ஆமாம் முதல்வர் நிச்சயம் நதிதான்

Image may contain: 3 people, people smiling

ஆமாம் முதல்வர் நிச்சயம் நதிதான்

மோடி எனும் காட்டாறோடு சேர்ந்து மொத்த தமிழகத்தையும் அடித்து செல்லும் நதி, அதில் வெள்ளம் இப்பொழுது கரைபுரண்டு ஓடுகின்றது

அதில் தமிழகம் பெரும் அழிவினை சந்தித்து கொண்டிருக்கின்றது.


தமிழக மக்கள் இப்பொழுதே பாஜக ஆட்சியை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் – தமிழிசை.

 

அவ்வப்போது இப்படி சொல்லி தமிழக மக்களை சிரிக்க வைத்து பார்ப்பதில் அக்காவிற்கு ஒரு ஆனந்தம், இந்த நல்ல மனது யாருக்கு வரும்?


ஊழல் வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் அதிரடி கைது

இங்கே தமிழகத்தில் நீதிமன்றம் குற்றவாளி என்றாலும் அவளுக்கு சட்டமன்றத்தில் படம், அரசு செலவில் மணிமண்டபம்

இன்னொரு குற்றவாளி “தியாக தலைவி” சின்னம்மா, அவரின் வாரிசு “திராவிட செல்வன்”.

பின் எந்த சமூகம் உருப்படும்?


கடனை திருப்பி செலுத்தாதது ஏன்? , லதா ரஜினிகாந்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

இப்படி ஒரு கேள்வியினை சுப்ரீம் கோர்ட்டு கேட்க வேண்டும் என்றுதான் காலா படத்தையே அக்குடும்பம் தயாரித்திருக்கின்றது

இனி பாருங்கள், ” அய்யா கடன கட்டிவிடவேண்டும் என்றுதான் காலா படம் எடுத்தோம்

ஆனால் காலா படம் வகையில் மருமகனுக்கு 50 கோடி கணவனுக்கு பலகோடி நஷ்டமுங்க‌ எசமான்..” என கோர்ட்டில் புலம்பினால் முடிந்தது விஷயம்


நடிகையை கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மகன் மீது வழக்கு

பல ஆண்டுகளுக்கு முன்பு இதே மிதுன் சக்கரவர்த்தி நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கையில் விளையாடியது அக்கால செய்தி

இப்பொழுது மகன் முறை போலிருக்கின்றது

ஆக “விதி” படம் இந்தியில் அப்படியே அக்குடும்பத்து விதிபடியே நடக்கின்றது


8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டமே; தமிழக அரசிற்கு தொடர்பில்லை: ஜெயக்குமார்

இங்கு தமிழ்நாட்டிற்கும் தமிழக அரசிற்கும் என்ன தொடர்பு?

நடப்பது எல்லாமே மத்திய அரசின் திட்டம்தானே.


 

இந்த அபூர்வ‌ அழகுசிலை மட்டும் தப்பி இருக்கின்றது

Image may contain: 1 person, smiling, close-up

பெரும் சிலைகடத்தல் தமிழ்நாட்டில் நடந்திருக்கின்றது, அழகான சிலைகள் அத்தனையும் ஓசையின்றி கடத்தபட்டிருகின்றன‌

ஆனால் இந்த அபூர்வ‌ அழகுசிலை மட்டும் தப்பி இருக்கின்றது

இந்த சிரிக்கும் சிலையினை தேடி வந்த கொள்ளையர்கள்தான் திசைமாறி ஆலய சிலைகளை கொள்ளை அடித்திருக்கின்றனர்

தமிழகத்தின் மிக முக்கிய அடையாளமான உயிர்கொண்ட கலைசிற்பம் பாதுகாப்பாக இருக்கின்றது என்பதில் சங்கத்திற்கு பெரும் நிம்மதி

