கலைஞருக்கு பாரத ரத்னா வழங்கபட வேண்டும் : தமிழிசை

கலைஞர் சமாதியில் மலரலங்காரம், காய்கனி அலங்காரம் என தினமும் பல‌ மரியாதைகள், உடன்பிறப்புகள் சிலாகிப்பு

இந்த அலங்காரங்களை ஆலய சிலைகளுக்கு செய்தால் அதன் பெயர் மூடநம்பிக்கை, வீணர்கள் நம்பிக்கை, முட்டாள்கள் வேலை, அடிமைசதி , பார்ப்பானின் வியாபார தந்திரம் இன்னபிற‌

அதையே கலைஞர் சமாதியில் செய்தால் அது அவர் மீதான தொண்டர்கள் அன்பு

ஆக பகுத்தறிவு என்பது சில இடங்களில் கண்ணை மூடிகொள்வது அல்லது பழைய கொள்கைகளை எல்லாம் சுத்தமாக மறந்துவிடுவது.


கலைஞருக்கு பாரத ரத்னா வழங்கபட வேண்டும் : தமிழிசை

அக்காவின் திருமணத்தை நடத்தி வைத்த பெரும் தியாகத்தை புரிந்தவர் கருணாநிதி

ஆனால் அந்த தியாகத்திற்காக பாரத ரத்னா கேட்பதெல்லாம் சரியில்லை


ரஜினி இப்பொழுது ஒரு சில படங்களில் நடிக்கின்றாராம்

அப்படத்தின் இயக்குனர்கள் கொஞ்சம் விவரமானவர்கள் என்றால் வில்லன் வேடத்தில் அமைச்சர் ஜெயகுமாரை நடிக்க வைக்கலாம்

படம் 100 நாள் என்ன? 300 நாள் பிய்த்துகொண்டு ஓடும்.

படம் ரஜினியின் எல்லா கடன் சிக்கல்களையும் தீர்ப்பது உறுதி, லதா ரஜினிகாந்தின் வாடகைபாக்கியினையும் தீர்த்துவிடலாம்


ஜோதிகாவிற்கு நேரம் சரியில்லை

Image may contain: 1 person, text

ஜோதிகாவிற்கு நேரம் சரியில்லை

கிறிஸ்தவர்கள் பொறுமையாக சகித்து செல்வார்களா என்பது தெரியவில்லை, ஆனால் சிலுவையில் அறைந்துவிடும் வாய்ப்பு அதிகம்

சந்தடி சாக்கில் மூஸா நபியினை ஜோதிகா கேவலபடுத்துகின்றார் என யாராவது கிளப்பிவிட்டால் போதும்

பக்ரீத் ஆடு நிச்சயம் ஜோதிகாதான்

Image may contain: one or more people and text

கில்லாடி கிளைவ் : 03

கில்லாடி கிளைவ் : 03

Image may contain: 1 person, standing and outdoor

சென்னை கோட்டைக்கு வந்த கிளைவின் கையில் கால் காசு இல்லை, லண்டனில் அவர் தந்தைக்கு தெரிந்த நபர் ஒருவர் இருப்பதாக நம்பி வந்த கிளைவிற்கு அந்த நபரும் லண்டன் சென்றது பின்னர்தான் தெரிந்தது

சென்னை வெயில் அவருக்கு ஒத்துவரவில்லை, உடல் நலம் கெட்டது, அவருக்காக கொடுக்கபட்ட குமாஸ்தா அறையும் அவருக்கு உகந்ததில்லை

அக்காலங்களில் அவருக்கு ஆறுதலை கொடுத்த இடம் கடற்கரை, கோட்டையின் மாதா கோவில் , அந்த நூலகம்

சென்னை கவர்னர் ஒரு நூலகமும் வைத்திருந்தார், அங்கு விடாபிடியாக வாசித்து நேரத்தை கடத்தினார் கிளைவ்

குமாஸ்தா பணியில் அவருக்கு சிக்கல்கள் வந்தன, உடல் நல கோளாறு, மன நெருக்கடி, சூழல் எல்லாம் அவரை பாதித்திருந்தன, மேலதிகாரிகளுடன் சண்டை எல்லாம் போட்டார்

