கலைஞர் சமாதியில் திமுகவில் உட்கட்சி சலசலப்புகள்

திமுகவில் உட்கட்சி சலசலப்புகள் கலைஞர் சமாதியில் இருந்து தொடங்கிவிடுமோ என சொல்லபட கூடிய சில விஷயங்கள் நடந்திருக்கின்றன, இது பல பத்திரிகையாளர் முன்னால் நடந்தாலும் இந்த திமுக தலைமைக்கும் இந்த உருக்கமான நேரத்திற்கும் அஞ்சி பல பத்திரிகையாளர்கள் சொல்லவே இல்லை

உண்மையில் அவர்கள் பத்திரிகையாளர்களே அல்ல, பிழைப்புவாதிகள்

என்ன நடந்திருக்கின்றது?

கலைஞர் சமாதிக்கு எல்லோரும் சென்றுகொண்டிருப்பது யாவரும் அறிந்தது, வைரமுத்து முதல் சகலரும் சென்று வணங்கி நிற்கின்றார்கள், செல்லாத பிரபலங்கள் இல்லை

அப்படி திமுக மகளிரணியினை சேர்ந்த சல்மா என்பவரும் சென்றிருக்கின்றார், வணங்கி இருக்கின்றார்

அங்கு இருந்த இரு திமுக பிரபலங்கள் அவரை தாறுமாறாக திட்டி இருக்கின்றன, அவர் அழுதுகொண்டு அவமானத்தோடு வெளியேறியதை பலர் கண்டிருக்கின்றார்கள்

திட்டியது யாரென்றால் துறைமுகம் தொகுதியினை சேர்ந்த கஜா என்பவரும், எம்.எல்.ஏ செல்வம் என்பவரும், இவர்கள் ஸ்டாலினுக்கு சோப்பு போட்டு செருப்பு கழுவும் கோஷ்டிகள்

ஏன் அப்படி என்றால் கஜா என்பவர் துறைமுகம் தொகுதியில் கலைஞர் நின்றபோழுது அவரை தோற்கடிக்க பாடுபட்ட எதிர்கட்சிக்காரர், இந்த செல்வம் என்பவர் முன்னாள் அதிமுககாரர்

ஆக எங்கிருந்தோ வந்த திடீர் திமுகவினர், கலைஞரால் அரசியலுக்கு கொண்டுவரபட்ட சல்மாவினை விரட்டி இருக்கின்றனர்

ஏன் விரட்டியிருக்கின்றனர் என்றால் சல்மா கனிமொழி அணி என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

இது முக ஸ்டாலின் கவனத்திற்கு சென்றது என்கின்றார்கள், சிலர் சென்றும் அவர் கண்டுகொள்ளவில்லை என்கின்றார்கள், எது நடந்திருந்தாலும் ஸ்டாலினுக்கே வெளிச்சம்

கலைஞர் என்றுமே திமுகவில் எல்லா தரப்பும் இருக்க வேண்டும் என ஆசைபட்டவர், அதில் எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் அவர் கொடுத்த இடமே தனி

அப்படி அவரால் நேரடியாக திமுகவிற்கு கொண்டு வரபட்டவர்தான் சல்மா

அவரை திமுகவின் முன்னாள் துரோகிகள் , ஏதோ இந்நாள் திமுக காவலர்கள் போல நின்று வார்த்தையால் அவமானபடுத்தி விரட்டியிருப்பது நிச்சயம் சரி அல்ல‌

இதை திமுக தலைவரும் ரசித்துகொண்டிருக்கின்றார் என்பதுதான் ஆச்சரியம்

ஆக கனிமொழி கோஷ்டி என்பதற்காக கலைஞரின் கரத்தால் அரசியலுக்கு கொண்டுவரபட்ட சல்மாவினை ஸ்டாலின் கோஷ்டி கலைஞர் சமாதியிலே விரட்ட தொடங்கிவிட்டது

இனி தாமரை போல, உதய சூரியனும் …..ல் தான் உதிக்கும்.

