அமித்ஷா கலைஞருக்கு அஞ்சலி

அமித்ஷா கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வருவதில் பல வகையான கருத்துக்கள்

நாம் கண்டித்தது Go Back அமித்ஷா என முன்பு முழங்கியவர்களையன்றி வேறு யாரையுமல்ல‌

தேசிய கட்சிகள் ஒன்றும் எதிர்கட்சிகளோ, எதிர்களோ அல்ல. கொள்கைகள் வேறாயினும் எல்லோர் நோக்கமும் இந்தியா வளம்பெற வேண்டும் என்பது,

தமிழகம் ஒன்றும் இன்னொரு நாடு அல்ல, அதுவும் இந்திய மாநிலமே..

திமுக பல இக்கட்டான நிலைகளை கடந்திருக்கின்றது. இந்திரா காலத்தில் அது அவரோடு மல்லுகட்டிற்று, நடக்க கூடாத விஷயங்கள் நடந்தன‌

அதில் இந்திரா வலிய தேடிய சிக்கலும் உண்டு, திமுக தொண்டர்கள் அத்துமீறியதும் உண்டு

கலைஞர் நிதானமாக சொன்னார், “தமிழர்களின் உணர்ச்சிகளை இந்திரா புரிந்துகொண்டால் எல்லா சிக்கலும் சரியாகும்”

பின்னாளில் அதுதான் நடந்தது, தமிழகத்து உணர்ச்சிகளை புரிந்த இந்திரா கலைஞரோடே கூட்டணிக்கு வந்தார்

ஏய் கருணாநிதி உனக்கு மானமே இல்லையா? என சொன்னவர்களை பார்த்து அமைதியாய் கேட்டார் கலைஞர்

“ஏய்யா, அந்த அம்மாவும்தான் கூட்டணிக்கு வந்திருக்கின்றது, அவரிடம் ஏன் யாரும் இப்படி கேட்கவே மாட்டேன் என்கின்றீர்கள்?”

இதுதான் அரசியல், விட்டுகொடுப்பு இல்லாமல் அரசியல் என்பது உலகின் எந்த மூலையிலும் இல்லை

நாணல் போல் சில இடங்களில் வளைந்தால்தான் அரசியல் செய்ய முடியும்

அமித்ஷா என்ன? யார் வேண்டுமானாலும் வரட்டும், அஞ்சலி செலுத்தட்டும் , தமிழரின் உணர்வுகளை புரிந்துகொள்ளட்டும்

வளமான தமிழகமும், வலிமையான பாரதமும் அமையட்டும்

இம்மாதிரி நிலைகளுக்கு கலைஞர் அன்றே சொல்லிவிட்டுத்தான் சென்றார்

“உரிமைக்கு குரல் கொடுப்போம் , உறவுக்கு கை கொடுப்போம்” என்பது அது, அவர் அடிக்கடி சொன்ன விஷயம் அது

உறவுக்கு கை கொடுப்பதால் உரிமையினை விட்டுகொடுத்துவிட்டோம் என்றோ, உரிமைக்கு குரல் கொடுத்ததால் உறவு பாராட்டமாட்டோம் என்பதோ சரியாகாது

அதிமுக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக மட்டும் நிலையில், இல்லை அடக்கமே ஆகிவிட்ட நிலையில் திமுக கூட்டத்திற்கு பாஜக தலைவர் வரகூடாது என சொல்ல யாருக்கும் உரிமையும், தகுதியுமில்லை

நாளை மாநிலத்தில் திமுகவும், மத்தியில் பாஜகவும் வந்துவிட்டது என வைத்துகொண்டால் என்னாகும்?

இதே பாஜகவிடம்தான் தமிழக அரசின் பிரதிநிதியாக ஸ்டாலின் சென்று பேசத்தான் வேண்டும்

வெறுப்பு அரசியல் ஒழிக, அப்படியே அதிமுக செய்யும் காமெடி அரசியலும் ஒழிக‌

புதிய முயற்சிகள் நடக்கும்பொழுது வரவேற்கலாம், இந்நாட்டின் மிகபெரும் கட்சியின் தலைவர் , அசுரபலத்தோடு ஆளும் கட்சியின் தலைவர் கலைஞரின் அஞ்சலிக்கு வருவது பெருமைக்குரிய விஷயம்

வரட்டும், அவர் தமிழரின் உணர்வினை புரிந்து கொள்ளட்டும்

உறவுக்கு கை கொடுக்க திமுக என்றும் தயங்கியதில்லை என்ற அதன் பாரம்பரியம் தொடரட்டும், தொடரத்தான் வேண்டும்

போட்டியின்றி தி.மு.க தலைவராகிறார் ஸ்டாலின்


போட்டியின்றி தி.மு.க தலைவராகிறார் ஸ்டாலின் – எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை : செய்தி

எந்த பெரும் கட்சியும் அதன் இரும்பு தலைவன் இறந்தபின் தடுமாறும் , உடையும், சிதறும் அதன்பின் நிலைபெறும் சிலது காணாமலே போகும்

ஒரு கப்பல் அலையில் சிக்கி கொண்டு அது தடுமாறுவது போல் ஆடும், அதன் பின் சீரடையும்

திமுகவின் அத்தைகைய சிக்கல் அண்ணா விடைபெறும்பொழுது இருந்தது , இதில் பாடம் கற்றார் கலைஞர்

ராமசந்திரன் விடைபெற்ற பொழுது , ஜெயா விடைபெற்ற பொழுது அதிமுகவிலும் அதுவே நடந்தது

ஆனால் திமுக அப்படியான நெருக்கடிகளை சந்திக்காத அளவு ராஜதந்திர நகர்வுகளை செய்துவிட்டே கலைஞர் விடைபெற்றிருக்கின்றார், அட்டகாசமான நகர்வு இது

இனி திமுக தலைவர் ஸ்டாலின், அதாவது கலைஞருக்கு பின் திமுகவின் இரண்டாம் தலைவர், வாழ்த்துக்கள்

