36 வயதிலே மறைந்த மர்லின் மன்றோவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

Image may contain: 1 person, close-up

அவள் வாழ்வு ஏராளமான திருப்பங்களும் மர்மங்களும் ஆச்சரியங்களும் நிரம்பியது, 36 வயதுவரை மட்டுமே வாழ்ந்தாலும் உலகில் அவளுக்கென ஒரு அடையாளம் அமைந்தது

16 வயதுவரை அவளை போல் வறுமையில் வாடியவரில்லை, அவ்வளவு துன்பம். பொறுப்பற்ற தந்தை சுயநல குடும்பம் என்றிருந்த வீட்டில் சிறுவயதிலே வெளியேறினாள்

சினிமா முதலில் அவளை விரட்டியது, நிர்வாண மாடலாக போஸ் கொடுத்தாலும் பத்தோடு பதினொன்று என விரட்டபட்டாள்

வாடகை கொடுக்க வழியின்றி தெருவிலும், உண்ண வழியின்றி ரோட்டோரோடத்திலும் அவள் தவித்த நாட்கள் உண்டு

ஆனால் 21 வயதிற்கு மேல் அவளின் ஜாதகம் மாறியது, எப்படி மாறியது என்றால் கலர் படங்கள் வந்தன, அதில் அவள் உடலை விட கண்கள் பெரும் கவனம் பெற்றன‌

யாருக்கும் இல்லாத கண்கள் அவை, மாயகண்கள். அந்த கண்கள் ஆண்களை கட்டிபோட்டன, அவளுக்காக ஓடி வந்தார்கள், மர்லின் மன்ரோ பிரபலமானார்

உலகில் எந்த நடிகைக்கும் இல்லா வரவேற்பு அவளுக்கு ஹாலிவுட்டில் இருந்தது, பெரும் தயாரிப்பாளர்கள் எல்லாம் ஆண்டு கணக்கில் அவளை தங்கள் படத்தில் ஒப்பந்தம் செய்தார்கள்

பணம் புரண்டது, அவள் அதன் மேல் புரண்டாள், இன்னும் யார் யார் எல்லாமோ அவளுக்காக காத்திருந்தார்கள்

காத்திருந்தவர்கள் ஏராளம் என்றாலும் அவளோடு சுற்றியவர்கள் பெயரில் அன்றைய அமெரிக்க அதிபர் கென்னடி வரையில் பெரிய பட்டியல் இருந்தது

சினிமாவில் அவளை பார்க்க பெரும் கூட்டமென்றால், அவள் செல்லுமிடமெல்லாம் பெரும் கூட்டம் கூடியது

இதோ நடக்கும் மயில் என ஹாலிவுட் அவளை கொண்டாடியது

வறுமையுடன் போராடி, பெரும் உச்சத்தை அடைந்த மர்லின் மன்றோ தனக்கான வாழ்வினை அடைய அடுத்த போராட்டத்தை தொடர்ந்தார்

அவள் வாழ்வில் ஆடவர் பலர் மஞ்சத்திற்கு வந்தனர், அவர்கள் அவளிடம் எதையோ தேட அவளோ மனதை தேடினாள்

அவளுக்கு ஒரு உளவியல் சிக்கல் இருந்தது, தந்தையின் அன்பை உணராத அவள் அதற்காக ஏங்கினாள். அழகிதான் பணத்தில் மிதந்தவள்தான் ஆனால் அது அவளுக்கு நிம்மதி கொடுக்கவில்லை

வயது கூடிய ஆண்கள் காட்டிய அன்பு அவளுக்கு ஒருவித சிலிப்பினை கொடுத்தது அப்படித்தான் 60 வயது எழுத்தாளருடன் பழக அது திசைமாரி திருமணத்தில் முடிந்து பின் தோல்வியும் ஆனது

கால்பந்து வீரருடனான திருமணம், இன்னும் சில திருமணங்கள் அவளுக்கு தொல்வியில் முடிந்தன‌

அவள் களங்கில்லா தூய அன்பை தேடி அலைந்தாள், அந்தோ பரிதாபம் பணத்தையும் சொகுசு வாழ்க்கையினையும் கொடுத்த அந்த ஹாலிவுட் அவளுக்கு அவள் விரும்பிய அன்பை கொடுக்கவே இல்லை

அது அவளை போதையில் வீழ்த்திற்று, கசக்கி எறியபடும் ரோஜா போலவும், காற்றில் ஆடும் தீபம் போலவும் அவள் வாழ்வு சென்றுகொண்டிருந்தது

நட்சத்திரம் என்பது தொலைவில் இருந்து பார்க்க ஒளிவீசி அழகாய் தெரிந்தாலும் உள்ளுக்குள் அது எரிந்துகொண்டிருகும்

திரை நட்சத்திரங்களும் அவ்வகையே, மர்லின் அதற்கு விதிவிலக்கு இல்லை

தனக்கொரு குழந்தை பெற்றுகொள்ள பெரும் விருப்பம் கொண்டாள் , அந்நாளைய கணவன் மூலம் அவளுக்கு கருவும் கிடைத்தது, ஆனால் சிதைந்தது

வறுமையான காலங்களில் அவளுக்கு வந்த போதை பழக்கம் பின்னாளில் குழந்தைபெற்றுகொள்ள முடியாதபடி செய்தது

எனினும் அதை தன்மனதோடு அழுத மர்லின் மன்றோ சொந்த படகம்பெனி நடத்தவும் செய்தார், அனாதையாக ஹாலிவுட்டுகு வந்து தன் 30ம் வயதிலே சொந்த கம்பெனி நடத்தும் அளவிற்கு அவளிடம் செல்வம் கொட்டியது

இந்நிலையில்தான் இதே ஆகஸ்ட் 5ம் தேதி 1962ல் இறந்தார், அவள் சாவு இன்றுவரை மர்மமே. தூக்கமாத்திரை பல உண்டார் என சொல்லி வழக்கு முடிக்கபட்டாலும் கென்னடியுடன் கூடிய உறவே அவளுக்கு சிக்கலை ஏற்படுத்திற்று என்ற செய்தியும் வந்தது

உலகமே அவள் கண்களிடம் கட்டுபட்டு கிடந்தகாலமது, கென்னடி என்ன விசுவாமித்திரரா?

