ஆசிய விளையாட்டு போட்டிகளில் 85 தங்கங்களுடன் முதலிடம் வகிக்கின்றது சீனா

ஆசிய விளையாட்டு போட்டிகளில் 85 தங்கங்களுடன் முதலிடம் வகிக்கின்றது சீனா, இப்படியே மூட்டை முடிச்சுகளுடன் பாதியில் கிளம்பினாலும் முதலிடம் இனி அவர்களுக்கே

அந்த அளவு அசைக்க முடியா இடம், ஜப்பான் 45 பதக்கங்களுடன் இரண்டாமிடத்தில் இருக்கின்றது

தென்கொரியா மூன்றாம் இடம், ஆச்சரியமாக இரான் 5ம் இடத்தில் அசத்துகின்றது, வடகொரியா இந்தியாவிற்கு முந்தைய இடம்

பாரதம் 9ம் இடத்திற்கு வந்தாயிற்று, விளையாட்டை வளர்க்காமல் நயந்தாராக்களை வளர்த்தால் நைன் இடம்தான் கிடைக்கும்

பாகிஸ்தான் 33ம் இடத்தில் தங்கமோ வெள்ளியோ இல்லாமல் வெண்கலத்துடன் கிடக்கின்றது என்பதை தவிர இந்தியருக்கு ஆறுதல் செய்தி இல்லை

பொதுவாக விளையாட்டில் கவனமாக இருக்கும் நாடுகள் ராணுவத்தில் ஆதிக்கம் செலுத்தும் என்பது தியரி

சீனா அதை அட்டகாசமாக நிரூபிக்கின்றது, எதற்கும் டோக்லாம் விவகாரங்களை பேசியே தீர்த்துகொள்வது நல்லது

என்ன அமித்ஜி கலைஞர் அஞ்சலிக்கு செல்லவில்லையாமே ஏன்?

Image may contain: 2 people, beardஎன்ன அமித்ஜி கலைஞர் அஞ்சலிக்கு செல்லவில்லையாமே ஏன்?

அட போங்க மோடி ஜி, அவரை புகழ்ந்து எழுதி தருவாங்க அதை சொல்லணும், நம்ம ஆட்களும் உருகுவாங்க, அப்புறம் கலைஞரை புகழ்ந்து அவங்க‌ பேசுவாங்க, நான் கை தட்டிட்டே இருக்கணும்

அதுக்கென்ன ஜி? அதில் என்ன சிக்கல்?

அதில்தான் ஜி சிக்கல், சும்மாவே திமுககாரங்க குசும்பங்க, அந்த துரைமுருகனை எல்லாம் நம்ப முடியாது, எல்லாம் முடிஞ்ச அப்புறமா பாருங்க உங்க கட்சிகாரங்களே எங்களை பாராட்டுறாங்க, இவ்வளவு சிறப்பு வாய்ந்த கட்சியில நீங்க ஏன் இணைய கூடாதுன்னு என்னை கலாய்பாங்க ஜி”


கலைஞர் நினைவு அஞ்சலி விழாவில் எங்களை அழைக்கவில்லை, அமைச்சர் ஜெயக்குமார் ஆதங்கம் : செய்தி

இதென்ன ஆதங்கம்?

அவர்களின் கட்சி தலைவர் அமித்ஷாவினையே நேரடியாக அழைத்தாகிவிட்டது, இவருக்கென்ன?

இவர் நேரடியாகவே செல்லலாம்


போப்பாண்டவர் வட அயர்லாந்திற்கு சென்றிருக்கின்றார்

Image may contain: 1 person

போப்பாண்டவர் வட அயர்லாந்திற்கு சென்றிருக்கின்றார், அது என்ன வட அயர்லாந்து

முன்பு பிரிட்டனில் இருந்த பகுதி அது, ஆங்கிலிக்கன் சபை ஆதிக்கம் நிறைந்த பிரிட்டனில் இருந்து அந்த கத்தோலிக்க நாடு பிரிந்தது

அந்த கத்தோலிக்க நாட்டிற்குத்தான் கத்தோலிக்க சபை தலைவரான போப் சென்றிருக்கின்றார், அவர் சென்றது விஷயம் அல்ல, அங்கு அவர் சொல்லி இருப்பதுதான் விஷயம்

சிறுவர்கள் மேல் காம சேட்டை புரியும் பாதிரிகள் பற்றி மிக வருந்தி இருக்கின்றார், அதற்கு வருத்தமும் மன்னிப்பும் கேட்டிருக்கின்றார்

கத்தோலிக்க பாரம்பரியபடி போப் கிறிஸ்துவின் பிரதிநிதி, கிறிஸ்து என்ன சொன்னார்?

