கில்லாடி கிளைவ் : 06

கில்லாடி கிளைவ் : 06

Image may contain: one or more people and people standing

மூன்றாம் முறையாக பொங்கிய சாய்புவின் படைகள் மிகுந்த ஆக்ரோஷமாக போரிட்டன , காரணம் அந்தி நெருங்கிகொண்டிருந்தது

கிளைவோ அசால்ட்டாக சமாளித்தார் எனினும் மிக மூர்க்கமாக போரிட்ட சாய்பு தரப்பு 20 வீரர்களை கொன்றிருந்தது, கிளைவோ ஒவ்வொரு வீரனும் முக்கியம் எனு இக்கட்டான நிலையில் இருந்தார்

ஆயினும் 500 வீரர்களை சாய்பு படை இழந்திருந்தது, மொகரம் அன்று செத்தால் சொர்க்கமும் முக்கியமாக அந்த கன்னிகளும் என்ற கனவில் சாய்பு வீரர்களின் ஆக்ரோஷம் அதிகமாயிற்று

ஆயினும் கோட்டையினை கைபற்றவில்லை , நேரம் ஆனபடியினால் பின் வாங்கினார்கள்

இரவும் வந்தது, அவர்கள் வரவில்லை. உள்ளே இருந்த கிளைவிற்கு யோசனை பெருகிற்று, எங்கே சென்றார்கள்? 4ம் கட்ட தாக்குதலா? இல்லை பெரும் படையுடன் வளைக்க போகின்றார்களா? இன்றிரவு நம் கதை முடிந்துவிடுமா?

Image may contain: 1 personஆனால் பயத்தை வெளிகாட்டி கொள்ளாமல் நிலமையினை கவனித்துகொண்டிருந்தான் பொழுது விடிந்தது ஆனால் படைகளை காணவில்லை

ஆம், அவர்கள் ஓடியிருந்தார்கள். ஏதோ மொகரத்தின் சாவுக்காக பாடுபட்டிருக்கின்றார்கள், அது இல்லை என்றதும் இரவிலே பறந்துவிட்டார்கள்

அவர்கள் விட்டுசென்ற ஆயுதங்களை கைபற்றினான் கிளைவ், அத்தோடு ஆற்காடு கோட்டையினை கிளைவ் கைபற்றியதாக அறிவிக்கபட்டது

நம்பமுடியாமல் தலைகவிழ்ந்து நின்றான் டுப்ளே, சாந்தா சாகிப் கதறிகொண்டிருந்தான், சென்னை ஜார்ஜ் கோட்டையோ ஆனந்த கண்ணீரில் இருந்தது

ஆங்கிலேயரும் ஆளமுடியுமா? ஆங்கிலேயர் கோட்டையினை கைபற்றிவிட்டார்களா? நாம் பிரான்ஸ்காரர்களை வென்றுவிட்டோமா என நம்ப முடியாமல் குதித்துகொண்டிருந்தார்கள்

நம்ப முடியாத அதிசயம் அது, அவர்களுக்கு பெரும் ஆச்சரியம் அது

அந்த உற்சாகத்திலும் அவர்கள் கிளைவினை பற்றி சிந்தித்தார்கள், நிச்சயம் சாந்தா சாகிப் வருவான், அதற்குள் கிளைவிற்கு உதவ வேண்டும் என ஆயிரம் வீரர்களை அனுப்பினார்கள்

கிளைவ் வெற்றிமுகம் காட்ட மராட்டியனான மொராரி ராவும் வந்து சேர்ந்துகொண்டான்

இந்த படையுடன் சாந்தாசாகிப்பின் படைகளை விரட்டி விரட்டி அடித்தான் கிளைவ், ஆற்காட்டுக்கும் ஆரணிக்கும் இடையிலுள்ள கோட்டை ஒன்றினை அதிரடியாக கைபற்றி சாந்தா சாகிப்பிற்கு அதிர்ச்சி கொடுத்தான்

காஞ்சிபுரம், ஆரணி என வரிசையாக கையில் எடுத்தான் கிளைவ், ஆரணிக்கு ஒரு கவர்னர் இருந்தார், அவர் கிளைவிடம் பணிந்து இனி முகமது அலியே கர்நாடக நவாப் என ஏற்றுகொண்டார்