அன்றைய உலகினையே ஆட்டிபடைத்த அந்த கென்னடி மர்லின் மன்றோவிடம் அடிமையாக இருந்தார்

ஆனால் அவளோ அவரைகொண்டு தனக்கு என்ன லாபம் என பார்க்கவே இல்லை, அமெரிக்க முதல் குடிமகளாகும் வாய்ப்பும் இருந்தது

அவளோ உண்மையான அன்பை தேடினாளே அன்றி அதிகாரத்தையோ பெரும் புகழையோ தேடவில்லை

ஆனால் அவள் இறந்தபின் யாருக்கும் வாய்க்கா சோகம் அவளுக்கு வாய்த்தது

ஆம் அவள் இறந்தபின் அவள் உடலுக்கு உரிமை கோர ஒரு உறவும் வரவில்லை. தந்தை தெரியாது தாய் மனநோயாளி

அவள் வாழும்பொழுது அவள் கண்ணுக்கும் அவள் உடலுக்கும் கோடி டாலர் கொட்டி அவளுக்காக காத்திருந்த ஆண்களில் ஒருவர் கூட இறந்தபின் அவள் உடலை வாங்க உரிமையாய் முன்வரவில்லை

அதாவது அவள் உடல் யாருக்கும் அப்பொழுது தேவைபடவில்லை என்பதே கசப்பான உண்மை

பின் சில உண்மை ரசிகர்களால் அடக்கம் செய்யபட்டது

தேசமே அவள் அடக்கதிற்கு கண்ணீர் வடித்த காட்சிகளும் பின் நடந்தன‌

அற்புதமான நடிகையும் கூட, அவளின் நடிப்பு அவளுக்கு பல விருதுகளையும் கொடுத்தது

199ல் எக்காலத்திற்கும் சிறந்த நடிகை என அவளுக்கு ஹாலிவுட் பெருமை சேர்த்தது

ஆயிரம் நடிகைகள் வந்தாலும் அவளின் கண்களும், அந்த ஸ்டைலும் யாருக்கும் வராது

ஹாலிவுட்டில் புதிய நடை, உடை ,சிகை, பார்வை, சிரிப்பு, , பாவனை என புதிய பாணியினை ஏற்படுத்தியவள் அவள்

அவளை தொடர்ந்தே உலகில் அப்பாணி வந்தது, தமிழகத்தில் மிக தாமதமாக 1990க்கு பின்பே வந்தது

மர்லின் மன்றோ காற்றில் பறக்கும் தன் உடையினை பிடித்துகொண்டிருக்கும் காட்சி உலகின் மிக பிரசித்திபெற்ற படங்களில் ஒன்று

அதை நமது ஊர் ரம்பா அழகிய லைலா என ஆடுவதற்கு அவள் காலத்திற்கு பின் 40 வருடம் ஆகியிருந்தது

இன்று எல்லா நாட்டு நடிகைகளின் ஏதோ ஒரு சாயலில் மர்லின் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றாள் அவளுக்கு அழிவில்லை

அந்த கண்களை அதன் பின் சில்க் ஸ்மிதாவிடம் கண்டது உலகம்

மர்லினின் கண்கள் போலவே சில்க்ஸ்மிதாவின் கண்களும் கடும் ஈர்ப்பு கொண்டது, ஆனால் தமிழன் எல்லாவற்றையும் ஒரு மாதிரி பார்த்த் பழக்கபடவன் என்பதால் சில்கிற்கு ஐட்டம் நடிகை என்ற இமேஜே நிலைத்தது

இருவரின் வாழ்க்கையிலும் ஏகபட்ட ஒற்றுமைகள் உண்டு, இருவரின் வாழ்வும் குடும்ப வாழ்விற்காக ஏங்கி இளமையிலே செத்துவிட்டது வரை ஒற்றுமை ஏராளம்

தன் கண்களாலும் அழகாலும் உலகை கட்டிபொட்டு, 36 வயதிலே கணகளை மூடி அழியா தடம் விட்டு சென்ற மர்லின் மன்றோவிற்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

அந்த கண்களை யாரால் மறக்க முடியும்??

உலகெல்லாம் அழகி என்றும், மயில் என்றும் பலரால் காம அடையாளமாக பார்க்கபட்ட அவள் அதிகம் பேசியதில்லை, சில நேரம் பேசினாள் அதிலும் வலியே அதிகம்

ஒருமுறை சொன்னாள்

“இன்று என்னை அழகி என கொண்டாடும் உலகம் என் சிறுவயதில் என்னை பாடாய் படுத்தியது , நான் சிறுமி என்பதையோ எனக்கும் மனம் உண்டு என்பதையோ அது உணரவே இல்லை

அதனால் சிறுபெண்களிடம் நீயும் அழகு என சொல்லி தன்னம்பிகையினை வளருங்கள், அவர்கள் உள்ளம் உடைய விடாதீர்கள்”

அவள் மனதில் இருந்த ஆயிரம் வலிகளில் இது ஒரு சிறிய பகுதி,

இன்னும் சொல்லாத பல வலிகளோடே வாழ்ந்து மறைந்தும் இருக்கின்றாள் அந்த துரதிருஷ்டசாலி

ரஜினி ஸ்டைலில் சிரித்துகொண்டிருக்கின்றார் டிரம்ப்

பட்டகாலிலே படும் கெட்ட குடியே கெடும் என்றொரு பழமொழி உண்டு, அது யார் விஷயத்தில் உண்மையோ இல்லையோ வட கொரிய மக்கள் விஷயத்தில் மகா உண்மை

அந்த மக்கள் நிச்சயம் பரிதாபத்திற்குரியவர்கள், தேர்தல் கிடையாது, எதுவும் பேசமுடியாது, தங்கள் வறுமைக்கு என்ன காரணம் என அவர்களால் சொல்லவும் முடியாது

அவர்கள் சொல்ல வேண்டியதெல்லாம் “அன்பு தலைவர்” கிம் வாழ்க அவ்வளவுதான், வேறு எல்லாம் அரசு பார்த்துகொள்ளும்

சும்மாவே சர்வாதிகார அரசு, இதில் அந்த அரசு இழுத்த சிக்கலினால் ஏகபட்ட பொருளாதார தடைகளும் சேர்ந்துகொள்ள மக்களுக்கு ஏக சிக்கல்

இந்நிலையில் இயற்கையும் டிரம்பொடு சேர்ந்துகொண்டுவிட்டது

வரலாறு காணாத வறட்சி அங்கு நிலவுகின்றது , கடும் வெப்பம்.

