அரபு நாட்டு அமீரகம் அளிக்கும் கேரள வெள்ள நிதி

அரபு நாடுகளான அமீரகம் அளிக்கும் நிதியினை இந்தியா ஏற்க தயங்குவது குறித்து ஏகபட்ட கருத்துக்கள்

பொதுவாக எந்த நாடும் யாருக்கும் சும்மா கொடுக்காது, ஒவ்வொரு அசைவிலும் தனக்கு ஏதும் ஆதாயம் உண்டா என தேடும் உலகிது

இதில் எந்த நாடும் விதிவிலக்கு அல்ல‌

உதவி என சொல்லிவிட்டு பின்னாளில் நம் கையினை கட்டிபோடும் தந்திரங்கள் நடைபெறலாம், பல விஷயங்களில் இந்திய நலன் பாதிக்கபடலாம்

இது பல நாடுகளில் நடந்திருக்கின்றது, நடந்துகொண்டிருக்கின்றது

மத்திய அரசு யோசிக்கின்றது என்றால் அதில் ஆயிரம் காரணங்கள் இருக்கும், திரைமறைவில் என்ன கோரிக்கையினை அரபிகள் வைக்கின்றார்கள் என்பது தெரியாது

அரேபிய தொடர்பில் இங்கு நடக்கும் தங்க வைர வியாபாரம் கொஞ்சமல்ல‌

கேரள வியாபாரிகளும், குஜராத் வியாபாரிகளும் அதில் கை ஓங்கி நிற்பதும் கவனிக்க வேண்டியவை

இவர்களின் தலமையகம் அரேபிய நாடுகள் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை

இதில் குஜராத் ஜூவல்லரி வியாபாரிகள் ஒவ்வொருவராக முறைகேடுகளில் சிக்கி ஓடிகொண்டிருக்கின்றார்கள்

அடுத்து மலையாளிகள் யாரும் சிக்குமுன் அரபு நாடுகள் ஒடிவந்து முன் நிற்கும் தந்திரமாக இருக்கலாம்

நாளையே ஒரு ஜூவல்லரி அதிபர் கம்பி நீட்டிவிட்டு அமீரகத்தில் செட்டில் ஆகிவிட்டால் அவனை தரமுடியாது என் பேரம் பேசும் நிகழ்வுகள் இருக்கலாம்

இதுபோக அரபு நாடுகள் தங்கள் எண்ணெய்க்கு இந்தியாவில் குடோன் அமைப்பது உண்டு, இப்படி கொடுத்துவிட்டு அதற்கு வாடகை கொடுக்கமாட்டொம் என அடம்பிடிக்கலாம்

ஏகபட்ட சாத்தியங்கள் உண்டு

மத்திய அரசு இந்நாட்டிற்கு எது நன்மையோ அதை நிச்சயம் செய்யும், அதில் சந்தேகமில்லை

பின்னூட்டமொன்றை இடுக