தமிழகம் தேசிய நதியில் கலந்து இந்தியா முழுக்க ஜொலிக்கட்டும்

தமிழகத்திலும் தேச அபிமானிகள் முதல் சுதந்திர போராட்ட வீரர்கள் எல்லாம் உண்டு, ஆனால் இங்கே நேரு முதல் பலர் பிரபலம் வட இந்தியாவில் அப்படியா?

காமராஜரை ஏற்றார்களா, ராஜாஜியினை ஏற்றார்களா என ஏகபட்ட கேள்விகள், அதாவது வடக்கத்தியர் தமிழரை புறக்கணிக்கின்றனர் என வாதம் வைக்கின்றார்கள்

ஒரு விஷயம் புரிய மறுக்கின்றார்கள்

தங்கள் மாநிலத்தை சேர்ந்தவர் விவேகானந்தரோ இல்லை வேறு அடையாளமோ இந்தியா முழுக்க அறியபடவும் அவர்கள் பெயர் நிலைக்கவும் பலர் அந்தந்த மாநிலத்தில் இருந்து உழைத்தனர்

தமிழகத்தில் காந்தி மண்டபம் நிறுவபடவும், விவேகானந்தர் பாறை அமைக்கபட்டதும் இன்னும் பலவும் அப்படித்தான்

இங்கே உள்ள தமிழர்கள் தங்கள் மாநில அடையாளங்கள் தமிழகம் தாண்டி பரவ என்ன செய்தார்கள்?

ஒரு மண்ணுமில்லை

திராவிடம், தென்னகம் ஆரிய எதிரி, வடக்கு வாழ்கின்றது, தெற்கு தேய்கின்றது என இல்லா கோஷங்களை எழுப்பி தமிழகம் இந்திய தேசியத்துடன் இணையாமல் பார்த்து கொண்டார்கள்

காமராஜரை அகில இந்திய அளவில் கொண்டு சேர்த்திருக்க வேண்டியது தமிழக காங்கிரசார் வேலை, செய்தார்களா?

சத்தியமூர்த்திபவனில் கபடி ஆடவே அவர்களுக்கு நேரமில்லை

பின் திமுக அதிமுகவா செய்யும்?

அவர்களுக்கு இங்கு அண்ணா, ராமசந்திரன், ஜெயா என ஒப்பாரி வைக்கவே நேரமில்லை பின் அகில இந்திய அளவில் எப்படி?

இங்கு காமராஜர், ராஜாஜிக்கு அடுத்து தேசிய அடையாளங்கள் எழும்பாதவாறு திராவிடம் அரசியல் கவனித்துகொண்டது

தமிழகம் எனும் குறுகிய மனப்பான்மையில் இங்கு மக்கள் சிக்கிவிட்டனர்

விவேகானந்தர் பாறை அமைக்க அந்த ஏக்நாத் என்பவர் பட்ட பாட்டில் நூற்றில் ஒருபங்கு உழைத்தாலும் வடக்கே காமராஜர், ராஜாஜி பெயர் நின்றிருக்கும்

செய்தார்களா?

இங்கு அண்ணா, கலைஞர், ஜெயா, புர்ச்சி தலைவன் என திரிவார்கள், வடக்கத்தியன் வந்து இவர்கள் பெயரையா இந்தியா முழுக்க பரப்புவான்?

நடக்குமா?

ஆனாலும் இந்நாட்டிற்கு உழைத்தவர்களை இத்தேசம் கைவிடவில்லை

கலாம் எனும் தமிழர் பெயரில் வட இந்தியாவில் ஏராளமான கல்லூரிகளும், பல்கலை கழகங்களும் அமைந்திருக்கின்றன‌

ஆம் இந்தியனாக வாழ்ந்தால் இத்தேசம் தமிழனை கைவிடாது, அவனுக்குரிய அங்கீகாரத்தை கொடுத்தே தீரும்

ஆனால் நான் திராவிடன் தமிழன் இனமானம் மிக்கோன் என சொல்லிகொண்டிருந்தால் யார் அவர்களை இந்தியராக நோக்குவார்கள்?

