ஆசிய விளையாட்டு போட்டிகள் 2018

ஆசிய விளையாட்டு போட்டிகள் கடும் வேகத்தில் இந்தொனேஷியாவில் நடந்து கொண்டிருக்கின்றது

உலக சாம்பியனை உள்ளூரில் களமிறக்கினால் என்னாகும்? அப்படி சீனா அள்ளிகொண்டிருக்கின்றது. எல்லா போட்டியிலும் முதல் பதக்கத்தை அதற்காக ஒதுக்கி வைத்த்துவிடுகின்றார்கள்

சில இடங்களில் 3 பதக்கமும் அவர்களுக்காகிவிடுகின்றது

இரண்டாம் இடத்தில் ஜப்பான் இருக்கின்றது , கொரியா மூன்றாம் இடம் என நீளுகின்றது

இந்தியா 7ம் இடத்தில் நீடிக்கின்றது, ஆச்சரியமாக வடகொரியா 6ம் இடத்திலும் ஈரான் அதற்கு முந்தைய இடத்திலும் இருக்கின்றது

பொருளாதார தடையிலும் ஈரானும், வடகொரியாவும் அசத்துகின்றன‌

இரண்டாம் பெரும் ஆசிய நாடான இந்தியா 3 தங்கங்களுடன் நிற்கின்றது

நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல் என்ன தெரியுமா?

பாகிஸ்தான் இன்னும் பதக்கபட்டியலில் வரவே இல்லை, இது போதாதா நமக்கு?

கேரளாவின் மழைக்கு அரபு நாடு அள்ளி கொடுத்தது மத்திய அரசு கிள்ளிகொடுத்தது

கேரளாவின் மழைக்கு அரபு நாடு அள்ளி கொடுத்தது மத்திய அரசு கிள்ளிகொடுத்தது என பலர் கிளம்பி இருக்கின்றான்

கேரள அரேபிய தொடர்புகள் நபிபெருமான் காலத்திற்கும் முந்தியவை. இந்தியாவின் முதல் இஸ்லாம் மன்னன் மலையாளியே

இந்தியா அடிக்கடி இயற்கை சீற்றத்தால் பாதிக்கபடும் நாடு, நமக்கு தெரிந்தே நிலநடுக்கம் முதல் பெரும் வெள்ளத்தாலும் பாதிக்கபடும் நாடு, அப்பொழுதெல்லாம் அரபு நாடுகள் அள்ளி கொடுத்தார்களா?

இங்கே விடுங்கள், பக்கத்து நாடு பாலஸ்தீனமும், சிரியாவும் பட்டினியால் சாகும்பொழுது இவர்கள் என்ன கொடுத்தார்கள்?

நிச்சயம் மனிதாபிமானத்தில் கொடுத்தார்கள் என சொல்லமுடியாது, அப்படி கொடுத்திருந்தால் ஏகபட்ட விஷயங்களுக்கு கொடுத்திருக்க வேண்டும்

ஆனால் விஷயம் அது அல்ல‌

அரபு நாடுகளில் பல தொழில்கள் நடத்துபவர்கள் மலையாளிகள், 1930களில் கொழும்பில் இருந்தது போல இன்று அவங்கள் அங்கு குறிப்பிட்ட செல்வாக்கு கொண்டவர்கள் , அதனால் இது நடந்திருக்கலாம்

அரபு நாடுகள் ஏராளமான பணமும் குறைந்த மக்கள் தொகையும் , சிறிய பரப்பளவும்கொண்டவை, சில லட்சகங்களிலே அவர்கள் மக்கள் தொகை முடிந்துவிடும்

இந்தியா மிகபெரும் நாடு என்பதாலும் ஏகபட்ட விஷயங்களை கவனிக்கவேண்டிய நாடு என்பதாலும் முதற்கட்டமாக 500 கோடி கொடுத்தது, இன்னும் செய்வார்கள்

