இந்திய குடியுரிமை கொண்டவர்கள்

அசாம் எல்லைபுற மாகாணம், வங்க தேசம் பர்மா போன்ற நாடுகளில் இருந்து மக்கள் சட்டவிரோதமாக வந்து தங்க வசதியான இடம்

இப்பிரச்சினை நெடுநாளாக நடந்தது, கலவரங்கள் கூட நடந்தன‌

இப்பொழுது சிக்கலை தீர்க்கும் விதமாக மக்களை அடையாளபடுத்தும் பொருட்டு பதிவு செய்ய சொல்லிவிட்டது அரசு

பதிவென்றால் இந்திய குடியுரிமை கொண்டவர்கள்தானே பதிய முடியும், அப்படி கிட்டதட்ட 40 லட்சம் பேர் பதியமுடியவில்லை

அவர்கள் இந்தியர் அல்ல என்பது முடிவாயிற்று, விஷயம் பாராளுமன்றம் வரை எதிரொலிக்கின்றது

உரிய ஆவணம் இல்லாதவர்களை பெற சொல்லி அவகாசம் கொடுத்திருந்தும் அவர்களால் பெறமுடியவில்லை என்பதால் 40 லட்சம் பேர் சட்டவிரோதமாகவா குடியிருகின்றார்கள் என்ற பெரும் சர்ச்சை வெடிக்கின்றது

இவர்கள் யார்? திருப்பி அனுப்பபடுவார்களா? இந்தியா பராமரிக்குமா என ஏகபட்ட கேள்விகள்

(உங்களுக்கு நாங்கள் குடியுரிமை கொடுத்தால் எங்களுக்கு வாக்களிப்பீர்களா? எனும் சில்லறை அரசியலும் ஆங்காங்கு நடப்பதாக செய்திகள்)

அசாமிலே இப்படி என்றால் காஷ்மீர் போன்ற எல்லை மாகாணம், இன்னும் பல மாகாணங்களில் எவ்வளவு பேர் சட்டவிரோதமாக தங்கி இருப்பார்களோ என்ற கலக்கம் அரசுக்கு ஏற்பட்டாயிற்று

ஆக ஒழுங்காக கணக்கெடுக்கபடும் பட்சத்தில் இந்திய மக்கள் தொகை 100 கோடிக்கு கீழேதான் வரும் போலும்

எந்த நாட்டு மக்களை எல்லாமோ சேர்த்துகொண்டு உலகின் இரண்டாம் மக்கள்தொகை கொண்ட நாடு என நாமே சொல்லிகொண்டிருக்கின்றோம்

சீமான் கலைஞரை சந்திக்க வந்தால் விட கூடாது : உடன் பிறப்புக்கள் ஆவேசம்

சீமான் கலைஞரை சந்திக்க வந்தால் விட கூடாது : உடன் பிறப்புக்கள் ஆவேசம்

இவை உடன்பிறப்பா இல்லை பிறந்தவுடன் மூளை கழற்றி வைத்த கும்பலா என தெரியவில்லை

கலைஞரின் நெஞ்சில் பாய்ந்த கடா வைகோ, அவரால் கலைஞர் பட்ட அவமானமும் வலியும் கொஞ்சமல்ல, கோடாரியால் கலைஞரை பிளந்தது போன்றது அவரின் செயல்

வைகோ எனும் சனியன் பிரிந்தபின் என்ன செய்தது? ஒவ்வொரு தேர்தலிலும் திமுக ஆட்சிக்கு வராதாபடி உள்ளடி வேலை பார்த்தது

கலைஞர் முதல்வராவதை தடுத்தவன் நான் என பகிரங்கமாக சொன்னவர் வைகோ

சுருக்கமாக சொன்னால் சீமான் தன்னை எதிரி என சொல்லிகொண்டவர், வைகோவோ உடனே இருந்த துரோகி

இன்று ஜெயாவும் பிரபாகரனும் இல்லை என்ற பரிதாப நிலையில் வாலை ஆட்டியபடி அறிவாலய வாசலில் நிற்கின்றார், நிச்சயம் மனமெல்லாம் விஷம் இருக்கும்

