ஸ்டாலினின் வலியினை விட ராகுலின் வலி நிச்சயம் பெரிது

“நீங்கள் தலைவனை இழந்திருக்கின்றீர்கள் , நான் தலைவனோடு தந்தையினையும் இழந்திருக்கின்றேன்” : செயற்குழுவில் மு.க ஸ்டாலின் உருக்கம்

உருக்கமான வார்த்தைகள், அந்த வலி நிச்சயம் பெரிது

ஆனால் இதே வார்த்தைகள் ராகுல் காந்திக்கும் சால பொருந்தும்

கலைஞரின் நிறைவாழ்வு மரணத்திற்கும், ராஜிவின் கொடூர மரணத்திற்கும் வித்தியாசம் நிச்சயம் உண்டு

ஸ்டாலினின் வலியினை விட ராகுலின் வலி நிச்சயம் பெரிது, காங்கிரசாரின் வலியும் அப்படியே

ஆனால் இதே ஸ்டாலின் தான் ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க வேண்டும் என அடிக்கடி சொல்லிகொண்டிருப்பவர் என்பதுதான் முரண்.

இந்த வார்த்தைகளில் இனியாவது ஸ்டாலின் ராகுலை நினைத்து கொள்ளட்டும்

தாயின் மணிக்கொடி பாரீர்…..

“”தாயின் மணிக்கொடி பாரீர், 
அதை தாழ்ந்து பணிந்து வணங்கிட வாரீர்”

No automatic alt text available.

200 ஆண்டுகால போராட்டம், அடித்து கேட்டு பின்னர் அமைதியாய் கேட்டு, அடி வாங்கி போராடி, ஒரு கட்டத்தில் வெள்ளையனுக்கும் மாபெரும் சிக்கல் ஏற்பட்டு சுதந்திரம் கிடைக்கும் நேரத்தில் கூட வஞ்சகமாய் உடைக்கபட்டு 2 துண்டுகளாக பிரிக்கபட்டு சிதைக்கபட்டது சுதந்திர இந்தியா

பஞ்சத்திலும் வறுமையிலும்தான் இத்தேசம் பிறந்தது, ஒன்றுமில்லாமல்தான் இத்தேசத்தை விட்டு போனான் வெள்ளையன்

அது சுதந்திரம் பெறும்பொழுதே மாபெரும் கலவரம் குழப்பம், பிரிட்டிசார் விதைத்து சென்ற மத பிரிவினையின் உச்சம், ஒரு கட்டத்தில் மாபெரும் தலைவனின் உயிர்பலியோடுஅது நின்றது,

சுதந்திரம் கொடுத்தாகிவிட்டது இன்னும் 2 ஆண்டில் இந்தியா 100 துண்டாக சிதறும் என்றார்கள், அதனை எல்லாம் எதிர்கொண்டு கடந்து உலகிற்கே அதிர்ச்சி கொடுத்தோம்

தேசம் நிலைத்தது, நேரு அந்த அதிசயத்தை செய்தார்

இந்தியர்களுக்கு ஜனநாயகம் தெரியாது, ஆளதெரியாது என்பதை எல்லாம் பொய்யாக்கி ஜனநாயக தேசமாக வளர்ந்தோம்.

பின்னர் காஷ்மீரை காட்டி 2 போர்கள், அதையும் தாங்கியது தேசம், நண்பனாய் நினைத்து ஐ.நா சபையில் நிரந்தர இடம்கொடு என வாதாடும் பொழுதே சுய உருவம் காட்டிற்று சீனா, ஆசிய நாடு ஒன்றிற்கு ஐ.நாவில் அந்தஸ்து என நாம் அவர்களுக்காய் போராட , அவர்களோ ஆசியா தாதா நான் என முதுகில் குத்திற்று.

அதையும் தாங்கி வளர்ந்தது இந்தியா, மறுபடியும் போர், இன்னும் ஏராள பிரச்சினைகள் ஆனால் இந்தியா அசரவில்லை.

மீண்டும் போர், அதையும் தாண்டி மத கலவர முயற்சிகள், மக்கள் தொகை பெருக்கம், எப்போதும் நேரடியாக கொஞ்சமும், மறைமுகமாக நிறையவும் தொல்லை கொடுக்கும் வல்லரசுகள்.

