பிரியாணி கடை தகறாறு

பிரியாணி கடை தகறாறு சாதாரண விஷயம் , இதற்கெல்லாம் முக ஸ்டாலின் சென்றிருப்பது நிச்சயம் சரியல்ல‌

இது அவருக்கு பிரியாணி கடையில் நற்பெயரை பெற்று தரலாமே தவிர, இதனால் கட்சி ரீதியாக அவர் பின்னாளில் நெருக்கடியினை சந்திக்கலாம்

திமுக என்பது கோடான கோடி தொண்டர்கள் நிரம்பியது, எல்லோரும் அண்ணாவழி என சொல்லமுடியாது, அடவாடி பார்ட்டிகள் ஏராளம்

இனி உட்கட்சி தகறாறிலே பிரியாணி கடையினை உடைத்து செயல் தலைவர் வரட்டும் என திமுகவினர் காத்திருப்பார்கள்

இந்த சிக்கலுக்கு ஸ்டாலின் சென்றுவிட்டதால், இனி திமுகவினர் பஞ்சு மிட்டாய்க்கு தகறாறு செய்தாலும் அவர் சென்றே தீரவேண்டும்

இதெல்லாம் அறிக்கைவிட்டுவிட்டு இரண்டாம் கட்ட தலைவர்களை வைத்து மெழுகி முடிக்க்க வேண்டிய விஷயங்கள்

எல்லா விஷயங்களிலும் தலைவன் கீழே இறங்கி வரகூடாது என்பது அரச நீதி


Image may contain: 5 people“தம்பி திமுகவிற்கு உள்குத்து குத்த தெரியும், இப்படி மூஞ்சிலே குத்த தெரியாது

திமுக‌ அடிக்கிற அடி எல்லாம் வெளி தெரியாம அடிக்கிறது, அப்பா காலம் வரை அப்படித்தான் இருந்தது.

இப்போ நானும் புதுசு, கட்சி உறுப்பினரும் புதுசுங்கிறதுனால இப்படி கொஞ்சம் குழப்பம்

மன்னிச்சிருங்க தம்பி, நம்ம ஆட்சி வந்த பின்னாடி அறிவாலயம் பிரியாணி சப்ளை பூரா உங்களுக்குத்தான்”


அந்த கட்சியில் ஜெயா இருந்தபொழுது இப்படிபட்ட பிரியாணி சங்கதிகள், வில்லங்க செய்திகள் என்றால் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கபடுவர்

அடாவடி பார்ட்டி முடிந்த அளவு போயஸ்கார்டனுக்கு வந்து மன்னிப்பு கேட்க பார்க்கும், அம்மா கொஞ்சமும் அசையாது

யாராக இருந்தாலும் கட்சியிலிருந்து விரட்டிவிட்டு எவன் இல்லை என்றாலும் கட்சி நடத்தும் ஆற்றல் தனக்கு உண்டு என சொல்லிகொண்டிருந்தவர் ஜெயா

அவரின் தன்னம்பிக்கை அப்படி, வசூல் சிக்கல்களில் ஏதும் புகார் என்றால் சின்னம்மா கவனித்து ஒரு பைசா பாக்கி இல்லாமல் வசூலித்துவிடும் என்பதெல்லாம் இன்னொரு சாகச பிரிவு

மற்றபடி இம்மாதிரி சில்லறை பிரச்சினைக்கெல்லாம் இருந்த இடத்தில் இருந்து கட்சியினை விட்டு விரட்டுவார்கள்

விரட்டமுடியாத பட்சத்தில் அது எந்த கொம்பனாக இருந்தாலும் என்கவுண்டர் வரை செல்ல அவர் தயங்கியதில்லை

இங்கோ ஒரு கட்சி தலைவர் அந்த குத்துசண்டை காரனை அறிவாலயம் அழைத்து செவிட்டில் போடுவதை விட்டு இந்த கடை பிரியாணிக்கா தகறாறு என விசாரித்துகொண்டிருக்கின்றார்

ஆயிரம் சொல்லுங்கள் , தமிழக யதார்த்தபடி கட்சி நடத்த தெரிந்தவர் ஜெயா, அதனால்தான் அவரால் சாகும்வரை முதல்வராகவே நீடிக்க முடிந்தது


வாழ்க கொடை விழாக்கள்

ஆனி ஆடி மாதங்களில் தமிழகத்தின் கொடை காலங்கள், கொண்டாட்ட மாதங்கள், திரும்பும் பக்கமெல்லாம் ஒலிபெருக்கியில் “ஆத்தாடி மாரியம்மா” என எல்.ஆர் ஈஸ்வரி அம்மனை அழைப்பார், மண்கட்டை சுவரிலும் கோயில் கொடை விளம்பரங்கள் இருக்கும்

. இரவில் 9 மணிக்கு மேல் வில்லுபாட்டு கேட்கும்,திடீர் கடைகள், ஒளிவெள்ளம், இன்னும் ஏராளம்.

பொதுவாக சுபகாரியங்கள் ஏதும் செய்யமாட்டார்கள், சுத்தமாக தெய்வத்திற்கு அர்ப்பணிக்கபட்ட மாதம் ஆடி

கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களிலும் 10நாள் விழா நடக்கும், படு விமரிசையாக கொண்டாடுவார்கள், தென்னக‌ கத்தோலிக்கர்களுக்கு அதுதான் உச்சகட்ட கொண்டாட்டம், கொடியேற்றி தேர் இழுத்து, மேளமிட்டு,கடா வெட்டி கொண்டாடுவார்கள்.

உண்மையான தமிழ் கலாச்சாரம், மண்ணின் மாண்பு, மதம் மட்டும் வேறு, அது பிரச்சினையே இல்லை. ஆட்டம்பாட்டம், உற்சாகம்,கொண்டாட்டம், கூடவே ஒருமனமான வழிபாடு.

