனிடம் இதுபற்றி கேட்பதை விட செத்துபோன ராமசந்திரனை எழுப்பி கேட்பது எளிது

கலைஞரை சந்திக்க வருகின்றார் ராகுல் காந்தி

கலைஞரை சந்திக்க வருகின்றார் ராகுல் காந்தி

நேரு சுதந்திரத்திற்கு பாடுபட்ட காலத்திலே அரசியலுக்கு வந்தார் கலைஞர், பின்னாளில் நேருவினை பகிரங்கமாக எதிர்த்தார்

அதுவும் திமுகவினரை நேரு “நான்சென்ஸ்” என்றபொழுது, உமக்கு “நோ சென்ஸ்” என கலைஞர் சீற, இந்தியாவே கலைஞரை உற்று நோக்கியது

சர்வ சக்தி படைத்த, யாரும் எதிர்க்க பயந்த நேருவினை துணிந்து அன்றே எதிர்த்தவர் கருணாநிதி

ஆயினும் சீனபோரை தொடர்ந்து திமுக திராவிட நாடு கோரிக்கையினை கைவிட்டபொழுது, நேருவுக்கும் திமுகவிற்கும் புரிந்துணர்வு வந்தது.

அன்று இந்திராவினை விட ராஜிவின் தந்தை பெரோஸ் காந்தே மீது கலைஞருக்கு அபிமானம் இருந்தது, இன்றுள்ள சில சிறப்பு சட்டங்கள் வர பெரோஸ்காந்திதான் காரணம்

பத்திரிகை தொடர்பான சட்டங்கள் அவை.

இந்திராவினை எதிர்ப்பதும் , ராஜதந்திரமாக பின் வாங்குவதுமாக அவர் அரசியல் நடந்தது

ராஜிவ் கலைஞரை எதிரியாக கருதி ஜெயாவிடம் கூட்டணி வைக்க, கலைஞருக்கும் ராஜிவிற்கும் கூட்டணி வாய்ப்பின்றி போனது

ஈழவிவகாரங்களில் கலைஞரின் ஆலோசனையினை கேட்டிருந்தால் ராஜிவ் வரலாற்றில் நின்றிருப்பார். ஆனால் ஜெயா கும்பல் கேட்க விடவில்லை

பின்னாளில் சோனியா அதிமுகவின் ஆபத்தான முகத்தை உணர்ந்து கலைஞருடனே அரசியல் கூட்டணி வைத்திருந்தார்

ஆக கிட்டதட்ட 4 தலைமுறைகள், அதாவது 80 ஆண்டுகளாக இந்தியாவின் மிக பெரும் அரசியல் குடும்பத்தில் எல்லா தலைமுறைகளுடன் கரம் பிடித்து வருவது எவ்வளவு பெரும் விஷயம்

அந்த நேரு குடும்பத்தை ஆதரிப்பதும், எதிர்ப்பதுமாக அரசியல் செய்த தலைவன் இந்தியாவில் கலைஞரை தவிர யாருமில்லை

ஈரானுடன் பேச்சுவார்த்தை தயார் : டிரம்ப்

இந்த டிரம்ப் வடகொரிய பதற்றத்தை எப்படி முடித்தாரோ அப்படி ஈரான் பதற்றத்தையும் முடிக்க அதே ஸ்டைலில் இறங்கி வந்திருக்கின்றார்

எப்படி?

“ஈரானுடன் பேச்சுவார்த்தை தயார் , அவர்கள் விரும்பினால் வரலாம் நிபந்தனை இன்றி பேசலாம்” என சிக்னல் காட்டிவிட்டார்

இதற்கு ஈரான் சொன்னதுதான் இன்றைய உலகில் பரபரப்பு

“அமெரிக்காவிற்கு நிபந்தனை இல்லாமல் இருக்கலாம், ஆனால் நாங்கள் நிபந்தனையுடன் மட்டும் பேசவருவோம், ஒப்புகொள்வார்களா?” என ஈரான் கேட்டுவிட்டது

எப்படிபட்ட அதிரடியான பதில், ஈரான் அப்படித்தான்

கலைஞர் : உடலாலும் பலருக்கு அதிசயமே

Image may contain: 1 person, sitting10 வருடங்களுக்கு முன்பு கலைஞருக்கு முதுகு தண்டில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது, வயது 80 தாண்டி இருந்ததால் பலத்த கவனமாக அந்த சிகிச்சை நடந்தது

