கலைஞர் பெற்றதை பார்க்கின்றீர்கள், அவர் இழந்த ஏராள விஷயம் உண்டு

Image may contain: 1 person, close-up

எந்த அரண்மனையில் பிறந்தாலும் விதி மாறாது என்பார்கள், எக்குடும்பம் பிறப்பினும் விதிபடி வாழ்க்கை அமையும் என்பார்கள்.

அதற்கு பெரும் உதாரணம் கலைஞரின் மூத்த மகன் மு.க முத்து. பத்மாவதி எனும் கலைஞரின் முதல்மனைவி கலைஞரின் வறுமையான போராட்ட காலங்களில் துணையிருந்தவள், தன்னை செதுக்கி செதுக்கி கலைஞர் நிரூபித்துகொண்டிருந்த காலங்களில் அந்த பத்மாவதி இறக்கும் போதும் கலைஞர் மேடைகளில் பேசவேண்டிய கட்டாயம்.

அப்படிபட்ட காலங்களில் அஞ்சுகத்தாலும், முரசொலிமாறனின் தாயாராலும் வளர்க்கபட்டவர்.

பெரியார், பட்டுகோட்டை அழகிரி, அண்ணா என பல ஜாம்பவான்கள் கொஞ்சி வளர்ந்த குழந்தை அவர்.

ஆனால் விதி சினிமா உருவில் வந்தது, கலைஞருக்கும் எம்ஜிஆருக்கும் பனிப்போர் தொடங்கிய காலத்தில் திரை நடிகராக அறிமுகமானார் மு.க முத்து , ஆங்காங்கு முக முத்து ரசிகர்மன்றங்கள் திறக்கபட்டன.

எம்ஜிஆர் எப்படி பெரும் பிம்மபாக சினிமா எனும் மாயகண்ணாடியால் உருவானார் என்பதை மிக அருகிலிருந்தே பார்த்த கலைஞருக்கு, மகனையும் அப்படி உருவாக்கிவிடலாம் என நம்பிக்கை வந்ததில் ஆச்சரியமில்லை.

ஒரு நடிகன் இப்படித்தான் உருவாகிறானா? இதிலென்ன பிரமாதம் என்பது அருகிலிருப்பவர்களுக்கு புரியும், கலைஞருக்கும் அது புரிந்தது.

ஆனால் எம்ஜிஆர் முன் முகமுத்துவால் நிற்கமுடியவில்லை, அவரின் விதி வேறு, அவர் இந்த தடைகளை தாண்டி விஸ்வரூபமெடுத்தார்.

கலைஞரோ திணித்து பார்க்க பார்க்க, முக முத்து தோற்றுகொண்டே மதுவில் வீழ்ந்தார், வீழ்ச்சி என்றால் கடும் வீழ்ச்சி, முப்பொழுதும் மது நீச்சல்.

பெரும் குடும்பத்தில் , அரசியல் பரபரப்பில் சிக்கிவிட்ட கலைஞரும் முத்துவினை பார்க்கமுடியவில்லை, தாயும் இல்லை கேட்பார் இல்லை

மணம் செய்து வைத்தும் அவர் மாறவில்லை, பொதுவாக கலைஞர்கள் மனம் வேறு, பெரும் ரசனை கொண்டவர்களே கலைதுறையில் பிரகாசிக்கமுடியும், அம்மாதிரியான மனம் ஒரு போதையில் சிக்கினால், ஆறுதலை அதிலேதான் தேடும், புறக்கணிப்பு சித்திரவதையினை அப்போதையில்தான் கழிப்பார்கள்

பாரதி அப்படி கஞ்சாவில் சிக்கினான்.

கண்ணதாசன், சாவித்திரி, சந்திரபாபு, நாகேஷ் எல்லோரின் வரிசை அப்படியே, மு.க முத்துவும் அதிலொருவர். குடிமுற்றி புறக்கணிக்கபட்டார், நேரடியாக எம்ஜிஆரிடமே ராமவரம் தோட்டம் சென்று உதவி கேட்டார். குடிகாரனை சமூகமே ஒதுக்கிவைக்கும் பொழுது குடும்பம் ஒதுக்காதா?

கலைஞரின் பெரும் வேதனையானார் முத்து, பெரும் பாடகரான சி.எஸ் ஜெயராமனின் மகளை திருமணம் செய்தும் திருந்தவில்லை, மேற்பட்ட திருமண சர்ச்சைகளும் உண்டு.

மீடியா, கலைஞர் குடும்பம் என எல்லா வெளிச்சத்திலிருந்தும் மறைந்த முத்து அவ்வப்போது திடீரென சர்ச்சைகளுடன் தோன்றுவார், அதில் ஒருமுறை ஜெயலலிதா கொடுத்த 5 லட்சம் முக்கியமானது.

கலைஞருக்கு எதிரணியினர் எல்லாம் அவ்வப்ப்போது கலைஞருக்கு எதிராக முக முத்துவினை பகடையாக்கிய தொடர்ச்சி அது.

சிவாஜிகணேசன் மறைந்தபொழுது, அருகிலிருந்த மதுகடையினை திறக்க சொல்லி சர்ச்சை செய்த கதையும் உண்டு, அவ்வப்போது மருத்துவமனையில் படுத்துகொள்வார், ஒருமுறை குடலில் பிரச்சினை என சிகிச்சை பெற்ற வாலியினை சந்திக்க சென்ற கலைஞர் அடுத்த அறையிலிருந்த முகமுத்துவினை சந்தித்து வந்தார், “குடலில் ஏதோ பிரச்சினை எனக்கு, அவருக்கு என்ன” என வாலிகேட்க” ,

“அவனுக்கு குடலே இல்லை, அதுதான் பிரச்சினை, எல்லாம் அரித்துவிட்டது குடி” என்று விரக்தியாக சொன்னர் கலைஞர்.

அன்று எதிரிகளால் கலைஞருக்கு எதிராக உருட்டிவிளையாடபட்ட முத்து பின்னாளில் அழகிரியுடன் கைகோர்த்து குடும்பத்திற்குள் பகடையான காலமும் உண்டு, ஆனால் சொன்னார்,

“என் குடும்பத்தில் என்னை நேசிக்கும் ஒரே உறவு அழகிரி”

நிச்சயம் கலைஞரின் வாழ்க்கை மகா விசித்திரமானது

எத்தனையோ பேரினை எங்கோ உயர்த்திவிட கலைஞரால், தொட்டதெல்லாம் துலங்கும் கைராசிக்காரர் என பலர் கொண்டாடும் கலைஞரால் இறுதிவரை தன் பாசத்திற்குரிய மூத்த மகனுக்கு பெரிதாய் ஒன்றும் செய்துவிடமுடியாமல் தடுத்தது விதி.

ஆசை ஆசையாய் தன் தந்தை முத்துவேலரின் பெயரினை சூட்டி அவர் வளர்த்த மகன் அவர், அதுவும் தாயில்லாமல் வளர்ந்த மகன். அம்மகனே கலைஞரின் பெரும் தீரா துயரத்தின் விதியாவான் என்றது எங்கோ எழுதபட்ட கணக்கு.

நிச்சயமாக எம்ஜிஆர் முன் அவர் ஒரு நடிகராக தோற்றிருக்கலாம், ஆனால் ஒரு பாடகராக நிச்சயம் ஜொலித்திருப்பார், அவர் பாடிய மற்ற பாடல்கள் அதனைத்தான் சொல்கின்றன,

நெடுநாள் கழித்து தேவா இசையிலும் பாடினார், ஆனால் மாறிவிட்ட சூழல் அதனை பொருட்படுத்தவில்லை

கலைஞர் செய்த மிகசில தவறுகள் அவருக்கு பெரும் சிக்கல்களை உருவாக்கிவிட்டன, அந்த நடிகருக்கு ஒரு அமைச்சர் பதவி கொடுத்திருந்தால் இன்று 50 ஆண்டுகாலம் முதல்வராக இருந்த பெரும் வரலாறு அவருக்கு இருந்திருக்கும்? யார் உடைக்கமுடியும்?

ஆனால் தவறான முடிவு தீரா தலைவலி உருவாக்கியது போல, பாடகராக வந்திருக்கவேண்டிய மகனை நடிகனாக முன்னிறுத்தி அதுவும் எம்ஜிஆருக்கு முன்பாக நிறுத்தி தீரா தலைவலியினை தேடிகொண்டார்.

ஆனால் முகமுத்துவினால் திரைதுறையில் அவர் பெற்ற தோல்விதான், 1990க்கு பின் சின்னதிரை மூலமாக அக்குடும்பம் பெரும் வெற்றிபெற்று பின்னாளில் தமிழக திரைதுறையினையே கைக்குள் வைத்திருந்தது.

அன்று தோற்ற கலைஞர் பின்னாளில் வெற்றிதான் பெற்றார்.

கலைஞர் குடும்பத்திற்கு பெரும் வரமனா நீண்ட ஆயுள், அப்படி முக முத்துவும் 70 வயதினை இந்த குடிக்கு பின்னும் தாண்டுகின்றார்.