வருண பகவானே வருந்தகூடிய அளவிற்கு கேரள வெள்ளம்

Image may contain: one or more people, mountain, outdoor and nature

கேரள வெள்ளம் வருண பகவானே வருந்தகூடிய அளவிற்கு சென்றாயிற்று அணைகள் எல்லாம் கலைஞரின் கோபாலபுரம் வீடு போல திறந்தே வைக்கபட்டாயிற்று, மிக பெரும் வெள்ளம்

முதல் முறையாக கேரளம் முல்லைபெரியாரில் 152 அடிவரை தேக்குங்கள் என சொல்கின்றது, மிக பெரும் வினோதம் இது

முன்பெல்லாம் அந்த அளவு நீர் தேக்கபட்டது, இந்த இடுக்கி அணைக்கு நீர் வேண்டும் என்பதற்காக குறைக்க சொன்னார்கள், சொல்லி பார்த்தார்கள் பின்பு சொல்ல வேண்டியவர்கள் மூலம் சொன்னார்கள்

அதாவது டெல்லி வழியாக ராமசந்திரனுக்கு நெருக்கடி கொடுத்தார்கள், தான் பிறந்ததே டெல்லிக்கு மண்டியிட என்பதை 1972ல் உணர்ந்த ராமசந்திரன், தன் ஆட்சிகாலத்தில் அதாவது 1980களில் அணை நீர்மட்டத்தை 132 அடிக்கு குறைத்தார்

இதனால் தமிழகம் பாதிப்புக்குள்ளானது, அதற்கெல்லாம் அஞ்சுபவரா ராமசந்திரன்? “ஏன் இப்படி அநியாயமாக‌ குறைத்தீர்கள்? இதனால் எவ்வளவு பாசனபரப்பு பாதிக்கபடும் தெரியுமா?” என கேட்டால் ராமசந்திரன் இப்படி பதில் சொன்னார்.

“கலைஞர் ஊழல்வாதி, கலைஞர் வீராணம் ஊழல் செய்தவர், கலைஞரை நான் சும்மா விடமாட்டேன், இது ஊழலற்ற அரசு

ஏதாவது புரிகின்றதா? இதுதான் ராமசந்திரன் அரசியல்

பின் ஜெயலலிதா அதை 142 அடியாக மீட்டார், இப்பொழுது கேரளமே இல்லை இல்லை முழு கொள்ளளவும் நிரப்புங்கள் என சொல்லிவிட்டது போல் தெரிகின்றது

மனிதனால் தீர்க்கமுடியா சிக்கல்களை ஆண்டவன் தீர்த்து வைப்பான் என்பது இதுதான்

இப்பொழுது கேரள மக்களின் துயரத்தில் நாமும் பங்குபெற்று நிற்கின்றோம்

தமிழக அரசும், கட்சிகளும் இன்னபிற அமைப்புகளும் அவர்கள் துயர் துடைக்க உதவிகொண்டிருக்கின்றன, நம் சகோதரர்களின் இக்கட்டான நேரத்தில் நாம் தான் உதவ வேண்டும்

அவர்களும் ஒன்று சிந்திக்கலாம்

பாருங்கள், எவ்வளவு வெள்ளம், கேரளாவினை திணறடிக்கின்றது, இதன் முழு காரணம் என்ன?

பல இடங்களில் தமிழகத்திற்கு செல்லும் வாய்ப்பு இருந்தும் அவர்கள் முழு தண்ணீரையும் கேரளாவிற்கே திருப்பினர், ஒரு சொட்டு கூட தமிழகம் வர அவர்கள் விரும்பவில்லை

மேற்கு நோக்கி பாயும் ஆறுகளில் சிலவற்றை கிழக்கு நோக்கி தமிழகத்தில் திருப்பி இருந்தால் இந்த பெரு வெள்ளம் அங்கு வந்திருக்காது, இங்கும் ஆறுகள் பெருகி ஓடி அவர்களின் பெரும் சிக்கல் குறைந்திருக்கும்

இப்பொழுது நிச்சயம் கேரளம் அதை நினைத்து பார்க்கும்

இனியாவது மேற்கு நோக்கி பாயும் ஆறுகளில் சிலவற்றை இங்கே திருப்பி விடட்டும், அவர்களுக்கு அரிசி முதல் காய்கறி வரை இங்கிருந்து செல்லும்