அதற்குள் அவன் அவ்வளவு கொடுத்தான், சொந்த தேசம் கண்டுகொள்ளவில்லை என்பதெல்லாம் அபத்தம்

இன்னொரு கும்பல் ஏன் சர்வதேச உதவி கோரவில்லை என கிளம்புகின்றது, அதில் இருகின்றது சிக்கல்

இப்போதுள்ள உலகில் எல்லாமே சந்தேகமானவை, நல்ல தொண்டு நிறுவணங்களில் கூட திறமையான உளவாளிகள் ஊடுருவி செய்ய வேண்டியதை செய்வார்கள்

பாகிஸ்தானில் தடுப்பூசி போடுகின்றோம் என சொல்லித்தான் பின்லேடனின் ரத்தமாதிரி பெறபட்டு அவன் கொல்லவும் பட்டான்

சுனாமியில் உதவுகின்றோம் என அலறி அடித்து புலிகள் கட்டுபாட்டு பகுதிக்கு சென்ற தொண்டு நிறுவணத்தில் ஊடுருவிய உளவாளிகள்தான் புலிகளுக்கு முடிவுரை எழுதினர்

அவசத்தில் அந்நிய சக்திகளை அனுமதிப்பது தீரா சிக்கல்களை உருவாக்கும்,

கொச்சி கப்பல்படை தளம் இன்னபிற முக்கிய இடங்கள் உள்ள பகுதியில் இன்னொரு சக்திகளை மீட்புபணி என அனுமதிப்பது ஆயிரம் முறை யோசிக்க வேண்டிய விஷயம்

கேரள வெள்ளத்தை மத்திய அரசு மிக நன்றாகவே கையாண்டு மீட்பு பணியினை செய்திருக்கின்றது, செய்துகொண்டும் இருக்கின்றது

குறை சொல்லவேண்டும் என கருதுபவர்கள் சொல்லிகொண்டே தான் இருப்பார்கள்

பக்ரீத் எனும் பொதுபண்டிகை இஸ்லாமிய பண்டிகையாக மட்டும் அறியபடுகின்றது

Image may contain: sky, cloud, text and outdoor

அந்த பெரியவர் இன்றைய பாக்தாத் பக்கத்தில் ஊரில் வாழ்ந்துவந்தார், குழம்பவேண்டாம், அந்த ஊரின் பெயர் “ஊர்” தான். மிக‌ நிச்சயமாக தமிழ்பெயர்தான்,

அந்த பகுதி கஸ்திம் அல்லது கல்தேயா, ஹீப்ரு மொழியின் மூலபிரதி அப்படித்தான் சொல்கிறது,

நமது பகுதியில் பல ஊர்கள் இருப்பது போல, அது கஸ்திம் ஊர் அல்லது ஊர் கஸ்திம்.

அவரும் எதற்காகவோ அந்த பகுதியினை விட்டு விலகி வெகுதொலைவில், அதாவது இன்றைய துருக்கியில் அன்று ஹாரன் என அழைக்கபட்ட இடத்திற்கு வந்தார், அதாவது குடும்பத்தோடும், சகலத்தோடும் வந்து சேர்ந்தார்.

மனிதர் பெரும் சொத்துபத்திற்கு அதிபதி, அதாவது அந்நாளில் ஆடுகள்,மாடுகள் முதலானவையே மாபெரும் செல்வம். ஊர் என்பது விவசாய பகுதி, இவர் ஆடு மாடுகளை பெருமளவில் வைத்திருந்ததால் மேய்ச்சல் நிலம் தேடி இடம்பெயர்ந்திருக்கலாம் என்ற தியரியும் உண்டு.

இவ்வளவு செல்வங்கள் இருந்தும் அவருக்கு பிள்ளை செல்வம் இல்லை, ஆனால் இவரை ஏனோ கடவுளுக்கு மிகவும் பிடித்து போயிற்று.

