கில்லாடி கிளைவ் : 07

கில்லாடி கிளைவ் : 07

Image may contain: 1 person, standing

எதையும் தாங்கும் இதயம் கூட தேக ஆரோக்கியம் கெட்டால் உடைந்துவிடும், கிளைவிற்கும் தேக நிலை கெட்டது

இங்கிலாந்தில் இருந்து வந்த அலைச்சல், மன உளைச்சல் , வெப்பமான வாழ்விடம், உணவு , போர் என ஓயாத ஓட்டம் என்றிருந்த வாழ்வு அவனின் உடல்நிலையினை வெகுவாக பாதித்தது

அப்பொழுது இந்த ஊட்டி, சிம்லா எல்லாம் இல்லை என்பதால் அவர்கள் குளிரான ஓய்வெடுக்க இங்கிலாந்துக்குத்தான் ஓடிகொண்டிருந்தார்கள், கிளைவும் இங்கிலாந்துக்கு செல்ல தீர்மானித்தார்

காரணம் அவரிடம் கொஞ்சம் செல்வமும் குவிந்திருந்தது, முகமது அலிக்கு உதவிய வகையில் அவருக்கும் குறிபிட்ட பங்கு வந்தது , கம்பெனியும் நல்ல சம்பளம் கொடுத்ததிருந்தது

25 வயதான இளைஞனுக்கு அதுவும் ஊதாரி என குடும்பத்தால் ஒதுக்கபட்ட ஒருவனுக்கு கையில் பணம் கிடைத்தால் மனநிலை எப்படி இருக்கும்? அதுவும் தொலைதூரத்தில் இருந்தால் எப்படி இருக்கும்?

அச்செல்வத்தை எல்லாம் கொன்டு குடும்பத்தாரிடம் கொட்டி மகிழ தோன்றுமல்லவா? மனிதனாக இருந்தால் நிச்சயம் தோன்றும்,, கிளைவிற்கும் அந்த ஏக்கம் வந்தது

பெரிய குடும்பம், குதிரை கூட இல்லாத தந்தை, வறுமையால் ஊரும் சமூகமும் ஒதுக்கி வைத்த குடும்பம் அது. போதாகுறைக்கு கிளைவ் சம்பாதித்த நற்பெயர் வேறு

இதெல்லாம் எண்ணி எண்ணி பிரிட்டனுக்கு கப்பலேற துடித்தான் கிளைவ் , அதற்கு நாளும் வர இருந்தது

விஷயம் கிழக்கிந்திய கம்பெனியில் ஊடுருவியிருந்த உளவாளிகள் மூலம் பாண்டிச்சேரி பிரெஞ்ச்காரர்களுக்கு எட்டிற்று

கிளைவ் கப்பல் ஏறிவிட்டான் என நினைத்து தாக்குதலை தொடுத்தனர், ஆம் கிளைவ் இல்லாத பிரிட்டன் படை மோடி இல்லாத பாஜக‌

பிரெஞ்ச்படைகள் அடிபட்ட பாம்பாகவோ இல்லை புலியாகவோ சீற்றம் காட்டின, தங்களின் மேலாதிக்கத்திலும் கனவிலும் மண் அள்ளி போட்ட கிளைவும் அவன் கம்பெனியும் இருக்கவே கூடாது என சீறி வந்தன‌

கிளைவிற்கோ தேகநிலை சரியில்லை,ஆனாலும் அவனை விட்டால் சண்டைக்கு யாருமில்லை

பிரெஞ்ச் படைகளோ கோவளம், செங்கற்பட்டு எல்லாம் கைபற்றி முன்னேறி வந்தன‌

கிளைவோ நலிந்திருந்தான் , அவனுக்கு கொடுக்கபட்ட படையும் பயிற்சி இல்லாதது. பாகுபலி குமாரவர்மா போல நிறைய பேர் இருந்தனர்

வீரம் என்பது உடலில் அல்ல, மனதை பொறுத்தது, மனோ பலமே முதல் பலம் என்பது மாவீரர்கள் வாழ்வு தத்துவம்

அந்நிலையிலும் கிளைவ் யுத்தத்திற்கு தயாரானான், தன் அனுபவமில்லா படையுடன் கிளம்பினான்

(இதில் ஒரு சந்தேகம் வரலாம், இந்த ஆற்காடு நவாப் எங்கே போனார்? பிரிட்டானியதாம் அவரை அரசனாக்கினார்கள், பின் இவர்களுக்கு உதவாமல் எப்படி?

அரசியல் என்பது இதுதான், அங்கு கணக்கே வேறு. நன்றி, நட்பு, விசுவாசம் என்பதெல்லாம் அங்கு அரிது. எல்லாமே ஒப்பந்தம்

முகமது அலிக்கு உதவிய வகையில் கணிசமாக பிரிட்டிசார் வாங்கிவிட்டனர், கையில் காசு தலையில் கீரிடம் அவ்வளவுதான்

இனி பிரிட்டானியருக்காக அவர் ஏன் வரவேண்டும்? வந்தால் அவர் பணம் பறிப்பார்,இன்ன பிற இம்சைகள்

இதனால் பிரிட்டிசார் பிரெஞ்ச்காரர் யுத்தம் தனியாக நடந்தது)

களம் சென்றதுதான் தாமதம், அவகாசமின்றி யுத்தத்தை தொடங்கினர் பிரெஞ்ச்காரர்கள், முதல் பலி கிளைவ் தரப்பில் விழுந்தது

அனுபவமில்லா படை, அப்பொழுதுதான் களம் காண்கின்றது, அதில் ஒருவன் கண்முன்னே விழுந்தால் மற்றவர்கள் என்னாவார்கள்?

