அதிர்ச்சி தாங்காமல் திமுகவினர் 21 பேர் எப்பொழுது செத்தார்கள்?

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலிவுற்றிருக்கிறார் என்ற அதிர்ச்சி தாங்காமல் திமுகவினர் 21 பேர் இறந்துள்ளார்கள் என்ற செய்தியறிந்து மன அழுத்தத்தில் உறைந்து போயிருக்கிறேன் : முக ஸ்டாலின்

21 பேர் எப்பொழுது செத்தார்கள்? எல்லா கணக்கும் கலைஞர் வகையிலா வருகின்றது? வரட்டும்

கலைஞர் மவுனமாகி கிட்டதட்ட 2 ஆண்டுகள் ஆகின்றன, அவருக்கு அப்பொழுதே முடியாமல் போய்விட்டது என்பது யாருக்கு தெரியாது?

இருவருடம் கழித்து, அந்த முதிர்ந்த கலைஞருக்காக செத்தவர்களுக்கு பரிதாபபடுவதை விட என்ன செய்ய முடியும்??

21 பேர் யார் என்பதை முக ஸ்டாலின் சொல்லவில்லை, சொல்லவும் மாட்டார்

இந்த உதயநிதி என்பவரை இன்னும் சிலரை வேறு காவேரி பக்கம் காணவே இல்லை என்பது கூடுதல் விஷயம்.

தலைவிக்கு இன்றும் அதே 18 வயது

Image may contain: 2 people, text

 

 

“என்றைக்கும் வயது மூவாறு
என் சொல்லு பலிக்கும் பாரு…..” என அன்றே சின்னதம்பி படத்திற்கு தலைவிக்கு பாடல் வரி எழுதினார் கங்கை அமரன்

அந்த வாக்கு அப்படியே பலித்திருக்கின்றது,

தலைவி இன்றும் அதே 18 வயது போலவே இருக்கின்றார்

தலைவி பற்றி அன்றே தீர்க்கதரிசனமாக எழுதிய திரையுலக நாஸ்டர்டாமஸ் கங்கை அமரனுக்கு சங்கம் விரைவில் பொற்கிழி வழங்கும்


கிகி என்றொரு டான்ஸ் சவால் பரவி வருகின்றது

கிகி என்றொரு சவால் பரவி வருகின்றது, இதெல்லாம் தின்ற ரொட்டியோ ஆட்டுகறியோ செறிக்காமல் , அடுத்த வேளை பற்றி கவலை இல்லாமல் இருக்கும் ஐரோப்பிய அமெரிக்கர்களால் வந்தது

கனடாவினை சேர்ந்த பாடகர் ஒரு பாடலை வெளியிட்டார், இதற்கு அமெரிக்க வடிவேலு ஒருவர் காரிலிருந்து இறங்கி ஆடினார். அப்படியே அதை காணொணியாக வெளியிட்டார்

அதிலிருந்து ஆளாளுக்கு ஓடும் காரிலிருந்து இறங்கி ஆடி ஆடி வீடியோ எடுத்து தள்ளுகின்றார்கள்

இது இந்தியாவிலும் வந்துவிட்டது, பெங்களூரில் கூட பிரபலங்கள் ஆடுவதாக செய்தி

குமாரசாமி எல்லாம் ஆடவில்லை, அவர் இனி காங்கிரஸ் ஆதரவினை வாபஸ் வாங்கினால் ஆடுவார். காவேரி சிக்கல் இல்லாததால் வாட்டாள் நாகராஜும் ஆடவில்லை

இப்படி திடீரென காரிலிருந்து குதித்து ஆடுவது சரியல்ல , ஆபத்தினை விளைவிக்கும் என காவல்துறை எச்சரித்தாலும் ஆளாளுக்கு ஆடுகின்றார்கள்