கிராமங்கள் களை கட்டும் காலம் இது, பொங்கல் தீபாவளியை விட கிராம திருவிழாக்கக்ளே அவர்களுக்கு முதன்மை, இது தங்கள் மண் என உரிமையோடு கொண்டாடும் விழாக்கள், உறவினர்கள்,ஊர்மக்கள் என சேர்ந்து கொண்டாடும் விழாக்களுக்கு ஈடு இல்லை, விவசாயம் தோற்று எங்கோ உலகெல்லாம் சிதறிக்கபட்டிருக்கும் மக்கள் கூடுவதற்கு இதனைவிட வேறு சந்தர்ப்பமும் இல்லை.

வாழ்க கொடை விழாக்கள்.

தெற்கே கொடைவிழா என்றால், வேறு இடங்களில் இன்னமும் கொண்டாட்டம், காவேரியில் வரும் புதுவெள்ளத்தினை வரவேற்கும் ஆடிபெருக்கு மத்திய தமிழகத்தில் பெரும் விழா

இன்னும் பல பூஜைகள்,புணஷ்காரங்கள்,ஆச்சாரங்கள், ஆடி அமாவாசைக்கு முன்னோர்களுக்கு திதி என தமிழகமே ரொம்ப பிசி.

அட்சயதிரிதியை அன்று தங்கம் வாங்குவது போல, ஆடி அமாவாசை அன்று கொள்ளையிட்டால் தொழில் வளரும் என்பது திருடர்கள் நம்பிக்கை, அவர்களும் பிசி

மாதங்களில் நான் மார்கழி என்றுதான் கண்ணனே போதித்தார், தை பிறந்தால் வழிபிறக்கும் என்றுதான் பழமொழி இட்டார்கள், ஆனிஆடி பற்றி யாரும் சொல்லவில்லை எனினும் முக்கிய‌ கொண்டாட்டம் இம்மாதங்களில் மட்டுமே.

தென்னகம் இதில் விஷேஷம்

கல்தோன்றி மண்தோன்றி நீர்தோன்றி பனையும் தோன்றிய முற்காலத்தின் பனைதொழிலான கருப்புகட்டியும்,இன்னும் சில வருமானங்களும் ஆனி,ஆடியில் மிக மிக அதிகம்.

மக்களிடம் பணம் வந்தவுடன் தெய்வத்தினை தேடி சென்று நன்றி தெரிவித்தார்கள், மனம் உவந்து அளித்த கொடைகள் பின்னாளில் அதே மாதங்களில் நிலைபெற்றது, தொடர்கிறது

தென்னகத்தில் முருகன்,முழுமுதற்கடவுள் திருமால், சர்வசக்தி கொண்ட சிவபெருமான் இவர்களுக்கெல்லாம் தனி ஆலயங்கள் உண்டு, வருடம் முழுவதும் வழிபாடுகளுக்கும்,இன்னும் சில சாத்வீக சம்பிரதாயங்களுக்கும் குறைவில்லை.

ஆனால் வேறு சிறு தெய்வங்களுக்கு அப்படியல்ல வருடத்தில் ஒருமுறை மட்டுமே கொண்டாட்டம்.

தென்னகத்தில் பல தெய்வங்களை வணங்கி வந்தாலும், இரு தெய்வங்களுக்கு நமது பகுதியில் சிறப்புகள் அதிகம். ஒருவர் சிலப்பதிகார காலத்திலே சேரநாட்டின் (கேரளம்) எல்லைக்கு காவல் தெய்வம் என அழைக்கபட்ட இசக்கி அம்மன், கேரளாவில் இன்றும் அம்மனே பிராதான காவல் தெய்வம் (அம்மன் தான், “அம்மா” என்று சொல்லவில்லை) , முற்காலத்திலே நமது பகுதியில் கேரள எல்லையான முப்பந்தல் இன்றும்,என்றும் இசக்கியம்மனின் பிரதான கோயில்.

இன்னொருவர் சுடலைமாடன்.

இசக்கியம்மனாவது கேரளம் மற்றும் தென் தமிழக தெய்வம், ஆனால் நெல்லை,கன்னியாகுமரி பகுதிகளின் பிராதன காவல் அரசர் நிச்சயமாக சுடலைமாடன் சாமியே.

அவரின் ஸ்பெஷாலிட்டி எனவென்றால் இந்த பகுதிகளை மிகவும் நேசிப்பவர், மண்ணை பிரிய மனமில்லாதவர், வேறு எங்கும் செல்ல மாட்டார், அவ்வளவு பிரியம் அவருக்கு அந்த மண்ணின் மீது.

உலகில் வேறு எங்கும் அவரை காணமுடியாது, உலகினை விடுங்கள் தாமிரபரணிக்கு வடக்கே கூட கிடையாது.

நெல்லை,தூத்துகுடி,கன்னியாகுமரி பகுதிகளை தவிர எங்கும் செல்லமாட்டார். மிக மிக பிராதான் கோயில்கள் அவருக்கு இங்கு மட்டுமே உண்டு.

நமது கிட்டதட்ட எல்லா ஊர்களிலும் இருவருக்கும் அல்லது ஒருவருக்காவது கோயில்கள் உண்டு, ஊரின் மின்கம்பிகளை விட இவர்களின் ஆலயங்கள் அதிகமான ஊர்களும் உண்டு, எங்கும் வியாபித்திருப்பவர்கள், மக்களுக்கும் இவர்களின் மீது அவ்வளவு பக்தி, மரியாதை.