என்ன விமர்சனம் இருந்தாலும் தமிழகத்தில் நடக்கும் ஒரு மாதிரியான ஆட்சியினை அகற்றவும் நல்லாட்சி வழங்கவும் அவர் ஒருவரே நம்பிக்கை

நிச்சயம் ஜாதி, மதம், பிரிவினைவாதம் என ஆபத்துக்கள் இல்லாத, மாநில நலம் பேணும் ஆட்சியினை இப்போதைக்கு ஸ்டாலினை தவிர யாரும் கொடுக்க முடியாது

அதை சொல்லத்தான் வேண்டும், அதுதான் யதார்த்தம்

அவர் அதை செய்ய வாழ்த்துவோம், கலைஞர் விட்டுசென்ற பணிகளை அவர் தொடரட்டும்

அழகிரி தன் தந்தை மீது கொஞ்சமேனும் மரியாதையும் அன்பும் கொண்டவரென்றால் கட்சிக்கு இடைஞ்சல் செய்யாமல் இருப்பதே சரி

கட்சி இன்னும் சில நெருப்பாறுகளை கடந்து, கலைஞர் இல்லாவிட்டாலும் அதன் சிறப்பான பயணம் தொடரும் என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பொழுது அழகிரி எதிர்துருப்பு போடுவது அவர்மேல் எல்லோருக்கும் வெறுப்பினையே கொடுக்கும்

அழகிரி திமுகவின் நிலைத்தன்மையும், வெற்றியினையும் ஒரு தொண்டராக பொறுப்பினை உணர்ந்து அமைதி காத்தால் அவர் மேல் தானாக மரியாதை வரும்

பின்னர் கிடைக்க வேண்டிய மரியாதை தானாக கிடைக்கும்

அழகிரி சிந்திப்பது நல்லது

இதையும் மீறி அழகிரி ஏதும் முயற்சித்தால் ஜெ. தீபா அளவிற்கே செல்வாரே அன்றி ஒன்றும் செய்துவிட முடியாது


அழகிரி திமுகவிற்கு எதிராக ஊர்வலம் செல்ல போகின்றாராம், போகட்டும்

ஆனால் திமுகவிற்கு எதிரான ஊர்வலம் கலைஞர் சமாதியில் முடிந்தால் என்ன அர்த்தம்? திமுகவினை எதிர்த்துவிட்டு அவர் சமாதிக்கு செல்வது எதற்கு?

கலைஞரின் ஆன்மா திமுகவில்தான் வாழ்கின்றது

அதனால் அழகிரி உண்மையிலே திமுக எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினால் அது அருகிலிருக்கும் ராமசந்திரன் சமாதியிலோ, ஜெயா சமாதியிலோ முடியட்டும்

அதுதான் அர்த்தமுள்ள ஊர்வலம்


பூரண தமிழினம் என எதுவுமில்லவும் இல்லை.. எல்லாம் கலப்பு

ஒரு சர்ச்சை ஓடுகின்றது, தினமணி பத்திரிகை ஏதோ தமிழ்தேசியம் தொடர்பான கட்டுரையினை நிறுத்தி வைத்ததாகவும், அது இதோ என பலர் ஆங்காங்கே பதிவேற்றிகொண்டிருகின்றார்கள்

விஷயம் வேறு ஒன்றுமல்ல இந்திய தேசியம் என தினமணி பத்திரிகையின் கட்டுரைக்கு பதிலாக தமிழ் தேசியம் என எழுதி தமிழகம் இந்திய தேசிய அங்கமாக இல்லை என யாரோ பதிலுக்கு எழுதினார்களாம், தினமணி பிரசுரிக்கவில்லையாம்

இப்படி ஒரு சர்ச்சை ஓடினாலும் அவர்கள் சொல்ல வருவது தமிழகம் தனி தேசம், இந்தியாவொடு இருந்ததே அல்ல. இது கல்தோன்றி… மருதாணி தோன்றி.. என அதே பாட்டு

அதே கப்பல்படை, கபாட புரம் என அதே புலம்பல்

உலகில் அட்லாண்டிக் கண்டம் கூட மூழ்கித்தான் கிடக்கின்றது, அதற்காக கல் தோன்றா காலத்து முன் தோன்றிய குடி ஐரோப்பா என சொல்ல முடியுமா?

தமிழ்தேசியம் இருக்கட்டும், தமிழக என்றாவது ஒரே நாடாக இருந்ததா என்றால் இல்லை அது மூவேந்தர் ஆட்சி அது போக 7 வள்ளல்கள் ஆட்சி, அதிலும் ஏகபட்ட வள்ளல்கள்

தொண்டை நாடு, கொங்கு நாடு, நாஞ்சில் நாடு என ஏகபட்ட பிரிவுகள்

தமிழ் என்பது இப்படி பல அக்கால நாடுகளில் பேசபட்ட மொழி அவ்வளவுதான் விஷயம், மாறாக தமிழ்தேசியம் என கிளம்புவது இந்த ஈழ தந்திரமே அன்றி வேறல்ல‌

இத்தேசம் அன்றே முழு தேசமாகவே இருந்திருக்கின்றது தமிழர் கங்கைக்கு போவதும், அவர்கள் ராமேஸ்வரம் வருவதுமாக நல்ல புரிந்துணர்வு நாடு முழுக்க இருந்திருக்கின்றது

இங்கிருந்து கைலாயம் வரை பக்தர்கள் செல்வதும், அவர்கள் கன்னியாகுமரி வரை யாத்திரை வருவதும் இது ஒரே நாடு என்பத்தற்கான சான்றுகள்..

இன்றைய உலகில் ஒரே மொழியால் மட்டும் ஒற்றுமை வராது என கண் கூடாக காண்கின்றோம், அமெரிக்காவும் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் ஒரே மொழிதான், ஆங்கில தேசியம் என இணைந்தார்களா?

ஜெர்மன் மொழி ஜெர்மனி தவிர இன்னும் சில ஐரோப்பிய நாடுகளில் உண்டு ஜெர்மன் தேசியம் உண்டா?