நிலமையினை கணித்த சாகிப் பாண்டிச்சேரி நோக்கி ஓடினனான், கிளைவிற்கு அவனை விரட்டி செல்லும் என்ணம் இருந்தது

ஆனால் கிளைவ் தளபதி, உத்தரவினை கிழக்கிந்திய கம்பெனியின் தலமையே தரவேண்டும். யுத்தம் கிளைவின் சொந்த விருப்பம் என்றால் அந்த அடியில் பாண்டிச்சேரியே கிடைத்திருக்கும்

ஆனால் கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகிகள் செலவு கணக்கு எல்லாம் பார்த்து கிளைவினை திரும்ப சொன்னார்கள்

இந்நிலையில் சாந்தாசாகிப்பிடம் இருந்து பறிக்கபட்ட சம்பள பணம் நிரம்பிய பணப்பெட்டி மோராரி ராவின் கும்பலிடம் சிக்கியது. அது கூலிப்படை அல்லவா? பெட்டி கிடைத்தவுடன் ஒரு பகுதி பறந்தது

எனினும் ஒரு பிரிவு கிளைவோடு நின்றது

மேலிடம் உத்தரவு, மொரார் ராவ் கும்பலின் ஓட்டம் என கிளைவின் பலம் குறைந்ததை அறிந்த சாய்பு பெரும் படையுடன் சென்னை நோக்கி வந்தான்

பல இடங்களை பாழ்படுத்தினான், கிளைவின் தலை இன்றி திரும்பமாட்டேன் என உறுமிகொண்டிருந்தான்

கிளைவோ தன்னிடம் இருந்த படையுடன் ஒடிவந்து மோதினார், சண்டை காவேரிபாக்கத்தில் நடந்தது

ஏராளமான சாய்பு வீரர்கள் இறந்தனர், சிலர் கைதிகளாக பிடிக்கபட்டனர். அக்கைதிகளில் ஒருவன் சாஹிப்

ஆறடி உயரமும் அற்புதமான வீரனுமான அவனை கிளைவிற்கு பிடித்து போயிற்று, அவனை தன் வலதுகரம் ஆக்கினான்

(பின்னாளில் அவனுக்கு பயிற்சிகளை எல்லாம் கொடுத்து தென்னகத்து குறுநில மன்னர்களை எல்லாம் அடக்கினான், சாகிப்பினை கான் சாகிப் ஆக்கினான்

கான் என்றால் தலைவன் என்று பொருள்

அந்த கான் சாகிபினை மதுரை ஆளுநராக ஆக்கினான் கிளைவ், அங்குதான் கான் சாகிப் மருத நாயகம் என மக்களால் அழைக்கபட்டான்

கான் நாடு என்ற பெயர் அவனாலே இராமநாதபுரம் பக்கம் உருவானது, பின்னாளில் அது கானாடு என்றானது, இப்பொழுது கானாடு காத்தான் என்றெல்லாம் அந்த பகுதியில் சில ஊர்கள் உண்டு

மதுரைக்கு அவன் நல்லாட்சி கொடுத்தபொழுது கிளைவ் வங்க போர்களில் பிசியானார், இங்கு நவாப்புக்கும் மருத நாயகத்திற்கும் மோத, பின் வெள்ளையருகும் மருத நாயகத்திற்கும் மோத மருதநாயகம் கொல்லபட்டான்

மருதநாயகம் கதையினை எப்படியாவது கமல் எடுப்பார் என எதிர்பார்த்தோம், நமக்கோ மய்யம் தான் கிடைத்திருக்கின்றது)

தொடர்ந்து முன்னேறிய கிளைவ் டேவிட் கோட்டையினை அடைந்தான், அதன் அருகில்தான் முன்பு டுப்ளே தன் வெற்றியின் அடையாளமாக கட்டிய வெற்றி தூண் இருந்தது, அதில் டூப்ளே சிரித்துகொண்டிருந்தான்

வந்த வேகத்தில் தன் கையால் டூப்ளேவின் சிலையினை சிதைத்தான் கிளைவ், மேற்கொண்டு அந்த அடையாளமே இல்லா வகையில் அது நொறுக்கி துடைக்கபட்டது

