திருட்டு அரசியல் தமிழகம்

துணை முதலமைச்சரே சொத்துகுவிப்பு வழக்கில் சிக்கிய பின்னும் இந்த ஊழல் ஆட்சியினை கலைக்க வேண்டும் என யாரும் குரல் எழுப்பவில்லை

ஏன் என்றால் இதுதான் திருட்டு அரசியல் தமிழகம்.

அப்படி செய்யும் பட்சத்தில் திமுக வளர்ந்துவிடும் என்பது பாஜக கணக்கு, அதனால் அது கள்ள அமைதி. தமிழிசை தாண்டவமாடாமல் இருப்பதற்கும், எச்.ராசா மவுன விரதம் இருக்கவும் இதுதான் காரணம்

சரி திமுக சொன்னால் என்ன?

அதற்கும் வேறு கணக்கு இருக்கின்றது, இந்த ஆட்சி சரியும் பட்சத்தில் பாஜகவினை அது நேருக்கு நேராக எதிர்க்க வேண்டும் என்பதால் அதுவும் அமைதி

சில்லறை கட்சிகளுக்கும் பாமாகவிற்கும் பாராளுமன்ற தேர்தலில் யாரோடு சேரபோகின்றோம் எனும் குழப்பம் இருப்பதால் அவர்களும் அமைதி

நிச்சயம் துணை முதலமைச்சர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யபட்டிருப்பதால் அந்த அட்சி நீக்கபட்டே ஆக வேண்டும்

ஆனால் அப்படி நீக்கபட்டுவிடுமோ , அய்யகோ என மொத்த கட்சிகளும் அஞ்சி நிற்கும் தருணம் இது

சுருக்கமாக சொன்னால் அயோக்கியர்களின் கள்ளத்தனம் அப்பட்டமாக தெரியும் நேரமிது

ஒருபயலும் உருப்படி இல்லை…


இந்த ரபேல் விமான ஊழல் பற்றி கலைஞரிடம் கேட்டால் என்ன சொல்லியிருப்பார் தெரியுமா?

பன்னீர் சகோதரரை காப்பாற்ற மத்திய அரசாங்கத்தார் ராணுவ ஹெலிகாப்டரை அனுப்பினார்களாம், ஒருவேளை பழனிச்சாமி குடும்பத்தாரை காப்பாற்ற ரபேல் விமானத்தை மகா அவசரமாக இந்த அரசு வாங்கியிருக்கலாம்


 

பன்னீர் மீது சொத்துகுவிப்பு வழங்கு

பன்னீர் மீது சொத்துகுவிப்பு வழங்கு பதிவாகிவிட்டது, அந்த கட்சி கலாச்சாரம் அது. ஜெயா வழியில் கட்சி ஆட்சி என அவர் சொன்னபொழுதே இப்படி சிக்குவார் என உறுதியாயிற்று

கட்சி கொள்கைபடி செயல்பட்டிருக்கின்றார் இதில் ஆச்சரியபட ஒன்றுமில்லை

ஆச்சரியம் என்னவென்றால் ஒரு துணை முதலமைச்சர் மேல் சொத்துகுவிப்பு வழக்கு தொடரபட்டிருக்கின்றது. அவர் நிச்சயம் அந்த பதவிக்கு தகுதியானவர் அல்ல‌

அவரை பதவி விலக சொல்லவோ இல்லை அவரை நீக்கு என பழனிச்சாமிக்கு அழுத்தம் கொடுக்கவோ யாரும் இல்லை என்பதுதான் அரசியல் கள்ளத்தனம்

காரணம் பன்னீரை தள்ளினால் ஆட்சி கலையும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

ஆக பன்னீர் எவ்வளவு சொத்து குவித்தாலும் அவர் மேல் எவ்வளவு வழக்கு வந்தாலும், அவர் அங்கம் வகிக்கும் பழனிச்சாமி அரசினை கலைக்க ஒருவருக்கும் விருப்பமே இல்லை என்பது புரிகின்றது

கூட்டுகளவாணிதனம் என்பது இதுவே தான்

ஆக பன்னீருக்கு சின்னம்மா பக்கத்தில் இப்பொழுதே சிறை தயாராகிகொண்டிருப்பது புரிகின்றது