இந்த சிலைக்கு கூடுதல் சிறப்பு காவல் அளிக்கும்படி அரசுக்கு சங்கம் கோரிக்கை வைக்கின்றது

 

கட்சி அலுவலகத்தை மூட ரஜினி உத்தரவு : செய்தி

Image may contain: one or more people, beard and smoking

நிர்வாகிகள் மீது தொடர் புகார்: தலைமை அலுவலகத்தை மூட ரஜினி உத்தரவு : செய்தி

“இவனுகள நம்பி ஒரு படம் எடுக்க முடியல, பெரும் நஷ்டமாகின்றது. காலா படம் கவிழ்த்தே விட்டது

ரசிகர் மீட்டிங்க்னா எவ்ளோ பேர் வந்தான்,கட்சி தொடங்கு நாங்க இருக்கோம்னாண்

ஆனால் தியேட்டர்ல ஒரு பய இல்லை, இவ்வளவுதான் இவனுக

ஹா ஹா ஹா

இந்த லட்சணத்துல இவனுள நம்பி கட்சியா? தலை எல்லாம் சுத்துது, வேணாம்பா எல்லாத்தையும் மூடுங்க.”

 
 

மோடிக்கு இதைவிட பெரும் அவமானம் இல்லை…

Image may contain: one or more people and people standing

ஈரானின் பெட்ரோல் ஏற்றுமதியினை 0 அளவிற்கு குறைத்தால் அது ஓடிவந்து காலில் விழும் என பகிரங்கமாக சொல்கின்றது அமெரிக்கா

“சார் பெட்ரோல்ன்னு இல்ல, தண்ணி இல்லண்ணா கூட பொழைச்சிக்குவான் இந்த ஈரான், ரொம்ப கெட்ட பய சார் அவன்” என சவால் விடுகின்றது ஈரான்

அரபுலகில் அது ஷியா நாடு என ஒதுக்கபட்டாலும் உலகளவில் அதற்கான ஆதரவு இருக்கின்றது

ஐரோப்பிய நாடுகள் பல ஈரான் பக்கம் நிற்கின்றது, ரஷ்யா பகிரங்கமாக ஆதரிக்கின்றது

துருக்கி ஈரான் எம் சகோதரன் என்கின்றது

அமெரிக்காவின் எண்ணம் முழுக்க ஈடேறுவதாக தெரியவில்லை, ஈரானிடம் எண்ணெய் வாங்காதே என அமெரிக்கா சொன்னால் உன் சோலியினை பார் என பல நாடுகள் சவால் விடுகின்றன‌

மிக சிறிய நாடான எஸ்தோனியா தான் அமெரிக்க உறவில் இருந்து விடுபடுவதாக சொல்லி அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருப்பது ஐரோப்பிய சலசலப்பு

ஆனால் உலகின் இரண்டாம் பெரும் மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா அமெரிக்காவிற்கு பணிகின்றது

இது ஈரானுக்கு கடும் சினத்தை ஏற்படுத்தி இருக்கின்றது, இது நல்ல விளைவுகளை தராது, பாகிஸ்தானை அடுத்திருக்கும் ஈரானை பகைப்பது இந்திய பாதுகாப்பிற்கு உகந்தது அல்ல‌

இங்குதான் ஆளாளுக்கு மோடியினை கலாய்கின்றார்கள் என்றால், ஈரானும் மோடியினை கலாய்க்க ஆரம்பித்தாயிற்று

இந்தியாவின் வெளியுறவு கொள்கையினை முடிவு செய்வது யார்? மோடியா டிரம்பா என அது அதிரடியாக கேட்கின்றது

“ஏண்டா டேய், உனக்கு தன்மானம் சுயமரியாதை என எதுவுமே இல்லையா?..” என்ற செவிட்டில் அடிக்கும் கேள்வி அது