இது ஓரு சீசன் வியாதி போல ஆட்டுகின்றது

இந்த சவால் மோடி கவனத்திற்கு சென்றதா இல்லையா என தெரியவில்லை, ஒருவேளை தெரிந்தால்

சவாலினை ஏற்று கதவினை குதித்து கிகி என நிச்சயம் ஆடவந்துவிடுவார்

அவர் விமானத்தில் வேறு அடிக்கடி பறப்பதால் இந்த சவால் அவர் பார்வைக்கு சென்றே தீரவேண்டும்

 


 

பறையர் இனத்திற்கும் அருந்ததி சாதிக்கும் காதல் திருமண மோதலாம்

விழுப்புரம் அருகே அரும்பட்டு கிராமத்தில் பறையர் இனத்திற்கும் அருந்ததி சாதிக்கும் காதல் திருமண மோதலாம்

இந்த தலித் காவலர்களான திருமா போன்றோர், அம்பேத்கரின் மறுபிறப்ப்பு என சிலரை நம்ப வைக்கும் ரஞ்சித் போன்றவர்களை எல்லாம் இப்பொழுது காணவே முடியாது

இரண்டுமே ஒடுக்கபட்டதாக சொல்லும் சாதி, இதில் எது மிக தாழ்த்தபட்டது என்பதில் வெட்டி கொண்டிருக்கின்றார்கள்

இந்த திராவிட சிங்கங்கள், பெரியாரிஸ்டுகள், வீரமணி கும்பல் எல்லாம் இதை கண்டுகொள்ளாது

இதுவே பிராமணனுக்கும் இன்னொரு சாதிக்குமான காதல் கதை என்றால் பெரியார் என்ன சொன்னார் தெரியுமா? என சீறுவார்கள்

பிராமணரை தவிர மற்ற சாதி சண்டையிட்டால் பெரியார் ஒன்றுமே சொல்லவில்லை என ஆமை ஓட்டுக்குள் தலையினை இழுப்பது போல் இழுத்து கொள்வார்கள்

இங்கு நடந்திருப்பது இரண்டு சாதிகளுக்கான மோதல் ஆனால் சில பகுத்தறிவாளரிடம் கேட்டால் இதற்கும் பிராமணனே காரணம் அவன் வகுத்ததால் வந்த சாதி சண்டை இது என்பார்கள்

சரி நீங்கள் இங்கு சென்று பகுத்தறிவில் யோசியுங்கள், பிராமணன் சொன்னதால் நீ பறையன் நீ அருந்ததியர் சாதி என நம்புகின்றாய்,. அப்படி எல்லாம் இல்லை இருவருமே மனிதர்கள், காதலை ஏற்று வாழ்த்துங்கள் என சொல்வார்களா என்றால் சுத்தமாக இல்லை

இந்த திருமா, ரஞ்சித் கோஷ்டியாவது காதலர்களை புத்தமதத்திற்கு மாற்றி வாழ வைப்பார்களா என்றால் இல்லை.

எது பிரச்சினையோ அதுபற்றி பேசமாட்டார்கள், எதை வைத்து அரச்சியல் செய்யமுடியுமோ அங்கு பகுத்தறிவாளன் முதல் எல்லா சாதி காவலரும் குழுமி ஆரியம் ஒழிக, பிராமணன் ஒழிக இந்துத்வா ஒழிக என கிளம்பிவிடுவார்கள்

விகடனின் கழுகார் முன்னை போல இல்லை

நண்பர் Anthanan Shanmugam அவர்கள் ஒரு பதிவில் சொல்லி இருந்தார், விகடனின் கழுகார் முன்னை போல இல்லை, சாரமற்ற உப்பாகிவிட்டார் என சொல்லியிருந்தார்

உண்மை, மகா உண்மை, ஏனென்றால் இப்படித்தான்

பத்திரிகை உலகம் 1940களுக்கு முன் வேறு வகையறாக்களிடம் இருந்தது, அவர்கள் சொன்னதுதான் செய்தி, அவர்கள் உருவாக்குவதுதான் பிம்பம்

பெரியாரும், அண்ணாவும் அதை நொறுக்கி எழுதினர். கலைஞர் அதில் அணல் பறத்தினார்

தினதந்தி போன்றவைகள் எழும்பின, இன்னும் ஏராளமான பத்திரிகைகள் வந்தன‌

பெரியார் தொடங்கி வைத்த கணல் பல பத்திரிகைகளில் தெறித்தது, வணிகத்திற்காக அந்த பெரிய கை பத்திரிகைகள் கூட இறங்கி வந்தன‌

ஊடக சுதந்திரம் தமிழகத்தில் உச்சத்தில் இருக்க இதுதான் காரணம்.

