தும்பிகள் புலியினை விட்டுவிட்டு யானை பக்கம் வந்துவிட்டன

தும்பிகள் இப்பொழுது புலியினை விட்டுவிட்டு யானை பக்கம் வந்துவிட்டன, யானை தமிழர் சொத்து, தமிழர் அடையாளம், தமிழர் யானை, தமிழர் சங்கிலி, தமிழர் யானை சாணம் என ஏக அலப்பறைகள்

யானைகள் என்பது இந்திய அடையாளம், அக்காலத்தில் இருந்தே யானை எனும் பிரமாண்ட மிருகத்தை பழக்கும் வழக்கம் இந்தியாவில் இருந்திருக்கின்றது

அது தமிழகத்தில் மட்டுமல்ல, வட இந்தியா பர்மா தாய்லாந்து என பல ஆசிய நாடுகளில் இருந்திருக்கின்றது

அலெக்ஸாண்டருக்கு முந்தைய காலத்திலிருந்தே இந்திய யானைபடை வெளிநாட்டு அரசர்களுக்கு ஆச்சரியமாய் இருந்தது, அவர்கள் கூடிய அவையில் எல்லாம் இந்திய யானைபடையினை பற்றி பெருமையாய் பேசுவார்கள்

ஒவ்வொரு அரசனின் அரண்மனையிலும் யானைகளுக்கும் அதை பராமரிக்கவும் தனி இடமே இருந்தது, சமஸ்தானங்களின் பெரும் பட்ஜெட்டை யானை விழுங்கியது

ஆலய நிர்மானம், கட்டுமானம், காடுகள் திருத்துதல் என பல வேலைகளுக்கு யானைகளே பயன்படுத்தபட்டன‌

அரசர்கள் மட்டுமல்ல, பெரும் நிலச்சுவாநதார்களும் யானைகளை வேலை செய்ய வைத்திருந்தனர், யானை கட்டி போரடித்த நெற்களங்களே சாட்சி

இந்திய யானைபடை 2000 ஆண்டுகளுக்கு முன்பே அலெக்ஸாண்டரை மிரட்டியது, அதுவரை இந்திய யானைபடைகளை கண்டு பயந்த வெளிநாட்டவர் மத்தியில் அவன் வைக்கோல் பந்துகளை நெருப்பாக்கி வீசி யானைபடைகளை முறியடிக்க பார்த்தான்

ஆயினும் மழைக்காலம் என்பதால் அவனின் தோல்வியினை இந்திய யானைபடை கொடுத்தது என்பது வரலாறு, போரஸின் யானைபடையே அலெக்ஸாண்டரை விரட்டிற்று

யானைபடை பிரிட்டானியார் வரவுவரை பெரும் அடையாளமாய் இருந்தது, ஆனால் கிளைவ் என்பவனின் வித்தியாசமான தாக்குதலில் யானைபடைகள் பலனளிக்கவிலை, அப்படியே அவைகள் வழக்கொழிந்தன‌

ஆயினும் இந்த நாட்டில் இன்றும் ஆலயங்கள் முதல் பல இடங்களில் தொடர்ந்துவரும் யானைகளுக்கான அங்கீகாரம் அப்படியே இருக்கின்றது

இருக்கட்டும்

யானை என்பது ஆசிய அடையாளம், அதை தமிழர் மிருகம் என்றோ, தமிழன் அடையாளம் என்றோ சொல்லிகொண்டிருப்பது ஒருவகை வியாதி

யானையில் ஆசிய யானை, ஆப்ரிக்க யானை என சில வகைகள் உண்டு, புதிதாக தமிழன் யானை என ஒன்றை தும்பிகள் சொல்கின்றன‌

ஆசியா முழுக்க பயன்பட்ட மிருகம் அது

அதைவிட்டு ஏதோ தமிழன் தான் முதலில் யானையினை கண்டான், அதொடு பேசினான், பழகினான் அதற்கு கரும்பு பிடிக்கும் வெல்லம் பிடிக்கும் என கண்டுபிடித்தான் என சொல்லும் தும்பிகளை கண்டால் பரிதாபமே மிஞ்சுகின்றது

60 ஆயிரம் யானை காமெடி ஒரு பக்கம் என்றால், தமிழன் முதன் முதலில் கப்பல்படை அமைத்தவன் என அடுத்த காமெடி