கூடவே இம்மாதிரி வெள்ள நேரத்தில் அது பெரும் வடிகாலாகவும் அமையும்

கன்னடம் பெருவெள்ளத்தில் சிக்காமல் இருக்க காவேரி காக்கின்றது, மலையாள மக்களுக்கு அப்படி வாய்ப்பு இல்லை

இனி உருவாக்கி கொள்ளுங்கள் கேரளத்தவரே, இனியாவது யோசியுங்கள்

முதலில் இந்த இக்கட்டிலிருந்து வெளிவாருங்கள், உங்களுக்கு உதவிகரம் நீட்டுகின்றோம்

அதன்பின் இருவரும் சேர்ந்து வெள்ளத்தை சமாளிக்க செய்ய வேண்டியதை சிந்திப்போம்

ராகுல்காந்திக்கு பாதுகாப்பு குறைபாடு இருந்தது

இந்த ராகுல்காந்திக்கு பாதுகாப்பு குறைபாடு இருந்தது என கலைஞர் இறுதி நிகழ்வில் நடந்த சர்ச்சைகள் குறித்து குதியோ குதி என குதிக்கின்றார்கள்

காவல்துறை அதன் பணியினை நன்றாக செய்தது, சந்தேகமில்லை ஆனால் மிகபெரும் கூட்டம் குவிந்தபின் அது திணறியது, முடிந்த அளவு பாதுகாப்பு கொடுக்கத்தான் செய்தது, அவர்களின் பொறுப்புணர்ச்சிக்கு வாழ்த்துக்கள்

சரி, ராஜிவ் எனும் அகில இந்திய காங்கிரஸ் தலைவரின் பாதுகாப்பு என்பது தமிழக அரசு சம்பந்தபட்டதா? ஏன் காங்கிரஸ் தொண்டர்களுக்கு அக்கறை இல்லையா?

எப்படிபட்ட தமிழகம் இது?

இந்திரா ரத்தம் சொட்ட சொட்ட அடித்து விரட்டபட்டார், ராஜிவ் சிதறடிக்கபட்டு கொல்லபட்டார்

அப்படிபட்ட குடும்ப வாரிசு இங்கே வரும்பொழுது போதிய காவல் வேண்டும் என்றும், உறுதிபடுத்தபட்டே அவரை வரவழைக்கும் பொறுப்பு யாருக்கு உண்டு

நிச்சயமாக தமிழக காங்கிரசுக்கே உண்டு

அன்றிலிருந்தே இவர்கள் இப்படித்தான், முறையான பாதுகாப்பினை இந்திரா சம்பவத்திற்கு பின்பே வழங்கி இருந்தால் ராஜிவ் கொலை நடந்திருக்காது

தெருவில் போகும் நாய் கூட கடிக்க யோசிக்கும் அங்கிள் சைமனே ஏதோ பெரும் மிரட்டல் இருப்பவர் போல பாதுகாவலருடன் வலம் வருகின்றார்

ராகுல் பாதுகாவலை உறுதி செய்யும் பொறுப்பு தமிழக காங்கிரசாருக்கும் உண்டு

ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவருக்கு என்ன அக்கறை என்றால் கலைஞருக்கு சிலை வைப்பது

எந்த திமுகவினராவது இதே மண்ணில் கொல்லபட்ட ராஜிவிற்கு சிலைவைத்தார்களா என்று அந்த திருநாவிடம் கேட்பது யார்?

ராகுல் வந்திருந்தபொழுது பாதுகாப்பு குறைபாடு சந்தேகமில்லை, நல்ல வேளையாக அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை

இந்திராவினையும் ராஜிவினையும் பாதுகாக்க தவறிய தமிழக காங்கிரஸ் இனி தக்க பாதுகாப்பு கொடுத்து ராகுலை இங்கு வரும்பொழுது பாதுகாக்கட்டும்

தனிபெரும் கவனம் எடுக்கட்டும்

தமிழ்க காங்கிரசாரே, உங்கள் அருமை தலைவனின் பாதுகாப்பிற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்து கிழித்தீர்கள்??

