பல டிவிக்களில் கலைஞரின் கதை வசனத்தில் எழுந்த படங்கள் ஓடிகொண்டிருக்கின்றன

இப்பொழுதெல்லாம் பல டிவிக்களில் கலைஞரின் கதை வசனத்தில் எழுந்த படங்கள் ஓடிகொண்டிருக்கின்றன, ஒரு படமும் விடுவதாக இல்லை, அப்படிபட்ட அபார வசனங்கள்

சிலவற்றில் ராமசந்தின ஈஈ என இளித்து கொண்டிருக்கின்றார், அத்தோடு வின் ஜாணகியும் மருத நாட்டு இளவரசியில் ஆடிகொண்டிருக்கின்றார், கலைஞரின் வசனத்திற்காக அவர்களை பொறுத்துகொண்டாயிற்று

அன்று வருங்கால முதலமைச்சர்களுக்கு வசனம் எழுதுகின்றோம் என்பது கலைஞருக்கும் தெரிந்திருக்காது, வருங்கால சகாப்தம் தங்களுக்கு வசனம் தருகின்றது என அந்த நடிப்பு தம்பதிக்கும் தெரிந்திருக்காது

காலம் என்னவெல்லாமோ விளையாட்டு ஆடியிருக்கின்றது

அக்காலத்தில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த கலைஞர் அபிமன்யு போன்ற படங்களுக்கும் எழுதியிருக்கின்றார்

அது மகாபாரத கதைதான், ஆனால் அட்டகாசமாக எழுதியிருக்கின்றார் கலைஞர்

உண்மையில் பாரத கதையினை ஆழபடிக்காத ஒருவனால் அப்படி எழுதவே முடியாது. அந்த அளவு அவர் நுணுக்கமாக படித்திருக்கின்றார்

நிச்சயம் அவருக்கு இந்துமத நூல்கள் எல்லாம் அத்துபடி , அவ்வளவு படித்திருக்கின்றார், பல படத்து வசனங்கள் அதை அட்டகாசமாக சொல்கின்றன. நிச்சயம் அவர் ஆழமாக அவற்றை படித்திருக்கின்றார்

ஆனால் நாத்திகராகிவிட்டார்

ஒருவேளை ஆத்திகராக இருந்தால் என்னாகியிருப்பார்? இந்த உயரத்தை எட்ட அம்மதத்தின் சாதியும் இன்னபிற கட்டுபாடுகளும் விட்டிருக்குமா?

சாதாரண பக்திமான் வசனகர்த்தாவாக‌ அவர் வாழ்வு கழிந்திருக்கும்,

அந்த மதத்தில் பெரும் ஞானம் பெற்றிருந்தாலும் காஞ்சி சங்கராச்சாரி இடத்தையோ, கிருபானந்தவாரி இடத்தையோ அவரால் எட்டியிருக்க முடியுமோ? விட்டிருப்பார்களா?

நிச்சயம் சந்தேகம்

இந்துமதத்தின் சாதி கட்டுபாடும் இன்னபிற இறுக்கமும், மிகபெரும் அறிவாளியினை அதாவது மிகபெரும் சமயஞானியாக வந்திருக்க வேண்டிய ஒருவனை மாபெரும் ஆத்திகராக்கி அவனை வரலாற்றில் முத்திரை பதித்த சகாப்தமுமாகவும் ஆக்கிற்று

தன் சொந்த மதத்தில் சில கட்டுபாடுகளை தன் பிறப்பால் பெறமுடியாத கலைஞர், அதை எதிர்த்து மாபெரும் இடத்தை வரலாற்றில் பெற்றுகொண்டார் என்பதுதான் அவரின் சாதுர்யம்.

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு நாம் தமிழர் கட்சி 10 கோடி அறிவிப்பு

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு நாம் தமிழர் கட்சி 10 கோடி அறிவிப்பு தும்பிகள் மகிழ்ச்சி

அடேய் தும்பிஸ், சும்மாவே பிரபாகரன் மலையாளி அங்கிள் சைமன் மலையாளி என ஏகபட்ட புகார்கள், இதில் நீங்கள் அள்ளிகொடுத்தால் சந்தேகம் உறுதியாகிவிடும்

அதெல்லாம் சரி, கேரளாவிற்கு 10 கோடி கொடுக்கும் உங்கள் தலைவன், ஈழத்தில் யுத்தத்தில் பாதிக்கபட்டவருக்கு 10 வீடாவது கட்டி கொடுத்தானா?