அத்தோடு சும்மா விட்டாரா? கிளைவிற்கு ஒரு மனசிக்கல் இருந்தது, இந்த 3 படத்தின் தனுஷ் சாயல் அது. உச்சகட்ட மனநெருக்கடிக்கு சென்றுவிட்டால் தற்கொலைக்கு முயற்சிப்பார்

Image may contain: sky, house, grass, tree, outdoor and natureசென்னை கோட்டையிலும் இரண்டுமுறை முயற்சித்தார், ஆனால் ஒருமுறை துப்பாக்கி வெடிக்கவில்லை, இன்னொரு முறை குண்டு காதுபக்கம் உரசி சென்றது. இப்படியாக விதி அவரை காப்பாற்றியது

வேண்டா வெறுப்பாக கிளைவ் சாகவும் முடியாமல் வாழவும் முடியாமல் திணறியபொழுதுதான் ஐரோப்பாவில் வாரிசு உரிமை போர் வெடித்தது

என்ன வாரிசு? யார் யாருக்கு வாரிசு?

ஆஸ்திரியா நாட்டில் சார்லஸ் என்றொரு மன்னன் இருந்தார், அவருக்கு ஆண்வாரிசு இல்லை. இதனால் தனக்கு பின் தன் மகள் மரிய தெரசே ராணி ஆகவேண்டும் என பிரிட்டன் உட்பட்ட நாடுகளிடம் எல்லாம் சொல்லி வைத்துவிட்டு செத்துவிட்டார்

ஆனால் பல்கேரியா எனும் பக்கத்து நாட்டு மன்னன், அவர் எனக்கு தூரத்து உறவு அதனால் அவர் நாட்டுக்கு நானே மன்னன் என சொல்லிகொண்டிருந்தான்

இது பஞ்சாயத்து பேசி முடியாமல் போர் ஆயிற்று

பிரான்சும், ஸ்பெயினும் பல்கேரியா மன்னனுக்கு ஆதரவாய் கிளம்பினார்கள், ஆச்சரியமில்லை பிரிட்டனுக்க்கு எதிராக பிரான்ஸ் அன்று எங்கு நிற்கும்

பிரிட்டனின் பெரும் பலம் கப்பற்படை என்றாலும் ஸ்பெயினும் பிரான்சும் கூடி தாக்கியதில் கொஞ்சம் திணறியது, ஐரோப்பாவில் இந்த யுத்தம் வெடிக்க உலகெல்லாம் இருந்த பிரென்ஞ் முகாம்களிலும் அது தென்பட்டது

அப்படி மொரிஷியஸில் பிரான்சின் கவர்னராக இருந்தவன் லா‍பார்ட்டினே, இவன் இந்திய பகுதியில் சுற்றி திரிந்த பிர்ட்டன் கடற்படையுடன் மோத தொடங்கினான், வாரிசு போர் ஐரோப்பாவினை தொடர்ந்து ஆசிய கடலுக்கும் வந்தது

Image may contain: tree, sky, outdoor and natureஅப்படி பிரிட்டன் படையுடன் மோதியவன் வெற்றியும் பெற்று, பிரிட்டனின் சென்னை கோட்டையினை கைபற்றினான், கம்பெனியாரிடம் அவனை எதிர்க்கும் அளவு பலமில்லை என்பதால் கோட்டை அவனிடம் சரண்டடைந்தது

கிளைவ் அப்பொழுது அங்குதான் இருந்தார், ஆனால் சாதரண குமாஸ்தா என்ன செய்ய முடியும்?

சென்னை கோட்டையில் பிரான்ஸ் கொடி பறந்தது, மொத்த பிரிட்டானியரும் கைது செய்யபட்டனர், கிளைவ் உட்பட‌

கிளைவுக்குள் உறங்கி கொண்டிருந்த மிருகம் அப்பொழுதுதான் விழித்தது

பிரிட்டானியர் நாட்டுபற்று மிக்கவர்கள், பிரான்ஸ் என்றால் ஆகாது. பிரிட்டனின் கோட்டையினை பிரான்ஸ் கைபற்றியதும் தங்களை கைதியாக்கியதும் அவன் உள்ளத்து மிருகத்தை உறும வைத்தது

ஆனால் என்ன செய்யமுடியும்?