சொந்த நாட்டு ராணுவத்துடன் புலிகள் எனும் தீவிரவாத இயக்கம் மோதி அவர்களின் சவபெட்டியினை அனுப்பும் பொழுதே அந்த புலிகளுக்கு மதுரையில் சிகிச்சை அளித்த தமிழகம் இது, எந்த இந்தியன் தாங்குவான்?

பாகிஸ்தான் எல்லையில் தமிழக வீரன் சாக, அவனை சுட்ட பாகிஸ்தான் தீவிரவாதிக்கு பஞ்சாபில் பாதுகாப்பு என்றால் நாம் பொறுப்போமா?

இங்கு அதுதான் நடந்தது

எவனாவது சொந்த நாட்டு ராணுவத்தை பழிப்பானா? இங்கு பழித்தார்கள்

எவனாவது சொந்த நாட்டு பிரதமரை கொன்ற அந்நியநாட்டு தீவிரவாதிக்கு கொடி பிடிப்பார்களா?

இங்கு பிடித்தார்கள்

பின் எங்கிருந்து இவர்களை இந்தியராக நோக்குவார்கள்? வெறுப்பு வராதா

இங்கு வளர்த்ததெல்லாம் வெறுப்பு அரசியல் , வெறுப்பூட்டும் அரசியல் பின் விளைவுகள் எப்படி இருக்கும்

இதில் எங்களை ஏற்றுகொள்ளவில்லை என வருத்தம் வேறு, உங்களை கொல்லாமல் விட்டதே பெரும் விஷயம்

தவறினை நம்மேல் வைத்து கொண்டு ஏய் வடக்கத்திய ஆர்ய பார்ப்பன கும்பலே என வசனம் பேசுவது அறிவுடமை ஆகாது

தேசிய உணர்வில் வளர்ந்து உழைத்தவர்கள் யாராயினும் இத்தேசத்தில் கொண்டாடபட்டே இருப்பார்கள் கலாம் போல என்பது உறுதி, நிச்சயம் உறுதி

இனியாவது தமிழகம் தேசிய நதியில் கலந்து தமிழக அடையாளங்கள் கலாம் போல இந்தியா முழுக்க ஜொலிக்கட்டும்

நண்பர்களுக்கு ஒரு விளக்கம்

நண்பர்களுக்கு ஒரு விளக்கம்

அந்த கவிதா என்பவர் கைது செய்யபட்டதை சிலர் எதிர்து கோஷமிட நாம் ஒரு பதிவினை இட்டோம்

அது பல விஷமிகளால் அந்த கவிதா கலைஞர் சன்முகநாதனின் மகள் என கூடுதலாக வரிகள் சேர்க்கபட்டு எம் பெயரில் உலாவருகின்றது

ரகுபதி என்பவரிடம் கேட்டதில் யாரோ சொன்னார்கள் என சொல்லிவிட்டு அதை நீக்கிவிட்டார்

இப்பொழுது எங்கெல்லாமோ சுற்றி எம் வாட்சப்பிற்கே வந்திருக்கின்றது, அந்த வரி நாம் எழுதவில்லை

அந்த கவிதாவின் தந்தை யார் என்றெல்லாம் நமக்கு தெரியவே தெரியாது

இது மூளை அரிப்பெடுத்த சில கோழைகளின் சில்லறை வேலை என்பதை தெரிவித்து கொள்கின்றோம்

அந்த வரி எமது பதிவில் உள்ளது அல்ல என்பதையும்,, எவனோ எடுப்பு சோறு , குறுக்குவழியில் பிறந்த குறை பிரசவக்காரனின் சீழ்பிடித்த சிந்தனையில் கலக்கபட்டது என்பதையும் தெரிவித்துகொள்கின்றோம்

எம்மை கவனித்து வருபவர்கள் என்பதாலும், நாம் முன்னரே எழுதியதை படித்தவர்கள் என்பதாலும் உங்களுக்கு எளிதில் புரியும் என நம்புகின்றோம்

அந்த கிறுக்கு மூளைக்காரன் காவி கிறுக்கன்களில் ஒருவன் என்பது மட்டும் புரிகின்றது

காரணம் அதிமுக இப்படி எழுதினால் முத்துவேலரின் உதவியாளர் சன்முகநாதன் என்றே எழுதுவார்கள் , அவர்கள் விவரம் அப்படி

