ஆரியபட்டரின் நாடு என்பதை நிரூபித்திருக்கின்றது இந்தியா

Image may contain: 3 people, text

நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்திருக்கின்றது நாசா

எப்படி என்றால், நிலவுக்கு சென்றதாக சொன்ன அவர்களோ இல்லை நிலவினை சுற்றி ஆய்வு செய்த செயற்கை கோள்களும் அல்ல

ரஷ்ய கோள்களும் அல்ல‌

இந்தியாவின் சந்திராயன் அனுப்பிய படங்களே அதை ஊர்ஜிதம் செய்திருக்கின்றது

விண்வெளி உலகம் இந்தியரையும் அவர்களின் துல்லியமான செயற்கை கோளையும் பாராட்டி கொண்டிருக்கின்றது

ஆரியபட்டரின் நாடு என்பதை நிரூபித்திருக்கின்றது இந்தியா

அந்த விஞ்ஞானிகளுக்கு தேசத்தின் வாழ்த்துக்கள்

இந்நாட்டில் இந்துக்களை விமர்சிக்கும் அளவு சமயசுதந்திரம் எந்த நாட்டிலும் இல்லை

இங்கு இந்துக்களை விமர்சனம் ஏகபட்ட திரைப்படம் வரலாம், கட்டுரைகள் வரலாம்,அதெல்லாம் ‍பகுத்தறிவு

ஆனால் சில விஷயங்களை சொல்லிவிட்டு கமலஹாசனும், மணிரத்னமும் பட்டபாடு கொஞ்சமல்ல‌

சகிப்புதன்மை என்பது எங்கே இருக்கின்றது??

Image may contain: 1 person, text

இந்நாட்டில் இந்துக்களை விமர்சிக்கும் அளவு சமயசுதந்திரம் எந்த நாட்டிலும் இல்லை என்பதில் கொஞ்சமும் மாற்று கருத்து இல்லை

இந்துக்கள் ஓரணியாக திரள முதலில் வித்திட்டவன் பிரிட்டிஷ்காரன் அவனே இந்து முஸ்லிம் கலவரங்களை ஏற்படுத்தினான், விளைவு நாடு உடைந்தது

அதன் பின் கலவரங்களும் காந்தி கொலையும் அதை மூடி வைத்திருந்தன‌

அதன் பின் இந்துக்களை சீண்டியது அல்லது அவர்களை ஒரு புள்ளியில் குவிக்கும் காரியங்களை பகுத்தறிவு வாதிகளும்,இந்து அல்லாத மற்ற சமயத்தாரும் கவனமாக செய்தனர்

இந்துக்களை அவர்கள் சீண்ட சீண்டவே அவர்கள் ஓரணியில் திரட்டபட்டனர்

இவ்வளவிற்கும் இந்நாட்டில் 80 இந்துக்கள், இது உண்மையில் இந்து பெரும்பான்மை நாடு

நேருவோ இல்லை அடுத்த பிரதமர்களோ இந்துக்களை சீண்டும் விதமாக பேசுவோரை சிறையில் அடைப்போம் என சட்டம் இயற்றி இருந்தால் இங்கு பாஜக வந்திருக்காது

கிறிஸ்தவ போதகர்களும், தமிழக பகுத்தறிவாளர்களும் இந்து மதத்தை விமர்சித்தது கொஞ்சமல்ல. இன்னும் மாற்றுமதத்தாரும் உண்டு

சுதந்திர இந்தியாவில் முளையிலே கிள்ளி இருக்கவேண்டிய பிரச்சினையினை அரசுகள் கண்டுகொள்ளவில்லை

பின் என்ன நடந்தது?

இங்கு ராமர் படத்தை செருப்பால் அடிக்கும் அளவு நிலமை சென்றது, இன்னும் என்னவெல்லாமோ செய்தார்கள்.

விமர்சனத்தையும் இன்னபிற விஷயங்களையும் தாங்கமுடியாத இந்துக்கள் ஓரணியில் திரண்டனர்

பாபர் மசூதியினை இடிப்பதை மத்திய அரசு தடுத்திருக்க முடியும், ராணுவத்தை அனுப்பி பாதுகாத்திருக்க முடியும் ஆனால் செய்யவில்லை

எதற்கோ எமர்ஜென்சியினை கொண்டு வந்தவர்கள் பாபர் மசூதியினை காக்கவும் கொண்டு வந்திருக்க முடியும், ஆனால் செய்யவில்லை

அது இடிபடட்டும் பாஜகவிற்கு அது கரும்புள்ளியாக அமையட்டும் என்ற அரசியலும் இருந்தது

ஆனால் அது எதிர்மறையாகி பாஜக பெரும் சக்தியாக உருப்பெற்றுவிடது

உண்மையில் பாபர் மசூதி இடிக்காமல் தடுக்க மறுத்தது காங்கிரஸ் கட்சி, மறுக்க முடியாது

குஜராத்தின் கலவரம் கோத்ரா ரயிலை எரித்ததை தொடர்ந்தே நடந்தது, குஜராத் கலவரம் என்பவர்கள் ரயில் எரிந்து செத்தவர்களை கணக்கில் எடுக்கமாட்டார்கள்

ஏன் என்றால் அப்படித்தான்

ஒரு விஷயத்தில் பாஜகநிலை பரிதாபமானது, மிருக பலத்தில் ஆட்சியில் இருக்கின்றார்கள், தேசத்தின் 60% மாநிலங்களை ஆளுகின்றார்கள்

ராமர் கோவிலை கட்டிவிடலாமா என்றால் நிச்சயம் அவர்களால் முடியும், ஆனால் கட்டவில்லை கட்டவும் மாட்டார்கள்

ஏன்? அவர்கள் அப்படித்தான். அது ஒரு மாதிரியான கட்சி

ஆனால் பாஜக எனும் கட்சி காங்கிரஸ் விட்ட தவறுகளினாலே உதித்து என்பதை மறுக்க முடியாது, அதைபற்றி எல்லாம் பேசமாட்டார்கள்