குடிக்க நீர் இன்றி லட்சகணக்கான கால்நடைகள் சாகின்றன, பயிர்கள் பட்டுபோகின்றன‌

பெரும் பஞ்சமும் உணவு வீழ்ச்சியும் அங்கு தலைவிரித்தாடுகின்றது

வடகொரிய அரசு என்ன செய்து மக்களை காப்பாற்றபோகின்றதோ தெரியாது, பெரும் சிக்கலை அந்நாடு எதிர்கொள்கின்றது

இனி அதற்கு உதவவேண்டுமென்றால் அமெரிக்க பொருளாதார தடைகள் விலக வேண்டும், அதற்கு வடகொரியா தெண்டனிட்டு வணங்க வேண்டும்

போடா , ஆண்டவனே நம்மபக்கம் இருக்கான் என ரஜினி ஸ்டைலில் சிரித்துகொண்டிருக்கின்றார் டிரம்ப்

பல்லாயிரகணக்கான மக்களை எப்படி வடகொரியா காப்பாற்ற போகின்றது என உலகம் கன்னத்தில் கைவைத்தபடி பார்த்துகொண்டிருக்கின்றது

தமிழகத்து காஸ்ட்ரோ, சேலத்து லெனின் பழனிச்சாமி வாழ்க‌

அரசு பள்ளிகள் எல்லாம் சாகபோகும் முதியவர் போல பரிதாப கோலத்தில் காட்சி அளிக்கின்றன, சில வெள்ளையன் காலத்து, நாயக்க மன்னர் காலத்து கட்டடம் போல அழிந்து கிடக்கின்றன‌

சில அரசு பள்ளிகள் புற்றுநோயாளி போல இன்றோ நாளையோ என இடிந்துவிழும் நிலையில் இருக்கின்றன‌

ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கோ மாளிகை வீடுகள் இரண்டிற்கும் மேல் பல மாடிகளுடன் பளிச்சிடுகின்றன‌

தனியார் பள்ளியோ மன்னார்குடி கும்பலின் சொத்து மதிப்பு போல் பிரகாசமாய் ஜொலிக்கின்றன, சில செட்டிநாடு அரண்மனைகளுக்கே சவால் விடுகின்றன‌

ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்களோ வாடகை கொடுக்க கூட வழி இல்லா நிலையில் இருக்கின்றார்கள்

இருவருமே ஆசிரியர்கள், ஆனால் அரசு ஆசிரியர் செல்வத்தில் கொழிக்கவும் அரசு பள்ளிகள் உருமாறி நிற்பதும் எப்படி?

அதே உழைப்பினை கொடுத்தும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தடுமாறுவது எப்படி?

தமிழகத்தில் காணப்படும் பெரும் முரண்பாடு இது

இதை கவனித்து இந்த வர்க்க வேறுபாட்டை ஒழிக்க களமிறங்கும் கர்ம வீரர், தமிழகத்து காஸ்ட்ரோ, சேலத்து லெனின் பழனிச்சாமி வாழ்க‌

அவர் ஹீலர் பாஸ்கர் இல்லை ஹிஹிஹிஹி பாஸ்கர்

அவர் பெரும் அறிவாளி, ஞானி உலகம் அறிந்த மேதை இரண்டாம் ஜிடி நாயுடு என்றெல்லாம் ஹீலர் பாஸ்கரை எதோ லூயி பாஸ்டர் அளவிற்கு நம்மிடம் பில்டப் விட்டார்கள்

அவரின் உலக அறிவினை பார் என ஒரு வீடியோவினைவும் அனுப்பினார்கள், அதிலிருந்து அவர் ஹீலர் பாஸ்கர் இல்லை ஹிஹிஹிஹி பாஸ்கர் என்பது தெரிந்தது

அன்னாரை சைமனுக்கு அடுத்தபடி ஏன் தும்பிகள் கொண்டாடுகின்றன என்றால் அவர்களுக்கு இம்மாதிரி அறிவுகெட்ட, சுத்த விவரமில்லாதவர்களைதான் பிடிக்கும், இனம் இனத்தோடு என்பது இதுதான்

அன்னார் வீடியோவில் இலங்கையில் இலுமினாட்டி பற்றி பேசினார், என்ன பேசினார்?

இலங்கையில் பொற்கால ஆட்சி நடந்ததாம், எல்லோரும் அமைதியாக இருந்தார்களாம், பிரேமதாச எல்லாம் மகா உத்தம ஆட்சி நடத்தினானாம்

அங்கே இலுமினாட்டி புகுந்து பிரபாகரனை உருவாக்கி இலங்கையினை கைபற்றிவிட்டு பிரபாரகனை கொன்றுவிட்டார்களாம்

இந்த நூற்றாண்டில் தலையில் அடித்துகொண்டு அதே நேரம் ஹிஹிஹி பாஸ்கரின் சுத்தியால் அடித்து கொல்ல வேண்டிய விஷயமிது

இலங்கை பிரச்சினை என்பது சுதந்திரத்திற்கு முன்பே அனாரிகா தர்மபாலா தொடங்கி வைத்த சிங்கள‌ இனவெறியில் இருக்கின்றது

அதன் பின் அது பண்டாரநாயக காலத்தில் மலையக மக்களை இந்தியாவிற்கு விரட்டுதலில் தொடர்ந்தது

பின்பு ஈழமக்களுக்கு எதிரான கலவரம் தொடங்கின‌

1960களிலே இறுக்கம் கூடிற்று, ஆங்காங்கே கலவரம் நடந்தன‌

1970களில் மாணவர்களை தரபடுத்துதல் என இட ஒதுக்கீட்டு முறையினை ஈழமக்களுக்கு எதிராக சிறிமாவோ அரசு கொண்டுவந்தபொழுது மாணவர்கள் பொங்கினர்

பின் அது வன்முறையாகி ரவுடிகளின் கையில் போராட்டம் சென்றது

பண்பட்டவர்கள், படித்தவர்கள், ரவுடிகள் என எல்லோரும் கலந்து நின்ற போராட்ட காலத்தில்தான் பிரபாகரனும் உள்ளே வந்தார்