இந்த காவி கும்பலே எல்லாவற்றிற்கும் கலைஞர் காரணம் என்ற கோஷத்தை சில நேரம் தும்பிகள் மூலமும் சில நேரம் இப்படி வஞ்சகமாகவும் பரப்பும்

காரணம் அவைகளுக்கு ஒரு நாளும் நேருக்கு நேர் வர தைரியமே கிடையாது, பரம்பரை பயிற்சி அப்படி

இவனைபோன்றவர்கள் இருக்கும்வரை தாமரை என்பது இங்கு மயிருக்குள் இருந்து கூட மலராது, ஏன் கொடி கூட முளைக்காது

அந்த கேவலமான பிறவியின் இழிசெயலை கண்டித்துவிட்டு நம் பணியினை தொடர்வோம்

நன்றி

வெனிசுலா அதிபரை கொல்ல சதி

Image may contain: 4 people, people standing

உலகிலே எல்லா வளங்களையும் வைத்து கொண்டு சீரழிந்துகிடக்கும் நாடுகள் பல, அவற்றின் வளமும் வலுவான தலமை இன்மையும் கொஞ்சமும் யோசிக்காத சுயநல மக்கள் கூட்டமுமே இதற்கு காரணம்

முதலிடத்தில் இருப்பது ஈராக், வளமான ஆறுகளும் வற்றாத கச்சா எண்ணெய் ஊற்றுகளும் கொண்ட நாடு, இயற்கை அதற்கு அப்படி அள்ளிகொடுத்தாலும் அந்நாடு உலக அரசியலாலும் போராலும் மதத்தாலும் சீரழிந்து கிடக்கின்றது

ஆப்ரிக்க நாடுகள் பரிதாபம் முறையான அரசும் இல்லாமல் அப்படி அமைந்தால் சட்டம் ஒழுங்கை மதிக்கதெரியாத மக்களால் அது கடும் அழிவில் இருக்கின்றது

இந்த வரிசையில் வெனிசுலாவும் சேர்ந்துவிட்டது

அது தென்னமெரிக்க நாடு, அதன் பெரும் வளம் கச்சா எண்ணெய் அதுவே அந்நாட்டு நிம்மதி கெட காரணமும் ஆயிற்று

எண்ணெய் கம்பெனிகளின் உள்குத்து, உலக அரசியலால் அந்நாடு இப்பொழுது சீரழிந்துவிட்டது

அந்த நாட்டில் முன்பு சாவேஸ் என்றொரு அதிபர் இருந்தார், ஓரளவு எண்ணெய் வாணிபத்தை சரி செய்தார், எண்ணெய் உற்பத்தி நாடுகளை எல்லாம் கூட்டி நியாயமான கோரிக்கைகளை எழுப்பினார்

எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் சாவேஸின் முயற்சி வரலாற்றில் நிற்பவை

இப்படி ஒருவன் எழும்பினால் அமெரிக்காவிற்கு பொறுக்குமா? கொஞ்சநாளில் சாவேசும் புற்றுநோயில் இறந்தார்

அதன் பின் அமெரிக்காவின் வேட்டைகாடு ஆயிற்று வெனிசுலா

எங்கும் குழப்பம் , போராட்டம், ஆர்ப்பாட்டம், பெரும் எதிர்ப்புகள்

நேற்று பிரதமர் மக்களுக்கு உரைவாசிக்கும் பொழுது பறக்கும் டிரோன் ஒன்று வந்து அந்தரத்திலே வெடித்திருக்கின்றது

எப்படி இருக்கும் பாருங்கள்

ஒருநாட்டு அதிபர் உரைவாசிக்கின்றார், திடீரென வானத்தை பார்க்கின்றார் ஒரு பொருள் பறந்து வந்து வெடிக்கின்றது அத்தோடு எல்லோரும் அலறி அடித்து ஓடுகின்றார்கள் என்றால் எப்படி இருக்கும்?