விஷயத்திற்கு வரலாம்

இங்கு இந்துமதம் விமர்சிக்கபட்ட அளவு இன்னொரு மதம் விமர்சிக்கபடவில்லை என்பது முக்கால உண்மை

இஸ்லாமையோ, கிறிஸ்துவத்தையோ யாரும் விமர்சிக்கட்டும் பார்க்கலாம்

சினிமாவில் கூட இந்து சம்பிரதாயம், இந்து கடவுள்களை சீண்டுவார்களே தவிர மறந்தும் கிறிஸ்தவ, இஸ்லாமிய பக்கம் செல்லமாட்டார்கள்

கொஞ்சம் துணிந்து சில காட்சிகளை வைத்ததற்கு மணிரத்னம் வீட்டில் குண்டே வெடித்தது

ஆனால் அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள், பூசாரியினை தாக்கினேன் என தொடங்கி, கமலஹாசன் முதல் இன்னபிற நடிகர்கள், நடிகைகள் எல்லாம்,இயக்குநர்கள் எல்லாம் இந்துமத்தத்தை கிழித்து தொங்கவிட்டபொழுது சத்தமே இல்லை

சத்யராஜ் , மணிவண்ணன் வரை அது தொடர்ந்தது

அப்படி பத்திரிகை, அரசியல், சினிமா என சகல பக்கமும் அடிவாங்கிய மதம் இன்னொன்று இல்லை

அந்த அளவு சேறு பூசுவார்கள், சாக்கடை எறிவார்கள் இன்னும் எவ்வளவு செய்யமுடியுமோ அவ்வளவு செய்வார்கள்

ஆனால் அதன் சிறப்பம்சம் எந்த மதத்திற்கும் வராது

புத்தமும் சமணமும் அதை ஒழித்தன, அது மீண்டது

பின்னாளில் ஆப்கானிய வம்சங்கள் அடக்கின, அது மீண்டது

வெள்ளையனும் மறைமுகமாக அடக்கி பார்த்தான் அது மீண்டது

தமிழக பகுத்தறிவுவாதிகள் தமிழ்மொழி இருப்பதே அம்மதத்தை ஒழிப்பதற்கு என கங்கணம் கட்டி இறங்கினர், அவர்கள் கொள்கை தோற்றதே தவிர இந்துமதம் அதன் போக்கில் இருந்தது.

நாத்திகம் எனும் மாயமான் இந்து எதிர்ப்பு எனும் கற்பனையில் வாழ்ந்தது, இப்பொழுது செத்துவிட்டது

எத்தனை இடர்பாடு வந்தாலும் செதுக்க செதுக்க மின்னும் வைரம்போல் இந்துமதம் மின்னிகொண்டே இருக்குமே தவிர அழியாது

இத்தனை எதிப்பு , அழிவுகளை தாண்டி வளர்ந்து இன்று இன்னமும் விமர்சனங்களை தாங்கி நிற்கும் இன்னொரு மதத்தை காட்டிவிட்டு இந்து பக்கம் வாருங்கள்

அரேபியாவின் பெரும்பான்மை மதம் இஸ்லாம், அங்கே இஸ்லாம் பற்றி பேசிவிட முடியும்?

புத்தமத தாய்பூமி திபெத், அங்கு புத்தனை விமர்சிக்க முடியும்?

பர்மாவிலும், இலங்கையிலும் புத்தனை நோக்கி கைநீட்ட முடியும்?

ஐரோப்பாவிலோ, வாடிகனிலோ இயேசுவினை விமர்சிக்க முடியும்?

டிரம்பின் அமெரிக்காவில் ஒருவன் பைபிளை விமர்சித்துவிடட்டும் பார்க்கலாம்?

ஜெருசலேமில் யூத மதத்தை ஒருவன் தொட்டுவிடட்டும் பார்க்கலாம்?

ஆக உலகெல்லாம் பெரும்பான்மை சமய மக்கள் அதிகமான நாடுகளில் அந்த சமயத்தினை விமர்சிக்க முடியாது, சில நேரம் அவர்களே பிரிந்து சண்டையிடுவார்களே தவிர இன்னொரு மதத்துகாரன் தங்களை விமர்சிக்க விடமாட்டார்கள்

இந்தியாவில் அது ஆச்சரியம்,பெரும்பான்மையான இந்து மதத்தை யாராலும் சீண்ட முடிகின்றது, விமர்சிக்க முடிகின்றது, கல்லெறிய முடிகின்றது

மற்ற மதங்களை போல வாரத்தின் சில நாட்களை பயமுறுத்தி வாங்கும் மதமல்ல அது, இந்து மதம் கடல் போல் பெரிய மனம் கொண்டது

அதனால் இந்த இம்சைகளை எல்லாம் கண்டு காணாமல் சென்றது, இவர்களோ அக்கடலை வற்றசெய்வேன் என அடக்க முயற்சிக்க அது சில இடங்களில் இப்பொழுது சுனாமியாய் சீறுகின்றது

உறுதியாக சொல்லலாம், உலகிலே மத சுதந்திரம் அதிகமாக உள்ள நாடு இந்தியா, இங்கு இந்துமதத்தை சீண்ட மிக அதிகபடியான சுதந்திரமே கொடுக்கபட்டுள்ளது என்பது உண்மை

இதனை Kavignar Thamarai சொல்லி இருக்கலாம், இதில் உண்மையினை தவிர ஏதுமில்லை

இவ்வளவிற்கும் அவர் இந்துமதத்தவரே அல்ல, கடவுள் நம்பிக்கை அற்றவர், அவரே சொல்கின்றார் என்றால் அர்த்தமென்ன?

100% உண்மையான வரிகள் அவை.