தன்னை கைதியாக டூப்ளே கொண்டு சென்ற அவமானத்தை அங்கு துடைத்து நின்றான் கிளைவ்

டூப்ளேக்கு மாபெரும் அவமானம், இந்தியாவினை பிரெஞ்ச் காரர்கள் கைபற்றி ஆள்வார்கள் என அவன் போட்ட திட்டத்தை 24 வயது கிளைவ் நொறுக்கி அதை கையில் எடுத்திருந்தான்

டூப்ளே முன்பு டூப்ளியாபாத் என்றொரு ஊரை நிர்மானம் செய்திருந்தான் அல்லவா? அதுவும் தடமில்லாமல் அழிக்கபட்டது

எல்லாம் சரி, இனி திருச்சி சென்று முகமது அலியினை அழைத்து வந்து ஆற்காட்டில் முடிசூட்ட வேண்டும்

ஆனால் அடிபட்ட புலியான சாய்பு சாந்தா சாகிப் எல்லாம் அங்கேதான் இருக்கின்றார்கள், டூப்ளேயும் உண்டு பின் எப்படி?

நாய் என்றாலும் சொந்த வீட்டில் பாயும், புலி என்றால் விடுமா?

இந்நிலையில்தான் பிரிட்டிசாரின் தளபதி லாரன்ஸ் சென்னை திரும்பினார், அவர் முன் பாகுபலி கட்டப்பாவாக பணிந்து நின்றான் கிளைவ்

என்னால் முடியாததை நீ சாதித்திருக்கின்றாய், நீ எனக்கு கீழ் இருக்க கூடாது, என் அருகில் இருக்க வேண்டும் என தனகு நிகராக அமர்த்தி கொண்டான் லாரன்ஸ்

இருவர் தலமையேற்று திருச்சிக்கு சென்றார்கள், அடித்த அடியில் சாந்தாசாகிப் கலங்கி ஓடினான்

முகமது அலியினை மீட்டு வெற்றிகரமாக கர்நாடக நவாப் ஆக்கினார் பிரிட்டிசார்

சாந்தா சாகிப் சண்டையில் கொல்லபட்டான், முகமது அலிக்கு தடை இன்றி போனது

இந்தியாவில் அவர்கள் முதல் வெற்றி இது, போரில் வென்று தங்கள் பிரதிந்தியாக கர்நாடக நவாபை ஆளவைத்த பெரும் திருப்பம் இது

வியாபாரத்தை விட சண்டையிலும் அதில் செய்யும் வசூலிலும் கப்பத்திலும் ஏகபட்ட வருமானம் என அவர்கள் கண்டுகொண்ட இடம் இது

இந்த மாபெரும் வெற்றிக்கு ஒரே காரணம் கிளைவ்

அப்பக்கம் பெரும் சவாலக கருதபட்ட டுப்ளேவிற்கும் அவனின் தளபதி புஸ்ஸி என்பவனுக்கும் முட்டிகொண்டது, டுப்ளே பிரான்சுக்கு அழைக்கபட்டார்

உண்மையில் பிரான்ஸ் படை அவ்வளவு சிறப்பு அல்ல, டுப்ளே பாகுபலி நாசர் சாயலே அன்றி வீரன் அல்ல, பிரெஞ்ச் படையிடம் கட்டுபாடும் இல்லை

ஆனால் ஆங்கிலேய படையினை கிளைவ் மிகுந்த கட்டுபாட்டுடனும் , பலமாகவும் கட்டியாண்டான். அவனின் வெற்றிக்கு அதுதான் காரணம்

முன் நின்று சண்டையிடுபவன் அவன் என்பதால் படையில் மரியாதையும் இருந்தது

பிரான்சுக்கு சென்றாலும் டுப்ளே சும்மா இருக்கவில்லை அவனின் நரிதந்திரம் வேறுவகையில் வேலை செய்தது

பிரிட்டன் கிழக்கிந்திய கம்பெனியில் தன் கைகூலிகளை வைத்து கொண்டு கிளைவிற்கு பெரும் புகழோ உதவியோ கிடைக்காமல் தடுத்தான்