எல்லாம் கடந்து எழும்பிய பொழுது பாபர் மசூதி இடிப்பும் அதை தொடர்ந்த கலவரங்களும் மறுபடியும் தேசத்தை எரிய வைத்தன அதிலிருந்தும் மீண்டோம்

ஆளுக்க்கொரு கட்சி, அவனவக்கொரு கொள்கை, அவர்களுக்கென ஒரு வேலையற்ற கூட்டம், வெற்று கூச்சல், வீண் ஆர்ப்பாட்டம் என தினம் ஒரு பிரச்சினையை சந்தித்தாலும் வளர்கின்றது இந்தியா, குதிரை வேகமாக ஓடலாம், ஆனால் யானை எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் பலமானது, அதுதான் இந்தியா.

அன்று சுரண்டிபோட்ட பாத்திரமாக ஏழை இந்தியாவினை விட்டு சென்றான் வெள்ளையன், அந்த லட்சணத்தில் நாம் பாகிஸ்தானுக்கும் நஷ்ட ஈடு கொடுத்து திவாலில் இருந்தோம், தேர்தல் நடத்த கூட பணமில்லை.

உலகம் இரண்டாம் உலகப்போரின் தாக்கத்தில் இருந்ததால் பெரும் மந்த நிலை.

அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டோம். ஐந்தாண்டு திட்டம் என சொல்லி விவசாயம், பால், கடல் உணவு என உணவுக்கு தன்னிறைவு அடைந்தோம்

கல்விசாலைகள் கட்டி, அதற்காக பெரும் திட்டம் தீட்டி கல்வியில் உச்சம் பெற்றோம்.இன்று உலகநாடுகள் ஐ.டி உட்பட பல தொழில்களில் இந்தியாவினை மதிக்கின்றது என்றால் அந்த கல்விதான் அடிப்படை

ஒரு துப்பாக்கி கூட செய்ய தெரியா தேசமாக இருந்தோம், கொஞம் கொஞ்சமாக சுதாரித்தோம். இன்று உலகின் ராணுவபலம் பொருந்திய நாடுகளின் முதல் 5 இடங்களில் இருக்கின்றோம்

சைக்கிளில் ராக்கெட் பாகங்களை கொண்டுசென்றுதான் விண்வெளி ஆராய்ச்சிகளை தொடங்கினோம், நமக்கு கைகொடுப்பார் இல்லை. தத்தி திணறி தோல்வியுற்று படிபடியாக முன்னேறி இன்று கிரையோஜனிக் என்ஜின் வரை செய்து அசத்தியிருக்கின்றோம்,

செவ்வாய் கிரகம் வரை இந்தியரால் தொட முடிகின்றது.

சிறிய தேசங்கள் முன்னேறுவது விஷயம் அல்ல. இந்த மாபெரும் தேசம் இவ்வளவு பெரும் மக்களை வைத்துகொண்டு அதுவும் பல இன மொழி மக்களை வைத்துகொண்டு முன்னேறுவது வெகு சிரமம்

இன்னொரு நாட்டிற்கு இது சாத்தியமே இல்லை. அந்த அதிசயத்தை நாம் செய்துகொண்டிருக்கின்றோம்.

இவ்வுலகில் உள்ள நாடுகளை கவனியுங்கள், பல நாடுகளில் மக்கள் வாழவே முடியாது,பொறுப்பற்ற அரசாங்கமும் மனித தன்மை இல்லா போராட்டங்களும்,இன்னும் பற்பல கொடுமைகளும் பெரும் அச்சுறுத்தலை மக்களுக்கு கொடுக்கின்றது, உணவு இல்லை, கல்விசாலை இல்லை,ராணுவம் இல்லை, நீதிமன்றம் இல்லை,காவல் இல்லை, ஒன்றுமே இல்லை.

சிலநாடுகளில் ராணுவ ஆட்சி மட்டும் உண்டு, அது பெரும் ஆபத்து, சாப்பாட்டில் உப்பு போடுவதை கூட ராணுவம்தான் நிர்மானிக்கும்.

ஒரு வகையில் நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள், பொருளாதாரம் ஏறும் இறங்கும், ஆனால அமைதியாய் வாழ்கின்றோம், நிம்மதியாய் உறங்கி நம்பிக்கையாய் எழுகின்றோம், என்றாவது இங்கு வாழவே முடியாது என்று குடும்பத்தோடு அகதியாய் நாட்டை விட்டு கிளம்பியிருக்கின்றோமா?,

இதுதான் சுதந்திர இந்தியாவின் வெற்றி.