வடகொரியா, தென் கொரியா கூட ஒரே மொழிதான்

சீனாவும் தைவானும் கூட ஒரே மொழிதான்

இவை எல்லாம் மொழிவாரி தேசியமா சொல்லிகொண்டிருக்கின்றான்

தமிழகம் போலவே தனித்த அடையாளம் கொண்ட இனங்கள் இந்தியாவில் உண்டு

மலையாளம், கன்னடம், ஒரிசா, பீகார், சீக்கியம் இன்னபிற மாநிலங்கள் எல்லாம் மொழி தேசியம் என கிளம்புமா? அப்படி ஒன்றை சொல்ல கூட செய்யாது

காரணம் அதற்கான சூழலோ இல்லை அவசியமோ இங்கு இல்லை, வரவும் வராது. அங்கெல்லாம் மாநில மொழிகள் அழிந்தும் விடவில்லை

ஆனால் தமிழகத்தில் மட்டும் தமிழ்தேசியம் என குதிப்பது ஒருவித போக்கு , இதன் பிண்ணணியில் இருப்பது ஈழத்து கும்பலும் உண்டு

தமிழகம் அன்றே பல துண்டுகளாகத்தான் இருந்தது, ஒரே மொழி பேசினார்களே தவிர 60 மைலுக்கு ஒரு ராஜா அவர்களுக்குள் சண்டை, வீரம், இத்யாதிகள் ஏன ஏராளம் நடந்திருக்கின்றது

இதில் பூரண தமிழினம் என எதுவுமில்லவும் இல்லை எல்லாம் கலப்பு

அதுவும் சிங்கள தமிழ், சேர அரேபிய , சோழ தெலுங்கு என ஏகபட்ட கலப்புகள்

அது போக நாயக்கர்கள் வந்தபின் இன்னும் கலப்பு

அப்படிபட்ட தமிழகத்தில் இருந்துகொண்டு தமிழ்தேசியம் அது இது என பேசுவது குழப்பம் ஏற்படுத்தும் செயலாகும்

அப்படியே தமிழ்தேசியம் வந்தாலும் அது சேர தேசியம், பாண்டிய தேசியம் என உடையத்தான் செய்யும்

தினமணி பத்திரிகை இம்மாதிரி கட்டுரைகளை நிறுத்தி இருப்பது வாழ்த்துகுரியது, வாழ்க தேசம்

உலகின் மூத்த மொழியானது தமிழ் என்பதில் இந்தியனாக பெருமை அடைகின்றேன் : மோடி

உலகின் மூத்த மொழியானது தமிழ் என்பதில் இந்தியனாக பெருமை அடைகின்றேன் : மோடி

முன்பெல்லாம் அகில இந்திய தலைவர்கள் மேல் ஒரு குற்றசாட்டு உண்டு, தமிழ்நாட்டை தமிழர் வரலாற்றை புறக்கணிக்கின்றார்கள் மண்மூட பார்கின்றார்கள் என ஏக இம்சைகள்

மோடி இப்பொழுதெல்லாம் அடிக்கடி தமிழ்நாட்டை மேற்கோள் காட்டுகின்றார்

சோழர் காலம், பாரதியார் அதை தொடர்ந்து உலகின் மூத்தமொழி என தமிழை ஒப்புகொள்ளுதல் என தமிழகத்தோடு நெருங்குகின்றார்

இப்படி நல்ல விஷயங்களை அவர் தொடர வாழ்த்துக்கள்


வழக்கமான காங்கிரஸ் கோஷ்டி தகறாறு கொஞ்சகாலம் அமைதியாக இருந்தது அல்லது இருப்பது போல தெரிந்தது

இப்பொழுது மறுபடியும் பற்றிகொண்டுவிட்டது

இந்த திருநாவுக்கரசர் ஏதோ சொல்ல போக இளங்கோவன் தன் வழக்கமான ஸ்டைலில் “திருநாவுக்கரசு தன் பழைய கட்சியான பாஜக பக்கம் சென்றால் அவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு” என சொல்லிவிட்டார்

பதிலிக்கு திருநாவுக்கரசர் “என் எதிர்காலம் பற்றி உமக்கென்ன கவலை, உன் எதிர்காலத்தை பாரும்” என்கின்றார்

ஆக காங்கிரஸில் இருந்தால் இருவருக்குமே எதிர்காலமில்லை என்பது இருவருக்குமே விளங்கிற்று போல…


ரக்‌ஷா பந்தன்

Image may contain: one or more people, people sitting and close-up

எந்த நாட்டிலும் இல்லாத சிறப்பான சில பண்டிகைகள் இந்தியாவில் உண்டு அதில் ஒன்று ரக்ச பந்தன்

ரக்ச என்றால் காப்பாற்றுதல் என்று பொருள், ரட்சித்தல் என்பதெல்லாம் இந்த பொருள். பந்தன் என்றால் உறவு என்ற பொருளில் வரும், மொத்தத்தில் பாதுகாக்கும் உறவு எனபொருள்

இது மகாபாரத காலத்திலே தொடங்கிற்று, பகவான் கண்ணனின் கையில் வழிந்த ரத்த காயத்தை தன் சேலையினை கிழித்து பாஞ்சாலி கட்டியதாகவும் , அதனால் மனம் இறங்கிய கண்ணன் அவளை தங்கையாக பாவித்து எக்காலமும் உன்னை காப்பேன் என உறுதி வழங்கியதாகவும் அதுதான் முதல் ரக்ச பந்தன் என அழைக்கபடுகின்றது

பொதுவாக கையில் காப்போ, நூலோ கட்டி சில விஷயங்களை உறுதிபடுத்துதல் இந்திய மரபு. இன்றும் ஆலயங்களில் வழங்கபடும் புனித நூல், அந்த தெய்வம் நம்மோடு இருக்கின்றது என்ற நம்பிக்கையினை கொடுத்து கொண்டே இருக்கும் என்பது உறுதியான நம்பிக்கை

இது இந்திய மரபு, நிச்சயம் இந்திய மரபு

சிலர் சொல்வது போல இது வட இந்திய பண்டிகை என்பதோ, தமிழருக்கு தொடர்பில்லா பண்டிகை என்பது சரியானதல்ல‌

