தலைவி பார்முக்கு திரும்பி விட்டார்

Image may contain: one or more people

லண்டனில் இருந்து திரும்பிய தலைவி தீவிர அரசியல் மற்றும் திரைபணிக்கு திரும்பிவிட்டார்

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சிக்கல் வந்த பொழுது சின்னதிரை அமைப்பின் மிக முக்கிய பொறுப்பில் தலைவி இருப்பதால் ஒரு வார்த்தைதான் சொன்னார், சிக்கல் தீர்ந்தது.

பிக்பாஸ் இப்பொழுது தொடர தலைவிதான் காரணம்

அத்தோடு பெரும் பரபரப்பு பேட்டி கொடுத்திருக்கின்றார். ஆனால் மிக தேர்ந்த அரசியல்வாதியாக பேசி இருக்கின்றார்

தலைவியின் பக்குவமான பேச்சில் தெருநாவுக்கரசு கோஷ்டி அலறிகொண்டிருக்கின்றது.

அழகான பதில்கள், தெளிவான பேச்சுக்கள். தலைவி பின்னுகின்றார். சந்தடி சாக்கில் மோடியினை விளாசுகின்றார்

தலைவி பார்முக்கு திரும்பிவிட்டதால் சங்கம் மிக்க மகிழ்ச்சியில் இருக்கின்றது, தலைவியின் கருத்துக்களை உலகெங்கும் கொண்டு சேர்க்க வேண்டி இருப்பதால் சங்கத்தின் பொறுப்பு கூடுகின்றது

கடவுள் நம்பிக்கையினை தாண்டி, மனசாட்சிபடி அரசியல் என்பது இதுதான்

Image may contain: 1 person, hat and suit

ஈரோடு நகராட்சி தலைவராக பெரியார் இருந்தபொழுது கோவில் கணக்கு அவரிடம்தான் இருந்தது

துளியும் சந்தேகமோ, எதிர் கேள்வியோ வராத வண்ணம் மிக சுத்தமான கணக்கு வழக்குகளை வைத்திருந்தார் பெரியார்

இத்தனைக்கும் கடவுள் நம்பிக்கை எல்லாம் இல்லை, தன்னை நம்பி ஒப்படைத்த கோவிலின் நிர்வாகத்தை காக்க வேண்டும் என்ற பொறுப்பு அவருக்கு நிறைந்திருந்தது

தன் பதவிகாலம் முடியுமட்டும் ஒரு குறையினை அவர்மேல் சுமத்தயாராலும் முடியவில்லை.

ஒரு பைசா காணவில்லை என்றோ, ஒரு குண்டுமணி தங்கம் குறைந்தது என்றோ யாராலும் சொல்லமுடியவில்லை. அந்த அளவு நிர்வாகத்தை மிக கறாறாக வைத்திருந்தார்.

கொட்டிகிடந்த ஆலய காணிக்கைக்கும், நகைகளுக்கும் அவரிடம் கணக்கு அப்படியே இருந்தது. கள்ள கணக்கு என பெரியார் மீது ஒரு பிராமணராலும் குற்றம் சொல்லமுடியவில்லை

அந்த நாத்திகனின் மேற்பார்வையில் கூட ஒரு சிலை திருட்டு நடைபெறவில்லை என்பதுதான் வினோதம்

அந்த நாத்திகன் மனசாட்சிக்கு பயப்பட்டிருகின்றான், இங்கோ ஆத்திகன் தெய்வசிலையினை கல், உலோக‌ சிற்பம் என நினைத்து விளையாடியிருக்கின்றான்

மனசாட்சியே கடவுள் என வாழ்ந்த பெரியார் ஆயிரம் ஆத்திகர்களுக்கு முன்மாதிரியாக நிற்கின்றார்

இப்பொழுதும் ஆலய சிலைகளுக்காக நாத்திக திமுகதான் மல்லுகட்டுகின்றதே அன்றி, ஆத்திக பாஜகவும் அதன் அடிமைகளும் மகா அமைதி

ஸ்டாலின் கோவில் குங்குமத்தை தன் நெற்றியில் அழித்தது சர்ச்சையாகலாம், ஆனால் அவரின் சிலை மீட்பு விவகார கேள்விகளில் நியாயமில்லை என யார் சொல்லமுடியும்?