லாபார்ட்டினோ பிரிட்டன் அரசுக்கு நிபந்தனை வைத்தான், ஏராளமான பணம் கொடுக்கும் வரை, யுத்ததிற்கு நஷ்ட ஈடு கொடுக்கும் வரை கோட்டை எங்கள் கட்டுபாடு யாரையும் விடுவிக்க முடியாது என சொல்லிவிட்டான்

இந்த செய்தி கேள்விபட்டு ஓடிவந்தான் புதுச்சேரி டூப்ளே, ஏற்கனவே இந்தியா முழுக்க பிரான்ஸ் ஆளப்போகின்றது என சொல்லிகொண்டிருந்தவனுக்கு எப்படி இருந்திருக்கும்? பெரும் மகிழ்ச்சி

எனினும் லா‍‍‍பார்ட்டினோவிடம் நீ மொரிஷியசுக்குத்தான் பொறுப்பு, இந்தியாவிற்கு நானே பொறுப்பு என சொல்லி அவனை விரட்டிவிட்டு கோட்டையினை பிடித்தான்

டூப்ளேக்கு தான் இந்தியாவினை ஆளபோகின்றோம் எனும் கனவு இருந்ததால் அவன் சொன்னான், இனி புதுச்சேரியே தலமையகம் ,இந்த சென்னை கோட்டை தேவை இல்லை இடித்துவிடலாம்

ஆனால் இடித்துபோடவில்லை என்றாலும் முக்கியமான பகுதிகளை சேதபடுத்தினான் என்கின்றது வரலாறு

அத்தோடு கோட்டையின் பொருட்கள், செல்வம், தங்கம் முக்கியமாக பிடித்த பிரிட்டானியரோடு புதுச்சேரிக்கு சென்றான்

எப்படி சென்றான் பிரிட்டனின் சென்னை கவர்ணர் உள்ளிட்ட பெரும் புள்ளிகளையும், அதிகாரிகளையும், குமாஸ்தாக்களையும் விலங்கிட்டு புதுச்சேரி தெரு வழியாக மக்கள் பார்க்க பெருமையுடன் இழுத்து சென்றான்

பிரான்ஸ்காரன் கையிலே சிக்கியது அவமானம் என்றிருந்த கிளைவிற்கு இந்தியர் முன்னிலையில் தெரு தெருவாய் இழுத்து சென்றது பெரும் அவமானத்தை கொடுத்தது

புதுச்சேரியில் அடைபட்ட கிளைவ் தூங்கவில்லை, அவனின் மன உளைச்சல், நோய், பிரிட்டன் பிரிவு எல்லாம் நொடியில் மறைந்து டூப்ளேயிடம் பெற்ற அவமானமே மனம் முழுக்க நிறைந்திருந்தது

ஒரு அமாவாசை அன்று புதுச்சேரி சிறையில் இருந்து தப்பினான் கிளைவ், இஸ்லாமியர் போல் மாறுவேடம் போட்டுகொண்டு வியாபாரி போல் நடித்து புதுச்சேரியினை கடந்து வெளிவந்தான்

அப்பொழுது கடலூரில் டேவிட் கோட்டை என கிழக்கிந்திய கம்பெனிக்கு சிறிய அலுவலகம் இருந்தது, அங்கு வந்து சேர்ந்தான், அப்பொழுது அங்கிருந்த அதிகாரிகளிடம் கண்களில் கோபம் சிவக்க கேட்டான்

(அந்த கோட்டை இன்று அழிந்து கிடக்கின்றது, கிளைவ் புலியான இடம் அதுதான்)

நான் இனி குமாஸ்தா வேலை செய்யபோவதில்லை என்னை ராணுவத்திற்கு மாற்றுங்கள்

அதுவரை அவனை சண்டைக்கு பயன்படுத்த திட்டமே இல்லா மேலதிகாரிகள் அதை பொருட்படுத்தவில்லை

