பெரியாரின் சாதி ஒழிப்பு அவர்களின் சீட கோடிகளால் சாதி அரசியலானது

அந்த நாகர்கோவில் இடைதேர்தலில் கலைஞருக்கு பங்கே இல்லை, எல்லாம் ராஜாஜி அட்டகாசம் என சொல்லிவிட்டு “ஏ ஆரிய அடிவருடி பதில் சொல்” என்றெல்லாம் கேட்டுகொண்டிருக்கின்றார்கள்

1967ல் ராஜாஜி எங்கிருந்தார் என்றால் திமுக கூட்டணியில்தான் இருந்தார், மத்தியாசை எல்லோரும் சேர்த்துத்தான் கொண்டுவந்தார்கள்

அதுவும் முதலில் தோற்ற மத்தியாசை இம்முறை வெல்லலாம் என நம்பிக்கை அளித்து இழுத்து வந்தவர்களில் கலைஞர் பங்கும் உண்டு

2 மாதம் நாகர்கோவிலில் தங்கி தேர்தல் வேலை செய்தவர் கலைஞர், காமராஜரை வெல்ல வேண்டும் என்ற வெறி அப்படி இருந்தது

ராஜாஜி இழுத்து வந்தவருக்கு கலைஞர் ஏன் 2 மாதம் 2மணி நேரம் மட்டும் உறங்கி வேலை செய்ய வேண்டும் என கேட்டால் பதிலிருக்காது

தன் வாழ்நாளில் தீரா கறையான காமராஜரை பற்றி அவர் பேசிய மட்டமான வார்த்தைகள் அங்குதான் அவரால் பேசபட்டன, சாட்சிகள் நாகர்கோவிலிலே உண்டு

இதெல்லாம் சொன்னால் காமராஜர் உன் சாதி, அதனால் பேசுகின்றார் என எமக்கு எதிராக சிலர் திரும்புகின்றனர். அது திமுக புத்தி அப்படித்தான் பேசும், நியாத்தை பேசாது

அந்த மத்தியாசும் என் சாதி என்பதை மட்டும் திமுகவினர் வகையாக மறைக்கின்றனர்

சிலர் கலைஞர் இறந்துவிட்டார் அவரை பற்றி அவதூறு பரப்பாதே என அறிவுரை சொல்கின்றார்களாம் நல்லது

மாற்றமுடியாதது வரலாறு, அதை நானோ அவர்களோ மாற்றமுடியாது

சில இடங்களில் கலைஞரின் சறுக்கல் இருந்தது, அதை சொன்னால் இறந்தவரை பற்றி பேசகூடாது என்பது அவர்கள் எண்ணம்

ஆக வெற்றி என்றால் கலைஞரின் சாமார்த்தியம் என்பதும்,தோல்வி என்றால் வேட்பாளரை ராஜாஜி தேர்வு செய்தார் என மழுப்புவது எல்லாம் அரசியல்

வெற்றிபெற்றால் கனிமொழியும் அழகிரியும் தயாநிதிமாறனும் அமைச்சர் ஆவார்கள், தோற்றால் திருச்சி சிவா போன்றவர்கள் பார்லிமெண்டில் மல்லுகட்டுவார்கள் எனும் திமுக தந்திரம் அது

அக்கட்சியினர் அப்படித்தான் பேசுவார்கள்

நாகர்கோவில் தேர்தல்கள் பற்றி சொன்னதில் மாற்று கருத்து ஏதுமில்லை

அந்த கட்டுரையில் சொல்லாமல் விட்ட விஷயம் காமராஜருக்காக உழைத்த பலர் பின்னாளில் கொடுமையாக பழிவாங்கபட்டனர்

அதில் பாலம் கட்டிய சில ஒப்பந்தக்காரர்களும் உண்டு , நியாயமான தொழில்செய்தவர்கள் அவர்கள்

ஆனால் காமராஜருக்கு உதவினார் என்பதற்காக அவர்கள் மேல் பாய்ந்த போலி வழக்கு ஏராளம் , அவர்கள் சுத்தமாக ஒடுங்கியே போனார்கள்

செய்த தவறு கலைஞர் ஆட்சியில் காமராஜருக்கு உழைத்தது

இதெல்லாம் அந்த தேர்தல் கால சம்பவங்கள், நடந்த உண்மைகள்

நீங்கள் 4 பேர் கத்துவதால் எமக்கு சரி என தெரிந்ததை மாற்றிகொள்ள எம்மால் முடியாது

இத்தோடு இன்னொன்றையும் சொல்லிவிடலாம்

நாகர்கோவிலில் இந்துநாடார் கிறிஸ்தவநாடார் என்ற சர்ச்சை திசைமாறி இந்து கிறிஸ்தவ மோதலாக மாறியது

அதேபோல திண்டுக்கல் இடைதேர்தலில் மாயன் எனும் பெயரை மாயத்தேவர் என திருத்தி நிறுத்தினார் ராமசந்திரன்

சாதி அரசியல் அங்கு அட்டகாசமாக தொடங்கியது, அது இன்று தினகரன் வரை அதிமுக கொடிபிடித்து திரிவது வரை தொடர்கின்றது

இதெல்லாம் திமுகவும் , அதிமுகவும் திசைமாறி சென்ற தொடக்கங்கள், விளைவுகளை நாம் அனுபவிக்கின்றோம்

பெரியார் தொடங்கி வைத்த சாதி ஒழிப்பு அவர்களின் சீட கோடிகளால் சாதி அரசியலானது இப்படித்தான்

அதில் கலைஞரை விட ராமசந்திரன் மகா மோசம்

பின்னூட்டமொன்றை இடுக