எதற்கெடுத்தாலும் ஸ்டாலினை சீண்டும் பாஜக இவ்விஷயத்தில் அர்ஜென்டினா பயிற்சியாளர் போல தலைமறைமாகும் மர்மம் என்ன?

திமுகவிடம் நியாயமான கேள்விகள் இருக்கின்றன, கேட்கின்றார்கள். அவர்கள் ஆத்திகர்களா? இல்லையா என்பது சிக்கல் அல்ல

கடவுள் நம்பிக்கையினை தாண்டி, மனசாட்சிபடி அரசியல் என்பது இதுதான்

 

மிஸ் இந்தியாவாக திருச்சி பெண் அனுகீர்த்தி தேர்வு

 

Image may contain: 1 person, smiling, selfie and close-up

மிஸ் இந்தியாவாக திருச்சி பெண் அனுகீர்த்தி தேர்வு

காற்றில் உயர பறக்கும் துரும்பு கோபுரத்தை விட உயர பறக்கலாம் ஆனால் கோபுரத்திற்கு ஈடாகாது

நொடியில் வீழும் துரும்பி, ஆனால் கோபுர கலசமோ எந்நாளும் நிலைத்து நிற்கும். பக்தர்கள் பணிந்து வணங்குவார்கள்

இந்த இந்திய அழகி, உலக அழகி எல்லாம் அப்படி துரும்புகள், தலைவி ஒருவரே நிலைத்து நிற்கும் கோபுரம்


 

 

சிலைகடத்தல் விஷயம் எல்லாம் அதிர்ச்சி ரகம்

கொஞ்சநாள்தான் சிலைகடத்தல் வழக்கினை விசாரித்தார் பொன் மாணிக்கவேல் ஆனால் அவர் சொல்லும் விஷயம் எல்லாம் அதிர்ச்சி ரகம்

பெரும் தலைகள் சிக்கி இருக்கின்றன, உச்சமாக 7 ஆயிரம் கோவில்களில் போலி சிலை இருக்கின்றது என சொல்லி அதிர வைக்கின்றார்

இது மிக மிக சீரியசான விஷயம்

ஆலயங்களும், சிலை கடத்தல் விஷயமும் மத்திய அரசு கட்டுபாடுக்கு செல்ல வேண்டிய நேரமிது

இதில் மாநில சுயாட்சி மண்ணாங்கட்டி எல்லாம் சொல்ல முடியாது, மாநில உரிமையில்தான் இவ்வளவு அழிவு நடந்திருக்கின்றது

7000 சிலைகளை காக்க முடியாத அந்த மாநில உரிமை எதற்கு, ஆலய விவகாரங்கள் உடனே மத்திய இலாக்காவிற்கு மாற்றபடட்டும்

சிலைகள் இத்தேசத்தின் சொத்துக்கள், அதனை கடத்தியவன் யாராய் இருந்தாலும் மிக பெரும் நடவடிக்கை எடுத்து அந்த துரோகியினை தண்டித்து சிலைகளை மீட்க வேண்டும்

ஆலயங்கள் மத்திய அரசின் கட்டுபாட்டிற்கு செல்லட்டும், அதுவன்றி இங்கு ஒரு கல் கூட மிஞ்சாது


இந்துக்களை காக்க வந்த அவதாரங்கள், இந்துக்களை எழுப்பி அவர்களை வாழ்வாங்கு வாழ வைத்து, இந்து அடையாளங்களை எல்லாம் பிரகாசிக்க வைத்ததாக சொல்லிகொள்ளும் பாஜகவினரோ, ஆர்.எஸ்.எஸ் அமைப்போ, இந்து முண்ணணியோ சிலை திருட்டு விவகாரத்தில் அமைதி காப்பது கனத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது

இந்த அமைதி சாதாரணமானதல்ல‌

இந்து தெய்வங்களை யாரும் சொன்னாலே பற்றி எரிபவர்கள், வைரமுத்துவிற்காய் தலைகீழ் நின்றவர்கள் எல்லாம் ஆண்டாள் சிலை கூட மாறியிருக்கலாம் என்ற செய்தி வரும்பொழுது கடும் அமைதி

நிச்சயம் இந்த வாய்ப்பு பாஜக கோஷ்டிகளுக்கு அட்டகாசமான பெனால்டி, கோல் கீப்பர் மல்லாக்க கிடக்கும் நேரமிது, ஏராளமான கோல்களை அடிக்கலாம்

ஆனால் எங்கள் கால் இதற்காக நகராது என ஏன் மவுனமாயிருக்கின்றார்கள்??