மாபெரும் அயோக்கியன் ஜெயவர்த்தனேவின் கொடுமையில் 1983ல் கொழும்பு எரிந்தது, அப்படி தமிழரை எரிக்காவிட்டால் ஜெயவர்த்தனே இருக்கமாட்டார் என மிரட்டியவன் பிரேமதாச‌

ஈழமக்களுக்கு ஆதரவாக வந்த இந்திய படைகளை வெளியேற்றாவிட்டால் சிங்கள படைகள் தாக்கும் என மிரட்டியவன் பிரேமதாச‌

பின் புலிகளை வஞ்சகமாக பயன்படுத்த புலிகளும் அதே வஞ்சகத்தில் கொன்றனர்

சிங்களரில் ஒரு நல்ல அதிபர் கூட வரவில்லை, வந்தாலும் அந்த புத்த இனவெறி சிங்கள சாமியாரை மீறி தமிழருக்கு உரிமை கொடுப்பது சாத்தியமுமல்ல‌

இந்தியா ஈழமாநிலம் அமைத்து கொடுக்க முன்வந்ததே தவிர தனி நாடு அல்ல, ஆனால் பிரபாகரன் தனிநாடு கிடைப்பதே முடிவு என போராடினார்,

அதிதீவிரவாதத்தில் செய்ய கூடாத தவறை எல்லாம் செய்ய மொத்தமாய் அழிந்தார்

இதுதான் இலங்கை வரலாறு

இதில் எங்கிருந்து இலுமினாட்டி வந்தான், எங்கிருந்து இலங்கை அமைதியாக் இருந்தது

அனாரிகா தர்மபாலா காலத்திலே எரிய தொடங்கிய இலங்கை அவ்வப்போது எரிந்து, முள்ளிவாய்க்காலில் கொடூரமாக எரிந்தது

இன்னமும் எரியலாம் வாய்பிருக்கின்றது

ஆனால் ஒரே ஒரு நல்ல சிங்கள அதிபர் இருந்திருந்தால் நிலமை மாறி இருக்கும்

நரி பண்டாரநாயகே, குள்ளநரி ஜெயவர்த்தனே, அயோக்கியன் பிரேமதாச, முரடன் ராஜபக்சே என வெறியர்களால் ஆளபட்டது அத்தேசம்

ஜெயவர்த்தனே நியாயமாக இருந்திருந்தால் பிரபாகரன் உருவாகி இருக்கமாட்டான், வாய்ப்பே இருந்திருக்காது

ஆக அயோக்கிய தனம் செய்ததெல்லாம் சிங்களம் , அதற்கு அறிவே இல்லாமல் முரட்டுதனத்துடன் போராடியவன் பிரபாகரன்

இதில் எங்கிருந்து இலுமினாட்டி வந்தான்

சுத்தமாக ஒரு மண்ணும் தெரியாத ஆளாக இருந்திருக்கின்றான் இந்த ஹிஹிஹிஹ் பாஸ்கர்

அவனைவிட அவன் ஆதரவாளரர்களான தும்பிகளை நினைத்தால் பாவமாயிருக்கின்றது

அட அறிவுகெட்ட தும்பிகளா, அவன் சிங்களம் அமைதியாக இருந்த இனம் என்கின்றான், நல்லாட்சி நடத்தினார் என்கின்றான்

பின் எங்கிருந்து பிரபாகரன் உருவானான் என கேட்க ஒரு தும்பியுமா இல்லை, இவ்வளவுதான் உங்கள் அறிவு

இந்த பேச்சுக்கு ஹிஹி பாஸ்கரின் வாயிலே குத்தவேண்டும், ஆனால் தும்பிகளும் அவர்களின் தலைவன் சைமனும் பாஸ்கருக்கு ஆதரவாக கத்திகொண்டிருக்கின்றன‌

ஒரு மில்லிகிராம் கூட மூளையோ, சிந்தனையோ இல்லாதது இந்த தும்பி கூட்டமும் அந்த ஹிஹிஹ் பாஸ்கரும்

அற்புத நண்பர்கள் அனைவருக்கும் நண்பர் தின வாழ்த்துக்கள் !!!

Image may contain: one or more people, sky and text

நண்பர்களுக்கு ஒரு நாளாம்,

இந்த தேதியில்தான் உலகில் நட்பு வந்தது போலவும் அதற்கு முன்பு நண்பர்களே உலகில் இல்லை என்றும், எனவே அதனை கொண்டாட, அட்டைகள், கயிறுகள்,டாஸ்மாக் இன்னும் என்ன கருமங்களுக்கெல்லாம் செலவழித்தால்தான் அது நண்பர்கள் தினமாம்.

இந்திய உலகிற்கு கொடுத்த காவியங்களையும், அக்காவியம் குறிக்கும் பாத்திரங்களையும் பாருங்கள், ஏதாவது ஒன்று நட்பு இல்லாமல் இருக்கின்றது என காட்டுங்கள், அப்படி ஒரு காவியமும், வரலாறும் இல்லை, அலெக்ஸாண்டர் வாழ்வினை தவிர‌

ஆம் தனக்கு பின் சாம்ராஜ்யத்தை தன் நண்பர்களுக்கே அவன் விட்டு சென்றான், நட்பில் அவன் அப்படி உயர்ந்து நின்றான்

நட்பிற்காக ஒரு அதிகாரத்தினையே அமைத்து அதனை வாழ்வின் தவிர்க்க இயலா அங்கமாக்கினார் வள்ளுவர்.

நட்பிற்கு பாரத பூமியும், தமிழ் கலாச்சாரமும் கொடுத்த பெருமைகள் அப்படி,

ராமனும் குகனும், கண்ணனும் குலேசனும், என இந்தியர் கொண்டாடும் ஆண்டவனின் அவதாரங்களே நட்பின் வலிமையை உணர்த்தும்.

இந்திய புராணங்கள் என்றல்ல, இயேசு கிறிஸ்துவிற்கும் புனித பீட்டருக்கும் இருந்த நட்பு உலகறிந்தது.

தமிழில் கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு, முகம் கூட பார்க்காமல் மலர்ந்து , இறுதியில் ஒன்றாய் உயிர்விடும் அளவுக்கு சென்றது.