“சிறு குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள், சிறுவர் சிறுமியர் போல் மாறாத எவனும் பரலோகத்திற்கு வரமுடியாது”

ஆம் சிறுவர்களை அவர் அந்த அளவு நேசித்தார்

ஆனால் அவர் வழிவந்ததாக சொல்லும் பாதிரிகள் இந்த அயோக்கிதனத்தை செய்திருக்கின்றார்கள், படுபாவிகள்

இவர்கள் வணங்கியதோ கிறிஸ்துவினை ஆனால் செய்திருப்பது சாத்தானும் அஞ்சும் கொடூர விஷயங்களை

போபாண்டவர் மன்னிப்பு கேட்டது பெரிய விஷயம் என்றாலும் இனி தேவாலயத்தில் அப்படி நடக்காது என சொன்னாலும் அந்த கருப்பு பாதிரிகள் மேல் நடவடிக்கை ஏதுமில்லை

அதாவது அவர்கள் திருப்பலி நிறைவேற்ற தடை என்றோ, பாவமன்னிப்பு ( பாவிகள் எப்படி பாவமன்னிப்பு கொடுப்பது?) கொடுக்க தடை என்றோ ஏதுமில்லை

உச்சமாக அவர்கள் மேல் சட்டபடி நடவடிக்கை என ஏதுமில்லை

இயேசு விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை மன்னித்தார், ஆனால் சிறுவர் சிறுமியரை பற்றி சொல்லும்பொழுது அவர்களுக்கு இடைஞ்சல் செய்பவர்களை கடலில் கல்லை கட்டி தள்ளுங்கள் எனவும் சொல்லி இருக்கின்றார்

கல்லை கட்டி கடலில் தள்ள வேண்டாம், மாறாக கையில் விலங்கிட்டு உள்ளே தள்ளலாம் அல்லவா?

போப் செய்யவில்லை, அவரின் அரசாங்கத்தில் அதற்கு அனுமதி இல்லை போலும்

பாதிரிகள் இப்படி திணவெடுத்து அலைய முதற்காரணம் அவர்களுக்கு கொடுக்கபடும் சகல வசதிகளும், குத்துசண்டை வீரனுக்குரிய உணவும்

துறவிக்குள்ள கட்டுபாடுகளை உணவு முதல் கட்டாந்ததை வரை உறங்க கொடுத்து பாடாய்படுத்தினால் ஒழுங்கான சாமியாக இருப்பார்கள்

இல்லாவிட்டால் இவர்களை திருத்தமுடியாது

கிறிஸ்தவம் தன் சபையில் மிகபெரும் கட்டுபாடுகளை விதிக்கும் நேரம் இது, போப்பாண்டவர் அதை செய்யலாம்

நாசா புகைப்படங்கள் மூலம் துப்பு துலங்கியது : செய்தி

சேலம்-சென்னை ரெயில் கொள்ளை: 2 ஆண்டுகளுக்கு பிறகு நாசா புகைப்படங்கள் மூலம் துப்பு துலங்கியது : செய்தி

ரயில் கொள்ளையினை துப்பு துலக்க நாசாவின் படங்களும் அவர்களின் தகவல்களும் உதவி இருக்கின்றன‌

எவ்வளவு திறமையானது நாசா என நகர்ந்து செல்லும் விஷயம் அல்ல இது, மாறாக இப்படி எல்லாம் இந்தியாவினை கண்காணிக்கின்றார்களா? என அதிர்ச்சி அடைய வேண்டிய விஷயம்

சாதாரண ரயிலையே அவர்களால் இப்படி துல்லியமாக பார்த்து தகவல் சொல்லமுடிகின்றது என்றால், இந்திய ராணுவத்தை எப்படி எல்லாம் உளவு பார்த்திருப்பார்கள்?

இது நமக்கே புரியும் பொழுது இந்திய ராணுவத்திற்கு புரியாதா? அவர்களும் செய்ய வேண்டியதை செய்திருப்பார்கள்

ஆக நாசா இப்பொழுது இந்திய வழக்குகளில் சாட்சி சொல்ல ஆரம்பித்துவிட்டது.