அரசியல் அப்பாவியான அவர் விட்ட இடத்திற்குதான் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி என அடித்துகொள்கின்றார்கள்,

மனிதர் சினிமா கைவிட்டவுடன் மதுகடைக்குள் புகாமல் அரசியலுக்குள் வந்திருந்தால் அடுத்த முதல்வர் அவர்தான், இல்லை முதல்வராகவும் ஆகியிருக்கலாம். ஆனால் விதி அது அல்ல‌

அந்த குரல் காதில் கேட்டுகொண்டே இருக்கின்றது

“‘கூன் பிறையை போற்றிடுவோம்
குர் ஆனை ஓதிடுவோம் 
மேன்மை மிகு மெக்காவின் திசை நோக்கி பாடிடுவோம்
நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா
பிறர் நலனை விரும்பி நானும் வேண்டவா
யாரும் வருவார் யாரும் தொழுவார் 
நாகூர் ஆண்டவன் சன்னிதியில்
நானும் உண்டு நீயும் உண்டு 
நபிகள் நாயஹம் முன்னிலையில்’

என்ன அழகான குரல், எவ்வளவு அருமையான சுதிவிலகாத பாடும் திறன், நிச்சயம் அவர் பாடகர்.

திருவாரூர் கோயிலில் முன்னோர்கள் இசைத்த இசையின் பெரும் தொடர்ச்சி அவர், அந்த குரலும், பாடலின் உருக்கமும் அதனைத்தான் சொல்கின்றன‌

கோட்டையில் பிறந்தாலும் கோலோச்ச விதிவேண்டும் என்பார்கள், அது அவருக்கு வாய்க்கவில்லை

சலங்கை ஒலி படம் பார்த்தபின் பட இறுதியில் ஒரு பரிதாபம் வருமல்லவா?, சிந்து பைரவி படத்தில் கர்நாடக சங்கீதம் வித்த்வான் ஒரு கோப்பை பிராண்டிக்காக தகுதியிழந்த பரிதாபம் வருமல்லவா?

அந்த பரிதாபத்தின் வாழ்க்கை பிம்பம்தான் மு.க முத்து.

நேற்று முக முத்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும்பொழுது எது எல்லாமோ நினைவுக்கு வந்தது

கலைஞர் 10 தலைமுறைக்கு பிள்ளைகளுக்கு சேர்த்தார், அதை சேர்த்தார் என சொல்பவர்கள் எல்லாம் முக முத்து அவ்வளவு நல்ல நிலையில் இல்லை என்பதை கவனமாக மறைப்பார்கள் அல்லது மறப்பார்கள்

முதல் மகன் கலைஞருக்கு அவர்தான், மனைவி பத்மாவதி மறைந்த நிலையில் சினிமாவில் தன்னை நிரூபிக்க முயன்று கலைஞர் போராடிய காலங்கள் அவை

இதனால் தன் பாசமிக்க மகனுடன் கூட அவரால் நேரம் செலவழிக்கமுடியாமல் என்னவெல்லாமோ நடந்தது

எல்லோரும் கலைஞர் பெற்றதை பார்க்கின்றீர்கள், அவர் இழந்த ஏராள விஷயம் உண்டு

அவற்றை எல்லாம் பார்த்தால் இன்னும் அவர்மேல் மரியாதை பெருகும், கண்ணீர் வரும்

கருணாநிதியின் சட்டையில் இருக்கும் பேனாவை எடுத்து எழுதுமளவுக்கு பழக்கம் இருந்தது -சீமான்

Image may contain: 1 person, standing and outdoorமிஸ்டர் வீரமணி

இந்த பாலை ஏழை குழந்தைக்கு கொடுத்தால் என்ன என்ற பகுத்தறிவு கேள்வியினை வைரமுத்துவிடம் கேட்டால் என்ன?

ஆலய பாலாபிஷேகம் என்றால் மட்டும்தான் பகுதறிவு கேள்வி வருமா?


 · Image may contain: 1 person
தலைவியின் சோகத்தில் பங்குபெறும் விதமாக சங்க நடவடிக்கைகள் சில நாட்களுக்கு நிறுத்தி வைக்கபட்டிருக்கின்றன என்பதை தெரிவித்து கொள்கின்றோம்…

 

 


பன்னீர் செல்வமும் 3 முறை முதல்வர், அதனால் அவருக்கும் அங்கே இடம் கிடைக்குமாண்ணே?

ம்ம்ம் திகார்ல இடம் கிடைக்கும்.


கருணாநிதியின் சட்டையில் இருக்கும் பேனாவை எடுத்து எழுதுமளவுக்கு பழக்கம் இருந்தது -சீமான்

யார் உயிரோடு இல்லையோ அவர்கள் தன்னிடம் அதை சொன்னார்கள், இதை சொன்னார்கள் என கதைவிடுவதில் அங்கிள் சைமனுக்கு நிகர் அவரே

கலைஞரின் சட்டைபையில் இருந்த பேனாவினை அவருக்கு தெரியாமல் எடுப்பது பிக்பாக்கெட்

அதானே, அங்கிளுக்கு அடுத்தவன் பையில் இருப்பதை ரகசியமாக உருவது கை வந்த கலை அல்லவா?

ஆனாலும் எங்காவது ஜெயலலிதா தட்டில் இருந்த ஜிலேபியினை எடுத்து சாப்பிடும் அளவுக்கு பழக்கம் இருந்தது என சொல்வாரா என்றால் இல்லை? சொன்னால் பிய்த்துவிடுவார்கள்.


சிங்கப்பூர் : 02

சிங்கப்பூர் : 02

Image may contain: one or more people, skyscraper, sky, cloud, shoes and outdoor

1965ல் இருந்து தீவிரமாக உழைக்க ஆரம்பித்தார் லீ குவான் யூ

சுத்தம் அவர்களுக்கு பிரிட்டிசார் சொல்லிகொடுத்தது, அமைதியான வாழ்க்கை முறை அவர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று.

எப்படி அந்த நாட்டு மக்கள் அப்படி இருந்தார்கள் என்றால், வெகு எளிதான உண்மை. இந்தியாவிலிருந்தோ அல்லது சீனாவிலிருந்தோ சென்று, உழைக்க மட்டுமே சென்ற கூட்டம் அது, உழைக்க வேண்டும் எஜமான் பிரிட்டிசார் சொன்னபடி உழைக்கவேண்டும், பிள்ளைகள் படிக்கவேண்டும், அக்கம் பக்கம் அமைதியாக வாழவேண்டும், நாடு சுத்தமாக இருக்கவேண்டும்.

உழைத்தால்தான் வாழ்முடியும் என நம்பும் மக்களின் சந்ததி அது. உழைப்பை தவிர ஏதும் தெரிவதில்லை.

அதனால்தான் இன்றுவரை அந்நாடுகளில் மிக சொற்பமான நிகழ்வுகளை தவிர ஒரு கலவரங்களையும் கேள்விபட்டிருக்க முடியாது.,

நமது கலாச்சாரத்தில் ஒன்றான ஊர்வலம்,பேரணி டீக்கடை அரசியல், விளையாட்டில் தோற்றால் கூட மறியல்,போராட்டம், பேருந்தை கொளுத்துதல் என ஜனநாயக சம்பிரதாயங்கள் எல்லாம் அங்கு இல்லை.

அமைதியான, ஆனால் உழைக்க தயாரான கூட்டம் அது, அவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டி கிடைத்துவிட்டால் அந்நாடு எப்படி ஆகும்.

சிங்கப்பூர் அப்படிபட்ட மக்களை கொண்ட நாடு, நல்லதலைவர் லீ அப்படித்தான் அமையபெற்றார்.

ஒரு வளமும் இல்லா நாடு, யாரும் நமக்காக கைகட்டமாட்டார்கள். ஒரே வழி அந்நிய முதலீடுகளை ஈர்ப்பது, அதை செய்ய அந்நாடுகளின் முழுநம்பிக்கையை பெறுவது? நல்ல அரசாங்கமும் பாதுகாப்பான சூழலும் இல்லாமல், யார் முதலீடு செய்ய வருவர்?

இன்று ஆப்கானுக்கும் அல்லது ஈராக்கில் தொழில்தொடங்க யாராவது தயாரா? அவர்களை விடுங்கள் இந்தியாவிலே குறிப்பாக தமிழகத்திலே தொழில் தொடங்க பலவாறு உலகம் யோசிக்கின்றது

நல்ல அமைதியும், தோற்றமுமே ஒரு நாட்டின் முதலீட்டுக்கு அடிப்படை, நல்ல பெயரும் பாதுகாப்பும் முக்கியம். ஒரு அந்நிய முதலீட்டாளர் சென்னைக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்து (ஆம் அதில் பயணித்தால் தெரியும்) வந்து சுற்றிபார்ப்பதை விடுங்கள், ஏர்போர்ட்டில் இறங்கும் பொழுதே கூரை இடிந்து விழுவதையும் அதனை யாரும் பொருட்படுத்தாமல் ஒரு ஊழியர் சுவற்றில்100ம் முறை என கோடு போடுவதயும் கண்டால்?? அப்படியே ஓடிவிடமாட்டாரா?

அப்படியே தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களையும், போஸ்டர் பேனர்களையும் வெற்று ஆர்ப்பாட்ட சவுடால்களையும் கண்டால் ஓடிவிடமாட்டாரா

விமான நிலையமும் , நகர அமைதியும் அவ்வளவு முக்கியம்

லீ அதனைத்தான் முதலில் செய்தார். விமானத்தையும், விமான நிலையத்தையும், சிங்கப்பூர் துறைமுகத்தையும் ஒரு தரத்திற்கு உயர்த்தினார்.

