அங்கிள் சைமனின் வீடியோ ஒன்று வந்தது

Image may contain: 1 person, close-upஅங்கிள் சைமனின் வீடியோ ஒன்று வந்தது, அதில் ஆங்கில வார்த்தைகள் எல்லாம் தமிழில் இருந்து சென்றது என கடும் அழிச்சாட்டியம்

Speech என்பது பேச்சு என்பதில் இருந்து வந்ததாம்

sudden என்பது உடன் என்பதில் இருந்து வந்ததாம்

attack என்பது தாக்கு என்பதில் இருந்து வந்ததாம்

இப்படி ஏக அழிச்சாட்டியம் , இன்னும் பல ஆங்கில வார்த்தைகள் இங்கிருந்து சென்றது என அங்கிள் கடும் ஆராய்ச்சியில் இறங்கிவிட்டார்

ஈழபோராட்டம், இன விடுதலை எல்லாம் முடிந்துவிட்டதால் அன்னார் இப்பொழுது மொழிஞானி ஆகும் முயற்சியில் இருக்கின்றார்

அவர் ஆராய்ச்சி வாழ்க‌

எனினும் அவரிடம் நமக்கு ஒரே ஒரு கேள்விதான்

“அண்ணே , நீங்க அடிக்கடி சொல்ற ஓத்தா என்பது ஆங்கிலத்தில் எப்படி Fuck என்றானது, எங்கோ தப்பு நடந்திருக்குண்ணே அத சரிபண்ணுங்க‌

இனி வெள்ளக்காரன் கிட்ட Fuck சொல்ல கூடாது, ஒத்தா சொல்லுங்கடான்னு எடுத்து சொலுங்கண்ணே

தமிழன்னா சும்மாவா?, உலகத்துக்கே பேச்சு கொடுத்த பரம்பரைன்னே”


ரஜினி அரசியலில் ஈடுபடுவதை யாராலும் தடுக்க முடியாது- ரஜினியின் அண்ணன் பேட்டி

என்னது ரஜினி அண்ணனா? அங்கும் குடும்ப அரசியலா? வாழ்க‌

அய்யா, அவர் அரசியலில் ஈடுபட்டால்தானே தடுக்க முடியும்? உள்ளே வராத ரஜினியினை எப்படி தடுக்க‌

இந்த காலா படத்தின் வெற்றிவிழா ஏதும் உண்டா என கேட்டால் ரஜினி தரப்பிடம் பதில் இல்லை, நீங்களாவது சொல்லுங்கள்


உபி முதல்வர் ஆதிதியநாத் யோகிக்கு கொலைமிரட்டல் : உளவுதுறை எச்சரிக்கை

இப்போதைக்கு யோகியின் எதிரி காளைமாடுகள், இவர் பசுவினை பாதுகாக்கின்றேன் பேர்வழி என அவற்றை மிக பத்திரமாக பாதுகாக்க, இந்த காளைமாடுகள் தான் ஆத்திரத்தில் இருக்க வேண்டும்

காளைமாட்டுக்குள்ளும் உளவு பார்த்த யோகியின் உளவுபடை மகா திறமையானது என்பதில் சந்தேகமில்லை


‘ஏழைகளுக்கு வீடு’ திட்டம் செயல்படுத்தபடும் : மோடி உறுதி

முதல் வீடு அந்த ஏழைதாயின் மகனுக்குத்தான் ஒதுக்கபடும் என உறுதிபடுத்தபடாத செய்திகள் தெரிவிகின்றன.


காமராஜர் இறந்தவுடன் முதல் அஞ்சலி கலைஞர் செலுத்தினார்

காமராஜரை நாடார் என்பதை தவிர் அறியாத சில பதர்களுடன் கலைஞர் காமராஜரின் புகழை மறைத்தார் என மட்டும் சொல்லிகொண்டிருக்கும் கூட்டமும் சேர்ந்து ஒரு பெரும் புரளியினை கிளப்புகின்றன‌

இந்த மாலை நேர கொசுகூட்டம் போல அவைகளின் ரீங்காரம் பல இடங்களில் கேட்கின்றன‌

அவை என்ன சொல்கின்றன? காமராஜருக்கு மெரீனாவில் கல்லறை அமைக்கபடுவதை கலைஞர் வஞ்சகமாக தடுத்தார், அவர் ஒரு தமிழன் துரோகி, தேசிய துரோகி, வஞ்சகன், சூதன் என ஒரே குற்றசாட்டுகள்

உண்மையில் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியம் என்ன?