தமிழக கோவில் கொடைகளில் காப்பு கயிறு கட்டுவார்கள் அல்லவா அப்படி ஒரு பாரம்பரியம்

இது வரலாறு முழுக்க காணபடுகின்றது, அலெக்ஸாண்டர் போரசுடன் மோதும் பொழுது, பொரஸுக்கு ரக்ச பந்தன் கயிறு அனுப்பினாள் அலெக்ஸாண்டர் மனைவி ரக்சனா, அதாவது போரஸை அண்ணாக பாவித்து தன் மாங்கல்யத்தை காக்க வேண்டினாள் என்பது செவிவழி செய்தி

போரில் அலெக்ஸாண்டர் கொல்லபடவில்லை என்பதும் கவனிக்கதக்கது

இதே கலாச்சாரம் மொகலாயர் அரசு வரை நீடித்திருக்கின்றது, பல இடங்களில் உதவி வேண்டும் ராணியர் பக்கத்து அரசனுக்கு ராக்கி கயிறு அனுப்பிய காட்சிகள் எல்லாம் உண்டு

இன்று இந்துக்களின் அந்த ரக்ச பந்தன் விழா

கண்ணனுக்கு பாஞ்சாலி கயிறு கட்டினாளா இல்லையா என்பதல்ல விஷயம், தாயினையும் மனைவியினையும் தவிர மற்ற பெண்கள் உனக்கு சகோதரிகள் என்ற பெரும் தத்துவம் அதில் அடங்கி இருக்கின்றது

கயிறு கட்டியதன் மூலம் அண்ணன்கள் மத்தியில் வாழ்கின்றோம் என்ற பெரும் பாதுகாப்பு உணர்வு அக்கால பெண்களுக்கு இருந்திருக்கின்றது

தனக்கு கயிறு கட்டிவிட்டாள், அவள் தங்கை அவளை கண்போல் காக்க வேண்டுமென்ற கடப்பாடு அந்த ஆண்கள் மேல் சுமத்தபடுகின்றது

அந்த ஆணுக்கு அவள் தங்கை ஆகின்றாள், அவளின் அண்ணனாக அவனுக்கு பொறுப்பு கூடுகின்றது, அவளை காக்கும் கடப்பாட்டினை அக்கயிறு நினைவூட்டிகொண்டே இருக்கின்றது

எவ்வளவு அருமையான விழா?, எவ்வளவு அருமையான சமூக ஏற்பாடுகள்

இப்படி ஒரு விழா எந்த வேறு நாட்டிலாவது உண்டா என்றால் நிச்சயம் இல்லை.

இந்துக்களின் சிந்தனை அக்காலத்திலே அவ்வளவு உயர்ந்ததாய் பெருந்தன்மைமிக்கதாய் இருந்திருக்கின்றது

அருமை பாரதம் தாய் , மனைவி தவிர எல்லா பெண்களும் உன் சகோதரிகளே என உலகிற்கு சொன்ன ஒப்பற்ற தத்துவத்தின் வடிவம் இவ்விழா

இதனை பெருமையொடும் கர்வத்தொடும் கொண்டாடலாம்

இந்த கலாச்சாரங்களை எல்லாம் முறையாக பின்பற்றினாலே சமூகம் மிக அமைதியாக இருக்கும்.

இம்மாதிரி பெரும் தத்துவங்களை கொண்ட இந்தியாதான் , சில விரும்பதகாத சம்பவங்களால் அடிக்கடி உலகளவில் சர்ச்சையாகின்றது என்பதுதான் சோகம்

காரண்ம் இந்நாட்டின் உயர்ந்த தத்துவங்களும், மிக உன்னதமான பாரம்பரிய கலாச்சார விழாக்களும் அவற்றின் அர்த்தமும் புரியாத தலைமுறை உருவாகிற்று என்பதை தவிர சொல்ல ஒன்றுமில்லை

இவற்றை எல்லாம் மீட்டெடுத்தால் வருங்காலத்தில் மிக அமைதியான, பெண்கள் பாதுகாப்புமிக்க சமூகத்தை உருவாக்க முடியும்

Image may contain: 1 person, smiling, close-upஇந்துக்களின் பெரும் ஞான தத்துவம் இவ்விழா, சந்தேகமில்லை. இந்தியாவின் மிக பெரும் மாண்பினை உலகிற்கு சொல்லும் விழா

இதில் எவனாவது பகுத்தறிவு பேசினால் அவன் ஆட்டோ சங்கர் வகையறா என்பதன்றி வேறு முடிவுக்கு வரமுடியாது

மத விழாக்கள் என்பது வெறியூட்டுபவை அல்ல, ஆழ சிந்தித்தால் அது சமூகத்தை நல்ல விதமாக பிணைக்கபட்ட சங்கிலிகள், ரக்ச பந்தன் அப்படி ஒரு விழா

பகுத்தறிவு என்ற பெயரில் இந்த சங்கிலியினை உடைத்தால் எதற்கும் கட்டுபடாத , அடங்காபிடாரியான தலைமுறையே உருவாகும்

அப்படி ஆகிவிடாமல் நல்ல தலைமுறையினை உருவாக்க பழங்கால நல்ல பாரம்பரியங்களை பின்பற்றுதலோ அவற்றை துணைக்கு அழைத்தலோ தவறே ஆகாது, தாராளமாக பின்பற்றலாம்

ரக்ச பந்தன் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள், நிச்சயம் மத எல்லையினை தாண்டி எல்லோரும் கொண்டாட வேண்டிய விழா

தலைவி குஷ்பு சகோதரி அல்ல, அல்லவே அல்ல‌

அவர் தெய்வ வரிசை என்பதால் அவர் நமக்கோ, சங்கம் அவருக்கோ ராக்கி கட்ட முடியாது என்பதை சங்கம் உலகிற்கு தெரிவிக்கின்றது

இன்று அன்னை தெரசா பிறந்தநாள்

Image may contain: one or more people and close-up

இன்று அன்னை தெரசா பிறந்தநாள், இப்பொழுது பதிவு எழுதியவுடன் சங்கிளுடன் மல்லுகட்ட வேண்டும்