இவர்கள் ஒரு முயற்சியும் எடுக்கமாட்டார்கள், எல்லாம் தமிழக அரசு தானாக செய்யும் என மல்லாக்க கிடப்பார்கள், சிறப்பு கோரிக்கை கூட வைக்கமாட்டார்கள்.

ஆனால் ஏதும் சர்ச்சை என்றால் ஆளுக்கு முன்பு கிளம்பி ராகுலுக்கு அநீதி என்பார்கள்

தமிழக காங்கிரசார் இன்னும் திருந்த வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருக்கின்றது

ஆனால் நிச்சயம் திருந்தமாட்டார்கள், இந்த ராகுல் பாதுகாப்பு விஷயத்திலாவது திருந்தட்டும்


புது தொழில்நுட்பத்திலும், நவீன அறிவியல் கண்டுபிடிப்பாலுமே இந்தியா முன்னேற முடியும் : மோடி

பின்னே அதில்தான் இந்தியாவினை முன்னேற்ற முடியும்? பழம்புராண கதைகளாலும், பசுமாட்டு புராணத்திலுமா முன்னேற்ற முடியும்?


தலைவியின் கால் தூசுக்கு வரமுடியாதவள் கிளியோபாட்ரா

Image may contain: 1 person, close-upஅலக்ஸாண்டர் எகிப்தை கைபற்றி தன் சாம்ராஜ்யத்தோடு இணைத்து பெரும் பேரரசை உருவாக்கிவிட்டு , தான் மறையும் பொழுது தன் ராஜ்யத்தை தன் தளபதிகளுக்கு பங்கிட்டு கொடுத்தான்

எகிப்து அப்படித்தான் டாலமி எனும் கிரேக்க வம்சத்திடம் வந்தது, அந்த வம்சத்தவள்தான் கிளியோபாட்ரா.

கிளியோபாட்ரா என்பது பொதுபெயர், நிறைய கிளியொபாட்ரா இருந்தாலும் வரலாற்றை மாற்றியவள் அந்த ஒரு கிளியொபாட்ராதான்

Image may contain: 1 person, close-upஅவள் அழகி , நிர்வாகி, அரசி, பன்மொழிகலந்த வித்தைக்காரி , தன் அழகை பராமரிக்கும் நுட்பம் தெரிந்த ஒப்பனை அழகி , மிகபெரும் ராணுவ வித்தகி அதற்கு மேல் ஆண்களை மயக்கி வேலை வாங்க தெரிந்த சாகச வித்தைகாரி

ஆடை , அணிகலன் , ஒப்பனை எல்லாம் பெண்களுக்கு எப்படி அழகு சேர்க்கும் என்பதை முதன் முதலில் உலகிற்கு சொனவள் அவள் நிறம், உருவம், உடல்வாகு என ஒவ்வொரு பெண்ணுக்கும் பொருத்தமான அணிகலனும் ஆடைகளும் உண்டு

அப்படி அவளின் ஆடையும், அணிகலனும் அவளால் அவள் அழகுக்கு அழகு சேர்க்க அப்படி மிக கவனமாக உருவாக்கபட்டது என்கின்றது வரலாறு

டாலமி எனும் சகோதரனை மணந்து அக்கால எகிப்து வழக்கபடி அரசியாக அமர்ந்திருந்தாள், எகிப்து மாவீரன் ஜூலியஸ் சீசர் எகிபதை கைபற்ற அவன் மனதை கைபற்றி எகிப்து ராணியாக அமர்ந்தாள் கிளியோபாட்ரா

கிளியோபாட்ராவிடம் அவன் சொக்கி கிடந்தான், அவள் கண்ணால் சொல்வதை தன் வாளால் நிறைவேற்றும் அளவிற்கு மயங்கி கிடந்தான் சீசர்

வெறும் அழகி என்றால் சீசர் அவளை ஆட்டிவைத்திருப்பான், அவளோ அழகுடன் அறிவும் கலந்தவள் என்பதால் சீசரை கைக்குள் வைத்திருந்தாள்

சீசரோ ரோமின் மக்களாட்சிக்கு உட்பட்ட தளபதி, ஆனால் கிளியோபாட்ராவின் மயக்கத்தான் தன்னை மன்னன் என சொல்லும் அளவு மாறிபோயிருந்தான்

அவளோ மிக சாமார்த்தியமாக அவனிடம் தனக்கு பிறக்கும் அவன் குழந்தையினை மன்னராக்க சத்தியம் செய்திருந்தாள்

விடுவார்களா ரோமர்கள்?