கேட்டால் ராஜேந்திர சோழன் தெரியுமா என சீறுவார்கள்

ராஜேந்திரனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கப்பல்படை வைத்திருந்தனர் ரோமையர்

ஜூலியஸ் சீசரும், மார்க் ஆண்டனியும், ஆக்டேவியனும் அதில் கரைகண்டு இருந்தார்கள்

அவர்களுக்கு ஆயிரம் ஆண்டு கழித்தே சோழரிடம் கப்பல் படை வந்தது

வட இந்திய மன்னன் போரஸ் அலெக்சாண்டரை யானை படைய்யோடு எதிர்த்த ஆயிரம் ஆண்டு கழித்துத்தான் சோழன் யானைமேலே சென்றான்

இதுபற்றி ஒரு தும்பியிடம் சொன்னால் அது நெஞ்சே வெடிக்கும்படி பதில் சொன்னது

“அண்ணே அந்த போரஸ் தமிழண்ணே, அவன் வச்சிருந்தது தமிழ்யானை படைண்ணே அவன் பெயர் புருஷோத்தமன் தமிழண்ணே, அலெக்ஸாண்டரையே விரட்டிய பரம்பரைண்ணே

சரி இந்த ஜூலியஸ் சீசர் யார்?

அண்ணே சூலியஸ்ன்னா சூரியன்னு அர்த்தம்ணே, சூரியன்கிற தமிழ் வார்த்தை ரோமருக்கு சூலியஸ்னு ஆயிட்டுண்ணே அவனும் தமிழன் தான்

சரி இந்த ஆண்டனி

அண்ணே அது ஆருடா நீ, அவனா நீ என சொன்ன தமிழ்வார்த்தைன்னே, எதிராளியினை ஆருடா நீ என மானத்தோடு கேட்டவன்னு பேருன்ணே அவனும் தமிழன்னே

இந்த ஆக்டேவியன்

அது தெரியாதா? ஆட்டுவித்தவன்னு அர்த்தம்னே, உலகத்தையே ஆட்டுவித்த தமிழன்னே அது ஆக்டேவியஸ் ஆயிட்டு, உலகத்தில் எல்லொரும் தமிழண்ணே”

இதற்கு மேல் கிளிய்பாட்ரா பற்றி கேட்டால் தும்பி என்ன சொல்லும் என உணரமுடிந்ததால் அவள் பற்றி கேட்கவில்லை, சும்மாவே ..”த்தா” எனும் கட்சி அது அதனால் அத்தொடு நிறுத்தியாயிற்று.

டாவின்ஸி வரைந்துவிட முடியுமா?

Image may contain: 1 person, selfie and close-upஇப்படி ஒரு குறும் புன்னகையினை அந்த டாவின்ஸி வரைந்துவிட முடியும்?

நெவர்

கம்பனால் இந்த புன்னகைக்கு உருவகம் கொடுத்து பாடிவிட முடியும்? ஆயிரம்

கம்பன் வந்தாலும் முடியாது..


அடேய் Babu Rao இப்பொழுதுதான் நயன் நடிக்க வேண்டிய நடிகர் கூட மிக சரியாக யோகிபாபுவுடன் நடித்திருக்கின்றார்

அவருக்குரிய இடம் அதுதான், அதற்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்?


துருக்கிக்கும் அமெரிக்காவிற்குமான போர் வேறுவிதத்தில் தொடங்கிவிட்டது

துருக்கிக்கும் அமெரிக்காவிற்குமான போர் வேறுவிதத்தில் தொடங்கிவிட்டது

துருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்து துருக்கிய பணம் வீழ்ந்ததை அடுத்து துருக்கி அதிரடி காட்டிற்று

இந்த பெப்சி முதல் ஐபோன் வரை உன்நாட்டு தயாரிப்புகளுக்கு இங்கே இடமில்லை என தைரியமாக சொல்லிவிட்டது

டிரம்ப் ஆத்திரத்தில் கையினை முறுக்கி கொண்டிருக்கின்றார்

ஈரானோ பெரும் போர்பயிற்சியினை முடித்துவிட்டு அமெரிக்காவுடன் போருக்கும் விருப்பமில்லை, பேச்சுவார்த்தைக்கும் விருப்பமில்லை என கலைஞர் ஸ்டைலில் சொல்லிவிட்டது