(சில அட்டகாச கிறிஸ்தவர்கள் சொல்வார்கள், பிரம்மம் எனும் வழிபாடு இருந்த இடம் அது, இவர் அதனை எதிர்த்தார் அதனால் நீதி xஅநீதி. நியாயம்xஅநியாயம் திமுக xஅதிமுக வரிசையில் இவர் பிரம்ம xஅபிரம்மம், அது ஆபிராம் எப்படி பார்த்தீர்களா? என கண்களை வானத்தை நோக்கி திருப்புவார்கள்,

அப்படியானால் அபிராமி என்றால் என்ன பொருள் கேட்டால் பற்களை நரநரவென கடித்துவிட்டு ஓடிவிடுவார்கள்.)

அவர்தான் ஆபிராம் அல்லது ஆபிரகாம் என யூதர்களாலும், கிறிஸ்தவர்களாலும், இஸ்லாமியர்களால் இபராஹிம் நபி என அழைப்பபடுபவர்

அவரின் பெயர் அப்படியானது அவ்வளவுதான் விஷயம்,

ஹீப்ரு,கிரேக்கம்,லத்தீன், ஆங்கிலம் என சுற்றி வந்ததால் ஆபிராம், ஒரிஜினல் அரபுபொழியில் அது இப்ராஹிம். அவ்வளவுதான் விஷயம்

இவரிடம் வந்த கடவுள், இவரை கானான் எனப்படும் இன்றைய இஸ்ரேல் பாலஸ்தீன பகுதிகளுக்கு வருமாறு அழைத்தார். ஆபிரகாமும் ஒரு வார்த்தை பேசாமல் பின் தொடர்ந்து வந்தார்,கொஞ்சகாலம் கானானிலும் பின் பஞ்சம் வரும்பொழுது எகிப்திலுமாக அப்பகுதியெல்லாம் சுற்றி திரிந்தார், சுருக்கமாக சொன்னால் நாடோடி மேய்ப்பன் வாழ்க்கை.

வயதும் ஏறிற்று, ஆனால் குழந்தை இல்லை. ஒரு நாள் கடவுள் வந்து அவரிடம் குழந்தைபற்றிய உறுதிமொழியும், அவருடைய வம்சம் தழைத்தோங்கும் உறுதியினையும் அளித்துவிட்டு சென்றார்.

நிச்சயமாக அது மெடிக்கல் மிராக்கிள். கிட்டதட்ட 100 வயதாக இருக்கும்பொழுது கடவுள் அவருக்கு ஒரு மகனை கொடுத்தார், மனைவிக்கோ கிட்டதட்ட 80 வயது.

ஆண்டவன் நினைத்துவிட்டால் எல்லாமும் சாத்தியம் அல்லவா?

பின்னும் மற்ற வேலைகாரிகள் மூலமாகவும் அவருக்கு பிள்ளைகள் பிறந்தாலும், இம்மகன் மீது அவர் உயிரையே வைத்திருந்தார்.

பக்தனை சோதிப்பது கடவுளின் பிரதான ஆட்டம், அப்படியே இவரையும் சோதிக்க்\ எண்ணி, உன் மகனை எனக்கு பலிகொடு என்றார். அந்நாளில் ஆடு,மாடுகள் பலி உண்டு, சில இடங்களில் நரபலி கலாச்சாரமும் இருந்திருக்கின்றது.

முதிர்ந்த வயதில், மனைவிக்கும் தனக்கும் வராது வந்த மாமணியான அம்மகனை பலியிடுவது என்றால் எவ்வளவு துயரம்? அரசன் கேட்டால் மறுத்துவிடலாம், கடவுள் கேட்டால்? என்ன செய்ய? அவரின் பக்தி நிறை உள்ளம் மறுக்கவில்லை.

சிறுதொண்ட நாயனாரை சிவபெருமான் அகோரி வேடத்தில் வந்து மகனையே வெட்டி சமைக்க வைத்து சோதித்தார் அல்லவா? அதேபோல் ஒரு சோதனை.

