வசீகரத்தாலும், எளிமையாலும், சேவையாலும் உலகை வென்றெடுத்த பெண்களில் முதன்மையாவர் டயானா

Image may contain: 1 person, child, close-up and outdoor

கடந்த நூற்றாண்டில் அரசியல், பொதுசேவை, விஞ்ஞானம், ஊழல்,கொலை,கொள்ளை என பல துறைகளில் முத்திரை பதித்த பெண்கள் உண்டு, அதில் தன் வசீகரத்தாலும், எளிமையாலும், சேவையாலும் உலகை வென்றெடுத்த பெண்களில் முதன்மையாவர் டயானா

ஒரு விசித்திரமான பெண்மணி அவர், அதனை விட மகா விசித்திரமானது அவர் வாழ்வு

எந்த பெருமைக்கும், புகழுக்கும், பதவிக்கும் ஆசைபட்டு தன் சுதந்திரத்தை தொலைக்காமல் , தான் விரும்பிய வாழ்வினை வாழ்ந்தவர் அவர், அவரின் பலமும் அது, பல்வீனமும் அதுவே

சிறுவயதில் பள்ளிக்கு செல்லவில்லை, ஆசிரியர்தான் வீட்டுக்கு வந்தார், பள்ளியினை அவர் பாத்ததே 10 வயதில்தான். மிக சுதந்திரமாக வளர்ந்தார், எங்கோ இல்லத்தரசியாக, உலகின் மிக மகிழ்வான பெண்ணாக வாழ்ந்துகொண்டிருக்க வேண்டிய அவருக்கு விதி யார் உருவில் வந்ததென்றால் உடன் பிறந்த அக்கா உருவில்

Image may contain: 1 person, smiling, close-upஆம், அந்த ஜெகதலபிரதாபன் சார்ள்ஸ்க்கு கிழவிகள் முதல் குமரிகள் வரை தோழிகள் உண்டு, அதில் ஒருவர் டயானாவின் சகோதரி சாராவும் ஒருவர், சாராவோடு அவர் பழகிய நாட்களில் அவர் கண்ணில் பட்டவர்தான் டயானா

வசந்த மாளிகை சிவாஜிகணேசன் போல இருந்த சார்லஸ், டயானாவினை கண்டதும் மணம் முடிக்க துடித்தார், பிரிட்டனின் இளவரசர் ஆசைபட்டு நடக்காதது உண்டா?, மறுத்தாலும் பிடித்து வைத்து மோதிரம் மாட்டுவார்கள்,

உலகே அதிசயிக்கும் அந்த திருமணம் நடந்தது, தமிழகத்து வளர்ப்புமகன் திருமணம் எல்லாம் அதன் முன் கண் திருஷ்டி கழிக்க கூட வழியில்லாதது என்றால் அதன் பிரமாண்டத்தை நீங்களே முடிவு செய்யுங்கள்

அரச குடும்பம் என்பது சாதாரணம் அல்ல, சில லட்சங்களை கண்ட புது பணக்காரர்களே “நாங்கள் யார் தெரியுமா? என் குடும்ப கவுரவம் என்ன தெரியுமா?” என ஒரு கெத்து காட்டும் உலகில், உலகாண்ட வம்சம் எப்படி இருக்கும்?

பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்த் ஆகிய நாடுகளுக்கும் இன்றும் அவரே ராணி , இப்படி இருக்கும் குடும்பம் எப்படிபட்ட கவுரவத்தில் இருக்கும்? அதில் ஆச்சரியமென்ன?

அதன் கட்டுபாடுகள் அப்படி பல் துலக்குவது முதல் இரவு தூங்க செல்லும் வரை அவர்கள் கவுரவம் தெரியும், எல்லாவற்றிற்கும் வேலைக்காரர்கள், எல்லாவற்றிலும் ஒரு பெருமை , கெத்து இன்னபிற‌

அரச குடும்பத்தவர் தனித்து தெரியவேண்டும், உத்தரவு மட்டுமே போடவேண்டும் என்ற ஒருவகை பயிற்சி அது, அவர்களின் பெருமை அது

டயானா இதில்தான் மாறுபட்டார், அவரின் சுதந்திரம் அவருக்கு முக்கியம், அந்த அரச குடும்பத்து பெண்கள் குழந்தைகளை கூட கொஞ்சமாட்டார்கள், பள்ளிக்கு அழைத்து செல்வது பாடம் கற்பிப்பது எல்லாம் வேலைக்காரர்கள்