அங்கு அது நடந்திருக்கின்றது, 7 வீரர்கள் படுகாயமடைந்தனர். கடும் பாதுகாப்புக்கு இடையில் இது நடந்திருகின்றது

இது அதிபரை கொல்ல அமெரிக்காவும் அதன் கைகூலியான கொலம்பியாவும் செய்த முயற்சி என குற்றம்சாட்டுகின்றது

இல்லை இது சிலிண்டர் விபத்து என்கின்றது இன்னொரு கோஷ்டி

ஆனால் கொலை முயற்சி நடந்தது உண்மை

கச்சா எண்ணெய் முதல் மழைவளம் வரை கொண்ட நாடு வெனிசுலா ஆனால் அதை வைத்து நல்வாழ்வு வாழமுடியவில்லை என்பதுதான் மகா சோகம்

பாதுகாப்பான அரசும், விழிப்பில்லா மக்களும் நிரம்பிய தேசத்தில் பெரும் வளங்கள் கொட்டிகிடப்பது பெரும் சாபம்

திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ சோதனை

Image may contain: sky and outdoor

திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ சோதனை செய்திருப்பது வரவேற்கதக்க விஷயம்

அதிலும் சுங்க சோதனையினை தாண்டி சென்றவர்களிடம் கடத்தல் தங்கத்தை பிடித்திருப்பது சாகசம், அதாவது அந்த கறுப்பு அதிகாரிகள் கையும் களவுமாக பிடிபட்டிருக்கின்றார்கள்

வெகுநாட்களாக எல்லோரும் சொல்லிவரும் விஷயம் இது, தமிழக விமான நிலையங்களிலே ஊழலும் வசூலும் கட்ட பஞ்சாயத்து போல பயணிகளிடம் இருந்து பணம் கறப்பதும் அன்றாட நிகழ்வுகள்

அதாகபட்டது திருச்சியில் ஒரு விமான நிலையம் உண்டு, அதில் ஏகபட்ட சர்ச்சைகளும் உண்டு, இப்பொழுது ஏர் ஏசியா, மலின்டோ எனும் பட்ஜெட் விமானங்கள் திருச்சிக்கு பறந்தபின் அந்த சர்ச்சை வலுக்கின்றது

தமிழ்நாட்டின மைய நகர் அது, சென்னை எங்கோ ஒரு மூலையில் இருக்கும் நகரம், அதனால் தெற்கே இருக்கும் மக்களுக்கு திருவனந்தபுரம் ஒரு வாய்ப்பு என்றால் பெருவாரியான மக்களுக்கு திருச்சி நல்ல வாய்ப்பு, அதுவும் தமிழகத்தை சுற்றிபார்க்க, குறிப்பாக காவேரி கரை கோவில்களுக்காகவே வருபவர்களுக்கு அதுதான் தேர்வு

அரேபியாவிலிருந்து வருபவர்களுக்கு கொச்சி பிரதானம் என்றால், கிழக்கிலிருந்து வரும் தமிழர்களுக்கு திருச்சிதான் பிரதானம்

அந்த முக்கியத்தில்தான் கருப்பு ஆடுகள் விளையாடுகின்றது, மலேசியா சிங்கப்பூரில் இருந்து ஏராளமான விமானங்கள் அங்கு வருகின்றன அதில் படித்தவர், சுற்றுபயணிகள், பணியாற்றுவோர், படிப்பறியா தொழிலாளிகள் என பல வகை உண்டு

அவர்களிடம் முடிந்தமட்டும் பலவகையான சுரண்டல்களையும், மிரட்டல்களையும் மேற்கொள்கின்றார்கள் என்பது முன்பே வந்த செய்தி, நகை போட்டிருக்கின்றாயா எடு வரியினை, இது டிவியா எடு பாதி தொகையினை, கையில் என்ன பணமா? கொடு ஒரு பங்கை என நடப்பதாக பல செய்திகள் வந்தன‌

அடுத்த‌ செய்தி பல சுற்றுலா பயணிகளின் பெட்டிகள் உடைக்கபடுகின்றன, நகைகள் கேமராக்கள் காணவில்லை என இன்னபிற