அவரை அனுமதித்துவிட்டு சீமானை தடுப்பது என்பது மானம் கெட்ட, அறிவு கெட்ட செயல்

எனக்கெனமோ நேற்று பிரசன்னாவிற்கு அழகிரி விட்ட அடி வைகோவிற்கு மறைமுகமாக இட்ட அடி, திமுகவில் மானமுள்ள ஒருவன் உண்டென்றால் அது அழகிரி ஒருவர்தான்

சீமானை வரவேண்டாம் என சொல்ல உபிக்களுக்கு உரிமை உண்டு ஆனால் அதற்கு முன் வைகோ முதுகில் 4 போட்டு வெளியே அனுப்பிட்டு தடுத்தால் வரவேற்கலாம்

கலைஞரை நேரில் சந்தித்தனர் பழனிச்சாமி பன்னீர்

Image may contain: 1 person, close-up

என்னது கருணாநிதியா? இங்கேயா?

வேண்டாம் கடவுளே வேண்டாம்..

பெரியார் அண்ணா இப்படி ஆளாளுக்கு போட்டு அடிச்சாங்க,

அப்புறம் வந்தவங்க‌ ஆளாளுக்கு அடிச்சாங்க, ஜாணகி கணவன் கணபதி எல்லாம் நெஞ்சிலே மிதிச்சார்

கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறதுக்குள்ள அம்மு வேற வந்து போட்டு அடிக்குது

இதில அவர் வேறயா?..வந்துட்டா நான் தாங்குவேனா..

அவர் வரவே வேண்டாம், இல்லாவிட்டால் இன்னும் 10 வருஷமாவது பொறுத்துவரட்டும்


அரசியலில் எதிரியை தீர்மானிக்கும் நேரம் வந்துவிட்டது – கமல்ஹாசன்

அட ஆண்டவரே, இவ்வளவு நாளும் எதிரி யார் என தெரியாமலா கம்பு சுத்தி கொண்டிருந்தீர்????

கலைஞர் நலமில்லாது இருக்கும் நேரத்தில் நீர் எதிரியினை காட்டும் நேரம் வந்துவிட்டது என்றால் உம் எதிரி முக ஸ்டாலினா?


Image may contain: 3 people, people smilingகலைஞரை நேரில் சந்தித்தனர் பழனிச்சாமி பன்னீர் : செய்தி

“பங்கு, நம்ம கட்சி தலைவினை கடைசி வரை பார்க்கமுடியாத நமக்கு, எதிர்கட்சி தலைவரை பார்க்க முடிகின்றது என்றால் என்ன அர்த்தம்?

அந்தம்மா நம்மை மனிதர்களாகவே மதிக்கவில்லை என அர்த்தம்..”


கலைஞர் அசைவற்று படுத்திருக்கிறார், அதிர்ச்சி தாங்க முடியவில்லை – நாஞ்சில் சம்பத்

இவரை பார்ப்பதை தவிர்க்க அவர் அசைவற்று படுத்திருக்கும் வாய்ப்பு மிக அதிகம்.


கலைஞர் ஆரம்பித்த அர்ச்சகர் பள்ளியில் இருந்து வந்த பிராமணர் அல்லாதவர் மதுரை கோவிலில் அர்ச்சகராக சேர்க்கபட்டார் : செய்தி

கலைஞர் ஏன் முக முத்து, அழகிரி, ஸ்டாலின், தமிழரசு போன்றவர்களையோ இல்லை உதயநிதி, அறிவுநிதி போன்றவர்களை எல்லாம் அர்ச்சகராக்கவில்லை என யாரும் கேட்க கூடாது

அது பகுத்தறிவு, இருக்கட்டும்

விரைவில் நாங்கள் கட்டபோகும் குஷ்பு கோவிலில் கூட பிராமணர் அல்லாத அர்ச்சகர் அவர்கள்தான் இடம்பெற போகின்றார் என்பதை சங்கம் குறிப்பிட்டு சொல்லிகொள்கின்றது


கலைஞரை ரஜினி இன்னும் சந்திக்கவில்லை என பலர் கிளம்புகின்றார்கள்

காலா படத்தில் ரஞ்சித் என்பவன் அடித்த அடியில் அவரே ஏதோ ஒரு மருத்துவமனையின் மூலையில்தான் கிடப்பார்

இனி கலைஞர் எழுந்துதான் அவரை பார்க்க செல்ல வேண்டும்


கலைஞரை தும்பிக்கு அடுத்து சீண்டுபவர்கள்….