அன்னையின் தொன்டை பற்றி சொன்னால் “ஏ சதிகாரா, நீ கிறிஸ்தவன் அவள் கிறிஸ்தவச்சி, மதமாற்றிய கிறிஸ்தவச்சி” என சங்கிகள் பொங்குவார்கள்

திமுகவினருடன் சண்டை முடிந்த நிலையில் இன்னும் சில மணிதுளிகளில் சங்கிகளுடன் அடுத்த யுத்தம் தொடரும்

இன்று அவர்களோடு மல்லுகட்டு என எம்பெருமான் இட்டமுடன் எழுதியிருக்கின்றான்


கிறிஸ்து இயேசு எப்படி போதித்தார்?,

“ஒடுக்கபட்டோருக்கும், அனாதைகளுக்கும், ஆதரவில்லா அபலைகளுக்கும், நோயுற்றோருக்கும்வாழ வழியற்றவருக்கும் வாழ்வளிக்கும் பொருட்டு நானே வந்தேன்” அப்படித்தான் போதித்தார்.

அப்படி அவர் ஏழையாக வந்தார், சமூகத்தால் விரட்டபட்டோருடன் வாழ்ந்தார், நோயாளிகள், பாவிகள் என ஒதுக்கபட்டோர், புறக்கணிக்கபட்டோர் என யாருடனும் பழக அவருக்கு தயக்கமில்லை.

அவர்களுக்கு எது தேவையோ அதனில் உதவினார். பசி,நோய் என அவர்கள் பிணியினை விரட்டினார்.

ஒரு யூதன் பாவிகள் எனப்படும் ஏழைகளுடன் இப்படி உறவாடுவதா எனும் வன்மத்தில் அவர் அடித்துகொல்லப்ட்டார், ஒரு கவுரவ கொலை அது.

சாகும் பொழுதும் அவர் ஒருவனுக்கு பார்வை அளித்துதான் செத்தார். அவரின் வாழ்வு அதனைத்தான் சொல்கின்றது

அப்படிபட்ட கிறிஸ்துவின் உண்மையான சீடர்கள், அவர் போலத்தான் வாழ்வார்கள். அடுத்தவருக்காக உழைத்து கொண்டே இருப்பார்கள், தன்னலம் என்பது சிறிதும் இருக்காது. எங்கெல்லாம் உதவிபெற மக்கள் கையேந்திகொண்டிருக்கின்றார்களோ அங்கெல்லாம் அவர்கள் இருப்பார்கள்.

பைபிளில் இயேசு சொல்கிறார் “அந்த கைவிடபட்டவரோரில் இருப்பதெல்லாம் நானே, அவர்களுக்கு செய்வதை எல்லாம் எனக்கே செய்கின்றீர்கள்”.

நல்ல ஊழியர்கள் அதனைத்தான் செய்தார்கள், அவரில் ஒருவர்தான் நாம் கண்ணால் கண்ட மானிட தெய்வம்
அன்னை தெரசா

அவர் அல்பேனிய பிறப்பு, துறவற சபையினில் சேர்ந்து ஒரு ஆசிரியையாக இந்தியா வந்தார், ஆனால் பள்ளிக்கு செல்லும் வழியில் சாலையோரம் கிடந்த நோயாளிகள், முதியவர்கள், பசியாளர்களை தாண்டி செல்லும் பொழுது அம்மக்களின் தேவைகளில் இயேசுவினை கண்டார், அவர்களுக்கு உழைப்பதே இயேசுவிற்கு செய்யும் பணி என சுய தர்மத்தை வகுத்துகொண்டார்.

மேலிடம் சீறியது, ஒழுங்காக பாடம் மட்டும் நடத்து என்றது. அவர் அசரவில்லை மாறாக சபையினை விட்டே வெளியேறினார். மாற்று உடை இல்லை, தங்க இடமில்லை, அடுத்தவேளைக்கு உத்திரவாதமில்லை கையில் இருந்ததோ 5 ரூபாய், அதோடு கிளம்பினார்

அந்த நோயாளிகளை அரவணைத்தார், நல்ல செய்தி சொன்னார். அதுதான் நற்செய்தி அதுதான் சமஸ்கிருதத்தில் சுவிஷேசம். நான் இருக்கின்றேன் உன் துயரம் போக்குவேன் என தாழகிடப்பவனிடம் சொல்வதே நற்செய்தி.

மாறாக செத்துகிடப்பவனிடம் ஞானஸ்நானம் வாங்கு, கிறிஸ்தவனாக மாறு என சொல்வது அப்பட்டமான வியாபாரம், அது நற்செய்தி அல்ல மாறாக பேரம்

முதலில் ஓட அடித்தார்கள், அவமான படுத்தினார்கள். கொஞ்சமும் தளராமல் போராடினார் தெரசா. தன் அவமானத்தையும் கண்ணீரையும் எல்லாம் இயேசுவோடு மட்டும் பகிர்ந்துகொண்டார். அவர் சபையோ இதற சபைகளோ அவரை ஏறேடுத்தும் பார்க்கவில்லை.

ஆனால் கடவுள் அவளை கண்காணித்துகொண்டே இருந்தார் கூடவே கல்கத்தா மக்களும்.

யார் இவள்? எங்கிருந்தோ வந்தாள், நமது மக்களுக்கு பாடுபடுகின்றாள் என சிந்திக்க தொடங்கினர், தெரசாவிற்கு ஒரு அங்கிகாரம் கிடைத்தது. முதலில் பழைய பொருள், மீதி உணவு கொடுத்தனர். அதன் பின் கொஞ்ச கொஞ்சமாக உதவி கரங்கள் நீண்டன‌

தொழுநோயாளிகளை, சாக்கடை புழுக்களாக சாலையோரம் சுருண்டு கிடந்த மக்களை மானிட நேயத்தில் அவர் தொட்டு அவரணைத்த பொழுது கல்கத்தா நகரம் கண்ணீர் விட்டு அவரிடம் மண்டியிட்டது.