ரகசிய செய்திகள் புலனாய்வு செய்திகள் உண்மைகள் , கணிப்புகள் என இப்படித்தான் தமிழக பத்திரிகை உலகம் இருந்தது

இதில் கலைஞரும் ஜெயாவும் அதில் கண் வைத்தபடியே இருந்தனர், சில செய்திகள் கசிவது நல்லது என்பது அவர்களின் திட்டம்

செய்திகளை கசியவிட்டு செய்ய வேண்டிய அரசியலை அட்டகாசமாக செய்தனர்.

இதை கவனித்த சோ ராமசாமியும் எல்லோரையும் கலாய்த்து தன்னை நிரூபித்துகொண்டார். சோ ராமசாமியினையும் கலைஞரும் ஜெயாவும் தடுக்கவில்லை

அப்படியும் ஒரு ஆள் இருக்க வேண்டும் என்பது அரசியல் தந்திரம்.

ஆனால் இருவரும் இல்லாத நிலையில் அனுபவமே இல்லாதவர்கள் கையில் எதிர்கட்சியும் ஆளும்கட்சியும் கிடைக்க அந்த சமநிலை குலைந்துவிட்டது

தமிழகத்தில் எந்த செய்தி வரவேண்டும், வர கூடாது என்பதை பெரும் சக்திகள் முடிவு செய்கின்றன, அவற்றை தடுப்பார் யாருமில்லை

ஏன் என்றால் நீங்களே பாருங்கள், மோடியினை சந்தித்த பத்திரிகை அதிபர்கள் பட்டியல் இதோ

பாலசுப்பிரமணிய ஆதித்தன் (தினதந்தி)
ரமேஷ்(தினமலர்)
ராம்(இந்து)
மனோஜ்குமார் சோந்தாலியா (இன்டியன் எக்ஸ்பிரஸ்) 
சீனிவாசன் (விகடன்) 
வரதராஜன் (குமுதம்) 
குணசேகரன் (நியூஸ்18)
கார்த்திகை செல்வன் (புதிய தலைமுறை)
ராஜேந்திரன் (ராஜ் டிவி)
தேவநாதன் (வின் டிவி)

இவர்கள் நேரடியாக காலில் விழுந்தவர்கள் என்றால் மறைமுகமாக விழுந்தவர்கள் எத்தனை பேர் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்

இங்கு எதை எல்லாமோ ரகசியமாக கைபற்றுகின்றார்கள், ஊடகங்களை மறைமுகமாக கட்டுபடுத்துகின்றார்கள்

அறிவிக்கபடாத எமர்ஜென்சி என்பது இதுதான்

இனி இந்த கழுகார் , ஆந்தையார் எல்லாம் பறக்காது மாறாக புறாக்கள், காக்கைகள் என ஏதாவது சும்மா கத்திகொண்டிருக்கும்

புதிய இந்தியா பிறக்கவில்லை எனினும் புதிய தமிழ்நாட்டினை பிறக்க வைக்க கடும் முயற்சி ரகசியமாக நடந்துகொண்டிருக்கின்றது

(எந்த அளவு கட்டுபடுத்துகின்றார்கள் என்றால் அண்ணாவிற்கு வந்த புற்றுநோயும் அதன் சிகிச்சையும் உலகிற்கே தெரிந்தது

அதற்கு முன்பே பெரியாருக்கு நாக்கில் வந்த கட்டியும் பரபரப்பான காலங்கள்

ஆனால் கடவுள் மறுப்பால் அப்படி ஆனது என ஆளாளுக்கு கரித்து கொட்டினார்கள், ஆனால் யாரும் வதந்தி பரப்பல் என கைது செய்யபடவில்லை