ஆக இவர்கள் எல்லாம் கள்ளர்கள், மடியில் கனமிருக்கின்றது

இந்துமதம் பற்றியோ, ஆலயங்கள் பற்றியோ பேசும் தகுதியினை பாஜகவும அதன் அல்லக்கை கோஷ்டிகளும் இழந்துவிட்டது

இந்துக்களின் ஆலயத்தையும் அந்த சிலைகளையும் மீட்டெடுத்து பாதுகாக்க உண்மையுள்ள ஒருவருமா இல்லை?

மாலிக்காபூர் தென்னகத்தை சீரழித்தபொழுது விஜயநகர மன்னர்கள்தான் வந்து ஆலயத்தையும் சிலையினையும் காத்தார்களாம்

அப்படி இனி எங்கிருந்தாவது யாரையாவது அழைத்து வந்துதான் இங்கே எல்லாவற்றையும் காக்க வேண்டும் போலிருக்கின்றது

வேறு யாரேனும் வந்து காக்கட்டும், தெய்வங்கள் நல்ல தூதனை அனுப்பட்டும்


ஏம்பா திருவில்லிபுத்தூர் ஜீயர்,

கோவில் சிலை எல்லாம் காணோமாமே, இப்பொழுது இந்த உண்ணாவிரதம் இருந்தால் என்ன? சோடா பாட்டில் வீசினால் என்ன?

வைரமுத்து என்றால் மட்டும் ஜீயர் சீறுவீரோ??

ஆண்டாளை சொன்னால் ஆடுவாராம், ஆண்டாள் போன்றவர்கள் சிலை காணாமல் போனால் ஜீயர் ஜீவன் விட்டவர் போல அமைதி ஆகிவிடுவாராம்.

 


மதுரையில் இருந்து மிரட்டும் சீமான்

Image may contain: 2 people, people smiling

சென்னையில் இருந்து மிரட்ட மாட்டாராம், மதுரையில் இருந்து மிரட்டுவாராம்

முன் ஜாமின் வாங்க கோர்ட்டில் கெஞ்சிகொண்டிருப்பதன் பெயர் மிரட்டலாம்

இனி நெல்லையிலிருந்து மிரட்டல், கன்னியாகுமரியிலிருந்து மிரட்டல் என சொல்லி அப்படியே அங்கிள் வன்னிகாட்டுக்கு ஓடிவிடும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கின்றது

அவரின் போஸை பாருங்கள்

அங்கிள் கைதுக்கு பயந்து ஓடிகொண்டிருக்கும்பொழுது , ஏதோ உலககோப்பை கால்பந்து போட்டியில் கோல் அடிக்க போவது போல தமிழக பத்திரிகையில் 
ஒரு ஸ்டைல்

பத்திரிகை மோசடி என்றால் இதுதான்.

 
 

திமுக ஏதோ பிறந்தவுடன் ஆட்சிக்கு வந்ததா?

திமுக ஏதோ பிறந்தவுடன் ஆட்சிக்கு வந்தது போல பேசிகொண்டிருக்கின்றார்கள்

திகவிலிருந்து வெளியேற அண்ணா கோஷ்டிக்கு ஏகபட்ட தயக்கம் இருந்தது, பெரியார் இல்லாத இயக்கம் என்னாகும் என்ற அச்சமும் இருந்தது, ஆயினும் பெரியார் இருக்கும் வரை அரசியலுக்கு வரமுடியாது என எண்ணிய அண்ணா கோஷ்டி மணியம்மை திருமணத்தை சாக்காக வைத்து பிரிந்தது

அண்ணா பிரிந்தவுடன் கலைஞர் ஓடி சென்று சேர்ந்தவர் அல்ல, தடுமாறினார். பெரியாரை மீறி எப்படி வெல்லமுடியும் என்ற தயக்கம் இருந்தது