இஸ்ரேல் பாலஸ்தீன ஆக்கிரப்பு பகுதிகளில் செய்திருக்கும் தன் நிலைகளை அங்கீகரிக்கும் விதமாக புதிய சட்டமே இயற்றிவிட்டது

அதாவது இஸ்ரேலில் யூதருக்கே முன்னுரிமையாம், எங்கிருந்து யூதர் வந்தாலும் முன்னுரிமை வழங்கபடுமாம், பாலஸ்தீனியர் இனி இரண்டாம் குடிமக்களாம்

எண்ணத்தில் இருந்ததை ஏட்டுக்கே கொண்டுவந்துவிட்டது இஸ்ரேல்

இது இஸ்லாமிய உலகில் ஒரு சலசலப்பினை ஏற்படுத்த துருக்கியும் ஈரானும் எதிர்த்து நிற்கின்றது

மறுபடியும் மேற்காசியாவில் போர் மேகம் எப்பொழுதும் சூழும் நேரம் வந்தாயிற்று

இப்பொழுதுதான் சிரிய யுத்தம் முடிந்து மக்கள் திரும்ப தொடங்கினர், அதற்குள் மறுபடியும் சூழல் சரியில்லை

அமெரிக்காவினை விரட்டாமல் இஸ்ரேலை அடக்கமுடியாது எனும் துருக்கி, ஈரானிய கூட்டணிக்கு ஆதரவும் பெருகுகிகின்றது

மீண்டும் இறுக்கமான சூழல் வந்தாயிற்று

வாஜ்பாய்க்கும் ஈழவிவகாரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு

வாஜ்பாய்க்கு உடல்நிலை மிக கவலைக்கிடம் எந்த செய்தி மிகுந்த சோகத்தை கொடுத்திருக்கின்றது

93 வயதில் இருக்கும் அவர் இன்றைய தேதியில் இந்தியாவின் மிக மூத்த தலைவர், பெரும் நெடிய வரலாறு அவருக்கு உண்டு

தமிழகத்தை புரிந்துகொண்ட மிகசில வடக்கத்திய தலைவர்களில் அவரும் ஒருவர்

பாஜக கோஷ்டியில் இருந்த நல்லவர்களில் கடைசியாக எஞ்சி இருப்பவர் அவர் ஒருவரே

அவர் நலம்பெற்று திரும்ப பிரார்த்திப்போம்


வாஜ்பாய்க்கும் ஈழவிவகாரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு

1987 டெசோவில் அவரும் இருந்தார், இந்தியா முழுக்க ஈழமக்களுக்கு ஆதரவான மனநிலையினை திரட்டினார், கலைஞரின் அந்த நுட்பம் வேலைசெய்தது

ஈழமக்களின் பின்னால் மொத்த இந்தியாவும் இருக்கின்றது என்ற பிம்பம் அப்பொழுது இருந்தது

வாஜ்பாயும் சபாரத்னம் போன்ற போராளிகளை சந்திக்க தயங்கவில்லை, ஈழபோராளிகளிலே இந்திரா வாஜ்பாய் என பெரும் தலைவர்களை சந்தித்த ஒரே போராளி சபாரத்னம் ஒருவரே

அவரை பிரபாகரன் கொல்லவும் இனி டெசோ இயங்காது என கலைஞர் அறிவிக்க வாஜ்பாயின் ஈழ ஆதரவு நின்றது, ராஜிவ் கொலையால் அதற்கு வாய்ப்பே இல்லாமல் போனது

விதி அடுத்த சில ஆண்டுகளில் மறுபடியும் வாஜ்பாயினை ஈழ விவகாரத்தில் தள்ளியது, அப்பொழுது அவர் பிரதமர்

அவர் மந்திரிசபையில் இருந்தது வைகோ கட்சி

அப்பொழுதுதான் ஆனைஇறவு போரில் புலிகள் மகத்தான வெற்றி பெற்றனர்

அதாவது யாழ்குடா பகுதியினையும் தென் இலங்கையினையும் இணைப்பது மிக குறுகிய நிலபரப்பு, அது ஒன்றுதான் வழி, இல்லாவிட்டால் கடலை சுற்றித்தான் வரவேண்டும்