 

Image may contain: 8 people

கலைஞரை தும்பிக்கு அடுத்து சீண்டுபவர்கள், அவரை வசைமாறி பொழிபவர்கள் யாரென கண்டால் பிராமணர்கள்

 

அதில் காரணமும் இல்லாமல் இல்லை. பாதிக்கபட்டவர்கள் அவர்கள்தான் கத்தத்தான் செய்வார்கள்

ஆனால் ஒரு நன்றியினை மறக்கின்றார்கள்

அதாவது நீதிகட்சி பிராமணருக்கு எதிராக தொடங்கபட்டு பின் பெரியார் காலத்தில் சுயமரியாதை கழகமாக பிரிக்கபட்டு பின் திராவிட கழகமாகி பின் திமுக ஆனது

அந்த திமுக ஆட்சிக்கு வந்தபின்பு இட ஒதுக்கீடு முதல் பல விஷயங்கள் சட்டமாக்கபட்டு பிராமணர்கள் விரட்டபட்டனர், நடந்த வரலாறு இது

நீதி கட்சியின் வாரிசாக திராவிட கழகமும், திராவிட கழகத்தின் வாளாக திமுகவும் களத்தில் 100 ஆண்டுகளாக கடும் சவாலை பிராமர்க்கு கொடுத்தன‌

ஆனால் இனி?

ஒன்றுமில்லை, பெரியாரின் வாரிசான கலைஞரோ கடைசி தருணத்தில் இருக்கும்பொழுது இனி அப்படிபட்ட போர்குணமிக்க தலைவர்கள் இல்லை

காரணம் என்ன?

அண்ணாவின் காலத்தில் பெரும் கொள்கை படை இருந்தது, கலைஞர் பதவிக்கு வந்ததும் அவர்கள் எல்லாம் ஒதுங்கினர் அல்லது ஒதுக்கபட்டனர்

பின் கலைஞரின் துதிபாடிகளால் கட்சி நிரம்பியது, போர்முழக்கம் கேட்ட கட்சி துதிபாடல்கள், தோத்திர பாடல்களால் நிரம்பியது

வாளந்திய கைகள் எல்லாம் சாமரம் வீசி வணங்கி நின்றன‌

பெரும் போர்க்குணம் கொண்ட கட்சியின் நீட்சியான திமுக ஒருபக்கம் ராமசந்திரன் வகையறாவில் அழிந்தது

இன்னொரு பக்கம் கலைஞர் எனும் அசாத்திய மனிதர் கொண்டு சென்றாலும், தனக்கு பின் கொள்கை பிடிப்புள்ள தலைவனை உருவாக்க அவர் தவறிவிட்டார்

கட்சி, ஆட்சி என்ற கணக்குகளிலே அவர் இருந்ததால் கொள்கை என்பது கொஞ்சம் கொஞ்சமாக சரிந்தது

அண்ணா, மதியழகன், நடராசன், நெடுஞ்செழியன் என பெரும் கொள்கையாளர் வரிசை இருந்தது. அவர்களோ அவரிகளின் வாரிசுகளோ இல்லை கொள்கை தலைவர்களோ உருவானார்களா?

இல்லை, கலைஞர் எனும் சொல் எல்லாவற்றையும் அடக்கிற்று, அவர் ஒருவர் மட்டும் தெரிந்தார். அவரும் இனி விடைபெறுவார் என்றால் என்னாகும்?

இனி முற்றும் விடைபெற போகின்றது

ஆக பிராமண கணவான்களே, கலைஞரும் வேறு எந்த தலைவரும் உருவாகி வராதவாறு காவல்காத்து விட்டு ஒருவரும் இனி இல்லை என உறுதிபடுத்திவிட்டே செல்கின்றார்

இனி உங்களுக்கு சவால் கொடுக்க யாருமில்லை.

உங்களுக்கு எதிரான பெரும் போராட்ட நீட்சி ஒன்று கலைஞர் எனும் மனிதனுடன் விடைபெறுகின்றது.