மோடிக்கு இதைவிட பெரும் அவமானம் இல்லை…


கஜினியும் கோரியும் மாலிக்காபூரும் கூட ஆலயத்தை கொள்ளை அடித்தார்களே தவிர சிலையினை தொடவில்லை

அவர்களை விட கொடியவர்கள் தமிழகத்தில் இருக்கின்றார்கள்

 


 
 

எஸ்.வி ரங்காராவ் : பிறந்த நாள் நூற்றாண்டு இன்று…

Image may contain: 1 person, standing and text

தமிழ் திரையுலகின் பொற்கால படங்களில் சில நடிகர்கள் மறக்க முடியாத அற்புத நடிகர்கள். பாலையா, நாகையா போன்ற வெகுசிலரில் அந்த நடிகரும் ஒருவர்.

முதிர்ந்த பொறுப்பான குடும்பத்தின் தலைமகன் வேடத்திற்கு அவரை விட்டால் அந்நாளில் நடிகனே இல்லை.

அவரின் ஆஜானுபாகுவான உயரமும், , தீர்க்கம் காட்டும் முகமும் அந்த வேடத்தில் அவரை பிரகாசிக்க செய்தது

நீங்கள் பழைய படங்களின் ரசிகர்கள் என்றால் நிச்சயம் அந்த நடிகனை அவ்வளவு ரசித்திருப்பீர்கள்.

சமரல்ல வெங்கட ரங்க ராவ் எனும் எஸ்.வீ ரங்கராவ்

அற்புதமான நடிகர், அந்த முதிர்ந்த வேடங்களில் அவர் காட்டிய பண்பட்ட நடிப்பு அட்டகாசமானது. ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கு என இரண்டு இடங்களிலும் கோலோச்சினார்

தமிழ் திரையுலகத்திற்கு ஒரு விதி உண்டு. முதலில் ஒருவன் என்ன வேடம் இட்டானோ, அதே வேடத்தில் அவனை அது நிறுத்திவிடும்

ராமசந்திரன் வாள்சண்டையாளர் ஆனதும், சிவாஜி அழவே வந்து நின்றதும் இப்படித்தான். ரஜினி இமேஜ் முதல் ராமராஜனின் பசுமாடு அடையாளம் வரை அப்படித்தான். ஒரு அடையாளம் விழுந்துவிட்டால் மாற்ற முடியாது

அப்படி இளம் வயதிலே முதிர்ந்த வேடமிட்ட ரங்கராவிற்கு கடைசி வரை முதிர் வேடமே கிடைத்தது

அவர் ஒன்று முதியவர் அல்ல, கல்லூரி படித்துவிட்டு நடிக்க வந்தவர்தான். அவரின் 6 அடி உயரமும் குரலும் உடல் அமைப்பிற்கும் அவர் பெரும் கதாநாயக ஆகியிருக்க முடியும்

ஆனால் பட வாய்ப்பு அவருக்கு முதிர்ந்த வேடமே கொடுத்தது, கிட்டதட்ட சாவித்திரிடினை விட 10 வயது மூத்தவரான‌ அவர் சாவித்திரிக்கு தந்தையாக நடித்தார், பின் அந்த வேடம் நிலைத்துவிட்டது

இதே விபத்து நடிகையரில் சிலருக்கு நடந்தது ஸ்ரீவித்யாவும், வடிவுக்கரசியும் அந்த வகை. மிக இளவயதிலே முதிர்ந்த வேடம் ஏற்றதால் கடைசிவரை அதுவே நிலைத்துவிட்டது

ரெங்கராவ் எல்லா முதிர்ந்த வேடங்களிலும் பின்னி எடுத்தார், அந்த “படிக்காத மேதை” ரங்காராவினை யாரால் மறக்க முடியும்? படத்தின் தூணே அவர்தான். இவ்வளவிற்கு சிவாஜிக்கும் அவருக்கும் வயது இடைவெளி அதிகமில்லை

1950 முதல் 1970 வரை அவரின் நடிப்பு தமிழ்சினிமாவில் மகா முக்கிய பங்கு வகித்தது.

