பி.ஆர் பந்துலு பிறந்த நாள்

Image may contain: 1 person, close-up

பி.ஆர் பந்துலு பிறந்த நாளில் அவரை பற்றி எழுத சொல்லி சிலர் கேட்டார்கள்

அவர் கோலார் பக்கம் கர்நாடகாவில் பிறந்தவர், பேசா படங்கள் வந்தபொழுதே நடிக்க வந்தவர், பலருடன் பணி புணிபுரிந்தார், பின் சொந்தமாக கம்பெனி தொடங்கி தடுமாறி கொண்டிருந்தார்

ஓரளவு அவர் வெளிதெரிந்த காலங்களில்தான் சிவாஜி கணேசனின் பிரவேசம் நடந்தது. சிவாஜிக்கும் பந்துலுவிற்கும் அப்படி ஒரு சிநேகம் ஒட்டிகொண்டது

கத்துவார்கள், சண்டையிடுவார்கள் இருவரும் பேசாமல் முரண்டு பிடித்த காலங்களும் உண்டு. ஆனால் பிரியவில்லை

சிவாஜி மேல் மிக பிரியமும் உரிமையும் கொண்டிருந்தவர் பந்தலு

அப்பொழுதுதான் வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன்,கர்ணன் போன்ற காவிய படங்கள் எல்லாம் வந்தன, இயக்கி தயாரித்தவர் பந்துலு

பராசக்திக்கு பின் சிவாஜி கடும் வேகத்தில் முன்னேறி கொண்டிருந்தார் அவரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் கணேசன் தான் எல்லா தயாரிப்பாளர் படத்திலும் நடிக்குது என புலம்பிகொண்டிருந்தார் ராமசந்திரன் எனும் நடிகர்

சிவாஜிக்கு நடிக்க தெரியுமே தவிர அரசியல் தெரியாது, ஆனால் ராமசந்திரனுக்கு நடிக்க தெரியாதே தவிர யாரை எப்பொழுது பயன்படுத்த வேண்டும் , எப்பொழுது விரட்ட வேண்டும் , எதை எப்படி பிரிக்க வேண்டும் என்ற அரசியல் அத்துபடி

ஒருவரை கணித்துவிடுவதில் ராமசந்திரன் கெட்டிக்காரர்

அப்படித்தான் சின்னப்பா தேவரை கடைசி வரை சிவாஜியினை நெருங்கமுடியாமல் கட்டுபடுத்தி வைத்திருந்தார் ராமசந்திரன், இருவரும் ஒரே சாதி என்றாலும் சிவாஜி பக்கம் தேவரால் செல்ல முடியவில்லை

அப்படிபட்ட ராமசந்திரன் பந்துலுவிற்கும் ஸ்கெட்ச் போட்டார், எப்படி?

ஏதோ வருத்ததில் பந்துலுவும் சிவாஜியும் இருந்தபொழுது ராமசந்திரனுக்கு வாய்ப்பு கிடைத்தது

அது முரடன் முத்து தொடர்பான சர்ச்சை, சிவாஜிக்கு 100ம் படம் என அவர் சொல்லிகொண்டிருக்க, சிவாஜிக்கு முரடன் முத்துதான் 100ம் படம் , நடிகனுக்கு தன் பட கணக்கு தெரியாதா என பந்துலு சொல்லிவிட இருவரும் பிரிந்தனர்

கிட்டதட்ட இளையராஜா வைரமுத்து பிரிந்தது போன்ற நிலை அது

அந்த கட்டத்தில் ராமசந்திரன் புகுந்தார், யாரிடமும் வலிய செல்லாத ராமசந்திரன் பந்துலுவினை கட்டி பிடித்து அண்ணா என அலறினார்

இதில் சிவாஜி பந்துலு நட்பு முறிந்தது

ராமசந்திரனின் ஆயிரத்தில் ஒருவன் படங்கள் வர ஆரம்பித்தன, ராமசந்திரனின் கணக்கு தப்பவில்லை, ராமசந்திரன் வெற்றிபடிகளில் வேகமாக ஏறினார்

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தை பந்துலு இயக்கிகொண்டிருந்த பொழுது மரணம் அடைந்தார், அதற்கு ராமசந்திரனின் மேக் அப் காரணமாக இருக்கலாம் என நாமாக முடிவு செய்து கொண்டோம்