காமராஜரை விட பெரும் பாரம்பரியங்கள் இருந்தன. காந்தி, ராஜாஜி , நேரு, கிருபாளினி, சாஸ்திரி என ஏகபட்ட பேர் உண்டு

இவர்களில் யாருக்காவது சமாதி என நீங்கள் கேட்டதுண்டா?

தேசப்பிதா உடலே எரியூட்டபட்டது, நேருவின் உடல் எரிக்கபட்டு இந்தியா எங்கும் சாம்பல் தூவபட்டது

சாஸ்திரி, இந்திரா, ராஜிவ் என யார் உடலும் தப்பவில்லை, எல்லாமே தீக்கு இரையாக்கபட்டது

அந்த இடத்தில் வருடாவருடம் வணங்குவார்களே தவிர அங்கு கல்லறை என்று ஏதுமில்லை

அந்த பாரம்பரியபடி காமராஜர் உடலும் எரிக்கபட்டதே அன்றி வேறு ஒன்றுமல்ல‌

அதுவும் கலைஞர் அன்று செய்த காரியங்கள் அவர் மேல் எதிரிக்கும் மரியாதை வரும் விஷயங்கள்

கலைஞரிடம் ஒரு சுபாவம் உண்டு, கருத்து ரீதியாக ஒருவரை எதிர்பாரே அன்றி, அந்த நபரை வெறுக்கமாட்டார். அபிப்பிராய பேதங்களை தாண்டி அவர் விட்டு நல்லது கெட்டதற்கு முதல் ஆளாக வருவார்

காமராஜர் இறந்தவுடன் முதல் அஞ்சலி அவர்தான் செலுத்தினார், அந்த இரவில் அஞ்சலிக்கான இடத்தில் மண்டியிருந்த முட்களை அகற்றும்பொழுது அங்கேதான் இருந்தார்

அந்த இரவு அவர் தூங்கவில்லை, நாட்டின் தலைவருக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை கொடுத்தார்

இந்திரா வந்து அஞ்சலி செலுத்தும்பொழுது காமராஜர் உடலை வணங்கி நின்ற கலைஞரை மறக்க முடியாது

கலைஞர் மேல் காமராஜரை எதிர்த்த சர்ச்சை இருக்கலாம், ஆனால் அவரின் உடலுக்கு கலைஞர் செய்த அஞ்சலியும் அந்த தகணத்தில் அவர் காட்டிய மரியாதையும் காங்கிரசாருக்கே அவர் மேல் பெரும் மரியாதை வர காரணமாயிற்று

அதை கலைஞரின் பரம்பரை பகைவர்கள் கூட மறுக்க முடியாது

கட்சி பாரம்பரியபடி , குடும்ப பாரம்பரியபடி காமராஜரின் உடல் எரியூட்டபட்டதே அன்றி வேறல்ல‌

பெரியாருக்கே கல்லறை இல்லை என்பது எல்லோருக்கும் மறந்துவிடுகின்றது

ஆனால் அண்ணா விஷயம் வேறு

அவருக்கு ஏகபட்ட தொண்டர்கள் இருந்தார்கள், இன்றும் இந்தியாவில் ஒரு தலைவனின் இறுதி ஊர்வலத்தில் பெரும் திரள் மக்கள் திரண்டார்கள் எனும் பெருமை அண்ணாவிற்கே

சென்னை கடற்கரையும் அண்ணாவும் பிரிக்கமுடியாதவை, அங்கேதான் அண்ணா முழங்குவார், ஆலோசனை கூட்டம் நடத்துவார், கூட்டம் முடிந்தபின்னும் கடலருகே அமர்ந்திருப்பார்