கிளைவ் பயிற்சிபெற்ற ராணுவ வீரர்களை கேட்டால் கம்பெனி கப்பலில் சரக்கு ஏற்றி இறக்கும் ஆட்களை கொடுக்குமளவு டூப்ளேயின் தந்திரம் இருந்தது

ஆயினும் கிளைவினையொ அவனின் வெற்றிகளையோ டுப்ளேயால் தடுக்க முடியவில்லை, அவனின் கீர்த்தி பெருகிற்று

தென்னகத்தில் பிரிட்டானியர் அதிகாரம் பெருகிற்று, பிரெஞ்ச் அதிகாரம் சுருங்கிற்று

நவாபுக்கு எதிராக கப்பம்கட்ட மறுத்த குறுநில மன்னர்களை எல்லாம் கொன்றோ மிரட்டியோ செல்வத்தை குவித்தது ஆங்கிலேய படை

(இதில் ஒரு விஷயத்தை சொல்லலாம், இந்த கட்டபொம்மன் புலித்தேவன் என நிறைய மாவீரர்கள் இருந்தாலும் இவர்கள் எல்லாம் நவாபிற்கு கட்டுபட்டவர்களே

நவாப் குடும்பம் வாரிசு சண்டையில் சிக்கியபொழுதுதான் இவர்கள் தனி அரசென சொன்னார்கள்

ஒருவேளை வெள்ளையன் வராமல் இருந்தால் கூட, நாவாபில் யார் மிஞ்சினார்களோ அவர்கள் இவர்களிடம் கப்பம் வசூலிப்பதோ இல்லை புளியமரத்தில் தொங்க விடுவதோ உறுதி)

கிளைவ் கம்பெனியின் மகா முக்கியமானவர் ஆனார், கம்பெனி வளர்ந்தது

ஆனால் கிளைவின் உடல்நிலையோ மோசமாகி கொண்டிருந்தது

தொடரும்..

 

நயன் சங்கத்தை கண்டித்து கறுவருக்க பெரும் சபதம் செய்திருந்தாலும்…..

Image may contain: 1 person, close-up

ஊரெல்லாம் நயன் சங்கத்தை கண்டித்து கறுவருக்க பெரும் சபதம் செய்திருந்தாலும் வீட்டுக்குள்ள்ளே நயனுக்கு ஆதரவு பெருகிற்று

மகள் நயனின் தீவிர ரசிகையாகிவிட்டார், தலைவி பற்றி எவ்வளவு எடுத்து சொன்னாலும் ஏறெடுத்து பார்ப்பதில்லை

விவரமறியாத சிறுமி என்பது சரியாகத்தான் இருக்கின்றது

இந்த விஷயம் Babu Rao என்பவருக்கும் Chandran Kannanஎன்பவருக்கும் தெரியாமல் போககடவது என அந்தோணியாருக்கு ஆட்டுகிடா நேர்ந்திருகின்றேன்


ஏதோ ஒரு பாடலில் அவ்வையார் சொல்வார், நாளுக்கு ஒரு தேர் செய்யும் தச்சன், வாரமுழுக்க இருந்து ஒரு தேர் சக்கரம் மட்டும் செய்து.. என ஒரு தேரின் வலுவினை சொல்வார்

அப்படியாக இந்த அழகிய தேரினை படைக்க‌ அந்த பிரம்மனுக்கு இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகி இருக்கலாம்

இல்லை ஒரு யுகமும் ஆகியிருக்கலாம்


அரசியல் விமர்சனத்திலும் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை போலும்

உண்மையில் நாம் அதிகம் விமர்சித்தது புலிகளையும் அங்கிள் சைமனையும், ராமசந்திரனையும் அவர் கட்சியினைரையும்

அடடா, அக்கட்சிக்காரர்கள் எல்லாம் எவ்வளவு நல்லவர்கள் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை என்பார்கள்

அது அரசியல் விமர்சனத்திலும் வரலாம் போல‌

இப்பொழுதெல்லாம் மிக நிதானமானவர்களும், விமர்சனத்தை ஏற்றுகொள்ளும் பக்குவமும் அதிமுகவினருக்கே அதிகம் இருக்கின்றன‌

அவர்கள் திமுகவினரை விட அதிககாலம் தமிழகத்தை எப்படி ஆண்டார்கள், ஆள்கின்றார்கள் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது

இப்படிபட்ட சுத்த அறிவுகெட்ட திமுகவினர் இருக்கும் பொழுது பழனிச்சாமி ஏன் முதல்வராக மாட்டார்?