அந்த முகத்தை படம்பிடித்த அதிர்ச்சியில் பந்துலு உயிர் துறந்திருக்கலாம்

காரணம் இல்லாமல் இல்லை, சிவாஜியினை கட்டபொம்மனாக, வஉசியாக அச்சு அசலாக காட்டிய பந்துலு, ராமசந்திரனை சுந்தரபாண்டியனாக காட்ட முடியாமல் உயிர்விட்டிருக்கலாம்

“அடேய் ராமசந்திரா இது உனக்கு சரிவராத வேடம், சிவாஜிக்கு பொருந்த கூடிய வேடம் சண்டாளா..” என சொல்லமுடியா நிலையில் அவர் இதயம் மாரடைப்பால் நின்றிருக்கலாம்

எதை எல்லாமோ கெடுத்த ராமசந்திரன் பந்துலுவினையும் கெடுக்க தவறவில்லை

சித்தார்த்தன் காலத்திலே தலைவி இருந்திருந்தால்

 

Image may contain: 1 person, smiling, close-upImage may contain: 1 person, smilingஅந்த சித்தார்த்தன் காலத்திலே தலைவி இருந்திருந்தால் அவன் காட்டுக்கு சென்றிருப்பானா? புத்தம்தம் தான் கிடைத்திருக்குமா?

அரிச்சந்திரன் காலத்தில் இருந்திருந்தால் அவன் சந்திரமதியிடம் உண்மையா பேசியிருப்பான்

ஆக‌ புத்தனையும், அரிசந்திரனையும் இன்னும் சிலரையும் வரலாற்றில் நிறுத்தியதே தலைவிதான்…


Image may contain: 1 person, smilingஇப்படி எல்லாம் மேக் அப்பில் வந்தால் தமிழிசை குஷ்பு ஆக முடியுமா?

தலைவிக்கு போட்டி கொடுப்பதாக நினைத்து தமிழிசை அக்கா வந்து நிற்கும் காட்சி.

“கான மயிலாட கண்டிருந்த வான்கோழி 
தானும் அதுவாகப் பாவித்துத் தானுந்தன்
பொல்லாச் சிறகை விரித்தாடினார் போலுமே….” என்பது இதுதான்


கலைஞர் என்பது நதி

Image may contain: 1 person, sunglassesகலைஞரின் உடல்நிலையினை பற்றியும் அவரின் முதிர்ம காலத்தை பற்றியும் சிலருக்கு கடும் ஆனந்தம்

முதுமைக்கும் அதன் முடிவிற்கும் தப்புவது யார்? ஒருவனும் இல்லை ஏன் அவதாரங்களாலும் முடியாது. உலக யதார்த்தம் அது

அதற்கு கலைஞரும் விதிவிலக்கு அல்ல‌

ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்

இயேசு இல்லை ஆனால் அவரின் கொள்கைகள் நிலைபெற்றன‌

புத்தன் இல்லை ஆனால் அவனின் தத்துவம் நின்றுவிட்டது

கார்ல் மார்க்ஸ் இல்லை ஆனால் அவனின் கொள்கைகள் அமரத்துவம் பெற்றுவிட்டது

கலைஞர் இல்லா காலத்திலும் அவரின் இயக்கமும் அவரின் கொள்கைகளும் நிலைபெற்று நிற்கும் அது சத்தியம்

அவ்வகையில் அவருக்கு ஒரு நாளும் முடிவே இல்லை.

கலைஞர் நாத்திகரா, ஆத்திகரா, அரசியல்வாதியா, இலக்கியவாதியா பலருக்கு கண்ணில் விழுந்த மண்ணா? இல்லை இதயத்தில் விழுந்த ஈட்டியா? என்பது வேறு விஷயம்

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தையும் எப்படி அணுக வேண்டும், வாழ்வின் ஒவ்வொரு சிக்கலையும் எப்படி கடந்து செல்ல வேண்டும் என்று இந்த உலகிற்கே சொல்லி வாழ்ந்து காட்டியவர் அவர்

அவர் சந்தித்த சிக்கல்களை , சவால்களை யாரும் வாழ்வில் சந்திக்க முடியாது. அந்த சவால்களை எல்லாம் மிக துணிச்சலாக சந்தித்து வென்றவர்