இப்படி தனி ஆளாகத்தான் வளர்ந்தார் தெரசா, பின்னாளில் உலகெல்லாம் அறியபட்டார். அவருக்கு முதல் சிக்கல் அப்பகுதி சங் பரிவார கும்பலிடம் இருந்து வந்தது, அவர் மதமாற்றம் செய்கிறார், அவரை நாடு கடத்துங்கள் என முழக்கமிட்டு நேரு முன்னால் வெடித்தது சர்ச்சை

நேரு அவர்களின் தலைவர்களுடன் அன்னையின் ஆசிரமம் சென்றார், அங்கே நோயாளிகளுக்கு மருந்து இடுதல், முதியவருக்கு உணவூட்டுதல் போன்ற பணிகள் நடந்துகொண்டிருந்தன. இந்துக்கள் கீதையும் இஸ்லாமியர் குரானும் படித்துகொண்டிருந்தனர்

தெரசா அமைதியாக சொன்னார், மனிதர்களின் தேவையில் நான் என் இயேசுவை காண்கிறேன், அவருக்கு பணி செய்கிறேன். இவர்கள் எம்மதமோ, என்ன இனமோ எனக்கு பிரச்சினையே அல்ல. மனிதர்கள் அது போதும்.

இப்படித்தான் பரமன் இயேசு எங்களுக்கு கற்பித்தார், அதனைத்தான் செய்கின்றோம், இந்த சேவைதான் கிறிஸ்தவ மதம், இப்படி தன்னலமற்ற சிலுவையினை சுமக்கத்தான் எங்களுக்கு கற்பிக்கபட்டிருக்கின்றது. சுமக்கின்றோம், எங்களோடு அச்சிலுவை சுமக்க வருபவர்களை சேர்க்கின்றோமே தவிர வேறு ஒன்றுமல்ல. எங்கள் சபையில் இருக்கும் சகோதரிகளெ எல்லாம் அச்சிலுவை சுமக்க வந்தோரே.

எனக்கு தேவை மத்மாற்றம் அல்ல, மாறாக உங்களை போன்றவர்களின் மனமாற்றம். இம்மானிடருக்கு, சக மனிதருக்கு மனிதனாய் உதவும் மனமாற்றம். மதங்களை தாண்டிய மானிட நேய மனமாற்றம்.

நேரு சொன்னார், “இவள் அந்நிய நாட்டுக்காரி, ஆனால் சேவை செய்வது நம் மக்களுக்காக, உங்கள் வீட்டு பெண்கள் இதற்கு தயார் என்றால் இவளை அனுப்பிவிடலாம்”

தலைகுனிந்த பரிவாரங்கள் அதன் பின் வம்பு வளர்க்கவே இல்லை, அந்த மனமாற்றம் அங்கே நடந்தது, அதன் பின் தெரசாவின் சேவைக்கு எல்லோரும் உதவினார்கள்.

உலகமே கொட்டி கொடுத்தது, அவருக்கு கிடைக்காத பரிசுகள் இல்லை, குவியாத காணிக்கை இல்லை. கிரிக்கெட் வீரர்கள் கூட கல்கத்தாவில் விளையாடினால் வெற்றி பணத்தில் ஒரு பங்கினை எடுத்து வைத்தார்கள்.

எப்படி அவ்வளவு பெரும் சேவை நிறுவணத்தை அவரால் இயக்க முடிந்தது? எளிதான விஷயம், பைபிளில் 5 ஆயிரம் ஏழைகளுக்கு உணவளித்தார் இயேசு, பல இடங்களில் அது காணகிடக்கின்றது, எத்தனையோ பேருக்கு நோய் தீர்த்தார் என்பதும் இருக்கின்றது

அன்னை தெரசா கல்கத்தா நகரில் அந்த பைபிள் காட்சியினைத்தான் நிகழத்தினார். அந்த அக்காலத்து இஸ்ரேலிய காட்சிகள்தான் பின் கல்கத்தாவில் அரங்கேறின, சேவையாய் அறங்கேறின.

அதுதான் கிறிஸ்தவம, இதுதான் ஊழியம்.

இதனை விட்டுவிட்டு பொறியல் கல்லூரி நடத்துவது, மேடைகளில் பெர்மார்மன்ஸ் காட்டுவது, இயேசு எனக்கு அப்படி கட்டளையிட்டார் என பிதறுவது, அடுத்த மதத்தாரை சாடுவது, உலகம் அழியபோகிறது என பயமுறுத்துவது. எழுப்புதல் , மிரட்டுதல் அந்நியபாஷை அலப்பறைகள் எல்லாம் கிறிஸ்தவம் ஆகா

அது அப்பட்டமான பிழைப்புவாதம். தொழில்
தவிப்பவன் வாயில் தண்ணீர் விடுவதுதான் கிறிஸ்துவமே தவிர, அவன் தலையில் தண்ணீர் ஊற்றி ஞானஸ்நானம் பெறு என்பதா கிறிஸ்தவம்?

இன்று அவர்கள் அதனைத்தான் செய்கின்றார்கள். முழுக்க சுயநலம் எல்லாம் தன்னலம், அதற்கு மேல் தன் மதத்தாருக்கு மட்டுமான அப்பட்டமான சுயநலம். இதில் எங்கிருந்து வாழும் கிறிஸ்தவம்?

தெரசாவின் தன்னலமற்ற சேவையில் மகிழ்ந்தர் கிறிஸ்து, உயிர்த்து நின்றார் இயேசு. அவர் உயிரோடுதான் இருப்பார். தெரசா போன்றோரின் சேவையில் அவர்தான் தெரிந்தார், அவருக்கு அங்கு மரணமில்லை

ஆனால் இந்த அழிச்சாட்டிய பிழைப்புவாத கிறிஸ்தவர்களின் அட்டகாசத்தில் தினகரன் & சன், சார்ள்ஸ் ஆபிரகாம் , ஏஞ்சல் டிவி அழிச்சாட்டியத்தில் அவரை தினசரி கொல்கின்றார்கள்.