இல்லை அல்லவா? ஏன்?

ஈழதமிழரிடம் வசூல் செய்து மலையாளிகளுக்கு கொடுக்கும் கட்சிக்கு எதற்கு பிரபாகரன் படம், நாம் தமிழர் என பட்டம்?

உண்மையிலே பத்து கோடி கொடுக்கின்றீர்களா? அடுத்த ஐடி ரெய்டு அநேகமாக எளிய தமிழ்பிள்ளைகள் கட்சி அலுவலகத்தில் நடக்கலாம்

இந்து அமைப்புகள் ஏகபட்டது உள்ள நாடு இது

இந்து அமைப்புகள் ஏகபட்டது உள்ள நாடு இது, சில சமத்தாக இருக்கின்றன, சில அமைப்புகளால் பெருமை உண்டு, சில அமைப்புகள் வாழ்த்துகுரியவை

மிக சில அமைப்புகள் உடனே தடை செய்ய வேண்டியவை, அப்படியே அந்த உறுப்பினர்களை மனநல சிகிச்சைக்கு அனுப்ப வேண்டியது மகா அவசியம்

அப்படிபட்ட அமைப்பில் ஒன்றுதான் சனதான் சன்ஸ்தா

இந்த அமைப்பில் உள்ள வெறியர்கள் தும்பிகளை விட ஆபத்தானவர்கள், மகா மகா அயோக்கியர்கள், ஆப்கன் தாலிபன்கள் , ஐஎஸ் இயக்கத்தை விட மகா ஆபத்தானவர்கள்

அப்படி என்ன செய்திருக்கின்றார்கள் என்றால், இந்த சுதந்திர தினத்தை சீர் குலைக்க வெடிகுண்டு வீச திட்டமிட்டிருக்கின்றார்கள்

இவர்கள் விரும்பும் ஆட்சிதான் நடக்கின்றதே, பசுமாடுகள் எல்லாம் பாதுகாப்பாக இருகின்றதே பின் ஏன் இவர்கள் ஆத்திரபடுகின்றார்கள் என்றால், இவர்கள் ஆத்திரம் நாடு அமைதியாக இருப்பது எப்படி என்பது?

அதனால் வெடிகுண்டுகளை செய்து வெடிக்க வைத்து அப்பழியினை இஸ்லாமியர் மேல் போட்டு இங்கு பெரும் கலவரம் ஏற்பட்டு ரத்த ஆறு ஓடவேண்டும் என்பது இவர்களின் கேடுகெட்ட ஆசை

நல்ல வேளையாக மும்பை காவல்துறை அவர்களை கைது செய்து முகதிரையினை கிழித்திருக்கின்றது.

நல்ல இந்து இத்தேசத்தை நேசிப்பான், அதுவும் சுதந்திர திருநாளை எல்லாம் சீரழிக்க நினைக்கவே மாட்டான், இப்படி மதம் பெயரில் வெறுப்பான காரியங்களை செய்யவே மாட்டான்

உளவுதுறை மோடிக்கு அந்நியநாட்டு தீவிரவாதிகளால் ஆபத்த்து என சொல்லிகொண்டிருக்க இவர்களோ கலவரம் ஏற்படுத்த நாங்கள் போதும் என சொல்லிகொண்டிருகின்றார்கள்

அந்நிய நாட்டு தீவிரவாதிகள் இந்நாட்டை எதிரியாக வரிந்து கொண்டவர்கள், அவர்கள் அப்படி செய்வதும் சொல்வதும் ஆச்சரியமல்ல‌

ஆனால் நான் இந்து, இந்தியன் என சொல்லிகொண்டே சொந்த மக்களை கொல்லதுடிக்கும் இவர்கள் நிச்சயம் தேச துரோகிகள்

இதுவே இஸ்லாமிய இயக்கத்தார் வீட்டிலோ இல்லை ஒரு இஸ்லாமியரிடமோ இந்த வெடிகுண்டுகள் சிக்கி இருந்தால் இந்நேரம் என்ன ஆகியிருக்கும் என்பது சொல்ல வேண்டியதில்லை

யார் யாரெல்லாம் பொங்கி இருப்பார்கள், யாரை எல்லாமோ பிடித்திருப்பார்கள், யார் எல்லாமோ கண்டிப்பார்கள், பொங்குவார்கள்