ராமசந்திரன் அமெரிக்காவில் இருந்தபொழுது , அவர் வரும்வரை ஆட்சியினை என்னிடம் கொடுங்கள் என கேட்டவர் கலைஞர், ஆனால் அதிமுகவினர் சீறினர். அவர் வருவார் என்றனர்

ஆம், வருவார் மூட்டையாக வருவார் என சொன்னவர் கலைஞர்

அன்றெல்லாம் வதந்தி பரப்பல் , கரித்து கொட்டுதல் போன்ற விஷயங்கள் இல்லை

ஜெயா அந்திம காலம் சர்ச்சையின் தொடக்கம், கலைஞர் விஷயத்திலும் கிட்டதட்ட அதே சாயல் தெரிகின்றது

இன்று என்னவெல்லாமோ நடக்கின்றன, இன்னும் நடக்கும்)


‘வடசென்னை’ டீஸர் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இருக்கிறது – ஷாருக் கான்

டீசரில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷூக்கு கொடுக்கும் உதட்டு முத்தகாட்சி இங்கு சலசலப்பினை ஏற்படுத்த , அங்கு ஷாரூக்கானுக்கோ ஆர்வத்தை தூண்டுகின்றதாம்

ஒருவேளை ஷாருக்கானும் கமலஹாசன் ரகமோ என்னமோ?


 

சுதந்திரதின உரைக்கு ஆலோசனை தெரிவியுங்கள் : பிரதமர் மோடி

சுதந்திரதின உரைக்கு ஆலோசனை தெரிவியுங்கள் – பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள்

சொல்லட்டுமா?

ஆள தெரியாமல் ஆண்டதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, சுதந்திரநாளில் மக்களுக்கு பாஜக அரசிடம் இருந்து சுதந்திரம் கொடுத்துவிடுவதாக அறிவித்து விடுங்கள்


எப்படி எல்லாம் இந்தியாவிற்கு டிமிக்கி கொடுப்பது என இங்கிலாந்து கடற்கரையில் மல்லாக்க படுத்து சிந்திக்கும் மல்லையாவிற்கு ஒரு யோசனை கிடைத்துவிட்டது

லண்டன் கோர்ட்டில் “அய்யன்மீர் நான் இந்தியா சென்றால் சிறையில் அடைப்பார்கள், ஆனால் அங்குள்ள சிறை காற்று புகாத, வெளிச்சம் இல்லா சிறை அங்கு அடைத்தால் செத்துவிடுவேன்” என புலம்பி இருக்கின்றார்

லண்டன் கோர்ட் “அப்படியா? இந்திய சிறை வீடியோவினை அனுப்புங்கள்” என இந்தியாவிடம் கேட்டுவிட்டது

என்ன செய்யலாம் இந்தியா?

சசிகலா இருக்கும் அறையினை படமெடுத்து அனுப்பினால் தீர்ந்தது விஷயம்


அசாம் மாநிலத்தில் மத்திய அரசு செயல்படுத்தியுள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு சர்ச்சையால் நாட்டில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டு, ரத்தக்களறியாக மாறப்போகிறது : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

இந்திய குடிமகக்ள் யார், வங்கத்திலும் பர்மாவிலும் இருந்தும் வந்தது யார் என்றும் கணக்கெடுத்தால் அதனால் ரத்த களறி ஆகுமா?

அம்மணியின் பயம் வங்கத்திலும் இது தொடர்ந்து அவரின் வோட்டு வங்கி பாதிக்கும் என்பதுதான்

இப்படி எல்லாம் தூண்டிவிட்டால் மம்தா பானர்ஜியினை பிடித்து உள்ளே போடுவது நாட்டிற்கு நல்லது


கலைஞர் சிகிச்சைபெறும் படம் : யார் நம்ப முடியும்??