எந்த நாட்டில் சிக்கல் இல்லை? இவ்வுலகின் எல்லா நாட்டிலும் சிக்கலும், வறுமையும் உண்டு, இந்தியாவிலும் அப்படி சில சர்ச்சைகளும் பிரச்சினைகளும் இருக்கலாம். அதற்காக இத்தேசம் மகா மோசம் என எவனாவது சொல்வான் ஆனால் அவனை கடலில் தள்ளுதல் நன்று.

ஆனானபட்ட ஐரோப்பிய தேசங்கள் அகதிகளை ஏற்க தயங்கியபொழுது நாமோ ஈழம், திபெத், வங்கம், மியன்மார் என எல்லா நாட்டு அகதிகளையும் அரவணைக்கின்றோம்

புத்தமும் காந்தியமும் அந்த மானிட நேயத்தை இங்கு கொடுத்திருக்கின்றன, எந்த நாட்டு மக்களையும் நம்மால் காக்க முடிகின்றது, நிச்சயம் பெருமைபட வேண்டும்

அது மோசம், இது மோசம், எல்லாமும் மோசம் எல்லாம் அசிங்கம் என குணா கமலஹாசன் போல மோச ராகம் பாடும் பத்திரிகைகளும், தொலைகாட்சிகளும் ஒன்றை மறந்து விடுகின்றன.

சில நாடுகளில் முகநூல் கூட கிடையாது, சீனாவில் தடைசெய்யபட்ட ஊடகங்கள் சீன பெருஞ்சுவரையும் தாண்டும், இன்னும் சில நாடுகள் செவ்வாய் கிரகத்தில் மனிதனின் நிலைபோல, உலகைவிட்டே துண்டிக்கப்ட்டிருப்பார்கள், ஆனால் இந்தியா அப்படி அல்ல‌

காந்தி முதல் மோடி வரை விளாச முடிகிறது, கார்ட்டூன்கள் போட்டு கலைஞர் வரை கலாய்க்கமுடிகிறது, பெரும் ஊழலை கூட அனாசயமாய் டீகடை பெஞ்சில் விவாதிக்க முடிகிறது, இது எத்தனை நாடுகளில் சாத்தியம்?

ஏராளமான நாடுகளில் இதெல்லாம் நினைத்தே பார்க்கமுடியாத விஷயங்கள். ஒரு வார்த்தை அரசினை விமர்சித்தாலே பிடுங்கி விடுவார்கள். காலத்திற்கும் சிறை அல்லது கல்லறை.

இத்தேசத்தில் எல்லா உரிமையும் மிக அதிகமாகவே கொடுக்கபட்டிருக்கின்றது.

நமது பொது சுதந்திரத்திற்கு கேடு வரும்பொழுது கத்த முடிகிறது, கொடி பிடித்தோ அல்லது ஊர்வலமோ, சில நேரங்களில் வேறுவகையிலோ எதிர்ப்பினை காட்ட முடிகிறது, 5 வருடம் பொறுத்தால் ஆட்சியை தூக்கி எறிய முடிகிறது, காலத்திற்கும் ஆட்சியே மாறாத நாடுகளை நினைத்துபாருங்கள்??

இந்தியா கடந்த 71 ஆண்டுகளில் கடந்தபாதை மிக சிக்கலானது, எவ்வளவு இழப்புகள், எவ்வளவு நெருக்கடிகள், நிறைய துரோகங்கள்,முக்கியமாக பெட்ரோல் முழுதும் இறக்குமதி, அதனையும் தாண்டி வளர்ந்திருக்கின்றோம் அல்லவா? அதுதான் சுதந்திர வெற்றி.

1960களில் ஒரு நுட்பத்தினையும் தரமாட்டேன் அல்லது தரவிடமாட்டேன் என அடம்பிடித்த அமெரிக்கா, தனது செயற்கை கோள்களை ஏவுவதற்கு இந்திய உதவியை நாடுகின்றது அல்லவா? அது வெற்றி.

இந்தியாவின் உதவியின்றி தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் அமைதி சாத்தியமில்லை என உலகம் கருதுகின்றதல்லவா அது வெற்றி. 1962 போல் அல்ல, நாம் அடித்தால் மறுநொடி இந்திய ஏவுகனைகள் ஷாங்காய் வரை தாக்கும் என சீனா யோசிக்கின்றது அல்லவா? அது வெற்றி.

ஐ.நா சபையில் நிரந்தர உறுப்பினராகலாம் எனும் அளவிற்கு தனது முத்திரையினை உலக அரங்கில் பதித்திருக்கின்றது அல்லவா? இது தான் வளர்ச்சி.