டயானா இதனை உடைத்தார், அவரே வேலைக்காரரோடு சமைத்தார், அவர் குழந்தைகளை அவரே சாதரண பெண் போல பள்ளிக்கு அழைத்து சென்றார்

பிளாட்பார கடையில் கம்மல் பொறுக்கினார், சந்தித்த மக்களையெல்லாம் ராஜிவ் காந்தி ஸ்டைலில் தொட்டு பேசினார், மிக எளிமையான இளவரசியானார்

அரச குடும்பத்தின் கவுரவம் அவரால் குலைவதாக சொன்னார்கள், அவர் கண்டுகொள்ளவே இல்லை, நீ வருங்கால அரசி என சொல்லிபார்த்தார்கள், என் சுதந்திரத்தை கட்டுபடுத்தும் அந்த அரசி பதவியே வேண்டாம் என எகிறினார் டயானா

அவர் அழகி, அதுவும் வசீகரிக்கும் அழகி. ஆனால் மனதால் மிக எளிமையானவர், அந்த எளிமை எல்லா நாட்டு மக்களையும் அவர்பால் இழுத்தது, உலகெல்லாம் பிரபலமானார் டயானா

இரு குழந்தைகள் பிறந்த நிலையில் இளவரசரின் சார்லஸ் மறுபடியும் முருங்கை மரம் ஏறினார், டயானா தன் குடும்ப கவுரவத்தை காப்பாற்றவில்லை என அவரே நொந்தார், பழைய பெண் தோழிகள் நட்பை தேடினார், அவரின் இயல்பும் அது

பெண் தோழிகள் மூலம் தன் குடும்ப கவுரவத்தை காக்கும் வழியில் இறங்கினார் சார்லஸ்

டயானா அரச மரபுகளை உடைத்தார், தன் திருமணம் தோல்வியுற்ற நிலையில் பொதுவாழ்விற்குத்தான் திரும்பினார், எல்லா பொதுசேவைகளுக்கும் அள்ளி கொடுத்தார், உதவினார்

கல்கத்தா மக்களுக்கும் அவர் உதவியது கொஞ்சமல்ல‌

திருமணம் முடியும் பொழுது அவருக்கு 20 வயது, அதன் பின் அரண்மனை வாழ்க்கை, கொஞ்சம் வெளிவந்து தனக்கான வாழ்வினை தேடினார்

அந்த பரிதாபத்திற்குரிய அழகி தேடியது என்ன? அவரே சொன்னது போல, “என்னை மதித்து என்னை முழுமையாக நேசிக்கும் ஒருவர், ஒரு தூய்மையான அன்பு, அது ஒன்றுதான்”

என்னதான் இளவரசி என்றாலும் அவரின் பெண்மனம் சாதாரண பெண்ணின் மனம் போலவே ஏங்கியிருக்கின்றது

குதிரை பயிற்சியாளர், பாகிஸ்தான் டாக்டர் என பலரோடு கிசுகிசுக்கபட்டார், அதில் சில உண்மையும் பல பொய்களும் கலந்திருந்தது, அவர் போலி கவுரவத்தோடு வாழும் அன்பில்லா அரண்மனை வாழ்க்கையினை விட, தூய்மையான அன்போடு வாழும் எளிய வாழ்க்கைக்கே ஆசைபட்டார்

ஒரு கட்டத்தில் விவாகரத்து வரை சென்றது, டயானாவின் பாட்டியும் முன்பு பிரிட்டன் அரண்மனையில் வேலை செய்தவர், ராணி விசுவாசமிக்க கட்டப்பா வகை, அந்த விசுவாச புராணம் எல்லாம் பாடி பார்த்தார்கள்

என் சுதந்திரத்தை விட, என் உணர்வுகளை விட இந்த அரண்மனையில் நான் அடிமைபட்டு கிடக்கவேண்டுமா? முடியாது என சொல்லிவிட்டு விவாகரத்து செய்தார் டயானா

பெரும் கோடீஸ்வரர்கள் முதல் அரைகுறை ஆங்கிலம் பேச தெரிந்த அனைவரும் அவருக்கு விண்ணப்பம் எழுதினர், அவரை மணம் செய்துகொள்ள அத்தனை பேர் துடித்தனர்

டயானா எனும் பெண் அன்று உலகில் கொண்டாடபட்ட விதம் அப்படி

இந்நிலையில் எகிப்து கோடீஸ்வரர் அல்பயது எனும் இஸ்லாமியருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது, அவரும் மனைவி இல்லா வகைதான், இருவரும் மணம் செய்ய முடிவெடுத்தார்கள்