கிளைவ் கோபத்தில் சொன்னதையே சொல்லிகொண்டிருந்தான்

சரி, அதோ நிற்கின்றானே மல்யுத்த வீரன் அவனை வெல்ல கூட வேண்டாம், கீழே தள்ளிவிட்டு வா பார்க்கலாம் என அவனை இன்னும் அவமானபடுத்தினர் மேலதிகாரிகள்

சென்ற வேகத்தில் சில நொடிகளில் அவனை வீழ்த்திகாட்டினான் கிளைவ்

அந்த கோட்டை அவனை விசித்திரமாய் நோக்கியது. அவனின் தைரியத்திற்கும் வேகத்திற்கும் ராணுவபணி சரி என சேர்த்துகொண்டனர்

கடலூர் டேவிட் கோட்டையில்தான் அவன் ராணுவ வீரன் ஆனான்

கொஞ்ச நாட்களில் ஐரோப்பாவில் பிரிட்டனும், பிரான்சும் சமாதானமாக சென்னை கோட்டை பிரிட்டானியருக்கே திருப்பி கொடுக்கபட்டது

(சென்னை கோட்டை அப்படியே பிரான்ஸ் கையிலிருந்திருந்தால் இப்பொழுது இன்னொரு புதுச்சேரியாக சென்னை இருந்திருக்கும், இப்பொழுது கிரண்பேடியுடன் பழனிச்சாமி மோதிகொண்டிருப்பார்

டாஸ்மாக் எல்லாம் வராமலே போயிருக்கும்)

புதுச்சேரி ஆகும் யோகத்தை சென்னை இழந்தது.

அங்கு மறுபடி வந்தான் கிளைவ், ஆனால் இப்பொழுது ராணுவ வீரன் அல்லவா? பிரெஞ்ச்காரர்களை பழிதீர்க்க சமயம் பார்த்துகொண்டே வந்தான்

ஆனால் சென்னை கோட்டைக்கு வந்ததும் ராணுவத்தில் இருந்து குமாஸ்தா வேலைக்கு மாற்றபட்டான் கிளைவ்

ஏன் என கேட்டால் இனி யுத்தமில்லை ஒழுங்காக கணக்கு எழுது போ என்றார்கள்

ஆயினும் அப்பொழுது தளபதியாக இருந்த லாரன்ஸ் என்பவருக்கு கிளைவ் வேல் நல்ல அபிப்ராயம் இருந்தது, சிறிய சண்டைகளில் அவரை பங்கெடுக்க செய்தார்

சிறிய சண்டை என்றால் கடற்கொள்ளை தகறாது , ஏதும் வெள்ளையருக்கு எதிரான சண்டை போன்றவை

ஆனால் சண்டைமுடிந்தவுடன் கிளைவினை குமாஸ்தா வேலைக்கு அனுப்பவும் அவர் தயங்கவில்லை

குமாஸ்தாவாகவும் சில நேரம் ராணுவபணி என்றிருந்த கிளைவின் மனம் மட்டும் டூப்ளேவினை பழிவாங்க தேடிகொண்டே இருந்தது

ஆனால் அது சாத்தியமில்லை என லாரன்சே சொன்னாலும் கிளைவ் நம்பிகொண்டே இருந்தான்

அதற்கான வாய்ப்பு ஆற்காடு நவாப் குடும்பத்தின் மூலம் வந்தது, அங்கும் வாரிசு உரிமைபோர் ஏற்பட்டது

நிலமைகளை பிரிட்டிசார் கவனிக்காமல் விட்டனர், கவனித்து என்ன ஆகபோகின்றது என்பது அவர்கள் எண்ணம்

காரணம் ஆற்காடு நவாபின் படையும் அவரின் செல்வாக்கும் பெரிது, முகலாயருக்கு கட்டுபட்டவர் எனும் பெரும் பாதுகாப்பு வேறு