பழனிச்சாமி என்ன வருங்காலத்தில் வளர்மதி முதல்வர் ஆனாலும் ஆச்சரியமில்லை

பல உண்மைகள் இப்பொழுதுதான் விளங்குகின்றன‌

முகநூலிலே இப்படி ஒரு மாதிரி மட்டமாய் பொங்கும் கோஷ்டி மேடை கிடைத்தால் எப்படி பொங்கும்?

மக்கள் எல்லாம் எப்படி காதை பொத்திகொண்டு ஓடியிருப்பார்கள், எவ்வளவு வெறுப்பு வந்திருக்கும்?

ஊழலோ இன்னபிற குற்றசாட்டுக்கள் இருந்தும் அதிமுக இன்றும் வெற்றிகளை குவிப்பது இவர்களின் இந்த அற்பமான கொடூரமான பேச்சுக்களிலும், அசிங்கமான நடத்தையாலும் அன்றி வேறல்ல‌

பின் ஏன் அதிமுகவிற்கு வோட்டு விழாது?

அதிமுகவின் ஏராளமான ஸ்லீப்பர் செல்கள் திமுகவில்தான் சுற்றிகொண்டிருக்கின்றன‌

சாவேஸ் அங்கு வராத வந்த மாமணி

Image may contain: 1 personஉலகெல்லாம் பெரும் சீரழிவுக்ளை பல நாடுகளில் தன் நலத்திற்காக கொண்டுவந்த அமெரிக்கா, தன் காலடியில் பெரும் மானிட அவலத்தை நிறைவேற்ற துடிக்கின்றது

பிணம் எங்கேயோ அங்கு கழுகு இருக்கும், பெட்ரோல் எங்கேயோ அங்கு அமெரிக்கா இருக்கும்

வெனிசுலாவின் பெரும் பலம் எண்ணெய், அதன் அழிவுக்கு காரணமும் அதுவே

சாவேஸ் என்பவர் காட்டிய ஆட்டத்திற்கு பின் அப்படி இனி ஒருவன் வரவே கூடாது என திட்டமிட்டு அந்நாட்டை கலய்த்து போடுகின்றது அமெரிக்கா

அது ஒரு சவுதி மன்னர், குவைத் மன்னர், பக்ரைன் மன்னர் போல் வெனிசுலாவிலும் ஒருவர் கிடைத்திருந்தால் அமெரிக்காவிற்கு சிரமம் இருக்காது

ஆனால் சதாம், கடாபி வழியில் அங்கு சாவேஸ் என்றொருவன் இருந்ததும், மக்கள் அவன் பின்னால் அணிவகுத்ததுமே அமெரிக்க கோபத்திற்கு காரணம்

சாவேஸ் அங்கு வராத வந்த மாமணி, அந்நாட்டிற்கு மட்டுமல்ல தென்னமெரிக்காவிற்கே ஏதாவது செய்யமுடியுமா என சிந்தித்த மாமனிதன்

சாவேஸ் அக்காலத்தில் இருந்த பொலிவியரன் குழுவில் ஒருவர்

Image may contain: one or more people, crowd and outdoor

 

பொலிவியரன் குழு என்பது சிதறி கிடக்கும் தென் அமெரிக்க நாடுகளை ஒன்றாக இணைத்து, ஐக்கிய அமெரிக்க நாடுபோல் உருவாக்கி வளர்க்கவேண்டும் என்ற சிந்தனை கொண்டது

ஆனால் அப்படி ஒன்று உருவாகிவிடாமல் அமெரிக்கா செய்த சதி ஏராளம், அந்த புரட்சிகர குழுவின் கடைசி மனிதர்தான் சாவேஸ்

 