நகைக் கொள்ளை

Image may contain: 1 person, close-upநகை கொள்ளை தொடர்பான விசாரணையில் தமிழகத்தில் திருட்டு நகைகளை வாங்கிய பிரபலநகைகடை முதலாளி கைதுசெய்யபட்டிருக்கின்றார்

விசாரித்ததில் அவருக்கு 15 வருடமாக திருடி கொடுத்தவர் தமிழகத்தில் வசிக்கும் இலங்கை அகதியாம்

அந்த திருடன் இன்னும் அகபடவில்லை என்பதால் போலிசார் கடும் வேகத்தில் தேடி வருகின்றனர்

இது ஒரு செய்தி அவ்வளவுதான்

நீங்கள் அங்கிள் சைமனின் கழுத்தில் கிடக்கும் பெரும் தங்க சங்கிலியினை பார்த்து புன்னகைத்தால் சங்கம் பொறுப்பல்ல‌


மாவீரர்களான குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உட்பட 53 பேருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

Image may contain: 3 people, people standingவெலிக்கடே சிறையில் 1983 ஜூலை கலவரத்தில் 53 போராளிகள் கொல்லபட்டிருந்தனர், மிக கொடூரமாக கொல்லபட்டனர்,

இதே ஜூலை 25ல் கொல்லபட்டனர்

அதுவும் குட்டிமணியின் கண்களை தோண்டியெடுத்து கொன்றிருந்தனர் ஏன் அவ்வளவு கோபம்?

குட்டிமணி குழுதான் முதன் முதலில் ஆயுதம் எடுத்து சிங்களனை மிரட்டியது, திருப்பி அடிக்க அவர்கள்தான் சொல்லிகொடுத்தார்கள்

பிரபாகரனை போல பங்கரில் பதுங்கியவனில்லை குட்டிமணி, போலிஸ் நிலையத்தை நொறுக்கிவிட்டு ஊருக்குள் வாலிபால் ஆடிகொண்டிருக்கும் அளவு அவனிடம் தைரியம் இருந்தது

அந்த கும்பலில் 11 வயதில் இணைந்தவர்தான் பிரபாகரன், அன்று அவருக்கு இருந்த வேலை துப்பாக்கியினை துடைத்து வைப்பது

மிகபெரும் துணிச்சலான தாக்குதலை எல்லாம் குட்டிமணி நடத்தினார், பெரும் பெயர் அவருக்கு இருந்தது, இந்த குழு தொடங்கிய இயக்கம்தான் டெலோ

இந்த டெலோவில் இருந்ததுதான் பிரபாகரனும், சபாரத்தினமும்

Image may contain: 2 people, people standing and outdoorபிரபாகரனின் அடாவடியான போக்கு அன்றே குட்டிமணிக்கு பிடிக்கவில்லை, விரட்டபட்டார் பின் செட்டி எனும் கொள்ளையனிடம் உறுப்பினரானார் பிரபாகரன்

செட்டியும் போராளி, ஆனால் ஒரே விஷயம் போராட்டத்திற்கு என எடுக்கும் பணத்தை எல்லாம் தானே சுருட்டிகொள்வார் செட்டி

இதன்பின் குட்டிமணிக்கு பெயர் அதிகரிக்க, மறுபடியும் வந்து சேர்ந்தார் பிரபாகரன், தன் விசுவாசத்தை காண்பிக்க செட்டியினையே கொன்றார்

மிக தீவிரமான பிரபாகரனின் போக்கு தங்கதுரைக்கும் பிடிக்கவில்லை, தங்கதுரை நிதானமானவர், நல்ல அறிவாளி

அரசு வங்கிகளை கொள்ளையடிக்கவேண்டும் என தங்கதுரை சொன்னால், தமிழர் அடகுகடையினையும் அடிக்கவேண்டும் என சொல்வார் பிரபாகரன்

அக்குழுவில் பிரபாகரனின் முட்டல் மோதல் தொடர்ந்தது, இந்நிலையில்தான் நீர்வேலி வங்கிகொள்ளையில் சிங்களன் தேட இந்தியாவிற்கு தப்ப மிக ரகசியமான இடத்தில் தங்கியிருந்தனர் குட்டிமணியும், ஜெகனும்

அப்பொழுதுதான் தகவல் கிடைத்து சிங்களன் சுற்றிவளைத்தான்.