நமது மக்கள் சாதாரமானவர்கள் அல்ல, 50பைசா மளிகையை கடைக்காரர் ஏமாற்றினால் கடையை மாற்றுவார்கள். அரசு சரியில்லை என்றால் 5 வருடத்தில் மாற்றுவார்கள்

தொன்றுதொட்டு இன்றுவரை இந்த தெய்வங்களை கொண்டாடுகின்றார்கள் என்றால், நிச்சயமாக அந்த தெய்வங்களின் சக்தி மீது அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை, வாழ வைக்கும் நம்பிக்கை.

கடந்த ஜெயா அரசு தமிழக அரசு கோயில்களில் ஆடு,மாடு,கோழி வெட்டகூடாது, கொசு,பூரான்,கரப்பான் பூச்சிகளை கொல்லகூடாது என சட்டமிட்டபொழுது ஒட்டுமொத்த தமிழ்நாடே சிறுவளஞ்சி சுடலை கோயிலை நோக்கியது, அணுவுலைக்கு போல கடும்காவல் இடபட்டது,

இன்றுபோல அன்றும் தமிழகம் வாய்திறக்க அஞ்சியது. சில தலைவர்கள் யாரும் இல்லாத இடத்தில் உரக்க‌ பேசிக்கொண்டிருந்தனர், சிலர் பெரியார் கொள்கை என ஒதுங்கினர்

ஆனால் முதலில் இந்ததடை விரைவில் அகலும் என அறிவித்தது அந்த சுடலைமாடன் ஆலயத்தின் பூசாரியே, சொன்னபடி தடையும் அகன்றது என்பது குறிப்பிடதக்கது

இந்த தெய்வங்கள்,இன்னும் பிற‌ தெய்வங்களை ஆனி,ஆடி மாதத்தில் கையில் பணமிருந்த பொழுது, முன்னோர்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். தெய்வங்களும் அவர்களை ஆசீர்வதித்தது,

மக்களை தெய்வம் கவனிக்கட்டும், ஆனால் மக்கள் கையில் பணமிருந்தால் வியாபாரிகள் கவனிக்காமல் விடுவார்களா?, ஏதாவது செய்து அதனை பிடுங்கினால்தான் அவர்களுக்கு உறக்கமே வரும், திட்டமிட்டார்கள்.

அன்று நிச்சயமாக ஆடிமாதம் மக்கள் செலவழிக்கதயார், தள்ளுபடி என அறிவித்தால் கூட்டம் மொய்க்கும், விலையை கூட்டி பின்னர் கொஞ்சம் குறைத்தால் அள்ளிவிடலாம், முதலில் நெல்லை பகுதி ஜவுளிகடைகளில் அறிவித்தார்கள் ஆடி தள்ளுபடி.

அல்வாவிற்கு உலக புகழ்பெற்ற நெல்லை, அடுத்த கொடுத்த “அல்வா”தான் ஆடி தள்ளுபடி. வியாபார உலகில் நெல்லையர்கள் கொடிபறக்க ஆடி தள்ளுபடியும் மதுரை,திருச்சி,சென்னை, மலேயா,சிங்கப்பூர்,ஐரோப்பா என பரவியது. ஜவுளியில் இருந்து எல்லா வியாபாரங்களுக்கும் தொற்றிகொண்டது.

இன்று நகைக்கடை,செருப்புஏசி, ஃபேன், ஃப்ரிட்ஜ், மிக்சி, கிரைண்டர், அரிவாள் மணை, வத்திப்பெட்டி, படுக்கைகள், தரை விரிப்புகள், மேசை, நாற்காலி, சோபா செட்டுகள், பிளாஸ்டிக் ஸ்பூன், தகர டப்பா அனைத்திலும் தள்ளுபடி. ரியல் எஸ்டேட்டில் கூட‌

பஞ்சர் ஒட்டும் கடையில் ஆடியில் ஒரு பஞ்சருக்கு இன்னொரு பஞ்சர் இலவசம் எனும் அளவிற்கு ஆடிதள்ளுபடி பாடாய்படுத்துகிறது, மக்களும் சாமான்யர்கள் அல்ல இன்னொரு டயரை வெண்டுமென்றே பஞ்சராகியவர்கள் உண்டு.

ஆனால் கண்மூடித்தனமாக வேண்டியது, வேண்டாதது என்று அனைத்தையும் வாங்கிச் சேர்த்துக்கொள்ளும் வழக்கத்தை இந்தத் தள்ளுபடிக் கலாசாரம் தொடங்கிவைத்திருக்கிறது, பாவம் குடும்பதலைவர்கள், அவர்களின் பாரம் தாங்கும் தோளில் குடைச்சல் கொடுக்கும் நேரமிது.

ஆனால் இன்னமும் உணவகங்களில் மட்டும் ஆடி தள்ளுபடி இல்லை, டாஸ்மாக்கிலும் இல்லை அந்த பொன்னாளுக்காக காத்துகொண்டுதான் இருக்கவேண்டி இருக்கின்றது, நிச்சயம் அறிவிப்பார்கள். நம்பிக்கைதான் வாழ்க்கை

இன்று வாழ்க்கை முறை மாறிவிட்டது, எந்த மாத தொடக்கத்திலும் கொடைகள் கொடுக்கலாம் எனும் அளவிற்கு பணம் புழங்குகிறது, ஆனால் முன்னோர்களின் அஸ்திவாரம் மிக வலுவாக அமைக்கபட்டிருப்பதால் ஆனி,ஆடிமாத கொடைகள் அக்காலத்தினை நினைவுபடுத்திகொண்டே இருக்கும், தெய்வங்களும் மகிழ்ந்து ஆசீர்வதித்துகொண்டே இருக்கும், மாறாது.

வியாபாரிகளும் சம்பாதிப்பார்கள், மக்களும் வாங்குவார்கள், உலகம் மாறினாலும் இவை மாறாது. தள்ளுபடிகள் வேண்டுமானால் உயரலாம்.