கலைஞர் என்பது தனிச்சொல் அல்ல, திமுக எனும் கோடான கோடி தொண்டர்களின் பொதுச்சொல். ஒவ்வொரு முறை நெருப்பாற்றை தாண்டியபொழுதும் அந்த இயக்கத்தையும் சேர்த்தே காப்பாற்றி கரையேற்றி இருக்கின்றார்

அந்த அசாத்திய மனிதன் இன்று அமைதியாகி இருக்கலாம், ஆனால் எல்லா வழிகளிலும் எல்லோருக்கும் வழிகாட்டி விட்டே அமைதி ஆகியிருக்கின்றார்

என் தந்தை முழு காங்கிரஸ்காரர். அதுவும் 1960களில் வெறிபிடித்து நின்ற கன்னியாகுமரி காங்கிரஸ்காரர்களில் ஒருவராக நாகர்கோவிலில் இருந்தவர்

திமுகவினையோ அதன் கொள்கைகளையோ அவர் ஏற்றவர் அல்ல, காமராஜரை அது தோற்கடித்த வலி எக்காலமும் அவரிடம் இருந்தது

ஆனால் கலைஞரை சந்தித்துவிட்டு வந்தபொழுது என்னிடம் சொன்னார்

“என் வாழ்வில் இனி வாழமுடியாது என்ற நிலை வரும்பொழுதெல்லாம் கலைஞரை நினைத்துகொள்வேன் மனம் ஆறுதல் அடைந்து உற்சாகம் பெறும்

அந்த அளவு சிக்கல்களை பெரும் சிக்கல்களை எல்லாம் சந்தித்து சிக்கல்களை நகைச்சுவையாக அணுகி வலிபொறுத்து கடந்து சென்றவர் கலைஞர்

அவர் அளவு சிக்கல்களை சந்தித்தவனுமில்லை, அவரை போல் மீண்ட ஒருவனுமில்லை

வாழ்வில் ஆயிரம் சிக்கல் வரலாம், ஆனால் ஒரு கட்டத்தில் திசைமாறும், ஏதாவது ஒரு கட்டத்தில் நமக்கு சாதகமாய் திரும்பும் அதுவரை போராடு, உழைத்துகொண்டே இரு என்பதுதான் கலைஞரின் வாழ்வு தத்துவம்

போராட்டமே வாழ்க்கையான மனிதனுக்கு கலைஞரின் வாழ்வினை விட ஆறுதலும் முன்மாதிரியுமான வாழ்வு எதுவுமில்லை”

என் காதுகளில் எக்காலமும் ஒலிக்கும் தந்தையின் வரிகள் இவை

கலைஞர் என்பது நதி, அதற்கு முடிவே இல்லை எக்காலமும் ஏதாவது ஒரு வகையில் அது ஓடிகொண்டே இருக்கும் , யாராவது ஒருவன் அதனால் பயன்பெற்றுகொண்டே இருப்பான்

அந்த நிதர்சன உண்மையினை ஏற்கமுடியாதவர்கள் சாகலாம், அது ஒன்றுதான் அவர்களுக்கான மன ஆறுதலை கொடுக்கும்


கலைஞர் போலவே முதுமையின் கொடுமையில் சிக்கி கிடப்பவர் வாஜ்பாய், அவரைபற்றி எவனாவது பேசுவானா என்றால் இல்லை

ஆனால் கலைஞரை மட்டும் என்னவெல்லாமோ சொல்லி அந்த தண்டனை, இந்த தண்டனை என நிந்தனை வசைபாடிகொண்டே இருக்கின்றார்கள்

கடவுள் பக்தி மிக்கவரும், மகா ஆச்சாரியம் காத்தவருமான வாஜ்பாய் என்ன குற்றம் செய்தார் என கேட்டால் பதில் வராது


You Tubeல் அங்கிள் சைமன் அள்ளிவிட்ட வீடியோக்களை கண்டு உணர்ச்சியில் பொங்கி திமுக ஒழிக, கலைஞர் ஒழிக என சொல்லி திரிபவன் எல்லாம் திருப்பூரில் You Tube பார்த்து பிரசவம் கவனித்து பெண்ணை கொன்றவனை திட்டி திரிகின்றான்

அவனுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

இரண்டுமே You Tubeல் ஏமார்ந்த கோஷ்டி, போங்கடா டேய்


காஷ்மீரை எமது ராணுவம் காத்த வெற்றி பெருநாள் இன்று… ஜெய்ஹிந்த்

Image may contain: 1 person, sky and outdoor

அப்பொழுது வாஜ்பாய் பிரதமராக இருந்தார் ஒருபக்கம் அணுகுண்டு வெடித்தாலும் இன்னொரு பக்கம் பாகிஸ்தானுடன் நல்லுறவிற்கே முயன்றார்