அதன் அருகில் யானை இறவு எனும் இடத்தில் இலங்கை ராணுவமுகாம் இருந்தது, 40 ஆயிரம் வீரர்கள் இருந்தார்கள்

யாழ்பாணம் சிங்கள அரசிடம் சிக்கிய பின்னால் இந்த பாதை மகா முக்கியமானது என்பதால் அப்படி காவல் காத்தது சிங்களம்

அந்த முகாமை கடும் யுத்தத்தில் முடக்கினர் புலிகள், அவர்கள் மேல் ஆயிரம் சர்ச்சை இருந்தாலும் ராணுவ ரீதியாக அவர்கள் பெற்ற பெரும் வெற்றி மற்றும் ஒரே வெற்றி அதுதான்

புலிகளின் தளபதி பால்ராஜ் அதை பெற்றுகொடுத்தார்

உண்மையினை சொல்லவேண்டும், அது இஸ்ரேலிய மோசே தயான் பாணியில் நடத்தபட்ட மிக நுட்பமான தாக்குதல்

கடல் வழியே ஆயிரம் புலிகள் வந்து, கடற்கரையில் நிலை எடுத்து சப்ளை ஏதும், உதவி ஏதும் கிடைக்கா நிலையில் துணிந்து தாக்கி சிங்கள படைகளை முடக்குவது என்பது பெரும் ஆச்சரியம்

அந்த வெற்றியில் சிங்களம் ஆடி போனது, யானையிறவு வீழ்ந்தபின் யாழ்பாணத்தை புலிகள் கைபற்றுவது எளிதானது

40 ஆயிரம் ராணுவத்தார் முடக்கம், யாழ்பாணத்தினை எந்நேரமும் புலிகள் கைபற்றலாம் எனும் நிலை

சுருக்கமாக சொன்னால் ஈழம் அடைந்துவிட்ட நிலை, ஆம் அதுதான் உண்மை

சிங்களனை அடித்து விரட்டிவிட்டாகிவிட்டது, 40 ஆயிரம் பேரை பிடித்தாகிவிட்டது இனி என்ன ஈழ அறிவிப்புத்தான்

ஆனால் இந்தியாவிடம் உதவி கோரியது இலங்கை

இந்திய பிரதமராக வாஜ்பாய் துணிந்து சொன்னார், அந்த வீரர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலோ இல்லை யாழ்பாணத்தை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தாலோ புலிகள் இருக்கமாட்டார்கள், இந்தியா களமிறங்கும்

புலிகள் பணிந்தனர், 40 ஆயிரம் சிங்கள வீரர்கள் விடுவிக்கபட்டனர், அத்தோடு யாழ்பாணத்தை கைபற்றும் திட்டத்தை விட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்பினர்

ஏன் இந்தியா அப்படி செய்தது என்றால் அதுதான் உலக அரசியல், வாஜ்பாய் அதை சரியாக செய்தார்

இன்னொரு கோணத்தில் பார்த்தால் ஈழம் அமைவது வாஜ்பாய் காலத்தில் தடுக்கபட்டது, அந்த புலிகளின் பெரும் வெற்றி வீணாக போனது

( நிச்சயம் மிகபெரிய வெற்றி அது, கிடைக்காத வெற்றி புலிகளின் மிகபெரிய சாதனை

ஆனால் அது வீணாக போனதில் பால்ராஜுக்கும் மனம் பாதித்து படுத்தபடுக்கை ஆகி இறந்தார், இனி எந்த வெற்றிபெற்றாலும் ஈழம் அங்கீகரிக்கபடாது என உணர்ந்த பிரபாகரனும் தீவிர போருக்கெல்லாம் வரவே இல்லை )

உண்மையில் தமிழகம் அப்பொழுதுதான் பொங்கி இருக்க வேண்டும், ராணுவ ரீதியாக வெற்றிபெற்ற புலிகளை ஒடுக்காதே என கிளம்பி இருக்க வேண்டும்

ஆனால் சத்தமில்லை

காரணம் ஜெயா ஊழல் வழக்குகளில் பிசியாக இருந்தார், திமுக ஜெயின் கமிஷன் சர்ச்சைகளில் இருந்தது

முரசொலிமாறன் உட்பட திமுகவினர் அந்த அரசில்தான் இருந்தார்கள்

ராமதாஸ் கும்பலும் வைகோவும் வாஜ்பாய் அரசில் அமைச்சர்களாக இருந்தனர்

அங்கிள் சைமன் பாஞ்சாலங்குறிச்சி போன்ற படங்களை எடுத்துகொண்டிருந்தார், திருமுருகன் காந்தி எல்லாம் எங்கிருந்தான் என்றே தெரியாது

யாரும் ஈழம் அமைவதை வாஜ்பாய் தடுத்ததால் ராஜினாமா செய்கின்றோம் என்றோ ஆதரவினை வாபஸ் வாங்குகின்றோம் என்றோ கிளம்பவே இல்லை..