அவர் எந்த இடத்தில் முழங்கினாரோ அங்கே புதைக்கபடலாம் என கட்சியினர் முடிவெடுத்தபின்பே அங்கு புதைக்கபட்டார் அண்ணா

ஆயினும் அண்ணாவின் மனைவியோ அவரின் பிள்ளைகளோ அப்பக்கம் புதைக்கபடவில்லை என்பதும் கவனிக்கதக்கது

அண்ணா அவர்களின் பிதாமகன், காங்கிரஸில் காந்திக்கே
சமாதி இல்லை எனும்பொழுது காமராஜருக்கு யாரும் கோரவில்லை

காங்கிரஸ் ஒருமாதிரி கட்சி, ஏன் திருப்பெரும்புதுர் ராஜிவ் நினைவிடத்திற்கு கூட காங்கிரசார் அதிகம் செல்லமாட்டார்கள்

ஏன் என்றால் அதுதான் தமிழக காங்கிரஸ்.

ஆனால் அண்ணாவிற்கு கட்சி அபிமானம் அப்படி இருந்தது, கூடவே மாற்றுகட்சியினரும் அவர்மேல் மரியாதை கொண்டிருந்தனர்

மிகபெரும் நினைவாலயம் அவர் சாம்பலை பாதுகாக்கும் இடமாக அமைக்கபடவேண்டும் எனும் கோரிக்கை அவர் உடலை புதைத்து முடிந்தது

காமராஜருக்கு அப்படி கோரிக்கை வைக்கவும் கட்சியில் யாருமிலை, அப்படி பட்ட விஷயங்கள் அவர்கள் சிந்தையிலுமில்லை

ஆனால் பின்னாளில் காமராஜர் வாழ்ந்த வீட்டை வாங்கி அதை நினைவாலயமாக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கை கலைஞரால் முதலில் வைக்கபட்டது

ஆனால் மிசாவில் அவர் அரசு டிஸ்மிஸ் ஆக, பின்னர் வந்த ராமசந்திரன் அதை செய்தார்

கலைஞர் அரசு நீடித்திருந்தால் கலைஞரே அதனை செய்திருப்பார், வள்ளுவர் கோட்டம் திறக்கவே வாய்ப்பில்லாத கலைஞருக்கு இதுவும் வாய்க்கவில்லை

இந்த சமாதி விஷயங்களிலே சோகத்திலும் காமெடி செய்தது அதிமுக‌

அந்த ராமசந்திரன் இறந்ததும் அடிமை கூட்டம் திகைத்தது, அவருக்கு சாவே இல்லை என எண்ணிகொண்டிருந்த கூட்டம் அழுதது அதைவிட அவர் முகம் இல்லாமல் எப்படி வோட்டு
வாங்குவோம் என கதறிற்று

அன்று அவைகளுக்கு ஜெயா, சசிகலா, எடப்பாடி, பன்னீர் என பலர் வருவார் என அசரீரி ஒலிக்கவில்லை என்பதால் அவர்கள் அழுதனர்

இதில் ஒரு அடிமைக்கு விபரீத ஐடியா வந்தது, சக அடிமைகளிடம் ஓடியது

தலைவர் யார் புரட்சி தலைவர், புரட்சியாளர்கள் எல்லாம் புதைக்கபட்டார்களா, ரஷ்ய லெனின், மாவோ, ஹோசிமின் போல தலைவர் உடலையும் பதபடுத்தி மசோலினியம் கட்டலாம் என சொன்னது

இதை மற்ற அடிமைகளும் உற்சாகமாய் வரவேற்றன, தேர்தலில் அந்த உடலை இழுத்துகொண்டு போகும் ஐடியாவும் பளிச்சிட்டது

உடனே ரஷ்யாவில் சீனாவில் எல்லாம் எவ்வளவு செலவாகும் என விசாரிக்க தொடங்கினார்கள், விஷயம் டெல்லிக்கு சென்றது