கேட்டால் யாருக்கும் தெரியாது என கையினை விரித்துவிடுவார்கள் என ஏகபட்ட சர்ச்சைகள், அழுகை கண்ணீர் என நிரம்ப கதைகள் உண்டு, இதனாலேயே திருச்சியினை தவிர்த்து கொச்சிக்கு பறந்த பயணிகள் ஏராள உண்டு

மலேசிய சிங்கப்பூரில் பணிபுரியும் ஏராளமான தொழிலாளர்கள் புதுகோட்டை, சிவகங்கை பகுதியினர், இங்கு மிகுந்த சிரமபட்டு பட்டினி கிடந்து உழைத்து கொண்டு செல்லும் பொருட்களை அந்த விமான நிலையத்தில் மீட்க அவர்கள் பட்ட பாடுகளின் கதைகளும், மீட்க முடியாமல் போன கையாலாத அழுகை கதைகளும் ஏராளம் உண்டு

கேட்டாலே கண்ணீர் வரும் கதைகள் அவை..

பொருட்கள் காணாமல் போவது, அழிச்சாட்டியம் செய்வது வேறு பிரிவினர் என்றால், குடிநுழைவு எனும் பொறுப்பான துறையில் இருக்கும் அதிகாரிகளும் புகுந்து விளையாடுகின்றார்கள் என்கின்றார்கள்

எப்படி?

வெளிநாட்டு விசாக்களில் பல வகை உண்டு, சுற்றுலா மற்றும் வியாபாரம் போன்ற குறுகிய விசாக்களுக்கு திரும்பி வரும் டிக்கெட்டையும் காட்ட வேண்டும் என்பது விதி, யாரின் சட்டம் என்றால் வெளிநாட்டு அரசுகளின் சட்டம், அப்படி இருந்தால்தான் அனுமதிப்பார்கள், அதாவது கண்டிப்பாக அவர் திரும்பிவிடுவார் எனும் உறுதி அது

சில சர்ச்சைகள் காரணமாக இந்திய குடிநுழைவு துறையும் அதனை மேற்பார்வை செய்வதுண்டு, செய்ய வேண்டியதுதான் ஏஜெண்டுகள் எனும் அரக்கர்களிடம் ஏமாறும் சில அப்பாவிகளை காக்க அது உதவும், ஆனால் திருச்சியில் நடப்பது என்ன?

வெளிநாட்டு குடிநுழைவு அதிகாரிகள், சிங்கப்பூர் மலேசிய அதிகாரிகள் கேட்க வேண்டிய கேள்விகளை இவர்கள் கேட்கின்றார்கள், அது சுற்றுலா விசா என்றால் கூட பரவாயில்லை நீண்ட கால விசா எனும் அனுமதிகளில் கூட கேட்கின்றார்களாம்

கேட்டாலும் பரவாயில்லை, அவர்கள் ரிட்டன் டிக்கெட்டும் எடுத்தால்தான் அனுமதிப்போம் என்று ஒற்றைகாலில் நிற்கின்றார்களாம், இது இவர்களுக்கு சம்பந்தம் இல்லா விஷயம்

நீண்ட கால விசாக்களுக்கு மலேசிய, சிங்கப்பூர் அரசுகளே திரும்பி செல்லும் டிக்கெட்டினை கேட்பதில்லை, காரணம் அவர் எப்பொழுது திரும்புவார் என்படு பயணிக்கே தெரியாது, அப்படியும் கேட்டால் கேட்டால் அவர்கள்தான் கேட்க வேண்டும் இந்திய குடிநுழைவு துறைக்கு என்ன வந்தது?