சுருக்கமாக சொன்னால் ஈழம் அமைவதை தடுத்தவர்களில் வாஜ்பாய் முக்கியமானவர், ஈழவரலாற்றில் மிக முக்கியமான கட்டத்தில் அவரின் முடிவு புலிகளுக்கு பின்னடைவானது

இந்திய பிரதமரை கொன்றுவிட்டு, 1500 இந்திய ராணுவத்தினரை கொன்றுவிட்டு ஒரு இயக்கம் நாடு அடைவதை இந்தியா அனுமதிக்காது என இந்தியனாய் நின்றார் வாஜ்பாய்

ஆனால் பெரும் அதிசயம் என்னவென்றால் வாஜ்பாய் பற்றி எல்லாம் இங்கு மூச்சே விடமாட்டார்கள்

ஈழத்தை அழித்தது காங்கிரஸ், கலைஞர் என சொல்லிகொண்டே இருப்பார்கள்

அழகிரிக்கு பதில் கொடுக்க சிலர் வீரமணியினை கொம்பு சீவி விடுகின்றனர்

அழகிரிக்கு பதில் கொடுக்க சிலர் வீரமணியினை கொம்பு சீவிவிடுகின்றனர்

இது கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறிவது போன்றது

இதனால் திமுகவின் சொத்து மதிப்பு, முரசொலி அறக்கட்டளை பணமதிப்பு மட்டுமல்ல வீரமணி கருப்பு போர்வை போட்டு மறைக்கும் பெரியாரின் சொத்துக்கள் எல்லாம் வெளிவரும்

பெரும் சர்ச்சைகள் எல்லாம் வெடிக்கும்

அப்படி வரவேண்டும் என்றுதான் 
“யாரோ” விரும்புகின்றார்கள் போல‌

இப்பொழுதெல்லாம் தமிழகத்தில் “யாரோ” விரும்புவதுதான் நடக்கின்றது, பழனிச்சாமி முதல்வராக‌ ஆள்வதை போல‌


வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் போன்ற தரங்கெட்ட திமுக பேச்சாளர்கள் எல்லாம் இன்னும் சாகவில்லை

இந்த முகநூலில் பல திமுகவினரின் பதிவும் பின்னூட்டமுமாக வாழ்ந்துகொண்டே இருக்கின்றார்கள்


ஏ.எல் விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு

ஏ.எல் விஜய் இயக்கத்தில் திரைப்படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு : செய்தி

படத்தின் பெயர் “அந்த 75 நாட்கள்” என்றால் நன்றாக‌ இருக்கும்?

இவர் ஜெயா வாழ்க்கையினை தாராளமாய் எடுக்கட்டும் அதில் சசிகலா வேடத்திற்கு யாரை வைப்பார், சசிகலா கதையினை உண்மையாக சொல்லமுடியுமா என்பதெல்லாம் அவர் பாடு

தினகரன் வேடத்தில் ஒருவரை வைத்தாலே இயக்குநர் கேமரா இருக்குமா இல்லையா தெரியாது, அதிலும் நடராஜன், திவாகரன், விவேக் வேடங்கள் எல்லாம் வந்தால் இயக்குநரே இருப்பாரா இல்லையா தெரியாது

நீதிபதி குன்ஹா வேடத்தில் யாரை அமர்த்துவார் இயக்குநர்?

ராமசந்திரன் இல்லாமல் ஜெயா கதையினை எடுக்க முடியுமா? அதில் உண்மையினை மணிரத்னத்தின் இருவர் போல சொல்லத்தான் முடியுமா?