(தாமரை கிறிஸ்தவர்களையும் , தமிழக பகுத்தறிவு இம்சைகளையும் சேர்த்திருக்கலாம்)

அண்ணே.. கேரள வெள்ள நிவாரணம் மத்திய அரசு வெறும் 500கோடி கொடுத்திருக்கு

Image may contain: 1 person, outdoor

அண்ணே நீங்க சங்கி ஆயிட்டீங்க, கேரள வெள்ளத்துல மத்திய அரசு வெறும் 500கோடி கொடுத்திருக்கு, அதெல்லாம் அவங்க புட்டு சாப்பிட கூட காணாதுண்ணே

அப்படியா

ஆமாண்ணே வெறும் 500 கோடி கொடுத்துட்டு ஓடிபோறது திராவிட விரோதம், தென்மாநில வெறுப்பு, வடக்கு வளர தெற்கு தேய செய்யும் இந்துத்வா வெறி

ஏன் அப்படி

இங்க பாஜக இல்லங்கிறதுக்காக மோடி அரசு திட்டமிட்டு பழிவாங்குது

சரி வெள்ளத்துல கேரளாவுல எதெல்லாம் அழிஞ்சிருக்கு

நிறையாண்ணே, ஏகபட்டது

விமான நிலையம்?

அது மூழ்கிருச்சின்னே, இன்னும் நிறைய செலவு இருக்கு

இந்த தேசிய நெடுஞ்சாலை

ஆமாண்ணே எல்லாம் அரிச்சிட்டு போயாச்சி

இந்த ரயில்வே தண்டவாளம் இன்னபிற‌

அட ஆமாண்ணே எல்லாம் போயிட்டு

இதெல்லாம் யார் செலவு பண்ணுவா?

சென்ட்ரல் கவர்மென்டுண்ணே அவங்கதான் செய்யணும்

எவ்வளவு கோடி ஆகும்?

அது ஆகும்ணே பல நூறு கோடி

பின்ன ஏண்டா வெறும் 500 கோடின்னு கத்துறீங்க? அதையும் சேர்த்து சொல்லுங்கடா

அண்ணே அது எவ்வளவுண்ணு தெரியலண்ணே

அடேய் கேரளாவில துறைமுகம், விமான நிலையம், சாலை இன்னும் ஏகபட்ட விஷயம் மத்திய அரசு கையிலதான் இருக்கு, அவங்க கோடிகணக்குல செலவழிச்சாதான் இனி கேரளா இயங்கவே முடியும்

அப்படியாண்ணே

சும்மா 500 கோடி கொடுத்துட்டு ஓடிட்டாங்கண்ணு சொல்லாத, அவங்களுக்கும் அங்க ஏகபட்ட செலவு இருக்குண்ணு சொல்லு

அதெல்லாம் மாட்டோம்னே

ஏன்?

இங்க மத்திய அரசு எதை எல்லாம் செய்யும்ணு எங்களுக்கு சொல்லவே மாட்டாங்க, பூரா மாநில அரசு சாதனைன்னு போஸ்டர் ஓட்டுவாங்க‌

போடா போ, முதல்ல மத்திய அரசு எதை எல்லாம் நிர்வகிக்கும்ணு பாரு அப்போதெரியும் எத்தனை ஆயிரம் கோடி கேரளாவில் அவங்களுக்கு செலவுண்ணு

இருங்கண்ணே படிச்சிட்டு வாரேன்

வராத, அப்படியே ஓடு”

விசுவாசம் என்றொரு அஜித் படம்

Image may contain: 2 people, including Siva Prince, people smiling, sunglasses, beard and text

விசுவாசம் என்றொரு அஜித் படம் வரபோகின்றதாம்

ஆளும் தாடியும் பார்க்கும்பொழுது முடி சாய விளம்பரத்திற்கு வந்திருப்பது போலவே இருகின்றது

இது தாடிபடங்கள் எல்லாம் தோற்கும் காலம், ரஜினிக்கு 2 படங்கள் அப்படித்தான் ஆனது. அஜித் என்பவருக்கு அது வாய்க்காமல் இருந்தால் நல்லது

பொதுவாக தமிழ்பெயர் இல்லா படங்களுக்கு வரிவிலக்கு கிடையாது

இவர்களோ விஸ்வாசம் என வடமொழி பெயரை அப்படியே வைத்திருக்கின்றார்கள், அது தமிழ்பெயர் அல்ல‌

இதற்கு வரிவிலக்கு கொடுக்கபட்டால் அபத்தமான விதிமீறல் என அரசுக்கு சொல்லிகொள்கின்றோம்

மற்றபடி ஒரு அஜித்குமார் நடிப்பினையே பார்க்க முடியாது, இதில் இரண்டுபேர் என்றால் சகிப்பது மிக மிக கடினம்

அதற்கு பதில் மனுஷ் என்பவரை கவிதைபாட சொல்லி சுவரில் முட்டி கொள்வது உத்தமம்

ஏக்நாத் ராமகிருஷ்ன ராணடே

Image may contain: 1 person, glasses and text

மத சர்ச்சைகள், கலவர சூழல் தமிழகத்தில் எழும்பொழுதெல்லாம் அக்கால காட்சிகள் சில கண்ணுக்குள் வந்து போகும்

அப்படியாக பெரியார் சிலைகள் சர்ச்சையில் விவேகானந்தர் மண்டப நினைவும் வந்து போகின்றது

அது 1963ம் ஆண்டு நேரு பிரதமராக இருந்த காலம், சீனப்போரில் ஆர்.எஸ்.எஸ் உருப்படியாக பணியாற்ற நேருவுக்கும் அவர்களுக்கும் ஒரு புரிந்துணர்வு வந்த நேரம்

விவேகானந்தரின் நூற்றாண்டுவிழா அப்பொழுது தொடங்குகின்றது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை கொண்டாட தொடங்கினார்கள். அப்பொழுது அவர்கள் மனதில் உதித்த திட்டம்தான் கன்னியாகுமரி பாறையில் விவேகானந்தர் தவம் செய்த இடத்தில் மண்டபம் கட்டுவது