திருவனந்தபுரம், கொச்சி எல்லாம் இந்த விஷயத்தில் மிக சிறந்தவை, விசாக்கள் சரியாக இருந்தால் “ஷெரி” என்பததோடு சரி, அவ்வளவுதான்

ஆனால் திருச்சி விமானநிலையம் நீண்டகால விசாக்களில் செல்வோரை குறிவைத்து அடிக்கின்றது, அதுவும் தனியாக செல்லும் முதியவர் என்றால் கொண்டாட்டம்

இங்கேயே எடு டிக்கெட்டை இல்லாவிட்டால் அனுமதிக்கமாட்டோம் என சொல்லி , விமான நிறுவணங்களுடன் உள்குத்து வைத்து இவர்கள் செய்யும் அழிச்சாட்டியம் தாளவில்லை

ஏதும் சொன்னால் சட்டம் மாறிற்றாம், திருவனந்தபுரம், கொச்சி சென்னைக்கு ஒரு குடிநுழைவு சட்டம், திருச்சிக்கு தனி குடிநுழைவு சட்டமா? திருச்சி என்ன தனி நாடா? அல்லது காஷ்மீரா?

விமான நிலைய வளாகத்தில் பணம் மாற்றும் புரோக்கர்கள் வளைப்பார்கள், அவர்களிடம் என்ன உரிமம் உள்ளது? யார் அனுமதி கொடுத்தது? ஒருவரும் இல்லை

அப்படியானால் அது ஹவாலா அல்லது கள்ளநோட்டு என்பதை தவிர என்ன? இதனை தடுக்க முடியாத அரசா நாடெல்லாம் கருப்பு பணத்தை மீட்க போகின்றது, சுத்த அபத்தம்

கண்ணீரோடு கையிலிருக்கும் பணத்தை கொட்டி டிக்கெட் எடுத்துவிட்டு, அப்படி பணமில்லாமல் இருந்தால் பயணத்தை ரத்து செய்துவிட்டு கலங்கி நிற்பவர்கள் ஏராளம்

எவ்வளவு பெரும் கொடுமை இது? பயண ஆவணங்கள் எல்லாம் சரியாக இருந்தும், பயணி பயணம் செய்ய ஒரு தடையும் இல்லாமல் இருந்தும் அவர்களை தடுக்க இவர்களுக்கு என்ன உரிமை? இது கடமையினை மீறிய அதிகார துஷ்பிரயொகம், மோசடி..

பலதரமான சர்ச்சைகள் வருகின்றன, அங்கு சென்ற பலருக்கும் பலவிதமான கசப்பான அனுபவங்கள் நேர்கின்றன‌

மிக முக்கியமான இடத்தில் இருக்கும் திருச்சி விமான நிலையம், தன் பெயரை கெடுத்து இந்திய பெயரையும் கெடுக்கின்றது. முதன் முதலில் வரும் வெளிநாட்டவருக்கு என்ன நினைப்பு இந்தியா பற்றி வரும்?

விமான நிலையங்களும் , குடிநுழைவும் ஒரு நாட்டின் வாயில்கள் நாட்டின் மாண்பினை அவைதான் வெளிநாட்டவருக்கு சொல்லும்

இந்த திருச்சி விமான நிலையத்து அனுபவம், இந்தியாவின் பெயரினையும் மாண்பினையும் கெடுத்து கொண்டிருக்கின்றது, தமிழக நிலையம் என்பதில் பெரும் வருத்தமாக இருக்கின்றது

திருவனந்தபுரமும், கொச்சியும் அவ்வகையில் பரவாயில்லை நாட்டின் பெயரை காக்கின்றன‌

தமிழகத்திற்கு விமான பயணம் மேற்கொள்வோர் திருச்சியினை தவிர்ப்பது நல்லது, மீறி சென்றால் சொந்த செலவில் சூனியம் வைப்பதற்கு சமம் அப்படிபட்ட இமேஜினை திருச்சி விமான நிலையம் வைத்திருந்து

கடும் ஆட்டத்தை அந்த கறுப்பு ஆடுகள் ஆடின‌

இந்த சிபிஐ சோதனை அந்த கறுப்பு ஆடுகளின் அட்டகாசத்தினை வேறறுக்க வாழ்த்துக்கள்

டான் அசோக்கு இளம் கலைஞருக்கு போட்டியா?