காப்பி அடிப்பதில் பெரும் கில்லாடியான விஜய் இருவர் படத்தை மறுபடி எடுத்துவைப்பார் என்பது எல்லோருக்கும் புரியும்

இந்த இயக்குனரிடம் கேட்டுகொள்வது, ஜெயாவின் வாழ்வு மர்மமும் சீரியசும் நிறைந்த கதை, ஆனால் ஜெயாவிற்கு பின்னரான அவரின் கட்சி அட்டகாச காமெடிகள் நிறைந்தது

அதனால் முதல்பாகம் எடுத்துவிட்டு, இரண்டாம் பாகமும் கண்டிப்பாக நீவிர் எடுத்தே தீரவேண்டும்

காமராஜரை கலைஞர் எல்லை மீறி விமர்சித்தார்

சிலர் 1969ல் காமராஜரை நாகர்கோவிலில் கலைஞர் பெரும் முயற்சி எடுத்தும் தோற்கடிக்கமுடியாமல் போன கதைகளை பேசிகொண்டிருக்கின்றனர்

உண்மையில் அந்த தேர்தல் காமராஜருக்கு வாழ்வா? சாவா? என்றிருந்தது, தொடர் வெற்றியில் காமராஜரை சுதாரிக்காமல் அடித்து வெளியேற்றவேண்டும் என்ற வெறி கலைஞரிடம் இருந்தது

காமராஜர் நாடார் என்பதும், குமரி தமிழகத்துடன் இணைய பாடுபட்டவர் என்பதும் அவருக்கு கூடுதல் பலம் என களம் இருந்தது

கலைஞரோ கிறிஸ்தவர்கள் அதிகமான அத்தொகுதியில் பிரபலமான கிறிஸ்தவ நாடாரை நிறுத்தினால் வெற்றிபெறலாம் என கணக்கிட்டு டாக்டர் மத்தியாசை நிறுத்தினார்

திமுக vs காங்கிரஸ் என வந்திருக்க வேண்டிய களத்தினை இந்துநாடார் vs கிறிஸ்தவ நாடார் என நுட்பமாக திசை திருப்பினார் கலைஞர்

இதில் 1969ல் கலைஞர் ஆட்சி என்பதால் கிறிஸ்தவர்கள் கலைஞர் பக்கம் சரிந்தனர், மத்தியாஸ் கிறிஸ்தவர் என்பதால் அவரை ஆதரிக்கவேண்டும் என கிறிஸ்தவ தலமைகளே பகிரங்கமாக கேட்க தொடங்கின‌

காமராஜரின் எதிரிகள் CSI கிறிஸ்தவர்கள், இவ்வளவிற்கும் நாடார்கள் நிரம்பிய சபை அது

காமராஜரை கலைஞர் எல்லை மீறி விமர்சித்தார், இன்னும் காமராஜரின் வாடகை வீட்டை இதோ ஏழை பங்காளனின் சொநத பங்களா என அண்ணா சிலை அருகே பேனர் வைத்தெல்லாம் பிரச்சாரம் செய்தார்

ஆனால் முடிவில் காமராஜர் அபார வெற்றிபெற்றார், லட்சகணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்

கலைஞரோ “நடந்தது நாடாளுமன்ற தேர்தல் அல்ல, நாடார் மன்ற தேர்தல்” என சொல்லிவிட்டு விடைபெற்றார்

2மாதம் நாகர்கோவிலில் தங்கி அவர் செய்த சித்துவிளையாட்டுக்கள் எல்லாம் எடுபடவில்லை

அதன்பின் 1971ல் கூட கலைஞர் நாகர்கோவில் பக்கம் வரவில்லை, “நெல்லை என் எல்லை, குமரி என் தொல்லை” என சொல்லி கொண்டார்

ஆனால் இந்தவெற்றிக்கு பின் அந்த இந்து நாடார், கிறிஸ்தவ நாடார் என திமுக விதைத்த விதை முளைத்து வளர்ந்தது

அது பல இடங்களில் கலவரமாக வெடித்தது, அந்த சாதிகலவரம் மதகலவரமாக மாறிற்று

இந்து நாடார், கிறிஸ்தவ நாடார் என்று தேர்தலில் விதைத்த விதை பின்பு இந்து கிறிஸ்தவ மோதலாக வெடித்தது

நேசமணி, ஜீவா போன்ற பெரும் பிம்பங்களின் பெயர்கள் எல்லாம் மறைய தொடங்கி பெரும் மதவாதிகள் பெயர்கள் வந்தன‌

