“நாம் தமிழர்” தும்பிகளுக்கு பெரும் அவமானம்

Image may contain: one or more people and outdoor

மத்திய அரசும் பல மாநில அரசுகளும் மலையாள மக்களுக்கு அள்ளி கொடுக்கின்றன‌

எல்லா கட்சிகளும் மொழி இன வேறுபாடு மறந்து அவர்களுக்கு உதவுகின்றன‌

ஆனால் கொள்கை பிடிப்புள்ள “நாம் தமிழர்” கட்சி இதுபற்றி எல்லாம் சிந்திக்காது

கேரளா என்பது மலையாளிகள் தேசம், அங்கு உதவி என சென்றால் “நாம் தமிழர்” தும்பிகளுக்கு பெரும் அவமானம்

தமிழனுக்கு தமிழன் உதவவேண்டும், “எக்குலமும் சாகட்டும் அதில் தமிழன் வாழட்டும்” என்பது அவர்கள் கொள்கை

அதனால் கேரளாவிற்கு எல்லாம் செல்லமாட்டார்கள்

இதனால் பவானி ஆறு பெருக்கெடுத்து ஓடும் இந்நேரத்தில் அங்கு வசிக்கும் தமிழர்களை காப்பாற்ற நாம் தமிழர் தும்பிகள் படை மூங்கில் படகு கட்டிகொண்டிருப்பதாக சில செய்திகள்

அடுத்தமுறை வெள்ளம் வருவதற்குள் 60 ஆயிரம் யானைகளை ஏற்றிய அக்கால தமிழன் கப்பல் போல பெரும் கப்பலை கட்டிவிட தும்பிகள் ஆலோசனையில் இருக்கின்றன என்கின்றார்கள்

விரைவில் சங்க தமிழனின் கப்பல் படையினை தும்பிகள் மீட்டெடுத்து பவானி ஆற்றுபக்கம் களமிறக்குமாம்

(இப்படி நாம் மலையாளிகள் கட்சி கேரளாவில் இல்லாததால் மூங்கில் படகு கட்டி மக்களை காப்பாற்ற அங்கு ஆளில்லாமல் போய்விட்டது , இந்திய ராணுவம் களமிறங்கி மலையாளிகளை அவமானபடுத்தி கொண்டிருகின்றது)

சிலரை தவிர எல்லா தலைவர்களுக்கும் வெள்ளையனுடன் ஒரு புரிதல் இருந்தது

வாஜ்பாய் வெள்ளையனிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்தது உண்மையா என பலர் கேட்டுகொண்டிருக்கின்றார்கள்

ஒரு விஷயம் புரிந்துகொள்ள வேண்டும்

வெள்ளையனை தீவிரமாக எதிர்த்த போராட்டம் கட்டபொம்மனில் தொடங்கி வஉசியுடன் முடிந்தது, நேதாஜி இந்தியாவிற்கு வெளியே இருந்து போராடியவர் , இந்தியாவிற்குள் ஓலைபட்டாசு கூட வெடித்தவர் இல்லை

வெள்ளையன் யாரெல்லாம் தனக்கு நேரடி ஆபத்து என உணர்ந்தானோ அவர்களை விட்டு வைக்கவில்லை, லஜபதி ராய் முதல் பகத்சிங் வரை அப்படித்தான்

வஉசி வெள்ளையனின் அடிமடியில் கை வைத்தவர் என்பதால் செக்கிழுக்க வைக்கபட்டார்

ஆனால் காந்தியும், நேருவும் கவுரவமாக நடத்தபட்டார்கள், காரணம் என்னவென்றால் நேரடியாக தனக்கு ஆபத்து இல்லாதவர்களை வெள்ளையன் விட்டே வைத்திருந்தான்

இவர்கள் பெரும் போராட்டம் நடத்தியவர்கள் அல்ல மாறாக சட்ட மறுப்பு, சத்தியாகிரகம் , உப்பு காய்ச்சுதல் போன்ற ஒருமாதிரி போராட்டம் நடத்தினார்கள்

அதாவது வெள்ளையன் ஆள ஒத்துழைக்கவில்லையே தவிர அவன் நாட்டை விட்டு போகும் அளவு காரணங்களை இவர்கள் செய்யவில்லை

வெள்ளையனுடன் பலருக்கு புரிந்துணர்வு இருந்தது, காந்திக்கும் நேருவுக்கும் இருந்தது அப்படியே சாவர்க்கர் கோஷ்டிக்கும், வாஜ்பாய்க்கும், ஜின்னாவிற்கும் கூட இருந்தது

இன்னும் நீதிகட்சி, திராவிட தலைவர்கள் எல்லாம் சுதந்திரமே வேண்டாம் என சொல்லும் அளவு வெள்ளையனோடு நெருக்கமாக இருந்தார்கள்