இப்படி நாசாவிடம் கேட்டு அந்த ராமஜெயம் கொலைவழக்கினையும் துப்புதுலக்கினால் நன்றாகத்தான் இருக்கும்


தமிழகத்தில் விரைவில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை- அமைச்சர் விஜயபாஸ்கர்

அதை எல்லாம் மத்திய அரசு எப்பொழுதோ தொடங்கியாயிற்று, முடிந்தால் பன்னீர்செல்வத்திடம் விசாரிக்கவும்


மு.க.அழகிரி திடீர் மிரட்டல்

தி.மு.க.வில் சேர்க்க மறுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்- மு.க.அழகிரி திடீர் மிரட்டல்

தமிழகத்திலே, ஏன் உலகிலே என்னை கட்சியில் சேர்க்காவிட்டால்.. என மிரட்டும் ஒரே நபர் அழகிரியாகத்தான் இருப்பார்

வரலாற்று வினோதம் இது

மிரட்டுபவர் கலைஞர் இருக்கும்பொழுது மிரட்டி இருக்கலாம், அப்பொழுதெல்லாம் எங்கே இட்லி சுட்டுகொண்டிருந்தார் என தெரியவில்லை

அழகிரி ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும், அது அவருக்கு நல்லது

சம்பத் பெரும் எண்ணிக்கையில் வெளியேறினார் திமுக நிலைத்தது

ராமசந்திரன் மாலிக்காபூர் கையில் சிக்கிய மதுரையாக கட்சியினை சூறையாடினார், அது மீண்டது

வைகோ பிரித்து பார்த்தார், திமுக அசரவில்லை

இப்படியாக பெரும் திமிங்கலங்களின் பிரிவினையே சாதாரணமாக கடந்து சென்ற கட்சி அது

கட்சியில் உள்ள பெருந்தலைகள் கலைத்தே கலங்காத கட்சி, கட்சிக்கு வெளியில் இருந்து கத்துபவர்களால் சலசலக்காது

ஒருவேளை எதிர்கொடி ஏந்தி ஊரெல்லாம் சுற்றிவிட்டு திரும்பி வந்தால் அழகிரி நிலமை எப்படி இருக்கும்?

வைகோ போலத்தான் இருக்கும், மிகபெரும் அவமானம் அது

அந்த அவமானத்தை தவிர்க்க அவர் இப்பொழுதே அமைதியாவது நல்லது, மாறாக அவமானபட்டே தீரவேண்டும் என விதி இருந்தால் அதை யார் மாற்ற முடியும்?

அமிர்தலிங்கம் யாரென தும்பிகளிடம் கேளுங்கள்?

Image may contain: 2 people, people sittingஏன் அமிர்தவிங்கம் கதையினை சொன்னாய் என பல கேள்விகள்

அமிர்தலிங்கமும் ஈழமும் பிரிக்க முடியாதது, முதலில் தமிழகத்திடம் ஆதரவு கேட்டுவந்தவர் அவரே

அவரையும் சந்திரஹாசனையும் நம்பியே, இவர்களை மீறி போராளிகள் செல்லமாட்டார்கள் என நம்பியே இந்தியா அவர்களுக்கு பயிற்சியும் அடைக்கலமும் அளித்தது

(புலிகள் அவர்களையும் கொன்று, இந்தியாவினையும் பகைத்து எல்லாம் நாசமாக்கினர்)

கலைஞருக்கும் அவர்மேல் பெரும் மரியாதை இருந்தது, என்று அமிர்தலிங்கம் கொல்லபட்டாரோ அன்றே கலைஞர் புலிகளை கை கழுவினார்

2009ல் சட்டமன்றத்தில் ஈழசிக்கல் குறித்து உருக்கமாக பேசிவிட்டு அருகில் இருந்த கண்ணப்பனை பார்த்து சொன்னார்

“என்னை போல் இளகிய மனம் படைத்தவர் நீங்கள், நீங்களே சொல்லுங்கள் அமிர்தலிங்கம் கொல்லபட வேண்டியவரா?

அதுவும் அவர் மனைவி கையாலே தேநீர் குடித்துவிட்டு அவரை கொன்றதை எல்லாம் ஏற்க முடியுமா?”

அந்த கேள்வி சாதாரண கேள்வி அல்ல, என்று அமிர்தலிங்கத்தினை புலிகள் கொன்றனரோ அன்றே நான் விலகிவிட்டேன் என்ற பதில் அது

கலைஞர் அவர்மேல் வைத்திருந்த அபிமானம் அப்படிபட்டது

தன் மீதான விமர்சனங்களுக்கு அவ்வப்போது கலைஞர் பதில் கொடுத்துகொண்டேதான் இருந்தார், ஆனால் உணரத்தான் யாருமில்லை

அமிர்தலிங்கம் யாரென தும்பிகளிடம் கேளுங்கள்?

