ஜப்பான் சென்றார் அமைச்சர் ஜெயக்குமார்

மிஸ்டர் சைமன், நீர் இல்லாத பொய்களை அவிழ்த்துவிட உமக்கு பதில் சொல்லித்தான், உமது பொய்முகத்தை கிழிக்கத்தான் எழுதினோம்

அப்பொழுது நீர் கலைஞரையும் காங்கிரசையும் திட்டிகொட்டிருந்தீர்

உமது பொய்களை கிழிக்கும் பொழுது இந்த திமுகவினர் எல்லாம் ஓடிவந்து ஆம், அப்படித்தான், நன்றி நன்றி என சொல்லித்தான் சேர்ந்தார்கள்

இப்பொழுது நீர் ஓய்ந்துவிட்டீர், இருக்கின்றீரா இல்லையா என்பதே தெரியவில்லை, உலகின் அத்தனை பொய்களையும் சொல்லிவிட்டு ஓடிவிட்டீர்

இதுகளோ இப்பொழுது எம்மை சுற்றி கொண்டு விடமறுக்கின்றது, சில விஷயங்களை சொன்னால் உம்மை திட்டுவது போலவே எம்மையும் திட்டுகின்றன‌

எல்லாவற்றிற்கும் மூலகாரணம் நீரும், நீர் அள்ளிவிட்ட பொய்களும்

ஏ அங்கிள் சைமா, உமது ஆமைகறி பாவத்திற்கு கூட மன்னிப்பு உண்டு, ஆனால் இந்த திமுக கும்பலிடம் எம்மை சிக்க வைத்த பாவத்திற்கு மட்டும் உமக்கு மன்னிப்பே கிடைக்காது

கிடைக்கவே கிடைக்காது, இதோ பிடி சாபம்

உம் தும்பிகளிடமே அடிபட்டு சாவீராக..

 


ஜப்பான் சென்றார் அமைச்சர் ஜெயக்குமார், ஜப்பானிய தொழிலதிபர்களுக்கு தமிழகத்தில் தொடங்க அழைப்பு : செய்தி

ஜப்பானில் கல்யாண ராமன் என்ற டைட்டில் நினைவுக்கு வர கூடாது

இப்பொழுது அமைச்சருக்கு சிக்கல் என்னவென்றால், ரஜினிக்கு ஜப்பானில் ஏகபட்ட ரசிகர்கள் உண்டு

யாராவது அமைச்சரிடம் ரஜினி எப்படி இருக்கின்றார் என கேட்டுவிட்டால் அவ்வளவுதான், பொங்கி தீர்த்துவிடுவார் அமைச்சர்

“அவரால் முதலமைச்சர் ஆக முடியாது, அவர் சும்மா, எல்லாம் அம்மா” என ஜெயக்குமார் ஜப்பானில் பொங்கினால் பார்க்க நன்றாய் இராது


உண்மை இப்படி இருக்க ….

Image may contain: text and outdoor

உண்மை இப்படி இருக்க , துபாய் அரசர் 400 கோடியோடு கொச்சி கடலில் நிற்கின்றார் ஒருவன், அபுதாபி சுல்தான் 300 கோடியினை கையில் வைத்து கொண்டு இந்தியா வாங்கவில்லை என அழுதுகொண்டிருந்தார் என்றான் இன்னொருவன்

ஒரு சிலர் “ஏ சுல்தானே மோடியினை மீறி எங்களிடம் கொடுங்கள்” என கேட்குளவு நிலமை சென்றது

இப்பொழுது அவர்களை எல்லாம் காணமுடியாது, அந்த பயல்கள் பூராவும் இடுக்கி அணைக்கு அடியில் சென்று பதுங்கிவிட்டான்

இன்று விஜயகாந்திற்கு பிறந்த நாள், வாழ்த்துக்கள் கேப்டன்

Image may contain: 1 person, smiling

தமிழக நடிகர்களில் ஓரளவு பொதுநலனும் தைரியமும் கொண்ட நடிகர் அவர், தமிழை தவிர எந்த மொழிபடத்திலும் அவர் நடித்ததில்லை

கருப்பு நிறம், பெரும் திறமையாளர் என சொல்லமுடியாவிட்டலும் அவர் நடிப்பில் ஒரு உணர்ச்சி இருந்தது. அந்த வேகமும் உணர்ச்சியும்தான் அவரை உச்சிக்கும் கொண்டு சென்றது

உச்ச நடிகராகவும் இல்லாமல் அதே நேரம் காணாமலும் போகாமல் கங்கை ஓடும் நாட்டில் காவேரி போல அவரும் ஓடிகொண்டிருந்தார்

பெரும் சர்ச்சையிலோ ஏதும் முறைகேடுகளிலோ சிக்காத மிக சில நடிகர்களில் அவரும் ஒருவர்.

கலைஞர் தலமையில் திருமணம் செய்யும் அளவிற்கு அவருக்கு தமிழக சூழலும் தெரிந்திருந்தது.

எந்த சர்ச்சையிலும் சிக்காமல் மிக வேகமாக வளர்ந்தார், உணர்ச்சி மிக்க நடிப்பால் புரட்சி கலைஞர் எனவும் அழைக்கபட்டார்

அவர் “புரட்சி கலைஞர்” என அழைக்கபட்டதில் கலைஞருக்கு துளியும் வருத்தமில்லை, அதுதான் கலைஞர்

ஒரு விஷயம் நிச்சயமாக சொல்லமுடியும். நிச்சயம் விஜயகாந்த் நல்ல நிர்வாகி

ராமசந்திரனும் , சிவாஜியும் இது நடக்காது என தூர எறிந்த நடிகர் சங்கத்தை, ரஜினியும் கமலும் ஏற்க தயங்கிய பொறுப்புகளை அவர் ஏற்று நடத்தி சங்கத்தை கடனில் இருந்து மீட்டார்