இந்நிலையில்தான் பாரீஸ் கார்விபத்தில் டயானா கொல்லபட்டார், நெடுநாள் மர்மத்திற்கு பின் பிரிட்டன் உளவுதுறை அதிகாரி மரண படுக்கையில் நான் தான் கொன்றேன், இது அரச கட்டளை என்றார், அன்னார் இன்னும் சாகவில்லை, விரைவில் அவர் சாகடிக்கபடலாம்

ஆக வேல்ஸ் இளவரசி ஒருவர் அரச குடும்பம் எனும் இரும்பு கோட்டையில் சிக்கி, அதனை மீற முயன்ற பாவத்திற்காக கவுரவ கொலை செய்யபட்டிருப்பது உறுதியாகின்றது

எப்படியோ 36 வயதுவரையே வாழ்ந்த அந்த டயானா, உலகில் எல்லோர் மனதிலும் இடம்பிடித்தார், அவரின் வசீகர அழகு முகம் அப்படி

இனம்,மொழி,மதம் கடந்து எல்லோரும் அவரை ரசித்தனர், நேசித்தனர், அவர் மின்னும் முகமும், அந்த சிரிப்பும், சிகை அலங்காரமும், அவர் அணிந்த உடைகளும் அவரை அப்படியே தேவதையாக்கின‌

ஒருவேளை சார்லஸை அனுசரித்து சென்றால் இங்கிலாந்து அரசியாகியிருக்கும் வாய்ப்பு உண்டா என்றால் சொல்ல தெரியாது, காரணம் இங்கிலாந்து எலிசபெத் ராணி வலுத்த கட்டை, கிட்டதட்ட நம் கலைஞர் வகையறா

அதனால் டயானா இன்று இருந்திருந்தால் செயல் ராணி எனும் அளவிற்கு வந்திருக்கலாம்

டயானாவின் ஜாதகம் உலகாளும் யோகம் கொண்டதுதான், ராகுவோ, சனியோ அவரின் தன்மானத்தை உயர்த்தி பிடித்ததில் அவர் சில வாய்ப்புகளை தவறவிட்டார்

மற்றபடி சுக்கிரன், சந்திரன்,குரு எல்லாமே உச்சம்.

பிரிட்டன் ராணியின் இடம் அவருக்கானது தவற விட்டார், விவாகரத்து ஆனபின் அமெரிக்க முதன்மை பெண்மணியாகும் வாய்ப்பும் இருந்தது அதனையும் தவறவிட்டார்

எப்படி?

இந்நாளைய அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்ம ஊர் ஜெமினி கணேசன், சிம்பு, பிரபுதேவா வகை. 1996ல் டயானா விவாகரத்தாகும் பொழுது பெரும் அமெரிக்க செல்வந்தரான டிரம்ப் தன் முழு பயோடேட்டா + சொத்து கணக்கு பட்டியலோடு தன் விண்ணப்பத்தை சமர்பித்தார்

ஆனால் தந்திரமாக அவர் மறைத்த மனைவியர் மற்றும் தோழிகள் கணக்கு டயானாவிற்கு தெரிந்தது, அது உலகிற்கே அன்று தெரிந்த விஷயம் தான்

இவர் விளையாட்டு பிள்ளை என்பதை உணர்ந்த டயானா, “இவர்க்கு சார்லசே பரவாயில்லை, இவருக்கு ஓகே சொன்னால் விவகாரத்தானதற்கு அர்த்தமே இல்லையே ” என சொல்லி நிராகரித்தார்

டயானா இறந்த அன்று டிரம்ப் அழுததாக கூட சொன்னார்கள், இன்றும் டிரம்ப் அதிகாரத்திற்கு வந்தபின்புதான் டயானா மரண மர்ம முடிச்சு அவிழ்க்கபட்டிருப்பதும் குறிப்பிட தக்கது

இரு பெரும் உச்ச பதவிகளை தன் எளிமையான வாழ்விற்காக தவறவிட்ட டயானா உண்மையிலே அதிசய பெண்மணிதான்

கடந்த நூற்றாண்டு கண்ட அற்புதமான அழகான பெண்மணிகளில் நிச்சயம் டயானாவிற்கு இடம் உண்டு, அந்த இடம் என்றும் அழியா இடம்

இன்று டயானாவின் பிறந்தநாள், உலகெல்லாம் நேசிக்கபட்ட அந்த பரிதாபத்திற்குரிய அழகு பெண்ணை உலகம் நினைத்துகொள்கின்றது.