அவர் ஆட்சியில் இருந்தது வெறும் 10 வருடங்களே (1999 2013), அதற்குள் அமெரிக்காவிற்கு அணலடிக்கும் வேலைகளை செய்தார்

உலகம் முழுக்க எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளை இணைத்தார், அத்தொழிலில் அந்நாடுகள் நல்ல வருமானம் பெறவும் இன்னும் பல வியூகங்களை சொன்னார்

குறிப்பாக அமெரிக்காவின் எண்ணெய் வியாபாரத்தை உடைத்துபோட கடும் முயற்சிகள் செய்தார், ஓரளவு வெற்றியும் பெற்றார்

வெனிசுலா எண்ணெய் வியாபாரத்தை சீராக்கி அந்நாட்டை வளப்படுத்தினார், வெனிசுலா வளர்ந்துகொண்டிருந்தது

அந்நிலையில்தான் புற்றுநோய்க்கு ஆளாகி இறந்தார் சாவேஸ், அத்தோடு வெனிசுலாவிற்கு சனி பிடித்தது

இந்த அமெரிக்காவிற்கும் , கலைஞருக்கும் ஒரே ராசி. அவர்களை எதிர்த்தவர்கள் கொஞ்சநாளில் எப்படியாவது மறைந்து போவார்கள்

விதி என்றும் கொள்ளலாம், இயற்கையாக நடப்பது என்றும் சொல்லலாம்

கலைஞர் வாழ்வில் அது நடந்தது, எதிர்த்தவர்கள் எல்லாம் மறைந்துகொண்டே இருந்தனர், ஓரளவு தாக்கு பிடித்த்தது சோ ராமசாமியும், ஜெயாவும்

ராமசந்திரன் 15 ஆண்டுகள் தாக்குபிடித்தார் அத்தோடு அவரும் காலி

கலைஞருக்கு அமைந்த வரம் அது, அமெரிக்காவும் கிட்டதட்ட அப்படியே என்பது சாவேஸ் விவகாரத்தில் தெரிந்தது

சாவேஸ் சென்றபின் அத்தேசத்தை கவனிக்க யாருமில்லை, அடுத்த வலுவான தலைவர் உருவாகாமல் அமெரிக்கா பார்த்துகொண்டது

நாடு சீரழிந்தது, இன்று என்னவெல்லாமோ நடக்கின்றது

பணவீக்கம் உயர்ந்து மக்கள் அகதிகளாக ஓடுகின்றனர், வாழ வழி இல்லா நிலையில் தேசம் தத்தளிக்கின்றது

ஒரு கப் காபி நமது ஊர் விலையில் 3000 ரூபாய் என்ற அளவு பணவீக்கம் எகிறிவிட்டது

சந்தடி சாக்கில் கொலம்பியாவினை வளைத்த அமெரிக்கா, அதன் எல்லையில் வெனிசுலாவுடன் யுத்தம் புரிய திட்டம் வகுத்து கொடுக்கின்றது

யுத்தம் வெடிக்கும் பட்சத்தில் அதள பாதாளத்தில் கிடக்கும் வெனிசுலா புதைந்தே போகலாம்

ஈராக், சிரியா, லிபியாவினை தொடர்ந்து எண்ணெய்க்காக ஒரு தேசம் கதற தொடங்கியிருக்கின்றது

பெரும் மானிட அவலத்தை கண்டும் காணாமல் உலகம் அமைதி காக்கின்றது

வெனிசுலா மக்கள் சாவேஸை நினைத்து அழுதுகொண்டிருக்கின்றனர், இன்னொரு சாவேஸ் வராமல் அவர்களை காக்க முடியாது

கலைஞர் அஞ்சலி கூட்டத்தில் அமித்ஷா வருகின்றாராம்

Image may contain: 1 person, indoorகலைஞர் அஞ்சலி கூட்டத்தில் அமித்ஷா வருகின்றாராம், வரட்டும்

இப்பொழுது எவனாவது Go Back அமித்ஷா என கத்துவானா என்றால் இல்லை

இவ்வளவிற்கும் தமிழக‌ 69% இடஒதுக்கீட்டுக்கான வழக்கு டெல்லியில் நடக்கின்றது, அதை பிண்ணணியிலிருந்து இயக்குவது யார் என சொல்லி தெரியவேண்டியதில்லை