“மூனை தொட்டது யாரு, கொய்யால இந்த அமிர்தலிங்கம்டா..” என ஒருவர் சினிமாவில் வருவாரே? அவரா என சிரிக்காமல் கேட்பார்கள்

நடிகர்களிலே பச்சோந்திதனம் மிக்கவர் சத்யராஜ்

Image may contain: 1 person, glasses and text

இருக்கும் நடிகர்களிலே பச்சோந்திதனம் மிக்கவர் இவர்தான்

திமுகவினை இவர் எப்படி எல்லாம் திட்டினார், புலிகளுக்கு எப்படி எல்லாம் வக்கலாத்து வாங்கினார்?

மைக் கிடைக்கும் இடமெல்லாம் தமிழனை தமிழன் ஆளவேண்டும் என்பார், இன்னும் மகா ஆபாசமாக கூட பேசியிருக்கின்றார்

புலி ஆதரவு கும்பல்கள் எல்லாம் அகபடும்நிலையில் , இந்த மாதிரி கும்பல்கள் பிடித்து உள்ளே போடபடும் நிலையில் அந்தர் படி அடித்து ஸ்டாலின் பக்கம் வந்து நிற்கின்றார்

ஏம்பா பாரதிராஜா,

உங்கள் கும்பலில் ஒரு மானஸ்தன் கூடவா இல்லை?

ஸ்டாலின் திமுக தலைவராவதில் தினமலருக்கு ஏக மகிழ்ச்சி

Image may contain: 3 people, including Mohamed Ravoof, text

கலைஞர் வரிகளில் சொல்லவேண்டும் என்றால் “கண்கள் பனித்தது, இதயம் கனித்தது”Image may contain: 1 person, standing

இந்த மனமும், இந்த உறவும் என்றும் தொடரட்டும்


 

ஸ்டாலின் திமுக தலைவராவதில் தினமலர் பத்திரிகைக்குத்தான் ஏக மகிழ்ச்சி

அவருக்கு “பட்டாபிஷேகம்” என மகிழ்கின்றது, நன்றி

தடை பல கடந்து, பல காலம் காத்திருந்து ராமன் பட்டாபிஷேகம் முடிந்தபின்புதான் நாடு செழித்தது என்கின்றது புராணம்

அப்படி இனி தமிழகமும் செழிக்கும் என குறிப்பால் சொன்ன தினமலருக்கு வாழ்த்துக்க

ள்


 

பதவிக்காக எனது கையை பிடித்து கெஞ்சியவர் எடப்பாடி பழனிசாமி- டிடிவி தினகரன் கடும் தாக்கு

சசிகலா போயஸ் கார்டனில் எப்படி கெஞ்சிகொண்டிருந்தார் என எடப்பாடி கேட்டால் தினகரன் என்ன பதில் சொல்வாரோ தெரியாது

இப்படியே கெஞ்சிய மூலங்களுக்கு சென்றால் கலைஞரிடம் பதவி வேண்டி கெஞ்சிய ராமசந்திரன் வரை விஷயம் செல்லும்


சசிகலா “தியாக தலைவி”, தினகரன் “திராவிட செல்வன்” ஆகிவிட்ட தமிழகத்தில், திருமுருகன் காந்தி “இரண்டாம் பெரியார்” ஆனதில் என்ன ஆச்சரியம்?


அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்

Image may contain: 1 person, glasses and close-upஇலங்கை தமிழர்களில் அவர்தான் மிக முக்கிய தலைவராக இருந்தார். ஈழத்துகாந்தி சாமுவேல் செல்வநாயகத்திற்கு பின் அவரைத்தான் ஈழதமிழர்களின் தலைவராக உலகம் கருதிற்று

பன்மொழி ஆற்றல் முக்கவர், பெரும் ஜனநாயகவாதி, எல்லா நாட்டு மக்களாலும் மதிக்கபட்டவர் என அவருக்கு பெரும் மதிப்பு இருந்தது, இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக இருந்த முதல் தமிழர்

அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்

செல்வாவிற்கு பின் அவர்தான் ஈழபிரச்சினையினை முன்னெடுத்து சென்றார், கொழும்பு கலவரத்தை தொடர்ந்து ஈழதமிழர் மேல் உலகெல்லாம் ஒரு அனுதாபம் ஏற்பட அவர்தான் காரணம்

தமிழகத்திற்கு அவர் ஆதரவு தேடி வந்தார். அவரை வரவேற்பதில் எம்ஜிஆருக்கும், கலைஞருக்கும் போட்டியே இருந்தது, “நாவலரே வருக..” என போஸ்டர் ஓட்டி அசத்தினார் கலைஞர்