வயதால் முதிர்ந்தவர் எப்படி வலியினை எதிர்கொள்ள போகின்றாரோ என அஞ்சியபடியே மருத்துவகுழு அவர் கண்விழித்தவுடன் எதிர்கொண்டது

“அவ்வளவுதானா? முடிந்ததா? எப்பொழுது நான் கிளம்பலாம்..” என அசால்ட்டாக கேட்ட கலைஞரை மகா அதிசயமாக பார்த்தது அந்த மருத்துவ குழு

டைனோசரை பார்த்தது போல பார்த்தார்கள்

மனிதர் உடலாலும் பலருக்கு அதிசயமே

அந்த நேரத்தில் ஒரு மருத்துவர் கேட்டாராம் “வலி எப்படி இருக்கின்றது”

கலைஞர் சொன்னார் “அம்மா என அலற வேண்டு போலிருக்கின்றது, ஆனால் என் நிலமையில் அப்படி அலறமுடியாது”

அது அம்மா என ஜெயாவினை அவர்கள் வணங்கி கொண்டிருந்த நேரம்..

அந்த வலியினையும் அந்த இறுக்கமான சூழலையும் தன் சாதுர்யத்தால் சிரிப்பொலியாக மாற்றி கடந்து சென்றவர் கலைஞர்


கருணாநிதி சிகிச்சை விவரம் வெளியாவதில் தாமதம்: காரைக்காலில் அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு

இதற்கு நிச்சயம் அறிவாலயத்தில்தான் தண்டம் வசூலிக்க வேண்டும், செய்வாரா பழனிச்சாமி??


பிராமணர் அல்லாத அர்ச்சகர் வர வேண்டும் என்பது பெரியாரின் கணவு

Image may contain: one or more people, sky and outdoor

பிராமணர் அல்லாத அர்ச்சகர் வர வேண்டும் என்பது பெரியாரின் கணவு

அண்ணாவின் திட்டம் , கலைஞரின் செயலாக்கம்

ஆனால் அது நடந்திருப்பது பழனிச்சாமியின் ஆட்சியில் என்பதுதான் ஆச்சரியம்

திசைமாறி போனாலும் அதிமுக ஒரு திராவிட கட்சி என்பதை நிரூபித்துவிட்டது என அவர்கள் சொல்லிகொள்ளலாம்

பிராமணர் அல்லாதோர் அர்ச்சகர் ஆவது நிச்சயம் பெரும் விஷயம், பல்லாயிரம் ஆண்டுகளில் முதன் முதலாக நடக்கும் ஆச்சரியம்

இதுதான் புரட்சி

நிச்சயம் பெரும் விஷயமாக கொண்டாடபட வேண்டிய, பெரும் ஆரவாரத்தோடு அறிவிக்கபட வேண்டியதை பழனிச்சாமி அரசு சோற்றுக்குள் முட்டை போல மறைத்து வைக்கின்றது

ஏன் என்றால் விஷயத்தை பெரிதாக்கினால் அது கலைஞருக்கு பெருமை சேர்ப்பது என்பதை தவிர வேறு என்ன இருக்க முடியும்?

1969 முதல், பெண் சொத்துரிமை, வள்ளுவர் கோட்டம் என ஏராளான திட்டங்களை அறிவிப்பார் கலைஞர் ஆனால் அது எல்லாம் நடைமுறைக்கு வருவது இன்னொரு ஆட்சியாக இருக்கும்

அதற்காக கலைஞர் துளியும் வருந்தியதுமில்லை, இது என் திட்டம் என சொல்லிகொண்டதுமில்லை

திராவிட கட்சிகளின் ஆட்சியினை கூர்ந்து பார்த்தால் அதிமுக எனும் கட்சிக்கு ஒரு நாளும் சுயசிந்தனை இருந்ததில்லை கலைஞரின் திட்டங்களை காப்பி அடித்தே ஆட்சி செய்த இயக்கம் அது

இதெல்லாம் செய்யும் பழனிச்சாமி அரசு, கலைஞரின் கனவான புதிய சட்டமன்ற கட்டிடத்தில் சட்டமன்றத்தை இயக்கலாம்

அந்த கலைஞரின் கனவு நூலகத்தையும் நல்ல முறையில் பராமரிக்கலாம்

ஜெயா செய்த திமிர் பிடித்த அராஜக அட்டகாசங்களுக்கெல்லாம் அவரிடம் அடங்கி இருந்து அதை பார்த்துகொண்டிருந்த‌ பழனிசாமி பரிகாரங்களை தேடட்டும்