Image may contain: 1 person, close-upதேவதாஸ், மிஸ்ஸியம்மா என தொடங்கி நானும் ஒரு பெண், கற்பகம், கண் கண்ட தெய்வம், என பல படங்களில் அற்புதமாக நடித்திருந்தார்

பொறுப்பான அண்ணனாக “முத்துக்கு முத்தாக..” என அவர் பாடி வந்தபொழுது பல பொறுப்பான அண்ணன்களை கண்முன் நிறுத்தினார்.

தந்தை, மாமனார், அந்தஸ்தான முதலாளி என எல்லா கவுரவமான வேடங்களிலும் அசத்தினார்

சில வேடங்களில் வாழ்ந்து கெட்ட மனிதனாக அவர் வந்து நின்றபொழுது கலங்காத கண்களும் கலங்கின‌

தன்னை தவிர யாரும் நல்லவன் வேடத்தில் நடித்துவிட கூடாது என்ற பெரும் கொள்கையில் இருந்த ராமசந்திரன் தன் “நம்நாடு” படத்தில் அவரை வில்லனாக்கி மகிழ்ந்தார்

அதுவே பக்த பிரகலாதாவிலும் நடந்தது, அவரின் ஆஜானுபாகுவான உருவம் அதற்கு ஒத்துழைத்தது

சபாஷ் மீனா, எங்க வீட்டு பிள்ளை, சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் அவருடைய இயல்பான நகைச்சுவை பாலையா போலவே தெரிந்தது

கடோத்கஜன் வேடத்தில் அவர் “கல்யாண சமையல் சாதம்..” என்ற பாடலை பாடியபடி வரும் காட்சி, தமிழக சினிமாவின் தவிர்க்கமுடியாத காட்சிகளில் ஒன்று

மனிதர் அப்படியே கடோத்கஜனை கண்முன் நிறுத்தினார்.

குரலில் தனி கணீர் சத்தம் உடையவர் அவர், எல்லாவற்றிற்கும் மேல் அவரின் குரல் மாடுலேஷன்

இன்றும் மிமிக்ரி மேடைகளில் யாராவது ரங்கராவின் குரலை மிமிக்ரி செய்ய காணமுடியுமா என்றால் முடியாது, ஒரு விஷேஷ குரல் அது

சில படங்களை கூட தெலுங்கில் இயக்கியதாக சொல்வார்கள், நல்ல ஆற்றலும் இருந்தது.

ஆனால் இந்த அற்புத நடிகனுக்கு ஏதும் அரசு விருதுகள் கிடைத்ததா என்றால் இல்லை. ஏன் என்றால் இங்கு அப்படித்தான்

ரங்கராவினை நினைக்கும் பொழுதெல்லாம் ஒருவித பரிதாபம் தோன்றும்

தன் வேடங்களில் முதிர்ந்த வயது தோற்றத்தில் வந்த அவர் , தன் வாழ்வில் முதுமையினை எட்டவில்லை

அவர் மறையும்பொழுது 56 வயதுதான் ஆகியிருந்தது, தன் ஒப்பனையில் முதுமையினை கண்டாரே அன்றி தன் இயல்பான வயதில் காணவில்லை

தன் கிழட்டு வயதிலும் கல்லூரி மாணவனாக ராமசந்திரன் நடித்த திரையுலகில், இன்னும் பலர் வரிந்து கட்டி வலுகட்டாயமாக இளைஞரான் திரையுலகில் இன்றும் சிவகுமார் இளமையாக அலையும் திரையுலகில்

தன் இளம்வயதிலே முதிர்கிழவனாக நடித்த ரங்கராவ் அவர்களை விட பல மடங்கு உயர்ந்தவர்

கிழவனாக நடித்துவிட்டு முதுமை கோலம் பார்க்காமலே மரணித்த சில நடிகர்களில் அவரும் ஒருவர்

நடிப்பினை நேசித்த உயர்ந்த கலைஞர் அவர் , ரங்கராவ் இந்த உலகின் மிகசிறந்த நடிகர் என்பதில் சந்தேகமில்லை.

