முள்ளிவாய்க்கால்லண்ணே.. மொத்த ஈழமும் அங்கதான் இருந்து

Image may contain: one or more people and people standingஅண்ணே ஆயிரம் சொல்லுங்கண்ணே கலைஞர் 2009ல் போரை நிறுத்தி இருக்கணும், இனம் காப்பாற்றபட்டிருக்கும்

இனம் எங்கே இருந்திச்சி

முள்ளிவாய்க்கால்லண்ணே மொத்த ஈழமும் அங்கதான் இருந்து

அடேய் யாழ்பாணம், மட்டகிளப்பு கொழும்பெல்லாம் எங்கே இருக்கு? அங்கெல்லாம் இனம் இல்லையா?

அதெல்லாம் தெரியாதுண்ணே இனம் முள்ளிவாய்க்கால்ல அழிஞ்சி கலைஞர் கண்டுகொள்ளலை சுயநலம் பிடிச்சவர்னே

அவர் என்ன பண்ணிருக்கணும்

மத்திய அரசு ஆதரவை வாபஸ் வாங்கிருக்கணும்

வாங்கிருந்தா?

மத்திய அரசு அஞ்சி ஈழத்தில போரை நிறுத்த சொல்லியிருக்கும்

நம்ம சொல்லி அவன் ராமேஸ்வரம் படகையே விடமாட்டான், போரை எப்படிடா நிறுத்துவான்?

ம்ம் நம்ம ராணுவத்த அனுப்பிருக்கணும்

எதுக்கு கற்பழிக்க வந்தாங்கண்ணு 1987ல பட்டபாடு போதாதா? 1500 இந்திய வீரர் செத்தாங்க, ஏண்டா நாங்கதான் சிங்கள அடிச்சி வீரத்துல கிழிப்போம்னு சொன்னீங்களே செஞ்சா என்னடா?

ம்ம் அண்ணே கதைக்கு வாங்க, கலைஞர் ஆதரவ விலக்கிருந்தா மத்திய அரசு கவிழ்ந்திருக்கும்

கவிழ்ந்தாலும் எப்படிடா போர் நிற்கும்?

கவித்துட்டு தமிழ்நாட்டுல மாணவர்கள், மீணவர்கள், எங்களை போன்ற சிங்கங்களை எல்லாம் போராட அழைச்சிருக்கணும், காட்டு காட்டியிருப்போம்

யாழ்பாணம், மட்டகிளப்பு, கொழும்பு இங்கெல்லாம் தமிழனே இல்லையா? எவனாது ஒருவன் பொங்கினானா? இல்லை தீகுளிச்சானா? சொல்லு

அவனுக எல்லாம் அடிமைகள்னே மானம் இல்லாதவனுக , நாங்க மானதமிழனுக ஒரு காட்டு காட்டியிருப்போம்

ஏண்டா நீங்க காட்டு காட்டும்போது டெல்லி தமிழ்நாட்டு அரசை டிஸ்மிஸ் பண்ணிட்டா என்னடா செய்வீங்க? எப்படிடா அங்க போர் நிற்கும்

ஹிஹிஹி எங்க ஆசையே அதாணே அவர் பதவிலே இருக்க கூடாது, அவர் துரோகி

அப்படி என்னடா பண்ணினார்?

ஈழத்துல போரை நிறுத்தல‌

அடேய் அவர் அரசு டிஸ்மிஸ் ஆனா எப்படிடா அங்க போர்நிற்கும்

அண்ணே அதான் வேணும், அவர் பதவில இருக்க கூடாது அவர் துரோகி, ஊழலாதி

சரி எந்த ஊழல்ல அவரை பிடிச்சி உள்ள போட்டீங்க?

அது அவர் விஞ்ஞான முறையில பண்ணுவார்ணே

அடேய் விஞ்ஞானம்னா ஆதாரம் வேணும்டா, ஆதாரம் எங்கே

அது.. அண்ணே ஈழத்துல நம்ம இனம் செத்துச்சி

அதான் நாயே, அவர் ஆட்சி டிஸ்மிஸ் ஆயிட்டா, இல்ல அவர் ராஜினாமா பண்ணிட்டா எப்படி போர் நிற்கும் சொல்லு

அந்த போர் நின்னா என்ன நிக்காட்டி என்ன, தமிழ்நாட்டை தமிழினத்தை அழிச்ச கலைஞர் பதவில இருக்க கூடாது

எண்டா சுய அறிவோடத்தான் பேசுறியா?