ஆனால் இங்கு ஒரு சத்தமுமில்லை

இந்நாட்டில் அமைதியும் சகோதரத்துவமும் நிலைக்க செய்ய வேண்டியது அந்த சனதான் சன்ஸ்தா எனும் சாத்தான்கள் கூட்டத்தை உடனே தடை செய்து அவர்களை செய்ய வேண்டியதை செய்ய வேண்டும்

விஸ்வரூபம் 2 : பெரும் குழப்பு குழப்பியிருக்கின்றார் கமலஹாசன்

இந்த கமலஹாசனில் விஸ்வரூபம் 2 எப்படி இருக்கின்றது என படம்பார்த்த நண்பர்களிடம் கேட்டால் சிலர் முறைத்துவிட்டு சென்றுவிடுகின்றார்கள், சிலர் படம் பார்த்த வருத்தத்தில் 2 பாட்டில் குடித்துவிட்டு கமலை திட்டிகொண்டிருக்கின்றார்கள்

சிலர் சந்திரமுடி வடிவேலு கடும் அதிர்ச்சியில் சிலைபோல நின்றுகொண்டிருகின்றார்கள், என்ன கதை என கேட்டால் தெரியாமலே படம் முடிந்துவிட்டதாக சொல்லிகொள்கின்றார்கள்

இன்னும் சிலர் கமல் இயக்கும் படத்திற்கு இனி செல்ல கூடாது என சத்தியமே செய்கின்றார்கள்

அப்படி பெரும் குழப்பு குழப்பியிருக்கின்றார் கமலஹாசன்

கொஞ்ச காலமாகவே அவர் கடும் மனகுழப்பத்திலும் உளறலிலும் இருப்பது தெரிகின்றது, அவரை இயக்கவிட்டால் என்னாகும்? மய்யம் போலத்தான் ஆகும்

உண்மையில் கமல் நல்ல நடிகர், நல்ல இயக்குநர் கையில் இருந்தால் இன்றும் கலக்கலான நடிப்பினை அவரால் கொடுக்க முடியும்

ஆனால் இயக்குகின்றேன் என வந்து அவரின் அதிமேதாவிதனத்தில் எல்லோரையும் குழப்புவது அவருக்கு புதிதல்ல‌

திரைக்கு பின்னால் இருக்க வேண்டிய டி.ராஜேந்ந்த்ரும், திரைக்கு பின்னால் செல்லவே கூடாத கமலஹாசனும் இங்கு இடம் மாறி இம்சை கொடுப்பது தமிழக சாபம்

அப்படி இம்முறையும் திரைபடம் பார்க்க வந்த ரசிகர்கள் தலையில் ஏறி உட்கார்ந்து தலையினை பிராண்டி, காதை திருகி கமல் என்னவெல்லாமோ செய்திருக்கின்றார்

ஒருவன் கூட தியேட்டர் விட்டு சந்தோஷமாக வரவில்லை, கலைஞருக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வரும் திமுகவினர் போல ஒரு மாதிரி வருகின்றார்கள்

ஒரு நண்பர் சொன்னார்

“அண்ணே, விஸ்வரூபம் முதல் பாகம் பிரச்சினையிலே நாட்டை விட்டு போய்ருவேன்னு சொன்னாருண்ணே, அப்படி போயிருந்தால் ஒரு சிக்கலும் இருந்திருக்காது

இனியும் ஒண்ணும் பிரச்சினை இல்லண்ணே, இங்க இருந்தா இனி நம்மை எல்லாம் கொலைகாரான ஆக்கிருவாரு, பிடித்து வலுகட்டாயமாக அனுப்பலாம்

ஆனால் வயசில பெரியவரு அவரா கவுரவமா போயிட்டா நல்லது”

உடன்பிறப்பே… நான் வந்திருக்கும் இடம் நன்றாயிருக்கின்றது

Image may contain: 1 person, sunglasses and close-upஉடன்பிறப்பே

நான் வந்திருக்கும் இடம் நன்றாயிருக்கின்றது, இதுதான் சொர்க்கம் என்றார்கள், இப்படி தமிழகத்தின் மக்களும் நலமாகவும் சமமாகவும் வாழத்தான் நான் போராடினேன், என் காலம் முடிந்ததே தவிர போராட்டம் ஓயவில்லை அது உங்களிடமே விட்டுவிட்டு வந்திருக்கின்றேன்

உடன்பிறப்பே, எங்கோ கிராமத்தில் பிறந்த எனக்கு, சாதியோ பெரும் குடும்ப அடையாளமோ இல்லாத எனக்கு மொத்த தமிழமும், உலகெல்லாம் தமிழ்வாழும் சமூகமும் , இந்திய தேசமும் மொத்தமாக அடித்தள மக்கள் முதல் உயர்பீடம் வரை அஞ்சலி செலுத்தினார்கள் என்றால் உண்மையிலே அர்த்தமுள்ள வாழ்வு வாழ்ந்திருக்கின்றான் இந்த கருணாநிதி

