இந்த தமிழக பத்திரிகையாளர்கள் மோடியினை சந்தித்தபொழுது அது புரியவில்லை இப்பொழுது புரிகின்றது
என்ன நடந்திருக்கின்றது?
தமிழக செய்திகளில் பல கட்டுபாடுகளும் , மர்ம மவுனங்களும் தெரியதொடங்கிவிட்டன, கூர்ந்து கவனித்தால் புரிகின்றது
ஆம் அதிரடியாக பேசிகொண்டிருந்தவர்களின் கருத்துக்கள் இப்பொழுது செய்தி ஆக்காமல் தவிர்க்கபடுகின்றது, அவர்களை மக்களிடம் நெருங்கவிடாதபடி பெரும் சதி நடக்கின்றது
இது இப்பொழுது நன்றாக தெரிகின்றது, எதில் தெரிகின்றது என்றால் தலைவி குஷ்பு பற்றிய செய்திகள் இப்பொழுது அதிகம் இல்லை
தலைவி சமூக போராளி , தீவிரமாக இயங்கும் அரசியல் சூறாவளி
மோடி அரசின் மீது சாடல், கோபம் , உண்மைகளை போட்டு உடைத்தல் இன்னும் தார்மீக கோபத்தை வெளிபடுத்திகொண்டே இருப்பார்
கட்சி, சமூக நலம் என தொடர்ந்து கருத்துக்களை சொல்லி கொண்டே இருப்பவர் அவர்
இப்பொழுதெல்லாம் அவர் அறிக்கையினையோ இல்லை அவரின் செய்திகளையோ எந்த ஊடகமும் வெளியிடவில்லை
இது மோடியின் சதி என சங்கம் கண்டிக்கின்றது, தமிழக ஊடகங்களும் இச்சதிக்கு உடன்பட்டுவிட்டன
ஏன் இப்படி ஆனது?
எங்கள் தலைவி தன்னிகரற்ற தலைவியாக வளர்ந்துவிடுவார் என்ற அச்சம் பாஜகவிற்கு எற்பட்டாயிற்று, இன்னொரு ஜெயலலிதாவாக அவர் வந்துவிடுவார் என நடுங்குகின்றார்கள்
இதனால் அவரை இருட்டடிப்பு செய்கின்றார்கள், இதற்கு பாஜகவின் ஸ்லீப்பர் செல்லான காங்கிரஸ்காரர்களான திருநாவுக்கரசு போன்றோரும் இந்த சதியில் இருக்கின்றார்கள்
ஆயிரம் கரங்கள் மறைத்து நின்றாலும் சந்திரனை மறைக்க முடியாது, எத்தனை பேர் முயன்றாலும் எவரெஸ்ட் சிகரத்து உயரத்தை குறைக்க முடியாது
அப்படி எங்கள் தலைவியினையும் இந்த சதிகாரர்களால் தடுக்க முடியாது, அவர் மீண்டு வருவார்
இந்த நிலைமாறி தலைவியின் செய்திகள் எல்லா ஏடுகளிலும் வரட்டும், எல்லா டிவிகளிலும் தலைவி பேட்டி இடம்பெறட்டும்
இல்லாவிட்டால் சங்கம் புதிதாக ஊடகம் தொடங்கி தலையின் அறிக்கைகளை அகில உலகெல்லாம் எடுத்து செல்லும் என்பதை தெரிவித்து கொள்கின்றோம்
இந்த அயோக்கிய ஊடகங்களை வன்மையாக கண்டிக்கின்றோம், அவர்களை பயமுறுத்தி தலைவியினை முடக்கலாம் , மக்களிடமிருந்து அவரை விலக்கலாம் என திட்டம் போடும் பாஜகவின் கனவு ஒருநாளும் நடக்காது என்பதையும் தெரிவித்து கொள்கின்றோம்
தலைவி வாழ்க…