சென்னை விமான நிலையம் விரிவாக்க படுகின்றது

Image may contain: 1 person

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை வழங்கும் சட்ட மசோதா நிறைவேறியது

சில வருடங்களுக்கு முன் இச்சட்டம் வந்திருந்தால் காளிமுத்து மகளை காப்பாற்றி இருக்கலாம், அந்த லவுடு ஸ்பீக்கர் இம்சையினையும் தூக்கில் போட்டிருக்கலாம்


அந்த ஆளு தலையில கல்ல தூக்கி போட்டாலும் சாகமாட்டார் போலிருக்கின்றது

இந்த தும்பிகளும் நேரம்பார்த்து நம்மை இழுத்துவிடுது, இன்னொரு “முன் ஜாமீன்” வாங்கிகொள்வது நமக்கு நல்லது….


சென்னை விமான நிலையம் விரிவாக்க படுகின்றது, தொடக்க விழாவில் கலந்து கொள்ள பிரதமருக்கு அழைப்பு

எதற்கு அழைப்பு? கருப்பு கொடி காட்டி கருப்பு பலூன் பறக்கவிடவா?

இங்கே மோடி என கத்திவிட்டு அங்கே சென்று காவேரி கொடு, அதை கொடு இதை கொடு என்றால் எப்படி கிடைக்கும்? அவரும் மனதிற்குள் என்றுதான் சொல்வார், 8 வழி என்ன 16 வழிசாலையும் வரும்

பின் பழனிச்சாமி அரசை நீட்டிக்க செய்து தமிழகத்தை பழிவாங்குவார், அதை தவிர அவருக்கும் வாய்பில்லை

சரி இப்பொழுது விமான நிலையம் கட்டபோகின்றார்களாம்

இதையாவது ஒழுங்காக கட்டட்டும், ஏற்கனவே கட்டபட்ட நிலையம் 73 முறை இடிந்து விழுந்து இந்தோனேஷிய ஜப்பான் நிலநடுக்கம் போல தொடர்கதையாக தொடர்கின்றது


கலைஞர் உடல்நிலையினை விமர்சித்து பதிவு இட்ட நாம் தமிழர் கட்சிக்காரர் கைது : செய்தி

பதிவு இட்டவனை கைது செய்துவிட்டார்கள்,அவன் காதில் கலைஞர் இன துரோகி என சொல்லி சொல்லி விஷம் ஏற்றிய கட்சி தலைவன் சைமனை ஏன் விட்டுவிட்டார்கள்?

அவனை அல்லவா பிடித்து முதலில் உள்ளே போட வேண்டும்.


ஸ்ரீரெட்டி தனது நடிப்பு மற்றும் நடனத்திறனை நிரூபித்தால் வாய்ப்புத் தர தயார்: ராகவா லாரன்ஸ்

மிஸ்டர் லாரன்ஸ், அந்த அம்மணி என்ன என் நடிப்பு மற்றும் ஆட்ட‌ திறனை பார்த்தும் லாரன்ஸ் என்னை ஏமாற்றினார் என்றா சொல்லிகொண்டிருக்கின்றது?

அவரிடம் என்ன திறமை கண்டீரோ, எந்த திறனை சோதித்தீரோ? அந்த திறமைக்கு வாய்ப்பு கொடும் அய்யா…

அம்மணியின் கோரிக்கை மற்றும் மிரட்டலே அதுதானே


ஒவ்வொரு போரும் அழிவினை ஏற்படுத்தும், பல விளைவுகளை ஏற்படுத்தும்

சில போர்களினால் கொள்ளை நோய்களும், விபரீத நோய்களும் பரவும் என்பது உலக நியதி

இந்த ஈழப்போர் முடிந்து அது கிளப்பிய நோய் சைமனும் அவரின் தும்பிகளும்

இந்த ரேபிஸ் வெறிநாய்கடி போன்ற நோய் இது, மகா அவசரமாக இந்த நோய் கண்டவர்களை தனிமைபடுத்தி மண்டையில் போட்டால் தவிர இப்போதைக்கு தீர்வில்லை


மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கின்றார் பிரணாயி விஜயன்

ஒரு தீவிர கம்யூனிஸ்ட், கியூபா ரஷ்யா, சீனா செல்லாமல் அமெரிக்கா செல்வது அவர்களின் இயக்கத்திற்கு எவ்வளவு பெரும் இழுக்கு?