கடந்த 50 ஆண்டுகளாக ஐரோப்பிய விமானதுறை தரத்திற்கு சவால்விடும் நிறுவணம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ். மிக சிறந்த நிலையங்களில் ஒன்று சாங்கி நிலையம்.

வரவேற்பிலே அசத்திவிடும் சாமார்த்தியம் கொண்டவை அவை.

குறைவான வரி, தொல்லைகள் இல்லாமல் தொழில் செய்யும் உரிமை, எல்லாவற்றிற்கும் மேல் உழைக்க மக்கள், முழு பாதுகாப்பிற்கு அரசு உத்திரவாதம், மத,இன,யூனியன் என எந்த தொந்தரவு இல்லை.

லீ உலக முதலீட்டாளருக்கு சொன்னது இதுதான், யாரும் வாருங்கள் தொழில் செய்யங்கள், எமது மக்களுக்கு வேலைகொடுங்கள். நீங்களும் வாழுங்கள், நாங்களும் வாழ்கின்றோம், என மன்றாடி நின்றார்.

அடுத்த கட்டம், வெறும் உற்பத்திமட்டுமல்ல. உலகின் எல்லா நாட்டுபொருளும் கிடைக்கும் பெரும் சந்தையாக சிங்கப்பூரை மாற்றினார். அதனால்தான் இன்று உலகின் எல்லா முண்ணனி பொருள்களின் சந்தையாக சிங்கப்பூர் உயர நிற்கின்றது.

அது அவருக்கு கை கொடுத்தது, தொழில்கள் வளர்ந்தன. கொஞ்சம் நிமிர்ந்த லீ கிழக்கின் முக்கிய பங்குசந்தைகளில் ஒன்றாக சிங்கப்பூரை மாற்றினார்.

பணம் இருந்தாலும் ராணுவம்,அணுகுண்டு என உலகை பகைத்துகொள்ளவே இல்லை. ஒரு ராணுவத்தை திரட்டி எம்மை அவமதித்த மலேசியரை என்ன செய்கிறேன் பார் என கிளம்பவுமில்லை.

நம்மைபோல வரிபணத்தில் 80% அண்டைநாடுகளின் ராணுவ அச்சுறுத்தலுக்கு செலவழிக்கும் தேவையும் அவர்களுக்கு இல்லை. அமைதி, உழைப்பு,வளர்ச்சி

1970களில் அதன் வளர்ச்சி தெரிய ஆரம்பித்தது, உலகம் கவனிக்க ஆரம்பித்தது, “உலகம் சுற்றும் வாலிபனுக்காக” எம்.ஜி.ஆர் சென்று லதா,மஞ்சுளாவோடு ஆடிபாடும் பொழுது நாமெல்லாம் அழகான சிங்கப்பூர் என்றோம்.

1980களில் வெளிநாட்டு படப்பிடிப்பு என்றால் சிங்கப்பூர் முக்கிய இடம் பிடித்தது,

இப்படியாக நாமெல்லாம் திரைப்படத்தில் சிங்கப்பூரை கண்டு மகிழ, லீ என்ன செய்துகொண்டிருந்தார்.

ஆச்சரியம்தான் ஆனால் செய்தார், அப்பொழுதே நாடு கணிணியமாகி கொண்டிருந்தது. அதாவது உலகவோட்டத்திற்கு ஒரு வினாடி கூட தாமதிக்காமல் சிங்கப்பூரை முண்ணனியில் வைத்துகொண்டே இருந்தார்.

பாரீஸ்டர் படித்தவர் என்பதால், ஒரு வக்கீல் எப்படி எல்லாம் மக்களை ஜமாய்க்கமுடியும் என்பதனை உணர்ந்தவர். சட்டதிட்டம் எப்படி மக்களை கோர்டுக்கு அலையவிடகூடாது என்பதை அற்புதமான சட்டங்களாக உருவாக்கினார்.

அதாவது மக்கள் வீடு வாங்குவது விற்பது எல்லாம் அரசின் ஒரு இலாகா. தனிநபர் சொத்து வாங்குவது விற்பது எல்லாம் அங்கீகரிட்டபட்ட சட்ட இலாகா அதிகாரி முன் மிக முறையாக நடைபெறுவதால் வீண் வழக்குகள் குறைவு

வாய்க்கால் தகறாறு, முடுக்கு தகறாறு, பாதை இல்லா சண்டைகள் எல்லாம் வாய்பே இல்லாத நாடு அது.

சாலைகளில் கார்கள் பெருக பெருக, சில கட்டுபாடுகளை கொண்டுவந்தார். காரின் விலையை, சாலைவரியை உயர்த்தி மறைமுகமாக அவர்களை பொது போக்குவரத்திற்கு கொண்டுவருவது.

அப்படியே காரில் சென்றுதான் தீருவேன் என அடம்பிடித்தால், பெரும் தொகை வசூலித்து இலகுரயில் போன்ற அமைப்புக்களை அற்புதமாக அமைப்பது.

இன்று பலநாடுகளில் மின்காந்த தானியங்கி ரயில்சேவைகள் இருந்தாலும், அவர்களின் தரம் மிக உயர்வானது.

மக்கள் உழைக்கவேண்டும், அதன் வாய்ப்புக்களை அரசாங்கம் ஏற்படுத்தரவேண்டும், எல்லா வசதிகளும் எல்லா மக்களுக்கும் கிடைக்கவேண்டும், இதுதான் லீயின் தத்துவம்.

இன,மத ரீதியான அமைப்புக்களையும்,பேரணிகளையும் தடை செய்தார். சிங்கப்பூரின் வளர்ச்சியில் தமிழர்கள் செய்த தியாகத்தை நினைவு கூர்ந்து அதனை ஆட்சிமொழிகளில் ஒன்றாகவும் அங்கிகரீத்தார்.

அதாவது நல்ல அரசாங்கம் எதனை செய்யவேண்டுமோ அதனை செய்தார், எதனை செய்யகூடாதோ அதனை அனுமதிக்ககூட இல்லை.

அதனால்தான் கொழும்பு,திரிகோணமலை அளவிற்கு பிரமாதமில்லாத சிங்கப்பூர் துறைமுகம் கப்பல்களால் நிரம்பி வழிகிறது, அதன்மூலம் வருமானம் கொட்டி முழக்குகின்றது.

இது சிங்கள பவுத்த பூமி என மார்தட்டும் இலங்கை இன,மத கொள்கையால் சீரழிந்து கையேந்திகொண்டு அலைகின்றது. அதேபோல‌உலகிற்கே சோறுபோடும் வளமுள்ள மியான்மார், உலகின் மோசமான நாடுகளில் ஒன்றாயிற்று.

காரணம் நல்ல அரசு இல்லை. மக்களின் முன்னேற்றத்தை விட, வாழ்க்கையை விட மதவெறி முக்கியமென்றால் அப்படித்தான் ஆகும். 3 வற்றா நதிகள் பாயும் பாகிஸ்தானும் அப்படி ஆயிற்று.

அருமை பாரதத்தை அப்படி ஆக்குவதில் சிலருக்கு அலாதி பிரியம்.

ஆனால் மக்களை லீ வாழவைத்தார், வாழ மட்டும் அல்ல, உலகின் கொடுத்துவைத்த மக்கள் என பெயர் பெறவும் வைத்தார், இன்று எத்தனைநாட்டு மக்களுக்கு அவர்கள் வேலைகொடுக்கின்றனர். வேலையை விடுங்கள், இதுதான் சொர்க்கம் என சொத்துபத்தோடு வந்து செட்டில் ஆன ஐரோப்பியர் ஏராளம்.

இப்படியாக மக்களை நேசித்து, அவர்களின் அபிமானத்திற்குரிய தலைவருக்கு ஏகபட்ட வசைகளும் உண்டு. சர்வாதிகாரி, உரிமை மறுப்பவர், எதிர்கட்சிகளை மதிக்க தெரியாதவர் என எண்ணற்ற குற்றசாட்டு உண்டு.

அதற்கெல்லாம் லீ சொன்னபதில் ஒன்றே ஒன்றுதான், ” நாம் உலகின் போட்டியில் ஓடிகொண்டிருப்பவர்கள், நிதானமாக அமர்ந்து விவாதிப்பதில் என்ன அர்த்தம் இருக்கின்றது, இன்னும் ஓடவேண்டும், வெற்றிபெற்றபின் அதைபற்றி பேசலாம்”

சந்தேகமே இல்லாமல் அவர் வெற்றிபெற்றார், தேசமே வெற்றிபெற்றது. இன்னும் 100 ஆண்டுகளுக்கு அசைக்கமுடியாத சிங்கப்பூரை அவர் நிர்மானித்துவிட்டார்.

இனி கேள்வி கேட்கவேண்டிய நேரம்தான், ஆனால் எதனை கேட்கமுடியும்?, எது தவறேன்று சொல்லமுடியும்? எது நாட்டிற்கு தோல்வியில் முடிந்தது? எதனை அவர் தவறாக செய்தார்?

கச்சா எண்ணெயில் குளிக்கும் நாடுகளின் மக்களை விட ஒன்றும் இல்லா சிங்கப்பூர் மக்கள் வசதியாய் வாழ்கின்றனர்.