அவரின் டெல்லி லாகூர் பேருந்து முயற்சி நிச்சயம் இந்திய வரலாற்றின் மாபெரும் அமைதி முயற்சி. அது கொஞ்சகாலம் நடக்கவும் செய்தது

பஸ்களில் பயணிகளை அனுப்பிய பாகிஸ்தான் சத்தமில்லாமல் இன்னொரு காரியத்தையும் செய்தது அதாவது காஷ்மீரின் கார்கில் பகுதியில் தீவிரவாதிகள் எனும் பெயரில் பாகிஸ்தான் ராணுவத்தை அனுப்பியது

சோழமன்னன் காலத்தில் புலிகொடி பறந்த சிகரம் உள்ள இடம் அது, பாண்டியர் மீன் முத்திரை பதித்த இடங்களும் உண்டு

வஞகமாக தன் குரங்கு சேட்டையினை நரிதந்திரமாக செய்தது பாகிஸ்தான், இந்திய உளவுதுறையின் தோல்வியும் நாம் ஒப்புகொள்ள கூடியது எனினும் பனிபடர்ந்த அம்மலை புவியில சிக்கல் உள்ள இடம் என்பதும் இன்னொரு விஷயம்

போராளிகள் என்ற பெயரில் பாகிஸ்தானிய ராணுவம் கார்கிலை ஆக்கிரமித்து மொத்த காஷ்மீரையும் விழுங்கும் முயற்சியில் ஈடுபட்டபொழுது பாகிஸ்தானை விரட்டி அந்த இடத்தை இந்தியா மீட்டது

காஷ்மீரை எமது ராணுவம் காத்த வெற்றி பெருநாள் இன்று.

மிக வலுவாக காலூன்றிய பாகிஸ்தானை நாம் போட்டு அடித்த நாள் இது, ஆப்கனை கைபற்றிய தாலிபன்களும் ஐஎஸ்ஐ வழிகாட்டலில் ஊடுருவியிருந்தார்கள்

உண்மையில் அது மிகபெரிய போர், அந்த போரில்தான் இந்திய ராணுவம் பெரும் வெற்றிபெற்றது,

அந்த போரினை பார்த்தவர்களுக்கு புரியும், அது முஷாரப் ரகசியமாக நடத்திய போர், முதலில் திணறிய இந்தியா கொஞ்சம் உயிர் பலிகளை கொடுதது

பின் சுதாரித்து நிலமையினை அளந்து அடித்தது, இந்திய விமானபடையின் வீரமான அதே நேரம் நுட்பமான தாக்குதலும் பாகிஸ்தானை ஓட வைத்தது

இது தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் என ராஜதந்திரமாக இந்தியா அடித்த அடியில் திருடனுக்கு தேள் கொட்டியது போல் பாகிஸ்தான் ராணுவம் பல்லை கடித்து கொண்டிருந்தது

மறுபடியும் பாகிஸ்தானுக்கு மூக்கு உடைந்தநாள் இன்று, இந்த தோல்வியே பின்பு முஷாரப்புகும் நவாசுக்கும் பெரும் முரண்பாடாய் முடிந்தது

இந்திய எல்லையில் ஊடுருவ வந்த எதிரிகளை அடித்து விரட்டி நம் நிலத்தை நம் ராணுவம் காத்த நாள் இன்று.

அப்படி அந்த கார்கிலை மீட்க தேவைபடும் ராணுவம் அதன் பின் அப்பக்கம் செல்ல கூடாதாம், செல்லாவிட்டால் என்ன ஆகும் அதேதான் அதே ஊடுருவல் ஆக்கிரமிப்பு, அதே சண்டை.