அப்படியே இவரும் மகனை தானே வெட்டி பலியிட தயாரான பொழுதுதான், கடவுள் தடுத்து இவரின் பக்தியினை மெச்சி, இவருக்கு சில உறுதிமொழிகளை அள்ளி வீசிவிட்டு ஒரு ஆட்டினை காட்டி பலியிட சொன்னார், கடவுளுக்கு மிகுந்த நன்றியினை தெரிவித்துவிட்டு அவரும் அவரோடு இருந்தவர்கள் அந்த ஆட்டினை பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.

சிவபெருமான் போல தன் மகனை வெட்ட வைத்து , அவனையே சமைக்க வைத்த ” ரிஸ்க்” ஆட்டம் எல்லாம் அந்த கடவுள் ஆடவில்லை. அவன் தன் மகனை வெட்ட துணிந்ததே அந்த கடவுளுக்கு போதுமானதாக இருந்திருக்கின்றது.

அதனை நினைவு கூறும் வண்ணம் இஸ்லாமிய பெருமக்கள் அந்த நாளில் ஆடு பலியிட்டு கடவுளுக்கு நன்றி கூறுகின்றனர், அதாவது அந்த பெருமகனாரின் ஒப்பற்ற தியாகத்தினை நினைவு கூறுகின்றனர்.

இச்சம்பவம் யூதர்களின் தோரா, கிறிஸ்தவர்களின் பைபிள், இஸ்லாமிய பெருமக்களின் குரான், பஹாய் மதத்தின் குறிப்புகள் என இந்த பெரியவர் இப்ராஹிம் தொடர்புடைய எல்லா மதங்களிலும் அழுத்தமாக பதிவு செய்யபட்டிருக்கின்றது.

இந்த பக்தியினை மெச்சித்தான், இறைவன் இவருக்கு பெரும் மதிப்பினை கால காலத்திற்கும் வழங்கினார். அதாவது இந்த தியாகம் செய்ய அவர் துணிந்ததால் யூதம்,இஸ்லாம்,கிறிஸ்தவம், பஹாய் என சகல மதங்களின் வரலாறுகளிலும் மகா நிச்சயமாக முதல் இடம் இவருக்கு, காலமுள்ள காலமட்டும் இவர் ஒருவருக்கே.

அந்த தியாக திருநாளினை இஸ்லாமிய பெருமக்கள் தங்களின் பெரும் கடமைகளில் ஒன்றாகவே ஏற்றுகொண்டார்கள், அந்த பெருமகனார் தன் மகனுடன் வந்து கடவுளை வணங்கிய இடம்தான் புனிதமான மெக்காவின் பழமையான கஃபா என்பது அவர்களின் பெரும் ஆதார நம்பிக்கை, அதனால்தான் பல கோடி இஸ்லாமியர் அங்கு கூடி தங்கள் மத சடங்குகளை நிறைவேற்றுவர்.

இந்த நாளில் ஆட்டினை பலியிட்டு பகிர்ந்தளிக்கவேண்டும் என்பது அவர்களின் மரபு, உருது மொழியில் பக்ரீ என்றால் ஆடு என பொருள்படும் என்பார்கள், ஈத் என்றால் பகிர்ந்துகொள்ளும் பண்டிகை. அதுவும் அந்த ஆடு ஏழைகளுக்கு இத்தனை சத்வீதமும், உறவினர்களுக்கு இத்தனை சதவீதமும் கண்டிப்பாக கொடுக்கவேண்டும் என்ற கட்டுபாடுகளும் உண்டு.

உண்மையில் இதனை கிறிஸ்தவர்களும் கொண்டாடவேண்டும், ஆனால் ஏனோ கொண்டாடுவதில்லை.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு அது கட்டாயமில்லை ஆனால் அதனை கொண்டாடுபவர்கள் உண்டு.