ஆட்டுமந்தை போல சிதறியது கிளைவ் படை, கிளைவ் திகைத்தான் ஆனாலும் சிதறி ஓடியபடையினை விரட்டி சென்று நம்பிக்கை அளித்து வீரமாக பேசினான்

அதற்குள் அடுத்த குண்டு சத்ததம் கேட்க ஒருவனோ அருகிலிருந்த கிணற்றுக்குள் ஒளிந்தான்

கிளைவ் நோயினை மறந்தான், தன் படைகளின் பலவீனத்தை மறந்தான், ஒருவித வெறி அவனுள் இறங்கியது

நம்பிக்கையூட்டி பேசினான், நான் செய்வது போல் செய்து போரிடுங்கள் என அவர்கள் முன்னாலே எதிரி படைகளுக்குள் பாய்ந்தான்

அதாவது களத்திலே பாடம் எடுக்கும் சவாலை செய்தான் கிளைவ்

நல்ல தலைவன் என்பது இப்படித்தான் இருக்க வேண்டும், தலைவனே அசால்ட்டாக தைரியமாக முன்னேறும்பொழுது அவன் படை மிக்க நெஞ்சுரம் கொண்டு முன்னேறிற்று

கிளைவ் எப்படி தாக்கி, பதுங்கி, வளைந்து தாக்கினானோ அதை அப்படியே செய்தது கிளைவின் படை. கோவளம் அவர்கள் வசமானது

உண்மையில் வாழ்வா, சாவா நிலை அது. ஆனால் கிளைவின் தைரியமும் மனோதிடமும் அவனுக்கு வெற்றியினை கொடுத்தது

கோவளம் கோட்டை அவர்கள் வசமானது, படையினருக்கு உற்சாகமும் தைரியமும் வந்தது , போதாதா? பூனைகள் எல்லாம் புலியாக மாறி இருந்தனர்

கோவளம் கோட்டை பிரிட்டிசாரால் பிடிக்கபட்டதை அறியா பிரெஞ்ச் படையின் பிரிவு ஒன்று அவசரமாக கோவளம் நோக்கி வந்தது

கிளைவ் அட்டகாசமான தந்திரம் செய்தான்

அதாவது கோட்டை பிடிபட்டிருப்பது பிரெஞ்ச் காரருக்கு தெரியாது என்பதால் அவர்களுக்கு தெரியாமல் கோட்டைக்கு வெளியே மறைவிடங்களில் படையோடு பதுங்கி கொண்டான்

பிரெஞ்ச் படையோ ஆங்கிலேயர் இல்லை என்ற நினைப்பில் நிதானமாக கோவளம் கோட்டைக்கு வந்தது

கோட்டையினை ஆங்கிலேயர் கைபற்றிய சுவடே இல்லை எனும் அளவு அங்கு நிலமை இயல்பாய் இருந்தது எல்லாம் கிளைவின் தந்திரம்

இதில் ஒரு தயாரிப்புமின்றி சும்மா நின்றது பிரெஞ்ச் படை

திடீரென சுற்றி வளைத்து அடிக்க ஆரம்பித்தான் கிளைவ், அது பிரெஞ்ச்காரர் கொஞ்சமும் எதிர்பாரா தாக்குதல் அது, பலர் தப்பி ஓட 300 பிரெஞ்ச்வீரர்களை கைதி ஆக்கினான் கிளைவ்

கோவளத்தில் இருந்த படையும் போனது, வந்த படையும் கைதியாக்கபட்டது பிரெஞ்ச்காரை அதிர்ச்சி அடைய வைத்தது, தப்பியோர் எல்லோரும் செங்கற்பட்டில் அடைக்கலமானார்கள்

கிளைவோ தன் படையுடன் செங்கல்பட்டை தாக்கினான், கோட்டையில் ஒரு பிளவினை ஏற்படுத்தி உள்புகுந்து அடிக்கு திட்டத்துடன் சுவரை தகர்த்தான்

கிளைவ் படை புகுமுன் பிரெஞ்ச் தளபதி சரணடைந்தான், கிளைவ் நினைத்தால் அவனை கொன்றிருக்கலாம் ஆனால் செய்யவில்லை

இனி இப்பக்கம் வந்தால். என்ற மிரட்டலோடு பாண்டிச்சேரிக்கு அனுப்பி வைத்தான்

சென்னைக்கு பிரெஞ்ச்காரர்களால் இருந்த மிரட்டல் அத்தோடு நின்றது, அதன்பின் பிரெஞ்ச்காரருக்கு ஆசை எல்லாம் போய் ஞானம் வந்தது, டூப்ளேவும் பிரான்சுக்கு அழைக்கபட்டு மூலையில் அமர்த்தபட்டார்

இதற்கு மேலும் சென்னையில் இருக்கமுடியாது என்ற நிலைக்கு கிளைவின் உடல்நிலை மோசமானது, இனி கிளம்பி தீருவது என முடிவெடுத்தார், ஆனால் அது வங்ககடல் புயல் காலம் என்கின்றார்கள், கப்பல்கள் நகரவில்லை

இந்நிலையில் சண்டை போடவும் எதிரிகள் இல்லா நிலையில் கோட்டைக்குள் சுற்றி சுற்றி வந்தார் கிளைவ், மனமோ பிரிட்டனில் இருந்தது

அப்பொழுதுதான் அவரின் நண்பருக்கு யோசனை தோன்றிற்று, அவர் ஒரு கனித மேதை அவர் பெயர் நேவிஸ் மஸ்கிலின். கணக்கில் புலி என்பதால் கிளைவினை வைத்து பெரும் கணக்கு போட்டார்

“இவனுக்கு வயது 26, ஆனால் பெரும் வீரன். யாரும் செய்யாத சாதனைகளை செய்திருக்கின்றான். கர்நாடக போரிலே பெரும் பணம் அடித்துவிட்டான், கம்பெனியோ அவனை வணங்குகின்றது, நிச்சயம் பிரகாசமான எதிர்காலம் கொண்டவன், இவனை வளைத்துவிட்டால் அதிர்ஷ்டம்

பிரிட்டனுக்கு சென்றால் ஆயிரம்பேர் வரிசையில் நிற்பார்கள், விட கூடாது , இங்கேயே கவிழ்த்துவிடலாம்”

கணிதமேதையின் கணக்கு தன் குடும்பத்து எதிர்காலம் பற்றி கணக்கு போட்டது

ஆம் அவனுக்கொரு தங்கை இருந்தாள் அவள் பெயர் மார்கரெட் மஸ்கலின், அவளை கிளைவிற்கு மணமுடித்தார்

கிளைவின் திருமணம் சென்னை கோட்டையில் இன்றும் உள்ள அந்த சர்ச்சில்தான் நடந்தது. அதற்கான சாட்சிகள் கோட்டை ஆவணத்திலே இருக்கின்றன‌

அதன் அருகில் இருக்கும் மாளிகை கிளைவிற்காக ஒதுக்கபட்டது, அங்குதான் வாழ ஆரம்பித்தான் கிளைவ்.