அதனால் பிரிட்டானியர் அவர் வழிக்கு செல்லவில்லை, வியாபாரத்தில் குறியாய் இருந்தனர்

ஆனால் கிளைவோ அங்கு ஒரு கண் அல்ல, இரு கண்களையும் வைத்து பார்த்துகொண்டே இருந்தான்

தொடரும்…

பாரதியார் கவிதையினை மேற்கோள் காட்டி சுதந்திர தின உரை ஆற்றினார் மோடி

பாரதியார் கவிதையினை மேற்கோள் காட்டி சுதந்திர தின உரை ஆற்றினார் மோடி

என்னதான் சர்ச்சை என்றாலும் வாழ்த்தவேண்டிய இடங்களில் வாழ்த்தவேண்டும்

பாரதி இத்தேசத்தையும் அதன் விடுதலையினையும் அதன் எதிர்காலத்தையும் பாடி பாடி செத்த கவிஞன்

அவனுக்கு இதுகாலம் வரை இத்தேசத்தில் பெரும் அடையாளமில்லை, அதுவும் காங்கிரஸ் பிரதமர்கள் பெரும்பாலும் அவனை கண்டுகொண்டதே இல்லை

முதன் முதலாக அந்த சிங்க தமிழனின் வரிகளை பாரத பிரதமர் செங்கோட்டையில் முழங்குகின்றார், அந்த நன்முயற்சிக்கு வாழ்த்துக்கள்

அய்யா மோடி

எம் பாரதியின் அருமையினை நீர் உணர்ந்து கொண்டதற்காக தமிழர்களின் நன்றிகள்

அப்படியே அவனின் எல்லா பாடல்களையும் பாருங்கள், அதில் “வந்தே மாதரம் என்போம்” எனும் பாடலும் “தாயின் மணிக்கொடி பாரீர்” எனும் பாடலும் இருக்கும்

தேசபக்திக்கு அதைவிட சிறந்தபாடல் எங்கு உண்டு?

அதனால் அதில் ஒன்றை தேசிய கீதமாக அறிவித்து அந்த தேசகவிஞனுக்குரிய கவுரவத்தை கொடுங்கள்

தலைவி இருப்பதால் இத்தேசம் இன்னும் அழகாக கம்பீரமாக‌ இருக்கின்றது

Image may contain: 1 person, selfie and close-upதலைவியின் நாட்டில் இருப்பதை விட என்ன பெருமை வேண்டி இருக்கின்றது?

தலைவி இருப்பதால் இத்தேசம் இன்னும் அழகாக , கம்பீரமாக‌ இருக்கின்றது, அந்த மகிழ்ச்சியில் தேசம் சுதந்திர நன்னாளை மகா உற்சாகமாக கொண்டாடுகின்றது

இத்தேசத்தின் பெருமையான‌ ஒரு விஷயம் மீட்கபட வேண்டுமென்றால் அந்த கோஹினூர் வைரம் லண்டனில் இருந்து மீட்கபட வேண்டும்

மிக விரைவில் அது மீட்கபட்டு தலைவியின் மூக்குத்தியில் பொருத்தபடும் என சங்கம் சுதந்திர தினநாள் உறுதி ஏற்கின்றது

பணமதிப்பு எப்படி சரிந்தது

சில மோடி பக்தர்கள் வந்து உலக பொருளாதாரமே சரிகின்றது, இந்திய பணம் சரியாதா? அவரை சொல்ல ஒன்றுமில்லை என சொல்லிகொண்டிருக்கின்றார்கள்

உதாரணம் சொல்லுங்கள் என்றால் துருக்கி பணம் சரிந்துவிட்டதாம்

துருக்கி மேல் கடும் வெறுப்பில் இருக்கின்றது அமெரிக்கா, அதன் ராணுவபுரட்சி சதி திட்டத்தை துருக்கி முறியடித்ததிலும் இன்னும் அரபு அரசியலில் அது காட்டும் சில பிடிவாதங்களும் அமெரிக்காவிற்கு கடும் எரிச்சலை கொடுத்தன‌

குறிப்பாக அதிபர் எனும் முரட்டுபதவிக்கு வந்திருக்கும் எர்டோகன் அமெரிக்காவிற்கு பிடித்த நபர் அல்ல‌