துணிவிற்கும், எளிமைக்கும், அழகிற்கும் பெயர் பெற்று விளங்கிய டயானாவினை போல் இன்னொருவர் உண்டென்றால் அது நிச்சயம் குஷ்பூதான்

டயானா பிரிட்டனின் குஷ்பூ, குஷ்பூ இந்தியாவின் வாழும் டயானா இப்படித்தான் உலக வரலாறு குறித்திருக்கின்றது

 

இந்தியாவும் ஜி.எஸ்.டி சுழலில் சிக்கிகொண்டது

வளரும் நாடுகள் ஜிஎஸ்டி விதிக்கும் பொழுது பல விஷயங்களை கவனிக்க வேண்டும் இல்லாவிட்டால் பெரும் குழப்பம் ஏற்படும்

அந்நிய முதலீடுகள், அடுத்த நாட்டு தொழில் நிறுவணங்களின் நிலை, இன்னபிற விஷயங்கள் எல்லாம் கவனிக்கபட வேண்டும்

மலேசியா கடந்தமுறை 6% ஜிஎஸ்டி விதித்தது , அது பெரும் குழப்பங்களை கொண்டுவந்து நாட்டின் பொருளாதார ஸ்திரதன்மையினை பாதித்தது

பெரும் வித்தகரான மகாதீர் மலேசிய பிரதமரானது அந்த ஜிஎஸ்டியில்தான் கைவைத்தார், முதல் சீர்திருத்தம் அதுதான்

இந்தியாவும் அந்த சுழலில் சிக்கிகொண்டது, மோடி அரசு இருக்கின்றதே இது ராமர் அரசு அல்ல மாறாக அபிமன்பு அரசு

எல்லா வியூகத்தையும் உடைத்து உள்ளே செல்லுமே தவிர, வெளிவர தெரியாது, ஏதும் கேட்டால் குமரிமுத்து போல சிரிப்பார்கள்

அப்படி ஜிஎஸ்டியிலும் அது வசமாக சிக்கிவிட்டது, அதனால்தான் தொழில் முடக்கம் முதல் டாலருக்கு நிகரான மதிப்பு அதல பாதாளத்தில் கிடக்கின்றது

இந்நிலையில் இந்நாளை அவர்கள் மறக்கடிக்க வேண்டும்

ஆனால் பெரும் சாதனை போல ஒருவருட‌ வெற்றிவிழா கொண்டாடுகின்றார்கள், பெரும் அவமானம்

நாட்டின் பொருளாதாரத்தை கெடுத்துவிட்ட ஒரு வரிக்கு விழாவாம்

இவர்கள் ஒருமாதிரியானவர்கள்தான் ஆனால் இந்த அளவு காமெடியர்கள் என்பது இப்பொழுதுதான் தெரிகின்றது


நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது : தமிழிசை பெருமிதம்

எந்தநாட்டு பொருளாதாரம் என அக்கா சொல்லவில்லை

கண்ணாடியினை பார்த்துகொண்டு தலையினை தடவிகொண்டு தன் தலைமுடி வளர்கின்றது என்பதற்கு பதிலாக பொருளாதார


பேரவையிலிருந்து வெளிநடப்பு ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்

இதில் என்ன விளக்கம்?

நான் வெளிநடப்பு செய்யாவிட்டால் துரைமுருகன் ஜெயாவோடு நடிக்க ஆசைபட்ட கதை, பொன்முடி ராமசந்திரனுக்கு தம்பியாக நடிக்க ஆசைபட்ட கதை எல்லாம் வெளிவரும், இன்னும் கரகாட்ட மேடை போல‌ மிட்நைட் மசாலா கதை எல்லாம் பேசுவார்கள்

இதை தடுக்க ஸ்டாலின் என்ன செய்யமுடியும்? வெளிநடப்புத்தான் செய்யமுடியும்


 பிளாஸ்டிக் பொருளுக்கு தடை என்றால் காண்டம் எனப்படும் ஆணுறைக்கும் தடை வருமா? : நடிகை பூனம் பாண்டே கேள்வி

அவரவர் கவலை அவரவர்க்கு மிக பெரிது என்பது இதுதான்


நெல்லையில் அரிவாளால் கேக் வெட்டிய ரவுடி கைது, பொதுமக்களை அச்சுறுத்தும் செயல் என காவல்துறை நடவடிக்கை

ஒருவன் மீசையினை முறுக்கி 40 ஆயிரம் அரிசிகப்பலையே அசால்ட்டாக‌ கடத்தினேன் என மக்களை வேறு வகையில் மிரட்ட்டி கொண்டிருக்கின்றான் அவனை எல்லாம் விட்டுவிடுவார்கள்


நீரிழிவு நோய் ஏற்பட வைக்கும் 7 காரணங்களில் காற்று மாசுபாடும் ஒன்று, ஆய்வில் தகவல்

சென்னையும், டெல்லியும் இனி நீரழிவு நோயாளிகளால் நிரம்பி வழியலாம்

பழனிச்சாமியும், மோடியும் கவனமாக இருப்பது நல்லது.