உண்மையில் சிகோகோ சொற்பொழிவுக்கு பின் கொழும்பு வழியாக அவர் வந்து இறங்கிய மண்டபம் கடற்கரையில்தான் கட்டியிருக்க வேண்டும், ஆனால் கன்னியாகுமரி இந்திய எல்லை என்பதால் அந்த பாறை தேர்வானது

அது அதுவரை ஸ்ரீபாத மலை. அதாவது உமாதேவியின் பாதம் பதிந்த பாறை என்றுதான் அழைக்கபட்டது

எல்லாம் நன்றாக தொடங்கியபொழுது சிக்கல் குமரி கிறிஸ்தவர் வடிவில் வந்தது. திடீரென சிலுவை நட்டு இது பிரான்சிஸ் சேவியர் பாறை என்றார்கள். பிரான்ஸிஸ் சேவியர் மணப்பாட்டில் வாழ்ந்தவர், கோட்டாரில் போதித்தவர்

இந்த பாறைக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை

ஆனால் கிறிஸ்தவர் கொடிபிடித்தனர், ஆச்சரியமாக அவர்களை விரட்டிவிட்ட கேரளத்தவரும் கொடிபிடித்தனர் பெரும் கலவர சூழல் ஆயிற்று

முதல்வர் பக்தவச்சலம் விவேகானந்தர் மண்டபமும் வேண்டாம், சேவியர் சிலுவையும் வேண்டாம் அமைதி முக்கியம் என அறிவித்துவிட்டார்.

இந்து கிறிஸ்தவ மோதலை தடுக்க அவருக்கும் வேறுவழி தெரியவில்லை

ஆர்.எஸ்.எஸ் மராட்டியத்திலிருந்து ஏக்நாத் ரானடே என்பவரை அனுப்பியது, அவர் கடப்பாரையோடு வந்து சேவியர் பாறையில் நிற்கவில்லை, கரசேவை எல்லாம் செய்யவில்லை

நிலமையினை புரிந்து கொண்டு பக்தவத்சலத்தை சந்தித்தார், முதலில் கடுமையாக இருந்த பக்தவத்சலத்தை நேருவினை சந்தித்து பேசசெய்தார், எல்லா மக்களும் ஒத்துழைத்து அமைதியாக ஒப்புகொண்டால் தமிழக அரசுக்கு சிக்கல் இல்லை என்றால் பக்தவச்சலம்

அடுத்த சிக்கல் மத்திய அமைச்சர் ஹிமாயுன் உருவில் வந்தது, சுற்றுசூழல் கெடும் விவேகானந்தர் மண்டபத்தை அனுமதிக்கமுடியாது என்றார்.

அந்த அமைச்சரின் சொந்த தொகுதி வங்காளம்

ராணடே அங்கு சென்றார், வங்கத்தின் தங்கமகனுக்கு குமரியில் சிலைவைக்க ஹிமாயுன் மறுக்கின்றார் இது நியாயமா? என கேட்டார், வங்கம் பொங்க பல்டிஅடித்து எனக்கு பிரச்சினையே இல்லை என்றார் அமைச்சர்

ராண்டே அதன்பின்னும் சாதுர்யம் செய்தார், விவேகானந்தர் இல்லம் அமைக்கும் குழுவில் இந்துக்கள், ஆர்.எஸ்.எஸ் தவிர எல்லா மத மக்களையும் சேர்த்தார். குறிப்பாக திமுகவின் அண்ணாதுரையினை அவர் சேர்த்தது மாபெரும் சாதனை

திமுக எப்பொழுதும் இந்துக்களின் மூடபழக்கத்தை, சாதியினை சாடும். விவேகானந்தர் போன்ற துறவிகளை அது மறுக்காது, நல்ல இந்து விவேகானந்தர் போன்று இருக்கவேண்டும் என்பது கலைஞரே சொன்னது

அப்படி எல்லா தரப்பும் விவேகானந்தர் இல்லகுழுவில் வந்தபின், நாடு முழுக்க கையெழுத்து திரட்டினார். பல கோடிபேர் கையெழுத்திட்டனர். நாட்டு அம்மக்களின் அபிமானம் இது என அவர் அரசிடம் சொன்னபின் அரசுகளுக்கு தயக்கமில்லை

அதன் பின் மகா அட்டகாசமான திட்டத்தை செயல்படுத்தினா ராண்டே, ஆம் இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர் என எல்லோரிடமும் நிதி திரட்டினார். “பணம் சிக்கல் இல்லை, 50 பைசா கொடுத்தாலும் அவர்கள் பங்களிப்பு உண்டல்லவா? அதுதான் நமக்கு வேண்டும்” என்றார்

உண்மையில் கிறிஸ்தவர்களும் அள்ளி கொடுத்தனர், விவேகானந்தரை தேசிய அடையாளமாக கருதினர். கிறிஸ்தவர்கள் நன்கொடையினை பல இடங்களில் ராணடே பெற்றபின் குமரிமாவட்ட கிறிஸ்தவ கொந்தளிப்பு அடங்க தொடங்கியது

எல்லா மதத்தாரும், இந்தியாவின் எல்லா மாநிலத்தாரும் இணைந்து அல்லது ராணடேவால் ஒற்றுமையாக கொண்டுவரபட்டபின்பே குமரியில் அம்மண்டபம் எழுந்தது

அம்மண்டபத்தை பார்க்கும்பொழுதெல்லாம் அந்த ராணடே எனும் மாமனிதன் நினைவுக்கு வருவார். இந்து விவேகானந்தர் எனும் அடையாளத்தை இந்த பாரதத்தின் பெருமகன் என்ற அடையாளமாய் மாற்றி அச்சாதனையினை செய்தார் ராணடே

பெரும் கலவர சூழலை தடுத்து, ஒரு துளி ரத்தமின்றி, வன்முறையின்றி மிக சாதுர்யமாக எல்லா மக்களையும் அணைத்து சென்று அந்த மண்டபத்தை அமைத்த அந்த ராணடே நிச்சயம் வரலாற்றில் நிற்கின்றார், மண்டபம் இருக்கும் அளவும் அவர் பெயரும் இருக்கும்.