பாரதத்தில் கொடுமையான துரியோதனுக்கு பலமே அவனுக்கும், மாசு இல்லாத கர்ணனுக்கும் இருந்த உயர்வான நட்பு,

அசோகவனத்தில் சீதைக்கும் கூட திரிசடையின் நட்பே ஆறுதல்.

இன்னும் எத்தனையோ விதமான நட்புகளை உலகிற்கு சொன்னது தமிழினம்,

அவதாரங்களுக்கும், மன்னருக்கும், பெரும் பொல்லாதவர்களும் கூட நண்பர்கள் இன்றி வாழ்ந்ததில்லை என்பதை சொல்லும் கலாச்சாரம் நம்முடையது.

அந்த கால தமிழனை விடுங்கள், இன்றைய தமிழகம் ஆளும் தலைவர்களை பாருங்கள், அது 65 ஆண்டு கால வரலாறு கொண்ட நட்போ அல்லது 30 ஆண்டுகால நட்போ, தனது நண்பரை சற்றும் விட்டுகொடுக்காத நட்பினை சர்வ உலகத்திற்கும் தெரிவிக்கும் மாநிலம் இது.

எத்தனை நெருக்கடிகள், எவ்வள்வு சிரமங்கள் அதையும் தாண்டி நட்பிற்கோர் இலக்கணமாய் இன்றும் தொடரும் நட்புக்கள் அவை.

கலைஞர் அண்ணா நட்பு தமிழகத்தை வாழவைத்தது, ஜெயா சசிகலா நட்பினை பற்றி நீங்களே முடிவு செய்யலாம். சில நட்புகள் அப்படி அமைந்திருக்க கூடாதவை

மாபெரும் ஞானிகளுக்கும் நட்பிருந்தது, தலைவர்களுக்கும் இருந்தது, ஒரு காலத்தில் 3 மாநிலத்தினை அச்சுறுத்திய வீரப்பனுக்கும் உயிர்கொடுக்கும் நண்பர்கள் இருந்தார்கள், ஆட்டோ சங்கருக்கும் பெரும் நட்பு வட்டம் இருந்தது.

காரணம் மானிட வாழ்வில் நட்பு ஒரு தவிர்க்க இயலாத அங்கம்.

தமிழர் நட்பிற்கு கொடுத்த கொளரவமும், இந்திய பாரம்பரியம் கொடுத்த பெரும் மரியாதையும், உலகில் எந்த நாடும், எந்த இனமும் கொடுத்தது இல்லை, கொடுக்கபோவதும் இல்லை

அப்படிபட்ட தமிழகத்தில் இப்பொழுது எமக்கும் முகநூலில் ஏகபட்ட நண்பர்கள் இருக்கின்றார்கள்

பலர் மவுனமாக கண்காணிக்கின்றார்கள், சிலர் ஹாய் என சொல்லிவிட்டு பார்த்துகொண்டே இருக்கின்றார்கள், சிலர் உரிமையாக உள்பெட்டிக்கு வருகின்றார்கள்

சிலரோ இன்னுமா எழுதவில்லை, எழுதுகின்றாயா இல்லை வீட்டில் குண்டு வீசட்டுமா என கேட்கும் அளவு உரிமையாகிவிட்டார்கள்

மிக சிலர் அவர்கள் வீட்டில் ஒருவனாகவே நினைக்கின்றார்கள், அந்த அளவு உதவுகின்றார்கள். ஓடோடி வருகின்றார்கள்

கேவலம் சொத்துக்காக உறவுகளால் வெறுக்கபட்டும், சூழலால் தனியாக வளர்ந்துவிட்ட ஒருவனுக்கு, அதுவும் தொலைதூரத்தில் இனம்பிரிந்து மண்பிரிந்து வாழும் ஒருவனுக்காக இத்தனை நண்பர்கள் இருப்பது ஆச்சரியம்

நாம் அவர்களுக்காக துரும்பினை கிள்ளி போடவில்லை என்றாலும் எனக்காக மலையினை புரட்ட அவர்கள் தயாராக இருக்கின்றார்கள் என்பது மகிழ்ச்சி

ஆண்டவன் எனக்கு செய்திருக்கும் மிகபெரும் கருணை இது, ஆபத்தில் எல்லாம், சில தேவைகளில் எல்லாம் இவர்கள் உருவில் அந்த ஆண்டவனையே காண்கின்றேன்

முகநூலில் கிடைத்திருக்கும் நண்பர்கள் அவ்வளவு அற்புதமானவர்கள்

அவர்களில் குகன் போன்றவர்கள் உண்டு, சடையப்ப வள்ளல் போன்றவர்களும் உண்டு, கர்ணன் போன்றவர்களும் உண்டு, கன்ணன் போன்றவர்களும் உண்டு.

நான் நிச்சயம் கம்பன், ராமனும் அல்ல, ஆனால் குசேலன்

உங்களுக்கெல்லாம் என்ன கைமாறு செய்ய போகின்றேன தெரியவில்லை, அதை நினைக்கும்பொழுதே கடன்பட்ட நெஞ்சம் போல் நெஞ்சம் கலங்குகின்றது

எனக்கு எழுத்து வரும் என நான் நினைத்ததில்லை, எழுதுவதாக நினைத்ததுமில்லை

எதையோ எழுத தொடங்கினால் அது கழுத்தை பிடித்து எங்கோ இழுத்து சென்று எங்கோ முடித்துவிடுகின்றது, எப்படி இழுத்து செல்கின்றது என எனக்கு தெரியவே இல்லை

எழுதி கொண்டே இருந்தேன், திரும்பி பார்த்தால் ஏராளமான நன்பர்கள் நிற்கின்றார்கள் இது அந்த ஆண்டவன் கருணை

அந்த அற்புத நண்பர்கள் அனைவருக்கும் நண்பர் தின வாழ்த்துக்கள்

உங்கள் அனைவருக்காகவும் பிரார்த்தித்துகொள்வதை விட நான் என்ன செய்ய முடியும்?