டெல்லி மகா சீரியசானது, இந்த கேவலமான திட்டத்தை கைவிட்டு அவரை புதைக்க பாருங்கள், இதெல்லாம் இந்திய யதார்த்ததிற்கு சரி இல்லை என மிரட்ட உடனே அடக்கம் செய்தார்கள்

டெல்லி மிரட்டல் இல்லை என்றால் இந்நேரம் ராமசந்திரனின் அழியா உடலருகே ஜெயா உடலும் அழியாமல் இருந்திருக்கும்

டெல்லி தமிழகத்திற்கு உருப்படியாக செய்த நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று

ஆக காந்திக்கும் நேருவிற்கும் கல்லறை இல்லா தேசத்தில் காமராஜருக்கு கல்லறை இல்லை அதை கலைஞர் கெடுத்தார் என சொல்வது ஒன்று தும்பியாக ஒருக்க வேண்டும் இல்லை அடிமை கூட்டத்தில் ஒருவராகவே இருக்க வேண்டும்

கொஞ்சமேனும் வரலாறு தெரிந்தவன் அப்படி பேசமாட்டான்

இது ஒருமாதிரி தமிழ்நாடு

மெதுவாக எவன் காதிலாவது சில்க் ஸ்மிதாவிற்கு பாரத ரத்னா கிடைக்க இருந்தது கலைஞர் கையெழுத்திடவில்லை என சொன்னால் போதும்

சில்க் எதிரி கலைஞர் ஒழிக என கண்ணில் பொறிபறக்க கிளம்புவார்கள், அவர்கள் அப்படித்தான்

புலிகளின் பொய்முகங்களை கிழித்துகொண்டே இருப்போம்

இந்த காத்தன்குடி கொலைகளை எழுதினாலும் எழுதினோம் ஈழத்திலிருந்து சில கண்டன குரல்கள்

முஸ்லீம்கள் துரோகிகள், பிரபாகரன் குலசாமி இந்திய படை கற்பழிப்புபடை என அதே புலம்பல்

அவர்களுக்கு நாம் சொன்னது ஒன்றுதான்

ஒன்றும் ஆம் வீரப்போர் புரிந்தோம், பெண்கள் இடுப்பில் குண்டு கட்டி மாவீரம் காட்டினோம் வீழ்ந்தோம் வீரலாறு பாடிகொண்டே இருங்கள் அப்படியே இந்தியா கெடுத்தது கலைஞர் கெடுத்தார் என சத்தம் போடாமல் இருங்கள்

மாறாக நாங்கள் போராடினோம் இந்தியா கெடுத்தது என சொல்லாமல் இருங்கள்

உங்கள் நாட்டில் நடக்கும் உள்நாட்டு போருக்கு உங்களை காக்கத்தான் என்நாடு தலையிட்டது

அதில் எம் ராணுவத்தை விரட்டி, எம் அருமை தலைவனை கொன்றது சாட்சாத் சிங்களன் அல்ல, உங்கள் புலிகளே

அதன் பின் நடந்த அனைத்து அழிவுகளுக்கும் அவர்களும் அவர்களை ஆதரித்த நீங்களும்தான் பொறுப்பு

வீணாக எம்மிடம் வந்து எம் வீரகாவியம் தெரியுமா என வம்பிழுக்க வேண்டாம், உங்கள் வீரகாவியம் உங்களோடே இருக்கட்டும்

அப்படிபட்ட வீராகாவியம் படைத்ததாக கருதும் நீங்கள், முள்ளிவாய்காலில் 2 லட்சம் பேர் செத்தோம் என கத்த தகுதி அற்றவர்கள்

நீங்கள் உலகம் சொன்னதை கேட்டிருந்தால் உலகமும் நீங்கள் சொல்வதை கேட்டிருக்கும், மாறாக நாங்கள் வெற்றிபெறும் பொழுதெல்லாம் உலகம் வேண்டாம், நாங்கள் அடிவாங்கும்பொழுது கண்டிப்பாக வரவேண்டும் என்பதெல்லாம் வன்னிக்காட்டு நீதி