நடக்கும் நிகழ்வுகள் அரசியல் நாகரிகம் என கருதபட்டாலும், அரசியல் கணக்கு ஏதுமில்லா நாகரிகம் என அங்கு எதுவுமில்லை, இருக்கவுமுடியாது

இது திமுக பாஜக எனும் கூட்டணியினை நோக்கி நீளுகின்றது, அப்படி நிச்சயம் அமையலாம்

அப்படி அமையும் பட்சத்தில் இன்று எம்மை நோக்கி சங்கி என குலைக்கும் திமுகவினர் பலபேரை தேடி சென்று அவர்கள் முன்னால் சத்தமாக சிரிக்க வேண்டிய பெரும் கடமை இருக்கின்றது

கொஞ்சமாவது மானமிருந்தல் அமித்ஷாவிற்கு கலைஞர் நினைவஞ்சலியில் என்ன வேலை என கேளுங்கள்

மாறாக எமக்கு மீம்ஸ் போட்டு திராவிட கொள்கையில் இருந்து புரளாதீர்கள்

கலைஞரை பற்றி சொன்னால் அத்தனையும் பொய் என ஓடுவீர்களா?

Image may contain: 5 people, including Moses Asli, people smiling, meme and textதிமுக எனும் இயக்கம் எவ்வளவு வலுவானது, எவ்வளவு பாரம்பரியமும் சில பெருமைகளையும் கொண்டது

அப்படிபட்ட இயக்கம் இந்த சாமானியன் என்பவனை பார்த்தா பயப்படுகின்றது, எப்படி எல்லாம் அலறுகின்றார்கள் அதன் தொண்டர்கள்

அட பாவிகளா,

நாம் அமைச்சரும் இல்லை, பெரும் கருத்து சொல்லும் அரச பதவியிலும் இல்லை அவ்வளவு ஏன் பத்திரிகையாளனும் அல்ல, எந்த கட்சியில் இருப்பவனும் அல்ல‌

சாலைய்யோரம் நடந்து செல்லும் பாமரன், பார்க்கும் விஷயங்களை கொஞ்சம் வரலாற்று பிண்ணணியோடு பார்க்கும் ஒரு சாதரண மனிதன்

அவனை கண்டா நீங்கள் அஞ்சுகின்றீர்கள்?

மோடிக்கும், ராகுலுக்கும், தமிழக அமைச்சர் பெருமக்களுக்கும் போட்ட மீம்ஸ்களை எமக்குமா செய்கின்றீர்கள்

கிட்டதட்ட ஆயிரம் பேர் இன்று மட்டும் விசாரிக்கின்றார்கள், அவ்வளவு ஆதரவுகள் உங்களால் பெருகுகின்றது நன்றி

என்ன சொன்னீர்கள்?

கலைஞர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா?

நேருவினையும், காமராஜரையும் அவர் விமர்சித்தது கொஞ்சமா? இந்திராவினை படுத்திய பாடுகள் என்ன‌

ஆக அவரும் அவர் கட்சிக்காரர்களும் யாரையும் விமர்சிக்கலாம், அவரை தொட கூடாதா?

இங்கு சிலபேர் ஏன் கலைஞரை கண்டாய் என கத்தல் வேறு

கலைஞரின் பெயரை போஸ்ட்மார்டம் அளவிற்கு சீரழித்த சோ.ராமசாமியும் ஜெயகாந்தனும் சென்று பார்த்தபொழுது நீங்களெல்லாம் எந்த .. கீழ் இருந்தீர்கள்??

அயோக்கிய பயலுகளா,

ராமசந்திரனை கலாய்த்தால் பிடிக்கின்றது, பாஜகவின் சங் பரிவார முகத்தை சொன்னால் இனிக்கின்றது

திமுகவால் காப்பாற்றபட்ட புலிகதையினை சொன்னால் ஓடிவந்து கேட்பீர்கள்

ஆனால் கலைஞரை பற்றி சொன்னால் அத்தனையும் பொய் என ஓடுவீர்களா?