காவேரி மருத்துவமனைமுன் திரண்ட கூட்டம் போல பல மடங்கு இன்னும் மெரினாவில் அண்ணாவோடு நான் துயில் கொள்ளுமிடம் இடத்தில் நள்ளிரவிலும் , கடும் வெயிலும் வந்துகொண்டே இருக்கின்றது என்றால் இத்தமிழகத்தின் எல்லா பட்டி தொட்டிகளிலும் நாங்கள் எழுப்பிய பகுத்தறிவு எழுச்சி, சுயமரியாதை முழக்கம் எவ்வளவு தூரம் எட்டி இருக்கின்றது என்பதை உணர முடிகின்றது

நானும் அண்ணாவும் எங்கெல்லாம் , எந்த மூலை முடுக்கெல்லாம் திராவிட சிந்தனையினை விதைத்து கொண்டே சென்றோமோ, அங்கிருந்து பலர் உருவாகி இப்போது எங்களை நன்றியோடு காண வந்திருக்கின்றார்கள் எனும்பொழுது இந்த இடத்திலிருந்து உங்களுக்கு தெரியாதவாறு கண்ணீர் நன்றி தெரிவித்து கொள்கின்றேன்

“தம்பி கருணாநிதி, உனக்காக வழியும் ஒவ்வொரு சொட்டு கண்ணீரும், உன் உழைப்புக்கும் போராட்டத்திற்குமான நன்றியின் அடையாளம்” என அண்ணா அருகிருந்து சொல்லுபொழுது அன்னை அஞ்சுகம் என்னை தமிழகம் வாழவே பெற்றார் என்பதை நினைத்து அவரும் இதோ ஆனந்த கண்ணீர் விட்டுகொண்டிருக்கின்றார்

உடன்பிறப்பே,

காலத்தால் எல்லோரும் பிறப்போம், காலத்தால் எல்லோரும் மறைவோம், இதற்கு நீனோ நானோ விதிவிலக்கு அல்ல‌

ஆனால் வாழும் காலத்தில் இந்த சமூகத்திற்கும், இந்த மக்களுக்கும் என்ன செய்தோம் என்பதுதான் வரலாற்றில் நிற்க கூடியது, நான் என் கடமையினை செய்தேன், உங்கள் நினைவுகளில் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன்

கருணாநிதிக்காக இவ்வளவு பேர் அழுகின்றார்களே, ஆனால் தேர்தலில் அவருக்கு பல நேரங்களில் தொல்வி வந்ததே என சில சதிகாரர்கள் சொல்லி ஆனந்தம் அடைகின்றார்களாம்

என் மீது அன்புகொண்டவர்கள் எல்லாம் எனக்கு வாக்களிக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியுமா? அது ஜனநாயகம் ஆகுமா?

என் கொள்கையினை ஏற்றவர்கள் வாக்களித்தார்கள், ஆனால் என் அரசியலையும் மீறி இத்தனை கோடி மக்கள் இந்த கருணாநிதியினை நேசித்திருக்கின்றார்கள் என்றால் அந்த அன்புக்கு எந்நாளும் நன்றி, இதொ இந்த வங்க கடல் போல் சொல்லிகொண்டே இருப்பேன்

நான் எனக்காக கண்ணீர் விடும் உங்களிடம் கேட்டுகொள்வது ஒன்றுதான்

அண்ணாவின் இடத்தை என் ஒருவனால் நிரப்ப முடியவில்லை, ஒப்புகொள்கின்றேன். அண்ணா போல நான் இருந்திருந்தால் கழகம் சில சறுக்கல்களை சந்தித்திருக்காது என்பது என் மனசாட்சி சொல்லும் உண்மை

ஆனால் நான், அருமை நண்பர் பேராசிரியர், முரசொலி மாறன் இன்னும் பலர் இணைந்துதான் அண்ணாவின் இடத்தை நிரப்ப முயன்றோம், ஓரளவு வெற்றியும் பெற்றோம்

அப்படி நீங்களும் எல்லோரும் , 3 கோடி தொண்டர்களும் இணைந்துதான் இந்த இயக்கத்தை நடத்தவேண்டுமே தவிர, செயல்தலைவர் ஒருவாரல் மட்டுமே நிரப்ப முடியாது