அன்னை தேரசா எங்காவது தன்னை விளம்பரம் செய்தாரா? இயேசு அழைக்கின்றார், விசிலடிக்கின்றார், அலாரம் அடிக்கின்றார் என இம்சை செய்தாரா? இஞ்சினியரிங் காலேஜ் கட்டினாரா? எந்த அரசியல்வாதியினை தேடி சென்று போஸ் கொடுத்தாரா?

இல்லை தெருவோரம் கண்ட அனாதைகளிடம் சேவை செய்தார், அவர்களிடம்தான் கிறிஸ்துவத்தின் தேவை இருந்தது, கண்டார் அடைந்தார்.

அதனால் புனிதரும் ஆனார்

நாம் வணங்கிகொண்டிருக்கும் அந்தோணியார் பெரும் புனிதர். அவர் வாழ்ந்த காலத்தில் பிறருக்காகவே வாழ்ந்தார், அனைத்து அற்புதங்களையும் பிற மக்களுக்காகவே செய்தார், தனக்காக துளியும் செய்தவரில்லை அவர்.

கிட்டதட்ட தமிழக சித்தர்களின் வாழ்க்கை சாயல்

இன்றும் அவர் ஆலயங்களில் எல்லா மத பக்தர்களும் வழிபடுகின்றார்கள், பலன்பெறுகின்றார்கள், அவர்கள் எம்மதம்? ஞானஸ்நானம் பெற்றவர்களா? இயேசு தெரியுமா? என்பதல்லாம் பிரச்சினையே அல்ல, கண்ணீர் விடும் மனிதானா?, போதும் அவர் அற்புதம் நிகழ்த்துகின்றார்

அப்படி பிறருக்காக வாழ்ந்த புனிதர்கள் வரிசையில் தெரசாவும் வருவதில் ஆச்சரியமில்லை, புனிதர் எனும் வார்த்தைக்கு அன்றே திருவள்ளுவன் குறள் எழுதி வைத்தான்

வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்
தெய்வத்தில் வைக்க படும்

இக்குறளுக்கு லத்தீனில் விளக்கம் அளித்து அங்கீகாரம் கொடுக்கும் நிகழ்வே அந்த புனிதர் பட்டம். அதுதான் விஷயம். அவ்வளவுதான்

வாழ்வாங்கு வாழ்வதென்றால் அம்பானி, டாடா, பில்கேட்ஸ், தமிழக அரசியல்வாதிகள் ஸ்டைல் அல்ல, மாறாக அடுத்தவருக்காக வாழ்வினை அற்பணித்து வாழ்பவர்கள் வரிசை, வானில் வாழும் தெய்வத்தின் வரிசை

அன்னை தெரசாவும் அந்த தெய்வ வரிசையினை பெற்றுவிட்டார், அவர் என்று அல்ல முல்லை பெரியாறு அணை கட்டிய பென்னிகுயிக், வேலூர் மருத்துவமனை கண்ட ஐடா ஸ்கேடர், நெல்லையின் சாரா டக்கர் போன்றவர்கள் எல்லாம் அந்த புனிதர்கள் வரிசையே

காசுக்காக இயேசுவினை கூறுபோடுபவர்களும், பைபிள் வசனத்தால் பிழைப்பு நடத்துபவர்களும் ஒருநாளும் அத்தகுதிக்கு வரமாட்டார்கள். அவர்கள் வியாபாரிகள்

மதமாற்றம் எனும் வியாபாரம் செய்வார்களே ஒழிய மனமாற்றம் என்பதை சிந்திக்க மாட்டார்கள்.

மானிடனுக்கு அடிப்படை உதவி தேவைபடும் இடங்களில் எல்லாம் இயேசு இருப்பார், நான் உலக முடிவுவரை உங்களோடு இருப்பேன் என அவர் சொன்ன தத்துவமும் அதுவே.

“மனம் மாறுங்கள், வானுலக அரசினை படைப்போம்” என பரமன் இயேசு ஏன் அழைத்தார்?

ஏழைகளுக்கு உதவ “மனம் மாறுங்கள்”, ஒடுக்கபட்டோருகு உதவ “மனம் மாறுங்கள்”, பாவிகளை ஏற்றுகொள்ள, நோயுற்றோரை அரவணைக்க “மனம் மாறுங்கள்” என அழைத்தார்.

“மனம் திரும்புங்கள் கடவுளின் அரசு சமீபத்திலிருக்கின்றது..” எனும் வசனத்திற்கு நீங்கள் மனம் திரும்பினால் கடவுளின் அரசினை படைப்பது, அதாவது சமத்துவ உலகினை படைப்பது மிக அருகில் இருக்கின்றது என்ற பொருளும் உண்டு.

இப்படித்தான் மனம் திரும்ப அழைத்தார் இயேசு.
மாறாக எங்காவது அவர் ரோமையரை, கிரேக்கரை இன்னும் பல அடுத்த மதத்து மக்களை “மதம் மாறுங்கள்” என அழைத்தாரா? ஒருக்காலும் இல்லை, இல்லவே இல்லை .
இவை எல்லாம் பின்னால் வந்த அழிச்சாட்டியம், இன்று தமிழகத்தில் வியாபாரமாய் நடக்கும் அழிச்சாட்டியம்.

இந்த தத்துவத்தை சரியாக பிடித்து, அதற்காக வாழ்ந்து மானிடரை நேசிக்கும் மனிதராக மனம் மாறுங்கள் என பறைசாற்றி நின்றவர்தான் அன்னை தெரசா

அவருக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழாவி ரோமில் பலபேர் கூடுகின்றனர், சுஷ்மா சுவராஜ் தலமையில் இந்தியர் செல்வதை உலகமே கவனிக்கின்றது, காரணம் அந்த மானிட தேவதை உழைத்தது நமக்காக, நம் இந்திய சகோதரர்களுக்காக‌

இந்த தேசமும் அவருக்கு பாரத ரத்னா வரை கொடுத்து கவுரவித்தது, தன் பங்கிற்கு அவரை போற்றிகொண்டுதான் இருக்கின்றது, மறக்கவில்லை.