காந்தியின் இந்த புரிந்துணர்வே தேசம் உடைய காரணம், அவர் கொஞ்சம் முரண்டு பிடித்திருந்தால் பாகிஸ்தான் உருவாகி இருக்காது

வஉசி, நேதாஜி , பாரதி , பகத்சிங் போன்ற சிலரை தவிர எல்லா தலைவர்களுக்கும் வெள்ளையனுடன் ஒரு புரிதல் இருந்தது

புலிகளுக்கும் சிங்களனுக்கும் இருந்தது போல ஒருவிதமான புரியாத போக்கு இருந்தது

இதனால் வாஜ்பாய் மட்டும் கடிதம் எழுதினார், காந்தி நேரு எல்லாம் தீரர்கள் என சொல்வதில் அர்த்தமில்லை

நயந்தாராவின் “கோலமாவு கோகிலா” படம் கரைந்தே விட்டதாம்

ஏம்பா Babu Rao ,

நயந்தாராவின் “கோலமாவு கோகிலா” கோலமாவு படம் கரைந்தே விட்டதாம்,

நயனுக்கு பதில் ஷகிலாவினை நடிக்க வைத்திருந்தால் கூட கூட்டம் வந்திருக்க்கும் என கோடம்பாக்கத்தில் சொல்லி கொள்கின்றார்களாம்

உடனே உங்கள் சங்கத்தை கலைத்துவிட்டு நமது குஷ்பு சங்கம் பக்கம் வாரும், பரிதாபபட்டு சேர்த்துகொள்கின்றோம்

உம்மை சேர்ப்போமே தவிர அந்த சண்டாளன் Chandran Kannan என்பவரை சேர்க்கவே மாட்டோம்

அவர் குஷ்பு வீட்டு முன்னால் ஒரு நாள் முழுக்க முழங்காலில் நின்றால் பின்னர் அவரை சேர்ப்பது பற்றி யோசிக்கபடும்


எனக்கு ரஜினி தமிழ் கற்று தந்தார் : ஹீமா குரோஷி

ஏம்மா, அந்த ஆளுக்கே தமிழ் சரியா பேசவராது, இந்த லட்சணத்தில் உனக்கு வேறு சொல்லிதந்தாரா?

உருப்படுமா?


கடவுள் வெள்ளத்தை அனுப்பினான் என சொல்லும் ஒரு கோஷ்டி

கேரள மாந்தீரிகம் பொல்லாதது, அதை பொறுக்கா கடவுள் வெள்ளத்தை அனுப்பினான் என சொல்லிகொண்டிருக்கின்றது ஒரு கோஷ்டி

வெள்ளையன் கேரளாவினை பிடித்து ஆளும்பொழுது மாந்திரீகம் என்ன செய்தது? அது போக்கில் வரிகட்டி கொண்டிருந்தது

பெரியார் வைக்கமில் களமிறங்கியபொழுது மாந்தீரிகம் என்ன செய்தது? பெரியாரிடம் தோற்று இருந்தது

கேரள மாந்தீரிகம் அவ்வளவு சக்திவாய்ந்தது என்றால் கேரள முதல்வர்களாக கம்யூனிஸ்டுகள் வந்திருக்க முடியாது

எல்லாம் மூலகடவுளின் விதிபடியே நடக்கும், அதை மாற்ற மாந்திரிகத்தால் முடியாது

அப்படி முடியுமானால் கேரள முதல் மந்திரியும், பாரத பிரதமரும் மந்திரவாதியாகவே இருப்பார்கள், அவ்வளவு ஏன் டிரம்ப் கூட இவர்களை அருகில் வைத்துகொண்டு புட்டீனுக்கு பக்கவாதம் வரவேண்டும், வடகொரிய அதிபருக்கு ஹார்ட் அட்டாக் வரவேண்டும் என சொல்லிகொண்டிருக்கமாட்டாரா?

கேரள மந்திரவாதிகள் ஜெயலலிதாவினை பிரதமராக்கிய கதை எல்லோருக்கும் தெரியும். சசிகலாவினை என்ன நிலைக்கு தள்ளினார்கள் என்பதும் புரியும்

அட அவ்வளவு சக்திவாய்ந்த மாந்திரிகம் இருக்குமென்றால் முல்லை பெரியாறு அணையினை அப்பொழுதே 4 குட்டிசாத்தான்களை அனுப்பி இடித்திருக்கமாட்டார்களா?

முக ஸ்டாலின் எனும் சிலையில் இருக்கும் கருந்தேள்

No automatic alt text available.

தமிழகத்தின் மிக குரூரமான மதவெறி பைத்தியம் ஒன்று திமுகவில் கவிஞன் என்ற அடையாளத்தில் இருக்கின்றது.