நடிகர் சங்கம் வித்தியாசனாமது. ராமசந்திரன் வள்ளல் என்பார்கள், பிரபாகரனுக்க்கே 100 கோடி கொடுத்த கொடையாளன் என்பார்கள்

ஆனால் நடிகர் சங்கத்து சில லட்ச கடனை அவர் கட்டவில்லை, இவ்வளவிற்கும் அவரிக்கு ஏணியாக, லிப்டாக இருந்ததே அந்த திரையுலகம், ஏன் வள்ளல் ராமசந்திரன் கொடுக்விலை என நாம் கேட்க கூடாது

சிவாஜி, ஜெமினி என சொத்துக்களை குவித்த நடிகர்களும், ஏன் கன்னடத்தில் சொத்துக்களை குவித்த ரஜினியும், 6 வயதிலே சம்பாதிக்க தொடங்கிய கமலும் முன்வரவில்லை

ஆனால் நடிகர் சங்க பொது நலனுக்காக வந்து அதை செய்தும் காட்டியவர் விஜயகாந்த்

இப்படிபட்ட ஆர்வம்தான் அவரை அரசியலுக்கும் இழுத்தது. 
ஆனானபட்ட மூப்பனாரே அய்யோ என அலறி தன் கட்சியினை காங்கிரசோடு இணைக்கும் அளவிற்கு அவருக்கு மர்ம அடி முதுகில் விழுந்தது அப்படிபட்ட அரசியல் இது

இன்னொரு பக்கம் ஜெயா இரும்பு பெண்மணி, இன்னொரு பக்கம் சிரித்துகொண்டே தந்திர அரசியல் செய்யும் கலைஞர்

இவர்களை எதிர்த்து தைரியமாக கட்சி கண்டது விஜயகாந்த் ஒருவர்தான். அன்று சிஸ்டம் மகா அமைதி தியானம், மய்யம் அடக்கமாகி இருந்தது

அன்றும் திரைதுறையில் இருந்து ஒரு ஆதரவுமில்லை

உண்மையில் விஜயகாந்த் யாரையும் மிரட்ட கட்சி தொடங்கவில்லை, மக்களுக்கு ஏதோ செய்ய நினைத்தார்.

மனதில் பட்டதை பேசியதில் தமிழக அரசியல்வாதிகளில் காமராஜருக்கு அடுத்த ஒருவர் விஜயகாந்த் மட்டும்தான்.

அவரின் மண்டபம் எல்லாம் இடிக்கபட்டிருக்க வேண்டியதே இல்லை, இன்று அதன் அருகே நின்று பார்த்தாலும் குழந்தையே சொல்லும், இந்த சாலை ஏன் இங்கு வளைகின்றது?

நிச்சயம் அந்த தவறை கலைஞர் செய்திருக்கமாட்டார் என்றுதான் கலைஞரை அறிந்தவர்கள் சொல்கின்றார்கள், முதிய வயதில் யாரோ தவறான வழிகாட்ட நடந்த தவறு அது

ஆனால் அந்த தவறுக்கேற்ற தண்டனையும் கிடைத்தது

இப்படி அவருக்கு அடிகொடுத்து பார்த்தார்கள், அந்த அடிதான் பின்னாளில் திமுகவிற்கு சாவு மணி ஆனது, கலைஞர் மறுபடி அரியணை ஏற முடியவில்லை.

அரசியல் என்பது மர்ம சதுரங்கம், அதில் விஜயகாந்த் தடுமாறினார். நடிகராக ஜொலித்த அவர் பின்னாளில் அரசியலில் கலக்கினார், எதிர்கட்சி தலைவராக கூட இருந்தார்

அன்று ஜெயலலிதா முன்னால் தம் கட்டி நின்ற விஜயகாந்தினை மறக்க முடியாது, இன்றைய எதிர்கட்சி தலைவர் எதற்கெடுத்தாலும் ஓடிவந்து நடுரோட்டில் அமரும் பொழுது, அன்று தில்லாக நாக்கை கடித்து நின்ற விஜயகாந்த் நினைவுக்கு வந்துதான் போவார்

அரசியலின் மர்ம நகர்வில் விஜயகாந்த் சிக்கினார், ஒருவித அதீத நம்பிக்கையும் அவருக்கு வந்தது

விளைவு படுதோல்வி அடைந்தார், மீண்டு வந்துவிடலாம் ஆனால் உடல்நலம் ஒத்துழைக்கவில்லை

நோயின் தாக்கத்தை அவர் குடிகாரர் என்றார்கள், ஏன் ரஜினிக்கு இருந்த குடிபழக்கம் ஊர் அறிந்தது, சிங்கப்பூர் சிகிச்சைக்கு அதுதான் காரணம்

ஆனால் யாராவது அவரை சொல்வார்களா? இல்லை

விஜயகாந்த் குடிகாரர் என்பது ஊதிபெருக்கபட்ட பிம்பம், நோயின் தாக்கமே அவரை வீழ்த்தியது

இப்பொழுதும் விஜயகாந்திற்கு வாய்ப்பு இருக்கின்றது, காங்கிரசிலோ அல்லது பிஜேபியிலோ அவர் அடைக்கலம் ஆகலாம், தேசிய நீரோட்டத்தில் கலக்கலாம்

காலம் இருக்கின்றது

உறுதியாக சொல்லலாம் , தமிழகத்திற்கு ஏதாவது செய்ய நினைத்த நபர் அவர். அரசியலுக்கு வந்து அவர் இழந்துதான் மிக அதிகம்

அதில் சொத்துக்கள், நண்பர்கள், உடல்நலம் என ஏகபட்ட இழப்புகள் உண்டு,

வடிவேல் கூட அவருக்கு எதிரியானார்

அவர் எந்த நடிகர் சங்கத்திற்கு உழைத்தாரோ அது கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை

அவரின் 40ம் ஆண்டு விழாவினையும் திரையுலகம் கண்டுகொள்ளவில்லை, நன்றிகெட்டதனத்திற்கு இவ்வுலகில் ஒரு உதாரணம் வேண்டுமென்றால் தமிழக திரையுலகத்தை சொல்லலாம்

அரசியலை விடுத்து முன்னொரு காலத்தில் சங்கத்தினை மீட்டவர் என்ற வகையிலாவது அவரை கொண்டாடியிருக்க வேண்டும்

இந்த பூவுலகில் நன்றி ஒரு மில்லி கிராம், அல்லது அரை மிமீட்டர் கூட இல்லாத ஒன்று தென்னிந்திய நடிகர் சங்கம்

அதற்காக உழைத்த மனிதனை இப்படி மறக்க கூடாது, நிச்சயம் அந்த நன்றி மறந்த சங்கம் உருப்படாது.