இதனால் தன் பிரத்யோக ஆயுதமான பொருளாதார தடையினை அதன் மேல் வீசிற்று அமெரிக்கா

அந்த தடையினாலே துருக்கி பணமதிப்பு வீழ்ச்சியுற்றது, கடும் வீழ்ச்சி 40% வரை விழுந்தது

இதற்கும் இந்திய நிலைக்கும் என்ன சம்பந்தம்? இந்தியா மேல் என்ன தடை விதித்தார்கள்

இங்கு ஜிஎஸ்டி முதல் பண ஒழிப்பு வரை ஏக விஷயங்கள், இந்த மாட்டுகறி முதல் பல அரசியல் வெளிநாட்டு முதலீடுகளை யோசிக்க வைக்கின்றன‌

துருக்கி பணம் வீழ பொருளாதார தடை என்றால், இந்திய பணம் வீழ ஒரே காரணம் இந்த அரசின் தவறான கொள்கைகள்

அது ஒன்றே காரணம்

மற்றபடி வேறு நாட்டு பணம் ஏதும் சரியவில்லை, அமெரிக்காவுடன் வாணிக யுத்தம் நடத்தும் சீனாவின் பணமதிப்பு அப்படியெ இருக்கின்றது

இதை இப்புகொள்ளாத பக்தாஸ் வடகொரியாவினை பார், பாலஸ்தீனத்தை பார், துருக்கியினை பார் என சம்பந்தமே இல்லாத நாடுகளை காட்டிகொண்டிருக்கின்றன‌

என்றைக்கு இவர்கள் சம்பந்தமாக பேசினார்கள்?

பொருளாதாரம் என கேட்டால் அவர் ஏழைதாயின் மகன் என்பார்கள், பணமதிப்பு எப்படி சரிந்தது என்றால் நேரு ஒழிக என்பார்கள்

தமிழன் என்பதற்காக திமுகவிலும் வரமுடியாது

ஏதோ நாம் அண்ணா காலத்தில் இருந்து திமுக போலவும், கலைஞருடன் பாளையங்கோட்டை சிறையில் இருந்தது போலவும், மிசாவில் ஸ்டாலினுடன் அடிவாங்கியவன் போலவும் இப்பொழுது சில விஷயங்களை சொன்னால் ஏய் உன் பதிவு சரி இல்லை , நீ ஆரிய அடிவருடி என பல திமுகவினர் கிளம்புகின்றார்கள்

இந்த திமுக அபிமானம் என்ற முத்திரை எப்பொழுது விழுந்ததென்றால் இந்த தும்பிகளை பற்றி எழுதியபொழுது, சைமனை கிழித்தபொழுது

ஒரு இந்தியனாகத்தான் புலிகளை சாடினோம், அவர்களுக்கு கலைஞரும் இத்தேசமும் செய்த உதவிகளை சொன்னோம், அப்பொழுது ஓடிவந்து சேர்ந்தவர்கள்தான் இந்த திமுகவினர்

திமுகவா, அதிமுகவா என பார்க்கும்பொழுது தமிழகத்தில் திமுகவின் நிலைப்பாடும் அரசியலும் கொள்கையும் பன்மடங்கு உயர்ந்தவை என்பதால் திமுகவின் சில நியாயங்களை சொன்னோம்

அப்படி கலைஞரின் சில நல்ல பக்கங்களை சொல்ல வேண்டியதாயிற்று

அதற்குள் நாம் முழுக்க திமுக போலவும், பெரும் திராவிட வெறியன் போலவும் அவர்களாகவே நினைத்துகொண்டு சாடிகொண்டிருகின்றார்கள்

நாம் முதலில் இந்தியன் அதன் பின்பே தமிழன்

அந்த நிலைப்பாட்டில் இருந்து மாறமுடியாது, மாறவேண்டிய அவசியமுமில்லை

இப்பொழுது என்ன நடக்கின்றது, கலைஞருக்கு பின் திமுகவில் அழகிரி கொடிபிடிக்கின்றார்

இது பெரிய கட்சிகளில் சாதாரணம், அதுவும் தமிழகத்தில் மிக மிக சாதாரணம்

பெரும் தலைவன் இறந்தபின் அக்கட்சியில் பூகம்பம் வெடிக்கும், பிளவுபடும் பெரும் குழப்பத்தில் சிக்கித்தான் கட்சி மீளும்

