சிலைகடத்தல் விஷயம் எல்லாம் அதிர்ச்சி ரகம்

கொஞ்சநாள்தான் சிலைகடத்தல் வழக்கினை விசாரித்தார் பொன் மாணிக்கவேல் ஆனால் அவர் சொல்லும் விஷயம் எல்லாம் அதிர்ச்சி ரகம்

பெரும் தலைகள் சிக்கி இருக்கின்றன, உச்சமாக 7 ஆயிரம் கோவில்களில் போலி சிலை இருக்கின்றது என சொல்லி அதிர வைக்கின்றார்

இது மிக மிக சீரியசான விஷயம்

ஆலயங்களும், சிலை கடத்தல் விஷயமும் மத்திய அரசு கட்டுபாடுக்கு செல்ல வேண்டிய நேரமிது

இதில் மாநில சுயாட்சி மண்ணாங்கட்டி எல்லாம் சொல்ல முடியாது, மாநில உரிமையில்தான் இவ்வளவு அழிவு நடந்திருக்கின்றது

7000 சிலைகளை காக்க முடியாத அந்த மாநில உரிமை எதற்கு, ஆலய விவகாரங்கள் உடனே மத்திய இலாக்காவிற்கு மாற்றபடட்டும்

சிலைகள் இத்தேசத்தின் சொத்துக்கள், அதனை கடத்தியவன் யாராய் இருந்தாலும் மிக பெரும் நடவடிக்கை எடுத்து அந்த துரோகியினை தண்டித்து சிலைகளை மீட்க வேண்டும்

ஆலயங்கள் மத்திய அரசின் கட்டுபாட்டிற்கு செல்லட்டும், அதுவன்றி இங்கு ஒரு கல் கூட மிஞ்சாது


இந்துக்களை காக்க வந்த அவதாரங்கள், இந்துக்களை எழுப்பி அவர்களை வாழ்வாங்கு வாழ வைத்து, இந்து அடையாளங்களை எல்லாம் பிரகாசிக்க வைத்ததாக சொல்லிகொள்ளும் பாஜகவினரோ, ஆர்.எஸ்.எஸ் அமைப்போ, இந்து முண்ணணியோ சிலை திருட்டு விவகாரத்தில் அமைதி காப்பது கனத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது

இந்த அமைதி சாதாரணமானதல்ல‌

இந்து தெய்வங்களை யாரும் சொன்னாலே பற்றி எரிபவர்கள், வைரமுத்துவிற்காய் தலைகீழ் நின்றவர்கள் எல்லாம் ஆண்டாள் சிலை கூட மாறியிருக்கலாம் என்ற செய்தி வரும்பொழுது கடும் அமைதி

நிச்சயம் இந்த வாய்ப்பு பாஜக கோஷ்டிகளுக்கு அட்டகாசமான பெனால்டி, கோல் கீப்பர் மல்லாக்க கிடக்கும் நேரமிது, ஏராளமான கோல்களை அடிக்கலாம்

ஆனால் எங்கள் கால் இதற்காக நகராது என ஏன் மவுனமாயிருக்கின்றார்கள்??

ஆக இவர்கள் எல்லாம் கள்ளர்கள், மடியில் கனமிருக்கின்றது

இந்துமதம் பற்றியோ, ஆலயங்கள் பற்றியோ பேசும் தகுதியினை பாஜகவும அதன் அல்லக்கை கோஷ்டிகளும் இழந்துவிட்டது

இந்துக்களின் ஆலயத்தையும் அந்த சிலைகளையும் மீட்டெடுத்து பாதுகாக்க உண்மையுள்ள ஒருவருமா இல்லை?

மாலிக்காபூர் தென்னகத்தை சீரழித்தபொழுது விஜயநகர மன்னர்கள்தான் வந்து ஆலயத்தையும் சிலையினையும் காத்தார்களாம்

அப்படி இனி எங்கிருந்தாவது யாரையாவது அழைத்து வந்துதான் இங்கே எல்லாவற்றையும் காக்க வேண்டும் போலிருக்கின்றது

வேறு யாரேனும் வந்து காக்கட்டும், தெய்வங்கள் நல்ல தூதனை அனுப்பட்டும்


ஏம்பா திருவில்லிபுத்தூர் ஜீயர்,

கோவில் சிலை எல்லாம் காணோமாமே, இப்பொழுது இந்த உண்ணாவிரதம் இருந்தால் என்ன? சோடா பாட்டில் வீசினால் என்ன?

வைரமுத்து என்றால் மட்டும் ஜீயர் சீறுவீரோ??

ஆண்டாளை சொன்னால் ஆடுவாராம், ஆண்டாள் போன்றவர்கள் சிலை காணாமல் போனால் ஜீயர் ஜீவன் விட்டவர் போல அமைதி ஆகிவிடுவாராம்.

 


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s