அவர் மட்டும் கொஞ்சம் சறுக்கி இருந்தால் குமரி, கேரளம், மிசோரம், நாகலாந்து என கிறிஸ்தவர் வாழும் பகுதி எல்லாம் ரணகளம் ஆகியிருக்கும், மாபெரும் ரத்த ஆறு மதத்தின் பெயரால் ஓடியிருக்கும்

அதனை காத்து, அப்பாறை ஸ்ரீபாத பாறையே அதில் கிறிஸ்தவருக்கு உரிமை இல்லை என்பதை நிறுவி, அதிலும் மொத்த இந்திய மக்களின் அபிமானத்தோடும், அவர்களின் நன்கொடையோடும் அம்மண்டபத்தை அமைதியாக கட்டி காரணமான அந்த ராணடே போன்ற நல்ல மனிதர்கள் அன்று இருந்திருக்கின்றார்கள்

ஒருவேளை கிறிஸ்தவர்களுக்கு உரிமை இருந்து அதில் ஆலயம் இருந்தால் சிக்கலே வந்திருக்காது, சிக்கல் விவேகானந்தர் மண்டபம் அமையும் பொழுது கிறிஸ்தவர் சர்ச்சை செய்ததால் வந்தது

ராணடே மிக திறமையாக அதை சமாளித்தார்

இந்து அமைப்புகளில் அப்படிபட்ட மாமணிகளும் இருந்திருக்கின்றன‌

இன்றுள்ள எச்.ராசா போன்றவர்களை நினைத்தால் நமக்கல்ல, அவர்களுக்கே வெறுப்பு வந்தாயிற்று

இந்து அமைப்புகள் இதனை எல்லாம் மனதில் கொண்டால் நல்லது

ராணடே போன்றவர்களை உருவாக்குங்கள், எச்.ராசா, தமிழிசை இன்னபிற சர்ச்சைகள் போன்றவர்களை அனுமதித்து பெரும் கலவரத்தினை உருவாக்கிவிடாதீர்கள்

நல்ல வேளையாக 1963ல் இந்த கோஷ்டிகள் இல்லை, இருந்திருந்தால் இந்திய பெருங்கடல் சிகப்பு நிறமாக மாறியிருக்கும்

இன்று அந்த மாமனிதர் நினைவுநாள், இந்தியாவில் சர்ச்சைகளின்றி கலவரமின்றி சில அடையாளங்களை காக்க முடியும் என செய்து காட்டியவர்

அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

என்னை கட்சியில் சேர்த்துகொள்வது போல் தெரியவில்லை : அழகிரி வேதனை

என்னை கட்சியில் சேர்த்துகொள்வது போல் தெரியவில்லை அழகிரி வேதனை

அது இப்பொழுதுதான் தெரிந்ததா?

கலைஞருக்கு ஏதும் அழகிரி செய்வதாக இருந்தால் கட்சி பக்கம் வராமல் இருந்தால் போதும்

கலைஞர் பாணியில் சொல்வதாக இருந்தால் “பழம் கிடைக்கட்டும் சுளைகளை பின்னர் பார்த்துகொள்ளலாம்”


Kavignar Thamarai அவர்களை குறித்து துபாய் பாலா கடும் அவதூறுகளை பரப்பிகொண்டிருக்கின்றான்

கவிஞர் பெண்மனி அவனை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி , வைக்க வேண்டிய இடத்தில் வைப்பது நல்லது

நாய் வாலை நிமிர்த்த முடியாது, ஆனால் நாயினை அடித்து துரத்தலாம்


காவேரி பாலங்கள் உடைகின்றன, மதகுகள் தெரிக்கின்றன‌

செல்லூர் ராஜூ 4 மூங்கில் கம்புகளுடனும் சில தெமாக்கோல் அட்டைகளுடனும் , கொஞ்சம் மணலுடனும், சுண்ணாம்புடனும் அணைகட்ட வந்துகொண்டிருப்பார் என்பதால் இனி காமெடிக்கு பஞ்சம் இருக்காது


தீரா சோகத்துடன் கல்லறையில் இருந்து : அண்ணா

Image may contain: 1 person, beard

தம்பிக்கு,

என்னை நீங்கள் எல்லாம் மறந்திருக்கலாம், நான் உங்களையோ அருமை திராவிடத்தையோ மறப்பவன் அல்ல, சொர்க்கத்தில் இருந்தும் உங்களையே நினைப்பவன்

நான் தான் அண்ணா, திராவிடத்தின் அணைகட்டி உங்களை வாழ வைத்தவன், படிக்கட்டாய் உங்களை உயர்த்திவிட்டவன்

பெரியாரை விட்டு பிரியும்பொழுது எப்படி அழுதேனோ அப்படியே இப்பொழுது என் கல்லறை முன்னின்று அழுது கொண்டிருக்கின்றேன், துடித்து கொண்டிருக்கின்றேன்

தம்பி, இந்த திமுக எனும் மாபெரும் இயக்கம் எப்படி உருவாயிற்று? இதில் உடல் பொருள் ஆவி என சகலமும் கொடுத்த கோடான கோடி தம்பிமார்கள் எத்தனை பேர்?