நான் தான் முதல்வர், என் காரில்தான் நீங்கள் வரவேண்டும் என விமான நிலையத்திலிருந்து தன் காரில் அழைத்து சென்று கருணாநிதியினை பார்த்து கிக்கிக்க்க்கி என சிரித்தபடி சென்றார் எம்ஜிஆர்

சுருக்கமாக சொன்னால் ஈழபிரச்சினையினை தமிழகத்தில் கொண்டு வந்து பெரிய செய்தி ஆக்கியதே அமிர்தலிங்கம் தான்

இந்திராகாந்தியிடம் அவர்தான் முதலில் ஈழநிலையினை எடுத்துரைத்தார், அமிர்தலிங்கமும் தந்தை செல்வாவின் மகனுமான சந்திரஹாசனுமே இந்தியாவில் ஈழபோராளிகள் பயிற்சிபெற அனுமதிபெற்றனர்

அமிர்தலிங்கத்தி அமைதியான அணுகுமுறையே இந்திரா ஈழபோராட்டத்தில் இறங்க வழிகோலியது, அமிர்தலிங்கம் இல்லையென்றால் ஈழபோராட்டம் இந்த அளவு வளர்ந்திருக்காது, புலிகள் என்றோ காலியாயிருப்பர்

Image may contain: 1 person, standing1984 குடியரசு தின விழாவின் பொழுது அமிர்தலிங்கத்தை அழைத்து தன் அருகே சிறப்பு விருந்தினராக அமரவைத்தார் இந்திரா

அது வெளிநாட்டு அதிபருக்கே கொடுக்கபடும் கவுரவம், ஆனால் ஒரு நாட்டின் எதிர்கட்சி தலைவருக்கு எப்படி கொடுத்தார் என பெரும் பரபரப்பு எழும்பியது

அமைதியாக ஜெயவர்த்தனேவினை பார்த்து புன்னகைத்தார் இந்திரா, ஆம் அதன் அர்த்தம் ஜெயவர்த்தேனேவிற்கு மட்டும் புரிந்தது

ஈழம் அமைந்தால் அதற்கு அமிர்தலிங்கம்தான் அதிபர் என்ற பொருள் யாருக்கு புரியாது? அலறினார் ஜெயவர்த்தனே, சிங்கள இனமே அலறிற்று

இந்திரா காலத்திற்கு பின் ராஜிவ் வந்ததும், ராஜிவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தம் வந்தபொழுதும் அமிர்தலிங்கம் இந்தியா பக்கமே இருந்தார்

இந்தியா மூலமே இலங்கை தமிழர்கள் நன்மை பெறமுடியும் என்பதும், இன்னொரு நாடு ஒருகாலும் ஈழதமிருக்காய் வராது, இந்தியா மட்டுமே ஏதாவது நன்மை பயக்கும் நிலையில் இருக்கின்றது, நாளை சிக்கல் என்றாலும் இந்தியாதான் கொடுக்கும் என்பது அவரின் நம்பிக்கை

அது மகா உண்மையும் கூட‌

இது பிரேமதாசாவிற்கு பெரும் எரிச்சலை கொடுத்தது, புலிகளும் பிரேமதாசாவும் இந்திய படைகளுக்கு எதிராக கூட்டாஞ்சோறு பொங்கி ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்ட காலங்கள் என்பதான் கொலபொறுப்பினை புலிகள் எடுத்தனர்

அவர்களுக்கென்ன தமிழர் தரப்பு பிரதிநிதி என எவர் வந்தாலும் கொல்ல வேண்டும்.

அமிர்தலிங்கம் புலிகளின் கடும் போக்கினை விமர்சித்தார், போராளிகள் என்பவர்கள் செய்யும் அட்டகாசங்கள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது என்றார், தமிழர்களை கொல்லும் அந்த கொடூரம் ஒரு காலமும் நன்மை பயக்காது என பொதுவாக சொல்லிகொண்டிருந்தார்

Image may contain: 2 people, people standingஅவர்தான் ஈழதமிழர்களின் பிரதிநிதி என உலகம் பார்த்து கொண்டிருந்தபொழுதே புலிகளுக்கு சகிக்கவில்லை. அவர்களை பொறுத்தவரை தாங்கள் மட்டுமே ஈழ தமிழரின் பிரதிநிதி என சொல்லிகொண்டார்கள்

போட்டிக்கு வந்தவர்களை எல்லாம் தொலைத்த புலிகள், அமிர்தலிங்கத்தை விடுவார்களா?