கமல்ஹாசன் ஒருமுறை சொன்னார், “காந்தி, பாரதி போல சிலரில் நான் ஒருமுறை பார்க்க விரும்பும் நபர் ரங்கராவ்”

அந்த அபூர்வ கலைஞனுக்கு இன்று 100ம் பிறந்த நாள். இப்பொழுதாவது உரிய அங்கீகாரம் கொடுக்கபட வேண்டும்

 

 
 

சவுதி எது? அபுதாபி எது?

No automatic alt text available.

சவுதி எது? அபுதாபி எது என்று கூட தெரியாத அளவிற்கு இருக்கும் பக்தாஸை நினைத்தால் பரிதாபமே வருகின்றது

சவுதிக்கும் அபுதாபிக்குமே வித்தியாசம் தெரியாத இவர்களுக்கா மோடியினை பற்றி முழுக்க தெரிய போகின்றது

சவுதியினை ஆட்டி வைத்தாராம் மோடி, அது பணிந்ததாம். இப்படி எல்லாம் கட்டு கதைகள்

 

பால் என்பது ஜிஎஸ்டி வகையில் வராது

Image may contain: one or more people and text

எல்லா நாடுகளிலும் ஜிஎஸ்டி என்பது எல்லா பொருளுக்கும் ஒரே அளவுதான்

அங்கெல்லாம் உணவு மற்றும் மருந்து பொருளுக்கு ஜிஎஸ்டி விதிவிலக்கு, அப்படித்தான் உலக யதார்த்தம்

இங்கே பாலுக்கும் மெர்சிடஸ் பென்சுக்கும் ஒரே ஜிஎஸ்டியா என கேட்பது அபத்தத்தின் உச்சம்

முதலில் பால் என்பது ஜிஎஸ்டி வகையில் வராது, அது உணவு பொருள்

ஏன் மிஸ்டர் மோடி?

உலகிலே எங்குமே பாலும் மெர்ஸிடஸ் பென்சும் ஒரே நாட்டில் கிடைப்பதே இல்லையா? அங்கெல்லாம் ஒரே ஜிஎஸ்டி இல்லையா

மிக அபூர்வமாக எல்லா பொருளும் இந்தியாவில் மட்டும்தான் இருக்கின்றதா?

 

மேட்டூர் திறக்கபட்டு காவேரி கல்லணைக்கு வந்தாலொழிய என்ன வெற்றி?

Image may contain: mountain, sky, outdoor, nature and water

காவேரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்புபடி கூடியிருக்கின்றார்கள்

கன்னடமோ உங்களுக்கு ஜூன் மாதத்திற்குரிய நீரை கொடுத்தாகிவிட்டது என்றிருக்கின்றது, இவர்களும் ஆமாம் என சொல்லிவிட்டு இப்படியே இந்தமாத நீரையும் கொடுத்துவிட வேண்டும் என சொல்லிவிட்டு வந்துவிட்டார்கள்

அதுவும் கன்னடம் உங்களுக்கு ஜூன் மாதமே நிறைய கொடுத்துவிட்டதால் ஜூலையில் குறைத்துதான் கொடுப்போம் என்றாலும் “நீங்கள் நியாஸ்தன்..” என சொல்லி வணங்கிவிட்டு வந்தாயிற்று

பழனிச்சாமி இது மாபெரும் வெற்றி வெற்றி என குதித்துகொண்டிருக்கின்றார்

வந்தது கபினியின் உபரி நீர், இந்த தீர்ப்பு இல்லாவிட்டாலும் அந்த நீர் வந்திருக்கும், உபரி நீர் போகத்தான் நமக்குள்ள நீரை வாங்க வேண்டும்