இப்படித்தாண்ணே சொல்ல சொல்லிருக்காங்க, வேற ஒன்னும் பேச தெரியலண்ணே, ஒருவேளை தப்புண்ணா யார்கிட்டேயும் சொல்லாதிங்கண்ணே, ஒரு இனபுரட்சி வேடத்துல சுத்துறேண்ணே, பாவம்ணே விட்டுருங்கண்ணே

நில்லுடா

இல்லண்ணே விடுங்க‌

எத்தனை தடவடா அந்த சனியனுக்காக திமுக ஆட்சியினை இழக்கும்?

தெரியலண்ணே

ஏண்டா காப்பாத்தி விட விட அவன் என்னடா செஞ்சான்?

யாருக்குண்ணே தெரியும், நான் என்ன அவரோட ஆமைகறியா தின்னேன்.

அந்த பாம்பு காப்பாத்தி விட்டாலும் நாளைக்கு கலைஞருக்கே குறி வைக்கும்டா

அது எப்படிண்ணே?

டேய் பிரபாகரன் வரலாறு என்ன? தன்னை காத்த அல்லது நம்பிய யாரை கொல்லாமல் இருந்தான்

யாரண்ணே?

அடேய் அமிர்தலிங்கம், ராஜிவ், பிரேமதாச , பத்மநாபா இப்படி எப்பாருமே அவன் உயிரை காத்துவிட்டு அவனாலே கொல்லபட்டவர்கள், பின் அந்த சனியனை யார் காப்பாற்றுவார் யார் நம்புவார்?

ம்ம் ஆனாலும்

பலபேர் பாலூற்றி வளர்த்த பாம்பு அது, பாலூற்றிய எல்லோரையும் கொன்றது ,கடைசியாக மொத்தமாக போட்டு சாத்தினார்கள்

அண்ணே, ஆனாலும் அந்த மக்கள் பாவம்ல‌

ஏண்டா சென்னையில் கிட்டதட்ட 400 கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற கலைஞர் காப்பத்தணுமா, அந்த மக்களை பிடிச்சி வச்சிருந்த பிரபாகனுக்கு பொறுப்பு இல்லையா

ஹிஹிஹிஹ் இதெல்லாம் யோசிக்கலண்ணே

மக்கள் மக்கள்னு யாரை காப்பாத்த நீங்கெல்லாம் சத்தம் போட்டீங்கணு யாருக்குடா தெரியாது, மக்கள் போராளின்னா அந்த பிரபாகரன் மக்களை விட்டுவிட்டு தனியா சண்டை போட்டுருக்கணும்டா

அண்ணே தனியா போனா மண்டையிலே போட்டுருவாங்க‌

இப்போ மட்டும் போடாமலா விட்டாங்க, அவனால பல ஆயிரம் பேர் செத்ததுதான் மிச்சம்

ம்ம்ம் இருக்கலாம்ணே என்ன விட்ருங்கண்ணே…

இந்த ஒண்ணுக்கும் பதில் சொல்லு

கேளுங்கண்ணே

30 வருஷமா பிரபாரன் என்ன ஜெயிச்சான்

தெரியலண்ணே

யாழ்பாணத்த திரும்ப பிடிச்சானா

இல்லண்ணே

எங்காயவது சிங்கள அடக்கி வழிக்கி கொண்டுவந்தானா

இல்லண்ணே

கடைசியா எங்க இருந்தான்

ஏதோ வன்னிகாடுன்னு சொல்றாங்க‌

அடேய் அவன கொஞ்சம் கொஞ்சமா அடிச்சி கலைச்சி கிழக்கு நோக்கி கொண்டுபோய் கரெக்டா சுத்தி வளச்சி கொன்னுருக்கானுக, பிரபாகரனை சிங்களன் கொல்ல தேடி அவன் ஓடி ஒளிஞ்ச கதைதான் ஈழபோராட்டம்

ம்ம் யோசிக்க வேண்டிய விஷயம்ணே

அதை காவேரி ஆஸ்பத்திரி முன்னால போய் மன்னிப்பு கேட்டுட்டு யோசி போடா..”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s