கம்யூனிசத்தின் எதிரி நாட்டிற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் சிகிச்சைக்கு செல்கின்றாராம்

கம்யூனிஸ்ட் கொள்கைகள் ஊருக்கு ஊர் வேறுபடும் போலிருக்கின்றது.


மாவீரன் தீரன் சின்னமலை : வீர வணக்கமும், அஞ்சலிகளும்

Image may contain: 1 person, horse

அவர் பெயர் தீர்த்தகிரி, எல்லா பயிற்சிகளையும் முடித்து பெரும் வீரரானார், முதலில் வேட்டைக்காரர்தான் ஆனால் நல்ல மனதும் இருந்தது

சில ஏழைகளுக்கு உதவ அவரிடம் பணம் இல்லை, அப்பொழுது மைசூர் சாம்ராஜ்யம் திண்டுக்கல் வரை பரவியிருந்தது, அந்த வரிப்பணம் செல்லும் பாதையில் வந்து வீரர்களிடம் பணம் பறித்து, சிவன் மலைக்கும் சென்னிமலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்தான் என சொல் என பொடரியில் அடித்து விரட்டு அந்த ஏழைகளுக்கு உதவினார்.

பின் வரியினை வெள்ளையன் பறிக்கவந்தபொழுதும் பெரும் படைதிரட்டி அவனை அச்சுறுத்தினார், அப்பக்கம் வெள்ளையன் காலூன்ற முடியவில்லை

பின் காலங்கள் மாறி திப்பு ஆங்கிலேயருக்கு எதிராக பெரும் யுத்தம் தொடங்கியபொழுது அவனுக்கு பக்கபலமாய் இருந்தார், திப்புவின் வெற்றிகளில் சின்னமலைக்கும் பங்கு உண்டு

திப்பு சுல்தானுக்கும் பிரெஞ்ச் மாவீரன் நெப்போலியனுக்கும் நல்ல தொடர்பு இருந்தது, திப்புவின் பெருமையும் மதிநுட்பமும் அவனின் ஏவுகனைகளும் நெப்போலியனை வியப்பில் ஆழ்த்தின, நான் பிரான்ஸ் திப்பு சுல்தான், திப்பு இந்தியாவின் நெப்போலியன் என சொல்லிகொண்டான்.

திப்புவிற்கு பல உதவிகளை செய்ய அவன் முன்வந்தான், அப்படி திப்புவின் பிரதிநிதிகள் மாவீரன் நெப்போலியனை காணசென்றபொழுது சின்னமலையினையும் அழைத்தார்கள் அவரோ தன் தளபதி கருப்பசேர்வை என்பவரை அனுப்பினார்

திப்புவுடன் சேர்ந்தும், திப்புவிற்கு பின்னரும் பெரும் யுத்தம் நடத்தினார் சின்னமலை, ஆங்கிலேயர் அவருக்கு அஞ்சினர்

திப்புவினை முதலி வீழ்த்திவிட்டு சின்னமலையினை குறிவைத்தனர், முந்திகொள்ள நினைத்த சின்னமலை போராளிகளை எல்லாம் திரட்டி, திப்புவின் எஞ்சிய படையினை திரட்டி கோவை முகாமினை தாக்க திட்டமிட்டார்

அதுமட்டும் வெற்றிகரமாக முடிந்திருந்தால் ஆங்கிலேயபடைகளுக்கு அடியாக இருந்திருக்கும், ஆனால் சில தகவல் தொடர்பு சரியில்லா காரணத்தால் சிலர் முந்திகொள்ள அந்த முயற்சி தோற்றது

ஆயினும் அஞ்சவில்லை சின்னமலை, அவரின் கவனெம்ல்லாம் எப்படியாவது நெப்போலியன் உதவிபெற்று ஆங்கிலேயரை ஓட அடிப்பதில் இருந்தது, வெள்ளையர் அதனை முறியடிக்க தீவிரமாய் இறங்கினர்

வீரத்தில் வெல்லமுடியா சின்னமலையினை சமையல்காரனுக்கு லஞ்சம் கொடுத்து சாதித்தனர், மிக நுட்பமாக பிடிக்கபட்டார் சின்னமலை

கொஞ்சம் தாமதித்திருந்தால் அவருக்கு பிரெஞ்ச் படை உதவியிருக்கும், வரலாறு மாறியிருக்கும் ஆனால் விதி அதுவல்ல‌