கலைஞருக்கு மீண்டும் உடல்நலம் சரியில்லை, மஞ்சள் காமாலை என பரபரப்பு : செய்தி

இந்த செய்தியில் எல்லோரும் நிதானம் காப்பது நல்லது

கலைஞரின் உடல்நிலை பற்றி செய்திவரும்பொழுதெல்லாம் அவரின் அந்த பதில்தான் நினைவுக்கு வரும்

கலைஞரிடம் கேட்டார்கள், உங்கள் கவிதை வரிகளில் உங்களுக்கு பிடித்த வரி எது

அவர் சொன்னார்

Image may contain: 3 people, people sitting“மானம் அவன் கேட்ட தாலாட்டு, 
மரணம் அவன் ஆடிய விளையாட்டு..”

கலைஞரும் அவரின் கவிதை வரிபடியே மரணத்தோடு ஆடி கொண்டிருக்கின்றார் .


எனக்குத்தான் அழகிரி பிரச்சினைன்னு பார்த்தா அது யார்டா டான் அசோக்கு இளம் கலைஞர்னு உனக்கு போட்டியா?

தப்பாச்சே, காவேரி சிக்கல் முடியட்டும், இளம் கலைஞரை கவனிச்சிக்கலாம்

இப்பொலாம் குத்துசண்டைக்காரன், கள்ள துப்பாக்கிகாரன் எல்லாம் கட்சியில இருக்கான், இளம் கலைஞருக்கு அதெல்லாம் தெரியாது போல..


சுபாஷ் சந்திர போஸ் என்ற பெயரை தமிழன் வைக்கிறான். அண்ணாதுரை என்று பெங்காலி பெயர் வைப்பானா : கமல ஹாசன்

மிஸ்டர் கமலஹாசன் தேச போராளிக்கும் தனி திராவிட நாடு கேட்டவருக்கும் வித்தியாசமில்லையா?

இந்தியனாக சுபாஷ் சந்திரபோஸை தமிழர் வரவேற்கின்றார்கள், பிரிவினை பேசியதால் அண்ணா தமிழகம் தாண்டி செல்லவில்லை

இது கூட புரியாமல் உமக்கு என்ன மய்யமோ மண்ணோ?


அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிய கண்ணதாசனே இயேசுகாவியம் எழுதினார்

கண்ணன் பாடல்களுக்கு இசை அமைத்த எம்.எஸ்வி மாதா பாடல்களுக்கும் இசை அமைக்க தவறவில்லை

ஜேசுதாஸ் பாடாத பாடலில்லை

கலைஞர்கள் மதம், இன, எல்லைக்குள் வரமாட்டார்கள், இதில் சர்ச்சை செய்வதுதான் மதவெறி, குறுக்கு புத்தி, சீழ்பிடித்த சிந்தை


எங்கள் வீட்டில் சாம்பார் வாளி தூக்கியவனையெல்லாம் அமைச்சர் ஆக்கினோம் : தினகரன்

சசிகலா தான் ஜெயாவீட்டு சமையல்காரியாய் இருந்ததை அவரே ஒப்புகொண்டவர்

ஆக அவர் சமைத்திருக்கின்றார் இவர்கள் வாளியினை தூக்கி இருக்க்கின்றார்கள்

இதில் தினகரன் என்ன பெருமை கண்டாரோ தெரியவில்லை, மொத்தத்தில் எல்லாம் ஜெயா வீட்டு அடுப்பாங்கரையில் இருந்த கூட்டம்


விசா இல்லாமல் இந்தியர்கள் இலங்கை வர அனுமதி – பரிசீலிக்க குழு அமைத்து ரணில் விக்கிரமசிங்கே உத்தரவு

அங்கிள் சைமன் கேட்டதா? இலங்கை செல்ல விசா வேண்டாமாம்

எங்கே உங்கள் தும்பி படைகளுடன் சென்று ஈழம் அமைத்துவிடுங்கள் பார்க்கலாம்

மிஸ்டர் விக்கிரமசிங்கே, இப்படி சொன்னால் மட்டும் இங்குள்ள தும்பிகள் அங்கு வரும் பிடித்து அடிக்கலாம் என கனவு காண்கின்றீர்களா

அவை பனங்காட்டு நரிகள், இங்கே கடந்து கத்துமே தவிர கோடி கொடுத்தாலும் இலங்கை பக்கம் வராது