நாங்கள் துப்பாக்கி தூக்கி போரிடும் பொழுது, அமிர்தலிங்கம் இலங்கை அரசோடு பேசுகின்றார் அதனால் அவர் துரோகி என அறிவித்தார்கள்

(ஆனால் இதே புலிகள் பின்பு பிரேமதாசாவோடு கொஞ்சியது வரலாறு,அவர்கள் செய்தால் ராஜ தந்திரம் மற்றவர் செய்தால் கொடூரம்)

புலிகளின் வாயில் ஒருவனை துரோகி என சொல்லிவிட்டால் அவன் சாகபோகின்றான் என பொருள்

பிரபாகரன் பற்றி தன் கருத்தை இப்படி பண்பட்ட மொழியில் சொன்னார் அமிர்தலிங்கம்

தம்பி பிரபாகரன் தமிழனித்திற்காக சிறுவயதில் இருந்தே போராடுவது வரவேற்கதக்கது, ஆனால் எதனை செய்யவேண்டும், எதனை செய்யகூடாது எனும் அறிவு அவரிடம் இல்லை, பக்குவம் இல்லை, முதிர்ச்சி இல்லை.

இவர் இப்படியே செய்துகொண்டிருந்தால் அது பெரும் அழிவில் முடியும், அவர் பின்னால் இளைஞர்கள் செல்வது நல்ல அறிகுறி அல்ல…”

துரோகி என புலிகள் குமுறிகொண்டிருந்தபொழுது, இந்த வார்த்தைகள் புலிகளை வெறியூட்டின‌

ஒரு பெரும் தலைவனே, தமிழர் தலைவனே இப்படி சொல்லிவிட்டபின் மக்கள் எப்படி பிரபாகரனை நம்புவர்?, விடுவார்களா?

3 புலிகளை அமிர்தலிங்கத்துடன் பேசவேண்டும் என அனுப்பினர், அவர்களும் சில நாட்கள் சென்று பேசினர், அப்பொழுதெல்லாம் ஆயுதம் இல்லை

அமிர்தலிங்கம் பெரும் பாதுகாப்பில் இருந்தவர், சிங்கள அரசு அவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கியிருந்தது, காரணம் உலகம் மதிக்கும் ஒரு தமிழ் தலைவனுக்கு போராட்டம் நடக்கும் காலத்தில் ஏதும் நடந்து தொலைத்துவிட்டால் அது இலங்கை அரசுக்கு பெரும் சிக்கல்”

இஸ்ரேலியர் அராபத்தை விட்டு வைத்தார்கள் அல்லவா? அப்படி

இந்நிலையில் அந்த கொலைகார புலிகள் ஆயுதத்தோடு அவரை பார்க்க வந்தார்கள், வாசலில் நின்ற சிங்களன் தடுக்கின்றான், அனுமதிக்கவில்லை பெரும் சத்தம். அதனை கேட்டு மாடியிலிருந்து சொல்கின்றார் அமிர்தலிங்கம்

“அவர்கள் எனக்கு தெரிந்தவர்கள் அனுப்புங்கள், ஆயுதம் பற்றி கவலை இல்லை” என அனுமதி கொடுக்கின்றார் அமிர்தலிங்கம்

எப்படி நம்பியிருக்கின்றார் பார்த்தீர்களா?

அதன் பின் அமிர்தலிங்கத்துடன் பேசுகின்றார்கள் கொலைகாரர்கள், அவரோடு இன்னும் இருவர் இருந்தார்கள், யோகேஸ்வரன் போன்றவர்கள், அவர்களும் சிறந்த சிந்தனையாளர்கள்

அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையற்கரசி எல்லோருக்கும் தேநீர் கொண்டு வருகின்றார், கொலைகார புலிகள் குடிக்கின்றார்கள்

கொஞ்சமும் மனிதாபிமானம் உள்ளவர்கள் அதனை குடிப்பார்ளா? அல்லது அந்த மங்கல மகராசி கையால் தேநீர் குடித்தபின் அவள் தாலிபறிக்க நினைப்பார்களா?

புலிகளுக்கு ஏது நன்றி? ஏது மனது? எல்லாம் கொடூரம்

தேநீரை அருந்திவிட்டு அமிர்தலிங்கத்தை சுட்டார்கள், அதன் பின் அருகிலிருந்தவரை சுட்டுவிட்டார்கள். சத்தம் கேட்டு அமர்தலிங்க மனைவியும் அந்த சிங்கள காவல்காரனும் ஓடிவந்தான்

அவனை கண்டதும் அமிர்தலிங்கம் மனைவியினை சுடும் திட்டத்தை கைவிட்டு கொலைகாரர்கள் ஓடினர்,

ஆம் அவர்கள் அமிர்தலிங்கதினை சுட்டுவிட்டு தனிஈழம் பெற அவசரமாக ஓடினர்.