இதே நாளில் அந்த மாவீரனை தூக்கிலிட்டார்கள். வெள்ளையனுக்கு கோவை பகுதியில் சிம்ம சொப்பணமாக விளாங்கிய அந்த மாவீரன் இந்த நாளில்தான் இறந்தான்

அவன் இறந்தாலும் அவரின் வீரமும், அவர் பெற்ற பல வெற்றியும், கொஞ்சமல்ல, மாவீரன் நெப்போலியனிடம் கவனம் பெற்ற வீர இந்தியர்களில் சின்னமலைக்கு நிச்சயம் இடம் உண்டு

வீரம் வீரத்தை விரும்பும் என்பது அதுதான்

நாட்டிற்காய் போராடிய அம்மாவீரன் இன்று ஒரு சாதி அடையாளமாக சுருங்கிவிட்டதுதான் பெரும் கொடுமை.

அந்த மாவீரனுக்கு சாதி வோட்டுக்காக பல அரசியல் தலைவர்களும் அவனுக்கு அஞ்சலி செலுத்த வருவார்கள், அதில் மாநில முதல்வரும் இருப்பார் என்பதுதான் கொடுமை

அவன் வேறுசாதி, அவன் தளபதி இன்னொரு சாதி, அவனின் படைகளில் நாயக்கன், மராட்டியன், கன்னடன் என எல்லா மக்களும் இருந்தார்கள் , அவன் படை எல்லா சாதிகளையும் கொண்டிருந்தது

அந்த மாவீரனைத்தான் இன்று சாதி அடையாளத்தில் வைத்திருக்கின்றார்கள், பெரும் கொடுமை

அந்த ஓடாநிலை கோட்டை, சங்ககிரி கோட்டை அவனின் மாவீரத்தை சுமந்தபடி இன்றும் நிலைபெற்று நிற்கின்றது

அந்த மாவீரனுக்கு வீர வணக்கமும், அஞ்சலிகளும்.

இந்திய குடியுரிமை கொண்டவர்கள்

அசாம் எல்லைபுற மாகாணம், வங்க தேசம் பர்மா போன்ற நாடுகளில் இருந்து மக்கள் சட்டவிரோதமாக வந்து தங்க வசதியான இடம்

இப்பிரச்சினை நெடுநாளாக நடந்தது, கலவரங்கள் கூட நடந்தன‌

இப்பொழுது சிக்கலை தீர்க்கும் விதமாக மக்களை அடையாளபடுத்தும் பொருட்டு பதிவு செய்ய சொல்லிவிட்டது அரசு

பதிவென்றால் இந்திய குடியுரிமை கொண்டவர்கள்தானே பதிய முடியும், அப்படி கிட்டதட்ட 40 லட்சம் பேர் பதியமுடியவில்லை

அவர்கள் இந்தியர் அல்ல என்பது முடிவாயிற்று, விஷயம் பாராளுமன்றம் வரை எதிரொலிக்கின்றது

உரிய ஆவணம் இல்லாதவர்களை பெற சொல்லி அவகாசம் கொடுத்திருந்தும் அவர்களால் பெறமுடியவில்லை என்பதால் 40 லட்சம் பேர் சட்டவிரோதமாகவா குடியிருகின்றார்கள் என்ற பெரும் சர்ச்சை வெடிக்கின்றது

இவர்கள் யார்? திருப்பி அனுப்பபடுவார்களா? இந்தியா பராமரிக்குமா என ஏகபட்ட கேள்விகள்

(உங்களுக்கு நாங்கள் குடியுரிமை கொடுத்தால் எங்களுக்கு வாக்களிப்பீர்களா? எனும் சில்லறை அரசியலும் ஆங்காங்கு நடப்பதாக செய்திகள்)

அசாமிலே இப்படி என்றால் காஷ்மீர் போன்ற எல்லை மாகாணம், இன்னும் பல மாகாணங்களில் எவ்வளவு பேர் சட்டவிரோதமாக தங்கி இருப்பார்களோ என்ற கலக்கம் அரசுக்கு ஏற்பட்டாயிற்று

ஆக ஒழுங்காக கணக்கெடுக்கபடும் பட்சத்தில் இந்திய மக்கள் தொகை 100 கோடிக்கு கீழேதான் வரும் போலும்

எந்த நாட்டு மக்களை எல்லாமோ சேர்த்துகொண்டு உலகின் இரண்டாம் மக்கள்தொகை கொண்ட நாடு என நாமே சொல்லிகொண்டிருக்கின்றோம்