முக ஸ்டாலின் எனும் சிலையில் இருக்கும் கருந்தேள் இது, அச்சிலை மேல் இருப்பதால் செருப்பால் அடிக்கமாட்டார்கள் எனும் மகோமத நினைப்பில் இருக்கும் ஜந்து இது

கேரள வெள்ளத்தில் நாடே திகைத்து நிற்க, ராணுவம் களமிறங்கி நிற்க, அரபு நாடுகளே ஓடி வந்து உதவிகொண்டிருக்க இவரோ ஆபாச கவிதை பாடிகொண்டிருகின்றார்

இந்த தேவி எனும் வரிகள் சாதாரணம் அல்ல, இந்துக்களின் உலகமகா தேவி எனும் மூலசக்தியினை குறிக்கும் வரிகள்

மிக நுட்பமாக எழுதுகின்றாராம், காரி துப்ப வேண்டிய விஷயம் இது

திமுக எனும் இயக்கத்தில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கின்றாராம், எங்கோ கல் எறிகின்றார்

மலையாளிகள் துடித்துகொண்டிருக்கும் நேரம் இந்த ஆபாச கவிதை, அதுவும் மதவெறியினை தூண்டும் கவிதை எனும் இம்சையினை யார் ஏற்றுகொள்வார்கள்??

இவர் மேல் விழும் சாணி திமுக மேலிடம் மீதும் விழலாம்

இவ்வளவு ஆபாசமாக அருவெருப்பாக எழுதுபவனை எல்லாம் மேடையில் கவிஞன் என அமர்த்துவதுதான் திமுகவின் கொள்கை போலும்

மண்ணில் இருந்து மனிதனை அல்லா படைத்தான் என இஸ்லாம் கூறுகின்றது , இவருக்கு மண்டையிலும் அதே மண்ணை அந்த ஆண்டவன் வைத்துவிட்டதுதான் சோகம்

கேரள வெள்ளத்திற்கும் காரணம் என கிளம்புவது ஒன்றும் ஆச்சரியமல்ல‌

ராமர் பெயரால் நாட்டை கெடுத்தவர்களில் சிலர் சபரிமலை ஐயப்பனே கேரள வெள்ளத்திற்கும் காரணம் என கிளம்புவது ஒன்றும் ஆச்சரியமல்ல‌

இன்னும் சொல்வார்கள், மலையாளிகள் மாட்டுகறி அதிகம் எடுப்பதால் கடவுள் பொங்கிவிட்டா என சிரிக்காமல் சொல்வார்கள்

இயற்கை சீற்றங்களுக்கு ஆலயங்களும் தப்ப முடியாது

ஹரித்துவார் சிவன் சிலை சில ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிகொண்டிருந்தது, சுனாமியில் வேளாங்கண்ணி ஆலயம் எல்லாம் பிணங்களால் சூழபட்டிருந்தது

உலகின் மிக முக்கிய புனித ஸ்தலமான ஜெருசலேம் பலமுறை ரத்தத்தால் நிரம்பி இருக்கின்றது

இதெல்லாம் எங்கோ முடிவு செய்யபடும் விஷயங்கள், தெய்வங்களுக்கு மேலிருக்கும் பரம்பொருளின் விளையாட்டு

சபரிமலை அய்யப்பனுக்கு கோபம் வந்ததென்றால் , குருவாயூர் கடவுளுக்கு அதிகாலை எழுப்பாத ஆத்திரமா வந்தது?

கொச்சி அருகே எடத்துவாவில் கத்தோலிக்கருக்கு ஜார்ஜியார் ஆலயம் உண்டு, முதல்முறை செல்வோர் புதுதுணி உடுத்தி செல்ல வேண்டும் என்பது ஐதீகம்

யாராவது அழுக்கு ஆடை உடுத்தி சென்றுவிட்டார்களா என்ன?

கேரள வெள்ளத்திற்கு புனிதமான அய்யப்பன் ஆலயத்தை விட்டுவிட்டு வேறு காரணங்களை தேடுவது நல்லது

பெரியாரின் சாதி ஒழிப்பு அவர்களின் சீட கோடிகளால் சாதி அரசியலானது

அந்த நாகர்கோவில் இடைதேர்தலில் கலைஞருக்கு பங்கே இல்லை, எல்லாம் ராஜாஜி அட்டகாசம் என சொல்லிவிட்டு “ஏ ஆரிய அடிவருடி பதில் சொல்” என்றெல்லாம் கேட்டுகொண்டிருக்கின்றார்கள்

1967ல் ராஜாஜி எங்கிருந்தார் என்றால் திமுக கூட்டணியில்தான் இருந்தார், மத்தியாசை எல்லோரும் சேர்த்துத்தான் கொண்டுவந்தார்கள்