எந்த ஐரோப்பிய நாட்டிற்கும் குறையாத வசதியுடன் ஜம்மென்று ஒளிர்கிறது சிங்கபூர்.

இன்று சிங்கப்பூர் தன் தேசிய நாளை உற்சாகமாக கொண்டடுகின்றது, வெறும் மீணவ தீவான அந்த சிங்கப்பூர் வெள்ளையனின் அஸ்திவாரத்தாலும் லீ குவான் பின்னால் திரண்ட மக்களாலும் இன்று உலகில் முக்கிய நாடுகளில் ஒன்றாய் இருக்கின்றது சிங்கப்பூர்.

பலஇன மக்கள் வாழும் நாட்டு அரசு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு சிங்கப்பூட் அரிச்சுவடி, இந்தியா போன்ற நாடுகளுக்கு அவரை படிக்கவேண்டியது அவசியதேவை.

ஆனால் நமது அரசியல்வாதிகள் நிச்சயம் படிக்கபோவது இல்லை.

சிங்கப்பூரை வளர்த்த லீக்கு அவருக்கு அங்கு சிலையோ, நினைவிடமோ, பல்லாயிரம் கோடியில் மணிமண்டபம் எல்லாம் இல்லை, காரணம் லீ அப்படி சொன்னார், இதெல்லாம் வேண்டாம், நான் என் கடமையினை செய்தேன் அவ்வளவுதான்

நல்ல தலைவிதி உள்ள நாட்டிற்கு நல்ல தலைவர் வந்தார், நல்ல மக்களும் ஒத்துழைத்தனர் நாடு வாழ்கின்றது

அருமை இந்தியாவிற்கு அப்படி ஒன்றுமே அமையவில்லை.

சிங்கப்பூர் மக்களுக்கு தேசிய தின வாழ்த்துக்கள்

(சிங்கப்பூரின் லீ போல இங்கே மோடி வந்திருக்கின்றார், இந்தியா சிங்கப்பூராக மாறும் என சிலர் வருவார்கள், அவர்களை எல்லாம் கடலிலே தூக்கி போட வேண்டும்)

சிங்கப்பூர் : 01

சிங்கப்பூர் : 01

Image may contain: one or more people, people walking and outdoor

இன்று சிங்கப்பூர் தனிநாடாக ஆன நாள் என அந்நாடு கொண்டாடிகொண்டிருக்கின்றது, நாமும் வாழ்த்துவோம்

அது மலேயநாட்டின் தென்கரை தீவு, புரியும்படி சொன்னால் ராமேஸ்வரம் கன்னியாகுமரிக்கு அடுத்து இருந்தால் எப்படி இருக்கும்?, அதே தான். அதனைவிட கொஞ்சம் பெரிய தீவு அவ்வளவுதான்.

சிங்கப்பூர் தீவுதான், ஆனால் அற்புதமான துறைமுகம் இயற்கையாய் அமைந்திருந்தது. அதன் அருமையையை உணர்ந்த பிரிட்டிசார் துரிதமாய் வளர்க்கஆரம்பித்தனர்.

இயற்கையாக கிடைக்கும் வாய்ப்புக்களை வசதியாக முன்னேற்றுவதில் பிரிட்டிசாரை அடிக்கமுடியாது, அவர்களின் தொலைநோக்கு பார்வை அப்படி, இந்தியாவின் பம்பாய் தீவினை அப்படித்தான் உருவாக்கினார்கள், இன்று இந்தியாவின் நம்பர் 1 பணம் கொழிக்கும் இடம் அது.

மலேயாவில் மழை உண்டு,மலையும் உண்டு. அரிசி விளையாது. தேயிலை விளைவிக்க பனிவேண்டும், அது கிடையாது. பின்னர் என்னதான் செய்ய? ரப்பர் அவர்களுக்கு கைகொடுத்தது.

ரப்பர் எஸ்டேட் என்றால் அதிகாலையில் சென்று பாலெடுக்கவேண்டும், அந்நாளைய மலேயமக்கள் இயற்கைவாழ்வு வாழ்ந்தவர்கள், சூரியன் வந்து சுட்டால்தான் பணிக்கு வருவார்கள், இன்னொன்று மக்கள்தொகையும் குறைவு.

தமிழக மக்களோ ஏக சிக்கலில் இருந்தார்கள், நாயக்க மன்னர் வீழ்ச்சி, ஜாதிகொடுமை, வறட்சி என எங்காவது ஓடவேண்டிய நிலை (இன்றும் அப்படித்தான் என்பது வேறுகதை)அப்படி தமிழர் கூட்டம் ரப்பர் காடுவேலைக்கும் வந்து குடியேறிற்று.

அடுத்தவளமாக தாதுமணல் மலேயாவில் உண்டு, சுரங்கத்தில் வேலை செய்ய பணியாளர் வேண்டும். ஏற்கனவே ஆப்ரிக்க அடிமைகளை வெஸ்ட் இன்டீஸ்,அமெரிக்கா என கொண்டுபோய் விற்றாகிவிட்டது, இனி ஆப்ரிக்காவில் யானைதான் உண்டு.

வேறு ஆப்ரிக்க கண்டமும் இல்லை.

அவர்களை வேறு அமெரிக்காவில் மனிதர்களாக லிங்கன் அறிவித்துவிட்டார், இனி ஆப்ரிக்க அடிமை கிடைக்கமாட்டான்.

அந்த சூழ்நிலையில் சீன அரசு உள்நாட்டு குழப்பத்தில் இருந்தது, அபினிபோர் காலங்கள். உங்கள் சீன அரசனுக்கு அடிமையாய் இருப்பதை விட மலேய வந்து தாதுமணல் சுரங்கத்தை பிரிட்டிஷ் குடிமக்களாய் சுதந்திரமாய் தோண்டுங்கள் என அறிவித்தது பிரிட்டன்.

பெரும் கூட்டம் மலேயாவிற்குள் வந்தது, அதில் நான்காவது தலைமுறையில் சிங்கபூரில் பிறந்தவர்தான் லீ குவான் யூ.

மலேயாவின் ரப்பரும் தாதுமணலும் ஏற்றுமதி செய்யும் முக்கியதுறைமுகமாக சிங்கப்பூரினை மாற்றினார்கள் வெள்ளையர்கள். வேகமாக வளர ஆரம்பித்தது சிங்கப்பூர்,

இப்படியாக வளர்ந்துகொண்டிருந்த சிங்கப்பூரின் தலைவிதி இரண்டாம் உலகபோரில் மாறியது, அதாவது ஜப்பான் மொத்த மலேயாவையும் பிடித்து ஆட்டம் போட்டது, சிங்கப்பூர் துறைமுகம் எவ்வளவு கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்தது என அப்பொழுதுதான் உலகிற்கு விளங்கிற்று.

ஹிட்லரின் விக்கெட்டை வீழ்த்தியபின்னரும் அடங்காத ஜப்பான், அணுகுண்டால் தோற்கடிக்கபட்டபின் கண்ணீரை துடைத்துகொண்டு சிங்கப்பூரை விட்டு வெளியேறிற்று.

மறுபடியும் சிங்கப்பூரை பிடித்த பிரிட்டன் அதனை தந்திரமாக தன்னாட்சி பகுதி என அறிவித்து வைத்துகொண்டது, அதாவது 1957ல் மலேசியாவிற்கு சுதந்திரம் வழங்கபட்டாலும், சிங்கப்பூர் பிரிட்டனின் காலணிநாடு.

அப்பொழுது சிங்கப்பூர் மக்களுக்களின் நலனுக்காக ஒரு கட்சி இருந்தது, அதன் தலைவராக அப்பொழுது லண்டனில் பாரிஸ்டர் படிப்பு முடித்திருந்த அவர் தேர்ந்தெடுக்கபட்டார், மிகவும் சுறுசுறுப்பனவர், கறாரானாவர் என்றெல்லாம் அறியபட்டிருந்தாலும் அவரை மிகவும் கவனிக்கவைத்தது அவரின் இனநல்லிணக்கமும், மலேயாவுடன் இணைந்திருக்க அவர்காட்டிய அக்கறையும்.

1960களில் பிரிட்டன் சாம்ராஜ்யம் அஸ்தமனமாகி விடியாத இரவினை நெருங்கியது, சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் சுக்குநூறனானது. உலகவல்லரசு போட்டியில் அமெரிக்காவும் ரஷ்யாவும் பிரிட்டனை காலில்போட்டு மிதித்தன,

அவ்வளவு ஏன்? சூயஸ் கால்வாய் பிரச்சினையில் அரபுகளின் தலைவர் கர்ணல்நாசரே பிரிட்டனை பார்த்து நமது ஊர் ஸ்டைலில் சொன்னார் “ஒழுங்கா சோலிய பாரு”

ஒன்றும் செய்யமுடியாமல் வாயில் துண்டுவைத்து அழுத‌ பிரிட்டன், உலக அரசியலில் இருந்து ஒதுங்கதொடங்கி, சிங்கபூருக்கும் விடுதலை வழங்கிற்று.

மொத்த சிங்கபூரின் நம்பிக்கையாக லீ குவான் யூவினை மக்கள் நம்பதொடங்கினர். மலேயாவோடு இணைவோம் என்ற கோஷமே அவருக்கு வெற்றிகொடுத்தது.