நான் முன்பே சொன்னபடி என் 6 பிள்ளைகளும், என் மன்சாட்சியாய் நின்ற மாறன் பிள்ளைகளும் எக்காலமும் இந்த கட்சிக்கு உழைக்கவும், ஒற்றுமையாய் இயக்கத்தை நடத்தவும் முன் நிற்பார்கள் என்பது எக்காலமும் எனக்குள்ள நம்பிக்கை

அந்த நம்பிக்கையினை உறுதிபடுத்தும் விதமாக என் இறுதி அஞ்சலியில் அவர்கள் உள்ளத்தில் எடுத்த பிரமாணம் எனக்கு கேட்டுகொண்டேதான் இருந்தது , அந்த நம்பிக்கையில்தான், அவர்கள் எக்காலமும் தமிழகத்திற்காக எனக்கு பின் உழைப்பார்கள் எனும் நம்பிக்கையில்தான் புதைந்தேன்

உடன்பிறப்பே, அண்ணா நம்மை விட்டு பிரிந்தபொழுது நன் சொன்னது நினைவிருக்கின்றதா, அதையேதான் என் பிரிவிலும் நீ எண்ணிகொள்ள வேண்டும்

கண்ணீரை துடைப்போம், களம் காண்போம். ஆற்றுவதற்கு ஏராளமனா விஷயங்கள் இருகின்றன , அண்ணனுக்கு காணிக்கை வைக்க ஏராளமான வெற்றிகளை பெற வேண்டி இருக்கின்றது என சொன்னது மறந்துவிட்டதா?

அப்படி இத்தமிழகத்திற்கு ஆற்றவேண்டிய கடமைகளை எண்ணி களம் காணுங்கள், திருவாரூரில் நான் என் இறுதி காலத்தில் ஆற்றமுடியாமல் போல காரியங்களை தொடரவும், அது கழகத்து கோட்டை எனும் பெயர் நிலைக்கவும் களமிறங்கு

“வெற்றியினை எனக்கு காணிக்கையாய் தா” என நான் கேட்டதுமில்லை, அது எனக்கு பழக்கமுமில்லை

ஆனால் நான் உருவாக்கிய படை, எனக்கு பின்னும் வெற்றிகளை குவிக்கின்றது எனும்பொழுது என்னை விட மகிழ்வது யார்?

ராஜராஜ சோழனுக்கு பின் அவன் சந்ததிகள் அவனி ராஜ்யத்தை பெருக்கியது போல, செங்கிஸ்கானுக்கு பின் அவன் சாம்ராஜ்யம் பரந்து விரிந்தது போல நீங்களும் திமுகவின் எல்லைகளை பெருக்குங்கள், தமிழர் வாழ , தமிழ் வாழ காவலிருங்கள்

வரும் தேர்தலில் கழகம் வெற்றி எனும் செய்தி உலகெல்லாம் எதிரொலிக்கட்டும், வர இருக்கும் பெரும் வெற்றிக்கு அது விடிவெள்ளியாய் தெரியட்டும்

அண்ணாவின் ஆசியும், நான் காட்டிய வழியும் எந்நாளும் இயக்கத்தை நடத்தும், வெற்றிகளை குவிக்கும்

இந்த எளியவனுக்காக, அவனின் போராட்ட வாழ்வினை அர்த்தமுள்ளது என மொத்த‌ உலகமும் ஒப்புகொள்ளும் அளவிற்கு , வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்திருகின்றான் இந்த எளிய கருணாநிதி என எல்லா நாட்டு மக்களும் வாய்விட்டு சொல்லும் அளவிற்கு எனக்காக திரண்ட உங்கள் ஒவ்வொருவருகும் மறுபடியும் நன்றி

உடன்பிறப்பே, எனக்கு தெரிந்து உனக்கு ஒரு குறையும் நான் வைத்துவிட்டு வரவில்லை. போராட்ட ஆயுதம் முதல் வழிமுறை வரை , வெற்றிபெறும் வழிவரை சொல்லிவிட்டும் செய்து காட்டிவிட்டுமே விடைபெற்றிருக்கின்றேன்

அவ்வழி நடப்பாய், இயக்கம் காப்பாய், தமிழகத்தை வாழவைப்பாய்

கண்ணீரை துடை, களத்தை நோக்கி போ,

எந்நாளும் போல கழகத்து செயல்பாட்டில் நான் வாழ்ந்துகொண்டே இருப்பேன்”