அட அவர்களுக்குத்தான் நன்றி இல்லை , இவரால்தான் அதிமுக ஆட்சிக்கு வந்தது அதனால்தான் நாம் அமைச்சராக முதலமைச்சராக இருக்கின்றோம் என்ற நன்றி பழனிச்சாமி கோஷ்டிக்குமா இல்லை?

நன்றி மிக்கவர்கள் என்றால் பழனிச்சாமி அரசு விஜயகாந்தினை இந்த விழாவில் பாராட்டி இருக்க வேண்டும்

விஜயகாந்திற்கும் காமராஜருக்கும் கிட்டதட்ட ஒரே ராசி

அவர்கள் யாருக்கெல்லாம் உழைத்தார்களோ அவர்களே நன்றிமறந்து ஓட அடிப்பார்கள்

சினிமா உலகமும் நன்றி மறந்தது, தமிழகமும் விஜயகாந்தினை புரிந்துகொள்ள தடுமாறியது

இன்று அவரைபோல் எதிர்கட்சி தலைவர் வேண்டும் என தேடுகின்றது. நிச்சயம் சட்டசபையில் அப்படி ஒரு மனிதன் தைரியமாக‌ இனி சீறபோவதில்லை

சினிமாவிலும் அரசியலிலும் எத்தனையோ பேரை கைதூக்கிவிட்டவர் விஜயகாந்த்

ஆக போலிகளுக்காக உழைத்தாலும் தன்னை அறியாமல் நன்றிகுரிய சிலரை சம்பாதித்திருக்கின்றார்

விஜயகாந்த் சம்பாதித்ததிலே மிக உயர்ந்தது இம்மாதிரி ரசிகர்கள்தான்.

இன்று விஜயகாந்திற்கு பிறந்த நாள், வாழ்த்துக்கள் கேப்டன்

1980களில் பிசியாக இருந்தார் விஜயகாந்த், ஈழமக்கள் பால் அவருக்கு அன்பு இருந்தது, ஈழ மக்கள் நிம்மதி பெறும்வரை தன் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என அன்றே சொன்னவர்

அந்த முடிவு எந்த அரசியல்வாதியும், நடிகனும் எடுக்காதது. அவர் ஒருவர்தான் எடுத்தார்

இன்று விஜயகாந்தின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்ல யாருமில்லை. நிச்சயம் அவர் மட்டும் கலைஞர் பக்கம் வந்திருந்தால் இன்று பழனிச்சாமி முதல்வரில்லை பன்னீர் அவர் அருகில் இல்லை

விஜயகாந்தினை தந்திரமாக முதுகில் குத்திய வைகோ கும்பலையும் காணவில்லை

கலைஞரை எதிர்த்த பெரும்பாலோருக்கு வந்த சோதனைகள் விஜயகாந்திற்கும் வந்தது

ஆம் கலைஞரின் விதி அது , அவரை எதிர்த்தவர்கள் நெடுநாள் வாழமுடியாது, ஏதோ ஒருவகையில் எதனாலோ தாக்கபடுவார்கள்

திடீர் மரணம் அல்லது ஏதாவது நோய் வந்து அவர்களை முடக்கும், அவர் வரலாறு முழுக்க சான்றுகள் ஏராளம் கிடக்கின்றது

அவரை முடக்குவேன் என கிளம்பியவர்கள் எல்லாம் கொஞ்ச நாளில் போய் சேர்ந்தார்களே தவிர அவரோ நிலைத்து நின்றார்

ராமாயணத்து வாலிக்கு பின் அந்த அபூர்வ விதி கலைஞருக்கு இருந்தது, பகுத்தறிவு அல்லதான் ஆனால் அவர் வாழ்வு அதைத்தான் சொல்கின்றது

அவரை எதிர்த்துவிட்டு நீண்டநாள் நலமாக‌ வாழமுடியாது என்பது அவரின் விதி அல்லது வரம்

தாக்குபிடித்தவர்கள் மிக சிலர்,

(சிலர் சாகாவிட்டாலும், நோய்படாவிட்டாலும் வைகோ போல மெண்டலாகி திரியும் நிலையும் உண்டு அதற்கு சாவே பரவாயில்லை)

அந்த நம்பிக்கைக்கு விஜயகாந்தும் தப்பவில்லை, திடீரென உடல் நலம் கெட்டது இன்னும் போராடிகொண்டிருக்கின்றார்

கலைஞருக்காக அவர் வீடியோவில் விட்ட கண்ணீரும், இந்தியா வந்தவுடன் ஓடிசென்று அவன் கலைஞர் சமாதியில் மண்டியிட்டு அழுததும் அவரின் குழந்தை மனதை காட்டிற்று

அவர் மீண்டு வரட்டும், தைரியமும் பொதுநலமும் மிக்க அந்த கேப்டன் மீண்டு வரட்டும்

“நீங்க திரும்பி வரணும், மறுபடியும் வரணும் பழைய விஜயகாந்தாய் வரணும்” என்ற எதிர்பார்ப்புடன் வாழ்த்துவோம்