அந்த மாளிகை இன்றும் சென்னை கோட்டையில் உண்டு, சிலகாலம் முடிந்து லண்டன் கிளம்ப தயாரானான்

மனைவியோடு பிரிட்டன் புறப்பட்டான் கிளைவ், மனம் முழுக்க ஏக்கம், கண்ணீர், அழுகை, இனம்புரியா சந்தோஷம்

அது மண்ணை பிரிந்த சோகமும், சாதித்துவிட்ட சந்தோஷமும் நிரம்பிய மனநிலை

ஆம் அவன் இந்தியாவிற்கு வரும்பொழுது வயது 18, வெற்றி வீரனாக பிரிட்டன் திரும்பும் பொழுது வயது 27

இந்தியாவில் வியாபாரம் செய்ய சென்ற கம்பெனியினை, அதுவம் நஷ்டத்தில் இருந்த, பிரெஞ்ச்காரரிடம் நிற்கமுடியாமல் இருந்த கம்பெனியினை தூக்கி நிறுத்தினான் கிளைவ் என்ற செய்தி ஏற்கனவே லண்டனில் பரவி இருந்தது

அது போக மாவீரன் டூப்ளேவினையே பணிய வைத்து மிரட்டி, செல்வ செழிப்பு மிக்க இந்தியாவில் ஒரு அரசை நிர்ணயம் செய்யும் அளவு ஒரு பிரிட்டிஷ்காரன் அசத்தி இருக்கின்றான் என்ற பெருமை அவர்களுக்குள் பெரும் மகிழ்வு ஏற்படுத்தியிருந்தது

பிரிட்டனில் அன்று இரு வர்க்கம் இருந்தது

முதலாவது உயர் வர்க்கம், அவர்கள் பிரபுக்கள், பெரிய இடம் பரம்பரை பணக்காரர்கள்

இரண்டாம் வர்க்கம் உழைக்கும் வர்க்கம், வாழ வழியின்றி அமெரிக்கா இந்தியா என கடல்கடந்து செல்லும் வர்க்கம்

இதில் வெளிநாட்டிற்கு சென்று சம்பாதித்து வருபவனை உள்ளூர் பரம்பரை பணக்காரர்கள் விரும்புவதுமில்லை, மதிப்பதுமில்லை

(இது இன்றும் தமிழக கிராமங்களில் சர்வ சாதாரணம். புது பணக்காரனை கண்டால் பரம்பரை பணக்காரனுக்கு பிடிக்காது, கேட்டால் அவன் அப்பனை பற்றி தெரியாதா? அவன் குடும்பத்தை பற்றி தெரியாதா என சம்பந்தமின்றி பேசுவார்கள்)

அவர்கள் சிறுகுழுக்கள் என்றாலும் அதிகாரம் படைத்தவர்கள்

ஒட்டுமொத்த பிரிட்டனும் கிளைவினை கொண்டாடிய போதிலும் ஒரு சில கண்கள் அவனை அன்றே வெறுப்புடன் நோக்கின‌

கிளைவோ அதை பற்றி எல்லாம் தெரியாமல் பிரிட்டனில் இறங்கினான், அத்தேசம் அவனை வெற்றிமகனாக கொண்டாடியது

கிழக்கிந்திய கம்பெனி பெரும் பாராட்டு கூட்டம் நடத்தி அவனுக்கு வீரவாள் ஒன்றை கொடுத்தது, அதில் நவரத்தினம் எல்லாம் பதிக்கபட்டிருந்தது

கிளைவ் அதை வாங்க மறுத்தான், அவனின் பெருந்தன்மை அங்குதான் தெரிந்தது

“எனக்கு முழு உதவி செய்ததும், என்னை உருவாக்கியதும் தளபதி லாரன்ஸ், அவர் மிக சிறந்த வீரர், அவருக்கு இப்படி ஒரு வாளை கொடுத்துவிட்டு எனக்கு கொடுப்பதுதான் முறை”

இதுதான் கிளைவ், கொஞ்சம் யோசியுங்கள். அது கம்பெனி கொடுக்கும் பரிசு, முன்னேற பெரும் வழி

இன்னொருவனாக இருந்தால் நான் பட்ட பாடுகளுக்கு, உழைத்த உழைபிற்கு இப்படி 10 வாள் தந்தாலும் போதாது என உருகி இருப்பார்கள்

ஆனால் கிளைவ் பெருந்தன்மையாய் நின்றான், அவன் மதிப்பு கூடிற்று

தன் வீட்டை அடைந்த கிளைவ் தன் கடமைகளை செய்தான், தந்தைக்கு நல்ல வீடு கட்டினான், பெரிய சாரட் வண்டியினை வாங்கினான், நல்ல உடைகள் வாங்கி கொடுத்தான்

இதுதான் வாழ்வு, இதுதான் சிலர் ஜாதக அமைப்பு

ஆம் வாழ்வு எப்பொழுது எங்கு திரும்பும் என தெரியாது, அதே லண்டனில் பொறுக்கி எனவும், ரவுடி எனவும் பெயர் பெற்ற கிளைவ் இப்பொழுது கவுரவமான மாவீரன்

சிலர் ஜாதகம் சொந்த மண்ணில் வேலை செய்யாது, அந்நிய மண்ணில் விஸ்வரூபம் எடுக்கும் என்பார்கள் கிளைவ் ஜாதகம் அந்த வகை

கிளைவிற்கு லண்டன் வாழ்க்கை மிகவும் பிடித்தது, இந்தியா திரும்பும் எண்ணெமெல்லாம் இல்லை

இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தலுக்கு நின்றான், அப்படியே செட்டிலாகும் திட்டம் இருந்தது

ஆனால் 28 வயது புது பணக்காரனை பரம்பரை அரசியல்வாதிகள் ஜெயிக்க விடுவார்களா? நடக்குமா?

கிளைவ் தோல்வியுற்றான், அவன் வருந்தவில்லை பிரிடனில் எதில்தான் அவன் வெற்றிபெற்றான்?