இந்த தகவலை தன் கும்பலை சேர்ந்த ஒருவன் தான் சிங்களனுக்கு சொன்னான் என பின்னர் குட்டிமணிக்கு தெரிந்தது

அந்த துரோகி யார் எனும் சர்ச்சையதான் சபாரத்தினத்திற்கும், பிரபாகரனுக்கும் வெடித்தது

விஷயம் ஒன்றுமில்லை, இவர்களை தள்ளிவிட்டால் யார் தலைவன் எனும் போட்டியில் நடந்த துரோகம் அது

கோர்ட்டில் விசாரணை நடந்து கொண்டிருக்கும்பொழுது குட்டிமணியினை நாடாளுமன்ற உறுப்பினராக்க தயார் என அறிவித்தார் அமிர்தலிங்கம், அவ்வளவு ஆதரவு பெருகிற்று

இந்த தீவில் இருநாடுகள் சாத்தியம் என கோர்ட் அதிர முழங்கியவர் தங்கதுரை, ஈழவரலாற்றில் கோர்ட்டில் அவர் பேசிய பேச்சு மிக உணர்ச்சிகரமானது

நான் சாகின்றேன், ஆனால் என் கண்களை எடுத்து ஒருவருக்கு பொருத்துங்கள், அவர்கள் மூலம் பின்னாளில் மலரும் ஈழம் காண்பேன் என அதிரடியாக சொன்னான் குட்டிமணி

இந்த மாவீரர்கள்தான் வெலிகடை சிறையில் இருந்தனர் , தூக்கு விதிக்கபட்டாலும் தப்பியோ அல்லது அரசியல் நெருகடியிலோ இவர்கள் வெளிவரும் வாய்ப்பு இருந்தது

அப்படி வந்து குட்டிமணி தன்னை காட்டிகொடுத்தவன் யார் எனும் விசாரணையில் இறங்கினால்…

இந்நிலையில்தான் புலிகளின் ராணுவம் மீதான‌ அதிரடி தாக்குதலும் கொழும்பு கலவரமும் வந்து, வெலிக்கடை சிறையிலும் தொடர்ந்தது

கைதிகள் எனும் பெயரில் சிங்கள ரவுடிகள் உள்ளே அனுமதிக்கபட்டும் அந்த குட்டிமணி கோரகொலை நடந்தது, இந்த கண்கள் பார்க்க ஈழம் வேண்டுமா என்றுதான் அவர் கண்களை பிடுங்கினார்கள்

இந்த கோரத்திற்கு பின்புதான் போராளிகளுக்கு பயிற்சி, அகதிகளுக்கு பாதுகாப்பு என இந்தியா களமிறங்கி பின் புலிகளால் எல்லாம் நாசமாயிற்று

புலி, பிரபாகரன், முள்ளிவாய்க்கால் என பொங்குபவர்கள் இந்த மாவீரன் குட்டிமணிக்கு என்றாவது அஞ்சலி செலுத்தியதுண்டா?

ஏன் அந்த பிரபாகரனே எந்த இடத்திலும் தங்கதுரை, குட்டிமணியினை பற்றி சொல்லமாட்டார், ஏன் என்றால் அன்றே பிரபாகரன் தலையில் தட்டியவர்கள் அவர்கள்

தன்னை வளர்த்த அவர்களை பற்றி ஒருநாளும் பிரபாகரன் சொன்னதில்லை, ஈழத்திற்காக உயிரை விட்ட அவர்களை பற்றி மூச் விட்டதுமில்லை, அதனை விடமுக்கியன் இன்னொருவர் பேச அனுமதிப்பதுமில்லை

பாகுபலி மன்னன் போல அவனை திட்டமிட்டு மறைத்தனர் புலிகள், பின் மகுடம் சூடி அதுவும் நாசமாயிற்று

அந்த மாவீரன் குட்டிமணியினை நாம் நினைத்துகொள்ளலாம், இந்த கோரதாண்டவத்தால் செத்த தங்கதுரையின் மனைவிக்கு எம்ஜிஆர் சென்னையில் வீடு எலலாம் அன்றொரு நாள் வழங்கியிருந்தார்

இதனை எல்லாம் தமிழகத்தில் எந்த ஈழ உணர்வாளனும் பேசமாட்டார்கள் மாறாக முள்ளிவாய்க்கால் என வங்ககடலில் மெழுகு பிடிப்பார்கள், சீமானும் வைக்கோவும் பிரபாகரன் என ஒப்பாரி வைப்பார்கள்