அரசியலில் நீங்கள் தோற்கவில்லை விஜயகாந்த், தோற்றது தமிழகம். ஒரு அடுத்தகட்ட தலைவனை அடையாளம் காட்ட முடியாத பாவத்திற்கு அது வசமாய் சிக்கிற்று

ஆம் தோல்வி உங்களுடையது அல்ல, தமிழகத்தினுடையது

கொஞ்சமும் சுயநலமின்றி தமிழகத்திற்கு ஏதாவது செய்யமுடியுமா என களமிறங்கி பெரும் நஷ்டபட்டாலும் விலகாமல் இன்று உடல்நலத்தோடு போராடும் அவர் மீண்டு வர பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துக்கள்

குஷ்பு ரசிகர் சங்கமும் தன் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது

வாழ்த்துக்கள் கேப்டன், உங்களுக்கு இன்னும் வாய்ப்பும் காலமும் இருக்கின்றது, மீண்டு வாருங்கள்

உங்களுக்கான காலமும் களமும் இனிதான் இருக்கின்றது.

ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை : கீர்த்தி சுரேஷ்

குதிப்பு மீனும் குஷ்பு படமும் கிடைத்திருப்பதால் சங்கம் யுத்த களத்தை விட்டு ஓய்விற்கு செல்கின்றது

அடேய் ஒரு நாளாவது , அதுவும் மலையாளிகளின் நல்ல நாளிலாவது பகுத்தறிவிற்கு ஓய்வு கொடுக்க கூடாதா?

ராஜராஜசோழன் உண்டு ஆனால் அவன் கோவில்கட்டி வணங்கிய சிவன் கிடையவே கிடையாது என்பதெல்லாம் என்ன வகை பகுத்தறிவு?

நாம் தான் ஆத்திகவாதி சரி , நாத்திகவாத கட்சியின் திமுக தலமை ஓணம் பண்டிக்கைக்கு வாழ்த்து சொல்கின்றார், அவரிடம் அந்த பகுத்தறிவு கேள்விகளை கேட்டால் என்ன?


ஜெயலலிதாவாக நடிக்க தைரியம் இல்லை : கீர்த்தி சுரேஷ்

பின்னே ஜெயா வாழ்வின் கதையில் இவர் நடித்தால் சசிகலா பாத்திரத்திற்கு இன்னொரு நடிகை வேண்டும்

அந்த பாத்திரம் கீர்த்தி சுரேஷ் பாத்திரத்தை மிக்சர் சாப்பிட வைத்துவிடும் என்பது புரியாதவரா கீர்த்தி?

பின் எப்படி தைரியம் வரும்?


முக ஸ்டாலின் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டிருக்கின்றார்

முக ஸ்டாலின் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டிருக்கின்றார்

ஓணம் பண்டிகைக்கு கலைஞர் விடுமுறை கொடுத்ததை எல்லாம் குறிப்பிட்டு வாழ்த்திகொண்டிருக்கின்றார்

ஆனால் திமுகவின மகாபலி மன்னன் என்ன சமூக நீதியினை காத்தான், கிழித்தான்? அவன் கெட்ட கேட்டுக்கு என்ன ஓணம் பண்டிகை? அவன் நாட்டுக்கு கலைஞர் போல் என்ன செய்தான்? என கேள்வி கேட்டு கொண்டிருக்கின்றார்கள்

இதை கேட்டால் தமிழக மலையாளிகள் , குறிப்பாக சென்னையில் வாழும் மலையாளிகள் என்ன நினைப்பார்கள்?

மகாபலி ஆட்சி, கலைஞர் ஆட்சியினை விட சிறந்ததா என கிளம்பும் இவர்களால் நிச்சயம் ஸ்டாலினுக்கு தலைவலியே

விரைவில் அங்கிள் சைமனை போல, ஸ்டாலினும் வீடியோவில் சித்தப்பாக்களையும், அத்தைகளையும் (அதாங்க கலைஞரின் உடன்பிறப்புக்கள்) கண்டித்து பேசபோகும் காட்சி விரைவில் வரலாம்


பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் விவகாரங்களில் ஆழ்ந்த சிந்தனை இல்லை : ராகுல் தாக்கு

பாகிஸ்தான் விவகாரங்களில் மட்டுமா? உங்கள் அறிவு இவ்வளவுதானா ராகுல்?


கல்லணைக்கு பிறகு கட்டிய அணைகள் மீது நம்பிக்கை இல்லை – இல.கணேசன்

எது? கல்லணைக்கு பின் கட்டபட்ட அணைகள் என்றால் மோடி குஜராத்தில் கட்டிய அணைகளுமா மிஸ்டர் கணேசன்?

வெள்ளையன் கட்டிய மேட்டுருமா இல்லை நேரு கட்டிய பக்ரா நங்கலா?

மனிதர் அவர்போக்கில் சொல்லிவிட்டார்

இனி மலையாளிகள் இவர் முல்லை பெரியாரை சொல்லிவிட்டார் என கிளம்புவார்கள்

வாயில் சனி இருப்பதும் , வாயினை கொடுத்து சிக்கி கொள்பவர்களும் பாஜகவில்தான் இருக்கின்றார்கள்


ஏம்பா உபிஸ், சவுக்கு சங்கர் Shankar A ஆதாரத்தோடு உங்கள் தளபதியினையும் திமுகவினையும் அதன் அல்லக்கைகளையும் உரித்து தொங்கவிட்டு கொண்டிருக்கின்றார்

அதெல்லாம் பார்த்துவிட்டு பால்டாயில் குடிக்காமலா இருக்கின்றீர்கள்? நீங்கள்தான் மானமிக்கவர்கள் ஆயிற்றே

முகநூல் பூராவும் திமுகவுக்கு நாங்கள்தான் காவல் என சொன்னவனெல்லாம் எங்கே தொலைந்தீர்கள்??

எவனாவது அவருக்கு மீம்ஸ் போட்டீர்கள்? எவனாவது அங்கு கம்பு சுத்தினீர்கள்?