இத்தோடு விட்டுவிடலாம்

ஆனால் சில ஈழதமிழர்கள் நல்ல விஷயங்களையும் சொன்னார்கள்

“அய்யா, பிரபாரன் நல்லவனோ கெட்டவனோ இறுதிவரை போராடினான், குடும்பத்தோடு செத்தான்

ஆனால் அவன் பெயரை சொல்லி தமிழ்நாட்டில் சைமன் என்றொரு பிராடு பயல் ஏமாற்றி கொண்டிருக்கின்றான், அவனை கண்டிப்பதாக சொல்லி புலிகளை திட்டாதீர்கள்..”

நல்லது

அதை நீங்கள் சென்னை வந்து சைமன் காதை திருகி செவிட்டில் அடித்து சொல்வீர்களா?? டிக்கெட் செலவெல்லாம் எம்முடையது என்றால் பதில் இல்லை

ஆக ஈழதமிழர்களே, சைமனையும் அவன் தும்பிகளையும் ஐரோபாவில் இருந்து புலம்பும் ஈனதமிழர்களையும் நிறுத்த சொல்லுங்கள்

நாம் நிறுத்துவோம்

அவர்கள் பொய்யாக சொல்லிகொண்டே இருக்குமட்டும் புலிகளின் பொய்முகங்களை கிழித்துகொண்டே இருப்போம்

பிரபாகரன் உங்களுக்கு கடவுளாக இருக்கலாம், எங்களை பொறுத்தவரை இந்தியாவிலே தங்கி இயக்கம் வளர்த்து இந்தியாவினால் பலமுறை காப்பாற்றபட்டும் இந்தியா மேலே பாய்ந்த துரோகி

நறநறவென தன் பற்களை கடித்துகொண்டிருக்கின்றார் டிரம்ப்

வடகொரியாவினை வழிக்கு கொண்டுவர அமெரிக்கா வகுத்த வியூகங்களில் ஒன்று வெளிநாட்டில் வேலை செய்யும் வடகொரியரை தாய் நாட்டிற்கே விரட்டுவது

இதனால் அமெரிக்காவிற்கு இரண்டு அனுகூலம்

முதலாவது வடகொரியர்கள் அனுப்பும் பணத்தின் அந்நியசெல்வாணி மூலம் வருமானம் பெரும் வடகொரிய அரசின் முக்கிய வருமானத்தை தடுப்பது

இரண்டாவது இந்த அதிபரால் நாம் உள்நாட்டிலும் பிழைக்கமுடியவில்லை வெளிநாட்டிலும் பிழைக்க முடியவில்லை என்ற வெறுப்பினை ஏற்படுத்தி வடகொரியாவில் மக்கள் புரட்சியினை ஏற்படுத்துவது

இந்த நுட்பத்தில் பல நாடுகள் வடகொரியர்களை விரட்டின, சிங்கப்பூர் கூட வடகொரியர்களுக்கு தடை விதித்தது

வடகொரியர்கள் கண்கள் சிவந்து யோசிக்கும்பொழுதுதான் , டிரம்ப் எப்படி என் ராஜதந்திரம் என சிரிக்கும்பொழுதுதான் புட்டீன் ஸ்டைலாக உள்ளே வருகின்றார்

வந்து ஆயிரணக்கான வடகொரியர்களுக்கு ரஷ்யாவில் வேலை செய்ய அனுமதி என அறிவித்து அதிர்ச்சி கொடுகின்றார்

ஏ”ய் ஏய் அவன் மேல் உலகமே பொருளாதார தடை போட்டிருக்கின்றது, அவன் ஆட்களை உள்ளே எடுக்காதே..” என கத்துகின்றார் டிரம்ப்

புட்டீனோ “எங்கள் நாட்டில் அந்நிய தொழிலாளர் தேவைபடுகின்றனர் அவ்வளவுதான்” என சொல்லிவிட்டு அவர்போக்கில் இருக்கின்றார்

நறநறவென தன் பற்களை கடித்துகொண்டிருக்கின்றார் டிரம்ப்