திமுக, அதிமுக வரலாறு இதுவே

இதில் கலைஞருக்கு பின்பான திமுக மட்டும் தப்பிவிட முடியாது

இதில் கவனிக்கபட வேண்டியது ஒன்றுதான்

திமுகவிற்கு அதிமுக போல் தனிபட்ட வாக்குவங்கி கிடையாது, தமிழக சாபமோ இல்லை வேறு விஷயமோ திமுகவினை விட அதிமுகவிற்கு வோட்டு வங்கி அதிகம்

அது ராமசந்திரன் செத்தும் மாறவில்லை, ஜெயா செத்தபின்னும் அசைந்ததாக தெரியவில்லை, ஆர்.கே நகரில் கூட அதிமுக வோட்டு அப்படியே தினகரனுக்கே விழுந்திருக்கின்றது, சந்தடி சாக்கில் திமுக வோட்டையும் இழுத்து சென்றிருக்கின்றது

அண்ணா காலத்தில் இருந்தே கூட்டணி இல்லா தேர்தலை திமுக சந்திக்காது, 1996ல் இது நன்றாக தெரிந்தது

ஆக திமுக பெரும் வாக்குவங்கி கொண்ட கட்சி அல்ல, இன்னும் எதிர்கட்சி வலுவாகவே இருக்கின்றது.

இந்நிலையில் அழகிரி போன்றோரை விலக்கி வைத்தால் அது திமுகவின் தேர்தலை நிச்சயம் பாதிக்கும், இன்று இல்லாவிட்டாலும் பின்னாளில் தெரியும்

ஸ்டாலின் ஒன்றும் எம்ஜிஆரோ, கலைஞரோ அல்ல‌

இருக்கும் சூழலில் ஒவ்வொரு வோட்டும், ஒவ்வொரு உறுப்பினரும் திமுகவிற்கு மகா முக்கியமானவர்கள்

இதெல்லாம் அவர்களுக்காக தெரிய வேண்டிய விஷயம், தமிழக வரலாற்றை உற்று நோக்கும் ஒவ்வொருவருக்கும் புரியும் விஷயம்

இது எல்லோரும் சொல்லும் சாதாரணமாக சொல்லும் விஷயம், அதைத்தான் நாமும் சொன்னோம்

“அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.”

இந்த குறளுக்கு அர்த்தம் தெரியவில்லை என்றால் கலைஞர் எழுதிய உரையினை படித்துகொள்ளவும், நன்றாக எழுதியிருப்பார்

நாம் மறுபடியும் சொல்லிகொள்கின்றோம், நாம் இந்தியன் என்பதற்காக பாஜகவிலோ ஆர்.எஸ்.எஸிலோ சேரமுடியாது

தமிழன் என்பதற்காக திமுகவிலும் வரமுடியாது

நமக்கு தோன்றுவதை, மனதிற்கு பட்டதை நாம் எழதிகொண்டே இருப்போம்

அதற்காக திமுகவிற்கு எதிராக எழுதாதே என்பதையும், விமர்சிக்காதே என சொல்வதற்கும் உங்களுக்கு உரிமை இல்லை

பிடிக்கவில்லை என்றால் விலகி செல்லுங்கள், திமுக ஆதரவு ஸ்டாலின் ஆதரவு என எழுது என வந்து மல்லுகட்டாதீர்கள்

உங்களுக்காக எம் பாதையினை மாற்றமுடியாது,

தமிழகம் எனும் மிக குறுகிய வட்டத்தில் அதுவும் திமுக எனும் மிக குறுகிய வட்டத்தில் சிக்க நாம் தயாராக இல்லை

அதிமுகவினை எல்லாம் , பாஜகவினை எல்லாம் சில நேரங்களில் கடுமையாக விமர்சிக்கின்றோம்

அவர்கள் யாராவது ஒருவார்த்தை சொல்கின்றார்களா?

உங்களை விட அவர்கள் மகா நல்லவர்கள் போலிருக்கின்றது