சவுக்கு சங்கர் என்றால் அப்படியே பம்மிவிடுவீர்களா? நாங்கள் எல்லாம் இளக்காரமா?

இனி இந்த பக்கம் எவனாவது திமுகன்னு வந்திங்கண்ணா, அப்புறம் இருக்கு..


 

முருகபெருமானோடு கலந்துவிட்ட கிருபானந்த வாரியாருக்கு அஞ்சலிகள்

Image may contain: 1 person, smiling, close-up

தமிழ்கடவுள் முருகன், அந்த முருகனுக்கு ஏகபட்ட அடியவர்களும் புலவர்களும் இங்கு இருந்தார்கள்,, அவ்வையார், அருணகிரி நாதர் என பலர் இருந்தார்கள். அவர்களை எல்லாம் நாம் கண்டதில்லை

ஆனால் இவர்களை எல்லாம் நாம் வாழும் காலத்தில் ஒரு உருவத்தில் மொத்தமாக கண்டோம் என்றால் அது கிருபானந்த வாரியார்

பிறவி ஞானி. பக்தி அவர் ரத்தத்தில் இயல்பாக வந்தது. முருகன் அவர் கருவில் இருக்கும்பொழுதே அவரை ஆட்கொண்டான்

அது அவர் வளர வளர வளர்ந்தது, 12 வயதிலே ஆயிரகணக்கான பாடல்களை மனப்பாடம் செய்திருந்தார், 16 வயதினிலே அவர் தனியாக உபன்யாசமும், மத விளக்க உரையும் கொடுக்கும் அளவு அவருக்கு ஞானம் மிகுந்திருந்தது

நிச்சயம் அகில இந்திய அளவு, விவேகானந்தர் அளவு வந்திருக்கவேண்டிய மகான் அவர், ஆனால் முருகன் ஆலயம் நிரம்பிய தமிழகத்திலே தன்னை நிறுத்திகொண்டார்

அவர் காலம் தமிழ்நாட்டில் நாத்திக அலை சுனாமியாய் பொங்கிய காலம், நாத்திக கூட்டம் ஒரு மதவாதி விடாமல் கரித்து கொட்டி கருப்பு சட்டையும் கொடியுமாக வலம் வந்த காலம்

ஆனால் அவர்களுக்கும் உள்ளூர கிருபானந்தவாரி மேல் மதிப்பு இருந்தது, கிருபானந்தவாரியும் கூடுமானவரை அவர்களின் மோதல் போக்கினை பெருந்தன்மையாக தவிர்த்தே வந்தார்

இந்துமதத்தின் கொள்கைகள், உபநிஷத்துகள் உணர கஷ்டம் எனும் நிலையில், பாமர மக்கள் அதை புரிந்து கொள்ளும் வகையில் மிக எளிய தமிழில் சொன்னவர் அவர்

எத்தனையோ இதழ்களை நடத்தினார், ஏராளமான புத்தகங்களையும் எழுதினார்

சாந்தமான முகம் , பார்த்தால் வணங்கதக்க தோற்றம், அமைதியான மொழி, அழகு தமிழ், வாய்திறந்தால் எம்பெருமான் என தொடங்கும் அந்த கீர்த்தி எல்லாம் இனி யாருக்கும் வாய்க்காதவை

எந்த வாதத்திலும் அவரை வெல்ல முடியாது , எந்த சபையிலும் அவர் தோற்றதுமில்லை

சங்க காலத்திலிருந்து வந்த ஆழ்வார்கள், அடியார்கள், புலவர்கள் வரிசையில் நாம் கண்ட மாபெரும் மனிதர் கிருபானந்தவாரி

அதில் சந்தேகமே இல்லை

அந்த அற்புதமான அமைதியான அர்த்தமுள்ள ஆன்மீக சொற்பொழிவினை இனி கொடுக்க யாருமில்லை

முருகன் , ராமாயணம், பாரதம் என இந்து மத பாரம்பரியங்களை அவர் விளக்கினால் பசியின்றி தூக்கமின்றி கேட்டுகொண்டே இருக்கலாம், அவ்வளவு உருக்கமும் அழகும் வாய்ந்த சொற்கள் அவை

இன்று அவர் இல்லாவிட்டாலும் அவரின் பெரும் உழைப்பும் அவரின் பேச்சும், எழுத்தும் என்றும் ஆன்மீக உலகில் நிற்கும், நிலைக்கும்

சாட்சாத் முருகபெருமான் அவர் நாவில் இருந்து தமிழ் கொடுத்தான் என்பதை பல இடங்களில் காண முடிந்தது

இந்த நூற்றாண்டின் மிக சிறந்த தமிழறிஞர்களில் அவரும் ஒருவர், கண்ணில் ஒற்ற கூடிய அழகு தமிழ் அது

ஆனால் தமிழ் என்பது தமிழக நாத்திகர்களின் சொத்து அவர்கள் வளர்த்ததே தமிழ் எனும் ஒருவித குருட்டு நம்பிக்கையில் ஆன்மீகவாதியான கிருபானந்தவாரியின் அழகு தமிழ் வெளிதெரியாமல் ஆக்கபட்டது

இன்று அவரின் பிறந்த நாள், அந்த ஆன்மீக பெரியவருகு பக்தி அஞ்சலிகள்

இந்துமதத்தின் சிறப்புக்களை, பெருந்தன்மையினை பலாச்சுளையினை தேனில் நனைத்து இனிக்க இனிக்க கொடுத்தவர் அவர்.