ரோம் அவர்கள் கனவு, அவர்கள் மூச்சு, அவர்கள் வாழ்வு. ரோமின் வளர்ச்சிக்கும் பெருமைக்கும் வெற்றிமேல் வெற்றி சேர்த்த ஜூலியஸ் சீசரை, கிளியோபாட்ராவினை ரோமின் ராணியாக்க முயன்றதால் கடுமையாக வெறுத்தார்கள்

ஒருகட்டத்தில் நண்பர்களே கொன்றனர் , அத்தோடு விடவிலை எகிப்தின் நச்சுபாம்பான கிளியோபாட்ராவினை அழிக்க மார்க் அன்டனி எனும் மாபெரும் வீரனை அனுப்பினார்கள்

ஆனால் சீசர் வழியிலே வீரவேங்கை ஆண்டனியும் வீழ்ந்தான், வயதான ஜூலியஸையே வளைக்க தெரிந்த அவளுக்கு ஆண்டனியினை வளைப்பது பெரிய காரியமில்லை

அவளிடம் அடிமையானான் ஆண்டனி, தன்னை கொல்ல வந்த அம்பை ரோமை நோக்கி ஏவினாள் சாகசகாரி கிளியோபாட்ரா

ஒருவகையில் அவளின் ஆட்டம் அட்டகாசமானது, எந்த ரோமை படை எகிப்தை அபகரிக்க வந்ததோ, அதே ரோமை பேரரசுக்கு எகிப்துக்காரி ராணியாக அமர துடித்த அரசியல் ஆட்டம்

ரோமர்களை தன் பெயரால் அவர்களுக்குள்ளே அடித்துகொள்ள வைத்த மிக நுட்பமான குள்ளநரி தந்திரம். ஒரு வகையான சாணக்கியதனம்

ஆனால் ஆக்டேவியனின் வீரத்தால் ஆண்டனி வீழ்த்தப்ட்டான், இனி தன்னை ரோமையர் விடமாட்டார் என அஞ்சிய கிளியோபாட்ரா பூநாகத்தை கடிக்கவிட்டு இறந்தாள்

இல்லை வைரத்தை விழுங்கி செத்தாள் என்கின்றது இன்னொரு செய்தி

எப்படியோ 2000 வருடத்திற்கு முன்பே மிகபெரும் தந்திரத்துடனும், தன் அழகையும் அறிவையும் மூலதனமாக்கி பெரும் ரோமை ராஜ்யத்தின் ராணியாக முடிசூட முயன்று, பாதி வென்று வரலாற்றில் இடம்பெற்றவள் கிளியோபாட்ரா

அவளின் நினைவு நாள் இன்று , இன்றுதான் அவள் தற்கொலை செய்ததாக வரலாறு சொல்கின்றது

அவளின் மூக்கு மட்டும் சிறியதாக இருந்தால் அவளுக்காக உலகம் அழிந்திருக்கும் என்கின்றது அவள்காலத்து கவிஞன் வரிகள்

ஆனால் அதற்காக “வாழும் கிளியோபாட்ரா” குஷ்புவினை விட அவள் ஒன்றும் அழகு என சொல்லிவிட முடியாது.

அந்த கவிஞனுக்கு தெரிந்தது அவ்வளவுதான், ஆனால் தலைவி அன்றே இருந்திருந்தால் முதலாம் உலகப்போர் என்பது அப்பொழுதே தொடங்கி இருக்கும்

குஷ்பு இல்லாத காலத்தில் பிறந்துவிட்டதால் அவள் அழகி என்று உலகம் குறித்துகொண்டது, இனி அவள் பிறந்து வந்தாலும் உலகம் கண்டுகொள்ளாது

காரணம் குஷ்புவினை உலகம் கண்டாயிற்று

பொங்கும் காவேரியினை கண்டவர்களுக்கு, கானகத்து சிற்றோடை எப்படி ரசிக்கும்?