கையில் பணம் குறைந்தது, ஏதாவது தொழில் செய்யலாம் என திட்டமிட்டான்

அப்பொழுதுதான் பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் சிக்கல் பெருகியது, பிரான்ஸ் திரும்பிய டுப்ளே மரியாதை குறைந்து அனாதை போல செத்தான்

ஆம், பதவியும் வெற்றியும் இருக்கும்வரைதான் உலகம் ஒருவனை கொண்டாடும், கிளைவிடம் தோற்று அவனமானபட்ட டூப்ளேவினை பிரான்ஸ் விரும்பவில்லை

அந்த சோகத்திலே செத்தான் டூப்ளே, மறுபடியும் பிரான்சுக்கும் பிரிட்டனுக்கும் மோதல் வெடித்தது

கிளைவ் வராமல் இந்தியாவில் பிரிட்டிசார் நிம்மதியாக இருக்க முடியாது என்ற கோரிக்கை வைக்கபட்டது, இம்முறை பரீசில்த்தவர் பிரிட்டன் மன்னர் பிரான்

அவர் கிளைவிற்கு லெப்டினட் கர்னல் பட்டம் வழங்கினார், கிழக்கிந்திய கம்பெனியும் கடலூரின் டேவிட் கோட்டைக்கு கிளைவ் கவர்னர் என பதவி உயர்த்தியது

எந்த டேவிட் கோட்டைக்கு டுப்ளேவிடமிருந்து தப்பி அனாதையாய் வந்தானோ அதே கோட்டைக்கு இப்பொழுது கிளைவ் கவர்னர்

கிழக்கிந்திய கம்பெனி அப்படி கிளைவினை வலிய அழைத்தது, நிச்சயம் நல்ல‌ வேலைக்காரன் என்றால் தன் திறமையால் முதலாளியினை பணிய வைக்க வேண்டும் என்ற பழமொழி கிளைவ் விஷயத்தில் உண்மையானது

தன் 28ம் வயதில் மறுபடி இந்தியாவிற்கு பயணமானான் சென்னைக்கு வருமுன் அவருக்கு ஒரு தகவல் வந்தது

அரபிகடலில் ஒரு கொடூர கொள்ளை கூட்டம் இருக்கின்றது, அது பம்பாய் பக்கம் நம்மை வியாபாரம் செய்யவிடாமல் தடுக்கின்றது அவர்களை அடக்காமல் அரபிகடல் நமக்கல்ல‌

யார் அவர்கள் என விசாரிக்க ஆரம்பித்தான் கிளைவ், அந்த கூட்டம் ஆங்கிரியா எனவும், பம்பாய்க்கு அருகில் உள்ள கெரியா அவர்களின் தலமையகம் எனவும் அவனுக்கு சொல்லபட்டது

அந்த அரபிகடல் , பம்பாய் வரைபடத்துடன் கப்பலில் இருந்தபடியே திட்டமிட்டான் கிளைவ்

கவர்னர் கிளைவ் பம்பாய் பக்கம் செல்வாராம், இங்கு வர நாளாகுமாம் என சென்னை பக்கம் பேசிகொண்டார்கள்

கப்பலிலே கடல் யுத்தத்திற்கு தயாரானான் கிளைவ், அப்பொழுதான் லண்டனில் கிளைவிற்கு முதல் மகன் பிறந்திருந்தான்

அது கிளைவிற்கு தெரியாது, அப்போதைக்கு கிளைவிற்குள் யுத்த பூதம் இறங்கி இருந்தது

தொடரும்..

Dhurai Sathish என்பவர் நல்ல நண்பர்

இந்த Dhurai Sathish என்பவர் நல்ல நண்பர், சொன்னதை செய்பவர், மகா பாரத கர்ணனுக்க்கு பின் கொடுத்த வாக்கினை காப்பற்றுபவர் என அவரே அவரை பற்றி சொல்லி கொள்வார்

நம்மை விட மூத்தவர், பண்பானவர் பதிவு திருட்டை தவிர ஒரு குற்றமும் அவரை சொல்ல முடியாது

ஏதும் வேண்டுமானால் சொல்லுங்கள் எனக்கு செத்து போன கலைஞரை தவிர சென்னையில் எல்லோரையும் தெரியும் என்பார்

இப்பொழுது ஒரு விளக்கம் கேட்டால் ஆளை காணோம்,சென்னையில் இவருக்கு எல்லொரும் தெரிந்திருக்கின்றது, ஆனால் இவரைத்தான் யாருக்கும் தெரியவே இல்லை

இதோ வருகின்றேன் என சொல்லி சென்ற மனிதரை காணவே இல்லை

போனில் அழைத்தாலும் ஒரு பெண்தான் அவர் தொலைதொடர்பு வட்டத்தில் இல்லை , தமிழகத்தில் இல்லை, இந்தியாவிலே இல்லை இனி திரும்ப வரவே மாட்டார் என சொல்லிகொண்டே இருக்கின்றாள்

ஆனால் பதிவு திருட்டு மட்டும் கன ஜோராக நடந்துகொண்டிருகின்றது, ஆக ஆசாமி இங்குதான் சுற்றி கொண்டிருக்கின்றார்

மண்டையினை மறைத்தாலும் கொண்டையினை மறைக்கவில்லை என்பது இதுதான்

அய்யா ராசா, நீர் இங்குதான் சுற்றுகின்றீர் என தெரிகின்றது, பதில் சொல்லிவிட்டு சுற்றவும்

பேதை செங்கொடிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

Image may contain: 3 people, people smiling, text

ஒரு படத்தில் நாகேஷ் குனிந்து நிற்பார், அவர் யார் முன்னால் குனிந்து நிற்பாரோ அந்த பணக்காரர் கேட்பார், என்னப்பா இப்படி குனியிறே

நாகேஷ் சொல்வார் “இன்னும் குனிவேன், தரை தடுக்குதே”

இந்த அங்கிள் சைமன் கும்பல் எப்படிபட்டது என்றால் சாட்சாத் அந்த நாகேஷ் காட்சியினை விட காமெடியாக தரையில் குழிதோண்டி குனியும் கும்பல்

இதோ பாருங்கள், செங்கொடிக்கு அஞ்சலியாம். அவர்கள் கட்சியே யாருக்காவது அஞ்சலி செலுத்துவது அதன் படி செய்கின்றார்கள்

ஆனால் செங்கொடி எதற்காக செத்தாள்

ராஜிவ் கொலையில் சிக்கியுள்ள 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என சொல்லி தீகுளித்து செத்தாள் அந்த அபலை, அவளை அந்த அளவு மூளைசலவை செய்திருக்கின்றார்கள்

7 பேரும் வெளிவந்தார்களா? இல்லை,இனி வரப்போவதுமில்லை

இப்பொழுது எந்த போராட்டம் செய்தாலும் வழக்கு , பிடி என அரசு கடும் முகம் காட்டுவதால் இந்த கோஷ்டிகள் செங்கொடிக்கு அஞ்சலி என கிளம்பிவிட்டன‌

நன்றாக பாருங்கள்

எங்காவது செங்கொடி எதற்காக செத்தாள் என ஒருவார்த்தை இருக்கின்றதா?