முருகபெருமானோடு கலந்துவிட்ட அந்த பக்தனுக்கு மீண்டும் அஞ்சலிகள்

(எந்த மாபெரும் மனிதனும் சில இடங்களில் சறுக்குவார்கள், சிவனே வரம் கொடுத்துவிட்டு ஓடி ஒளிந்த உலகமிது

அப்படி ராமசந்திரனுக்கு “பொன்மன செம்மல்” என்ற பட்டம் கொடுத்தையும், நாஞ்சில் சம்பத்துக்கு “ஞான சிறுவன்” என்ற பட்டத்தை சிறுவயதில் கொடுத்ததையும் தவிர அவர்மேல் ஒரு சர்ச்சையும் சொல்ல முடியாது

அப்படி பட்டம் கொடுத்ததற்காக நிச்சயம் அவர் பின்னாளில் முருகனிடம் மன்னிப்பு கேட்டிருப்பார் )

இனிய ஓண அஷம்சுக்கள்

Image may contain: 1 person

அன்றொரு காலத்தில் முந்தைய தமிழர் நாடான‌ சேரநன்னாட்டினை ஆண்டுகொண்டிருந்தான் பெரிய முப்பாட்டன் மகாபலி.

ஆட்சி என்றால் அப்படி ஒரு அற்புதமான ஆட்சியினை கொடுத்தான் என்கிறது புராண வரலாறு. நாட்டில் எங்கும் அமைதி, வளம், செழிப்பு அதற்கும் மேல் நோய் நொடி என்பது ஒரு நொடி கூட இல்லை

வெள்ளம் எல்லாம் வரவே இல்லையாம், வந்தாலும் உதவி தாருங்கள் என்ற நிலை எல்லாம் இல்லவே இல்லையாம்

எல்லோருக்கும் எல்லாம் இருந்துவிட்டால் நாட்டில் குழப்பம் ஏது?

மன்னன் மாவீரனும் கூட இந்த லோகம், கீழோலகம், மேலோகம் என எல்லா உலகினையும் வென்று ஆண்டுகொண்டிருந்தான். ஆட்சி என்றால் பொற்கால ஆட்சி

ஆனால் மன்னனுக்கு சிக்கல் பெரிய இடத்து சண்டையில் வந்தது, பெரிய இடம் என்றால் தேவர்கள் அசுரர்கள். இதில் மாமன்னன் மகாபலியின் கரம் அசுரர்கள் பக்கம் இருந்தது, அசுர குரு சுக்கிராச்சாரியாரே அவனுக்கும் ராஜகுரு

மகாபலி சக்கரவர்த்தி எல்லா கேரள மக்களையும் போல பெரும் விஷ்ணுபக்தன். மலையாளம் அப்படித்தான், இன்றைய பத்மநாப சுவாமி கோயிலின் தங்க புதையலே அதற்கு சாட்சி

தோல்வி மேல் தோல்வி பெற்ற தேவர்கள், அவர்களின் புகலிடம் விஷ்ணுவிடம் சென்று அழுதார்கள். காரணம் மகாபலி சக்கரவர்த்தி அசுரர்களின் பெரும் பலம். அவனை அடக்காமல் தேவர்குல வெற்றி சாத்தியமில்லை

கர்ணனை போல தவறான இடத்தில் இருந்தவன் நல்லவன் மகாபலி

விஷ்ணுவும் மகாபலியினை அடக்கினால் அசுரர்கள் வீழ்வார்கள் என கணித்து அவனை விரட்ட சித்தமானார்

மிக குள்ள உருவில் வந்தார், எப்பொழுதுமே ஒருவனின் வீக் பாயிண்ட் பார்த்து அடிப்பதில் விஷ்ணு கெட்டிக்காரர். மகாபலியின் பலவீனம் அவனது கொடை மனம் கர்ணனை போல‌, எதனை கேட்டாலும் மறுக்க மாட்டார்.

அவனிடம் மூன்றே மூன்று அடி நிலம் வேண்டும் என்றார், அவனும் ஏனய்யா 3 அடி நிலம் வைத்து என்ன செய்வீர்? என கேட்கவில்லை, தவமிருப்பார் போலும் என நினைத்து அவ்வளவுதானா என தரதயாரானன்.

ஆனால் சுக்கிரச்சாரியாருக்கு வந்திருப்பவர் யார் என் தெரிந்து தடுத்தார், ஆனால் அன்னாளைய ஆச்சாரப்படி கமண்டல நீர் வார்த்து தானம் தர எழும்பினான் மகாவலி

ஆனால் மகாபலி அழிந்தால் அசுரகுலம் அழியும் என எண்ணிய சுக்கிராச்சாரி வண்டாக மாறி கண்டலத்தை அடைத்து கன்னட வாட்டாள் நாகராஜ் போல நீர் வராமல் அழிச்சாட்டியம் செய்தார் .

ஆனால் குச்சியால் குத்தி வண்டை விரட்டிய வாமணன் விரும்பிய வரம் அடைந்தார்

அவ்வளவுதான் நொடிபொழுதில் அணுகுண்டு வெடித்துகிளம்பும் பெரும் புகையாய் விஸ்வரூபமெடுத்தார் பெருமான், ஒரே அடியில் வானை அளந்தார், இன்னொரு அடியில் பூமி அளந்தார் மூன்றாவது அடி வைக்க இடமில்லை, மன்னா எங்கே உன் வாக்கு என்றார்?

அவனும் கொஞ்சம் சிந்தித்து, பெருமாளே பாதாள உலகை அளந்துகொள் என சொன்னால் முடிந்தது விஷயம், ஆனால் விஷ்ணு பக்தன் தன் கடவுளை பார்த்த மகிழ்வில் தன் தலையினை மிதிக்க கொடுத்தான்

அதோடு அவனை பாதாளம் தாழ்த்தி தேவர்களை நோக்கி புன்னகை பூத்தார் வைகுண்ட நாயகன், ஆனாலும் அவன் மீது அவருக்கொரு பரிவு இருந்தது, அவன் இருந்த இடம் தவறே அன்றி அவன் மகா நல்லவன், அவனிடம் ஒரு வரம் கேள் என்றார்

கேட்டான் மாமன்னன் மகாபலி, அவனது பெரும் குணமும், மணமும் அங்கேதான் விளங்கிற்று

தனக்காக அவன் கேட்கவில்லை, அசுரர்ககாக கேட்கவில்லை, தன் நாட்டு மக்களுக்காக கேட்டான், இதுதான் நல்ல தலைவனுக்கு அடையாள.