முடிந்தவரை ஒவ்வொரு நொடியும் அதனைத்தான் செய்துகொண்டிருக்கின்றேன்

இரண்டாம் கர்ம வீரர் பழனிச்சாமி வாழ்க…

Image may contain: 1 person, smiling, close-up

இப்போது வந்த செய்திகளிலே கவனிக்கபட வேண்டிய செய்தி முதல்வர் பழனிச்சாமி இந்த பள்ளி ஆசிரியர்கள் உட்பட்ட அரசு ஊழியர் சம்பளம் பற்றி சொன்ன செய்தி

நிச்சயம் கவனிக்கதக்க விஷயம் அது, அரசு கஜானாவின் பெரும் பகுதி அவர்கள் சம்பளத்திற்கே செல்கின்றது. டாஸ்மாக் எனும் துறையே அவர்களின் சம்பளத்திற்காக நடத்தபடுகின்றது

எப்படி ஆயிற்று இந்நிலை?

1960 வரை “வக்கற்றவனுக்கு வாத்தியார் வேலை” என்ற நிலையே இருந்தது, அவ்வளவு சொற்ப சம்பளம் வாங்கிகொண்டிருந்தார்கள்

அவர்களுக்கு வாழ்வு எங்கு வந்தது என்றால், முதலில் வாழ வைத்தவர் கலைஞர் கருணாநிதி சந்தேகமில்லை

ஏன் வைத்தார்? சமூக நலனா? அவரின் பொதுநலத்திலே கொஞ்சம் சுயநலமும் கலந்திருந்தது

ஆம் , தேர்தலில் வாக்குகளை மக்கள் செலுத்தலாம் ஆனால் பணியாற்றுவது யார்? இரண்டே துறை ஒன்று காவல்துறை இன்னொன்று பள்ளி ஆசிரியர்கள்

இதை குறிவைத்தனர் அரசியல்வாதிகள், இவர்கள் மனதை குளிரவைத்தால் தேர்தல் நேரத்தில் பயன்படும் என்று கணக்கிட்டே அவர்களுக்கு சம்பளம் அள்ளி கொடுக்கபட்டது

பின்னர் வந்த ராமசந்திரன் தன் வள்ளல் இமேஜூக்கு இழுக்கு வரா வகையில் கூடுதலாக அள்ளிகொடுத்தார், விளைவு கஜானா ஆடியது, கூடுதல் வருமானம் இல்லாமல் சமாளிக்கமுடியா நிலை வந்தது

டாஸ்மாக் இனி தவிர்க்கமுடியா நிலை ஆனது, “வக்கற்றவனுக்கு வாத்தியார் வேலை” என்பது “வாக்குசாவடி வாத்தியாருக்கே கவுரவ‌ வேலை” என்றானது

கொள்ளை சம்பளம் அவர்களுக்கு கொடுக்கபட்டது, சலுகைகள் வேறு தனிகணக்கு

இந்த விஷயத்தை முதலில் துணிச்சலாக கையில் எடுத்தவர் ஜெயலலிதா, ஆசிரியர் சம்பளம், விடுமுறை கால சம்பளம்,தேர்வு கால சம்பளம், பேப்பர் திருத்த சம்பளம், தேர்தல் சம்பளம் என பல சம்பளங்களை அவர்கள் வாங்குவதை கவனித்தார்

செய்வது ஆசிரியர் வேலை, பாடம் நடத்தாதபொழுது மற்ற வேலை அதற்கு ஏன் பல வழிகளில் சம்பளம் என முதலில் அவர்களுக்கு செக் வைக்க நினைத்தது அவர்தான்

ஆனால் பின்னர் வாக்கு வங்கிக்காக பின்வாங்கினார், அத்தோடு அதில் அவர் கை வைக்கவில்லை

அவர் என்றல்ல வாக்குவங்கி அடுத்த தேர்தல் என பல விஷயங்களை யோசிக்கும் யாரும் அதில் கைவைக்க முடியாது, கைவைத்தால் முடிந்தது அரசியல் வாழ்வு

இப்பொழுது காண கிடைக்கா கண்மணியாய், வராது வந்த மாமணியாய் வந்திருப்பவர் பழனிச்சாமி

அடுத்த முதல்வர் ஆசையும் அவருக்கு இல்லை, அடுத்த தேர்தல் பயமும் அவருக்கு சுத்தமாக இல்லை காரணம் அவருக்கென்ன எல்லோருக்கும் தெரியும், அடுத்த தேர்தலில் அவர் வாக்கு வாங்க போவதில்லை

இதனால் பேசா பொருளை பேச துணிந்தேன், தவறெனில் பொருத்தருள்க என தொடங்கியவர் , குற்றம் குற்றமே என சீறி நிற்கின்றார்

இப்பக்கமோ ஆசிரிய பெருமக்கள் நீர் ஏன் எம்.எல்.ஏக்களுக்கு சமபளம் கூட்டினீர் என பதிலுக்கு பொங்குகின்றனர்

என்றோ கலைஞரும் ராமசந்திரனும் தன் ஆட்சியினை தக்க வைக்க உங்களுக்கு அள்ளி கொடுத்தது போல் நான் என் ஆட்சியினை தக்கவைக்க கொடுத்தேன் போதுமா என மவுனத்தில் பதில் சொல்கின்றார் முதல்வர்

ஆக ஆளாளுக்கு தங்கள் பதவியினை தக்க வைக்க அன்றும் இன்றும் ஏதோ செய்துகொண்டிருகின்றார்கள் என தலையினை ஆட்டிவிட்டு தன் போக்கில் இருக்கின்றது தமிழகம்

ஆனால் உறுதியாக சொல்லலாம், இந்த தமிழகத்தில் ஆசிரியருக்கு கொடுக்கபடும் சம்பளம் மிக மிக அதிகம், நிச்சயம் தேவை இல்லா சம்பளம்

நாளை இவர்களை விரட்டிவிட்டால் கூட இதே வேலையினை இந்த சம்பளத்தில் 10ல் ஒரு பகுதியில் செய்ய பெரும் கூட்டமே காத்திருக்கின்றது

உயிரை பற்றி கவலைபடாதவனே நல்ல வீரனாக இருக்க முடியும், தன் அரசியல் எதிர்காலம் பற்றி கவலைபடாதவனே கர்ம வீரனாக இருக்க முடியும்

அப்படி இந்த பழனிச்சாமி இரண்டாம் கர்ம வீரர், நம் கர்மத்தின் படி நமக்கு வாய்த்த முதல்வர்