இந்த பிரிவினை கோஷ்டிகள் இதற்கு சொல்லும் விளக்கமே தனி, நன்றாக பன்றிகறி வெட்டிகொண்டிருப்பார்கள், பைபிள்படி இது தவறல்லவா என்றால் , உனக்கு தெரியாதா? நாம் கிறிஸ்தவர் புதிய ஏற்பாடு போதும் என சொல்லிகொள்வார்கள்

பின் ஏன் பத்து கட்டளை? பத்தில் ஒரு பங்கு காணிக்கை வசூலிக்கின்றீர்கள்? அதுவும் பழைய ஏற்பாட்டில் சொல்லபட்ட விஷயம்தானே என்றால், அப்பாலே போ சாத்தானே என சொல்லிவிட்டு பரலோக பாஷையில் இறங்கிவிடுவார்கள்

நிச்சயமாக இது கிறிஸ்தவர்களும் கொண்டாடவேண்டிய தியாக திருநாள்தான். ஆபிரகாமின் கடவுள் என சொல்லி ஜெபிப்பவர்களுக்கு அவரின் ஒப்பற்ற தியாகத்தின் திருநாளை கொண்டாட வேண்டும் என ஏனோ தெரிவதில்லை.

தியாக திருநாள் அதாவது பக்ரீத் பண்டிகை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய பெருமக்களுக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

நிச்சயம் இது பெரும் விழா, யூதர் இஸ்லாமியர், கிறிஸ்தவர் என எல்லோருக்கும் பொதுவான விழா

இதில் யூதர் சுயநல கும்பல் அவர்களுக்குள் மட்டும் கொண்டாடுவார்கள்

கிறிஸ்தவர்களுக்கு முழு வரலாறும் தெரியாது, தெரிந்தாலும் கொண்டாடுவதாக இல்லை, ஆட்டுகறி என்ன? எலும்பு கூட பகிரமாட்டார்கள்

அது என்னமோ தெரியவில்லை கிறிஸ்தவம் யூதரிலிருந்தும் அப்படியே ஐரோப்பாவில் சுற்றி வளர்ந்ததாலும் பகிர்ந்துகொள்ளும் உணவு பழக்கம் அவர்களிடம் இல்லை

இதில் இஸ்லாமியர் மெச்சதக்கவர்கள். அவர்கள் மேல் பல சர்ச்சைகள் இருக்கலாம் ஆனால் பகிர்ந்து உண்ணுவதில் அவர்களை மிஞ்சமுடியாது, இஸ்லாம் அப்படி பயிற்சி கொடுத்திருக்கின்றது

எல்லா மனிதரும் அவர்களிடம் இருந்து கற்க வேண்டிய மிக நல்ல வழக்கம் அது.

அதனால்தான் பக்ரீத் எனும் பொதுபண்டிகை இஸ்லாமிய பண்டிகையாக மட்டும் அறியபடுகின்றது

இறைவனின் அருளும், கருணையும் நம் எல்லோர் மேலும் இருக்கட்டும்.

யாராவது எமக்கு ஐதரபாத் பிரியாணி தந்தால் அவர்கள் மீது இன்னும் அதிகமாக இருக்கட்டும்.

போலிஸ் ஐஜி மீது பெண் எஸ்பி பாலியல் குற்றசாட்டு : செய்தி

கமல் வீட்டில் அத்துமீறி நுழைந்தவர் கைது: செய்தி

அவன் விஸ்வரூபம் 2 படத்தால் மிகவும் பாதிக்கபட்டானா இல்லை மய்யம் அவனை இந்த அளவு பாதித்ததா என்பது விசாரணையில் தெரியும்


செப்டம்பர் 5ல் என் பலத்தை காட்டுவேன் : முக அழகிரி

எங்கோ இளவட்டகல்லை தூக்கி காட்டபோகின்றார் போல‌

அழகிரி இணைந்தால் திமுகவிற்கு பலம், மாறாக திமுகவிற்கு எதிராக‌ அழகிரி என்ன பலத்தை காட்டினாலும் அவருக்கு கொஞ்சமும் பிரயோசனபடாது

திமுகவில் இருந்து பிரிந்து சென்ற‌தில் ராமசந்திரன் தவிர யாரும் பிரகாசித்ததில்லை என்பது வரலாறு.