“அய்யா ஆணையிடுகின்றார், அண்ணா ஊழையிடுகின்றார்..” என பிரிவுக்கு முன்பே சுதந்திரத்தையொட்டி எழுதி பல்ஸ் பார்த்தவர் கலைஞர்

அந்த கட்சி அப்படித்தான் இருந்தது

“திண்ணையில் படுத்தேனும் திராவிட நாடு காண்போம்” என அண்ணா சொன்னபொழுது இன்று பாஜக கூட்டத்தின் முன்பிருக்கும் நாய் கூட இல்லை

அப்பொழுதும் திமுக ஈவிகே சம்பத்தை முன்னிறுத்தியது, சம்பத்தின் பிரிவுக்கு பின்பே அண்ணா முன்னிறுத்தபட்டார்

அண்ணாவிற்கும் தனித்து நின்று வெற்றிபேறுவோம் என்ற நம்பிக்கை துளியுமில்லை, இன்றைய நாம் தமிழர் போலத்தான் கத்திகொண்டிருந்தார்கள்

ஆனால் சீனப்போருக்கு பின் தனிநாட்டை கைவிட்டது, இந்தி எதிர்ப்பு தீவிரம் என 1960களில் அரசியலை பரபரப்பாக்கினார்கள்

ராமசந்திரன் உட்பட்ட சினிமா நட்சத்திரங்கள் அவர்களுக்கு கைகொடுத்தன‌

“கூத்தாடிகள்” என எல்லா கட்சியும் ஏற்க தயங்கிய அந்த கூட்டத்தை “கலைஞர்கள்” என அண்ணா ஆதரித்ததுதான் தமிழ்நாட்டின் திருப்பு முனை.

இதற்கும் மேல் காங்கிரஸின் எதிர்கட்சியான ராஜாஜியின் சுதந்திரா கட்சி முதல் இஸ்லாமிய கட்சிகள் வரை 7 கட்சி கூட்டணி அமைத்துத்தான் தேர்தலுக்கு வந்தார் அண்ணா

ராஜாஜிக்கோ திமுக பெரும்பான்மை பெறாது, குடுமி நம் கையில் சிக்கும் என்ற எண்ணம் இருந்தது, நரிதந்திரம் அது

ஆனால் ராமசந்திரன் சுடபட்டதும் அன்றிருந்த அரிசி தட்டுபாடும், இந்தி எதிர்ப்பில் தமிழகம் இழந்த 70 உயிர்களும் திமுகவினை ஆட்சியில் அமர்த்தின‌

திமுக பெற்ற பெரும்பான்மையில் ராஜாஜியும் தவிடுபொடியனார்

திமுக கடந்து வந்த பாதை இதுதான் மணியம்மை திருமணத்திற்கு பின்னரான 17 வருடங்களில் இப்படி பாடுபட்டுத்தான் ஆட்சிக்கு வந்தது

சும்மா ஏதோ திமுக லெனின் இயக்கம், மாசேதுங் இயக்கம், கமால் பாஷா இயக்கம் போல தொடங்கியவுடன் மக்கள் ஆதரவுடன் வந்து அமர்ந்தது என்றெல்லாம் சிலர் நம்பிகொண்டிருந்தால் நம்பிகொண்டே இருக்கட்டும்

இன்றைய பாஜக போல, நாம் தமிழர் போல 1950களில் இருந்த கட்சிதான் திமுக‌

அந்த வரலாறை யார் மறைக்க முடியும்?

ஜெருசலேம் புனித பயணத்திற்கு தமிழக அரசு 20 ஆயிரம் மானியம் : செய்தி

ஜெருசலேம் புனித பயணத்திற்கு தமிழக அரசு 20 ஆயிரம் மானியம் : செய்தி

இதெல்லாம் தேவையே இல்லாத மோசடி விஷயங்கள்

இஸ்லாமியருக்கு இருப்பது போல கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம் பயணம் ஒன்றும் கட்டளை அல்ல, அது யூதர்களுக்கானது

கிறிஸ்தவர்கள் ஜெருசலேமிற்கு வரவேண்டும் என பைபிளில் எங்கு சொல்லபட்டிருக்கின்றது??

இதனை உடனடியாக நிறுத்த வேண்டும், மக்களின் வரிபணம் இப்படி வீணாக கூடாது.