அதுவும் முதலில் தோற்ற மத்தியாசை இம்முறை வெல்லலாம் என நம்பிக்கை அளித்து இழுத்து வந்தவர்களில் கலைஞர் பங்கும் உண்டு

2 மாதம் நாகர்கோவிலில் தங்கி தேர்தல் வேலை செய்தவர் கலைஞர், காமராஜரை வெல்ல வேண்டும் என்ற வெறி அப்படி இருந்தது

ராஜாஜி இழுத்து வந்தவருக்கு கலைஞர் ஏன் 2 மாதம் 2மணி நேரம் மட்டும் உறங்கி வேலை செய்ய வேண்டும் என கேட்டால் பதிலிருக்காது

தன் வாழ்நாளில் தீரா கறையான காமராஜரை பற்றி அவர் பேசிய மட்டமான வார்த்தைகள் அங்குதான் அவரால் பேசபட்டன, சாட்சிகள் நாகர்கோவிலிலே உண்டு

இதெல்லாம் சொன்னால் காமராஜர் உன் சாதி, அதனால் பேசுகின்றார் என எமக்கு எதிராக சிலர் திரும்புகின்றனர். அது திமுக புத்தி அப்படித்தான் பேசும், நியாத்தை பேசாது

அந்த மத்தியாசும் என் சாதி என்பதை மட்டும் திமுகவினர் வகையாக மறைக்கின்றனர்

சிலர் கலைஞர் இறந்துவிட்டார் அவரை பற்றி அவதூறு பரப்பாதே என அறிவுரை சொல்கின்றார்களாம் நல்லது

மாற்றமுடியாதது வரலாறு, அதை நானோ அவர்களோ மாற்றமுடியாது

சில இடங்களில் கலைஞரின் சறுக்கல் இருந்தது, அதை சொன்னால் இறந்தவரை பற்றி பேசகூடாது என்பது அவர்கள் எண்ணம்

ஆக வெற்றி என்றால் கலைஞரின் சாமார்த்தியம் என்பதும்,தோல்வி என்றால் வேட்பாளரை ராஜாஜி தேர்வு செய்தார் என மழுப்புவது எல்லாம் அரசியல்

வெற்றிபெற்றால் கனிமொழியும் அழகிரியும் தயாநிதிமாறனும் அமைச்சர் ஆவார்கள், தோற்றால் திருச்சி சிவா போன்றவர்கள் பார்லிமெண்டில் மல்லுகட்டுவார்கள் எனும் திமுக தந்திரம் அது

அக்கட்சியினர் அப்படித்தான் பேசுவார்கள்

நாகர்கோவில் தேர்தல்கள் பற்றி சொன்னதில் மாற்று கருத்து ஏதுமில்லை

அந்த கட்டுரையில் சொல்லாமல் விட்ட விஷயம் காமராஜருக்காக உழைத்த பலர் பின்னாளில் கொடுமையாக பழிவாங்கபட்டனர்

அதில் பாலம் கட்டிய சில ஒப்பந்தக்காரர்களும் உண்டு , நியாயமான தொழில்செய்தவர்கள் அவர்கள்

ஆனால் காமராஜருக்கு உதவினார் என்பதற்காக அவர்கள் மேல் பாய்ந்த போலி வழக்கு ஏராளம் , அவர்கள் சுத்தமாக ஒடுங்கியே போனார்கள்

செய்த தவறு கலைஞர் ஆட்சியில் காமராஜருக்கு உழைத்தது

இதெல்லாம் அந்த தேர்தல் கால சம்பவங்கள், நடந்த உண்மைகள்

நீங்கள் 4 பேர் கத்துவதால் எமக்கு சரி என தெரிந்ததை மாற்றிகொள்ள எம்மால் முடியாது

இத்தோடு இன்னொன்றையும் சொல்லிவிடலாம்

நாகர்கோவிலில் இந்துநாடார் கிறிஸ்தவநாடார் என்ற சர்ச்சை திசைமாறி இந்து கிறிஸ்தவ மோதலாக மாறியது

அதேபோல திண்டுக்கல் இடைதேர்தலில் மாயன் எனும் பெயரை மாயத்தேவர் என திருத்தி நிறுத்தினார் ராமசந்திரன்

சாதி அரசியல் அங்கு அட்டகாசமாக தொடங்கியது, அது இன்று தினகரன் வரை அதிமுக கொடிபிடித்து திரிவது வரை தொடர்கின்றது

இதெல்லாம் திமுகவும் , அதிமுகவும் திசைமாறி சென்ற தொடக்கங்கள், விளைவுகளை நாம் அனுபவிக்கின்றோம்

பெரியார் தொடங்கி வைத்த சாதி ஒழிப்பு அவர்களின் சீட கோடிகளால் சாதி அரசியலானது இப்படித்தான்

அதில் கலைஞரை விட ராமசந்திரன் மகா மோசம்