(முதல் படம் கிளியொபாட்ரா எப்படி இருப்பார் என்பதை இப்பொழுது கணிணியில் வரைந்த உருவம்

இரண்டாம் படம் தலைவி குஷ்பு, இருவரில் யார் அழகு என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

தலைவியின் கால் தூசுக்கு வரமுடியாதவள் கிளியோபாட்ரா)

அமெரிக்காவில் விமான கடத்தல்

அமெரிக்காவில் ஒரு சம்பவம் நடந்திருப்பது கடும் கவனத்தை பெற்றிருக்கின்றது

அதாவது நமது ஊரில் மினிபஸ்கள் போல அமெரிக்காவில் ஏகபட்ட உள்நாட்டு விமானங்கள், அது மிக மிக பரந்த நாடு என்பதாலும் தொழில்நுட்பட்தில் உச்சத்தில் இருப்பவர்கள் என்பதாலும் அவர்கள் வானமெல்லாம் விமானங்களினாலே நிறைந்திருக்கும்

அப்படி சியாட்டிலில் நிறுத்தி வைக்கபட்டிருந்த விமானத்தை, அதை பராமரிக்கும் மெக்கானிக் ஒருவன் கடத்தி சென்றிருக்கின்றான், உடனே அலறிய விமான நிலையம் அமெரிக்க விமானபடையினை தொடர்பு கொள்ள அவர்களும் ராணுவ விமானத்திடன் பின் தொடர்ந்திருக்கின்றார்கள்

இந்நிலையில் கடத்தபட்ட விமானம் வானிலே வெடித்திருக்கின்றது, அத்தோடு கடத்தியவனும் செத்துவிட்டான். விசாரணை நடந்தது

முடிவும் வந்தது

“அவன் விமான வீடியோ கேம் விளையாடுவான் ஏதோ ஆசைபட்டு கடத்திவிட்டான் , ஆனால் நடுவானில் இந்த தொடரி படத்து கீர்த்தி சுரேஷ் போல விமானத்தை கட்டுபடுத்த தெரியாமல் தவித்திருக்கின்றான் அது வெடித்துவிட்டது” என மூடிவிட்டார்கள்

நீங்கம் நம் வாசகர்களாக இருந்தால் சில சந்தேகம் வரலாம்

விமானம் இயக்க தெரியாதவனா டாக்சி வேயில் இருந்து ரன்வேக்கு ஓட்டி வந்து அட்டகாசமாக பறந்தான்?

விமான கட்டுபாட்டு அறையுடன் தொடர்பு கொள்ளாமல் எப்படி அவனால் பறக்க முடிந்தது?

கடைசியாக அவனை தொடர்பு கொண்டபொழுது என்ன பேசினான்?

9/11 சம்பவத்தை தொடர்ந்து பெரும்பாலும் விமானங்களின் பாதுகாப்பும் தொழிநுட்பமும் கடத்தமுடியாமல் வலுபடுத்தப்ட்டபின் இது மட்டுமெ எப்படி முடிந்தது?

கடத்தியவன் இறங்கும் இடம் தெரியாமலா கடத்தியிருப்பான்?

ஆக நடந்திருப்பது இதுதான் என்கின்றார்கள்

முதலாவது தீவிரவாதிகள் ஏதும் பரிசீலித்து பார்த்திருக்கலாம், கடத்தியவன் சீலீப்பர் செல்லாக இருந்திருக்கலாம், இம்மாதிரி பராமரிப்பிற்கு நிறுத்தியிருக்கும் விமானங்களை கடத்துவது சாத்தியமா? என பரிசீலித்திருக்கலாம்

இரண்டாவது விஷயம் கவனிக்க வேண்டியது

ஏதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த கூடிய உளவு தகவலை பெற்ற அமெரிக்க பாதுகாப்பு துறை அட்டகாசமாக அவர்களே நாடகத்தை நடத்தி, எப்படி கடத்தினாலும் இது முடிவு என மவுனமாக உலகிற்கு சொல்லலாம்

மூன்றாவது கோணம் இப்படிபட்ட சூழலுக்கு விமானபடை பாதுகாப்பு எப்படி இருக்கின்றது என சோதிக்க இந்த விஷயம் நடத்தபட்டிருக்கலாம்