இன்று ஆங்காங்கு நிற்கும் பனைமரங்கள் பெருமூச்சோடு ஆடிகொண்டாட்டத்தினை பார்த்துகொண்டிருக்கிறது, ராஜராஜனின் சிலை பெரியகோயிலை பார்த்துகொண்டிருப்பது போல,

பனைகள் இல்லாவிட்டால் இந்த கொண்டாட்டங்களின் மூலம் ஏது?.

தென்னக‌ பனை பொருளும், அதன் பிண்ணனியில் உழைத்த மக்களும், அவர்களை காவல் காத்த தெய்வங்களும், அவற்றிற்கு கொடுக்கபட்ட கொடைவிழாக்களுமே ஆடிதள்ளுபடியின் முதல் காரணம், இன்று கோலாலம்பூரின் இந்தியகடைகளில் சீனப்பெண்கள் ஆடிதள்ளுபடியில் ஆடைவாங்குகின்றனர்,

யாம் பெற்ற இன்பம் பெருக வையகம், வேறு என்ன சொல்லி வாழ்த்த?

தென்னகத்தில் ஆனி,ஆடியில் கொடை திருவிழா கொண்டாடும் இந்து நண்பர்களுக்கும், ஆண்டு திருவிழா கொண்டாடும் கிறிஸ்தவ நண்பர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்.

காவேரி பொங்கி வருவதால் ஆடிபெருக்கு விழாவும் மகிழ்ச்சி

மொத்தத்தில் ஆடியில் மக்களுக்கு மகிழ்ச்சி, தெய்வங்களுக்கு திருப்தி, வியாபாரிகளுக்கு ஒருநாளும் நிறைவுவராது எனினும் தற்காலிக சந்தோசம், திதிகள் கொடுப்பதால் முன்னோர்களின் ஆன்மாவிற்கும் சாந்தி.

ஆனால் புதிதாக திருமணமானவர்களிடம் மட்டும் ஆடிபெருமை பேசமுடியாது, பேசினால் பிரியாணி கடையில் விழுந்தது போல முகத்திலே விழும்

பொன். மாணிக்கவேல் மீது நம்பிக்கை இல்லை : தமிழக அரசு

பொன். மாணிக்கவேல் மீது நம்பிக்கை இல்லை : தமிழக அரசு

இந்த கவிதா எனும் அதிகாரி கைதானதும் இனி தங்களையும் தங்களுக்கு வேண்டியவர்களையும் பொன்மாணிக்கவேல் காப்பாற்றுவார் எனும் நம்பிக்கை அரசுக்கு இல்லாமல் போயிற்று

விட்டால் கைதுகள் தொடரும் என மாற்றிவிட்டார்கள்

விஷயத்தை முறையாக விசாரித்தால் இந்தியாவிலே மாபெரும் மோசடியாக இந்த சிலை கடத்தல் அறநிலையதுறை ஊழல்கள் இருக்கும் போல..


அதிக சம்பளம் கொடுத்தும் சில அரசு ஊழியர்கள் சரியாக வேலை செய்வதில்லை : எடப்பாடி பழனிச்சாமி

ஏதோ அரசு சம்பளம் வாங்கும் இவரும் இவரின் மந்திரிசபையும் 111 எம்.எல்.ஏக்களும் ஒழுங்காக வேலை செய்வது போல பேசிகொண்டிருக்கின்றார்

முதலில் இவரே இவர் வேலையினை ஒழுங்காக செய்யவில்லை, அதைவிட கொடுமை இவரின் வேலை என்னவென்றே இவருக்கு தெரியவில்லை


ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்த நாள்

அதுவரை ஐரோப்பாவில் ஒருவன் பேசியே ஆட்சிக்கு வந்ததில்லை, அந்த காலகட்டத்தில் அந்த ஜெர்மன் தேசம் அவனை நம்பியது, அவனை தவிர தங்களை காப்பாற்ற ஆளில்லை என மானசீகமாக நம்பியது

முதல் உலகப்போர் அவ்வளவு கொடூர நிகழ்வுகளை ஜெர்மனிக்கு கொடுத்திருந்தது.

பிரான்ஸ், பிரிட்டன் போல தாங்களும் குறிப்பிட்ட நாடு என சொல்லிகொண்ட ஜெர்மன் இன்னும் வளர ஆசைபட்டது

அது அப்பொழுது ஆட்டோமன் துருக்கியுடனும், ஆஸ்திரிய ஹங்கேரி எனும் அந்நாளைய வல்லரசுடனும் நல்ல தொடர்பில் இருந்தது

ஜெர்மனின் பெர்லினில் இருந்து பாக்தாத் வரை ரயில் விடும் திட்டம் அவர்களிடம் இருந்தது, அப்படி செய்திருந்தால் ஜெர்மன் பொருளாதார வல்லரசாகியிருக்கும்

விடுமா பிரிட்டன்

வஞ்சகமாக ஆடியது, போர் தொடங்க வேண்டும் என முடிவெடுத்து வாய்பிற்காய் காத்திருந்தது, ஜெர்மன் மட்டுமல்ல பல ராஜ்யங்கள் அதன் குறியில் இருந்தன‌

சிறிதாக தொடங்கிய போர் பெரும் போராய் வெடித்தது, ஆட்டோமான் சாம்ராஜ்யம் எனும் 500 ஆண்டுகால சாம்ராஜ்யம் சரிக்கபட்டது

ஆஸ்திரிய ஹங்கேரி நொறுக்கபட்டது, ஜெர்மன் கோழிகுஞ்சை போல் நசுக்கபட்டது

ஜெர்மனை பாஞ்சாலி துரியோதனன் சபையில் பாண்டவர்கள் போல் நிறுத்தினார்கள் அதை ஆளாளுக்கு பரிகசித்தார்கள், தீரா கடனை அதன் தலையில் கட்டினார்கள்