கேரள வெள்ளத்திற்கு ஆயிரம் காரணங்களை சொல்லி அய்யப்பனையும் இழுக்கின்றார்கள்

ஒரு பயலாவது அந்த பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை பாதிரியார்கள் சீரழித்த பாவம் என சொல்லவே இல்லை

இதுதான் தமிழ்நாட்டு பகுத்தறிவு என்பது

(இப்பொழுது நாம் எச்.ராசாவின் திருட்டு ஐடி என்றொரு கூட்டம் திட்ட‌ வரும்)


போலிஸ் ஐஜி மீது பெண் எஸ்பி பாலியல் குற்றசாட்டு : செய்தி

இதுவே சினிமா துறை என்றாலோ, இல்லை வேறு ஏதும் துறை என்றாலோ போதும் பத்திரிகைகள் எல்லாம் துள்ளி கொண்டு வரும்

புலனாய்வு செய்வார்கள், வீடு விலாசம் இன்னபிற அடையாளங்களை அட்டகாசமாக சொல்வார்கள். ஆளாளுக்கு ஷகீலா படத்தினை மிஞ்சும் அளவு எழுதி தள்ளுவார்கள்

இப்பொழுது செய்தி வந்ததே தவிர அந்த ஐஜி யார் என்றோ, அந்த எஸ்பி யாரென்றோ யாராவது சொல்வார்களா?

மாட்டார்கள்

“சொல்வதெல்லாம் உண்மை” போன்ற நிகழ்ச்சிக்கு இந்த பெண் எஸ்பியினை அழைக்கட்டும் பார்க்கலாம்

பாலியல் சீண்டல் பட்டாலும் பெண் பெரிய இடத்திலிருந்து படவேண்டும் என்பது தமிழக நியதி.


 

கேரளாவுக்கு ஐக்கிய அரபு 700 கோடி ரூபாய் நிதியுதவி

கேரளாவுக்கு ஐக்கிய அரபு 700 கோடி ரூபாய் நிதியுதவி. ‍ செய்தி

இந்த அரபு நாடுகள் அருகில் இருந்து கதறும் பாலஸ்தீனுக்கோ, சிரியாவிற்கோ கூட உதவிய நாடுகள் அல்ல என்பதுதான் ஆச்சரியம்

மலையாளிகளின் அரேபிய செல்வாக்கு இப்படி இருக்கின்றது

போகிற போக்கில் முல்லை பெரியாறு அணையினை இடிக்காவிட்டால் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் தரமாட்டோம் என அரபு நாடுகள் சொல்லும் காலமும் வரலாம் போலிருக்கின்றது


கேரள வெள்ளத்திற்கு ஆயிரம் காரணங்களை சொல்லி அய்யப்பனையும் இழுக்கின்றார்கள்

ஒரு பயலாவது அந்த பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை பாதிரியார்கள் சீரழித்த பாவம் என சொல்லவே இல்லை

இதுதான் தமிழ்நாட்டு பகுத்தறிவு என்பது

(இப்பொழுது நாம் எச்.ராசாவின் திருட்டு ஐடி என்றொரு கூட்டம் திட்ட‌ வரும்)


மனுஷ் சொன்னது சொந்த கருத்தாம்

Image may contain: 1 person, smiling, close-upமனுஷ் சொன்னது சொந்த கருத்தாம், அவர் எழுத்தாளராம் அதனால் அவர் கருத்தை , கருதுரிமைக்கு எதிரான கலவரமாக பார்க்க வேண்டுமாம்

தலைவி குஷ்பு பாலியல் கல்வி பற்றி சொல்லும்பொழுது பொங்கிய ஒரு பயலையும் இப்பொழுது காணவில்லை