சொன்னால் சொல்லிகொண்டே செல்லலாம், அவ்வளவு குறிப்பிடதக்க முன்னேற்றம். அதனாலதான் 1998ல் நடந்த கிழக்காசிய பொருளாதார வீழ்ச்சி, 2008ல் நடந்த சிக்கல், சமீபத்திய கிரீஸ் திவால் மிரட்டல் இவை எல்லாம் இந்தியாவினை தாக்க முடியவில்லை.

காரணம் மெதுவாக நடந்தாலும் பலமிக்க யானை இது.

இந்தியா சில வெளிநாட்டு விஷயங்களில் கண்டும் காணாமலும் செல்லலாம்,அல்லது புத்தர் போல மாபெரும் மவுனம் காக்கலாம், காரணம் சில விஷயங்களில் ஓங்கி அடித்தால் மேற்குலகின் பொருளாராதார தடை எனும் ஆயுதம் இந்தியா மீது வீசபடும்.

அவ்வாறு வீசினால் நவீன அறிவியல் சாதனம்,மருந்து பொருள், வெளிநாட்டு எந்திரங்களின் மாற்றுபாகங்கள், மருந்துகள் என ஏதும் இந்தியாவிற்குள் வராது.

விவசாயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம், நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளில் அதிக சிரத்தை, பெரும் செலவினை விழுங்கி கொண்டிருக்கும் ராணுவ கருவிகள் இறக்குமதிக்கு பதிலாக உள்நாட்டு தயாரிப்புகள், இன்னும் தொழிலதிபர்கள் மேல் கொஞ்சம் கட்டுப்பாடும் முறையான வரிவிதிப்பு இவைகளில் கவனம் செலுத்தினால் மட்டும் போதும்.

அந்த வரிவசூலினை சரியாக செய்தால் போதும்.

இன்று மேற்குலகின் பொருளாராதார தடைகளை எல்லாம் டிஷ்யூ பேப்பராக கசக்கி தூக்கி எறிந்து, அனாசயமாக அதிரடியாக‌ விளையாடுகின்றார்களே பலமிக்க ரஷ்யர்கள், அவர்களை போல நாமும் உலகை ஆட்டலாம்.

கருப்புகொடி, சிகப்பு கொடி, புறக்கணிப்புகள் எல்லாம் அரசுக்கு செய்யகூடியவையே அன்றி, நாட்டிற்கு எதிராக அல்ல‌

நாடு வேறு, அரசாங்கம் வேறு.

இந்தியா அமைதியான நாடு, அருமையான நாடு அந்த அருமையை உண‌ரவேண்டுமானால் சுதந்திர தினத்தன்று டிவியில் 20 வயது நடிகை 120 கோடிமக்களுக்கும் பேட்டியளிப்பார் அல்லது சினிமா குப்பைகள் அல்லது பட்டிமன்ற அரட்டைகள் ஓடிக்கொண்டிருக்கும்

அல்லது சாராய அரசியல்வாதிகள், ஊழல்வாதிகள் உணர்ச்சிமிக்க சுதந்திரதின வாழ்த்துக்களை சொல்வார்கள், உடனே அலைவரிசையை மாற்றிவிட்டு

பல குழப்பமான நாட்டு அரசுகளையும், சிக்கலான வாழ்க்கை வாழும் வடகொரியா, சிரியா போன்ற நாடுகளையும், பலமான அரசுகள் இல்லாததால் கொடூரமான தீவிரவாதத்திற்கு பலியாகும் நாடுகளை பாருங்கள்.

எத்தனை கொடூர அரசுகள், எத்தனை காட்டுமிராட்டிதனங்கள், போதை கும்பல்கள் ஆளும் நாடுகள், கற்பனைக்கும் எட்டாத கட்டுப்பாடுகள், அட்டகாசங்கள்.

அம்மக்களின் அழுகுரலும், பசியால் கதறும் பிஞ்சுகளின் கூக்குரலும் கேளுங்கள் தானாக உங்கள் காதுகளில் தேசிய கீதம் ஒலிக்கும், கைகள் தேசிய கொடியை வணங்கும்.

அப்படி ஒரு அற்புதமான நாடு இது, அகதியாய் சுதந்திர போராட்ட காலத்தில் கூட ஒருவர் வெளியேறாத நாடு இது, இன்றும் சர்வ சுதந்திரமாய் , மகிழ்வாய் நம்மால் வாழமுடிகின்றது.