மண்டைக்காடு கலவரமெல்லாம் நடந்தது

அந்த கலவரத்திற்கு பின் இந்துக்களின் பெரும் எழுச்சியில் கன்னியாகுமரி தொகுதி இப்பொழுது பாஜக கோட்டையாக நிற்கின்றது

பாஜக தமிழகத்தில் முதல் முதலாக நாகர்கோவில் பக்கம் காலூன்றியது இப்படித்தான், முதல் பாஜக எம்.எல்.ஏ எம்பி எல்லாம் இப்படித்தான் உருவானார்கள்

பொன்னார் உருவாகி வந்ததெல்லாம் இப்படித்தான்

ஆனால் விதை கலைஞர் போட்டது

ஆக என்றோ காமராஜருக்கு எதிராக உருவாக்கபட்ட அரசியல் விளையாட்டு எங்கோ திசை திரும்பி என்னவெல்லாமோ ஆயிற்று

கலைஞர் செய்த பெரும் தவறு அது, சொன்னால் திட்டுவார்கள் ஆனால் உண்மை அதுதான்

அத்தோடு முடிந்ததா என்றால் இல்லை

அந்த டாக்டர் மத்தியாஸ் என்ன ஆனார்?

அவரால் திறுக்குறுங்குடி பக்கம் பெரும் மலைக்காடுகளை வளைக்க முடிந்தது,பெரும் எஸ்டேட்டை உருவாக்கினார்

அப்பொழுது காமராஜரை எதிர்க்க அரசியலுக்கு கொண்டுவரபட்ட அவருக்கு மலைகளை வளைப்பது எளிதாயிற்று

இது எதில் வில்லங்கமானது?

கலைஞர் அரசு கொடுமுடியாறு அணையினை பெரும் திட்டமாக கட்ட தொடங்கியபொழுது நீர்பிடிப்பு பகுதியாக மத்தியாசின் எஸ்டேட் மூழ்க இருந்தது

அவர் குடும்பம் வழக்கெல்லாம் நடத்தியது, அணை தாமதமானது

இந்த வைகை அணையினை கட்டும்பொழுது கிராமங்களை எல்லாம் காலி செய்யவைத்து பிரமாண்டமாக கட்டினார்கள்

ஆனால் கொடுமுடியாறு அணையில் மத்தியாசின் எஸ்டேட்டை கைபற்றமுடியாமல் தயங்கியது கலைஞர் அரசு, காரணம் நாகர்கோவில் இடைதேர்தல் கைமாறு

இறுதியில் அவர் சொத்துக்களுக்கு பாதிப்பில்லா வகையில் முல்லை பெரியாறு போல கட்டபட வேண்டிய அணை நீச்சல் குளம் அளவிற்கு, திருவாரூர் கோவில் தெப்பகுளம் அளவிற்கு கட்டபட்டாயிற்று

அந்த அணையால் துளியும் பிரயோசனமில்லை, ஆனால் கட்டியது கலைஞர் என உபிக்கள் ஆனந்தபடுவார்கள்

ஆனால் அதன் பின்னால் இருபபது அப்பகுதி மக்களுக்கான பெரும் துரோகம்

காமராஜரை எதிர்க்க மத்தியாசை கொண்டுவந்து அவருக்கு மலைகளை வளைத்துகொடுத்து, அணையினை சிறிதாக்கி பெரும் துரோகத்தை ராதாபுரம் பகுதி மக்களுக்கு செய்திட்ட துரோகம்

மறக்கமுடியா சம்பவங்கள் அவை

சிலர் 1969 கதைகளை பேசபேச அவை எல்லாம் நினைவுக்கு வந்து தொலைக்கின்றன‌

காமராஜரை எதிர்த்து அங்கு பரப்பட்ட சாதிவெறி மதவெறியாய் மாறி என்னவெல்லாமோ ஆயிற்று, குமரி மக்களின் சோகம் அது

மத்தியாசின் நரித்தனம் கொடுமுடியாறு அணையினை பாதித்தது, ராதாபுரம் மக்களின் தீரா சோகம் அது

இதன் பின்னணியில் இருந்தது யார் என சொன்னால் நாம் ஆரிய அடிவருடி..

நிச்சயம் செய்திருக்க கூடாத காரியங்கள் அவை