கடலுக்கு மே 17ல் பங்குனி 17 என விளக்கு பிடிக்கும் திருமுருகன் என்பனும் இதை பற்றி எல்லாம் மூச் விடமாட்டான்

புலிகளின் அடிமையான பழ.நெடுமாறன் , கொளத்தூர் மணி எல்லாம் இதனை திட்டமிட்டு மறைப்பார்கள்

இவர்கள் குட்டிமணியினை மறந்த பிரபாகரனை விட மோசமானவர்கள்

அந்த சிறைபடுகொலையினை நிகழ்த்திய‌ சிங்களனை விட மகா மட்டமானவர்கள்

அந்த மாவீரர்களான குட்டிமணி, ஜெகன், தங்கதுரை உட்பட 53 பேருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

(தங்கதுரையின் மனைவிக்கு சென்னையில் வீடு அளித்தார் ராமசந்திரன் அவர் செய்த சில‌ உருப்படியான காரியங்களில் அதுவும் ஒன்று)

ஈழபோராட்டம் வீரத்தாலும் ரத்தத்தாலும் மட்டுமல்ல படுபயங்கர துரோகத்தாலும் நடந்தது.

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் : ஓ.பி.எஸ்

Image may contain: 1 person, text

பன்னீரை நிர்மலா விரட்டியது விஷயம் அல்ல, விரட்டபடுவது பன்னீருக்கு புதிதும் அல்ல‌

ஜெயா அப்படி பன்னீரை குட்டிகரணம் அடிக்க வைத்திருந்தார், சசிகலா கோஷ்டி பன்னீரை காதை திருகி தலைகீழாக தொங்க விட்டிருந்தகாலமும் இருந்தது

மன்னார்குடி குடும்பம் இருமினாலே தலையால் நடந்தவர் பன்னீர்

அவமானத்திற்கே அவமானம் கொடுத்தவர் பன்னீர் என்பது கடந்த வரலாறு

விஷயம் அந்த விரட்டல் அல்ல மாறாக பன்னீரின் சகோதரருக்கு கொடுக்கபட்ட விமான உதவி

பன்னீரின் சகோதரருக்கு உடல்நல தேவைக்காக ராணுவ விமானத்தை நிர்மலா ஒதுக்கினார் என்ற நன்றிகடனுக்குத்தான் அவரை பார்க்க சென்றார் பன்னீர் என செய்திகள் கசிகின்றன‌

இதை இதுவரை நிர்மலா மறுக்கவில்லை

பன்னீரின் சகோதரர் என்ன அரசு பதவியில் இருந்தாரா? இல்லை தேச தியாகியா? ராணுவ வீரனா குறைந்தபட்சம் குப்பையாவது அள்ளினாரா என்றால் இல்லை

பின் எந்த தகுதியில் பன்னீரின் சகோதரரின் சிகிச்சைக்கு ராணுவ விமானம் ஒதுக்கபட்டது?

அப்படி மக்கள்நலம் பேணும் அரசு என்றால் எல்லா சாமானியனையும் ஹெலிகாப்டரில் தூக்கி செல்வார்களா?

இது கண்டிக்கபட வேண்டிய விஷயம், நிர்மலா சீத்தாராமன் விளக்கம் கொடுக்க வேண்டிய விஷயம்

எதிர்கட்சிகள் முறையாக நெருக்கடி கொடுத்தால் நிச்சயம் நிர்மலாவிற்கு சிக்கல்தான்

இச்சம்பவத்தை வெளியில் சொன்னவர் பன்னீர், அந்த கோபத்தில்தான், இது வெளியில் தெரிந்தால் சிக்கலாகும் என்ற பயத்தில்தான் பன்னீர் முகத்தில் கதவால் அடித்திருக்கின்றார் நிர்மலா

கிட்டதட்ட மூடனுக்கு உதவிய நிலையில்தான் நிர்மலா சிக்கி இருக்கின்றார், சரியாக அவரை பிடித்து கேட்க இங்கு யாருமில்லை

இப்போதைய சூழலில் டிடிவி தினகரன் கேட்டால்தான் உண்டு


“அண்ணா, எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்…

இதையும் தாங்க ஏது அண்ணா இதயம்?”