ஜெர்மானியர்கள் மனதில் புழுங்கினார்கள் அழுதார்கள்

ஒரே ஒரு ராணுவ வீரன் இதனை எல்லாம் மனதில் வைத்திருந்தான், அவன் பிறப்பால் ஆஸ்திரியன் ஆனால் ஜெர்மன் இனம்

இன்றுபட்ட அவமானத்திற்காக ஒரு நாள் ஜெர்மனியினை உயர்த்திகாட்டுவேன் என மனதிற்குள் சொல்லிகொண்டிருந்தான்

அவன் அன்று ஆயுதம் ஏந்தவில்லை, குண்டு வீசவில்லை

மாறாக பேசினான், பேச்சென்றால் அப்படி ஒரு பேச்சு

அதை நம்பிய ஜெர்மனி அவனே அந்த அவமான அடிமைதனத்தில் இருந்து அவன் ஜெர்மனை காப்பான் என நம்பிற்று

அவனிடம் ஆட்சியினை ஒப்படைத்த நாள் இன்று

ஐரோப்பாவின் மாபெரும் பரபரப்பான காலமும், உலகம் மிரண்ட காலமும் யூதர்களின் கருப்பு நாட்களும் இந்த நாளில்தான் தொடங்கின‌

ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்த நாள்

கலைஞர் முதல்வராகும் பொழுது கலைதுறையினர் வாழ்த்தினார்கள்

கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்க லண்டன் டாக்டர் வருகை

கலைஞர் உடல்நலம் குன்றி இருவருடங்கள் ஆகின்றன, ஆனால் லண்டன் டாக்டர் இப்பொழுதுதான் வருகின்றாராம்

இது ஒருபக்கம் என்றால் செத்துபோன அரசியல்வாதிகளை தவிர எல்லா அரசியல்வாதிக்கும், பிக்பாஸில் மாட்டிகொண்ட சில நடிகர்களை தவிர எல்லா நடிகர்களுக்கும் இப்பொழுதுதான் அவரை நலம் விசாரிக்கும் ஆசை வந்திருக்கின்றதாம்


கலைஞர் முதல்வராகும் பொழுது கலைதுறையினர் வாழ்த்தினார்கள்

மோடி பிரதமாகும் பொழுது காவி கும்பல் ஆர்பரித்தது

பழனிச்சாமி முதல்வராகும்பொழுது அடிமை கும்பலே கூடி இருந்தது

இப்படி அவரவர் குழுவில் உள்ளவர்கள் உயர்பதவி அடையும் பொழுது அந்த கோஷ்டியில் உள்ளவர்கள்தான் அழைக்கபடுவார்கள்

அப்படி இம்ரான்கான் பிரதமராக பதவி ஏற்பதில் இந்தியாவில் கவாஸ்கர் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு அழைப்பு வந்திருக்கின்றது,மோடிக்கு வரவில்லை

எப்படி வரும்?

ஒன்று மோடி கிரிக்கெட் ஆடியிருக்க வேண்டும் அல்லது இம்ரான்கான் சங்கி கோஷ்டியாக இல்லை ஆசிரம சாமியாராக இருக்க வேண்டும்

இரண்டும் இல்லாவிட்டால் எப்படி?

ஆனால் மோடி விடுவாரா? நள்ளிரவில் ரகசியமாக சென்று இம்ரானை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்து அசத்திவிட மாட்டாரா?


லாரன்ஸ் ஸ்ரீரெட்டி இம்சை

நாட்டில் நடக்கும் மோதல்களும், மர்ம காட்சிகளும், காமெடிகளும் போதாதென்று இந்த லாரன்ஸ் ஸ்ரீரெட்டி இம்சை வேறு

அம்மணி அவர் வாய்ப்பு தருவதாக என்னை பயன்படுத்திவிட்டு ஏமாற்றினார் என கொளுத்திபோட்டது

கண்ணில் படும் சினிமாகாரனை எல்லாம் “டேய் நீ அன்றைக்கு என்னை.. என அந்த அம்மணி கை நீட்டுவதால் சினிமாக்காரர்கள் எல்லொரும் மாறுவேடத்தில் திரிகின்றார்கள்

இதில் லாரன்ஸ் அப்பெண்மணிக்கு நடிப்பும் நடனமும் (எது வராதோ அது) சரியாக இருந்தால் என் படத்தில் வாய்ப்பு கொடுப்பேன் என்றார்

எதற்கு நடிப்பும் நடனமும்? முனி காஞ்சனா என பேய் படங்களை எடுக்கும் லாரன்ஸுக்கு என் முகம் போதாதா? என ஸ்ரீரெட்டியும் கேட்கவில்லை

பதிலுக்கு தன் நடிப்பினை காட்டுவதாக‌ என ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி

அதில் தொப்புளும் இன்ன பிறவும் தெரிகின்றதே அன்றி நடிப்பு சுத்தமாக தெரியவில்லை

நடிப்பு திறமை என அம்மணி வெளியிட்ட வீடியோவினை கண்டபின்பு உலகம் இப்படி சொல்லிகொண்டிருக்கின்றது

“ஓஓ இதுதான் திறமையா? இந்த திறமையினைத்தான் பயன்படுத்தி பார்த்துவிட்டார்களே, இனி நீ காட்ட என்ன திறமை இருக்கின்றது? போம்மா..”