அவர் உலகினை அறிந்தவர், மத‌ துவேஷத்தால் இந்திய பிரிவினை எல்லாம் கண்டவர், பிரிவினை மக்களை முன்னேற்றாது என்பது அவரின் நம்பிக்கை. ஓடிசென்று தாய்நாடான மலேயாவோடு சிங்கப்பூரை இணைத்தார்.

ஆனால் நிலமை சுமூகமாக இருந்தாலும் சில சிக்கல்கள் எழுந்தன, மலேயா பின் மலேசியா என மாறி இருந்தது, இஸ்லாமிய பெருமக்கள் வாழும் நாடு, அது பிரச்சினை அல்ல. அவர்கள் மிக மிக மென்மையானவர்கள், வன்முறையில் நம்பிக்கை அற்றவர்கள், புன்னகை முகத்திற்கும் களங்கமில்லா மனதிற்கும் சொந்தக்காரர்கள்.

மலேசிய மக்களை போல அமைதியானவர்களை பார்க்கமுடியாது, ஆனால் மத நெறியாளர்கள். வெறியாளர்கள் அல்லவே அல்ல.

ஒரு மதபண்டிகையில் சிங்கப்பூரில் கலவரம் வெடிக்க, அது பலவதந்திகளுடன் இன,மத கலவரமாக மாறிற்று.

மலேசிய மேல்மட்டம் கொஞ்சம் வருத்தமுற்றது, சிங்கப்பூரை மறுபடியும் தனிநாடாக விட்டுவிடலாம் என முடிவெடுத்தார்கள், அதனை அறிவித்தும் விட்டார்கள்.

உலக சரித்திரத்திலே ஒரேமுறையாக, ஒரு நாட்டிற்கு சுதந்திரம் கதற கதற திணிக்கப்ட்ட விசித்திரம் அன்றுதான் நடந்தது. இதுதான் மலேசிய மனநிலை,

பிடிக்கவில்லை சரி இனி பிரிந்துவாழலாம். வீண் பிடிவாதம்,போராட்டம்,மான பிரச்சினை, கவுரவம்,வந்தேறி பிரச்சினை,ஆண்டவம்சம் போன்ற கோஷங்கள் இருவருக்கும் நல்லதல்ல. மக்கள் அமைதியாக வாழவேண்டும்.

மலேசியா சிங்கப்பூரை வெளியே தள்ளிற்று (ஆனாலும் இனதுவேஷமில்லை, மலேசிய சீனர் மீது எந்த நெருக்கடியுமில்லை). நொடிந்துபோனார் லீ, கிட்டதட்ட காந்தி பாகிஸ்தான் பிரிவினையில் உடைந்தது போல. கவலையால் படுக்கையில் வீழ்ந்தார் லீ.

“நாங்கள் போகத்தான் வேண்டுமா?, கொஞ்சம் யோசிக்ககூடாதா?” என அவரின் கெஞ்சல்கள் எடுபடவில்லை,

அவர் என்ன? மொத்த சிங்கப்பூரும் அப்படித்தான் சொல்லிகொண்டிருந்தது, “எங்களை விரட்டாதீர்கள்…நாங்களும் உங்கள் சகோதரர்களே..”

மொத்த சிங்கப்பூரும் கதிகலங்கிய நேரம், அண்டைநாடு என எதுவுமில்லை, கொஞ்சம் தள்ளி இந்தோணேசியா. அதுவும் சிக்கலான நாடு. செயலற்ற நிலையில் நின்றது மக்கள் கூட்டம், கிட்டதட்ட நிராதரவான நிலை.

காரணம் மின்சாரமட்டுமல்ல, குடிக்கும் நீருக்கும் மலேசியாவை நம்பித்தான் இருந்தார்கள்.

படுக்கையில் இருந்து மீண்டார் லீ, சிங்கப்பூர் தனிநாடு என அறிவித்தார். உடனே சில அச்சுறுத்தல் வந்தது. இந்தோணேஷியா அல்லது சீனா அதனை விழுங்கும் அபாயம் இருந்தது.

அதற்காக ஐ.நாவில் உறுப்புநாடானார், கொஞ்சம் சுதாரித்தார்.

மக்களுக்கு சொன்னார், ஆனந்தம் படத்தில் மம்முட்டி சொல்லும் வசனம் அதுதான்

“யாரும் அழவேண்டாம், எல்லாரும் இருக்க ஒரு வீடு, பிழைக்க ஒருவேலை, உலகம் மதிக்குமளவு காசுபணம், இதுக்கு அப்புறம்தான் மனித உரிமை, மத உரிமை, பத்திரிகை உரிமை, மண்ணாங்கட்டி எல்லாம், அதுவரை உழைப்பு மட்டுமே நமது இலக்கு”

சொல்லிவிட்டு செயலில் இறங்கினார், போரினால் சீரழிந்த ஜெர்மனும், ஜப்பானும் வாழும்பொழுது நாம் ஏன் வாழமுடியாது, என உலகை எல்லாம் கணக்கிட்டார், ஒரு உண்மை புலபட்டது.

ஜப்பானோ, ஜெர்மனோ,இஸ்ரேலோ ஒரே இனமக்களின் நாடு, ஆனால் சிங்கப்பூர் பல இனமக்களின் நாடு. அற்புதமான முடிவெடுத்தார், அது இன சமத்துவமும், மத கட்டுபாடும் கண்டிப்பாக இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமில்லை.

அதனை அறிவித்துவிட்டு சொன்னார், “அந்த நாட்டைபார்த்தீர்களா பலஇனமக்கள் எப்படி ஒற்றுமையாக வாழ்ந்து நாட்டை சொர்க்கமாக வைத்திருக்கின்றார்கள், அதுவே இனி நமது கனவுநாடு”.

அது அமெரிக்காவோ கனடாவோ அல்ல, அது இலங்கை (இந்தியாவின் நட்புநாடான அதே இலங்கை).

அன்றைய இலங்கை அப்படித்தான் இருந்தது, அப்படியே தொடர்ந்திருந்தால் இன்று ஹாங்காங் அளவிற்லிகு வளர்ந்திருப்பர், புத்தமத வெறியும், இனவெறியும் நாட்டை நாசமாக்கிற்று.

இலங்கையில் மேற்கண்ட வெறிகள் அதிகமாகி நாசமாய் போக, அந்த புகையினை கூட உள்ளே விடாமல் விடாமல் அடக்கி வைத்த லீயின் சிங்கப்பூர் கொஞ்சம் கொஞ்சமாக எழ ஆரம்பித்தது.

ஆனால் லீ கண்டது பெரும் கனவு, அதாவது புலிக்கு கழுகின் சிறகுகளை பொருந்தி பறக்கவைக்கும் கனவு.

அப்படித்தான் சிங்கப்பூர் எனும் புலி பாயவில்லை, பறக்க ஆரம்பித்தது.

தொடரும்..

கில்லாடி கிளைவ் – 1 பின் குறிப்பு

கில்லாடி கிளைவ் – 1  பின் குறிப்பு 

Image may contain: outdoor

இந்த கிளைவ் பற்றி சொல்லும்பொழுது ஒருவரி மறந்தாயிற்று

முதலில் சென்னை பக்கம் வந்த ஐரோப்பியர் போர்த்துகீசியர், பரங்கிமலை தாமஸ் ஆலயம், கடற்கரை செயின்ட் தாமஸ் சமாதி என வந்த கதைகளுக்கு எல்லாம் அவர்கள்தான் முன்னோடி

நிச்சயம் இயேசுவின் சீடர் தாமஸ் இந்தியா வரவில்லை. புதிய ஏற்பாட்டில் இயேசு விண்ணகம் சென்றபின் எல்லா சீடர்களுக்கும் கிழக்கு பக்கம் அதாவது அரேபியா அப்படியே இந்தியா பக்கமே நற்செய்தி அறிவிக்க ஆசை இருந்தது

இந்த சவுல் என்றொரு பாத்திரம் அதில் உண்டு, அவர் யூத தீவிரவாதி , கிறிஸ்தவர்கள் உருவாகும்பொழுது அவர்களை அழிக்க நினைத்தவர். மதவெறியின் உச்சம் அவரிடம் எல்லா யூதனையும் போல இருந்தது

பின் அவரை இன்றைய சிரியாவின் டமாஸ்கஸ் நகர் அருகே இயேசு ஆட்கொண்டு கிறிஸ்தவராகி இயேசு சீடரோடு சேர்ந்தார்

அவரை பரிசுத்த ஆவி கிழக்கே போகாத, மேற்கே போ என ஐரோப்பா நோக்கி அனுப்பியது, அவ்வாறே அவரின் சீடர்களும் சென்றனர் ஐரோப்பா கிறிஸ்தவமயமானது

அரேபியாவிற்கு இவர்கள் வேண்டாம் பின்னாளில் நபிபெருமானும், இந்தியாவிற்கு இந்து மதமும் போதும் என்பது அந்த தெய்வத்திற்கு தெரிந்திருக்கலாம்

ஆக எல்லா சீடர்களும் ஐரோப்பா சென்றபொழுது தாமஸ் மட்டும் சென்னை வந்து செத்தார் என்பதெல்லாம் ஏற்றுகொள்ள முடியாதவை

ஆனால் தாமஸின் சீடர்கள் வந்திருக்கலாம், அவர்கள் சென்னையில் கொல்லபட்டிருக்கலாம் என்ற தியரியினை மறுக்கமுடியாது