இப்படி காஷ்மீரை இந்திய ராணுவம் காப்பதன் பெயர்தான் ராணுவ ஆக்கிரமிப்பாம், இதனை சொல்ல கூட்டமும், பேரணிகளும் வேறு

இதனை எல்லாம் இங்குள்ள மனித நேய போராளிகளுக்கு தெரியுமா என்றால் தெரியும், பின்னர் ஏன் சாடுகின்றார்கள் என்றால் அப்படி காஷ்மீரிலிருந்து பின் இந்தியாவிலிருந்தே இந்திய ராணுவத்தை விரட்டிவிட்டால் இத்தேசம் உடையுமாம், ஈழநாடு, திராவிட நாடு, தனி தமிழ்நாடு எல்லாம் கிடைக்குமாம்

அப்படித்தான் ஏதாவது அர்த்தமில்லாமல் பேசுவார்கள்

கார்கில் மீட்பில் பலியான எமது வீரர்களுக்கு பெரும் அஞ்சலி செலுத்தி, இந்நாளை நினைவு கூர்வோம்

வெள்ளிபனிமலை மேலுலவுவோம்.. என்ற பாரதியின் வரிகளுடன் கம்பீரமாய் வீர வணக்கம் செலுத்துவோம்

வந்தே மாதரம்…ஜெய் ஹிந்த்

ஆப்பிரிக்காவில் மோடி ….

Image may contain: 4 people, people standing, suit and outdoor

ஆப்ரிக்காவின் பொருளாதார வளர்ச்சி மேம்படுத்த மோடி உறுதி : செய்தி

இந்தியாவினைத்தான் அவரால் வளர்க்க முடியவில்லை பாவம் ஆப்ரிக்காவினையாவது வளர்த்து காட்டட்டும்

ஆப்ரிக்காவினை எப்படி வளர்ப்பது? மோடிக்கு தெரியாத வித்தையா?

இந்தியாவினை இன்னும் நாசமாக்கி ஆப்ரிக்கா அளவிற்கு கொண்டு சென்றுவிட்டால் தீர்ந்தது விஷயம்.

இந்தியா அளவிற்கு ஆப்ரிக்காவினை கொண்டுவந்துவிட்டார் இந்த ஏழைத்தாயின் மகன் என கண்ணீர்விட்டு உருக்கமாக சொல்லிகொள்ளலாம்


எங்கு சென்றாலும் பசுமாடு மேய்க்க வேண்டும், இதற்கு இந்திய பிரதமர் என்ற பதவி எதற்கு?

நடிகர் ராமராஜன் போதாதா?

Image may contain: 1 person, standing and outdoor

ராகுல்காந்தி என்னை கட்டிபிடிக்கும் முன் 10 முறை யோசிக்க வேண்டும் : உபி முதல்வர் யோகி

ஆமாம், கண்டிப்பாக யோசிக்க வேண்டும்

சதா காலமும் மாடு, ஹோமியம், பசுஞ்சாணம் என மாட்டு தொழுவிலே புரண்டுகொண்டிருக்கும் இவரை கட்டிபிடிக்க ராகுல் யோசிக்கத்தான் வேண்டும்


“பயங்கரவாதத்தை ஒழிக்க ஆப்ரிக்க நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்படும்” : மோடி

சிவசேனை, ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளுடன் , இந்த பசுமாட்டு கோஷ்டிகளுடன் ஏதும் மோதல் என்றால் நேரில் சொல்லலாம், அதற்காக ஆப்ரிக்கா சென்று ஆதரவு திரட்ட வேண்டுமா?


மராத்தா போராட்டம்

Image may contain: one or more people, crowd and outdoor

மராத்தா என்பது மகராஷ்டிரத்தின் குறிப்பிட்ட சாதி கிட்டதட்ட 30% அகள் அம்மாநிலத்தில் வசிக்கின்றார்கள்

சக்கதவர்த்தி வீர சிவாஜி முதல், அன்னா ஹசாரே வரை பெரும் பிம்மபங்களை கொடுத்த சாதி அது. மராட்டியம் என்பது எங்கள் பூமி என சொல்லி கொள்வார்கள்

அவர்களிலும் எம்.எல்.ஏக்கள் எல்லாம் உண்டு, முன்னாள் முதல்வர்களே உண்டு எனினும் அவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டுமாம்

கிட்டதட்ட 1980களில் தமிழகத்து ராமதாஸ் வன்னியர் சங்கம் மூலம் முன்னெடுத்த போராட்டத்தின் சாயல் இது, தமிழகம் தான் எத்தனை போரட்டங்களுக்கு வழிகாட்டி இருக்கின்றது