இந்தியா ஒரு நாடு மட்டுமல்ல, ஒரு மாபெரும் அதிசயமும் கூட, பல இனங்கள், மதங்கள்,கலாச்சாரம் என கலந்து வாழும் அற்புதமான ஒரு அமைப்பு, இந்தியாவினை தவிர உலகில் எந்த நாட்டிற்கும் அது சாத்தியமானதே அல்ல.

அந்த அற்புதமான‌ நாட்டின் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் பெருமை அடைகின்றேன்

இந்நாட்டிற்கு காலம் ஒவ்வொரு தலைவனை கொடுத்துகொண்டே இருக்கின்றது. அன்றைய சிக்கலான காலத்தில் நேரு, ராணுவ‌ போட்டியான காலத்தில் இந்திரா, பொருளாதார சவலான காலத்தில் மன்மோகன் சிங், இன்று ஒரே இந்தியா என்ற உணர்வு வரவேண்டிய நேரத்தில் மோடி என யாராவது வந்து இந்த தேசத்தை தாங்குகின்றார்கள்.

மோடி மீது ஆயிரம் சர்ச்சை இருக்கலாம். ஆனால் மாநில அரசியல் வலுபெற்று அதனால் இந்த தேசமே ஒரு மாதிரி சென்ற நிலையில், காங்கிரஸ் வலுவிழந்த நிலையில் நாடு முழுக்க அறியபடும் தலைவனாக, ஒரே இந்தியாவின் இரும்பு தலைவனாக , பிரதமராக மோடி அமர்ந்திருப்பது இந்நாட்டிற்கு நல்லது.

சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்ட அந்த தியாகிகளையும், அதன் பின் இத்தேசத்தை காத்து நின்ற நேரு போன்ற தலைவர்களையும், கல்வி கண் திறந்த காமராஜரையும், விஞ்ஞானத்தில் இத்தேசத்தை காத்து நின்ற பாபா, சதீஷ்தவான், அப்துல் கலாம் போன்ற விஞ்ஞானிகளையும்

யுத்தத்தில் இத்தேசத்தை காத்து நின்ற கரியயப்பா, மோனக்ஷா போன்ற தளபதிகளையும் , எல்லை காப்பில் உயிரிழந்த எண்ணற்ற வீரர்களுக்கும் நன்றி கண்ணீர் தெரிவித்தபடி சொல்கின்றோம்.

வந்தே மாதரம், வாழ்க பாரதம்.

உலகின் மாபெரும் அதிசயமும், பெரும் அற்புதமுமான இந்த தேசத்தின் 72ம் சுதந்திரதின விழாவினை இத்தேசம் மிக உற்சாகமாக கொண்டாடட்டும்.

இனிவரும் காலம் இந்தியர் காலமாய் உலகில் மலரட்டும்.

இந்த அருமையான நாட்டின் குடிமக்களான சகோதர சகோதரிகளுக்கு கம்பீரமான‌ சுதந்திர தின வாழ்த்துக்கள்

இந்த Benitto Kumar என்பவர் யார்?

இந்த Benitto Kumar என்பவர் யார்? ஏன் அவரை இன்னும் விட்டு வைத்திருக்கின்றாய் என பலர் கேட்டுகொண்டே இருக்கின்றார்கள்

அவர் நமது உறவினர், நாம் பள்ளியில் படிக்கும்பொழுது அவர் கல்லூரியில் படித்தவர். அந்த சிறிய கிராமத்தில் அவர் எல்லோருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன்

நிறைய வாசிப்பவர், சிறுகதைகள் எல்லாம் அப்பொழுதே எழுதியவர். ஒருமுறை பிரபல பத்திரிகையில் அவர் கதைக்காக அப்பொழுதே 10 ஆயிரம் பரிசு கிடைத்திருந்தது

எல்லாவற்றிற்கும் மேல் எம்.காம் படிப்பில் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் அன்றே தங்கபதக்கம் பெற்றவர்

அதெல்லாம் அந்த சிறிய கிராமத்தில் கொண்டாடபட்ட நிகழ்வுகள், அவரின் தாயார் அன்று சிரித்த சிரிப்பு இன்றும் மனதிலே நிற்கின்றது

நிச்சயம் பெரும் அறிவாளி , நிரம்ப வாசித்தவர். தன் சினிமா கனவுகள் கைகூடா நிலையில் மும்பை சென்றார் அப்படியே துபாய் சென்றார்

பள்ளிபருவத்தில் அவர் எமக்கு ரோல்மாடல் என்பதில் சந்தேகமில்லை.