எம் மக்கள் ஒருகுறையும் இன்றி வாழவேண்டும், வருடா வருடம் ஆவணி திருவோண நட்சத்திரத்தன்று நான் வந்து பார்க்கவேண்டும், அவர்கள் வாழ்வாங்கு வாழ்வதை கண்டு மகிழ வேண்டும் என்றான்

அவனது உயர்ந்த உள்ளபடியே அவனுக்கு வரமளித்தார் பகவான், அப்படி அவன் வருடம் ஒருமுறை கேரளம் வந்து தன் மக்களை இல்லம் தோறும் சந்திக்கின்றான் என்பது அவர்கள் நம்பிக்கை

அவனை வரவேற்க அத்திப்பு கோலமிடுவார்கள், புத்தாடை அணிவார்கள், மகிழ்ச்சியினை காட்ட படகு ஓட்டுவார்கள், பொன்னூஞ்சல் ஆடுவார்கள், அவனும் மகிழ்ந்து பாதாளம் திரும்புகின்றான்

அதாவது தன் மக்கள் வாழ்வாங்கு வாழ்வதில் அவனுக்கொரு ஆனந்தம், இந்நிகவுதான அவர்களின் ஓணம் பண்டிகை, நெடுங்காலமாய் தொடரும் விழா

அவன் நல்ல அரசன், ஆனால் அசுவமேத யாகத்தின் போது தலைகணத்தில் செருக்கில் ஆடினான், விஷ்ணுவந்து தலையிலே மிதித்தார் என்றொரு கோணமும் உண்டு

திராவிட புரட்சி அந்நாளைய திராவிட பகுதியான கேரளாவினை தொட்டபொழுது வாமணன் ஆரியன், மகாபலி திராவிடன் தந்திரமாக ஆரியர்கள் திராவிடனை அழித்தனர். அதனால் இதனை கொண்டாட கூடாது என கோஷங்கள் எழுந்தன.

பகுத்தறிவு இப்படியெல்லாம் அங்கும் விதைக்கபட்டது ஆனால் பலனில்லை

மலையாளிகளுக்கு எதை ஆதரிக்க வேண்டும் எதை எதிர்க்க வேண்டும் என மிக சரியாக தெரியும். தேசியத்தில் இருப்பார்கள் மாநில கட்சி நடத்தமாட்டார்கள்

ஆனால் மாநில உரிமையினையும் கலாச்சாரத்தையும் அட்டகாசமாக காப்பார்கள்

அதே குள்ள வாமணனுக்கு அங்கு கோவில் உண்டு ஆனால் யாராவது மகாபலியினை தொட்டால் அவர்களுக்கு கோபம் சீறும்

மகாபலி கொடுர மன்னன் அதனால் வாமணன் கொன்றான், அவன் செத்ததை மக்கள் கொண்டாடுகின்றார்கள் என்றெல்லாம் கதைகள் திரிக்கபட்டன அதுவும் அங்கு பலனற்று போயின.

திமுகவின் திடீர் நண்பராகிவிட்ட அமித்ஷா இடையில் வாமண ஜெயந்தி என சொல்லிபார்த்தார் கண்டித்தனர் மலையாளிகள், அதன் பின் அவர் கேரளா செல்லும்பொழுது சன்னிலியோனை காண கூடி அவரை தந்திரமாக பழிவாங்கினர் மலையாளிகள்.

இப்படி மலையாளிகள் அந்த திரிபுகளை எல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யாமல் தலைமுறை தலைமுறையாக கொண்டாடி மகிழ்கின்றனர் மகிழட்டும்

மகாபலியினை நினைக்கும் பொழுதெல்லாம் மகாபாரத கர்ணனே நினைவுக்கு வருவான். இருவரும் மகா நல்லவர்கள், கொடையாளிகள், ஆனால் இருந்த இடம் தவறு

நண்பர்களை விட்டுகொடுக்காமல் இறுதிவரை நட்பில் நின்றவர்கள், கொடை கொடுத்தே தங்கள் முடிவினை தேடியவர்கள், இருவருமே யாருக்கும் கிடைக்கா விஸ்வரூப தரிசனத்தை கண்ணார கண்ட பேறு பெற்றவர்கள்.

இன்று ஓணம் பண்டிகை

அக்கால ஆரியபட்டா முதல் இந்நாளைய ஏவுகனை விஞ்ஞானி டெய்சி தாமஸ் வரை

சிறந்த ஓவியர்களில் ரவிவர்மா வரை.

அக்கால பத்மினி முதல் இன்றைய மஞ்சிமா மோகன் வரை, ஜேசுதாஸ் , ஜென்சி முதல் சுவர்ணலதா வரை, செம்மீன் முதல் பிரேமம் வரை அவர்கள் கொடுத்த கலைஞர்கள் வரிசை மிக பெரிது, அது இருக்கட்டும் சொன்னால் சொல்லிகொண்டே செல்லலாம்.

மலையாள மக்களுக்கு எல்லோரும் ஓண வாழ்த்து சொல்லும் நேரம், நாமும் சொல்லிகொள்வோம் இப்படியாக‌

இறந்துவிட்ட பத்மினி சகோதரிகள், கல்பனா, நடிகை சுஜாதாவினை மட்டும் விட்டுவிட்டு செம்மீன் ஷீலா முதல், தீபா (அவர்தான் முந்தானை முடிச்சு டீச்சர்) அம்பிகா, ரேகா, ரேவதி என அந்த வரிசையில் லட்சுமி மேனன் வரை, அல்ல அல்ல மஞ்சுமா மோகன் வரை எல்லோருக்கும் ஓணம் வாழ்த்துக்களை சொல்லிக்கோள்வோம், அப்படியே சரிதா நாயருக்கும்,

அதிலென்ன வஞ்சனை ஷகிலாவிற்கும் ஒரு வாழ்த்து நமக்கெல்லாம் மலையாளம் கற்றுகொடுத்தவர் அல்லவா.