உண்மையில் அண்ணா சொன்னது போல் உள்ள கட்டுரையின் பெரும்பான்மை வரிகள் என்னுடையதல்ல, ஜெயா, ராமசந்திரன் வரிகளே எம்முடையது

அந்த பதிவு 1973ல் “சொர்க்கத்தில் அண்ணா” என கண்ணதாசன் எழுதியதின் தழுவல்

முதலமைச்சரோ நான், உத்தரவிடுவதோ அவன் என்பது கண்ணதாசனின் எழுத்து

அந்த கடிதம் இன்றும் புத்தகவடிவில் உண்டு முடிந்தால் கண்டுபிடித்து கிழிக்கவும்

உங்களின் கணக்குபடி திமுக என்பது முக ஸ்டாலினிடம் இருந்து தொடங்குகின்றது, கால கணக்குபடி அது நீதிகட்சியில் இருந்து தொடங்குகின்றது

நாம் அந்த நீண்ட வரலாற்றில் நீந்தும்பொழுது இப்படியான காட்சிகளும் காண கிடைத்தன , இன்னும் ஏராளம் உண்டு

எல்லா கட்சியினையும் விமர்சிப்பது போலத்தான் உங்கள் கட்சியினையும் விமர்சித்தோம், திமுக ஒன்றும் புனிதமான மதம் அல்ல‌

ஒரு நல்லவனை , ஒருதேசபற்றாளாஇ கூட உருவாக்கா கட்சி அது, வைகோ என்ற ஒரு சோறே பதம்

உங்கள் கட்சியின் ஒருமுகத்தை எழுதி இன்னொரு தமிழன் பிரசன்னா, நாஞ்சில் சம்பத் போல மாற எம்மால் முடியாது

உங்களின் உண்மை முகத்தை கிழிப்பது தவறென்ரால் ஆயிரம் முறை அந்த தவறைச் செய்ய தயார்

சில குரைப்புகல் என்னை ஏன் பிளாக் செய்தாய் என கேட்டுகொண்டே இருக்க்கின்றன‌

வீட்டுக்குள் வந்து குரைத்தால் வெளிதள்ளி கதவை சாத்தத்தான் செய்வார்கள்

நாம் சாதிவெறினல்ல என்பது நம்மை அறிந்தோருக்கு புரியும்

Image may contain: text

நாம் நாடார் சாதிவெறியன் அதனால்தான் திமுகவினை விமர்சித்தோம் என ஒரு சில “பெரியார் தூஷன்” கோஷ்டி சொல்லி கொண்டிருக்கின்றதாம்

நாம் சாதிவெறினல்ல என்பது நம்மை அறிந்தோருக்கு புரியும்,

நாடார்களை பற்றி எழுதி பல பஸ் நிலையங்களுக்கு அழைப்பு வந்த கதை எல்லாம் உண்டு

விமர்சனத்திற்கு பதில் சொல்ல தெரியாத நாயெல்லாம் சாதியினை இழுக்கின்றது

பெரியார் இதனைத்தான் சொல்லிகொடுத்தார் போல..

பொணந்தின்னி என்பது நாங்கள் அல்ல‌

இந்தி எதிர்ப்பு என சொல்லி 100 பேரை கொன்று அப்படியே தமிழையும் கொன்ற கும்பலே பொணந்தின்னி

ஈழமக்களின் போராட்டத்தை தூண்டிவிட்டு பல பச்சை படுகொலைகள் நடக்க காரணமாயிந்த திக கும்பலே பொணந்தின்னி

யாரடா பொணந்தின்னி? நீங்களா நாங்களா?

இன்றும் இந்திய தேசியத்திற்கு எதிரக எவனையாவது தூண்ட முடியுமா? அவன் சாக மாட்டானா? எவன் செத்தால் என்ன லாபம் என கணக்குபோட்டு திரியும் அந்த கும்பலே பொணந்தின்னி

ஏலேய் பொணந்தின்னி

இதில் நாம் சிவநாடாரை தவிர யாரை பற்றியாவது எழுதியிருக்கின்றேன் , குறிப்பாகா ஹரி, செல்வின் பற்றி எழுதினேன் என ஆதாரம் காட்டினால் எழுதுவதை நிறுத்த தயார்