அமெரிக்க உளவுதுறையினையும், பாதுகாப்பு துறையினையும் நம்பமுடியாது என்பதால் இரண்டாவது விஷயத்திற்கு வாய்ப்பு அதிகம்

ஆனால் ஒரு விஷயம் கவனிக்கதக்கது, அதாவது விமானம் கடத்தபட்டவுடன் அமெரிக்க ராணுவ விமானம் பாய்ந்திருக்கின்றது

அந்த அளவு எந்த சூழலுக்கும் தயாராக இருந்திருகின்றார்கள்

இதுவே இந்தியா என்றால் எப்படி இருந்திருக்கும்? விமானம் கடத்தபடுகின்றது என அலறினால், விமானி விடுமுறையில் சென்றுவிட்டார், விமானத்திற்கு பெட்ரோல் இல்லை, ஸ்பேர் பார்ட்ஸ் இல்லை என ஆயிரம் காரணம் சொல்லிகொண்டே இருப்பார்கள், அதற்குள் விமானம் செல்லவேண்டிய இடத்திற்கு பத்திரமாக கடத்தபட்டு கடத்தல்காரர்கள் பேச்சுவார்த்தையும் தொடங்கி இருப்பார்கள்

எப்படியோ அமெரிக்கா யாருக்கோ எதையோ சொல்ல வருகின்றது புரிகின்றது, புரிய வேண்டியவர்களுக்கு புரியும்.


அமெரிக்காவில் விமானம் கடத்தபட்ட உடன் அந்த விமானபடை எப்படி உடனே கிளம்பியது என சொல்லும்பொழுது இந்திய நிலையினையும் சொன்னோம்

உடனே எப்படி சொந்தநாட்டை இழிவுபடுத்துவதா என கிளம்புகின்றார்கள்

இங்கே எப்பொழுதும் எல்லா பாதுகாப்பு விஷயமும் விழிப்பாக இந்ததே இல்லை, நிறைய சொல்லலாம் இருந்தாலும் 2 விஷயம் மகா அவமனாகரமானது

முதலில் ராஜிவ் கொலையாளி பெங்களூர் பக்கம் பதுங்கி இருந்தபொழுது அதிரடி படையினை உடனே கோரினார்கள், ஆனால் அது வீரர்களை திரட்டி விமானம் ஏறி வந்து சேர ஒரு நாள் ஆனது

அதற்குள் சுதாரித்து ஆவணங்களை எரித்து, சாவகாசமாக சண்டையிட்டு , கடைசியாக தற்கொலை செய்தான் சிவராசன், அதுவும் அவன் செத்து சிலமணி நேரம் கழித்தே உடல் மீட்கபட்டது

மும்பை தீவிரவாத தாக்குதலில் நடந்ததென்ன?

தாஜ் ஹோட்டலை தீவிரவாதிகள் கைபற்றுகின்றார்கள் என செய்தி அனுப்பி மிக மிக தாமதமாகவே வந்தது பாதுகாப்பு படை

என்ன செய்தார்கள்?

தூங்கியவர்களை எழுப்பி , துப்பாக்கி வேலை செய்கின்றதா என பார்த்து, இன்னும் சாப்பிட்டு மெதுவாக ஷூ எல்லாம் போட்டு வருவதற்குள் என்னவெல்லாமோ ஆனது

அதிரடி தாக்குதல் நடத்தவேண்டிய இடங்களில் நம் படைகள் கிளம்புவது இப்படித்தான்

இதை சொன்னால் பலருக்கு கோபம் வருகின்றது

உலகிலே எதற்கும் தயார் என 24 மணி நேரமும் விழிப்பாய் இருக்கும் நாடு இஸ்ரேல் நினைத்தஉடன் அவர்களால் யுத்தமே நடத்த முடியும்

9/11 தாக்குதலுக்கு பின் அமெரிக்காவும் அப்படி மிக ஜாக்கிரதையாக ஆகிவிட்டது

இந்தியா இன்னும் விழிக்கவில்லை, அதை சொன்னால் ஏற்றுகொள்ள மறுக்கின்றார்கள்