அவர் ஏதும் சொன்னால் அவர் மேல் கோர்ட் இருக்கும் இடமெல்லாம் வழக்காம், சர்ச்சையாம், வீட்டில் கல்லெறிவார்களாம்

ஆனால் மனுஷ் சொல்லிவிட்டால் மட்டும் கருத்து உரிமையாம், யாரும் பேச கூடாதாம், இது எழுத்தாளர் சமூகம்

அதையே திமுகவிலும் சிலது பாடுகின்றது

தலைவி குஷ்பு கூட திமுக அடுத்த தலைவர் பற்றித்தான் கருத்தை சொன்னார், அவரை ஏன் கல்லேறிந்து கட்சியினை விட்டு அனுப்பினார்கள்?

தலைவி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டு கருத்துரிமை பற்றி பேச வரட்டும் இந்த கிராதகர்கள்.

வாஜ்பாய் அணுகுண்டு ஏன் வெடிச்சாருண்ணு தெரியுமா?

Image may contain: 1 person, sitting and text“உங்களுக்கெல்லாம் வாஜ்பாய் அணுகுண்டு வெடிச்சது தெரியும்? ஏன் வெடிச்சாருண்ணு தெரியுமா?

சொல்றேன் கேளு, நல்லா கேட்டுக்க‌

1998ல அண்ணன் அடிச்சி நொறுக்குறாரு, யாழ்பாணம் பிடிச்சி அடுத்தால தமிழ்நாடு அப்படியே ஆந்திரா, மபி உபின்னு அடிச்சி பிடிச்சி புலிகொடி பறக்குற திட்டம் ரெடியா இருக்கு

எனக்கு உடனே தகவல் வந்துட்டு தம்பி ரெடியா இரு, பெரும் படையினை உன்னை நம்பி கொடுக்கின்றேன் எப்படியாவது டெல்லிய பிடிச்சிரு போதும்

நாமதான் பயிற்சி எல்லாம் எடுத்து ரெடியா இருக்கோமே, 25 மணிநேரமும் ரெடி ஹஹஹஹஹஹஹ‌

அப்போ வாஜ்பாய்க்கு சிங்களன் தகவல் சொல்லிட்டான், வாஜ்பாய் பயந்துட்டு இந்திய ராணுவத்துகிட்ட கேட்டாரு , பிரபாகரன் வருவானாமே என்ன செய்யலாம்?

ராணுவ தளபதி சொன்னான், அய்யா அவன் வீரத்தை ஈழத்துல பார்த்துட்டேன், அத கூட சமாளிக்கலாம் ஆனால் அவன் தம்பி சீமான எப்படி சமாளிக்க போறோம்னு தெரியல‌

உடனே வாஜ்பாய் சொன்னார், நம்மகிட்ட இருக்கிற அணுகுண்டை வெடிப்போம் புலி பயந்துருமுண்ணு

ஆனா நாமளா பயபப்டுவோம் ஹிஹிஹிஹிஹ்

உடனே இந்த கருணாநிதிக்கு வேர்த்துட்டு, அடேய் டெல்லி இனி பிடிக்கமாட்டானுக ஆனா சென்னைய பிடிச்சிருவானுகன்னு உடனே முரசொலி மாறன அமெரிக்காவுக்கு அனுப்பி கிளிண்டன்கிட்ட பேசசொல்லி அதற்கப்புறம் அவனுக ஆண்டன் பாலசிங்கத்துட்ட சொல்லி தமிழகத்து படை அனுப்புறத அண்ணன் நிறுத்திட்டாரு

அந்த படைமட்டும் வந்திருந்துண்ணு வச்சிக்க, அப்டி ஒரு அடி இப்டி ஒரு அடி, அப்பவே தமிழ்நாட்டுல புலிகொடி ஏற்றி பிரபாகரன் கோட்டைன்னு ஆக்க்கிருப்பேன்

இந்த கருணாநிதி அமெரிக்கா கூட சேர்ந்து கெடுத்துட்டாரு உறவே..”