அவர் துணிந்து பேசியதற்கே தமிழகத்தில் ஆதரவு பெருகுகின்றது, முதல்வர் பேச்சில் அர்த்தமிருகின்றது என பலர் சொல்ல தொடங்கியாயிற்று

வெள்ளையானைக்கு இடப்படும் தீனிபோல் சென்றுகொண்டிருக்கும் இந்த பெரும் தொகையினை பழனிச்சாமி குறைக்கலாம், அவர்களுக்கு கடிவாளவிடலாம்

சம்பளம் போதவில்லை என்றால் அவர்கள் செல்லலாம், பதிலுக்கு ஆயிரம் பேர் காத்துகொண்டிருக்கின்றனர்

கர்ம வீரர் பழனிச்சாமி இதை செய்தால் அடுத்த தேர்தலில் தமிழக மக்கள் அவரை தேடி சென்று கொண்டுவந்து ஆட்சியில் மறுபடியும் அமர்த்துவார்கள்

என்றுமே உயிருக்கு அஞ்சாத போரிலேதான் மாவீரர்கள் வென்றிருக்கின்றார்கள், அரசியல் வாக்கு இன்னபிற விஷயங்களுக்கு அஞ்சாமல் அசரடிக்கும் பழனிச்சாமி வெல்லவும் வரலாற்றில் நிலைக்கவும் வாய்ப்புகள் பிரகாசமாய் உள்ளது

காமராஜருக்கு பின் அரசியல் கணக்கில்லாமல் , அந்த சிக்கலே இல்லாமல் எதிர்காலம் பற்றி கவலை இல்லாமல் ஆடும் ஒரே முதல்வர் நம் பழனிச்சாமி

அந்த இரண்டாம் கர்ம வீரர் பழனிச்சாமி வாழ்க..

ஹீலர் பாஸ்கர் என்பவருக்கு கொடிபிடிக்கும் கூட்டம்

இந்த ஹீலர் பாஸ்கர் என்பவருக்கு  கொடிபிடிக்கும் கூட்டம் ஒரே சத்தம், பெரும்பாலும் யாரென பார்த்தால் தும்பிகளும் கொஞ்சம் சர்க்கரை வியாதி கோஷ்டிகளும்

தும்பிகள் ஒரு நாளும் சட்டம் ஒழுங்குக்கு வராது, சமூகம் அமைதியாய் இருப்பது அவர்களுக்கு பிடிக்காது, எவனாவது பிரபாகரன் போல் அரைகுறை யாரையாவது கொன்றுகொண்டே இருந்தால் கைதட்டிகொண்டே இருக்கும் கூட்டம் அது

அது இந்த ஹீலர் பாஸ்கர் எனும் அரைகுறைக்கு கைதட்டுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை, அவர்களின் சுபாவம் அது

இதில் சில தும்பிகள் என் வீட்டில் நான் சமைப்பது தவறா , என் வீட்டில் நான் கழிவறை செல்ல யாரிடம் அனுமதி வேண்டும் என சீறிகொண்டிருக்கின்றது

இந்த தேசத்திற்கு மட்டுமல்ல எல்லா தேசங்களுக்கும் அவர்களின் குடிமக்களையும் அவர்களின் உயிரையும் காக்கும் பொறுப்பு இருக்கின்றது

சாலை விதிகள் முதல் மருத்துவம் வரை இங்கு கட்டுபாடுகள் இருப்பது அதனால்தான், ஒவ்வொன்றிற்கும் உரிமம் என ஒரு நிபுணர் குழு உருவாக்கி வைத்திருப்பது அதனால்தான்

உதாரணம் சித்த வைத்தியம், நிச்சயம் அது தமிழர் மரபு சந்தேகமிலை ஆனால் அரசு ஏன் அதை கண்காணிக்கின்றது

சித்த வைத்தியத்தில் விஷத்தை மருந்தாக்க சில வழிகள் உண்டு, அனுபவமில்லாதவர் விஷ மருந்துகள் தயாரித்து பல உயிர்களை கொண்டுவிட கூடாது என்பதற்காக அரசு கடும் கட்டுபாடுகளை வைத்திருக்கின்றது

இதை மீறி இதுதான் சித்த மரபு சித்த வைத்தியம் என யாராவது கிளம்பினால் அரசு என்ன செய்யும் பிடித்து உள்ளேதான் போடும், அரச கடமை அது

ஹீலர் பாஸ்கர் விஷயத்தில் அரசு அதைத்தான் அரசு செய்திருக்கின்றது

எனக்கு ஸ்டியரிங் பிடிக்க தெரியும், எனக்கு கியர் மாற்ற தெரியும் வாருங்கள் டிரைவிங் கற்று தருகின்றேன் என்றால் அவனும் அவனின் கும்பலும் பலரை கொல்லாதா?

அதுதான் இதுவும்

ஹீலர் பாஸ்கர் என்வர் யார்? ஹீலர் எனும் பட்டம் அவனுக்கு யார் கொடுத்தது? ஐ.நாவா , அமெரிக்க பல்கலைகழகமா இல்லை லண்டன் பல்கலைகழகமா?

யாருமில்லை இவராக வைத்துகொண்டது.

அரைகுறை வைத்தியன் ஆபத்தானவன், அதிலும் வைத்தியமே அறியாத வைத்தியன் மிக மிக ஆபத்தானவன்

ஹீலர் பாஸ்கர் சர்க்கரை நோயினை விரட்டினார் என பல பக்த கோடிகள் பொங்கி கொண்டிருக்கின்றன‌

எந்த அங்கீகரிக்கபட்ட மருத்துவனும் சர்க்கரை நோயாளியின் உணவு அவன் சர்க்கரை அளவினை கூட்டும் அளவு சொல்வதில்ல்லை, சர்க்கரையினை குறைக்க என்ன‌ வழி உண்டோ அதைத்தான் சொல்கின்றார்

மரபு வழியினை மறந்தோம், மருத்துவத்தை மறந்தோம் இயற்கை வழிக்கு திரும்புவொம் என்பது எல்லா விஷயங்களிலும் சரிபட்டு வராது

அப்படி திரும்பினால் ஆடையின்றி அமேசான், அந்தபார் காட்டுவாசிகள் போல ஆகிவிட வேண்டியதுதான்

மின்சாரம் இல்லா , இணையமில்லா , விமானமில்லா, போக்குவரத்து வசதியில்லா உலகை நினைத்து பாருங்கள் வாழமுடியுமா?