அவள் கனவுபடி 7 பேரும் விடுதலை செய்யபடவேண்டும் என்ற கோரிக்கை இருக்கின்றதா?

இல்லை, காரணம் அப்படி இருந்தால் சிக்கல்

இதனால் அந்த செங்கொடி என்பவள் ஏதோ தில்லையாடி வள்ளியம்மை போலவும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போல பெண் உரிமைக்காக செத்தவள் போலவும் ஆரம்பித்துவிட்டார்கள்

உண்மையில் செங்கொடியின் சாவு கொடூரமானது, ஆனால் அவளின் தியாகத்தை இந்த கும்பல் இப்படி மறைப்பது இன்னும் மகா கொடூரமானது

செங்கொடி தியாகத்திற்கு 7 பேரை விடுதலை செய் என கேட்கமுடியாதவர்கள் என்னவெல்லாமோ சொல்லி மழுப்புகின்றார்கள், கிராதகர்கள்

இவர்களின் பச்சை பொய்களை நம்பி, நடக்கவே முடியாத விஷயத்திற்கு தன் உயிரை கொடுத்த அந்த பேதை செங்கொடிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

இந்த கும்பல் எவ்வளவு ஆபத்தானது , எப்படி எல்லாம் பல்டி அடிக்கும் என்பதை தமிழர் உணர்ந்து கொள்ள மிக அரிய வாய்ப்பு இது

இருந்து பாருங்கள், விரைவில் பிரபாகரன் பிஜூ தீவில் போராடினான் என சொல்வார்கள். அக்காலம் மிக அருகிலே இருக்கின்றது

ஸ்டாலின் தன் எதிரியினை கூட அடையாளம் காணவில்லை

Image may contain: 1 person, on stage

இதுதான் சறுக்கல் என்பது

திமுக அகில இந்திய கட்சி அல்ல, இந்தியா முழுக்க இருந்து பாஜகவினை விரட்ட அதனால் நிச்சயம் முடியாது, மாநில கட்சியான திமுக அகில இந்திய அளவில் பாஜகவினை விரட்டும் என்பதெல்லாம் பாகிஸ்தான் ஆசிய விளையாட்டு போட்டியில் சீனாவினை வெல்லும் என்பது போன்ற கனவு

சரி தமிழக அளவில் பாஜகவினை எதிர்க்க போகிறோம் என்றால் இங்கே பாஜக 2% வாக்கு கூட இல்லாமல் இருக்கின்றது, அது தமிழிசை நாக்கிலும் எச்.ராசா வம்பிலும் வாழ்கின்றது

தமிழகத்தில் இல்லாத பாஜகவினை இவர் எங்கே போய் எதிர்ப்பாரோ தெரியாது

ஸ்டாலின் மேல் தமிழகம் நம்பிக்கை வைப்பது அவர் மோடியினை விரட்டுவார் என்பதல்ல மாறாக காமெடி அழிச்சாட்டிய ஆட்சி புரியும் பழனிச்சாமியினை விரட்டுவார் என்பதே

ஸ்டாலினால் அது முடியும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது

அதை பற்றி பேசாமல் பாஜகவினை விரட்டுவேன் என்பது அபத்தம்? தமிழகத்தில் இல்லாத பாஜகவினை எங்கே இருந்துவிரட்டுவார்?

ஸ்டாலின் தன் எதிரியினை கூட இன்னும் அடையாளம் காணவில்லையா? இல்லை தன்னை ராகுல்காந்திக்கு சித்தப்பா பையனாக அகில இந்திய தலைவராக நினைத்து கொள்கின்றாரா என்பது தெரியவில்லை

மொத்தத்தில் யாரை எதிர்த்து அரசியல் செய்வது என தடுமாறுவது போல் தோன்றுகின்றது

தமிழகத்தில் இல்லாத பாஜகவினை எதிர்த்து என்ன அரசியல்? அது காற்றில் கம்பு சுத்துவது போன்றது.

தமிழகத்தை தாண்டி திமுக பாஜகவினை தொட்டு பார்க்க முடியாது

பின் இப்படி பேசி என்ன செய்ய போகின்றார் ஸ்டாலின்?

அவர்தான் அழைக்கின்றார் சரி,

“அய்யா அகில இந்திய கட்சிக்கு இந்த சிறிய மாநிலத்தில் இருந்து எப்படி பாடம் புகட்ட, 8 கோடி தமிழரும் சேர்ந்தாலே அது நடக்காதே என சொல்ல ஒருவனும் கட்சியில் இல்லை..”

“அணையினை திறக்காதே மூழ்கி சாவு” என சொன்னால்தான் புத்திவரும்

உலகெல்லாம் கடந்த இரு வாரங்களாக எதிர்பார்த்த செய்தி வந்தே விட்டது, அவர்கள் நிச்சயம் சொல்வார்கள் என்றே உலகம் எதிர்பார்த்தது, இதோ சொல்லிவிட்டார்கள்

தமிழகத்திற்கான ஒரு ஆண்டு நீரை 3 மாதத்தில் தந்து விட்டோம் என கன்னடம் சொல்லிவிட்டது

எப்படிபட்ட அபாணடம் இது, மழைவெள்ளம் என்பது எப்படி கணக்கில் வரும்? அணையினை திறக்காவிட்டால் கேரள நிலைக்கு கன்னடம் ஆகியிருக்கும் அதை தவிர்க்க திறந்துவிட்டு தமிழக கணக்கில் காட்டுகின்றார்களாம்

அவர்களுக்கு இன்னும் தமிழனை பற்றி தெரியவில்லை

அடுத்தமுறை காவேரியில் வெள்ளம் பெருகட்டும், “ஏ கன்னடனே அணையினை திறக்காதே, எங்களுக்கு இப்பொழுது நீர் வேண்டாம்..” என தமிழகம் பொங்கினால் தெரியும்

தமிழகம் இனி அடுத்த வெள்ள காலத்தில் கன்னடனை நோக்கி “அணையினை திறக்காதே மூழ்கி சாவு” என சொன்னால்தான் புத்திவரும்.