நீண்டநாளைக்கு பின் தொடர்பு எடுத்தால் அதன் பின்புதான அவருக்கு இருந்த இன்னொரு பக்கம் புரிந்தது

அவரின் கல்லூரி நாட்களில் அவருக்கொரு நண்பர் இருந்தார், அவர் ராமசந்திரன் ரசிகர் வெறியர். இவரும் அவரும் இந்த செய்திதாள், ரேடியோ இன்னபிற விஷயங்களுக்காக நண்பர் ஆகி இருந்தார்கள்

நண்பரின் பெற்றோரும் இவரை மிக மிக வரவேற்று தன் மகனாக பாவித்தார்கள்

அதில் இவர் இந்த மீடியா செய்திகளுக்காக அவரிடம் சிக்கி அவரிடம் இருந்த எம்ஜிஆர் கிறுக்கு இவருக்கு வந்திருக்கின்றது.

அதாவது நண்பனின் பெற்றோர்கள் இவர் அவரை திருத்துவார் என பழக சொன்னால், அந்த எம்ஜிஆர் கிறுக்கர் இவரை திருத்தி முழு ராமசந்திரன் பைத்தியமாக மாற்றி இருக்கின்றார்

எதிர்பாரா பின்விளைவு என்பது இதுதான்

ஒருகாலத்தில் ராமசந்திரன் என்றால் அதன்பின் ரஜினி ரசிகராக ஆகவேண்டுமல்லவா? மனிதர் சிக்கிவிட்டார்

இப்பொழுது வந்து எல்லா பதிவுகளிலும் திமுகவினரிடம் சிக்கி விடுகின்றார், அவர்களும் பின்னி எடுக்கின்றார்கள் மனிதர் அசருவதாக தெரியவில்லை

மிக சிறுவயதில் என் தந்தை கை நீட்டி காட்டி , படித்தால் இப்படி படிக்க வேண்டும் , எழுதினால் இப்படி எழுதவேண்டும் என சொன்னவர்களில் இவரும் ஒருவர்

மிக நல்லமனிதர்தான், ஆனால் இந்த ரஜினி கிறுக்க்கும் கலைஞர் வெறுப்பும் மட்டும் போகவே இல்லை, சகவாச தோஷம் அது

முன்னொரு காலத்தில் ஒரு நண்பன் செய்த உதவிக்கு அவர் காட்டிகொண்டிருக்கும் கைமாறு அது , வேறு ஒன்றுமில்லை

அந்த நண்பனை பிடித்து சாத்தினால் எல்லாம் சரியாகிவிடும்

உட்கட்சி குழப்பத்திற்கும், குடும்ப சண்டைக்குமா மோடி பெயரை இழுக்க வேண்டும்?

ஒரு கும்பல் இந்த மோடியும் அமித்ஷாவும் அழகிரியினை தூண்டி விடுகின்றார்கள் என சொல்லிகொண்டிருக்கின்றன‌

அழகிரி என்பவர் வைகோ பிரிவினை தொடர்ந்து கட்சிக்குள் வந்தவர், மோடியா கொண்டுவந்தார்?

தா.கிருட்டினன் கொலையில் மோடியா தப்புவித்தார்?

இன்னும் ஏராளமான சர்ச்சைகளில் அழகிரி சிக்கும்பொழுது மோடியா காத்தார்?

தினகரன் பத்திரிகை அலுவலகத்தை மோடியா எரிக்க சொன்னார்? அவரா கருத்துகணிப்பு நடந்த்த சொன்னார்?

இந்த அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ் எல்லாம் டெல்லியிலிருந்தா மதுரைக்கு வந்தார்கள்?

கட்சிக்குள் அழகிரியினை இழுத்தது கலைஞர், அவரை வைத்து சில வெற்றிகளை பெற்றதும் அவரே

அழகிரிக்காக மாறன் குடும்பத்தையே ஒதுக்கி வைத்ததும் கலைஞர்

அழகிரி பற்றி தினகரன் பத்திரிகை அவதூறு எழுதும் பொழுது அழகிரி என் ரத்தம் என சீறியவர் கலைஞர், மறுக்க முடியுமா? இல்லை மறக்கத்தான் முடியுமா?