மணியம்மையினை பெரியார் திருமணம் செய்தார் என்றவுடனும், திராவிட கொள்கைகளை அவர் அரசியலாக்க மறுத்தார் என்றவுடனும் கிளம்பியவர்கள் நாம்

எத்தனை பேர் கிளம்பினோம்? 5 விரல்களை வழக்கமாக விரிப்போம் அல்லவா? அத்தனை பேர் கூட இருந்திருக்கமாட்டோம்

கல்லடி பட்டோம், சொல்லடி சுமந்தோம், ஏன் குருதி கூட கொட்டி இயக்கம் வளர்த்தோம். தமிழன்னையினை காக்க தமிழ்மொழி காக்க செத்தவர் மட்டு 100 பேர், வாழ்வினை தொலைத்தவர் சில ஆயிரம் பேர்

அவர்களின் ரத்தத்தில் ஆட்சிக்கு வந்தோம், மாபெரும் இயக்கம் அப்படித்தான் சாதித்தது, சரித்திரமானது

ஆனால் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தம்பி கருணாநிதி தன்னை முன்னிலைபடுத்தினான்

ஆண்டதோ நான், ஆனால் உத்தரவிட்டதெல்லாம் அவன்

இனி என்னாகுமோ என நான் பரிதவித்த காலங்களில் என் காலமும் முடிந்தது, நான் வரலாறும் ஆகிவிட்டேன்

அதன் பின் இங்கிருந்து கவனித்துகொண்டிருக்கின்றேன், என் அன்புதம்பிகள் எல்லாம் விரட்டபட்டார்கள், கருணாநி மட்டும் நிலைத்து கொண்டான்

இதயகனியினை வண்டு துளைத்து அது வெளியேறியது தனி கதை என்றாலும், என் இதயத்தை இரவல் வாங்கியவனை என் அருகே இப்பொழுது படுத்திருப்பவனை பார்த்து கொண்டே பழம் நினைவுகளுக்கு செல்கின்றேன்

இந்த இயக்கத்திற்கு கருணாநிதி உழைத்தது போலவே நெடுஞ்செழியன் உழைத்தார், மதியழகன் உழைத்தார், நடராசன் உழைத்தார். இன்னும் களத்தில் நின்றவர் ஏராளம், போராடிய தம்பியர் ஏராளம்

ஆனால் அவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள்?

மதியழகனும், நெடுஞ்செழியனும் இன்னும் பலரும் என்னை நினைத்து அழும் குரலை எல்லாம் கேட்டவன் நான், கேட்டு என்ன செய்யமுடியும் அழத்தான் முடியும்

சரி அவர்கள்தான் இல்லை, அவர்கள் குடும்பத்தாரையாவது எங்காவது நீ கண்டாயா?

அன்பழகனை கண்டால் ஏதோ கந்துவட்டிக்கு கடன் வாங்கிவன் போல் பரிதாபமாய் தெரிகின்றது

நானும் 4 பிள்ளைகளை வளர்த்தேன், யாரையாவது தளபதி, சிப்பாய், ஆயுத காவலன் என அருகில் வைத்திருந்தேனா? வைத்தால் கட்சி நிலைத்திருக்குமா?

நான் கட்சி தொடங்கிய பாவத்திற்கு என் குடும்பம் விரட்டபட்டிருக்கலாம், ஆனால் மதியழகன், நெடுஞ்செழியன் நடராசன் குடும்பங்கள் எல்லாம் என்ன ஆனது?

குடும்பத்தை விடு தம்பி, அப்படி சிலர் இருந்ததாவது யாருக்காவது தெரியுமா?

நானே என் பிறந்த நாள் அன்றுதான் அவர்கள் நினைவுக்கு வந்தேன் என்றால் அவர்கள் நிலை என்ன? மற்ற தம்பிகள் நிலை என்ன?

ஊரெல்லா அண்ணா சாலை கண்டார்கள், ஆனால் என் கட்சியில் என்பாதை இல்லை

தமிழகமெங்கும் அண்ணா நகர் எழுப்பினார்கள், ஆனால் என் கோவிலான கட்சியில் என் கொள்கை இல்லை

என் பெயரில் பல்கலைகழகம் எல்லாம் வைத்தார்கள் ஆனால் நான் சொல்லிகொடுத்த கல்வியினை காற்றிவிட்டார்கள்

எவ்வளவு பெரும் துரதிருஷ்டசாலி நான், என்னை நம்பிய தமிழகத்திற்கு எவ்வளவு பெரும் துரோகம் இளைத்துவிட்டேன்

இதை எல்லாம் எண்ணி, அழுது நொந்து ஒரு கட்டத்தில் எல்லாம் மறந்து துயில் கொண்டிருந்தேன்

திடீரென தம்பி ராமசந்திரனை கொண்டுவந்து வைத்து என் தூக்கத்தை கெடுத்தார்கள், ஒரே சத்தம் அழுகை, ஒப்பாரி

அப்பொழுதும் என்னை ஏறெடுத்து பார்த்தவரில்லை, இவ்வளவிற்கும் கூத்தாடி என ஒதுக்கபட்ட நடிகர்களை கட்சியில் சேர்த்து பெரும் பிம்பம் கொடுத்தவன் நான்

என் இதயகனி என்றவனே இதயத்தை பிளந்தான் எனும் சோகத்தையும் புதைத்து “மறப்போம் மன்னிப்போம்” என சொல்லிவிட்டு தூங்கிவிட்டேன்

ராமசந்திரனோ அழுதுகொண்டே இருந்தான், ஏன் என கேட்டேன் என் கட்சிக்கு பெரும் அழிவினை கொடுத்துவிட்டேன் என்றான்,

நானும் அதே சோகத்தில் இருந்ததை சொன்னேன், ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிவிட்டு தூங்கிவிட்டோம்

இருவருடங்களுக்கு முன் நான் கட்சியிலே கண்டிராத , ஏன் கனவிலும் நினைத்திராத, ஒரு திராவிட கட்சிக்கு பார்பானிய பெண் தலைவான அதிர்ச்சியும் கொடுத்த அந்த ஜெயலலிதா என்பவரை கொண்டு வந்தார்கள்

அவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு? நாங்கள் தமிழ்நாட்டில் உயிரை கொடுத்து போராடும் பொழுது ராமசந்திரன் கோவாவில் சந்தியா மகளோடு சூட்டிங்கில் இருப்பதாக சொன்னார்கள்

இங்கோ போலிஸ் சூட்டிங்கில் பலர் செத்துகொண்டிருந்தோம், அதன் பின் வந்து என்னிடம் ஆசி வாங்கினாள் அந்த பெண்

அவள் என் கட்சிக்கு வாரிசாக வந்து ஆளுவாள் என யார் நம்பினார்கள், மணியம்மை ஆவி பழிவாங்கியது போல் இருந்தது

அவள் கட்சிக்கும் என் பெயராம்

அவள் வந்ததும் வந்தாள், ராமசந்திரனுக்கும் அவளுக்கும் ஒரே சண்டை அதிலும் என் தூக்கம் கெட்டது, போதா குறைக்கு சசிகலா என்றொருவர் அங்கு 3 முறை அடித்தபொழுது என் கன்னத்தில் யாரோ அடித்தது போலவே இருந்தது

அதன் பின் விழித்து கல்லறை மேலே அமர்ந்திருந்தேன், ஆளாளுக்கு வந்தார்கள். பன்னீர் செல்வம் என்பவர் தர்மயுத்த மவுனவிரதம் எல்லாம் இருந்தார்

அடடே இவர் நீதிகட்சி பன்னீர்செல்வமா? இங்கு ஏன் வந்தார் என காண சென்றால் இவர் நீதியில்லா பன்னீர் செல்வம்

அதன் பின் ஏக சண்டைகள் , கூத்துக்கள் இன்னபிற கொடுமைகள்.

இதற்கெல்லாம் காரணம் நான் என நொந்து கொண்டேன், ராமசந்திரனை கட்சிக்குள் கொண்டுவந்தது எவ்வளவு பெரும் தவறு என அப்பொழுது புரிந்தது, முறைத்தேன்

அவனோ வானத்தை நோக்கி சிரித்தான் அங்கே நேருவின் மகள் இருந்தாள்

என்னை வெல்லமுடியாத நேரு குடும்பம், நான் இல்லா காலத்தில் எப்படி அடித்திருக்கின்றது என்பது புரிந்தது

இப்பொழுது கொஞ்ச நாட்களாக அமைதி, அந்த ஜெயா பக்கம் யாரும் வருவதில்லை. அந்த சமாதிக்கு வருபவர்களுக்கு நிம்மதி போய்விடும் என்பது ஐதீகமாம்

என் நிம்மதியான தூக்கத்தை கெடுத்தபின் இப்படித்தான் நடக்கும் என்பதால் நிம்மதியானேன்

இப்பொழுது தம்பி கருணாநிதி இரவல் வாங்கிய இதயத்தை கொடுப்பதாக வந்து அவனும் தூங்க ஆரம்பித்தான்

அத்தோடு என் தூக்கம் சுத்தமாக கெட்டது

திராவிட கொள்கையாளன் யாரெல்லாமோ வருகின்றார்கள், வந்து பூஜிக்கின்றார்கள், பாலூற்றுகின்றர்கள், பழ அலங்காரம், பூ அலங்காரம் செய்கின்றார்கள்

இப்பொழுது பஜனையும் ஆரம்பித்துவிட்டார்கள், அவனை எழுப்பி இதெல்லாம் என்ன என கேட்டேன்?

“அண்ணா உம் இதயம் உம்மிடம் தந்தாயிற்று, இது என் இதயம் எனக்காக கல்லறைக்கு வெளியே துடிக்கும் இதயங்கள், நான் என்ன செய்ய முடியும்?” என்றான்

உன் இதயம் இப்படியா மூட நம்பிக்கையில் துடித்தது என்றேன்,

“அண்ணா, பாசம் மீறும்பொழுது பகுத்தறிவு விடைபெறும், பகுத்தறிவு மிஞ்சும்பொழுது பாசம் குறையும். பாசமோ பகுத்தறிவோ அன்பே முக்கியம்” என வழக்கம் போல குழப்பி சென்றுவிட்டான்

திடீரென அழகிரி வந்திருக்கின்றார் என்றார்கள், பட்டுகோட்டை அழகிரியா என ஓடி சென்று பார்த்தால் மதுரை அழகிரி, இவர் திராவிட போராட்டம் எதை செய்தார் என கேட்டேன், ஒருவருக்கும் புரியவில்லை

இன்னும் யார் யாரோ வருகின்றார்கள், உரண்டு புரளுகின்றார்கள், கதறுகின்றார்கள்

இந்த கருணாநிதியினை உருவாக்கிய என்னை யாரும் கண்டுகொள்ளவுமில்லை, அப்படி ஒருவன் இங்கு இருப்பதாக நினைக்கவுமில்லை

என்னால் என் காலடியில் நடக்கும் இம்சைகளையும், சத்தங்கங்களையும் அழிச்சாட்டியங்களையும் பார்க்க முடியாமல் கடற்கரை கட்டுமரத்தில் என் பாணியில் அமர்ந்து கொண்டேன்

எவ்வளவு பெரும் தவறை என் வாழ்வில் செய்திருக்கின்றேன் நான், பெரியாரிடம் மன்னிப்பு கேட்பதை தவிர வழியில்லை

பெரியார் திடலுக்கு சென்றால் வழக்கமான “அயோக்கிய பயலுகளா” என்ற வசனத்துடன் வரவேற்றார்

நான் என் அழுகையினை சொல்லி அழுமுன்பு
அவரோ வீரமணியின் அட்டகாசங்களை சொல்லி அழுதார்

“அண்ணாதொர காலணாவினையும் செலவழிக்காமல் திராவிட கொள்கை வளக்க பாடுபட்டவன் நான், உனக்கு கூட சரியா சம்பளம் தரல, ஆனா இப்போ அவ்வளவு சொத்தையும் வச்சிட்ட்டு இந்த வீரமணி ஆட்டம் போட்டுட்டு இருக்கான்”