எல்லா சாதிக்கும் உதவிய அம்மனிதன் உங்களுக்கும் ரகசியமாக உதவி செய்துவிட்டே செல்கின்றான்

அவ்வகையில் அவருக்கு நன்றி கூறுங்கள்,

இனியாவது அவர் காது குளிர நன்றி சொல்லி அனுப்பி வையுங்கள்

கோவையில் மற்றொரு நிர்மலா தேவி…

நிர்மலா தேவி மாணவிகளுக்கு தவறான வழிகாட்டினார் என ஆளாளுக்கு பொங்கினார்கள், யாரை எல்லாமோ இழுத்து கட்டினார்கள்

விவகாரம் எங்கெல்லாமோ போய் ஆளுநர் கூட்டம் போடும் அளவிற்கும், அங்கேயும் கன்னத்தை கிள்ளினார் என மறுபடியும் எரியும் அளவிற்கு சென்றது

இன்னும் நிர்மலா விவகாரம் பரபரப்பு தீரவில்லை

ஆனால் கோவையில் பெண்கள் விடுதி ஒன்றில் இதே நிகழ்வு நடந்திருகின்றது, விடுதி சொந்தக்காரர் செத்தே போய்விட்டார். அது கொலையா தற்கொலையா என கேட்க கூட யாருமில்லை

அந்த விடுதியின் பெண் காப்பாளர் புனிதா என்பவர் தலைமறைவாம்

அப்படியோ போ என விட்டும் விட்டார்கள்

போகிற போக்கில் நிர்மலா தேவி அவ்வளவு மோசமில்லை என்ற அனுதாபத்துடன் அந்த அம்மணி சிறைவிட்டு வரும் போல‌

தெலுங்கை உலுக்கிய ஸ்ரீரெட்டி புயல் தமிழகம் நோக்கி வந்தது

Image may contain: 1 person, close-up and outdoor

தெலுங்கை உலுக்கிய ஸ்ரீரெட்டி புயல் தமிழகம் நோக்கி வந்தது, தமிழக திரையுலகினை அது சின்னாபின்னமாக்கும் என கருதபட்டது

ரோட்டில் நாய் குரைத்தாலும் பதிலுக்கு குரைத்து பப்ளிசிட்டி தேடும் கஸ்தூரி ஸ்ரீரெட்டியுடன் மல்லுகட்டி தனி பப்ளிசிட்டி தேடுவதில் தேங்காய் உடைத்து வணங்கிவிட்டு தயாராக இருந்தார்

ஆனால் கலைஞர் எனும் சக்தி அந்த புயலை அமைதியாக்கிற்று, கலைஞரின் செய்திகள் வரவில்லை என்றால் இப்பொழுது நடக்கும் விஷயங்களே வேறு

அவ்வகையில் தன் எழுத்தாலும் அனுபவத்தாலும் திரைதுறைக்கு உச்சம் கொடுத்த கலைஞர், தன் கடைசி காலங்களிலும் அவர்களுக்கு பெரும் நன்மை செய்துகொண்டிருக்கின்றார்

ஸ்ரீரெட்டி ஆந்திரா திரும்பிவிட்டு, கொஞ்சம் தாமதித்து சென்னை பக்கம் வந்தால் நமக்கெல்லாம் பெரும் அதிரடி தமாஷ்கள் காத்திருக்கின்றது

கலைஞரின் ஏழாம் மகள், அவர் பெற்றெடுக்காத பிள்ளை தலைவி குஷ்பு

Image may contain: 1 person, sitting and close-up

கலைஞரின் ஏழாம் மகள், அவர் பெற்றெடுக்காத பிள்ளை தலைவி குஷ்பு

தந்தை பாசம் அறியாமலே வளர்ந்த குஷ்பு, அவர் வாழ்வு அதனைத்தான் சொல்கின்றது

பின்னாளில் கலைஞரை தன் தந்தையாகவே வரிந்தெடுத்தார். தன் அரசியல் ஆசானாக வழிகாட்டியாக அவரையே பின்பற்றினார். தந்தையாகவே அவரை வணங்கினார்

தமிழக மக்களில் எல்லோரையும் விட இப்பொழுது கடும் சோகத்தில் இருப்பது தலைவியே

கலைஞர் பெற்றெடுக்காத அந்த மகளுக்கு ஆறுதலாக சங்கம் துணை நிற்கின்றது..