இப்பொழுது பிரச்சினை புனித தாமஸ் அல்ல, போர்த்துகீசியர்

முதலில் சென்னை பக்கம் வந்த போர்த்துகீசியர் வியாபார நிலையங்களை நடத்தினர், முதலில் கடற்கரை அவர்கள் கட்டுபாட்டில்தான் இருந்தது

அப்பொழுது அவர்களின் மாலுமி மெட்ருஸ் என்பவர் இறந்தார், அவரை அந்த கடற்கரையில்தான் புதைத்தார்கள், அந்த இடத்திற்கு மெட்ருஸ் என்று அவர் பெயரையே இட்டார்கள்

பின்னாளில் பிரிட்டன், பிரென்ஞ், டச்சுக்காரர் என வர வர அவ்ர்கள் அப்பகுதியில் இருந்து விரட்டபட்டார்கள், இன்று போர்த்துகீசிய அடையாளமாய் எஞ்சி இருப்பது தாமஸ் மவுண்ட் மற்றும் சாந்தோம் ஆலயம்

அந்த மெட்ருஸ் எனும் பெயர் மெட்ராஸாக நிலைத்தது, ஆனால் இப்பொழுது இருப்பது போல் அல்ல சிறு சிறு கிராமம் போன்ற செட்டில்மென்ட்டாக இருந்தது

அதில் போர்த்துகீசிய செட்டில்மென்ட் மெட்ராஸ் எனபட்டது

பின்னாளில் வெள்ளையன் வந்து கோட்டை கட்டும்பொழுது அந்த இடத்திலிருந்து வடக்கே தள்ளி சென்னப்ப நாயக்கரிடம் இடம் வாங்கினர் கோட்டை கட்டினர்

ஆனாலும் அது மெட்ராஸ் என்றே அழைக்கபட்டது, அந்த மெட்ராஸில்தான் நம் கதையின் நாயகன் ராபர்ட் கிளைவ் வந்து இறங்கி இருக்கின்றார்

தொடரும்…

கலைஞருக்கு பாரத ரத்னா கொடுக்கப்பட வேண்டும் : திருமா

கலைஞருக்கு பாரத ரத்னா கொடுக்கப்பட வேண்டும் என திருமா சொன்னதற்கு பலர் பொங்குகின்றார்கள்

கலைஞர் இந்திய இறையாண்மையினை மீறி இலங்கை புலிகளுக்கு உதவியவர், முன்பொரு தனி திராவிட நாடு கேட்டவர், டெல்லி பக்கம் வந்தவர் அல்ல, தேசிய தலைவர் அல்ல , தேசியமொழியினை ஏற்றவர் அல்ல‌ என ஏகபட்ட எதிர்வாதங்கள்

நாம் ஒன்றே ஒன்றுதான் கேட்கின்றோம்

இதே பாரத ரத்னா விருது பெற்ற ராமசந்திரன் யார்?

அவரும் திராவிட நாடு கேட்ட கும்பலில் இருந்தார், இந்தி எதிர்த்தார், ராஜிவ் காந்தியிடமே புலிகள் பற்றி சவால்விட்டு அரசியல் செய்தார்

அவருக்கு கொடுக்கபட்ட பாரத ரத்னா, கலைஞருக்கு ஏன் மறுக்கபடுகின்றது?

அண்ணா என்பவர் பிரிவினை பேசினார் என வைத்துகொண்டால் கூட சாகும் வரை அண்ணா பெயரில் கட்சி நடத்திய ராமசந்திரனுக்கு எப்படி பாரத ரத்னா கொடுத்தார்கள்

கலைஞர் தேசியவாதி அல்ல, ஆனால் தேசிய தலமைகளை நிர்ணயித்தவர்

எத்தனையோ குடியரசு தலைவர்களை நிர்ணயித்தார், எத்தனையோ பிரதமர்கள் குறித்து முடிவெடுத்தார்

தேசிய அரசியலும் அவரும் இணைந்து ஓடினார், மறுக்க முடியாது

ஈழவிவகாரத்தில் அகில இந்திய தலைவர்களை அழைத்து இந்திய தேசியம் ஈழமக்கள் பின்னால் இருகின்றது என்பதைத்தான் காட்ட முயன்றாரே தவிர பிரிவினை விரும்பும் தமிழகம் அல்ல என குறிப்பால் உணர்த்தினார்

பாவி பிரபாகரன் சபாரத்தினத்தை கொல்ல அந்த டெசோ உடைந்தது

மாநில சுயாட்சி பற்றி கலைஞர் சொன்னாரே அன்றி, எங்காவது இந்திய தேசியம் வேண்டாம் என பேசினாரா?

தேசிய நகர்வுகளில் ராமசந்திரன், ஜெயாவினை விட கலைஞர் மிக சிறந்த தந்திரி

சொல்வதாக இருந்தால் இப்படி சொல்லுங்கள்

“ராமசந்திரன் டெல்லி அடிமை அதனால் பாரத ரத்னா உடனே கொடுத்தோம், அதுவும் அம்பேத்கருக்கு முன்பாகவே கொடுத்தோம்

தமிழகத்தில் காங்கிரசை கலைஞர் விரட்டினார், ராமசந்திரனே பின்பு காக்க முயன்றார் அதனால் கொடுத்தோம். அப்படி டெல்லிக்கு விசுவாசமானவர் ராமசந்திரன்

கலைஞர் அப்படி அல்ல, அடிக்க வேண்டிய இடங்களில் டெல்லியினை அடித்தார். நாடு முழுக்க மாநிய சுயாட்சி பற்றி பேசி தலைவர்களை திரட்டினார்

அதனால் எங்களுக்கு பிடிக்காது, கலைஞருக்கு பாரத ரத்னா கிடைக்காது” என பகிரங்கமாக சொல்லுங்கள்

ராமசந்திரனுக்கே கொடுக்கபட்ட பின் அந்த பாரத ரத்னா கலைஞருக்கு கொடுக்கபடாமல் இருப்பதுதான் அவருக்கு மரியாதை

தயவு செய்து அதை கொடுத்து அவர் கவுரவத்தை கெடுத்துவிடாதீர்கள்

அண்ணா போலவே அவர் பாரத ரத்னா வாங்காமலே தூங்கட்டும்

அந்த அடிமைகள் சிறப்பு விருதினை அப்பக்கம் இருக்கும் இருவருமே சுமக்கட்டும்

கில்லாடி கிளைவ் : 01

கில்லாடி கிளைவ்  : 01

Image may contain: sky and outdoor

சாலமோன் அரசன் காலத்திலிருந்தே இந்தியா மேற்கத்தியர்களுக்கு விருப்பமான நாடு. சந்தணம், மிளகு, தந்தம். முத்து இன்னும் பல பொருட்களுக்காக அரேபிய கப்பல்கள் இங்கு காத்து கிடந்தன‌

முதலில் மேற்கிலிருந்து வந்து கிழக்கை இணைத்தவன் அலெக்ஸாண்டர், அதை தொடர்ந்தே வியாபார சாலை வலுவானது, அவன் உருவாக்கிய பரந்த சாம்ராஜ்யம் அதற்கு வழி செய்தது

அக்கால வியாபாரம் இருவழிகளில் நடந்தது முதலாவது அலெக்ஸ்டாண்டர் காலத்திலே, சைனாவில் இருந்து பாக்தாத் அடைந்து துருக்கி வழியே ஐரோப்பா சென்ற பட்டு சாலை, அது சீனாவில் இருந்து பட்டு கொண்டு செல்லவே அமைந்த சாலை ஆதலால் பட்டுசாலை ஆயிற்று.

இப்பாதை வட இந்தியாவிற்கு சாதகமே தவிர தென்னிந்தியாவிற்கு வெகுதொலைவு

Image may contain: 1 person, standingஇதனால் இன்னொரு பாதை கடல் வழி இருந்தது, கேரளாவில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் கப்பல்கள் அரேபியாவின் பாஸ்ரா. ஜெட்டா, ஹைப்பா (இன்றைய இஸ்ரேல்) போன்ற துறைமுகங்களை அடையும் அங்கிருந்து பொருட்கள் எகிப்தின் நிலப்பகுதி வழியாக மேற்கு கடலுக்கு கொண்டு செல்லபட்டு அங்கு இன்னொரு கப்பலில் ஏற்றபட்டு ஐரோப்பா அடையும்

இந்த சூயஸ் கால்வாய் அன்று இல்லாததால் இதுதான் நிலை

இப்படித்தான் உலக‌ வியாபாரம் நடந்தது, இங்கிருந்து மிளமும், வாசனை பொருளும் சந்தணமும், முத்தும் வைரமும் ஏற்றுமதி செய்யபடும் அரேபிய சந்தையில் அதை ஐரோப்பியர் வாங்குவர்

ஐரோப்பாவில் இருந்து குதிரை, துணி வகைகள் இன்னபிற பொருட்கள் வரும், அரேபியாவில் இருந்து இந்திய வியாபாரிகள் வாங்கி வருவார்கள்

அரேபிய குதிரை என்பது இப்படி வந்தது, உண்மையில் அரேபிய குதிரை இல்ல அவை, ஐரோப்பிய வளர்ப்பு.