இந்த மராத்தா கிராண்டி மோர்ச்சா எனும் பேரணியும் போராட்டமும் 2016லே தொடங்கின, ஒரு மராத்தா சிறுமியினை மற்ற இனத்தார் மானபங்கபடுத்திய வகையில் “ஏய் மானமுள்ள மராத்தா இனமே, எங்கே உன் சரித்திர வீரம்?” என சிலர் அழைக்க மொத்தமாய் திரண்டார்கள்

அது சிறிய பேரணியாக கிளம்பி கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி இப்பொழுது வெடிக்கின்றது

இது இருவருட போராட்டங்களின் தொடர்ச்சி இப்பொழுது பகிரங்கமாக போராடுகின்றார்கள்

இதில் முஸ்லீம்களுக்கும் மராத்தா இனத்திற்கும் சில உரசல்கள் உண்டு என்பதால் விஷயம் கொஞ்சம் கவனமாகவே நோக்கபடுகின்றது

3 பேர் இறந்திருக்கின்றார்கள், வன்முறை வெடிக்கின்றது இந்த போராட்டத்தின் தலமை குழு இதனால் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தாலும் மக்கள் அடங்குவதாக தெரியவில்லை

விரைவில் தேர்தல் நடக்க போகும் மாநிலம் என்பதால் ஏகபட்ட அரசியல் கணக்குகள், பாஜகவிற்கும் சிவசேனைக்கும் பிணக்கு ஏற்பட்டிருக்கும் நேரத்தில் பாஜகவின் கணக்கும் இதில் உண்டு

மராட்டியத்தின் ஆண்ட பரம்பரையான மராத்தா போராட்டம் நல்லபடியாக ஓய்ந்து அங்கு அமைதி திரும்பட்டும்


ஹர்திக் பட்டேலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

சாதி கூட்டத்தை கூட்டி பொது சொத்துக்களை சேதபடுத்தி சமூக அமைதியினை கெடுக்கும் இவரை போன்றவர்களுக்கு 2 ஆண்டு போதாது, 20 ஆண்டுகளாவது வேண்டும்

இந்த தண்டனை இந்தியா எங்கும் பரவட்டும், குறிப்பாக தமிழகத்தில் உடனே வரட்டும்


செவ்வாய் கிரகத்தில் 20 கி.மீ பரப்பளவுள்ள ஏரி கண்டுபிடிப்பு : நாசா அறிவிப்பு

தமிழகத்து ஏரிகள் நிறைய‌ காணாமலே போய்விட்டன, அதை நாசாவாலும் கண்டுபிடிக்கவே முடியாது.


முன்னனியில் இம்ரான்கான்

பாகிஸ்தான் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் இருக்கின்றார் இம்ரான்கான்

இது இந்தியாவில் எப்படி எதிரொலிக்குமோ தெரியாது, இங்கும் சில கிரிக்கெட் வீரர்களுக்கு இனி அரசியல் ஆசை ஊற்றெடுக்கலாம்,

டோனியினை பலர் சீண்டலாம், ஏன் கோலி கூட மோடிக்கு அரசியல் சேலன்ஞ் விடலாம்

ஆயினும் மனோஜ் பிரபாகர், சித்து போன்ற சூடுபட்ட கிரிக்கெட் வீரர்களும் உண்டு

ஒருவேளை இம்ரான் கான் பாகிஸ்தான் பிரமராகிவிட்டால் என்னாகும்?

நமது பிரதமர் பிட்னெஸ் சேலஞ்ச் விடாமல் இருப்பாரா?


பாகிஸ்தானில் இம்ரான்கான் முன்னணி எனும் நிலையில் வாக்கு மெஷினில் கோளாறு, தொழில் நுட்ப கோளாறு என சர்ச்சைகள் வருகின்றன‌

இதனால் வாக்கு எண்ணிக்கை முடிவு தள்ளிபோடபட்டிருக்கின்றது

நாவஸையும், இம்ரான்கானையும் ஓரமாக விளையாட சொல்லிவிட்டு ராணுவம் ஆட்சியினை கைபற்றவும் வாய்ப்பு இருக்கின்றது


என்னை பற்றிய வதந்தி….

இது வதந்தி என்பது பாகம்பிரியாளுக்கும் தெரியும், நிச்சயம் நம்பமாட்டார்

காரணம் அவர் கணக்குபடி இந்த வதந்தியின் அளவு மிக மிக குறைவு

(எனினும் .இது பாகம்பிரியாள் கண்ணில் படாமல் இருப்பது வரைதான் உயிருக்கு உத்திரவாதம்…)