ஆனால் அந்த சிங்களன் பின்னால் விரட்டி சென்று சுட்டடான்

கொலையாளிகளை அவன் விரட்டி சுட்டு கொன்றான், ஒரு தமிழ் தலைவனை கொன்ற தமிழ்புலிகளை சுட்டு கொன்றவன் ஒரு விசுவாசமான சிங்களன்

அது மட்டுமல்ல அமிர்தலிங்கத்தின் பாதுகாவலரானா அந்த சிங்களன் அமிர்தலிங்கம் மனைவியிடம் அழுதான், என்னை மன்னியுங்கள், நான் அவர்களை தடுத்திருக்கவேண்டும், இவர் அழைத்தார் என்றுதான் விட்டுவிட்டேன் என் கடமையினை நான் சரியாக செய்யவில்லை

எப்படிபட்ட மிக உயர்ந்த சிங்களன் அவன்?, அமிர்தலிங்கத்தை அவன் தமிழனாகவா பார்த்தான் இல்லை, நிச்சயம் இல்லை அவரை தலைவனாக கண்டிருக்கின்றான்

அமிர்தலிங்கத்தை போலவே வரலாற்றில் நின்றுவிட்டான் அந்த நல்ல சிங்களன்

பிரபாகரனுக்கு பின்னும் இலங்கை அமைதியாக இருக்கின்றது என்றால் அது இதுபோன்ற நல்ல சிங்களர்களால்தான்.

அமிர்தலிங்கத்தின் கொலை பெரும் பிரச்சினையாயிற்று, ஈழமக்கள் அழுதனர், வழக்கம் போல மறுத்தனர் புலிகள், பின் அமைதியாயினர்

புலிகள் கொலையினை மூன்று வகையாக எதிர்கொள்வர், ஒன்று கொன்றது நாங்கள்தான் என்பர், இரண்டாது ரகம் முணுமுணுப்பு, மூன்றாம் ரகம் மர்ம அமைதி

ராஜிவ் கொலை என்பது மூன்றாம் ரகம், அமிர்தலிங்கம் கொலை இரண்டாம் ரகம்

புலிதளபதி மாத்தையா அமிர்தலிங்கத்திற்கு கொடுக்கபட்டது மரண தண்டனை என பகிரங்கமாக சொன்னார்,

பிராபகரன் உத்தரவுபடி அந்த கொலையினை செய்தது நிச்சயம் மாத்தையாதான், பின் மாத்தையாவும் பிரபாகரனுக்கு துரோகி ஆனார், கொஞ்சநாளில் பிரபாகரனால் கொல்லபட்டார்.

பின் ராஜிவும் கொல்லபட்டு , புலிகளின் நன்றி கடனுக்காக பிரேமதாசாவும் கொல்லபட்டார்

எப்படிபட்ட நன்றிமிக்கவர் புலிகள், காப்பாற்றி சோறு போட்டவனை எல்லாம் மண்டையில் போட்டவர்கள்

வடமராட்சியில் தன்னை காத்த ராஜிவினை கொன்றார்கள், பின் அமைதிபடையிடமிருந்து காத்த பிரேமதாசாவினை கொன்றார்கள்

அப்படியே தாங்கள் பெரும் போராளிகளாக இடமளித்து பயிற்சிபெற‌ இந்தியாவிடம் வாதாடி வழிகொடுத்த அமிர்தலிங்கத்தையும் கொன்றார்கள்

புலிகள் செய்த மிக மிக தவறான அரசியல் கொலைகளில் அமிர்தலிங்கம் கொலையும் ஒன்று

ஜூலை 13ம் நாளில்தான் அவர் புலிகளால் கொல்லபட்டார், இப்படி எல்லாம் சிரித்துகொண்டே கொலை செய்வது ஒருவகையான மனநோய், பிரபாகரனுக்கும் அவர் கும்பலுக்கும் அதுதான் இருந்திருக்கலாம்

இதன் பின் என்னவெல்லாமோ நடந்து புலிகள் 2009ல் பெரும் மக்கள் அழிவோடு அழிந்தும் போயினர்

இன்று யாருமில்லா அனாதைகளாக நிற்கின்றது ஈழ தமிழினம், மறுபடி அமிர்தலிங்கம் போன்றவர்கள் பிறந்து வந்து வழிகாட்டட்டும்

பிரபாகரன்கள் இனி பிறக்காமலே போகட்டும்

திருப்பெரும்புதூரில் காவலர் அனுசுயா தற்கொலை குண்டுதாரி அனுசுயாவினை தடுக்க, அவரை தடுக்காதீர்கள் மாலையிட அனுப்புங்கள் என சொல்லி தனுவினை தன் அருகே அழைத்தார் ராஜிவ்