நிச்சயம் அடுத்தமுறை அதைத்தான் சொல்ல வேண்டும் சொல்லவேண்டும்

தந்தைக்கு பின்னர் பதவி மகனுக்கு

பெரியார் சுயம்பாக உருவானார், பெரியாரின் அரவணைப்பு இல்லாவிட்டாலும் தன்னால் பெரும் இடம் பெற‌ முடியும் என நிரூபித்தார் அண்ணா

அண்ணாவிற்கு பின்னரான போட்டியில் பெரும் ஜாம்பவான்களை சரித்து காட்டி முதலிடம் பெற்றார் கலைஞர்

கொள்கையோ, கோட்பாடோ இல்லாவிட்டாலும் தன்னாலும் அரசியலில் வெல்லமுடியும் என காட்டியவர் ராமசந்திரன்

அரசியலுக்கு வந்த சில ஆண்டுகளிலே அதிரடியாக கட்சியினை கைபற்றி தலைவி என அமர்ந்தவர் ஜெயா

குறிப்பிட தகுந்த வெற்றிகள் என்பது இதுதான், சாதனை என்பதும் இதுதான்

தந்தைக்கு பின்னர் பதவி மகனுக்கு என்பது காங்கிரஸ் பாரம்பரியம், அதுதான் வழிகாட்டி

இதில் வெற்றி வெற்றி என முழங்க ஒன்றுமில்லை, இதிலும் ஸ்டாலின் வராமல் இருந்தால்தான் ஆச்சரியம்.

காங்கிரஸ் சுருங்கி போனதற்கு இதுவும் ஒரு காரணம்

அண்ணா இல்லாவிட்டாலும் கலைஞர் எழும்பி இருப்பார், அவரின் ஆற்றலும் செயலும் அப்படி

ஆனால் கலைஞர் இல்லாவிட்டால் ஸ்டாலின் இந்த உயரம் வரமுடியுமா என யோசிப்பவர்கள் அதிகம் பேசமாட்டார்கள்.

பாபர் எங்கிருந்தோ வந்து மன்னரானதற்கும், ஷாஜகான் சுகமாக வந்து பதவியில் அமர்ந்ததற்கும் வித்தியாசம் உண்டு


ராஜபக்சவுக்கு ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும்: சுப்பிரமணிய சுவாமி

24 மணி நேரமும் தமிழக கட்சிகளுடன் வம்பு இழுப்பது எப்படி என சிந்திக்கும் ஒரே நபர் சுவாமிதான்


திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு ரூ.1.34 கோடி – தமிழக அரசு

ஆதித்தனார் குடும்பத்திடம் அரைகாசு கூட இல்லா நிலை இருப்பதால் அரசு மக்கள் பணத்தை செலவழித்தே ஆக வேண்டும்


முக ஸ்டாலினுக்கு குஷ்பு வாழ்த்து சொல்லியிருக்கின்றார், அது பல பத்திரிகைகளில் செய்தியாக வர ஆரம்பித்தாயிற்று

சங்கம் விடுத்த கோரிக்கையினை ஏற்ற பத்திரிகை உலகத்திற்கு கோட்டான கோடி நன்றி

தலைவிக்கு பத்திரிகை உலகம் தொடர்ந்து ஆதரவினை வழங்கட்டும்


Image may contain: 2 peopleதமிழக சமூக நீதிக்கு ஆபத்து : டாக்டர் ராமதாஸ்

“சமூக நீதின்னா என்ன டாடி?

வன்னியன் மட்டும் வாழ்றது , நீயும் நானும் ஆள்றதுடா மவனே”

 


தலைவி வாழ்க…

Image may contain: 1 personஇந்த தமிழக பத்திரிகையாளர்கள் மோடியினை சந்தித்தபொழுது அது புரியவில்லை இப்பொழுது புரிகின்றது

என்ன நடந்திருக்கின்றது?

தமிழக செய்திகளில் பல கட்டுபாடுகளும் , மர்ம மவுனங்களும் தெரியதொடங்கிவிட்டன, கூர்ந்து கவனித்தால் புரிகின்றது

ஆம் அதிரடியாக பேசிகொண்டிருந்தவர்களின் கருத்துக்கள் இப்பொழுது செய்தி ஆக்காமல் தவிர்க்கபடுகின்றது, அவர்களை மக்களிடம் நெருங்கவிடாதபடி பெரும் சதி நடக்கின்றது

இது இப்பொழுது நன்றாக தெரிகின்றது, எதில் தெரிகின்றது என்றால் தலைவி குஷ்பு பற்றிய செய்திகள் இப்பொழுது அதிகம் இல்லை

தலைவி சமூக போராளி , தீவிரமாக இயங்கும் அரசியல் சூறாவளி

மோடி அரசின் மீது சாடல், கோபம் , உண்மைகளை போட்டு உடைத்தல் இன்னும் தார்மீக கோபத்தை வெளிபடுத்திகொண்டே இருப்பார்

கட்சி, சமூக நலம் என தொடர்ந்து கருத்துக்களை சொல்லி கொண்டே இருப்பவர் அவர்

இப்பொழுதெல்லாம் அவர் அறிக்கையினையோ இல்லை அவரின் செய்திகளையோ எந்த ஊடகமும் வெளியிடவில்லை

இது மோடியின் சதி என சங்கம் கண்டிக்கின்றது, தமிழக ஊடகங்களும் இச்சதிக்கு உடன்பட்டுவிட்டன‌

ஏன் இப்படி ஆனது?