அழகிரியினை மத்திய அமைச்சராக்கி மகிழ்ந்ததும் கலைஞர், அந்த சோகமான காலகட்டங்களை நினைத்துத்தான் மன்மோகன்சிங் சென்னை பக்கமே வருவதில்லை

கலைஞர் நினைத்திருந்தால் அழகிரி பிரச்சினையினை நொடியில் தீர்த்திருக்க முடியும், ஆனால் மிக சிறந்த அரசியல்வாதியான அவர் அழகிரியின் மிரட்டல் சில இடங்களில் தேவை என்பதால் அதை செய்யவில்லை

இன்று கலைஞர் இல்லா நிலையில் திமுக எனும் கலைஞரின் பிரைவேட் கம்பெனியில் தனக்கான பங்கை கேட்டு நிற்கின்றார் அழகிரி

அழகிரி விஷயத்தில் முழு குழப்பமும் கலைஞர் செய்தது, அவரே பொறுப்பு

இதில் எங்கிருந்து மோடி வந்தார்? எங்கிருந்து அமித்ஷா வந்தார்?

இவர்கள் செய்த குழப்பத்தின் விளைவுக்கு மோடி எங்கிருந்து பொறுப்பாவார்?

எதற்கெடுத்தாலும் மோடி , அமித்ஷா என கத்துவதே இவர்களுக்கு வழக்கமாகிவிட்டது

உட்கட்சி குழப்பத்திற்கும், குடும்ப சண்டைக்குமா மோடி பெயரை இழுக்க வேண்டும்?

தகப்பன் சொத்துக்கு மகன் வந்து நிற்பது சாதாரண விஷயம், அழகிரி தன் தந்தையார் கம்பெனியில் தனக்கான பங்கு கேட்டு வந்திருகின்றார்.

இதில் மோடி சூது என்ன?

இப்படியா அரசியல் செய்ய வேண்டும்?


கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத மிகபெரும் வீழ்ச்சியினை இந்திய ரூபாய் அடைந்திருக்கின்றது

மிகபெரும் வீழ்ச்சி, இதற்கு யார் முழுகாரணம் என்றால் அந்த ஏழைதாயின் மகன்

ஆனால் கொஞ்சமும் வெட்கமும் மானமும் இன்றி நாளை என் ஆட்சியில் இந்தியா மிக முன்னேறிற்று என சுதந்திர தின உரை ஆற்றுவார் பாருங்கள்

அது ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியினை விட பெரும் அவமானம்


ஜெயக்குமார் நம்மை ஏமாற்றவில்லை

Image may contain: 2 people, text

நேற்றே சொன்னோம், ரஜினி எடப்பாடியினை சீண்டுகின்றார், நாளை ஜெயக்குமார் சும்மா பறந்து பறந்து பேட்டி கொடுப்பார் என சொன்னோம்

ஜெயக்குமார் நம்மை ஏமாற்றவில்லை,

நாம் சொன்னது போலவே லவுடு ஸ்பீக்கரில் வந்து ரஜினியினை கிழித்துகொண்டிருக்கின்றார்

Image may contain: 2 people, people smiling, text

கருணாநிதி, ஜெயா இல்லாத இடத்தை நடிகர்களால் நிரப்ப முடியாது : தமிழிசை

அக்கா ஒரு விஷயத்தை மறந்து கவலைபடுகின்றார்

ஜெயா என்பவர் ஒரு நடிகை, நடிகையின் இடத்தை இன்னொரு நடிகனோ நடிகனோ எளிதாக நிரப்பலாம்

கருணாநிதி அட்டகாசமான வசனகர்த்தா, அரசியலுக்கும் மிக பொருத்தமான வசனங்களை எழுதி வரலாற்றில் நின்றார்

இந்த சினிமாக்காரர்கள் இடத்தையா இன்னொரு சினிமாக்காரர்களால் நிரப்ப முடியாது?

அக்கா , நீங்கள் உண்மையில் மருத்துவம் படித்தீரா? இல்லை போலி டாக்டரா?


ரபேல் ஊழல் தொடர்பாக மோடி விவாதிக்க தயரா? : ராகுல்

ரபேல் ஊழல் தொடர்பாக மோடி என்னிடம் நேருக்கு நேர் விவாதிக்க தயரா? என சவால் விடுகின்றார் ராகுல்

பிரதமர் மோடியோ ராகுல் ஏதோ நீரவ் மோடியினை அழைப்பது போல் கண்டுகொள்ளாமல் இருக்கின்றார்

கோலியின் சவாலை ஏற்று எங்கோ கல் மேல் மல்லாக்க கிடந்த மோடிக்கு ராகுல் சவாலை ஏற்க தயக்கம் இருக்கின்றது