தெய்வத்தால் ஆகாதெல்லாம் தலைவியால் சாத்தியம்

Image may contain: 1 person, smiling, close-upகோவில் அர்ச்சகரில் பிராமணர் அல்லாத அர்ச்சகர் வந்துவிட்டார்களாம் , அது பெரும் மாற்றமாம். நல்லது

ஒரு பக்கம் இது சரி என்றும் ஒரு பக்கம் தவறு என்றும் ஏகபட்ட வாதங்கள் குழப்பங்கள், இதனால் சமூக அமைதி கெடுகின்றது

இதற்கெல்லாம் தீர்வு என்ன என சங்கம் வழிகாட்ட போகின்றது

விரைவில் மீண்டும் அமைய இருக்கும் குஷ்பு கோவிலில் எல்லா சாதியும் அர்ச்சகராகலாம் என அறிவிப்பதில் சங்கம் பெருமை கொள்கின்றது.

உலகிற்கே அது வழிகாட்டும் விஷயமாக அமையும்

தெய்வத்தால் ஆகாதெல்லாம் தலைவியால் சாத்தியம்

2002ம் ஆண்டு இதே நாளில் ஏர்வாடியில் பல மனநல நோயாளிகள் மரணித்தனர்

2002ம் ஆண்டு இதே நாளில் ஏர்வாடியில் மனநல காப்பகத்தில் ஏற்பட்ட தீயில் ஏராளமான மனநல நோயாளிகள் மரணித்தனர்

அவர்கள் விலங்கிடபட்டிருந்ததால் அவர்களால் தப்பமுடியவில்லை, தமிழ்நாட்டில் நடந்த மிகபெரும் சோகம் அது

இதன் பின் மனநல நோயாளிகளுக்கு விலங்கிடுதல் கூடாது, மனநல காப்பகத்தில் கெடுபிடி என எல்லாம் அதிகரித்தது

இதனால் மனநலம் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அந்த நிலையங்களும், இம்மாதிரி மையங்களும் கொஞ்சம் தயங்கின‌

அப்பொழுது ஏகபட்ட மனநலம் பாதித்தவர்கள் சிகிச்சைக்கு வழியின்றி வெளியே சுற்ற ஆரம்பித்தனர்

அவர்களுக்கான கட்சிதான் இப்பொழுது நாம் தமிழர் என அழைக்கபடுகின்றது , அந்த மனநோயாளிகள் தும்பிகள் எனவும் அரசியல் பேசிகொண்டிருக்கின்றனர்

அவர்களை கூட்டணி சேர்க்க யாருமில்லை, சேர்க்கவும் மாட்டார்கள் எனும் நிலையில் அவைகளோ நாங்கள் தனித்து ஆட்சியினை பிடிப்போம் என சீரியஸ் காமெடியும் செய்கின்றன‌

ஏர்வாடியில் ஆகஸ்ட் 6, 2002ல் அத்துயரம் ஏற்பட்டிருக்காவிட்டால் இவர்களுக்கு சிகிச்சை கிடைத்திருக்கும் இல்லாவிட்டால் கட்டியாவது போட்டிருக்கலாம்

அந்த கொடூர சம்பவத்தின் விளைவு இதுகளெல்லாம் அரசியல் பேசிகொண்டும் புரட்சி செய்துகொண்டும் இருப்பதாக தீவிரமாக நம்புகின்றன‌.

ஈழத்தை இங்கே கொட்டாம்பட்டியிலிருந்து அமைத்துவிடலாம் , கலைஞர் இல்லாவிட்டால் தமிழினம் உலக வல்லரசாகியிருக்கும் போன்றவை எல்லாம் இவற்றின் தத்துவ முத்துக்கள்

இப்பொழுது வடிவேலு படத்தில் வருவது போல “லூசா பொறந்தா என்னடா? சுக‌ பிரசவமாகத்தான் பொறந்தோம்..” என அடுத்த அதிர்ச்சி கொடுத்து திரிகின்றன‌

அவ்வப்போது இப்படி கடும் காமெடிகளையும் செய்வதால் இவைகளை யாரும் சீரியசாக கருதவில்லை என்பது வேறு விஷயம்

ஆனாலும் அவ்வப்போது கடிக்க வரும் என்பதால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது