கில்லாடி கிளைவ் : 05

கில்லாடி கிளைவ் : 05

Image may contain: one or more people

கொஞ்சமும் அனுபவமில்லா படையினை அதுவும் ஆயிரம் பேருக்கு குறைவானவர்களை கொண்ட படையுடன் ஆற்காடு கோட்டைக்குள் நுழைந்தான் கிளைவ்

கிளைவின் பெரும் பலம் வேகம், அவனது வேகத்த்தில் அர்த்தமும் இருந்தது. சாந்தா சாகிப்பும் டூப்ளேவும் திருச்சியில் மல்லுகட்டும்பொழுது இங்கு யார் இருக்கபோகின்றார்கள்

அவன் வந்த வேகத்திலே ஆற்காட்டில் இருந்த வீரர்கள் ஓடினார்கள், ஒரு தோட்டா கூட வீணாக்காமல் ஆற்காட்டை பிடித்தான் கிளைவ்

அத்துடன் பெரும் போருக்கு தேவையான உணவு மற்றும் இதர பொருட்களை சேர்க்க உத்தரவிட்டான், எல்லாம் உடனே திரட்டபட்டது, இனி கோட்டை கதவுகளை மூட வேண்டியதான்

மூடும் முன் அவனுக்கொரு யோசனை வந்தது , தப்பி ஓடிய வீரர்கள் வந்துவிட்டால்… அதனால் தேடினான் அந்த கோஷ்டி கட்டளை இட தலைவன் இல்லாததால் கோட்டையின் மறுபுறம் ஓளிந்திருந்தது, நள்ளிரவில் அவர்களை தாக்கி பலரை கொன்றான் கிளைவ், எஞ்சியவர் தப்பி ஓடினர்

கிளைவ் பக்கம் ஒரு இழப்புமில்லை மாறாக சாந்தா சாகிப்பின் ஆயுதங்கள் கிடைத்தன, கோட்டைக்குள் ஆயுத கஜானாவும் இருந்தது, பெரும் தொகையில் உணவும் சேர்த்துகொண்டார்

மெல்ல விஷயம் திருச்சி காவேரி ஆற்றங்கரையில் நின்று கொண்டு மலைக்கோட்டையினை பார்த்துகொண்டிருந்த சாந்தா சாகிப் காதிற்கு சென்றது

முதலில் அவனால் நம்ப முடியவில்லை, என்னது? பிரிட்டானியரா? ஆற்காட்டையா? அங்கு எவன் உண்டு? லாரன்ஸ் என்றொருவன் உண்டு அவனும் லண்டனுக்கு சென்றுவிட்டான், பின்னர் யார்?

அதுவும் தென்னகத்தின் நவாப் இந்த சாந்தா சாகிப்பை, அதுவும் மாவீரன் டூப்ளேவின் ஆசிபெற்ற என்னை எதிர்ப்பது யார்? கோபத்தில் குதித்து கேட்டான் சாந்தா சாகிப்

யாரவன்?

ராபர்ட் கிளைவ்

இதுவரை என்ன சாதித்தான்?

ஒன்றுமில்லை

வயது என்ன?

25

யுத்த அனுபவம்

இதுதான் அவன் வாழ்வில் உருப்படியாக பெற்ற முதல் வெற்றி

குழம்பினான் சாந்தா சாகிப், டூப்ளே பாண்டிச்சேரியில் இருந்தார் விஷயத்தை சொன்னான்

சாந்தா சாகிப்பின் மகன் சாய்பு தலமையில் 5 ஆயிரம் பேர்கொண்ட படை திரண்டது, வேலூரில் இருந்து 2 ஆயிரம் வீரர்கள் வந்தனர் , டூப்ளே தன் படைபிரிவினை அனுப்பினார்

மொத்தம் 10 ஆயிரம் பேர் கொண்ட படை ஆற்காட்டை வந்ததடைந்தது, இதில் சாந்தா சாகிப் அனுப்பிய 5 ஆயிரம் பேரில் ஒருவனே சாஹிப், அப்படி சொன்னால் புரியாது தெளிவாக சொல்லவேண்டுமென்றால் மருத நாயகம்

ஆற்காடு கோட்டை அவ்வளவு வலுவாக இல்லை, கொத்தளம் சாய்ந்திருந்தது, அகழிகள் பாழ்பட்டிருந்தன, இன்னும் ஏக ஓட்டைகள்

கிளைவுடன் வந்தவர்களில் 100 பேருக்கு மேல் நோயில் இறந்தனர், கிளைவுக்கும் உடல்நிலை சரியில்லை

ஆற்காடு முற்றுகை இருமாதம் நீடித்தது, உணவு பற்றாக்குறை வந்தது, வெளியில் இருந்த பெரும் படை கோட்டை சுவரை பீரங்கியால் நாசம் செய்தது

ஆனால் கிளைவ் அசரவில்லை மிக சிறந்த திட்டம், கவனம், முன்னேற்பாடு என யுத்தத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தார், கோட்டையினை கைபற்ற முடியாமல் தவித்தான் சாயுப்

இந்நிலையில் கொஞ்ச நேரத்தில் கிளைவின் உடல் அல்லது தலை வரும் என எதிர்பார்த்திருந்த சென்னை கோட்டை பிரிட்டானியருக்கு கோட்டையில் கிளைவ் தாக்கு பிடித்து நிற்கின்றார் என்ற செய்தி மகா ஆச்சரியத்தை கொடுத்தது

அவருக்கு உதவும் விதமாக மராட்டிய கும்பலில் ஒருவனான மோராரி ராவ் எனும் அக்கால தாதாவிடம் கேட்டார்கள், அவன் கூலிக்கு அனுப்ப ஒரு படை வைத்திருந்தான்

ஆனால் “சாந்தா சாகிப்புக்கு எதிராக வரமுடியாது, பிரென்ஞ் படை என் அடியாட்களை முழுக்க கொன்றுவிடும், பின் இப்படிபட்ட அயோக்கியர்களை எங்கே தேடுவேன்?” என சொல்லி மறுத்துவிட்டான்

முற்றுகை வலுத்தது, கோட்டைக்குள் உணவுபஞ்சம் ஏற்பட்டது

அப்பொழுது இந்திய வீரர்கள் கிளைவிடம் சொன்னார்கள், “அய்யா நாங்கள் இந்தியர்கள் கஞ்சி குடித்து பசியாறுவோம், நீங்கள் சோறு உண்ணுங்கள், கஞ்சி குடித்துகொள்ள மாட்டீர்கள் , அதனால் எங்களுக்கு கொஞ்சம் அரிசி போதும், நீங்கள் நன்றாய் உண்ணுங்கள்”

அஞ்சா நெஞ்சனான கிளைவ் கண்கள் கலங்கிவிட்டான், ஏன் என கேட்டான்?

“நீங்கள் எம் எஜமான், அந்த விசுவாசத்தை நாங்கள் விடமாட்டோம்” இந்த வரிகளில் இந்தியர் மீதான அபிமானம் அவனுக்கு கூடிற்று. விசுவாசமிக்கவர்கள் இந்தியர்கள் அதிலும் தமிழர்கள் என முதலில் லண்டனுக்கு கடிதம் எழுத கிளைவின் சாட்சியாக நின்ற தமிழர் நின்ற இடம் இதுதான்

யுத்தம் வலுத்து நிற்க சாந்தா சாகிப் படைகளால் உள் நுழைய முடியவில்லை, நாட்கள் கடந்துகொண்டிருந்தன‌

அங்கே வருமானம் இன்றி இருந்த மொரார் ராவ் இன்னும் வெல்லமுடியாவிட்டால் பிரிட்டானியர் வலுவானர் என எண்ணிகொண்டு கிளைவிற்கு உதவ முன்வந்தான்

அவன் டாக்டர் ராமதாஸ் போன்றவன் போலிருக்கின்றது, எந்த பக்கம் வெல்லுமோ அந்தபக்கம் சரிந்துவிடுவது அவன் ஸ்டைல்

அவன் வந்துவிட்டால் ஆபத்து என உணர்ந்த ராஜா சாய்பு தந்திர திட்டமிட்டான்

உண்மையில் அவன் வந்திருந்தால் கோட்டைக்கு வெளியே மோதியிருப்பார்கள் கோட்டை திறந்தால் கிளைவின் உண்மையான பலம் தெரிந்திருக்கும்

ஆனால் பயந்த ராஜா சாய்பு தன் அடுத்த திட்டத்தை கையில் எடுத்தான்

ஆம் கிளைவிற்கு ஓலை அனுப்பினான், எப்படி?

இந்தியாவில் அன்றிருந்த கலாச்சாரமான லஞ்சத்தை கொடுப்பதாக சொன்னான், பதிலுக்கு கிளைவ் தன் படையில் சேரவேண்டும்

தன் வீரத்தின் முன்னால் எதிரி பணிந்துவிட்டான் என்பதை உணர்ந்த கிளைவிற்கு மனதளவில் பலம் கூடிற்று , ஆனால் அந்த விஷயத்தை நம்பமுடியவில்லை

போர்களத்தில் லஞ்சமா? ஐரோப்பாவில் அப்படி எல்லாம் இல்லையே? இந்தியாவில் சாத்தியமா?

இங்கு லஞ்சம் மிகபெரும் ஆயுதம் , அதனால் எவ்வளவும் சாதிக்கலாம் என உணர்ந்தான்

சுத்தமான வீரனுக்கு லஞ்சத்தை அறிமுகபடுத்தியது இந்தியாவே, பின்னாலில் லஞ்சக்காரன் என்றும் பணம் கொடுத்து காரியம் சாதித்தவன் என்றெல்லாம் பெயர் பெற்ற கிளைவிற்கு லஞ்சத்தை அறிமுகபடுத்தியன் சாந்தா சாகிப்பின் மகன் சாய்பு

அன்றே கிளைவ் லஞ்சத்தை ஏற்றிருந்தால் இந்திய வரலாறு மாறி இருக்காது, அவன் கில்லாடி. இங்கு லஞ்சம் கொடுக்க வேண்டுமே தவிர வாங்க கூடாது என்பதில் கவனமாயிருந்தான்

லஞ்சம் வாங்காத கிளைவ் மேல் சாய்பு கடும் கோபமுற்றான், இறுதியில் எச்சரித்தான்

5 நாட்களுக்குள் சரணடையாவிட்டால் கோட்டையினை தகர்த்து உனக்கு சமாதி கட்டிவிடுவேன் ஜாக்கிரதை

கிளைவ் யோசித்தான், 2 மாதமாக மோதிகொண்டிருந்தவன் இந்த 5 நாள் அவகாசம் ஏன் கொடுக்கின்றான்? அவனின் சிந்தனை ஆழமானது

அப்பொழுதுதான் அவனுக்கு சொன்னார்கள், “5 நாளில் மொகரம் வரபோகின்றது, அன்று இறப்பவர்கள் நேரே சொர்க்கத்துக்கு செல்வார்கள், அங்கு கன்னிபெண்கள் எல்லாம் இவர்களை வரவேற்பார்கள் என்பது இஸ்லாமியர் நம்பிக்கை

சாய்புவின் படையில் இஸ்லாமியர் நிறைய இருப்பதால் அன்று உற்சாகமாய் சண்டை இடுவார்கள் என நம்புகின்றார் அவர்”

இதற்குத்தான் நம்புகின்றானா, அவனை அன்றே அவன் நம்பிக்கை பொய்க்காதபடி அனுப்பிவிடுவோம் என சொல்லிகொண்டான் கிளைவ்

அந்த மொகரமும் வந்தது, சொர்க்கம் காண சாய்புவின் வீரர்கள் தயாரானார்கள். அக்கால வழக்கபடி சண்டை கோழிக்கு கொடுக்கபடும் ஒருவித போதை லாகிரியினை கொடுத்து அவர்களை அனுப்பினான் சாய்பு

அன்று கொஞ்சம் அதிகம் கொடுத்திருந்தான் போலும், யுத்தம் தொடங்கியவுடன் தன் யானை படையினை ஏவினான் சாய்பு

அதுதான் கோட்டை கதவினை உடைத்து உட்செல்லும் வியூகம்

யானை கோட்டை கதவை தாக்க, கிளைவ் தன் பீரங்கி படைக்கு உத்தரவிட்டான், ஆம் வழக்கமாக கோட்டைகளை தகர்க்க பயன்படும் பீரங்கிகுண்டுகள் யானைகளை நோக்கி செலுத்தபட்டன‌

அது அதுவரை யாரும் செய்யாத முயற்சி, அடிபட்ட யானைகள் பிளிறிகொண்டு ஓடின, ஓடும்பொழுது சொந்த படைகளையே மிதித்து கொன்று ஓடின‌

சாய்பு எதிர்பார்க்கவில்லை, அகழி வழியாக கட்டுமரங்களை இறக்கி கோட்டையினை கைபற்ற உத்தரவிட்டான்

பதிலுக்கு கிளைவ் வீரர்கள் தவித்து நிற்க, கிளைவே முன்னால் நின்று எப்படி அவர்களை தடுக்க வேண்டும் என சொல்லி கொடுத்தார்

கோட்டை பாதுகாப்பு , தற்காப்பு பின் தாக்குதல் என எல்லா பக்கமும் சுழன்று சுழன்று சண்டையிட்டான் கிளைவ், சோர்ந்த நேரமெல்லாம் வீரர்கள் முன்வந்து சண்டையிட்டு ஊக்கமும் கொடுத்தான்

முதல் முறை கோட்டை அருகே வந்த படைவீரர்கள் கிளைவின் துப்பாக்கி மழைக்கு பலியாகி பின்னால் ஓடினார்கள்

பின் மொகரத்தில் இறக்காவிட்டால் சொர்க்கம் கிடைக்காது என மறுபடியும் இரண்டாம் முறை மோதினர், அப்பொழுதும் தோல்வி

கிளைவின் யுத்த வியூகமும், மிக நுட்பமான யுத்தமும் அவர்களை விரட்டியது

கிட்டதட்ட 24 வயதில் நெப்போலியன் காட்டி நின்ற போர்க்கள சாகசங்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாதது கிளைவின் அந்த வீரப்போர்

மறுபடியும் பின் வாங்கினர் எதிர்படையினர்

இம்முறை சொர்க்கம் உறுதி என தங்கள் முழுபலத்துடன் பாய்ந்தனர்

கிளைவும் இருமுறை வென்ற உத்வேகத்தில் கடும் நம்பிக்கையுடன் எதிர்கொண்டார்

கிட்டதட்ட 500 பேரை இழந்த வெறியுடன் சாந்தாசாகிப் படை சுனாமி போல பாய்ந்தது

தொடரும்..

மனுஷ் அந்த கவிதையினை அழித்துவிட்டாராம்?

அந்த அருவெருப்பு கவிதையினை மத துவேஷத்தை கொட்டும் விதமாக எழுதி மனுஷ்யர் அடிவாங்கி கொண்டிருக்கின்றார்

பூமாதேவி, மூதேவி, சீதேவி, உலகமகா தேவி
என பெண் தெய்வங்களை இந்துக்கள் கொண்டாடுதல் மரபு

அந்த தேவி எனும் வார்த்தையினை வம்புக்கு இழுத்து மகா அருவெருப்பாக எழுதினால் யார் விடுவார்கள்?

மனுஷ் அந்த கவிதையினை அழித்துவிட்டாராம்?

பூனை கண்ணை மூடிகொண்டால் உலகம் இருட்டு என நினைக்குமாம்

முதன் முதலில் நாமே எச்சரித்தோம், எச்சரித்தபடி நடந்தும் விட்டது

திமுக மேலிடம் இந்த மங்கூஸ் மண்டையனிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது


இந்த மங்கூஸ் மண்டையன் மனுஷ் என்பவருக்காக, கனிமொழியின் வலதுகரமான சல்மா என்பவர் வக்கலாத்து வாங்கி கொண்டிருக்கின்றார்

திமுக இந்து விரோத கட்சி, இந்துக்களை யார் கேவலமாக பேசினாலும் அரவணைக்கும் கட்சி என்பது தமிழகத்திற்கு புரிய ஆரம்பிக்கின்றது

இந்துக்களை பகைத்துவிட்டோ சீண்டிவிட்டோ கட்சி நடத்த ஸ்டாலின் ஒன்றும் கலைஞர் அல்ல‌

இந்த மனுஷ் எல்லாம் திமுகவின் பகுத்தறிவு போராளிகளும் அல்ல‌

திமுகவிற்கு இருக்கும் 23% வோட்டு வங்கியும் இனி 10% ஆக குறைய வாய்ப்புக்கள் அதிகம்

ஆனாலும் சல்மாவின் இஸ்லாமிய பாசம் , கலைஞரின் குடும்ப பாசத்தையும் மிஞ்சி நிற்கின்றது


இந்தியா ராணுவ ரீதியாக‌ பெரும் பலம் பெற்றுவிட்டது

Image may contain: water and outdoor

ஒரு வழியாக இந்தியா ராணுவ ரீதியாக‌ பெரும் பலம் பெற்றுவிட்டது, கடற்படையின் பலம் அதிகரிக்கபட்டுவிட்டது

இந்தியாவிடம் இதுவரை நீர்மூழ்கியில் இருந்து ஏவப்படும் டார்பிடோ ரக ஏவுகனைகள் கிடையாது

1972 யுத்தத்தின் பொழுது இப்படி ஒரு நீர்மூழ்கியினை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கொடுத்தபொழுது அதனால் இந்தியா சந்தித்த சிக்கல் கொஞ்சமல்ல‌

உண்மையில் அந்த யுத்தத்தை நாம் ஹாஜி கப்பலோடே நடத்தி இறுதியில் வென்றோம்

நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவபடும் ஏவுகனை அவ்வளவு முக்கியமானது

எதிரி நாட்டு துறைமுகம் முதல் போர்கப்பல்கள் வரை அட்டகாசமாக இனி தாக்கலாம்

இவ்வகை நீர்மூழ்கிகளே விமானம் தாங்கி கப்பல்களுக்கு பாதுகாப்பும் கூட‌

இந்த சோதனையில் இந்தியா வென்றுவிட்டதாக அறிவிக்கபட்டிருப்பது இந்தியாவில் மகிழ்ச்சியினையும் சில நாடுகளுக்கு ஆச்சரியத்தையும், சில நாடுகளுக்கு பயத்தையும் எரிச்சலையும் கொடுக்கின்றன‌

இதுபோக டாங்கிகளை எதிர்க்கும் நாக் ஏவுகனையினை இப்பொழுது ஹெலினா என தரம் உயர்த்தி வெற்றிகரமாக பசிசோதித்திருக்கின்றது இந்தியா

நவீன இந்தியாவின் பாதுகாப்பு பலம் இப்பொழுது கணிசமாக உயர்ந்திருக்கின்றது

கடற்படைக்கும், அதற்கு உழைத்து கொடுத்த விஞ்ஞானிகளுக்கும் ராயல் சல்யூட்

வந்தே மாதரம்


கார் வேண்டாம், பங்களா வேண்டாம்: சிக்கன நடவடிக்கையில் இம்ரான் கான்

அய்யா, அப்படியே உங்கள் பட்ஜெட்டை விழுங்கும் ராணுவத்தையும் கலைத்துவிட்டு சிக்கனமாக இருங்கள், நன்றாக உங்கள் தேசம் வாழும்


60 ஆயிரம் யானை கதை

Image may contain: outdoor

இந்த தும்பிகளின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை, முன்பெல்லாம் எரிச்சலை கிளப்பிய கும்பல் இப்பொழுது குபீர் சிரிப்புகளை கொடுக்கின்றது

அதாவது சோழர்கள் தெலுங்கர்கள் அவர்கள் இன விரோதிகள் என சொல்லிகொண்டிருகின்றன, இதே வாய்தான் முன்பு சோழன் முப்பாட்டன், ராஜராஜசோழன் 4ம் பாட்டன் என்றெல்லாம் சொன்னது

60 ஆயிரம் யானை கதை எல்லாம் தும்பிகள் சோழனை பற்றித்தான் சொன்னது, இப்பொழுது பல்டி அடிக்கின்றன‌

வரலாறு என்ன?

சோழர்களில் முற்கால சோழர், இடைக்கால சோழர், சாளுக்கிய சோழர் என பல காலப்பிரிவு உண்டு. இது சேரரிலும் உண்டு பாண்டியரிலும் உண்டு

முற்கால சோழர்களில்தான் செம்பியன் , நலங்கிள்ளி, கிள்ளிவழவன், கோப்பெருஞ்சோழன், கல்லணை கண்ட கரிகாலன் என பலர் வருவார்கள்

சுருக்கமாக சொன்னால் காவேரி பூம்பட்டினம் செழிப்பாக இருந்த காலம் அவை, கண்ணகி காலம்

சிபி சக்கரவர்த்தி, மனுநீதி சோழன், இலங்கையில் ஆண்ட மன்னனான எல்லாளன் எல்லாம் இந்த வகையறா

இவர்களின் ஆட்சி பின்னாளில் ஒய்ந்தது, பூம்புகாரும் கடலில் மூழ்கியது சோழர்கள் வாழ்வில் பெரும் துயர் சூழ்ந்தது

அந்த காலகட்டத்தில் சோழர் அரசை இழந்தனர், பல அரசுகள் பின்பு எழும்பின களபிரர்கள், பல்லவர்கள் என ஆள ஆரம்பித்தனர்

இந்த பல்லவ பேரரசை எதிர்த்துத்தன் பின்னர் விஜயாலய சோழன் என்பவன் இடைக்கால சோழபேரரசினை எழுப்பினான், ஆதித்தன் எனும் பெயர் இக்காலத்திலே வந்தது

மூத்தகுடி எனும் சொல்லே ஆதித்தன் என்பது, இந்த புலிகொடி கூட பல்லவரிடம் இருந்து சோழர் எடுத்தது

விஜயாலயன் வழி வந்த ஆதித்தன் , பராந்தகன் எல்லாம் பல்லவ பகுதிகளை பிடித்து ஆண்டனர் அதாவது சென்னை செங்கற்பட்டு, மகாபலிபுரம் எல்லாம் ஆண்டனர்

செங்கற்பட்டு மாவட்டத்தின் பிரதான ஏரிகள் எல்லாம் இவர்கள் காலத்திலே வெட்டபட்டன‌

இவர்களின் வாரிசாக வந்தவனே சோழற்குல திலகம் ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும்

அவர்கள் காலத்தில்தான் சோழபேரரசு உச்சம் பெற்றது, தஞ்சை கோவில் எல்லாம் எழும்பியது, கல்லணையிலிருந்து கூடுதல் கால்வாய்கள் எல்லாம் வெட்டபட்டது

தன் பேரரசை காவேரி போன்றே வளமிக்க பகுதிகளான கிருஷ்ணா, கோதாவரி வரை நீட்டித்தனர் இவர்கள்

சோழநாடு சோறுடைத்து என்பது காவேரியால் மட்டும் வரவில்லை செங்கை மாவட்ட ஏரிகள், பாலாறு, தென்பண்ணை, கிருஷ்ணா நதிவரை சோழர்களின் நெற்பூமி இருந்தது

இதில் கிருஷ்ணா நதியினை குறிவைத்த யுத்தத்திலே ஹோய்சாலர்கள், சாளுக்கியருடன் எல்லாம் மோதினார்கள்

இவர்களுக்கு பலத்த சிக்கல்கள் பல்லவர்கள், ஹோய்ச்சாலர்கள் உருவில் வந்தது

புலிகேசி போன்ற சாளுக்கிய மன்னர்கள் சோழர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தனர்.

இன்னொரு எதிர்ப்பு பாண்டிய சிங்கள உறவில் வந்தது

பாண்டியருக்கும் சிங்களளுக்கும் பலத்த உறவு இருந்தது அதாவது சிங்களருக்கு ஒன்று என்றால் பாண்டியர் வருவார்கள், பாண்டியர் சோழனை தாக்கினால் சிங்களர் வருவார்கள்

சிங்களருக்கும் பாண்டியருக்கும் மண உறவு இருந்தது

இந்த தந்திரத்தை தெலுங்கு மன்னர்களுடன், சாளுக்கிய மன்னர்களுடன் சோழர்களும் செய்தனர், இது அக்கால வழக்கம்

வென்ற மன்னனின் சந்ததி தன்னை கொல்லாமல் இருக்க அங்கு மணம் செய்து உறவாவது அலெக்ஸாண்டர் காலத்து பாணி

அப்படியாக சாளுக்கியர் , ஹோய்சாலர்களுடன் இணைந்த உறவினை சோழர்கள் கொண்டிருந்தனர. ஒரு காலத்தில் சாளுக்கியரும் பல்லவரும் அகற்றபட்டு ஹோய்சாலரும் சோழருமே இருபெரும் அரசுகளை கொண்டிருந்தனர்

தன் பரந்துபட்ட பேரரசை பாதுகாக்க இம்மாதிரி சில விட்டுகொடுத்தல்களும் மணவுறவும் சோழர்களுக்கு தவிர்க்க முடியாததாயிற்று

இந்நிலையில் ராஜராஜ சோழனுக்கு கொள்ளுபேரன் காலத்தில் வாரிசு சர்ச்சை வந்தது, அதில் சாளுக்கிய உறவில் பிறந்த குலோத்துங்க சோழன் மன்னரானான்

இங்கிருந்துதான் சோழர்கள் தெலுங்கர்கள் எனும் சர்ச்சை கிளம்பிற்று

சோழர்கள் நடத்தியது அரசு என்றாலும், வியாபாரங்களை காப்பதில் முன் நின்றனர். பல்லவர் வழியே சென்று மலேயா, இந்தோனேஷியா, கம்போடியா, வியட்நாம் வரை அவர்கள் வியாபாரம் நடந்தது

பெரும் கப்பல்படையினை அவர்கள் நாடுபிடிக்க கொண்டிருந்தவர்கள் அல்ல, வியாபாரத்தில் சிக்கல் என்றால் படையெடுத்து சென்று தீர்ப்பார்கள், இப்பொழுது அமெரிககா செய்கின்றதல்லவா அப்படி

பல்லவர்கள் செய்த கடல் வியாபாரத்தை நொறுக்கவே சோழர்களும் பெரும் கப்பல் படை அமைத்தனர், நாடு பிடிக்க அல்ல.

ஆக சோழர்கள் தெலுங்கர்கள் என்பதெல்லாம் இந்த தும்பிகளின் குருவி மூளையில் உதித்துவிட்ட கற்பனைகள்

செங்கிஸ்கான், அலெக்ஸாண்டரின் பரந்த சாம்ராஜ்யங்கள் ஆங்காங்கே மண உறவுகளை ராஜதந்திரமாக ஏற்றுகொண்டதில் இருந்த தந்திரத்தை சோழர்களும் செய்தனர்

இது அக்கால உலக வழக்கம்

இது புரியாமல் குறுகிய புத்தியில் இருந்துகொண்டு சோழர் இந்திர விழா நடத்தினார்கள், சோழர் ஜல்லிகட்டு நடத்தவில்லை, சோழர் பொங்கல் வைக்கவில்லை அதனால் தமிழரில்லை என்பதெல்லாம் அபத்தம்

பல்லவர் பிடியிலிருந்து சோழ்நாட்டை மீட்டார்கள், பெரும் சாம்ராயத்தை நிறுவினார்கள்

பல்லவர் காலத்தில் இங்கு புத்தமதம் பரவி இருந்தது, சோழர் அதை மறுபடி இந்துமதத்திற்கு திருப்பினார்கள்

தஞ்சை கோவில் அப்படித்தான் பிரமாண்டமாக கட்டபட்டது, சிவனுக்காக கட்டபட்டது, பின் தைபொங்கல் , ஜல்லிகட்டு எல்லாம் நடத்தபட்டது, இந்திர விழா விடைபெற்றது

சோழருக்கும் தெலுங்கருக்குமான உறவில் சோழர் தெலுங்கர்கள் என சொல்லதுணிந்த தும்பிகள் பாண்டியர் சிங்கள உறவினை மறக்கின்றன‌

பாண்டிய சிங்கள உறவினை முறிக்கவே ராஜராஜ சோழன் ஈழபடையெடுப்பை நடத்தி அனுதாராபுரத்தை எரித்து மும்முடி சோழன் என பட்டம்பெற்றான்

பாண்டியருக்கும் சிங்களருக்கும் இருந்த உறவின் தொடர்ச்சியினையே பின்பு மதுரைக்கு வந்த நாயக்கரும் தொடர்ந்தனர்

நாயக்க எனும் பெயர் சிங்களரில் பெருகி இருப்பது இப்படியே, அவர்கள் மண உறவில் வந்தவர்கள்தான் கண்டி நாயக்கர் வகையறா

இந்த தும்பிகள் கொஞ்ச காலம் முன்பு நாயக்கர்கள் தமிழனத்திற்கு செய்த கொடுமை பாரீர் என கண்டி நாயக்கன் வீடியோ எல்லாம் வெளியிட்டன‌

ஆனால் நாயக்க சிங்கள உறவிற்கு அடித்தளமிட்டது தமிழர் பாண்டியர் என்பதை மறக்கின்றன‌

தும்பிகளின் ஆராய்ச்சி எப்பொழுதும் அவமானத்திலேதான் முடியும், காரணம் எதை எல்லாம் பேசகூடாதோ அதை எல்லாம் பேசி அவமானபடுவது தும்பிகளுக்கு புதிதல்ல‌

இப்பொழுது சோழர் தெலுங்கர் உறவை சொல்வதாக சொல்லி பாண்டியருக்கும் சிங்களருக்கும் இருந்த உறவை வெளிகொண்டுவருவார்கள்

அது எதில் முடியும்?

பாண்டியர் சிங்களவர்கள் என்ற ரீதியில் போய் முடியும்

தெலுங்கருடன் உறவு பாராட்டியதால் சோழர் தெலுங்கரென்றால் நிச்சயம் அதனை சிங்களவனுடன் செய்த பாண்டியர் சிங்களனே..

சிவராசன், ஒற்றைகண் சிவராசன்

ஒரு பயலும் “தற்கொடையாளி மாவீரன்” சிவராசன் வாழ்க, தமிழின கண்ணகி “தற்கொடையாளி சுபா வாழ்க” என இன்னும் கிளம்பவில்லை

இவர்களுக்கு எல்லாம் வீரவணக்கம் இல்லையா?


Image may contain: 1 person, smilingஅல்கய்தாவின் கதையினை படித்தவர்களுகு தெரியும் அதில் ஒரு இரக்கமில்லா கொலைகாரன் இருந்தான் அவன் பெயர் ரம்ஸி யூசுப்

முதன் முதலில் அமெரிக்க இரட்டை கோபுரத்தை 1994ல் தகர்க்க தாக்கியது, கென்ய தான்சானிய தாக்குதல், பிலிப்பைன்ஸில் போப்பாண்டவரை கொல்ல முயன்றது என அவனின் அட்டகாசம் அதிகம், பின்பு அமெரிக்கா பிடித்து அவனை அமெரிக்க தனி தீவில் அடைத்திருக்கின்றது, மகா ஆபத்தானவன் அவன்

அவனை போலவே புலிகளில் ஒருவன் இருந்தான் அவன் பெயர் சிவராசன், ஒற்றைகண் சிவராசன்

அவன் இயற்பெயர் பாக்கியநாதன், புலிகளுக்கு யாரையாவது கொல்லவேண்டும் என்ற கொள்கைதான் மாறாதே தவிர பெயர் மாறிகொண்டே இருக்கும்

ஈழத்தில் புலிகளுக்க்காக பல கொலைகளை செய்தவனை பத்மநாபா கொலைக்காக தமிழகம் அனுப்பினார் பிரபாகரன்

Image may contain: 1 person, glasses, close-up and textஇங்கு வந்தவன் தன் சக புலியினை மாணவனாய் நடிக்க வைத்து பத்மநாபாவிடம் உதவி கோர செய்து அப்படியே அவர் இருப்பிடத்தை கண்டுபிடித்து சென்னை சூளமேட்டில் பத்மநாபா மற்றும் 13 பேரை கொடூரமாக கொன்றான்

அன்றிரவு அவனை தமிழக போலிஸ் பிடித்தது, ஆயினும் மேலிட உத்தரவுபடி விடுவிக்கபட்டான்

மேலிடம் என்றால் அன்று திமுக ஆட்சி, 1989ல் கலைஞர் வந்து அமைதிபடை எல்லாம் திரும்பெற்று அந்த படையினை கூட வரவேற்கமாட்டேன் என தேசதுரோகம் செய்த காலங்கள்

ஆம் ஒரு முதல்வராக இருந்து கலைஞர் அப்படி செய்தது நிச்சயம் தேசதுரோகம் சந்தேகமில்லை, ஆயினும் விபிசிங் அரசு கலைஞரை டிஸ்மிஸ் செய்யவில்லை

முதல்வரே தங்களுக்கு சாதகம் எனும் நிலையில் புலிகள் பேயாட்டம் ஆடினர், சிவராசன் பத்மப்நாபா கொலைக்கு பின்னும் இங்கு சில கொலைகளை செய்தான், தமிழக காவல்துறையினரையே தாக்கினான் என்றெல்லாம் செய்திகள் வந்தன‌

எல்லாம் அன்று வைகோ கலைஞருடன் இருந்த தைரியம், முரசொலிமாறன் புலிகளுக்கு காட்டிய அனுதாபம்

இந்த தைரியத்தில் தமிழகத்தை ஈழமாகவே நினைத்து சுற்றிவந்தான் சிவராசன், அவனுக்கு இங்கு எந்த தடையுமில்லை

இந்நிலையில்தான் ராஜிவினை கொல்லும் பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கபட்டது, தீக்குழந்தை என பெயரிடபட்ட தனுவும் மற்றவர்களும் இங்கு வந்தனர்

வழக்கபடி படகில் வேதாரண்யம் வந்த சிவராசன் கடத்தல் தங்கத்தை காசாக்கி சதி வேலையினை தொடங்கினான்

இங்கு அவனின் கும்பலில்தான் முருகன் இருந்தான், பேரரிவாளன் இருந்தான் , ஹரிபாபு இருந்தான், ஸ்டூடியோ சபாரத்தினம் இருந்தார்

இன்னும் பலர் இருந்தனர்

சிவராசனின் திட்டம் முதலில் நளினிக்கு தெரியவில்லை, ஆனால் பேரரிவாளன் போன்றவருக்கு தெரிந்தது காரணம் பேரரிவாளன் இலங்கை சென்று புலிகளை சந்தித்தவர்

காரியம் முடிந்ததும் இலங்கைக்கு செல்ல வேண்டியவர் பட்டியலில் பேரரிவாளன் ஹரிபாபு பெயர் எல்லாம் இருந்தது

பத்மநாபா போல் அல்லாமல் ராஜிவ் கொலை மிக சிரமாக இருந்தது, கூடவே கலைஞர் அரசு டிஸ்மிஸ் செய்யபட்ட நேரம் என்பதால் எங்காவது பேசினால் ஈழதமிழ் காட்டிகொடுத்துவிடும் என்பதாலும் நளினி , பேரரிவாளன் போன்றவர்களை பயன்படுத்திகொண்டான் சிவராசன்

இது போக தமிழக காங்கிரஸிலும் அவன் கரங்கள் ஊடுருவின, ராஜிவினை புலிகள் கொல்வார்கள் என கொஞ்சமும் நம்பாத காங்கிரசாரில் சிலர் அவன் புலிகளால் பாதிகபட்ட தமிழன் என்றே நம்பினர்

அவனும் அப்படியே நடித்து பலரை ஏமாற்றினான்

அப்படியே விபி சிங் நடத்திய கூட்டத்தில் ஒத்திகையும் பார்த்து கொண்டான்

பின் ராஜிவ் கொலையினை மிக நுட்பமாக திட்டமிட்டு அதை நடத்தியும் முடித்தான்

அதுவும் சென்னையில் ராஜிவ் தப்பினால் கிருஷ்ணகிரி அங்கும் தப்பினால் டெல்லியில் கொல்ல இன்னொரு பெண் ஆதிரை என ஏற்பாடு செய்திருந்தான். ராஜிவ் திருப்பெரும் புதூரிலே சிக்கினார்

கென்னடி கொலைபோல மர்மமான கொலை என்றாலும் சிவராசன் எதில் சிக்கினான் என்றால் இரு விஷயங்கள்

முதலில் பத்மநாபா கொலை போல அல்லாமல் இங்கு ராஜிவ் கொலைக்கு உள்ளூர் ஆட்களை பயன்படுத்தியது

இரண்டாவது அந்த ஹரிபாபுவின் கேமரா

இரண்டாவது விஷயம்தான் மகா கொடுமை, முதலில் குண்டு வைக்கும் இடம் தொடர்பாக சில போட்டோங்களை அனுப்ப அவன் ஹரிபாபுவினை கூட்டிகொண்டு அலைந்தான், ஆனால் கடைசி நொடியிலும் ஏன் என்றால் அங்குதான் புலிகளின் கோழைத்தனம் தெரிந்தது

பிரபாகரனுக்கு விசித்திரமான மனநோய் இருந்தது, தன் எதிர்களின் கடைசி நொடியினை அவர் பார்த்து திருப்தி அடைவது அவரின் ஸ்டைல் அப்படித்தான் இந்த படங்களும் எடுக்கபட்டன‌

குண்டுவெடிப்பின் வீரியம் சிவராசனுக்கு தெரிந்தும் அவனை அனுமதித்தான் , ஆனால் ஆர்வ கோளாறில் உட்சென்று உயிர்விட்டான் ஹரிபாபு. அந்த கலவரத்தில் கேமரா பற்றி மறந்துவிட்டான் சிவராசன்

நீதி அந்த கேமரா வடிவில் துப்பு துலக்க உதவியது

அதுவரை புலிகள் கண்ணீர் வடித்தனர், கிட்டுவோ லண்டனில் இருந்து முடிந்தால் கொலைகாரர்களை இந்தியா கண்டுபிடிக்கட்டும் என எகத்தாளம் செய்துகொண்டிருந்தான்

இந்தியா தீவிரமாக துப்பு துலக்கியது, பேரரிவாளன் நளியின் அண்ணன் அச்சகத்தில் இருந்த புலிகளின் குகையில் எனும் வீடியோக்கள் எல்லாம் சிக்கின‌

அதில் சிவராசனின் வீடியோ, வைகோ ஈழம் சென்ற வீடியோ எல்லாம் இருந்தது, விஷயம் உறுதிபடுத்தபட்டபின் அவனை இந்திய விசாரணை குழு தீவிரமாக தேடியது

புலிகளின் பெயர் அடிபட ஆரம்பித்தவுடன் அவனை காப்பாற்றும் முயற்சியினை பிரபாகரன் கைவிட்டார்

இந்திய குழு இலங்கைக்கு செல்லும் வயர்லெஸ் தொடர்புகளை ஒட்டுகேட்டபொழுது சிவராசனின் படுபயங்கர திட்டம் வெளிதெரிந்தது

ஆம், பூந்தமல்லியில் இருந்த ராஜிவ் கொலை விசாரணை அலுவலகத்தை தாக்கி கார்த்திகேயனை கொல்ல அவன் திட்டமிட்டது எல்லாம் தெரிந்தது

எவ்வளவு தைரியம்? யார் கொடுத்த தைரியம் என்றால் சாட்சாத் திமுகவும், திகவும் கொடுத்த தைரியம்

தமிழகத்தில் புலிவேட்டை தொடங்கியது, 30க்கும் மேற்பட்ட புலிகள் சயனைடு குடித்தனர், திக உறுப்பினர் எல்லாம் கைதாயினர், திமுக கனத்த அமைதி

இனி தமிழகம் தன்னை காப்பாற்றாது என உணர்ந்த சிவராசன் பெங்களூர் தப்பினான், அதுவும் டாங்கர் லாரியில் அவனும் சுபாவும் தப்பினர்

இங்கு பேரரிவாளன், நளினி உட்பட பல குடும்பங்களின் சீரழிவுக்கு காரணமான சிவராசன் அங்கும் ஒரு குடும்பத்தை கெடுத்தான் அவன் பெயர் ரங்கநாத்

ரங்கநாத் ஐரோப்பாவில் வசித்தபொழுது எப்படியோ புலிகளிடம் சிக்கிகொண்டார், அந்த தொடர்பில் அவரை பிடித்த சிவராசன் வலுகட்டாயமாக பயன்படுத்தினான்

இந்தியா முழுக்க அவனை காவல்துறை தேடிகொண்டிருக்க அவனோ பெங்களூர் அருகே புறநகரில் பதுங்கி இருந்தான், துப்பு கிடைத்த காவல்துறை வளைத்தது

கமாண்டோபடை வரும் வரை ரகசிய காவல் இருந்தார்கள், இந்திய வழக்கபடி கமாண்டோ படை தாமதமாகவே வந்தது

முதலில் அவனுக்கு சந்தேகம் வராதவாறுதான் வளைத்தார்கள் ஆனால் அங்கு வந்த டெம்போ ஒன்று பழுதானவுடன் சந்தேகபட்டு முதலில் தாக்கியது சிவராசன் குழு

சண்டை வெடித்தது, கமாண்டோ களமிறக்க சில தாமதாமாக ஆவணங்களை எல்லாம் எரித்துவிட்டு தற்கொலை செய்தான் சிவராசன்

ஆம் இதே ஆகஸ்டு 20, அன்று ராஜிவ் காந்தியின் பிறந்த நாள்

ராஜிவ் கொல்லபட்டு 3 மாதத்திற்குள் மிக சரியாக ராஜிவ் பிறந்தநாள் அன்று சிவராசனின் கதை முடிக்கபட்டது

ஈழபுலிகளில் மிக மிக கொடூரமானவன் சிவராசன், யாரும் செய்ய துணியாத கொடூரங்களை எல்லாம் சர்வ சாதாரணமாக செய்தவன்

புலிகளின் பயிற்சி அப்படி இருந்திருக்கின்றது

அவனை கொண்டாடிய புலி இயக்கம் அவனாலே அழிந்தது, அவனை ஆதரித்த பாவத்திற்காக நளினி குடும்பம் அழிந்தது

பேரரிவாளனின் தாயார் இன்றுவரை கண்ணீர் விடுகின்றார்

தமிழகத்தில் புலி இயக்கமே அவனின் செய்ய கூடாத செயலால் கருவருக்கபட்டது

பெங்களூர் ரங்கநாத் குடும்பம் அவனால் பிரிந்தது

புலிகளுக்கு கொல்ல , அழிக்கவே தெரியும் யாரையும் வாழவைக்க தெரியாது என்பதற்கு சிவராசன் பிரபாகரனை விட பெரும் உதாரணம்

இவ்வளவு நடந்தும் பேரரிவாளன் தாயாரோ, நளியோ யாராவது சிவராசனை கண்டித்தோ அவனை அனுப்பிய பிரபாகரனை கண்டித்தோ ஒருவார்த்தை பேசியிருப்பார்களா?

ஏன் பேசவில்லை?

ஒன்று அவர்களிடமிருந்து பெற வேண்டியதை பெற்று பேசாமல் இருக்க வேண்டும் அல்லது நாங்கள் செய்தது சரி சட்டத்தின் ஓட்டையில் எங்களை விடுங்கள் என மறைமுகமாக சொல்லவேண்டும்

அவர்கள் இந்த இரண்டையுமே செய்திருக்கின்றார்கள் பின் எப்படி அவர்களை விடுவிப்பார்கள்

சிவராசன் சந்தித்த திமுகவினர் ஏராளம் உண்டு அதில் முக்கியமானவர் வைகோ . அவரை போல இன்னும் நிறையபேர் உண்டு

சிவராசனின் கூட்டாளியாக கருதபட்ட, யார் மூலம் சிவராசன் தப்பி செல்ல முயன்றானோ அந்த சந்திராசாமியினை யாரும் தொடவில்லை

சந்திரசாமி பெரும் ஆயுத வியாபாரி, அந்த பெல்ட் வெடிகுண்டு இப்படி வந்திருக்கலாம் என்பது யூகம்

சுப்பிரமணியன் சாமி என்பவரும் சிக்கவில்லை, ராஜிவிற்கு கருப்பு பூனை படையினை வாபஸ் வாங்கியதே அவர்தான்

இந்த புலி, வைகோ, சு.சாமி, சந்திரசாமி எல்லோருக்கும் இடையேயான ஒற்றுமை அந்நிய நாட்டு கைகூலிகள்

இதில் சிவராசன் செத்தான் மற்றவர்களை ஏதோ ஒரு சக்தி காப்பாற்றிற்று

அவர்களை எல்லாம் வழக்கிலிருந்து ஒரு சக்தி காப்பாறிற்று, அதே வைகோ பின் மன்மோகன் அரசில் எல்லாம் இருந்தார்

யாருக்கும் வெட்கமில்லை என்பது இதுதான், அரசியல்வாதிகள் அப்படித்தான்

சிவராசனின் சாகசம் பற்றி அங்கிள் சைமனுக்கு இன்னும் தெரியாது போல, இல்லாவிட்டால் சிவராசனுக்கு கண்ணாடி வாங்கி கொடுத்ததே நான் என கிளம்பிவிடுவார்

இங்கு நடமாடவிட்ட பாவத்திற்காக பலரை கொன்ற , பல குடுமபங்களை சீரழித்த அந்த சிவராசனை போன்ற ஈழ ஈனதமிழர்கள் இனி பிறக்காமலே போகட்டும்

கொடுமதியாளர்களாலும் கொலைகாரர்களாலும் நிரம்பிய புலிப்படை, அதில் அரக்கனான சிவராசனை வளர்த்துவிட்டு அவனாலே அழிந்தும் போனது

2009 சம்பவங்களுக்காக கலைஞரை திட்டமுடியாது

ஆனால் 1990 சம்பவங்களுக்காக அவரை திட்டாமல் இருக்கவும் முடியாது

ஆம் பத்மநாபா கொலைவழக்கிலே சிவராசனை பிடித்து சாத்தி இருந்தால், தா கிருட்டினன் கொலைவழக்கில் காட்டிய வேகத்தை பத்மநாபா கொலைவழக்கிலே காட்டி இருந்தால் ராஜிவ் கொலை நடந்திருக்காது

அந்த பழியில் இருந்து தப்பிய கலைஞர், செய்த பாவத்திற்கு தப்பிய கலைஞர் 2009ல் செய்யாத பாவத்திற்கு மாட்டிகொண்டார்

சிவராசன் என்பவன் ராஜிவ் கொலையில் சம்பந்தபடாமல் இருந்தாலோ இல்லை கொல்லபடாமல் தப்பி இருந்தாலோ தமிழகம் அவனால் நாசக்காடு ஆகியிருக்கும்

அப்படி ஒரு வெறிபிடித்த மிருகம் அவன்.

தமிழகம் சிந்தவேண்டிய‌ முழு இரத்தபழியினையும் தாங்கி, தன்னை கொடுத்து தமிழ்நாட்டை காப்பாற்றி இருக்கின்றார் ராஜிவ் காந்தி

ஜெயா ஆவி பழனிச்சாமி உடலில் புகுந்துள்ளது : அமைச்சர் உதயகுமார் பேட்டி

ஜெயா ஆவி பழனிச்சாமி உடலில் புகுந்துள்ளது : அமைச்சர் உதயகுமார் பேட்டி

இது பாவிகளின் ஆட்சி என சிலர் சொல்லிகொண்டிருக்க இவரோ ஆவிகளின் ஆட்சி என சொல்லி கொண்டிருக்கின்றார்

இன்னும் ஆழமாக ஜெயா ஆவி எப்படி வந்தது என கேட்டால், மெரினாவிற்கு கலைஞர் சென்றதும் அதை பொறுக்கமுடியாத ஜெயா ஆவி பழனிச்சாமிக்குள் வந்துவிட்டது என்பார்

எனினும் இதை எல்லாம் நம்ப முடியாது

ஜெயா ஆவி உண்மையிலே புகுந்திருந்தால் பழனிச்சாமி சசிகலாவினை சந்தித்து அழுதிருப்பார், கொடநாட்டில் மல்லாக்க படுத்திருப்பார், சில நேரம் எங்கிருக்கின்றார் என தெரியாத அளவு மாயமாகி இருப்பார், முக ஸ்டாலின் மேல் பல அவதூறு வழக்கு பாய்ந்திருக்கும்

அமைச்சரவை அமாவாசை தோறும் மாறிகொண்டிருக்கும்

பழனிச்சாமி இப்படி எல்லாம் செய்யவில்லை என்பதால் அவர் உடலில் ஜெயா ஆவி இல்லை என்பது எல்லோருக்கும் புரிகின்றது

ஆனால் “பேய் ஆட்சி செய்தால் பிணம்தின்னும்..” என பாரதி சொல்லியிருக்கின்றபடியால் ஏதோ ஒரு பேய் பழனிச்சாமி உடலில் புகுந்திருக்கலாம்

அந்த பேய் எது என தெரியாமல் இவர் ஜெயா ஆவி என சொல்லி இருக்கலாம்

எதற்கும் ஜெயா வழக்கபடி இவர்கள் கேரள பணிக்கர்களை, நம்பூதிரிகளை பார்ப்பது நல்லது,

ஆனால் பணிக்கர்கோஷ்டி வெள்ளத்தில் சிக்கி எங்கு இருகின்றது ? என தேடுவதுதான் கடினம்

ஒண்டி வீரனின் நினைவு நாள்

Image may contain: 1 person

அது நாம் பார்த்துகொண்டிருக்கும் ராபர்ட் கிளைவ் காலம், விஷயம் என்னவென்றால் ஒன்றுமில்லை எல்லாம் வரிபிரிப்பு தகறாறு

அதுவரை தென்னக சிற்றரசர்கள் எல்லாம் ஆற்காடு நவாபிற்கு வரிகட்டி கொண்டிருந்தனர், பின்னர் முகலாய அரசிலிருந்து நவாப் வெளியேற நவாப் குடும்பம் வாரிசு சண்டையில் சிக்கும் பொழுது அதன் கீழிருந்த அரசுகள் எல்லாம் வெளியேறின‌

வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன் எல்லாம் இப்படி வெளியேறிய சிற்றரசர்கள்

ஆற்காடு நவாபிற்காக யுத்தம் செய்த கிளைவ் மிக பெரும் தோகை கோரினான், நவப்பால் கொடுக்கவும் முடியவில்லை ஆங்கிலேயரை எதிர்க்கவும் முடியவில்லை “எனக்கு கட்டுபட்ட சிலர் வரிகொடுக்க மறுக்கின்றனர் முடிந்தால் நீனே வசூலித்துகொள் கொள்” என சொல்லிவிட்டான்

இப்படித்தான் ஆங்கிலேயபடை பூலித்தேவன் பக்கம் வரிகேட்க வந்தது , அவன் கட்ட மறுத்தான் யுத்தம் வெடித்தது

இதில் புலித்தேவனுக்கு பல தளபதிகள் இருந்தனர், அட்டகாசமான வீரர்களும் இருந்தார்கள், அவர்களில் ஒருவனே அந்த ஒண்டி வீரன், அவன் இயற்பெயர் தெரியவில்லை தனியாக சென்று வெள்ளையரை மண்ணை கவ்வ வைத்ததால் ஒண்டி வீரன் ஆனார்

என்ன செய்தார்?

நெற்கட்டும் செவல் எனும் பூலித்தேவனின் ஊரினை சுற்றி முற்றுகை அமைத்தது வெள்ளையன் படை, வந்திருந்தது யாரென்றால் கர்னல் ஹெரான்

கர்னல் ஹெரான் எனும் வெள்ளையனுக்கு மேலிருந்தவன் மருதநாயகம் எனும் யூசுப்கான், கிளைவின் கண்ணில்பட்ட மிக சிறந்த இந்திய வீரன்

(கமலஹாசனின் கனவில் மய்யத்துக்கு முன்பு அடிக்கடி வந்தவர் அவர்தான்)

பெரும் வீரனான மருதநாயகம் நெற்கட்டும் செவலை முற்றுகையிட்டு சில வேலை காரணமாக மதுரை திரும்பினான்

அவனின் வாளும் பட்டய குதிரையும் முகாமில் இருந்தன, அதாவது மருதநாயகம் வாளுக்கும் குதிரைக்கும் மரியாதை செலுத்தி வரிகொடுத்துவிடுங்கள் என்பது போன்ற மிரட்டல் அது

கர்னல் ஹெரான் தந்திரமாக ஒரு வேலை செய்தான், காரணம் முற்றுகை இட்டானே தவிர யுத்தம் தொடங்கவில்லை, பூலித்தேவனுடன் யுத்தம் தொடர அந்த அறிவிப்பினை செய்தான்

என்ன சொன்னான்?

“இந்த நெற்கட்டும் செவல் சமஸ்தானத்தில் ஒரு ஆண்மகன் இருந்தால் எங்கள் முகாமில் வந்து யூசுப்கானின் வாளினை எடுத்து அவன் பட்டயகுதிரையினை அவிழ்த்து சென்றுவிடுங்கள் பார்க்கலாம்”

(சிலர் அது நவாபின் வாள் என்கின்றார்கள், சிலர் கிளைவின் வீரவாள் என்கின்றார்கள், சிலர் மருதநாயகத்து வாள் என்கின்றார்கள்

அது மருதநாயகத்து வாளாக இருக்கவே வாய்ப்பு அதிகம், காரணம் அவனின் வாள்வீச்சு அப்படியானது)

சொல்லிவிட்டு பீரங்கிகளை எல்லாம் செவல் கோட்டையினை நோக்கி திருப்பி இருந்தான்

அதாவது எவனாவது ஓடிவருவான் யுத்தம் தொடங்கியவுடன் கோட்டையினை தூள் தூளாக்கிவிடலாம் என்பது அவன் கணக்கு

“நீ எல்லாம் ஆம்பிளையா, இந்த கூட்டத்தில் ஒரு ஆம்பிளை கூட இல்லையா” என்பதை தவிர தமிழனுக்கு வெறியேற்றும் விஷயம் கிடையாது, இன்றைய சினிமா வரும் அந்த வசனத்தை அன்றே அறிந்து சொன்னான் ஹெரான்

அப்பொழுது பூலிதேவனின் அந்த வீரன் மாறுவேடத்தில் அலைந்தான், குதிரை வாரினை செப்பனிடும் தொழிலாளி வேடத்தில் வெள்ளையன் முகாமில் ஊடுருவினான்

சில நாட்கள் வேலை செய்துகொண்டே அங்கு எல்லா வழிகள், பாதுகாப்புகள், வாள் இருக்குமிடம், குதிரை , தப்பி செல்லும் வழி எல்லாம் அறிந்துகொண்டான்

ஒரு அமாவசை அன்று பீரங்கிகள் வாயினை எல்லாம் வெள்ளையன் முகாமினை நோக்கி திருப்பிவிட்டு யூசுப்கானின் வாளினை எடுத்துவிட்டான்

மெதுவாக குதிரையினை அவிழ்க்கும்பொழுது சிக்கல் வந்தது

என்ன இருந்தாலும் அது மருதநாயகம் குதிரை அல்லவா? அடங்க மறுத்தது, ஆங்கிலேயர் ஓடி வந்தனர்

இதுவரை ஒழுங்காக செல்லும் வரலாறு அதன் பின் இரண்டு கதையாகின்றது

முதல் கதைபடி வெள்ளையரை பார்த்தவுடன் அருகில் இருந்த புற்கட்டுக்குள் அவன் படுத்ததாகவும் கைகளை நீட்டியபடி ஓளிந்திருந்ததாகவும். குதிரையினை கட்ட முளைகம்பு அடிக்கும் வெள்ளையர்கள் அவன் இடது கையிலே அறைந்ததாகவும் வெள்ளையர் சென்றபின்பு அவன் அந்த கையினை வெட்டி குதிரையில் ஏறியதாகவும் ஒரு செய்தி

இன்னொரு செய்தி குதிரையினை தொட்டு அவன் ஏறியவுடன் ஆங்கிலேய வீரன் அவன் கையினை வெட்டினான் என்பது

எப்படியோ அவன் கை வெட்டபட்டது நடந்த வரலாறு

அந்த வெட்டுபட்ட கையோடு அவன் என்ன செய்தான் என்றால் அபாய முரசை ஒலிக்க செய்தான், மிக தந்திரமான விஷயம் அது

ஆம் அது போருக்கான ஒலி அதை கேட்ட மாத்திரத்தில் பீரங்கிகள் இயக்கபடும், அதை கேட்டதும் பீரங்கிக்கு நெருப்பு வைத்தனர் வெள்ளையர்

ஆனால் அதன் வாயினை அவன் திருப்பி இருந்ததை அவர்கள் அறியவில்லை காரணம் இருட்டு

பீரங்கி வெள்ளையர் முகாமிலே பாய்ந்து பெரும் சேதம் உண்டாயிற்று அந்த குழப்பத்தில் தப்பி வந்தான் ஒண்டி வீரன்

நிச்சயம் அது பெரும் சாகசம், தனி ஒருவனாக மிக தைரியமாய் வெள்ளையன் முகாமில் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்திய வீரம் அது

அத்தோடு ஆங்கிலபடை சலசலத்தது, ஆயினும் என் வாளை தொட்டவன் எவன்? என பொங்கி வந்த மருதநாயகம் புலித்தேவனை தோற்கடித்தான், ஆயினும் புலித்தேவனை கைது செய்யவில்லை அவரின் முடிவு தெரியவில்லை

ஆனால் ஒண்டிவீரன் அந்த போரில் இறந்ததாக சொல்வார்கள்

இவை எல்லாம் நொண்டி சிந்து, ஒண்டி வீரனை பற்றிய நாட்டுபுறபாடல்களில் இருந்த செய்திகள்

கட்டபொம்மன் முதல் மருதுபாண்டியர் வரை எல்லாம் நாட்டுபுறபாடல் மூலமே நாம் அறியபெற்றோம் துல்லிய குறிப்புகள் ஏதுமில்லை வெள்ளையனின் போர் குறிப்பை தவிர‌

கட்டபொம்மனின் வாழ்வினை மபொசி கொண்டு வந்தது பொல மருதுபாண்டியரின் வாழ்வும் நாட்டுபுற பாடலில் இருந்து வந்தது போல ஒண்டிவீரனின் வாழ்வும் வெளிவந்தது

வந்து என்ன ஆனது?

கட்டபொம்மன் நாயக்கன் , மருது மறவர் ஆனது போல ஒண்டிவீரன் அருந்ததியர் ஆக்கபட்டார்

அந்த சாதியின் அடையாளமாக கொண்டாடபட்டார், இதனால் ஆங்காங்கு சர்ச்சைகள் வெடித்தன

 ஒண்டி வீரனின் நினைவு நாள், ஆனால் நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவாம்

ஒண்டி வீரன் புலித்தேவனின் உற்ற நண்பன், புலித்தேவன் படையில் எல்லா சாதியினரும் ஒற்றுமையாக இருந்திருக்கின்றார்கல்

புலித்தேவனுக்காக உயிர்கொடுக்கும் அளவு நாட்டுபற்று அவனுக்கு இருந்திருக்கின்றது

இன்று அதே பூமியில் அவர்கள் பெயரில் சாதியால் மோதிகொள்வது நெல்லை விசித்திரம்

எல்லா சாதியும் ஒன்றாக இருந்துதான் வெள்ளையனை எதிர்த்திருக்கின்றார்கள் , நாடு முக்கியம் என்றுதான் இருந்திருக்கின்றார்கள்

ஆனால் சுதந்திர இந்தியாவில் சாதியால் மோதிகொள்ளுகின்றார்கள் எல்லாம் அரசியல்

நாளை புலித்தேவனுக்காகவும் நெற்கட்டும் செவலுக்காகவும் சாதி பாராது, இனம் பாராது செத்த அந்த வீரனின் நாள்

ஆனால் அற்ப சாதிக்காக அவன் தூக்கிபிடிக்கபடுகின்றான்

அவனின் தேசபற்றையோ, தியாகத்தையோ யாரும் நினைக்கவில்லை மாறாக அவனின் சாதியினையே தூக்கி பிடிப்பர்

இவர்களை விட அவன் கையினை வெட்டிய அந்த வெள்ளையன் எவ்வளவோ பரவாயில்லை

போகட்டும்

அந்த சுத்தமான வீரனுக்கு வீரவணக்கம், அவனை போன்ற மாவீரர்கள் செய்த மகத்தான தியாகமே இன்றைய சுதந்திர இந்தியாவின் விடிவிற்கு விடிவெள்ளி

ஜெய் ஹிந்த், வந்தே மாதரம்