வாருங்கள் எல்லோருக்கும் சேர்த்து சொல்லிகொள்ளலாம்

இனிய ஓண அஷ்ம்சுகள்

(குஷ்பூ மலையாளி இல்லை என்பதால் இவ்வாழ்த்து சாத்தியபடாது)

(நயனுக்கு மட்டும் வாழ்த்து சொல்லும் எண்ணமில்லை, வேண்டுமானால் நித்யா மேனனுக்கு சொல்லி கொள்ளலாம்)

நண்பர் Babu Rao போன்றோர் நயந்தாரா படத்தின் முன்பு நின்று இன்று முழுக்க மந்திரம் போல அஷம்சுகள் சொல்லிகொண்டே இருப்பார்கள்.

நெல்லுக்கு பாயும் நீர் புல்லுக்கு பாய்வது போல, அமைச்சர்களுக்கு கிடைக்கும் லஞ்சம் பி.ஏக்களுக்கும் பாய்வது போல இவர்களுக்கு சொல்லும் வாழ்த்து இன்ன பிற மலையாளிகளுக்கும் கொஞ்சம் வாழ்த்துக்கள் போய் சேரட்டும், அவர்களுக்கு அவ்வளவு போதும்.

அந்த வாமண அவதாரம் அப்படி பிரசித்தி பெற்றது, காரணம் யுத்தத்தால் வெல்லமுடியா மாவீரனை குள்ளன் வடிவில் தானம் கேட்டு வந்து பகவான் வீழ்த்திய வரலாறு

இன்றும் கேரளாவில் திரிகராவில் அவன் அரண்மனைக்கு மேல்தான் வாமணன் கோயில் உண்டு என்கின்றார்கள். ஆச்சரியமாக மகாபலி கேட்டுகொண்டதன் பேரில் கேரளா கடவுளின் சொந்த மாநிலமாகவும் ஆயிற்று.

இயற்கை செழுமை, அழகு, கல்வி இன்னபிற விஷயங்களில் அது அப்படித்தான் தெரிகின்றது. அரேபிய எண்ணெய் வளங்களிலும் குறிப்பிடதக்க பங்கு அவர்களுக்கு வருகின்றது,

பூமிக்குள் புதைத்த மகாபலி அரேபியாவில் பெட்ரோல் பணத்தை மலையாளிகளுக்கு வாரி வழங்குகின்றாரோ என்னமோ?, இருக்கலாம்

இது புராதன கால வாமணன் வரலாறு

தமிழகத்தில் ஒரு வாமண அவதாரம் 93 ஆண்டுகளுக்கு முன்பு உதித்தது, 1950களில் அது விஸ்வரூபமெடுத்தது தமிழகத்திடம் மூன்று அடி கேட்டது.

ஒரு காலால் தமிழை அதன் வசன உலகை, வசன எழுத்து உலகை அளந்தது.

இன்னொரு காலால் அரசியல் உலகினை அளந்தது

மூன்றாவது காலை தமிழகத்தை மகாபலிபோல நன்றாக ஆண்டு கொண்டிருந்த காமராஜர் மீது வைத்தது

காரணம் காமராஜர் நல்லவர்தான் ஆனால் இருந்த இடம் காங்கிரஸ், அது சரியில்லை என அது உலகிற்கு சமாதானம் சொன்னது.

ஆனால் காமராஜர் வரம் ஏதும் கேட்டதாக தெரியவில்லை அவர் போக்கில் சென்றுவிட்டார்

இன்று அந்த வாமண அவதாரமும் அது விஸ்வரூபமாய் வந்து உருவாக்கிய மாயைகளும் தமிழகத்தை ஆண்டுகொண்டிருக்கின்றன.

எப்படிபட்ட ஆட்சி என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை, கலியுக அவதார ஆட்சிகள் இப்படித்தான் இருக்கும்

ஆனால் நிச்சயமாக அவர் வாமணர். மிக குள்ளமாய் வந்து கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபமெடுத்து தமிழகத்தின் எல்லா திசைகளையும் தன் காலால் அளந்துவிட்ட வாமணன் அவர்.

தமிழக கலியுக வாமண அவதாரம் எடுத்திருக்கும் விஸ்வரூபம் அப்படியானது, ஆனால் இந்த விஸ்வரூபத்தை தாண்டி இன்னொரு மாற்றம் இங்கே இப்போதைக்கு சாத்தியமில்லை.

மக்களோ தமிழ்நாட்டு மகாபலி திரும்பவும் வரமாட்டானா என காத்துகொண்டே இருக்கின்றனர்.

வரலாற்றில் மகாபலி, கர்ணன், காமராஜர் எல்லாம் ஒரே வரிசையே, வஞ்சத்தால் வீழ்த்தபட்ட மகா நல்ல ஆட்சியாளர்கள்.

மலையாளிகளுக்கு அவர்களின் மகாபலி ஆண்டுக்கொருமுறை வருகின்றான்

தமிழ்நாட்டு மகாபலி இனி பிறந்துவந்தால்தான் உண்டு,விடுங்கள் தமிழக தலைவிதி அப்படி

என்ன சொல்ல? அதே தான்

பத்மினி, சுஜாதா, கல்பனா தவிர நயன் தாரா தவிர‌ எல்லா சேர நன்னாட்டு பெண்களுக்கும் இனிய ஓண அஷம்சுக்கள்

(முன்பெல்லாம் தன் ஆட்சி கலைக்கபடும் பொழுது மகாபலியின் பலமும், நல்லாட்சியும் எப்படி மேலிருப்பவர்களுக்கு பொறுக்கும் என மிக சரியான வசனத்தை சொல்வார் கலைஞர், அதுதான் கலைஞர்)