 

மகாராஷ்டிர மாநில அரசு மருத்துவமனையில் நோயாளியை அழைத்து செல்ல ஸ்ட்ரெச்சர் இல்லாததால் அவரை போர்வையில் கட்டி இழுத்துச் சென்றனர் : செய்தி

அதே மகராஷ்டிராவில்தான் வீர சிவாஜிக்கு பல்லாயிரம் கோடி செலவில் பாகுபலி பல்வாள் தேவன் போல சிலை வைக்க போகின்றார்களாம்


உலக கால் பந்து போட்டி : நம்பவே முடியாத ஆச்சரியங்கள்

நம்பவே முடியாத ஆச்சரியங்கள் நடக்கும் உலகிது, பழனிச்சாமி கூட முதல்வராகிவிட்ட நேரமிது

இத்தகைய பேரதிர்ச்சிகள் கால்பந்திலும் நடப்பதில் ஆச்சரியமில்லை, நேற்று அர்ஜென்டினாவும் போர்ச்சுகல்லும் ஒரே நேரத்தில் வெளியேறியது அப்படித்தான்

அர்ஜென்டினாவுக்கு ஒரு சென்டிமென்ட் உண்டு, ஆட்டத்தில் முதல் கோலை அவர்கள் அடித்தால் வெற்றி நிச்சயம். தவற விட்டால் படுதோல்வி என்பது அது

நேற்றும் அது நிரூபிக்கபட்டதுதான் சோகம், முதல் கோலை பிரான்ஸ் அடிக்க அப்படியே நடந்தது

மெஸ்ஸியின் இடம் மாற்றபட்டது இன்னும் சில சர்ச்சைகள் இருந்தாலும் இந்த‌ உலக கோப்பையினை வெல்லும் தகுதி அர்ஜென்டினாவிற்கு இல்லை என்பதை ஒப்புகொண்டாக வேண்டும்

அந்த பிரான்ஸின் மாப்பா அடித்திருக்கும் இரண்டு கோலும் பீலேவிற்கு பின்னால் இளம் வீரர் அடித்திருக்கும் அற்புத கோல்கள்

உலககோப்பை கனவு தகர்ந்த வேதனையுடன் விடைபெறுகின்றார் மெஸ்ஸி, அடுத்த உலக கோப்பையில் அவர் ஆடுவது நிச்சயம் நடக்காது, வயது ஆகிவிடும்

போர்ச்சுக்கல் அபாரமாக ஆடினாலும் உருகுவேயின் மிக துடிப்பான ஆட்டத்திற்கு முன்னால் நிற்க முடியவில்லை, கலக்கினார்கள்

கிறிஸ்டியானா ரொனால்டோவும் பிரகாசிக்க முடியவில்லை, வந்தாயிற்று, அவர் அடுத்த உலக கோப்பையில் 38 வயது கிழவனாக ஆடுவார் என்கின்றார் பயிற்சியாளர் பார்க்கலாம்

எதிர்பார்க்கபட்ட மெஸ்ஸியும் ரொனால்டோவும் நடையினை கட்டியாயிற்று

உருகுவே அணியின் எழுச்சி அசரடிக்கின்றது. கிட்டதட்ட 90 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் அசைக்க முடியாத கால்பந்து அணி

பிபாவிற்கு முந்தைய உலககோப்பை என சொல்லி சில அணிகள் ஆடிய முதல் உலககோப்பையினை அவர்கள்தான் வென்றார்கள்

ஹிட்லர் காலம் வரை உருகுவே பலம் வாய்ந்த அணி, பின்னர் பீலே பிரேசிலை உச்சத்திற்கு கொண்டு சென்றார், மாரடோனா காலத்தில்தான் அர்ஜென்டினா எழும்பியது

உருகுவே 90 ஆண்டுகளுக்கு முன்பிருந்த வரலாற்றை திருப்பி கொண்டு மிரட்டுகின்றது

இப்போதைய சூழலில் கோப்பையினை வெல்ல பிரேசில், உருகுவே அணிகளுக்குத்தான் வாய்ப்பு

ஆனாலும் அதிசயம் நிகழ்ந்து குரோஷியா போன்ற அணிகள் தட்டினாலும் தட்டலாம்