கலைஞர் சிகிச்சைபெறும் படம் என சிலவற்றை வெளியிடுகின்றார்கள், நாங்கள் ஜெயா போல அல்ல என காட்டி கொள்ள வெளியிடுகின்றார்களாம்

ஆனால் அந்த படங்கள் பலத்த கேள்விகளை எழுப்புகின்றன, சிகிச்சை பெறும் மனிதனுக்கு பொறுத்தபடும் உபகரணமோ இல்லை குழாய்களோ எதுவுமே இல்லை, அவசர சிகிச்சை பெறுபவருகுரிய சூழலே இல்லை

காய்ச்சலிலும், இரத்த அழுத்தத்திலும், ஏன் இருதய துடிப்பு நின்று திரும்பும் மனிதனை இப்படி ஹாயாகவா படுக்க வைத்திருப்பார்கள்?

யார் நம்ப முடியும்??

ஆயினும் மருத்துவமனை அறிக்கைகள் விட்டுகொண்டிருப்பதாலும் குடியரசு தலைவர் முதல் பெரும் மக்கள் பிரதிநிதிகள் வந்து பார்த்து நலம் என்பதாலும் வேறு சர்ச்சைகள் இருக்க முடியாது

கலைஞரின் காவேரி புகைபடைத்தை பார்க்கும்பொழுது ஏன் ஜெயா தன் கடைசிகால படங்களை தவிர்த்தார் என்பது புரிகின்றது

பல விஷயங்கள் புரியவில்லை

வெங்கையா நாயுடு ஏன் இப்பக்கம் சுற்றிகொண்டிருக்க வேண்டும்? அவருக்கு வேறு வேலையே இல்லையா

ஜெயா சாகும்பொழுதும் இங்கும் கூடாரம் போட்ட அவர், இப்பொழுதும் கழுகு போல பறப்பது ஏன்?

மோடி ஏன் வந்து பார்க்கவில்லை, ஜெயாவிற்கும் அவர் வரவில்லை என்பது குறிப்பிடதக்கது

கனிமொழி தவிர எந்த முகங்களிலும் சோகமில்லை ராசாத்தி அம்மாள் உட்பட‌

படங்களையும், நடக்கும் காட்சிகளையும் கோர்த்து பார்த்தால் ஒன்றும் சரியாக படவில்லை

இதற்கு மேல் ஏதும் சொன்னால் நம்மை வதந்தி பரப்புவோர் பட்டியலில் சேர்ப்பார்கள் என்பதால் விட்டுவிடலாம்

ஆனால் பெரும் வதந்தி பரப்பிகொண்டிருப்பவர்கள் யார் என்றால் அது காட்சிகளை கவனிப்போருக்கே புரியும்


கலைஞருக்காக யாரும் பிரார்த்தனை, கோவிலில் வேண்டுதல், மொட்டை அடித்தல் போன்ற பகுத்தறிவிற்கு ஒவ்வாத செயல்களை செய்ய வேண்டாம் : வீரமணி

கலைஞர் பிழைக்க கூடாது என்பதில் வீரமணிக்கு அவ்வளவு ஆசையா?

இல்லை ஏதும் முன் கூட்டியே தெரிந்ததா?


Image may contain: 1 person, standing and outdoorImage may contain: 1 person, standing and textபகுத்தறிவு தலைவனுக்கு , ஆத்திக வழியில் மொட்டை போட்டு, அலகு குத்தி வேண்டி கொள்ளலாம் என்பது இப்போதைய பகுத்தறிவு

இனி என்ன? திமுகவினை பாஜகவோடு இணைத்துவிட வேண்டியதுதான்

 


பிராமணன் அல்லாதவர் அர்ச்சகாரகிவிட்டார், பெரியார் கலைஞரின் நெஞ்சில் குத்திய முள் அகன்றது

ஆனால் அதே அர்ச்சகர் பூனூலும் அங்க வஸ்திரமும் நெற்றியில் விபூதியுமாக வந்து நிற்பது பெரியார், கலைஞர் தலையில் கல்லை தூக்கி போட்டாயிற்று