இந்தியாவிற்கு சில நன்மைகளையும் செய்ய தொடங்கிவிட்டார் டிரம்ப்

Image may contain: one or more peopleஇந்த டிரம்ப் பல அட்டகாசங்களை செய்தாலும் அவர் இந்தியாவிற்கு சில நன்மைகளையும் செய்ய தொடங்கிவிட்டார்

அதாகபட்டது இரண்டாம் உலகப்போர் முடிந்து அமெரிக்கா உலகின் மாபெரும் வல்லராசனதும் அதன் குட்புக் பட்டியலில் சில நாடுகள் இடம்பெற்றது, இந்தியா அதில் இல்லை

குட்புக் என்றால் அமெரிக்கா யாருடன் ஆயுதங்களை விற்கும், எவை எல்லாம் பாதுகாப்பான நாடுகள், அமெரிக்காவின் நண்பர்கள் எனும் பட்டியல் அது

கிட்டதட்ட நேட்டோவில் இருக்கும் நாடுகளே அதில் இடம்பெற்றிருக்கும்

இந்தியா அதில் இல்லை, பின் இந்திரா ஆம் நாங்கள் ரஷ்யா பக்கம் என பகிரங்கமாக அறிவித்தபின் சுத்தமாக இல்லை

இந்நிலையில் இந்தியா எங்கள் நம்பிக்கைகுரிய நாடு என அப்படியலில் இப்பொழுது இந்தியாவினை அமெரிக்கா சேர்த்தாயிற்று

சீன போட்டி, எவ்வளவு கொடுத்தாலும் திருந்தாத ஊதாரி பாகிஸ்தான் என பல சிக்கல்களை கண்டுவிட்ட அமெரிக்காவிற்கு இந்தியா நல்ல தேசமாக தெரிகின்றது

கூடவே தெற்காசியாவில் தன் மேலாண்மையினை நிறுவ இந்திய ஒத்துழைப்பும் அதற்கு தேவை

இதனால்Strategic Trade Authorisation-1 எனும் தகுதியினை இந்தியாவிற்கு வழங்கியாயிற்று

இதனால் இனி அதி நவீன பாதுகாப்பு சம்பந்தமான ஆயுத நுட்பங்களை அமெரிக்கா இந்தியாவிற்கு வழங்கும்

இந்திய வரலாற்றில் இது மாபெரும் வெற்றி, சந்தேகமில்லை

இது சீனாவுடனான போருக்கு இந்தியாவினை கொம்புசீவும் முயற்சி என பலர் சொன்னாலும் தேசம் இதனால் நல்ல நவீன அம்சங்களை பெறும் என்பதில் சந்தேகமில்லை

இதனால் தீவிரவாதிகள் ஊடுருவதை கண்காணிக்கும் நுட்பத்தில் இருந்து ராக்கெட் நுட்பம் வரை பல விஷயங்களை பெறலாம்

உண்மையில் மோடி அரசு இவ்விஷயத்தில் வெற்றி பெற்றிருக்கின்றது

ஒரு காலத்தில் அமெரிக்காவில் அனுமதி இல்லா மோடிக்கு, இன்று அவர் பிரதமாரக இருக்கும்பொழுதே அமெரிக்கா இம்மாபெரும் சலுகையினை காட்டி இருப்பது மோடியின் வெற்றி

இனி அமெரிக்காவின் எப் 117 தொழில்நுட்பம் வரை இந்தியாவிற்கு கிடைக்கலாம்

ரஷ்யா இதை எப்படி எடுக்குமோ தெரியாது, ஆனால் அவர்களிடமிருந்து ஏற்கனவே எஸ் 400 கருவியினை வாங்குவது கைசாத்து ஆகிற்று

உலக போட்டிகளை தனக்கு அனுகூலமாக பாவிக்க இந்தியா தொடங்கிவிட்டது

மோடிக்கு வாழ்த்துக்கள், தேச பாதுகாப்பு வலுபெறட்டும்

இச்செய்தி கிடைத்தவுடன் யார் மகிழ்ச்சியாக இருப்பார்கள்?

பன்னீரோ பழனிச்சாமியோ இனி நம் உறவினர்களை ராணுவ ஜெட் விமானத்தில் 5 மணிநேரத்தில் அமெரிக்காவிற்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றுவிடலாம் என இந்நேரம் கூட்டி கழித்து கணக்கு போட்டு கொண்டு இருப்பார்கள்

இலங்கை ஒரு சொப்பன சுந்தரி

Image may contain: sky, cloud and natureஒரு நாடு இருந்தால் இலங்கை போல சொப்பன சுந்தரியாக இருக்க வேண்டும், ஒரு இனம் இருந்தால் சிங்களை போல தந்திரமாக இருக்க வேண்டும்

தன்னை யாரெல்லாம் பயன்படுத்த நினைகின்றார்களோ அவர்களிடம் சிக்கியும் கொள்ளாமல் அதே நேரம் உதவ வருபவர்களின் எதிரிகளையும் உள்ளேவிட்டு ஒரு போட்டியினை உண்டாக்கி அது பெரும் அனுகூலம் ஏராளம்

சில அரபு நாடுகளை போல அது அமெரிக்க அடிமை ஆகவுமில்லை, அதே நேரம் ஆதரவில்லா அனாதையாக ஆகிவிடவும் இல்லை

மிக நுட்பமான தந்திரம்

இந்தியாவும் அமெரிக்காவும் தங்களை வளைக்க பார்த்த நேரத்தில் அமெரிக்க உதவிகளை பெற்றார்கள், இந்தியா அங்கு தூண்டிவிட்ட பயங்கரவாதத்தை இந்தியாவினை கொண்டே அழித்தார்கள்

இந்தியாவினையும் அந்நாளைய இந்திய ஆதரவு புலிகளையும் மோதவிட்டு இரு எதிரிகளையும் சமாளித்த அட்டகாச தந்திரம் சிங்களருடையது

இந்தியா எந்த புலிகளை வைத்து தன்னை பயம்காட்டியதோ அந்த புலிகளை இந்தியாவுடன் மோதவைத்து, இந்தியாவினை பிரித்து பின் புலிகளையும் அழித்தாகிவிட்டது

