பூரண தமிழினம் என எதுவுமில்லவும் இல்லை.. எல்லாம் கலப்பு

ஒரு சர்ச்சை ஓடுகின்றது, தினமணி பத்திரிகை ஏதோ தமிழ்தேசியம் தொடர்பான கட்டுரையினை நிறுத்தி வைத்ததாகவும், அது இதோ என பலர் ஆங்காங்கே பதிவேற்றிகொண்டிருகின்றார்கள்

விஷயம் வேறு ஒன்றுமல்ல இந்திய தேசியம் என தினமணி பத்திரிகையின் கட்டுரைக்கு பதிலாக தமிழ் தேசியம் என எழுதி தமிழகம் இந்திய தேசிய அங்கமாக இல்லை என யாரோ பதிலுக்கு எழுதினார்களாம், தினமணி பிரசுரிக்கவில்லையாம்

இப்படி ஒரு சர்ச்சை ஓடினாலும் அவர்கள் சொல்ல வருவது தமிழகம் தனி தேசம், இந்தியாவொடு இருந்ததே அல்ல. இது கல்தோன்றி… மருதாணி தோன்றி.. என அதே பாட்டு

அதே கப்பல்படை, கபாட புரம் என அதே புலம்பல்

உலகில் அட்லாண்டிக் கண்டம் கூட மூழ்கித்தான் கிடக்கின்றது, அதற்காக கல் தோன்றா காலத்து முன் தோன்றிய குடி ஐரோப்பா என சொல்ல முடியுமா?

தமிழ்தேசியம் இருக்கட்டும், தமிழக என்றாவது ஒரே நாடாக இருந்ததா என்றால் இல்லை அது மூவேந்தர் ஆட்சி அது போக 7 வள்ளல்கள் ஆட்சி, அதிலும் ஏகபட்ட வள்ளல்கள்

தொண்டை நாடு, கொங்கு நாடு, நாஞ்சில் நாடு என ஏகபட்ட பிரிவுகள்

தமிழ் என்பது இப்படி பல அக்கால நாடுகளில் பேசபட்ட மொழி அவ்வளவுதான் விஷயம், மாறாக தமிழ்தேசியம் என கிளம்புவது இந்த ஈழ தந்திரமே அன்றி வேறல்ல‌

இத்தேசம் அன்றே முழு தேசமாகவே இருந்திருக்கின்றது தமிழர் கங்கைக்கு போவதும், அவர்கள் ராமேஸ்வரம் வருவதுமாக நல்ல புரிந்துணர்வு நாடு முழுக்க இருந்திருக்கின்றது

இங்கிருந்து கைலாயம் வரை பக்தர்கள் செல்வதும், அவர்கள் கன்னியாகுமரி வரை யாத்திரை வருவதும் இது ஒரே நாடு என்பத்தற்கான சான்றுகள்..

இன்றைய உலகில் ஒரே மொழியால் மட்டும் ஒற்றுமை வராது என கண் கூடாக காண்கின்றோம், அமெரிக்காவும் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் ஒரே மொழிதான், ஆங்கில தேசியம் என இணைந்தார்களா?

ஜெர்மன் மொழி ஜெர்மனி தவிர இன்னும் சில ஐரோப்பிய நாடுகளில் உண்டு ஜெர்மன் தேசியம் உண்டா?

வடகொரியா, தென் கொரியா கூட ஒரே மொழிதான்

சீனாவும் தைவானும் கூட ஒரே மொழிதான்

இவை எல்லாம் மொழிவாரி தேசியமா சொல்லிகொண்டிருக்கின்றான்

தமிழகம் போலவே தனித்த அடையாளம் கொண்ட இனங்கள் இந்தியாவில் உண்டு

மலையாளம், கன்னடம், ஒரிசா, பீகார், சீக்கியம் இன்னபிற மாநிலங்கள் எல்லாம் மொழி தேசியம் என கிளம்புமா? அப்படி ஒன்றை சொல்ல கூட செய்யாது

காரணம் அதற்கான சூழலோ இல்லை அவசியமோ இங்கு இல்லை, வரவும் வராது. அங்கெல்லாம் மாநில மொழிகள் அழிந்தும் விடவில்லை

ஆனால் தமிழகத்தில் மட்டும் தமிழ்தேசியம் என குதிப்பது ஒருவித போக்கு , இதன் பிண்ணணியில் இருப்பது ஈழத்து கும்பலும் உண்டு

தமிழகம் அன்றே பல துண்டுகளாகத்தான் இருந்தது, ஒரே மொழி பேசினார்களே தவிர 60 மைலுக்கு ஒரு ராஜா அவர்களுக்குள் சண்டை, வீரம், இத்யாதிகள் ஏன ஏராளம் நடந்திருக்கின்றது

இதில் பூரண தமிழினம் என எதுவுமில்லவும் இல்லை எல்லாம் கலப்பு

அதுவும் சிங்கள தமிழ், சேர அரேபிய , சோழ தெலுங்கு என ஏகபட்ட கலப்புகள்

அது போக நாயக்கர்கள் வந்தபின் இன்னும் கலப்பு

அப்படிபட்ட தமிழகத்தில் இருந்துகொண்டு தமிழ்தேசியம் அது இது என பேசுவது குழப்பம் ஏற்படுத்தும் செயலாகும்

அப்படியே தமிழ்தேசியம் வந்தாலும் அது சேர தேசியம், பாண்டிய தேசியம் என உடையத்தான் செய்யும்

தினமணி பத்திரிகை இம்மாதிரி கட்டுரைகளை நிறுத்தி இருப்பது வாழ்த்துகுரியது, வாழ்க தேசம்

பின்னூட்டமொன்றை இடுக