இப்படி சென்றுகொண்டிருந்த வியாபார உலகில் விதி போப்பாண்டவர் அர்பன் என்பவர் உருவில் வந்தது, ஜெருசலேம் புண்ணிய பூமி அதை மீட்பேன் என படை அனுப்பினார்

இப்பக்கம் இஸ்லாமிய மன்னர்கள் அதை விடமுடியாது என தடுத்தனர், விடுவாரா போப்பாண்டவர்? சிலுவை அடையாளத்துடன் படையினை அனுப்பிகொண்டே இருந்தார்

உண்மையில் அது ஜெருசலேமிற்கான போர் அன்று, அந்த பிண்ணணியில் பட்டுசாலையினையும் சில துறைமுகங்களையும் ஐரோப்பியர் கட்டுபாட்டில் எடுக்கும் முயற்சி

No automatic alt text available.கிட்டதட்ட 7 சிலுவை போர்கள் வெற்றியும் தோல்வியுமாக சென்றுகொண்டிருந்தபொழுது துருக்கிய ஆட்டோமான் சாம்ராஜ்யம் எழும்பியது

இப்பக்கம் செங்கிஸ்கானின் மங்கோலியர், அப்பக்கம் போப்பாண்டவர் படைகள் என மிக துணிச்சலாக வாழ்வா சாவா என எழும்பிய அந்த ஓட்டோமான் சாம்ராஜ்யம் நிலைத்தது

அத்தோடு பட்டுசாலை அடைக்கபட்டது, எகிப்து வரை கைபற்றிய துருக்கியர் வியாபார தடங்களை தமதாக்கினர்

இனி மிளகுக்கும், பட்டுக்கும், குதிரைக்கும் துருக்கியர் வைத்ததே விலை என்றாயிற்று, ஐரோப்பிய வியாபாரம் படுத்தது

இந்நிலையில்தான் கடல்வழியே வேறுவழியில் இந்தியாவினை அடையும் முயற்சியில் ஆளாளுக்கு ஐரோப்பியர் இறங்கினர்

கொலம்பஸ் எங்கோ சென்றுவிட்டு இந்தியா இந்தியா என கத்தினான், பின்னால் சென்றவர்கள் செழிப்பான நாடுதான் ஆனால் அது இந்தியா இல்லை என சொல்லிகொண்டனர்

பின்னர் வாஸ்கோடகாமா மிக சரியான வழியினை கண்டுபிடித்து இந்தியா வந்தான், கேரள கள்ளி கோட்டையினை அடைந்தான்

இந்தியாவிலிருந்து ஆப்ரிக்காவினை சுற்றி அவன் கப்பல்கள் போர்த்துகீசில் செல்வத்தை கொட்டின, மற்றவர்களுக்கும் இந்தியாவுடன் வர்த்தகம் செய்ய ஆசை பெருகிற்று

வாஸ்கோடகாமா கொச்சியில் கொல்லபட்டாலும் போர்துகீசியர் வியாபாரம் தொடர்ந்தது, அப்பொழுதுதான் வடக்கே பாபர் முகலாய சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தான் , இன்று பெரும் சர்ச்சையான பாபர்மசூதி அப்பொழுது கட்டபட்டதே

அது பின்னர் உலக வல்லரசானது

ஆம் அன்று பரப்பளவில் பெரியதாகவும், ஏராளமான மக்கள் தொகை கொண்ட நாடாகவும் , பெரும் செல்வம் கொழிக்கும் மாபெரும் பேரசசாகவும் விளங்கிற்று

இன்று அமெரிக்காவிற்கு இருக்கும் கவுரவம் அன்று மொகலாய பேரரசிற்கு இருந்தது, உலகமெல்லாம் அதோடு தொடர்பு வைக்க துடியாய் துடித்தார்கள்

அந்த பேரரசு ஆப்கன் முதல் தேற்கே கிருஷ்ணா நதிவரை பரவி கம்பீரமாக நின்றது, தமிழக நாயக்க மன்னர்களும் அதற்கு வரி செலுத்தினார்கள்

அந்த மொகலாய இந்தியாவினை அடைய வழிதெரியாத பிரிட்டிசார் ஒரு போர்த்துகீசிய மாலுமிக்கு பிராந்தியோ விஸ்கியோ ஊற்றி வரைபடத்தை கைபற்றினார்கள்

இந்தியாவிற்கு செல்லும் வழி பிரிட்டனுக்கு கிடைத்தது, அப்படியே பிரான்சும் கைபற்றியது

இந்தியாவுடன் வியாபாரம் அதுவும் மொகலாய பேரரசுடன் வியாபாரம் என்ற பெரும் கனவில் கிழக்கிந்திய கம்பெனி லண்டனில் தொடங்கபட்டது

பிரான்ஸ் கிழக்கிந்திய கம்பெனி, டச்சு கிழகிந்திய கம்பெனி என பல ஐரோப்பிய நாடுகளில் கிழக்கிந்திய கம்பெனி முளைத்தது

ஸ்பெயினில் முளைத்த கம்பெனி போர்ச்சுக்கலுடன் மோத போப்பாண்டாவர் பாகம் பிரித்து தென் அமெரிக்கா ஸ்பெயினுக்கு இந்தியா போர்ச்சுகல்லுக்கு என தீர்ப்பு சொன்னார்

ஸ்பெயின் இந்தியாவிற்கு இதனால்தான் வரவில்லை

பிரான்ஸ், டச்சு போல பிரிட்டானியரும் இந்தியா வந்தார்கள். அவர்கள் வந்த காலம் ஜஹங்கீர் ஆண்டுகொண்டிருந்தார்

அவரின் மாளிகையினையும் செல்வ செழிப்பினையும் கண்ட கம்பெனியாருக்கு வாய்மூடவில்லை, செருப்பிலும் முத்துக்கள் பீடா போட்டு துப்பும் பாத்திரமும் தங்கம் அதில் ஒட்ட வைரம் வேறு

இப்படிபட்ட பெரும் செல்வமா.. என வாய்பிளந்த கம்பெனியாருக்கு பம்பாய் பக்கம் வியாபாரம் செய்ய அனுமதி அளித்தார் ஜஹாங்கீர்

அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரத்தை பெருக்கினர் பிரிட்டானியர்

சீனாவுடன், இலங்கையுடன் வியாபாரத்தை பெருக்கும் விதமாக அவர்களுக்கு கிழக்கு கடற்கரையில் ஒரு கோட்டை தேவைபட்டது

அதுவரை குடிகூலி எனும் ஒப்பந்த முறையிலும் எங்கோ கேட்பாரற்று கிடக்கும் இடங்களை வாங்கியும் அவர்கள் தங்கிகொண்டும் வியாபாரம் செய்துகொண்டும் இருந்தனர்

அந்த பொட்டல்காடு ஒன்றும் வியாபார பொருள் கிடைக்கும் இடமல்ல, மாறாக நல்ல துறைமுகம் இருந்தது , அன்று நெருக்கடி இல்லா இடம் என்பதால் வெட்டவெளியில் கோட்டை கட்டி பாதுகாப்பாக இருக்க வசதியானது.

அப்படி சென்னப்ப நாயக்கரிடம் இருந்து 1644ம் ஆண்டு ஒரு இடம் வாங்கி ஜார்ஜ் கோட்டையினை கட்டினர், வியாபாரம் நடக்கும் இடம் என்பதால் அதன் அருகே குடியிருப்புகளும் உருவாகின‌

அந்த கோட்டைதான் இன்று பழனிச்சாமி வலம் வரும் கோட்டை, அந்த நகரம்தான் இயக்குநர் ரஞ்சித் கோஷ்டி அட்டகாசம் செய்யும் எங்க ஊரு மெட்ராஸு, நாங்க தான அட்ரஸு” என மார்தட்டும் வடசென்னை ஏரியா

(அதாவது கோட்டைக்குள் வெள்ளையர் வெளியே கறுப்பர், அதுதான் கறுப்பர் நகரம் என ரஞ்சித் கொடி பிடித்து திரிவது, இந்த கோளாறுதான் ரஜினியினை காலாவில் அப்படி கருப்பில் அலையவிட்டது)

மூல உபாயம் கிழக்கிந்திய கம்பெனி

அன்று அதன் நிலை இப்படித்தான், பிரிட்டானியர் அதற்கு மதராச பட்டினம் என பெயரிட்டான், அந்த கோட்டை சரக்குகளை பாதுகாகும் கோட்டை என்பதால் கணக்காளரும் கொஞ்சம் ராணுவத்தினரும், கூலிபடையும் ஆயுதங்களும் இருந்தனர்

அக்கால இந்தியபயணம் எளிதல்ல 8 மாத கடற்பயணம், அது கூட உறுதி இல்லை, கடல் கொள்ளை, நோய் , காற்றில் திசைமாறிவிட்டால் ஆபத்து என ஏகபட்ட விஷயம்

அதற்கும் மேல் இந்தியாவில் செல்வம் இருந்தாலும் வெயில் அவர்களை மிரட்டியது, அதற்கு பயந்து வசதியான பிரிட்டானியர் முதலில் இந்தியா வரவில்லை

தமிழகத்தில் மாதம் சில லட்சம் சம்பாதிப்பவனை அரபு பாலைவனத்திற்கு போ என்றால் போவானா? அதே நிலைதான் அன்று இந்தியாவிற்கு போ என சொல்லும்பொழுது லண்டனிலும் இருந்தது.