புலிகளின் மடத்தனமும், பிரேமதாசாவின் தந்திரமும் அதற்கு துணைபோயின, ராஜபக்சேயின் முரட்டுதனம் வெற்றியினை கொடுத்தது

தன் கையினை குத்திய ஆயுதமாக புலிகள் இருப்பினும் அவர்கள் இல்லா நிலையில் இந்திய பிடி இலங்கையில் தளர்ந்தது

வழக்கமாக அமெரிக்கா, இந்தியா என ஆட்டம் ஆடிய இலங்கை பின்பு சீனாவினையும் களத்தில் இறக்கியது

இப்பொழுது மூன்று நாடுகளையும் லாவகமாக கையாண்டு வசூலை அள்ளி குவிகின்றது

முன்பெல்லாம் “இந்தியா நான் சொல்வதை கேட்கின்றாயா? இல்லை புலிகளிடம் கரம் கோர்கட்டுமா?” என்றால் அடங்கும் இலங்கை

இப்பொழுதோ “இத்தனை கோடி கொடு” என பகிரங்கமாக கேட்கின்றது

இந்தியாவிற்கும் வேறு வழி இல்லை, யோசித்தால் சீனாவோ அமெரிக்காவோ உள்ளே புகுந்துவிடும்

இதனால் இலங்கையில் வீடு அமைத்தல், மருத்துவமனை கட்டுதல், விமான நிலையம் அமைத்தல் என கடும் சேவையில் இந்தியா இறங்கிவிட்டது

ஆயினும் சீனாவிடம் வசூலிக்கவும் இலங்கை தவறவில்லை, இந்தியாவினை காட்டி சீனாவிடமும் ஆட்டையினை போடுகின்றது

இதுபற்றி இந்தியா கேட்டால் “அண்ணே எங்க நாடு சிங்கப்பூர் ஆயிருக்கும், போராளிகளை நீங்க வளர்த்து நாசமாக்க்கீட்டீங்க‌

நீங்க அழிச்ச இலங்கைய நீங்களே உருவாக்கணும், சீனா உங்க அளவுக்கு எங்களை அழிக்கவில்லை” என செந்தில் ஸ்டைலில் சொல்லிவிட்டு நகர்கின்றது

இப்பொழுது மாத்தலையில் இந்தியா விமான நிலையம் அமைக்க பல நூறு கோடிகளை கொட்டும் நிலையில் சீனா வலிய வந்து 2 ஆயிரம் கோடி இலங்கைக்கு நன்கொடை என தட்டில் வைத்து நீட்டுகின்றது

மொத்தத்தில் இலங்கைக்கு காசுமேல் காசு வந்து கொட்டும் நேரமிது, பண மழை அல்ல, அதில் அடை மழை

நடப்பதை அமெரிக்காவும் பார்த்துகொண்டிருக்கின்றது அவர்களையும் எப்படி சமாளிப்பது என்பது இலங்கைக்கு தெரியும்

நஷ்டம் வராதாபடி அட்டகாசமாக சமாளிப்பார்கள்

உலக அரசியல் கால்பந்தில் யாருக்கும் சிக்காமல் அட்டகாசமாக பந்தை கடத்தி கொண்டிருப்பது சிங்களம், சந்தேகமின்றி சொல்லலாம்

யோசித்து பாருங்கள்

சிங்கள இனம் சீனா, இந்தியா என வல்லரசுகளை மிக நுட்பமாக கையாண்டு தன்னை வளர்க்கின்றது

தமிழகமும் பாஜக காங்கிரஸ் எனும் பெரும் கட்சிகளை கையாண்டு தன்னை இப்படி வளர்க்கத்தான் செய்யலாம்

ஆனால் இங்கே சுயநலம் மிகுந்திருக்கின்றது, அறிவு பின்னால் சென்றுவிடுகின்றது, சில நேரங்களில் இல்லவே இல்லை

இரு எதிரிகள் தன்னை விழுங்க வரும்பொழுது அவர்கள் இருவரையும் எப்படி பாவித்து தனக்கு தேவையானதை பெற்று கொள்ள வேண்டும் எனும் ராஜதந்திரத்தில் எங்கோ சென்றுவிட்டது இலங்கை தீவு

அருகிருக்கும் தமிழகத்திற்கு அப்படி ஒரு திட்டமே இல்லை,

ஆனால் தமிழக தலைவர்கள் தந்திரமாக பாஜக காங்கிரஸ் எனும் இருகட்சிகளிடமிருந்தும் தங்களுக்கு தேவையானதை பெற்றுவிடுகின்றார்கள் என்பது வேறு விஷயம்

இன்றைய தேதியில் ராஜதந்திரத்தில் ஊறியது சிங்களமா தமிழினிமா என்றால் நிச்சயம் சிங்களமே

“அறிவு அற்றம் காக்கும் கருவி” என வள்ளுவன் அவர்களுக்காகத்தான் எழுதி இருக்கின்றான்

நாம் தமிழரை விட மோசமான மெண்டல்கள் திமுகவிலும் இருக்கின்றார்கள்

நாம் தமிழரை விட மோசமான மெண்டல்கள் திமுகவிலும் இருக்கின்றார்கள்

வெங்கய்ய நாயுடுவிற்கு இங்கென்ன வேலை? ஜெயாவின் கடைசி கால மர்மம் போல இங்கும் ஏதோ நடக்கின்றது என்பதெல்லாம் யாரும் அறியாததல்ல‌

கலைஞரை சந்திக்க நாள்தோறும் காவேரிக்கு அணிவகுப்பு நடப்பதும், பல அதே அப்பல்லோ காட்சிகள் நடப்பதும் யாருக்கு சந்தேகத்தை கொடுக்காது?

