யார் அந்த தியாகு?

யார்டா அவன் தியாகு?

கட்டின கவிஞர் மனைவிக்கும் பெற்ற குழந்தைக்கும் துரோகம் செய்து பொறுப்பே இல்லாமல் கழட்டிவிட்டவன் எல்லாம் பொது நல போராளியாம்

பெற்ற பிள்ளையினையே எட்டிபாராதவனா தமிழீழத்தையும் தமிழ் மக்களையும் காப்பாற்றுவான்?

அவனை எல்லாம் அன்றே தூக்கில் தொங்க விட்டிருக்க வேண்டும்

Kavingnar Kavignar Thamarai வாழ்வும் பாழ்பட்டிருக்காது, இன்று பேச தியாகுவும் இருக்கமாட்டான்

இவ்வளவு நடந்தபின்னும் கொலைகார பிரபாகரனை ஒரு வார்த்தை சொல்ல தைரியமில்லை, இவனெல்லாம் கலைஞரை சீண்ட வந்துவிட்டான்

இவன் பொதுவுடமை போராளியாம், ஆனால் ஈழபொதுவுடமைவாதி பத்மநாபாவினை கொன்ற பிரபாகரன் எனும் பாசிஸ்ட்டுக்கு வால் பிடிப்பானாம்

பின் இவர் எப்படிபட்ட மகா மோசடி பொதுவுடமைவாதியாக இருப்பான்?


பசுமாடு தாய் என கொண்டாடபடும் இத்தேசத்தில் ஆடு சின்ன வீடாக இருப்பதில் என்ன ஆச்சரியம்?

டோலி என்ற ஆட்டை தாயின் செல்லிலிருந்து உருவாக்கி முன்பு சாதனை படைத்தனர் நியூசிலாந்து விஞ்ஞானிகள்

இங்கே மனித தலையுடன் கூடிய ஆட்டை உருவாக்க கடும் பாடுபடுகின்றனர் பாரதத்தின் சில ஆராய்ச்சியாளர்கள்

இந்த அணில், தவளை எல்லாம் கொஞ்சம் பாதுகாப்பாக இருப்பது நல்லது

இது ஆட்டோடு நிற்காமல் நாகபாம்பு வரை செல்லட்டும்


பிரபாகரன் உயிரை காத்ததே கலைஞர்தான்

தன் வாழ்வில் எல்லாவற்றையுமே திறந்த புத்தகமாக வைத்திருந்த கலைஞர், தன் இறுதி நாட்களையும் யாருக்கும் மறைக்கவில்லை

ஆளுநரும், குடியரசு தலைவரும் அவரை பார்க்க முடிகின்றது

இனி மோடி வந்தாலோ, ராகுல் வந்தாலோ அவரை பார்க்கலாம் படமெடுக்கலாம்

இறுதிவரை தன் வாழ்க்கையின் எந்த பக்கத்தையும் அவர் மறைக்கவே இல்லை

ராமசந்திரன் போல மேக் அப் சிக்கலோ, ஜெயா போல மர்மமோ அந்த மக்கள் தலைவனின் வாழ்வில் இறுதிவரை இல்லை என்பதே அவருக்கு பெருமை

திறந்த நதிபோலவே ஓடிகொண்டிருக்கின்றார் கலைஞர்


கலைஞர் இல்லாவிட்டால் பிரபாகரன் செத்திருக்கமாட்டான் : அங்கிள் சைமனின் தும்பிகள்

அடேய், அரை மண்டைகளா

திராவிட எழுச்சியும் அது கொடுத்த ஆதரவுமே பிரபாகரனை துப்பாக்கி தூக்க வைத்தது

கலைஞரும் அவரின் திராவிட எழுச்சியும் இல்லாவிட்டால் பிரபாகரன் 1970களின் கடைசியிலே செத்திருப்பான், மூட்டை பூச்சியினை நசுக்குவது போல் நசுக்கி இருப்பார்கள்

அவனுக்கு அடைக்கலம் கொடுத்து காத்ததே கலைஞரின் திராவிட எழுச்சி தமிழகம்தான்.

1989ல் அமைதிபடையிடம் இருந்து பிரபாகரன் உயிரை காத்ததே கலைஞர்தான்

பிரபாகரனுக்கு 20 வருடம் உயிர்பிச்சை வழங்கியதே கலைஞர்தான், அதன் பின்னும் திருந்தாத மடையன் பிரபாகரன் மொத்தமாய் அழிந்தான்

திராவிட எழுச்சியும் அது கொடுத்த ஆதரவுமே பிரபாகரனை துப்பாக்கி தூக்க வைத்தது

கலைஞரும் அவரின் திராவிட எழுச்சியும் இல்லாவிட்டால் பிரபாகரன் 1970களின் கடைசியிலே செத்திருப்பான், மூட்டை பூச்சியினை நசுக்குவது போல் நசுக்கி இருப்பார்கள்

1989ல் அமைதிபடையிடம் இருந்து பிரபாகரன் உயிரை காத்ததே கலைஞர்தான்

பிரபாகரனுக்கு 20 வருடம் உயிர்பிச்சை வழங்கியதே கலைஞர்தான், அதன் பின்னும் திருந்தாத மடையன் பிரபாகரன் மொத்தமாய் அழிந்தான்


பாகிஸ்தானில் இம்ரான்கான் பெற்ற வெற்றி இலங்கையில் எதிரொலிக்க தொடங்கியாயிற்று

பிரபல வீரர் சங்ககாரா ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிடுவார் என தகவல்கள் வருகின்றன, அவர் இன்னும் மறுக்கவில்லை

இன்னும் யாரெல்லாம் கிளம்பபோகின்றார்களோ?