Image may contain: one or more people “ஆத்தா நீ சின்னம்மாவ‌ வளர்த்தா, தினகரன வளர்த்தா விவேக்கையும் வளர்த்தா

ஆனா அல்ஷேசியன் நாய்க்கு பதிலா என்னத்தான வளர்த்தா, அது அந்த டெல்லிகாரிக்கு புரியமாட்டேங்குது

நீ இல்லாத இந்த அனாதை அடிமைய ஆளாளுக்கு அடிக்கிறாங்க ஆத்தா, தாங்க முடியல ஆத்தா”

 


Image may contain: one or more peopleஎதையும் தாங்கும் இதயம் வேண்டும், நிர்மலா சீத்தாராமன் சந்திக்க மறுத்தது குறித்து ஓ.பி.எஸ் பேட்டி

இதற்கு எதையும் தாங்கும் இதயம் அல்ல, எதையும் தாங்கும் முதுகும் முகரையும் வேண்டும்

அப்படித்தான் செவிட்டில் அடித்தது, முதுகில் மிதித்து தள்ளியது போல தள்ளி இருக்கின்றார் நிர்மலா, அன்னார் ஏதோ அண்ணா பாணியில் ஆறுதல் அடைகின்றாராம்.

திமுக இம்மாதிரி அவமானங்களை சந்தித்தால் இதுதான் “ஆரிய திமிர், பார்ப்பன அதிகாரம், பெரியாரின் செருப்பே இதற்கு பதில், அடலேறே களம் காண்பாய் , களங்கம் துடைப்பாய்” என்றெல்லாம் நிலமையினையே மாற்றி போட்டு அரசியல் செய்யும்

ஆனால் பிராமணர் ஜெயலலிதா முன் குனிந்து நின்ற பன்னீர் இப்படி எல்லாம் எப்படி சொல்ல முடியும்?

கலைஞர் நலமாய் இருந்தால் பன்னீரை எப்படி கலாய்ப்பார் தெரியுமா?

“அண்ணா சொன்னது இதயம் உள்ளவர்களுக்கு, இதயமே இல்லாதவர்கள் இதயம் இல்லாதவர்களுக்கு சுயமரியாதை ஏது? மானம் ஏது? “


நாட்டின் கெளரவத்தை கெடுத்துவிட்டார் ராகுல்

மக்களவைத் தேர்தலுக்கு அதிமுக தயார்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

அதாவது டெல்லியில் வெட்டியாக‌ முகாமிட்டிருக்கும் 36 எம்பிக்களுக்கு முடிவு கட்ட போவதாக சொல்லி கொள்கின்றார் பழனிச்சாமி


நாட்டின் கெளரவத்தை கெடுத்துவிட்டார்: ராகுல் மீது பியூஷ் கோயல் குற்றச்சாட்டு

காந்தி கொலை, பாபர் மசூதி இடிப்பு, பெரும் கலவரங்கள் என அந்த கோஷ்டி செய்யும்பொழுது கெடாத கவுரவம் ராகுலால் கெட்டுவிட்டதாம்


சொத்து வரி உயர்வை கண்டித்து 27ல் தி.மு.க., ஆர்ப்பாட்டம் : மு.க‌ ஸ்டாலின் அறிவிப்பு

ஸ்டாலினுக்கு சொத்து மிக அதிகமிருப்பதால் வரிகட்ட பயப்படுகின்றார் என தமிழிசை சொன்னால் எப்படி இருக்கும்?

அக்கா நிச்சயம் சொல்வார்


இவ்வளவு நடந்த பின்னும் இனி எவனாவது மறவன்டோய், வீரன் டோய், மானத்திற்கு இழுக்குண்ணா கழுத்த வெட்டி சாகுற சாதிடோய்னு இந்த பக்கம் வந்தீங்க……


Image may contain: 2 people, people sitting

“அட அமைச்சரம்மா, அவன்பாக்கத்தான் அப்படி இருப்பான் ஆனா பாவம் அடிச்சா விழுந்துருவான்

வாங்க, கொட்டுங்க நல்லா கொட்டுங்க..

கொட்டியாச்சா.. அடுத்த ரவுண்ட் கொட்டுறவரை அப்படியே இருப்பான்”

———எடப்பாடி மைன்ட்வாய்ஸ்