இக்கும்பல் அந்த காட்டுவாழ்க்கைகே திரும்ப சொல்கின்றது

ஒரு விஷயத்தை மறந்துவிட்டு பலர் பாஸ்கருக்கு சப்பைகட்டு கட்டுகின்றனர்

அந்நாளைய மக்கள் தொகை எப்படி கட்டுக்குள் இருந்தது, வெள்ளையன் பரந்த இந்தியாவினை ஆளும்பொழுது அதன் மக்கள் தொகை என்ன?

வெறும் 5 கோடிக்குள் 1980களில் இருந்திருக்கின்றது எப்படி?

இரண்டே விஷயம், நோய்களும் பஞ்சமும் அப்படி மக்கள் தொகையினை கட்டுக்குள் வைத்திருந்தன, போர்கள் அதற்கு அடுத்த இடமே

கொள்ளை நோய்களும் பஞ்சமும் இந்திய மக்கள் தொகையினை அப்படி கட்டி வைத்திருந்தன, வெறும் 1 லட்சம் பேர் கொண்ட வெள்ளையன் இத்தேசத்தை ஆள அதுதான் காரணம்

புது புது மருந்துகள் வர வர நோய்கள் விடைபெற்றன, குறிப்பாக வெள்ளையர் காலத்தில் மருத்துவமனைகள் பெருக பிரசவகால மரணம் கட்டுபடுத்தபட்டது

விஞ்ஞான வளர்ச்சி அணைகளை கட்டி, விவசாயத்தில் விளைச்சலை பெருகின்ற்று, ரசாயாண உரங்கள் என அலறினாலும் அது கொடுத்த விளைச்சல்தான் இங்கு பசி போக்கிற்று

கொஞ்சம் கொஞ்சமாக நோயும் , பஞ்சமும் நவீன விஞ்ஞானத்தாலும் நல்ல விளைச்சலாலும் விரட்டபட மக்கள் தொகை அதிகரித்தது

1930களில் முப்பது கோடி முகமுடையாள் என பாடுகின்றார் பாரதி, அது பரந்த இந்தியா

1960கலள் நாற்பது கோடி மாந்தர் என பாடுகின்றார் கண்ணதாசன் அது பிரிந்த இந்தியா

இன்று 110 கோடி மக்களோடு இத்தேசம் எழும்பி நிற்கின்றது என்றால் எப்படி?

நவீன மருத்துவமும், விவசாயமுமே அன்றி வேறல்ல‌

கடந்த பாதையினை திரும்பி பார்த்தால் இதெல்லாம் தோன்றும், அது தெரியாபதர்கள் ஏதோ ஹீலர் பாஸ்கர் கிழித்துவிட்டான் என கத்திகொண்டிருக்கின்றன‌

சித்தர்களும், அகத்தியரும் போகரும் சொல்லாத எதையும் பாஸ்கர் சொல்லவில்லை

ஆசார கோவை என பண்டைய இலக்கியம் சொல்லாததை பாஸ்கர் சொல்லவில்லை

நிச்சயம் அவை நம் அஸ்திவாரம், அதின்மேல் விஞ்ஞானத்தை கலந்தால் என்ன தவறு

ஆனால் அஸ்திவாரம் எப்படி அடிபட்டு போனது, ஏன் பண்டை செய்யுளை நாம் படிக்கவில்லை, இத்தலைமுறை எப்படி அதை படிக்காமல் போனது

அந்த செய்யுள் எல்லாம் கடவுளை பற்றியும் சில சாத்வீக முறைகளையும் போதிப்பவை

பின்னாளில் வந்த நாத்திக கட்சிகளுக்கு அதை மறைக்கும் அவசியம் வந்தது, திருகுறளை முன்னிலைபடுத்திவிட்டு அவற்றை புறம் தள்ளினார்கள்

திருக்குறளில் கூட மருத்துவ வழி உண்டு அதை சொல்லாமல் தவிர்த்தார்கள்

ஆக தவறு பல இடங்களில் உண்டு, மறுக்கமுடியாது

நம் கலாச்சாரமும் பண்பாடும் ஆழ்ந்த மருத்துமுறைகளையும் மறந்துவிட்ட் கூட்டம் பாஸ்கர் என்பவனை கொண்டாடிகொண்டிருகின்றது பரிதாபம்

நம்மாழ்வார் என்றொருவர் இருந்தார், பழமையினை மீட்டெடுப்பதில் அவருக்கு இருந்த அக்கறை எவனுக்குமில்லை ஆனால் எல்லை எது என அவருக்கு தெரிந்திருந்தது

நான் பழமையினை மீட்டெடுப்பேன் என பலரை கொல்ல அவர் தயாரில்லை, எதில் சோதிக்க கூடாது என்பது அவருக்கு தெரிந்திருந்தது

இந்நாட்டில் சட்டம் ஒழுங்கினை பாதுகாக்க காவல்துறையும், நீதிமன்றமும் உண்டு அதுவே இங்கு அமைதியான வாழ்வுக்கும், மக்களின் அமைதிக்கும் வழி

அதையே 4 குண்டர்களை சேர்த்து நான் நீதிகொடுப்பேன் என ஒருவன் கிளம்பினால் என்னாகும், அதுதான் கட்டபஞ்சாயத்து

ஹீலர் பாஸ்கர் என்பவன் செய்தது மருத்துவ கட்டபஞ்சாயத்து, அவனை பிடித்து உள்ளே போட்டிருப்பதில் தவறேதுமில்லை

200 ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்த கொடிய நோய்களை விரட்டி இன்று மக்கள் தொகையினை பெருக்கி காத்து கொண்டிருக்கின்றது விஞ்ஞானம்

மறுபடியும் இந்திய மக்கள் தொகையினை அதே சில கோடிகளுக்கு கொண்டு செல்ல இந்த ஹீலர் பாஸ்கரும் அவரின் கூட்டாளிகளும் ஆசைபடுகின்றார்கள், அதை எந்த அரசு ஒப்புகொள்ளும்?