எங்கள் தலைவி தன்னிகரற்ற தலைவியாக வளர்ந்துவிடுவார் என்ற அச்சம் பாஜகவிற்கு எற்பட்டாயிற்று, இன்னொரு ஜெயலலிதாவாக அவர் வந்துவிடுவார் என நடுங்குகின்றார்கள்

இதனால் அவரை இருட்டடிப்பு செய்கின்றார்கள், இதற்கு பாஜகவின் ஸ்லீப்பர் செல்லான காங்கிரஸ்காரர்களான திருநாவுக்கரசு போன்றோரும் இந்த சதியில் இருக்கின்றார்கள்

ஆயிரம் கரங்கள் மறைத்து நின்றாலும் சந்திரனை மறைக்க முடியாது, எத்தனை பேர் முயன்றாலும் எவரெஸ்ட் சிகரத்து உயரத்தை குறைக்க முடியாது

அப்படி எங்கள் தலைவியினையும் இந்த சதிகாரர்களால் தடுக்க முடியாது, அவர் மீண்டு வருவார்

இந்த நிலைமாறி தலைவியின் செய்திகள் எல்லா ஏடுகளிலும் வரட்டும், எல்லா டிவிகளிலும் தலைவி பேட்டி இடம்பெறட்டும்

இல்லாவிட்டால் சங்கம் புதிதாக ஊடகம் தொடங்கி தலையின் அறிக்கைகளை அகில உலகெல்லாம் எடுத்து செல்லும் என்பதை தெரிவித்து கொள்கின்றோம்

இந்த அயோக்கிய ஊடகங்களை வன்மையாக கண்டிக்கின்றோம், அவர்களை பயமுறுத்தி தலைவியினை முடக்கலாம் , மக்களிடமிருந்து அவரை விலக்கலாம் என திட்டம் போடும் பாஜகவின் கனவு ஒருநாளும் நடக்காது என்பதையும் தெரிவித்து கொள்கின்றோம்

தலைவி வாழ்க…

அழகிரி என்பவர் தலைவன் இல்லா குட்டி சாத்தான்

Image may contain: 1 personகுட்டி சாத்தான்களுக்கு எப்பொழுதும் வேலை கொடுத்து கொண்டே இருக்க வேண்டுமாம், இல்லை என்றால் அதன் அட்டகாசம் பெருகிவிடுமாம்

இதனால் மந்திரவாதி அதற்கொரு வேலையினை கட்டளை இட்டுகொண்டே இருப்பானாம், இல்லை என்றால் அது மந்திரவாதியின் காதை திருகுமாம், தலையில் ஏறி இருந்து கடிக்குமாம், இன்னும் ஏக அழிச்சாட்டியம் செய்யுமாம்

இது மந்திரத்திற்கு மட்டுமல்ல அரசியலுக்கும் பொருந்தும்

தனக்கு அப்படி அட்டகாசம் செய்துகொண்டிருந்த அழகிரிக்கு வேலை மேல் வேலை கொடுத்து திசை திருப்பி விட்டிருந்தார் கலைஞர்

ஆனால் தனக்கு தேவையான நேரங்களில் அழகிரியினை அழைக்கவும் அவர் தயங்கவில்லை,

அழகிரியின் வெற்றி நேரங்களில் கிடைத்தற்கரிய மத்திய மந்திரி பதவியினையும் அழகிரிக்கு பலி கொடுக்க அவர் யோசிக்கவில்லை

இப்படியாக தேவைக்கு அழைப்பதும் பின் அழகிரி முரண்டு பிடித்தால் அவருக்கு கனத்த வேலை கொடுப்பதுமாக மந்திர அரசியல் செய்தார் கலைஞர்

கடந்த தேர்தலில் அழகிரி மறுபடியும் வந்து கலைஞருக்கு நெருக்கடி கொடுத்தபொழுது அட்டகாசமான வேலையினை கொடுத்தார்

அதாவது குட்டிசாத்தானிடம் மலையினை இழுத்தும் வரும் பொறுப்பு போன்றது, மலை வராது என தெரிந்தாலும் குட்டி சாத்தானை திசை திருப்பிவிடலாம், மலை வராத பட்சத்தில் இதெல்லாம் கூட செய்ய தெரியாத நீ சாத்தானா? என விரட்டி அடிக்கலாம்

பலன் எப்படி இருந்தாலும் லாபம்

அப்படி விஜயகாந்தினை இழுத்து வந்து உன் சாமார்த்தியத்தை காட்டு, இதோ உனக்கு அக்கினி பரீட்சை என விரட்டிவிட்டார் கலைஞர்

விஜயகாந்தோ வைகோ ஏற்றிவிட்ட முதல்வர் போதையில் மல்லாக்க கனவில் கிடந்தார், அழகிரியிடம் முடிந்தால் என்னை பிரதமராக்க‌ முடியுமா? என கலைஞரிடம் கேளுங்கள் என்ற அளவில் கற்பனைகளில் சஞ்சரித்தார்

அதன் பின் நடந்தது நாடறியும்

அந்த தோல்விக்கு பின் அழகிரியால் ஒன்றும் சொல்ல முடியவில்லை, எது பேசினாலும் உன் பொறுப்பினை சரியாக செய்தாயா? என்ற சீறலே கலைஞரிடம் இருந்து வந்தது

ஒருவேளை வென்றிருந்தால் ஏதாவது பதவி கொடுத்து சரிகட்டி இருப்பார், பின் உரிய வேலைக்கு அனுப்பி இருப்பார்

தன் பக்கம் வராமல் பார்த்துகொள்வார்,

இப்படி பெரும் வேலை கொடுத்து திருப்பி விடாவிட்டால் அழகிரி வந்து எனக்கொரு முடிவு சொல்லுங்கள் என கலைஞரின் பேனாவினை பிடுங்கி மறித்து நிற்பார்

அழகிரிக்கு வேலை கொடுத்துவிட்டு தன் போக்கில் தன் வேலைகளில் பிசியாக இருந்தார் கலைஞர்

அரசியலும் மந்திரவாதமும் வேறல்ல, குட்டி சாத்தான்களை இப்படி ஏதாவது ஒரு வகையில் வேலை கொடுத்து கொண்டே அது சரியாக செய்தால் அதற்கு பலி கொடுத்து கொண்டோ சரியாக செய்யாவிட்டால் விரட்டி கொண்டோதான் இருக்க வேண்டும்

அரசியல் மந்திரவாதியான கலைஞர் அதை அட்டகாசமாக செய்தார்

இப்பொழுதும் திமுகவில் பெரியவர்கள் உண்டு, அழகிரியினை பிடித்து ” தினகரனை இழுத்துவா, பன்னீரை இழுத்துவா, அட முடிந்தால் தமிழிசையினாவது கட்சி கடத்து, இடை தேர்தலில் எதிர்கட்சிகளை டெப்பாசிட் இழக்க செய், உன்னை நிரூபித்து கட்சிக்கு வலுசெர் பதவியினை பின்னர் பார்க்கலாம்” என அவரை ஏவி விடலாம்தான்