எனக்கு ஓ என அழவேண்டும் என தோன்றிற்று

உன்னை நான் விட்டிருக்க கூடாது என அவர் அழ, அவரை நான் பிரிந்து தமிழகத்திற்கு இப்பாவத்தை செய்திருக்க கூடாது என நான் அழ இருவரும் அழுதுகொண்டே இருக்கின்றோம்

நான் கட்சியினை தொடங்கி இருக்க கூடாது, தொடங்கி இருந்தாலும் என் குடும்பத்தை உள்ளே இழுக்காமல் இருந்திருக்க கூடாது

அதனால்தான் என்னமோ என்னை பார்க்க குடும்பத்தார் கூட வரவில்லை, என்னை போல பாடுபட்ட எந்த தம்பிக்கும் எந்த அடையாளமுமில்லை

திமுக என்பது திருகுவளை முத்துவேலர் கருணாநிதி என்றே அடையாள படுத்திகொண்டிருக்கின்றனர்

எனக்கு தெரியாத அரசியல் வாரிசு அரசியல். அதை எனக்கே கற்று தந்திருக்கின்றான் கருணாநிதி

எங்கும் இரண்டாம் கலைஞர், மூன்றாம் கலைஞர் என ஏக சத்தம்

இரண்டாம் எம்ஜிஆர், கருப்பு எம்ஜிஆர், சிகப்பு, பச்சை எம்ஜிஆர் என சிலர்

அவ்வளவு ஏன் இரண்டாம் ஜெயலலிதா என ஒருவர் வந்து சென்றார்

ஆனால் ஒரு இடத்திலாவது இரண்டாம் அண்ணா, மூன்றாம் அண்ணா என ஒரு சத்தத்தையும் காணோம்

இரண்டாம் பெரியார் என்றும் யாரையும் காணோம்

நானும், பெரியாரும் அவ்வளவு மோசமானவர்களா, எங்களை போல் யாரும் வரகூடாதா? ஏன் அப்படி எங்களை சுத்தமாக மறந்துவிட்டனர் இக்கட்சியினர்?

அங்கே வாழ்க தளபதி என்ற குரல் கேட்கின்றது 70 வருடங்களுக்கு முன்னால் எனக்காக எழுந்த குரல், எனக்கு கிடைத்த அதே பட்டம், எனக்கு கொடுத்த பட்டத்தையா இவருக்கு கொடுத்தார்கள், அன்றே கொடுத்திருந்தால் புற்றுநோய் இல்லாமலே செத்திருப்பேனே

திருக்குவளையிலிருந்து வந்த கருணாநிதி குடும்பமும் மாறன் குடும்பம் மட்டும் ஆளவா இம்மாபெரும் போராட்டத்தை போராடினோம், இயக்கம் வளர்த்தோம்

இதற்காகவா இவ்வளவு கஷ்டபட்டு கால்வயிறு கஞ்சி குடித்து கால் தேய தேய நடந்தோம்

பெரும் வரலாற்று தவறு செய்துவிட்ட உணர்வு வாட்டியது

நாங்கள் தமிழருக்காக எழுப்பிய மாளிகையினை யாரோ கைபற்றி கொண்டார்கள், தமிழருக்காக எழுப்பிய சாம்ராஜ்யத்தில் யாரோ வந்து இருந்து சண்டை போட்டு கொண்டிருகின்றார்கள்

நான் ஆசையாக பெயர் வைத்த தமிழ்நாடு நாசமாயிற்று

இந்த மாளிகைக்கு அடிக்கல் நாட்டியவன் என்ற முறையிலும், வெற்றிகளை குவித்து முதன் முதலில் அரியணை ஏறியவன் என்ற முறையிலும் நானே எல்லாவற்றிற்கும் பொறுப்பு

பெரியாரிடம் வாய்விட்டு மன்னிப்பு கேட்டேன், “நாம் வெளிச்சத்திற்காக பற்ற வைத்த தீப‌ம் நெருப்பாய் தமிழகத்தை எரிகின்றது” என்ற பதிலை தவிர ஒன்றும் அவர் சொல்லவில்லை

ஆம், இருட்டில் இருந்த தமிழகத்திற்கு வெளிச்சம் கொடுக்க தீபம் ஏற்றினேன் என இருமாந்திருந்தேன், ஆனால் அந்த தீபம் நெருப்பாய் பிடித்து என்னையே சுடுகின்றது, என் நெஞ்சை எரிக்கின்றது

அந்த தீ தமிழகத்தையே எரிக்கின்றது என்பதை நான் எப்படி எதிர்கொள்ள முடியும்? காமராஜர் சிரிக்கமாட்டாரா? நான் எதிர்த்து நின்ற காங்கிரசாரெல்லாம் கைகொட்டி சிரிக்கமாட்டார்களா?

அன்று நான் பெற்ற வெற்றி, இன்று தமிழகத்தின் பெரும் தோல்விக்கே வழிசெய்திருக்கின்றது என்பதை எண்ணி அழுகின்றேன்

இனி வாழாது திராவிடம், வளராது திராவிடம்

என்னை புதைத்து, என் கொள்கைகளையும் புதைத்து அருகே இவர்களும் வந்து புதைந்து இங்கு நான் படும்பாடு கொஞ்சமல்ல‌

ஒரே ஒரு உண்மை தொண்டன் எனக்காக இருந்தாலும், தயவு செய்து என் கல்லறையினை காஞ்சிபுரத்திற்கு மாற்றிவிட தம்பி உன்னை கெஞ்சுகின்றேன்

தீரா சோகத்துடன்
கல்லறையில் இருந்து அண்ணா.”