ஆனால் மழைக்கால வெள்ளத்தை அதுவும் 10 டிஎம்சியினை கணக்கு காட்டி தமிழகத்தை ஏமாற்றிவிட்டது கன்னடம்

பழனிச்சாமியோ வெற்றி வெற்றி என தன் வழக்கமான ஏமாற்று வேலையினை தொடர்கின்றார், மேட்டூர் காய்ந்து கிடக்கின்றது

மேட்டூர் திறக்கபட்டு காவேரி கல்லணைக்கு வந்தாலொழிய என்ன வெற்றி?

மகா மோசமாக காவேரியில் ஏமாற்றபட்டு பட்டை போடபட்டு அனுப்ப பட்டிருக்கின்றது தமிழகம்

இதை கேட்கவோ, கண்டிக்கவோ யாருமில்லை என்பதுதான் சோகம்

 
 

உலக கால்பந்து போட்டி : வெளியேறின மெக்ஸிகோவும் ஜப்பானும்

போராடி எதிரிக்கு மரண பயத்தை காட்டிவிட்டே வெளியேறி இருக்கின்றன மெக்ஸிகோவும் ஜப்பானும்

மெக்ஸிகோ அட்டகாசமாக ஆடியது, பிரேசிலின் அனுபவம் அவர்களுக்கு உதவியது. முதல் பாதியில் பம்மியவர்கள் பிற்பாதியில் சீறி கோலடித்துவிட்டு பின் தற்காத்து கொண்டார்கள்ப

காலப்ந்து உலகில் அதிகம் சம்பளம் பெறும் நெய்மர் தான் அதற்கு தகுதியானவர் என்பது போல அட்டகாசமாக கோல் அடித்தார்

உண்மையில் மெக்ஸிகோவும் வலுவான அணி, பிரேசில் தவிர் இன்னொரு அணி என்றால் நொறுக்கியிருப்பார்கள்

பெல்ஜியத்துடன் ஜப்பானின் ஆட்டம் அட்டகாசம். பெரும் போராட்டத்திற்கு பின்பே பெல்ஜியத்தால் வெல்ல முடிந்தது

ஆசியாவின் கடைசி நம்பிக்கையான ஜப்பான் போராடி வெளி வந்திருப்பது வாழ்த்திற்குரியது

ஆக வட அமெரிக்க , ஆசிய நாடுகள் விடைபெற்றுகொள்ள ஐரோப்பாவா? லத்தீன் அமெரிக்காவா என மல்லுகட்டுகின்றது உலக கோப்பை

இப்பக்கம் பிரேசிலும் உருகுவேயும் சீறி நிற்க அப்பக்கம் பிரான்ஸும் பெல்ஜியம் குரோஷியா என வரிசை வந்து நிற்கின்றது

இங்கிலாந்து இதில் இடம்பெறுமா இல்லை வெளியேறுமா என்பது இன்று தெரியும்

செயல்படாத தலைவர், அடிமை முதல்வர் இரண்டுமே ஒன்றுதான்

Image may contain: 1 person, text

செயல்படாத தலைவர் என்றால் அவரால் என்ன ஆகபோகின்றது? அடிமை முதல்வர் எப்படி உபயோகமில்லையோ அப்படி செயல்படாத டம்மியும் ஒன்றுக்கும் உதவாதவர்

ஆக செயல்படாத தலைவர், அடிமை முதல்வர் இரண்டுமே ஒன்றுதான்


தேர்தலில் நோட்டா ஆப்ஷன் என்பது தேவையில்லாத ஒன்று: தமிழிசை

நோட்டாவினை விட குறைவாக வோட்டு வாங்கும் அல்லது நோட்டாவோடு போட்டி போடும் கட்சிகள் மட்டும் தேவையா அக்கா?