வெற்றி வந்தால் நல்லது, அழகிரி தன்னை நிரூபிக்காமல் போனால் இன்னும் நல்லது

அதனை செய்யாமல் அவரோடு மல்லுகட்டுகின்றனர், கொஞ்சமும் கலைஞர் எனும் அரசியல் மந்திரவாதி பாணி இல்லை

அழகிரி என்பவரோ தலைவன் இல்லா குட்டி சாத்தானாக என்ன செய்வது என தெரியாமல் சுற்றி வருகின்றார், யார் காதை பிடித்து கடித்து துப்ப போகின்றாரோ தெரியாது

அதற்குள் கலைஞர் வழியில் அவருக்கு மந்திரகட்டு போடுவது நல்லது

திமுக தலைவராகிவிட்டார் ஸ்டாலின்

Image may contain: 1 person, sittingதிமுக தலைவராகிவிட்டார் ஸ்டாலின், ஆனால் உண்மையான சவால்கள் இனிதான் அவருக்கு காத்திருக்கின்றன‌

சுகமாக அமர்ந்து உத்தரவிடும் பதவி அல்ல அது , முள் இருக்கை

கட்சி, எதிர்கட்சி, மாநில கட்சிகளை நசுக்க விரும்பும் பலமிக்க டெல்லி, அழகிரி, இந்த முகநூல் திமுக இம்சைகள், இது போக ஏக சவால்களை இனிதான் அவர் எதிர்கொள்ள வேண்டும்

தந்தை போல் எல்லா சவாலையும் அவர் வெல்ல வாழ்த்துக்கள்


திமுக தலைவர் வந்துவிட்டார் நல்லது

ஆனால் தளபதி என்பதே அதன் பிரதான பாத்திரம். அண்ணா அப்படி கொண்டாடபட்டார், பின் ஸ்டாலின் தளபதி ஆனார்

அடுத்த “தளபதி” யார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி

யாரப்பா அடுத்த தளபதி?


Image may contain: 1 person, textகாவேரி பொங்கி பாயும்பொழுது அந்த விவசாய “புரட்சி”யினை கல்லணை பக்கம் செய்தால் என்ன?

சினிமாவில்தான் செய்ய வேண்டுமா?

விவசாய புரட்சிக்கு எதற்கு சிலம்பு சண்டை காட்சி?

மிஸ்டர் சீமான், விவசாயம் செய்ய சென்றாலும் போர்கோலத்தில்தான் செல்வீரா?

ஒழுங்காக கோவணம் உடுத்தி ஏர்கலப்பை, நாற்றுகட்டு என‌ சுமந்து கொண்டு நின்றால்தான் தும்பிகள் உருகும்


அன்பில் பொய்யாமொழி வீட்டிற்கு சென்று நினைவு நாளில் அஞ்சலி செலுத்தினார் ஸ்டாலின்

தா.கிருட்டினன் வீட்டிற்கு அவரின் நினைவு நாளில் ஸ்டாலின் செல்வாரா இல்லையா என நாம் கேட்க கூடாது..


டிர்ம்ப் என்பவர் சிக்கல் மேல் சிக்கல்களில் சிக்கி கொள்கின்றார்

Image may contain: 1 person, suitடிர்ம்ப் என்பவர் சிக்கல் மேல் சிக்கல்களில் சிக்கி கொள்கின்றார்

இப்பொழுது மெக்கெய்ன் முறை

அதாவது ஜாண் மெக்கய்ன் என அமெரிக்க பிரபலம் உண்டு, மனிதர் கென்னடி சாயல், அவர் போலவே கடற்படை வீரர் மற்றும் அரசியல்வாதி

அமெரிக்காவின் பெரும் சர்ச்சையான வியட்நாம் யுத்ததில் பங்கெடுத்தவர், வியட்நாமியர்கள் ஒரு சண்டையில் இவரை பிடித்து உள்ளே போட்டார்கள், கொன்றுவிடுவோம் என்றெல்லாம் மிரட்டினார்கள்

மனிதர் சாவின் விளிம்புவரை சென்று பின் மீண்டார், 5 ஆண்டு அமெரிக்காவிற்காக வியட்நாம் சிறையில் இருந்தார்

அவர் தாய்நாட்டுக்கு திரும்பியதும் ஆதரவு அதிகரித்தது, செனட்டராக எல்லாம் இருந்தார்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டார், கிளிண்டன் ஒபாமா எல்லோருடனும் கூட மோதினார்

ஆனால் வெற்றிபெறவில்லை, எனினும் அமெரிக்க மக்கள் மத்தியில் பெரும் அனுதாபம் பெற்றிருந்தார்

இரு தினங்களுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார், அவருக்கு டிரம்ப் உரிய மரியாதை கொடுக்கவில்லை காரணம் அவருக்கும் டிரம்பிற்கும் ஒத்துவராது.

விஷயம் சர்ச்சையாகி ஆளாளுக்கு டிரம்ப் டையினை பிடித்து இழுத்துவிட்டார்கள்

காரணம் சில மாதங்களுக்கு முன்பு இறந்த போதகர் பில்லி கிரகாம் என்பவருக்கு முழு அரசு மரியாதை கொடுக்கபட்டது, இது குத்தி காட்டபட்டது

கடுப்பான டிரம்ப் “யோவ் அரசு மரியாதை கொடுங்கய்யா” என சொல்ல்விட்டார்

இதை தொடர்ந்து அமெரிக்க கொடிகள் அரைகம்பத்தில் பறக்கின்றன, அரசு மரியாதை ஆரம்பித்தாயிற்று

அமெரிக்காவின் மிகபெரும் தேசபக்தரான மெக்கெய்னுக்கு அரசு மரியாதை கொடுக்க தயங்கிய டிரம்பினை விட, இந்தியாவில் ஒரு காலத்தில் பிரிவினை பேசியவரும் பின் இந்திய ராணுவத்தினை அவமதித்து தேசதுரோக சிக்கலில் சிக்கியவருமான கலைஞர் கருணாநிதிக்கு இந்திய அரசு மரியாதை அளித்த மோடி உயர்வாகவே நிற்கின்றார்