இதற்கு முன்னும் கலைஞர் பலமுறை மருத்துவமனை சென்றார், ராமசந்திரா முதல் பல இடங்களில் சிகிச்சை பெற்றார்

ஏன் இதே காவேரியில் கூட இருந்தார்

அப்பொழுதெல்லாம் மொத்தமாக இப்படி குழுமினார்களா? இல்லை நிச்சயம் இல்லை

பலத்த சலசலப்பு ஏற்பட்டதால் விஷயம் புகைகின்றது

அதற்குள் எம்மிடம் வந்து ஆளாளுக்கு சாடுகின்றார்கள், அதிலும் உள்பெட்டியில் கேட்கின்ற பல கேள்விகள் இவர்கள் மனிதர்களே அல்ல என்பதை சொல்கின்றது

நம்மிடம் வம்பிழுக்கும் திமுகவினர் எந்த ரகம் என பார்த்தால், தினமலர் கலைஞரை கலாய்த்ததை புரிந்து கொள்ளாமல் தினமலரை பாராட்டியவனாகவே இருக்கின்றான்

தினமலர் ஒரு வஞ்சகமான காமெடியினை செய்திருந்தது, விஷயம் புரிந்தோருக்கு அது கடும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தது

அதாவது கலைஞரின் இதயம் 5 நிமிடம் நின்றுவிட்டு மறுபடி துடித்ததாக கடும் வெறுப்பினை நுட்பமாக கலாய்த்து சொல்லி இருந்தது

5 நிமிடம் ஒரு இதயம் நின்றுவிட்டால் உடல் என்னாகும் என்பதையும் அதன்பின் துடிக்க முடியுமா? துடித்தாலும் மூளை வேலை செய்யுமா என்பதையும் கூட தெரியா இப்பதர்கள் தினமலரை பாராட்டுகின்றன‌

சொல்லவந்ததை மிக நுட்பமாக கலாய்த்து சொல்லி இருந்தது தினமலர், அட்டகாசமான கலாய்ப்பு

அந்த தினமலரை “ம்ம்ம் அப்படி எம் தலைவன் வழிக்கு வா, அவன் பெருமையினை ஒப்புகொள்” என கொண்டாடிய கிறுக்கு திமுகவினர், எம்மிடம் சாடுகின்றார்களாம்

கலைஞர் உங்களுக்கு தலைவராக இருக்க வேண்டுமென்றால் உங்கள் மூளையினை கழற்றி வைத்து கொள்ளுங்கள்

என்னை ஏன் அப்படி செய்ய சொல்கின்றீர்கள்?

நாம் கண்ட சுவாரஸ்யமான தலைவர்களில் அவரும் ஒருவரே தவிர, வேறு ஒன்றுமில்லை

அதற்காக பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட தமிழினத்தில் கலைஞர் ஒருவரே நிரந்தர‌ தலைவர் என நீங்கள் சொல்வதை கேட்டுகொள்ளவும் நான் தயாராக இல்லை

அந்த ஆலமரத்தை அண்டி பிழைக்கும் பல்லியாக நீங்கள் இருக்கலாம், அதற்காக வானில் சுற்றும் இப்பறவையினை எங்களை போல் இம்மரத்தடியில் இருந்து கலைஞர் புகழ் பாடிகொண்டே இரு என எப்படி சொல்ல முடியும்?

உங்களை போல மரத்தடி பல்லிகளாக‌ இருந்து அதை ஆச்சரியமாக, அதை மட்டும் பார்த்துகொண்டிருக்க முடியாது, அப்படி இருந்தால் உங்களை போலவே மகா குறுகிய புத்தி வந்துவிடும்

மிக உயர இருந்து எல்லா விஷயங்களையும் கவனிப்பதில்தான் சுவாரஸ்யம் இருக்கின்றது

பிரியாணி யுவராஜ் மட்டுமல்ல, நீக்க வேண்டிய ஏராளமானோர் அங்குதான் இருக்கின்றனர்

போங்கடா டேய்….

ரஜினியோடு என்னை ஒப்பிடுவது நியாயமன்று – கமல் ஹாசன் பேட்டி

ரஜினியோடு என்னை ஒப்பிடுவது நியாயமன்று, நான் சந்தர்ப்பவாதி அல்ல – கமல் ஹாசன் பேட்டி

அதானே , ஒரு குழப்பவாதியினை சந்தர்ப்பவாதியோடு ஒப்பிட்டால் அவனுக்கு கோபம் வராதா? அது என்ன நியாயம்?

கமல் மாபெரும் குழப்பவாதி என சொல்லுங்கள் அவருக்கு கோபமே வராது.


கட்சியில் போட்டி என்பதற்காக ஒருமுறை ஈவிகே சம்பத் எனும் கட்சியின் புரவலர் மற்றும் தலைவரையே அடித்து விரட்டிய கட்சி அது

அதுவும் சும்மாவா அடித்தார்கள்? “உனக்கு பரம்பரை சொத்து இருக்கின்றது, எங்களுக்கு பிழைக்க என்ன இருக்கின்றது?” என சொல்லி சொல்லி அடித்தார்கள்

அதன் பின்னும் எத்தனையோ அடிகள், கொலைகள், ஓட ஓட அடித்தல் என ஏராளம்

சில வெளிதெரிந்தது, பல வெளி தெரியவில்லை

அப்படிபட்ட கட்சியில் இந்த பிரியாணி சண்டை எல்லாம் விஷயமே இல்லை

எனினும் தலைவரையே அடித்தல், வாக்கிங் செல்லும் பொழுது கொல்லுதல், அலுவலகத்தை எரித்தல் என பல சாகசங்களை செய்து கெத்தாக இருந்த கட்சிக்கு பிரியாணிக்கு சண்டை எல்லாம் அவர்கள் லெவலுக்கு தரகுறைவே