அந்த சதிகாரியும் வந்து குனிந்து வணங்கி கொன்றாள்

இவர்கள் எனக்கு தெரிந்தவர்கள், அவர்களிடம் ஆயுதம் இருப்பது பிரச்சினையில்லை உள்ளே அனுப்புங்கள் என சொல்லி கொலையாளிகளை தன்னை கொல்ல அனுமதி கொடுத்தார் அமிர்தலிங்கம்

அவர்களும் வந்து வணங்கி தேநீர் குடித்துவிட்டே கொன்றனர்

புலிகளின் பயிற்சி இப்படித்தான் நம்ப வைத்து கழுத்தறுப்பதாக இருக்கின்றது

இதனைத்தான் பெரும் வீரகாவியமாக இந்த சீமானும் வைக்கோவும் பழநெடுமாறன் எனும் இந்த தேசத்தின் சாபங்கள் எல்லாம் சொல்லிகொண்டிருக்கின்றன‌

அமிர்தலிங்கத்தின் மரணம் ராஜிவிற்கு பெரும் எச்சரிக்கை, பத்மநாபாவின் கொலை அடுத்த எச்சரிக்கை இதனை எல்லாம் கொஞ்சமும் சிந்திக்காமல்தான் ராஜிவ் இறந்தார்

இன்று அமிர்தலிங்கத்தின் பிறந்த நாள், ஈழமக்களின் துயரத்திற்கு இந்தியா மட்டுமே உதவமுடியும் என இங்கு ஓடோடி வந்து இந்தியாவின் தலையீட்டில் சில நன்மைகளை அடையலாம் என நன்முயற்சிகளை எடுத்தவரின் பிறந்த நாள்

ஈழதமிழருக்காக உயிர் கொடுத்து ராஜிவினை எச்சரித்தவர் அவர்

நிச்சயம் தமிழகத்தில் ஈழபிரச்சினையினை கொண்டுவந்தவர் அவரே, அவர் மூலமே ராமசந்திரன் கலைஞர் எல்லாம் ஈழசிக்கலில் நுழைந்து, பின் இந்திய அரசு நுழைந்து பல முயற்சிகள் நடந்தது

எல்லாம் புலிகளின் விபரீத புத்தியால் நாசமானது

அவர் தமிழகத்தில் விதைத்த விதைதான் வளர்ந்தது, ஆனால் அவரை யார் கொன்றார்களோ அவர்களையே தீரர்கள், வீரர்கள் என சொல்லும் கூட்டம் இங்கு பின்னாளில் வந்தது

இதனை விட அறிவுகெட்டதனம் இருக்கவே முடியாது.

எது எப்படி ஆயினும் ஈழவரலாற்றில் மறக்கமுடியா பெருமகன் அமிர்ந்தலிங்கம், அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

கேரளாவிற்கு பிரபாகரன் படத்தை தூக்கி சென்ற சைமன்

பிரபாகரன் ஒரு மலையாள வம்சம், அதாவது வேலுபிள்ளையின் தந்தை வழி உறவினர்கள் இன்றும் கேரளாவில் உண்டு

வெள்ளையன் இலங்கையினை ஆண்டபொழுது மலையாளிகள் இன்று அரபு நாட்டில் இருப்பது போல அங்கு செல்வாக்காய் இருந்தனர், புர்ச்சி தலைவர் ராமசந்திரன் குடும்பமே அங்குதான் பிழைக்க சென்றிருந்தது

அப்படிபட்ட மலையாள குடும்பங்களில் ஒன்றுதான் பிரபாகரனின் குடும்பமும்

அந்த கேரளாவிற்கு பிரபாகரன் படத்தை தூக்கி கொண்டு சென்றிருக்கின்றார் சைமன்

சைமன் யாரென்றால் அவரும் மலையாளிகள் சந்ததி என்றே தெரியவருகின்றது

ஆக மலையாளி படத்தை சுமந்த மலையாளி ஒருவன் கேரளாவிற்கு உரிமையோடு சென்றிருக்கின்றான் அவ்வளவுதான் விஷயம்

இனம் இனத்தோடு சேரும் எனபது இதுதான்

அதுவும் கேரள வெள்ளத்திற்கு தமிழகம் காரணம் என கேரள அரசு பகிரங்க பொய் சொன்ன பின்னும் மானத்துடன் செல்லாமல் இருக்க அவர் என்ன தமிழனா? மாறாக மலையாளி

மானதமிழனாக இருந்தால் செல்லமாட்டார், மலையாளியாக இருந்ததால் சென்றுவிட்டார்