கம்பெனி லண்டனில் இந்தியாவிற்கு ஆளெடுத்தபொழுது வறுமையில் வாடியவர்கள் வந்தார்கள், ரவுடிகள், பொறுக்கிகள் என லண்டன் தெருக்களில் சுற்றிகொண்டிருந்தவர்களை சேர்க்க ஆயத்தமாயிருந்தது

முதலாவது முன்பின் தெரியா ஆபத்தான இடங்களில் வியாபாரம் செய்யும்பொழுது அடாவடியான ஆட்கள் தேவை, இன்னொன்று லண்டன் அமைதியாக இருக்கும்

இப்படி பார்த்து பார்த்து பொறுக்கிகளை கம்பெனி பொறுக்கி கொண்டிருந்தபொழுது இந்தியாவில் பலத்த அரசியல் மாற்றம் ஏற்பட்டது

ஆம் அதுவரை மாபெரும் சாம்ராஜ்யமாக நின்ற மொகலாய பேரரசு அவுரங்கசீப்பின் இறுக்கமான கொள்கைகளில் ஆட்டம் கண்டது, வீர சிவாஜி அவரை நொறுக்கி தள்ளியிருந்தார், அதை தென்னகத்தில் பல பகுதிகள் மொகலாய கையினை விட்டு சென்றன‌

அவுரங்கசீப் அந்த மாபெரும் சாம்ராஜ்யத்தினை அழிவு பாதைக்கு திருப்பியவர் என்பதில் சந்தேகமில்லை, அவர் காலத்திற்கு பின் மொகலாய அரசு பலமிழந்தது

அவுரங்கசீப்பின் பின் வந்த யாரும் சரியில்லா நேரத்தில் ஈரானில் இருந்து வந்தான் நாதிர் ஷா, டெல்லியினை அடித்து துவைத்து காயபோட்டான்

மாபெரும் சாம்ராஜ்யமான மொகலாய சாம்ராஜ்யம் அப்பொழுது அவன் காலடியில் கிடந்தது

வைரங்களில் குஷ்பு என சொல்லபடும் அந்த கோஹீநூர் வைரத்தையும், ஷாஜகானின் புகழ்பெற்ற மயிலாசனத்தையும் எடுத்துகொண்டு ஈரான் திரும்பினான்

மொகலாய கஜானா காலியாயிற்று, குளம் வற்றினால் பறவைகள் பறக்கும், சங்கிலி அவிழ்ந்தால் யானை ஓடும்

ஆட்சி போனால் அரசியல்வாதி கட்சி விட்டு ஓடுவான், இது உலக நியதி

அப்படி மொகலாய சாம்ராஜ்யம் சரிய ஆரம்பித்ததும் அவர்கள் கட்டுபாட்டில் இருந்த அரசுகள் எல்லாம் புது புது நாடுகளாயின‌

பஞ்சாபில் சீக்கியர் உதித்தனர், கிழக்கே ஒரு அரசு எழும்பிற்று , தெற்கே ஐதரபாத், ஆர்காடு சமஸ்தானம் எல்லாம் தனி தனியாக அட்டாகாசம் செய்தன‌

இது கிழக்கிந்திய கம்பெனிக்கு அசவுகரியமானது, கம்பெனிக்கு நிறைய ஆட்கள் தேவைபட்டனர்

அதே நேரம் மொகலாயர் இருந்தவரை கிழகிந்திய கம்பெனி பெரும் லாபம் ஈட்டமுடியவில்லை, மிக கறாறாக கறக்க வேண்டியதை கறந்தது அந்த மொகலாய‌ அரசு

இதனால் லண்டன் பாராளுமன்றம் அவர்களுக்கு சம்பாதித்து கொடுக்கவா கிழக்கிந்திய கம்பெனி இருக்கின்றது? கடையினை சாத்திவிட்டு கிளம்புங்கள் என சொல்லி இருந்தது

அய்யா சாமி, இப்பொழுது மொகலாயர் இல்லை. இந்தியா உடைந்துவிட்டது இனி உங்களுக்கு அள்ளி கொடுக்கின்றோம் என சொல்லி அவசரமாக ஆள் எடுத்தது, கம்பெனிக்கு பலரை எடுக்க உத்தவிட்டது

கிழகிந்திய கம்பெனியின் இன்டர்வியூ இப்படித்தான் இருந்தது

“உன் தகுதி என்ன?”

2 பேரை குத்தியிருக்கின்றேன், ஒரு கடையினை நொறுக்கி இருக்கின்றேன்

அப்படியா நீதான் தாசில்தார்

“உன் தகுதி என்ன?”

4 கொலையில் சிக்கவில்லை 8 கொள்ளை அடித்தேன் வரும்பொழுதுகூட வாசலில் ஒருவனை கீறிவிட்டுத்தான் வந்தேன்

அப்படியா நீ கலெக்டர் சரியா?

இப்படியாக இன்டர்வியூ நடந்த இடத்தில் அந்த தந்தை வந்தார், அவர் பெயர் ரிச்சர்ட் கிளைவ்

உமக்கு வயதாயிற்று கம்பெனியில் வேலை தரமுடியாது என்றார்கள் கம்பெனியார்

அவர் சொன்னார், “அய்யா வேலை எனக்கல்ல என் பையனுக்கு”

என்ன தகுதி அவனுக்கு?

ஒரே அடிதடி, குடி, எங்கு போனாலும் வம்பிழுக்கின்றான். உணவகத்தில் ரொட்டிக்காக 4 பேரை சாத்தி இருக்கின்றான், நிச்சயம் இங்கு சிறைக்குத்தான் செல்வான், அவனை இந்தியா அழைத்து போங்கள், கண்காணா தேசத்தில் சனியன் சாகட்டும்

இங்கேயே செத்தால் என்ன? என்றார் கம்பெனியார்

அதற்குத்தான் சனியன் இருமுறை தூக்கு மாட்டிற்று அப்பொழுதும் சாகவில்லை, அதனால் லண்டன் சாவு சரிவராது, இந்தியாவில் போய் சாவு என உங்களிடம் கொண்டுவந்துவிட்டேன்

(ஆம், இருமுறை வாழ்வை வெறுத்து 16 வயதில் தற்கொலை செய்ய முடிவெடுத்து தப்பி பிழைத்தவன் கிளைவ்)

சாக தூக்கிட்டானா, அப்படியானால் கஷ்டம், கோழை என்றார் அதிகாரி

“அய்யா அவன் கோபக்காரன், ஒன்றை நினைத்தால் செய்யாமல் முடிக்கமாட்டான் ஆனால் குடும்பத்தில் மூத்த பையன் இங்கு வெட்டியாய் சுற்றினால் குடும்பத்தில் மற்ற பிள்ளைகள் உருப்படுமா? அந்த ஆத்திரத்தில் சம்பாதிக்க துப்பில்லை என நான் திட்டியதால் தொங்க போனான். மற்றபடி ஒன்றுமில்லை.

ஆத்திரம் வந்தால் அப்படி பொங்குவான் மனதால் அழுதால் தொங்குவானே தவிர மற்றபடி நல்லவன், நம்பலாம்”

ஓஓ அப்படிபட்டவன் கண்டிப்பாக எங்களுக்கு வேண்டும் அவன் பெயர் என்ன?

இதோ நிற்கின்றானே அவன் தான் என் மூத்த மகன் ராபர்ட் கிளைவ், என் மொத்த பாவத்தின் உருவம்

கம்பெனியார் அவனை உடனே வேலைக்கு சேர்த்தனர், அவன் வயது 18 என்று குறிக்கபட்டது

1743ம் ஆண்டு ஒரு ஜூன்மாதம் இந்தியா கிளம்பியது கிளை வந்த கப்பல், ஆனால் புயலில் சிக்கியது

அத்தோடு அது மூழ்கி இருந்தால் இந்திய வரலாறு மாறி இருக்கும் ஆனால் அக்கப்பல் பிரேசில் பக்கம் கரை ஒதுங்கியது

அப்பொழுது கம்பெனியார் சொன்னார்கள், நாம் இந்தியாவில் நமது தலமை செயலகம் அமைந்துள்ள சென்னை கோட்டைக்கு வேலைக்கு செல்கின்றோம், நமக்கு முன்பே அங்கே போர்த்துகீசியர் இருந்ததால் அம்மொழி செல்வாக்கு அதிகம், அதனால் கொஞ்ச நாள் அதை கற்றுகொள்ளுங்கள்

அங்கு போர்த்துகீஸ் கற்றான் கிளைவ், இப்படியாக உலகெல்லாம் சுற்றி ஒருவருடம் கழித்து சென்னை கோட்டையில் கால் வைத்தான் அது ஜூன் 1744

சென்னை கோட்டைக்குள் சிறிய கிறிஸ்தவ ஆலயம் உண்டு, இப்பொழுதும் உண்டு

அங்கு சென்று ஓஓஓ என அழுதான் கிளைவ், “எனக்கு இந்த இந்தியா பிடிக்கவே இல்லை, என் அருமையான இங்கிலாந்தை விட்டு ஏன் என்னை இங்கு இழுத்து வந்தீர் ஜூசஸ்.. அவன் கத்தியது வங்க கடல் வரை கேட்டது

இந்திய தலைவிதி அவனிடம்தான் இருக்கின்றது என்பதை அறிந்திருந்த அந்த ஆலயத்து திருச்சிலுவை அமைதியாக இருந்தது

தொடரும்..