ஜெயசூர்யா, அரவிந்த் டி சில்வா, முரளீதரன் போன்றோருக்கும் அந்த ஆசை வந்தாலும் வரலாம்


உலகெல்லாம் வம்பிழுக்கும் டிரம்ப் இப்பொழுது துருக்கியுடன் மல்லுகட்ட தொடங்கிவிட்டார்

உலகெல்லாம் வம்பிழுக்கும் டிரம்ப் இப்பொழுது துருக்கியுடன் மல்லுகட்ட தொடங்கிவிட்டார்

அதாவது டிரம்ப் ஒரு கிறிஸ்தவ வெறியர், கிறிஸ்தவ தீவிரவாதி. இதனை மிக நுட்பமாக கவனித்த அல்லேலூயா கோஷ்டிகள் அமெரிக்கா துணையுடன் உலகெல்லாம் “அங்கே பார் இயேசு வருகிறார்..” என குத்தாட்டம் போட்டு வருகின்றன‌

அப்படி ஒரு கும்பல் இஸ்லாமிய துருக்கியிலும் அட்டகாசம் செய்தன, காரணம் விசித்திரமானது

அக்கால திருச்சபைகள் அதாவது செயின்ட் பால் போன்றவர்கள் துருக்கியில்தான் முதல் சபையினை உருவாக்கினார்கள்

எபேசு முதலான முதல் 7 சபைகள் இன்றும் துருக்கியில் உண்டு, சுருக்கமாக சொன்னால் ஜெருசலேம், வாடிகன் அடுத்து கிறிஸ்தவருக்கு முக்கியமான இடம் துருக்கி

இதனால் அக்கோஷ்டிகளின் இலக்கானது துருக்கி

இதை கவனித்த துருக்கியின் எர்டோகன் அந்த போதனை கும்பலை பிடித்து சிறையில் போட்டுவிட்டார்

இது டிரம்பின் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டு விஷயம் பற்றி எரிகின்றது, ஏற்கனவே எர்டோகன் மேல் எரிச்சலில் இருக்கும் டிரம்ப் இதனால் துருக்கி பொருளாதார தடையினை நோக்கும் என எச்சரிக்கின்றார்

துருக்கியோ எங்கள் மத வழிபாட்டில் தலையிட யாருக்க்கும் உரிமை இல்லை என எச்சரிக்கின்றது

ஐரோப்பாவில் ஒரே இஸ்லாமிய நாடு துருக்கி என்பதால் ஐரோப்பா ரஷ்யா எல்லாம் வாய் திறக்கவில்லை

போகிற போக்கில் கிறிஸ்தவ இஸ்லாம் மோதலாக துருக்கி விவகாரம் போகும் போலிருக்கின்றது

அபூர்வ குறிஞ்சி பூ நீலகிரியில் பூத்தது : செய்தி

Image may contain: 1 person, smiling, close-up

2 ஆன்டுக்கு ஒரு முறை பூக்கும் அபூர்வ குறிஞ்சி பூ நீலகிரியில் பூத்தது : செய்தி

இது எல்லாம் செய்தியாம்?

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மிக அபூர்வ பூவான குஷ்பு இங்கு பூத்திருக்கின்றது என சொல்லி கொண்டே இருந்தால் யார் கண்டுகொள்கின்றார்கள்?

உண்மையினை விட போலிக்கு இங்கு மரியாதை அதிகம் என்பது சரிதான்.

நான் மட்டுமென்ன நிம்மதியாகவா இருக்கிறேன்? : முதல்வர் பழனிச்சாமி

நான் மட்டுமென்ன நிம்மதியாகவா இருக்கிறேன்? முதல்வர் பதவியை விட்டு விலக தயார் : முதல்வர் பழனிச்சாமி

திருப்பதியில் வணங்கி கவேரியினை கொண்டுவந்தது போல மனிதர் இனி நிம்மதி வேண்டி சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்லவோ இல்லை பழனிக்கு காவடி தூக்கி அலகு குத்தவோ தயாரின்றார் என்பது புரிகின்றது

முதல்வர் பதவி என்பது முள்கிரீடம், ராமசந்திரனின் உடல்நிலையும், ஜெயாவின் உடல்நிலையும் அதன் அழுத்தம் தாங்காமலே கெட்டது

கலைஞர் என்பவர் மகா அசாத்திய மனிதர் என்பதால் அவர்போக்கில் சுமந்தார்

இவ்வளவிற்கும் மத்திய அரசு எனும் அலாவுதீன் பூதம் தாலாட்ட சுகமாக ஆண்டுகொண்டிருகின்றார் பழனிச்சாமி

பூதம் காவலிருக்கும்போதே இப்படி அழுபவர், கலைஞர் போல மத்திய அரசை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இருந்தால் மொட்டை அடித்துவிட்டு மாறுவேடத்தில் தலைமறைவாய் ஆகியிருப்பார்

மிஸ்டர் பழனிச்சாமி, விருப்பமில்லா எந்த வேலையினையும் செய்யகூடாது , எங்கே உடனே உங்கள் பதவியினை ராஜினாமா செய்யுங்கள் பார்க்கலாம்

விடுவார்களா? டெல்லியினை மீறி ராஜினாமா செய்தால் வழக்கு மேல் வழக்கு பாய்ந்து இப்பொழுது இருக்கும் கொஞ்ச நிம்மதியும் போய்விடுமய்யா…


தினகரன் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு : செய்தி

ஆசிட் வீச்சு முதல் ஆட்டோவில் ஆள் அனுப்பி குண்டு வீசுவது முதல் அந்த கலாச்சாரத்தினை தொடங்கி வைத்ததே அவர்கள் அல்லவா?

அந்த கலாச்சாரம் அவர்கள் மீதே திரும்புவதில் என்ன ஆச்சரியம்?