இதற்கு மேல் ஏதும் கேட்டால் “ஏழைதாயின் மகன் என்பதால்தானே என்னை பாடாய் படுத்துகின்றீர்கள்?” என அழ ஆரம்பித்துவிடுவார்

ஜின்னாவும், ராமசந்திரனும் பெரும் எடுத்துகாட்டுகள்

Image may contain: 1 person, sunglasses, hat and close-upஇந்த உலகத்தில் இரு குல்லா தலையர்கள் மிக மிக அதிர்ஷ்டசாலிகள், யாரவது போராடியிருப்பார்கள் பலன் இவர்களுக்கு சேர்ந்திருக்கும், வாழ்வாங்கு வாழ்ந்திருப்பார்கள்

அவர்களில் முதல் அதிர்ஷ்டசாலி ஜின்னா, அவர் இந்திய சுதந்திரத்திற்கு போராடியவரும் அல்ல, பாகிஸ்தான் வேண்டும் என துப்பாக்கி தூக்கியவரும் அல்ல,

கட்டபொம்மன் முதல் காந்திவரை போராடிய போராட்டத்தின் முடிவில் தனிநாடு கிடைத்தென்னவோ இவருக்குத்தான்.. வெள்ளையன் தானகவே தூக்கி கொடுத்து சென்றான், அவ்வளவுதான்.

பாகிஸ்தான் சுதந்திரபோர் என ஏதாவது வரலாற்றில் உண்டா? இல்லை

Image may contain: 1 person, hat and close-upபிரிட்டிஷ் இந்திய தலைவர்களுள் படித்த இஸ்லாமியர் எனும் ஒற்றை தகுதி அவருக்கு பாகிஸ்தானின் தந்தை எனும் பட்டத்தை கொடுத்தாயிற்று

இன்னொரு அதிர்ஷ்சாலி தமிழக குல்லா ராமசந்திரன்,

பெரியார் கல்லெறிநடுவே இயக்கம் வளர்த்தார், அண்ணாவும் கலைஞரும் கால் தேய தேய நடந்து கட்சி வளர்த்தார்கள், அசால்ட்டாக வந்த ராமசந்திரன் எல்லாவற்றையும் அடித்து சென்றார்

திமுகவில் இருந்த மிகசிறந்த மக்கள் அபிமான நடிகர் எனும் பிம்பம் ராமசந்திரனுக்கு புரட்சி தலைவர் பட்டம் பெற காரணமாயிற்று

இதெல்லாம் விதி, அவர்கள் விதி அப்படி இருந்திருக்கின்றது,

இந்த இரு குல்லாக்காரர்களின் ராசியினை பார்த்தால் அவர்களின் ஜாதகத்தை உடனே பார்க்கவேண்டும் என தோன்றுகின்றது

ஒரு புல்லும் புடுங்காமல் நாடே கிடைக்கின்றது என்றால் அவர்கள் ராசி எப்படிபட்டதாக இருக்க வேண்டும்?

ஜின்னாவிற்கு பிரிட்டிசாரும், ராமசந்திரனுக்கு இந்திரா காந்தியும் அப்படி கிடைத்திருக்கின்றார்கள்

ஆனால் ஜின்னா இறுதியில் வருந்தினார், பாகிஸ்தான் உருவானது எவ்வளவு பெரும் ஆபத்து என அவருக்கு புரிந்தது,

“நான் மிகபெரும் தவறு செய்துவிட்டேன், தனிநாடு கேட்டது தவறு, என் இறுதிகாலத்தில் மும்பை மாளிகையில் வசிக்க ஆசைபடுகின்றேன்” என சொல்லியபடியே செத்தார் ஜின்னா

அதிமுக உருவானது எவ்வளவு பெரும் தவறு என நம் கண்முன்னே பார்த்துகொண்டே இருக்கின்றோம்…

எந்த நோக்கமும் இன்றி யாரோ தூண்டிவிடுகின்றார்கள் நாம் தலைவராவோம், மன்னராவோம் என ஒருவர் சுயபுத்தியின்றி கிளம்பினால், அவருக்கும் கூட்டம் கூடினால், அது வருங்காலத்தில் எவ்வளவு பெரும் சீரழிவினை கொண்டு வரும் என்பதற்கும்,

தொலைநோக்கு இல்லா அவசரகுடுக்கைகள் அரசியல் செய்தால் வருங்காலம் என்னாகும் என்பதற்கும்

இந்த ஜின்னாவும், ராமசந்திரனும் பெரும் எடுத்துகாட்டுகள்