இனி அவர் புனிதர் தெரேசா அதாவது அவரிடம் வேண்டினால் அது நடக்கும் என கத்தோலிக்க தலமை பீடம் அறிவிக்க போகின்றது, அவர் பெயரில் ஆலய பீடங்கள் இனி எழும்பும், எல்லோரும் பிரார்த்திப்பார்கள்

ஆனால் கடவுளிடம் அன்னை தெரசா எப்படி பிரார்த்திகொண்டிருப்பார்?

“எனக்கு மிக பிடித்தமான இந்த இந்திய மக்கள், மதம் கடந்த மானுட நேயத்திலும், உதவி செய்யும் சகோதர மனப்பான்மையிலும் ஒற்றுமையாய் வளர்ந்து, உன்னத சமூகமாக திகழ அருள்புரிவாய் சர்வேஸ்வரா

இந்தியாவில் மானுடம் வாழட்டும், மனிதநேயம் செழிக்கட்டும். சகமனிதனை புறந்தள்ளாமல் அரவணைக்கும் தெய்வீகபண்பு ஓளிவீசட்டும், அவர்கள் துன்பமெல்லாம் தீர அருள்செய் பரம்பொருளே, “

இதுதான் அவரின் பிரார்த்தனை, அது இபபடித்தான் இருக்கும். எல்லா மானிடருக்காகவும் இருக்கும், அவர்கள் துன்பம் தீர்க்கும் பிரார்த்தனையாக இருக்கும்.

கல்கத்தாவின் காவல் தெய்வம் காளி என்பார்கள், இருக்கட்டும். எல்லா தெய்வமும் ஒன்றே.

அந்த பெரும் தெய்வம் சாந்தமான பெண் உருவெடுத்து கல்கத்தாவினில் கொஞ்சகாலம் சேவை செய்து மக்களை காப்பாற்றியிருக்கின்றது,

பின் வரும் அபலைகள் , ஏழைகள், வறியர்கள் எங்கிருந்தாலும் வாழவும் அது பெரும் வழி செய்துவிட்டு மறைந்திருக்கின்றது.

தெரசாவின் வாழ்க்கை அதனைத்தான் சொல்கின்றது.

இன்று அவரின் பிறந்த நாள், எங்கிருந்தோ வந்து இத்தேசத்தின் கல்கத்தா மக்களுக்கு தன் வாழ்வினை அர்பனித்த அந்த கடவுளின் மகளுக்கு ஆழ்ந்த நன்றியும் அஞ்சலிகளும்


 

உண்மைக்கு வைரம் போல பல முகம் உண்டு என சொன்னவர் மகாத்மா காந்தி

நீ நிலையானவன் அல்ல, உன்னை நம்ப முடியாது. ஒரு நேரம் ஒன்றை சொல்கின்றாய் மறுநேரம் மறுக்கின்றாய் நீ குழப்பவாதி என ஏகபட்ட உள்பெட்டி செய்திகள்

ஒரு விஷயத்த்தை பல கோணங்களில் பார்ப்பதால் வரும் சிக்கல் இது, எம் மனநிலை அப்படித்தான்

உண்மைக்கு வைரம் போல பல முகம் உண்டு என சொன்னவர் மகாத்மா காந்தி, அது உண்மையும் கூட‌

அப்படி ஒரு முகத்தை சொன்னால் புகழ்வதும், இன்னொரு முகத்தை சொன்னால் திட்டுவதும் அவர்கள் பாணி

அதற்காக எம் மனதில் தோன்றுவதை அய்யயோ இப்படி சொன்னால் திட்டுவார்கள் என்று எழுதாமலோ இல்லை இப்படி சொன்னால் புகழ்வார்கள் என எழுதவோ எம்மால் முடியாது

மனம் என்ன சொல்கின்றதோ அப்படி எழுதுவோம்

சிலர் சொல்கின்றார்கள் சில திமுகவினரை ஏன் பிளாக் செய்தாய், வாதிட்டால் என்ன?

பிளாக் செய்யும் கலாச்சாரத்தை சொல்லி கொடுத்தது தும்பிகள், அவர்களை எல்லாம் தடுத்திராவிட்டால் இந்நாள் வரை அவர்களுக்குத்தான் பதில் சொல்லிகொண்டிருக்க வேண்டும்

இப்பொழுது இவர்களை விட்டிருந்தாலும் தலைகீழாக தொங்குவார்கள், அவர்களுக்கு பதில் சொல்லவே நேரமிருக்காது

நம்மை புரிந்து கொள்ளாதவர் அல்லது குறிப்பிட்ட எல்லைக்குள் அடக்க நினைப்பவர் சகவாசம் எதற்கு?

சனியன்களை விரட்டினால்தான் நல்லது, அதனைத்தான் ஆத்ம சுத்தியுடன் செய்துகொண்டிருக்கின்றேன்


தமிழகத்தின் மிகசிறந்த அரசியல் படம் இருவர், அமைதிபடை எல்லாம் அதன் நுட்பாமான அரசியல் காட்சிகள் முன் நிற்க முடியாது

50 ஆண்டுகால அரசியலை இரன்டுமணி நேரத்தில் அட்டகாசமாக சொன்ன படம் அது

முன்பொரு காலம் கலைஞர் சொன்னபடி “தமிழன் சோற்றால் அடித்த பிண்டம் ” என்பதால் படம் தோற்றிருக்கலாம் ஆனால் காலத்திற்கும் நிற்கும் படம்

அந்த மணிரத்னம் இருவர் இரண்டாம் பாகம் எடுக்கலாம் , அவரோ “செக்க சிவந்த வானம்” என எதனையோ எடுத்து கொண்டிருக்கின்றார்

அரசியல் வானம் தெளிவாக இருக்கும் பொழுது அவருக்கு மட்டும் எங்கோ வானம் சிவக்கின்றதாம்

இப்பொழுது இருவர் இரண்டாம் பாகம் வரவேண்டிய நேரம் , ஆனந்தன் கட்சி அடிமை நிலையினையும் தமிழ்செல்வம் கல்லறை முன்பு பஜனை கோஷ்டி நடப்பதோடு படத்தை முடித்தால் சூப்பர்ஹிட் ஆகும்